Jan 12, 2013

தூதர் (ஸல் ) வழியில் பதில் சொல்வோம்

காலனித்துவ வேலிக்குள் அசத்திய அணிவகுப்பில் 
சகோதரத்துவம் தொலைத்து 'ஜாஹிலீயத்துக்கு '
'சல்யூட் ' அடிக்க யகூதி கற்றுத் தந்தான் அந்த
அவமானத்தை பலமாக்கி தேசிய சகதிக்குள் 
இஸ்லாம் தொலைத்து வாழ்க்கையோட்டினோம் !

உலகத்தை நேசிக்கும் அந்த இனிப்பான நஞ்சில் 
தியாகத்தை கசப்பாக்கி மரணத்தை அச்சம் சுமக்க 
கோழைத்தனம் புது வரவாகி கொள்கைத் தனம்
இருட்டுப் பாதையில் குருட்டுப் பயணிகளாக
கோமா நிலையில் அடங்கியே போனது .

தொடர்ந்தும் அந்த சாபத்தின் சந்ததி ஆடம்பர முதலிட்டு
பழிவாங்கும் சந்தையில் எமது வீரத்தை விலைபேசி
அந்த பலவீனத்தில் இரத்த விளையாட்டை
இந்த உம்மத்தின் மீது இயல்பாக்கினான் அதன் பின்
உலகமே அத்துமீறி ஆனந்தம் கண்டது .

கசப்பான இந்த அநீத வரலாற்றின் முற்றுப்புள்ளிக்கு
சத்தியத்தின் மொழியில் இன்னும் ஓர் தொடர்கதை
ஒரே தலைமையில் மட்டுமே சாத்தியமானது .
பிரிவினைகளில் பிரித்து மேய்ந்த யூதக் கூட்டுக்கு
ஓர் அணி நின்று தூதர் (ஸல் ) வழியில் பதில் சொல்வோம் .

No comments:

Post a Comment