மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக
நியமித்து விட்டு அணைத்துப் பொருப்புக்களிலிருந்தும் ஒதுங்கி தூர
இடம் ஒன்றிற்கு சென்று விடுகிறார். முஹம்மதோ அறிவு, வால் வீச்சு,
குதிரை ஓட்டம், போர் பயிற்சி என்று அணைத்திலும் சிறந்து விளங்கினும் போதிய அனுபவமற்றவனாக இருந்தான்.
இந்நிலையில் கிரீடம் தரித்து சில மாதங்கள் ஆவதற்குள் ரோம பேரரசு உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் மீது பாரியதொரு படையெடுப்பு மேற்கொண்டது.

இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது முஹம்மதுக்கு மிகக்கடினமாக
இருந்தது. எனவே தந்தையின் உதவியை நாட முடிவு செய்தான். விரைவாக
வந்து படைக்குத் தலைமை தாங்குமாறு தந்தைக்கு கடிதம் அனுப்பினான்.
தந்தையிடமிருந்து “இப்பொழுது நீ தான் சுல்தான், படைக்கும் நீயே தலைமை தாங்கு..! என்னால் வர முடியாது” என்று பதில் வந்தது.
இதற்கு முஹம்மதின் பதில் கடிதம் பின்வருமாரு இருந்தது. “ஆம் நான் தான்
சுல்தான். இப்பொழுது நான் கட்டளையிடுகிறேன், உடனடியாக
வந்து படையை வழி நடாத்துங்கள்..!” இந்த சிறுவன் தான் வரலாற்றில் சுல்தான் முஹம்மத் அல் பாதிஹ் என்று போற்றப்படும்.
நபிகளாரால் முன்னறிவுப்பு செய்யப்பட்டபடி இஸ்தான்பூலை (கொன்ஸ்தாந்திநோபில்) ரோமர்களிடமிருந்து கைப்பற்றிய மாவீரனாகும்.
நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்புச் செய்த அந்த ஹதீஸ்.
“கொன்ஸ்தாந்திநோபில் நிச்சயம் வெற்றி கொள்ளப்படும்.
அதை வெற்றி கொள்ளும் தலபதி எவ்வளவு சிறந்த தலபதி..!,
அதை வெற்றி கொள்ளும் படை எவ்வளவு சிறந்த படை..!”
அதை வெற்றி கொள்ளும் தலபதி எவ்வளவு சிறந்த தலபதி..!,
அதை வெற்றி கொள்ளும் படை எவ்வளவு சிறந்த படை..!”
- ஹதீஸ்
கொன்ஸ்தாந்து நோபிள் என்பது துருக்கியின் தற்போதைய இஸ்தான்பூல் நகரமாகும் இதை அரபு மொழியில் குஸ்தன்தீனியா என்றழைக்கப்படுகிறது. அன்று இறுதி தூதரின் காலத்தில் பெரும் வல்லரசான ரோம் சாம்ராஜ்யம் பரந்த இரண்டு கிளைகளைக் கொண்டு அமைந்திருந்தது . ஒன்று; ரோமைத் தலைநகராகக்கொண்ட மேற்கு ராஜ்யம். மற்றையது; கொன்ஸ்தாந்து நோபிளைத் தலைநகராகக்கொண்ட கிழக்கு ராஜ்யம். அக்கிழக்கு ராஜ்யம்தான் பைஸாந்தியப் பேரரசு எனப்பட்டது. பெரும் வல்லரசாகத் திகழ்ந்த இந்நகரம் ஒரு நாள் முஸ்லிம்களால் வெற்றிகொள்ளப்படுமென நபியவர்கள் கூறினார்கள் ‘கொன்ஸ்தாந்து நோபிள் ஒரு வீரனால் வெற்றிகொள்ளப்படும். அத் தளபதிதான் சிறந்த தளபதி. அந்த படைதான் சிறந்த படை என்றார்கள். -முஸ்னத் அஹ்மத்
No comments:
Post a Comment