கருத்துச் சுதந்திரம் அதன் வீச்செல்லை என்ன ? இந்த வினாவிற்கு விடைதேடினால் சிலநேரம் பதிவுகளுக்கு பக்கங்கள் போதாமல் போகலாம் ! எப்போதும் தாமும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்புவதே இன்று ஆதிக்கத்தில் இருக்கும் மேற்கின் சிந்தனை வாதத்தின் பிழைப்பாக போய் விட்டது. மனிதன் சட்டம் இயற்றினால் நிகழும் தவிர்க்க முடியாத நோய் இதுதான் .
இவர்களது வரைவிலக்கணங்கள் யாவும் பொதுவாகவே 'கொள்கை' எனும் 'சிலபஸ்ஸில் '
ஏற்றி 'விதி' எனும் முடிவிற்கு வரும் வரை சமூகத்தின் முன் குறைப் பிரசவங்களாக அவைகளை ஏறத்தாள பரீட்சாத்தமாக வெளியிட்டு தம்மை காலத்தின் பிடியில் ('அவசரக் குடுக்கை ' நிலையில்) தாம் வகுத்தது தமக்கே வினையாக வரும்போது சீர்திருத்தம் எனும் பெயரில் அதன் அடிப்படையே மாறும் நிலையானாலும் புதிய கொள்கை வகுப்பதே இவர்களது அன்றாடப் பணியாகும் .
ஏற்றி 'விதி' எனும் முடிவிற்கு வரும் வரை சமூகத்தின் முன் குறைப் பிரசவங்களாக அவைகளை ஏறத்தாள பரீட்சாத்தமாக வெளியிட்டு தம்மை காலத்தின் பிடியில் ('அவசரக் குடுக்கை ' நிலையில்) தாம் வகுத்தது தமக்கே வினையாக வரும்போது சீர்திருத்தம் எனும் பெயரில் அதன் அடிப்படையே மாறும் நிலையானாலும் புதிய கொள்கை வகுப்பதே இவர்களது அன்றாடப் பணியாகும் .
அப்படிப் பார்த்தால் இவர்களது கொள்கை வடிவம் அத்திவாரத்தில் இருந்து கூரை முகடுவரை " இருக்கும் ஆனால் இருக்காது " , "நடக்கும் ஆனால் நடக்காது " , அந்தவகையில் சமூகத்தில் அதைப் பின்பற்றுபவனின் நிலை !? " சுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது "! என்பதேயாகும் .
(லிபர்ட்டி ) விடுதலை என்ற வார்த்தையின் கீழே வரையறுக்கப் பட்ட முதலாளித்துவத்தின் (கருத்துச் சுதந்திரம் உட்பட) எல்லா சுதந்திரமும் ஜனநாயகம் எனும் மாயா ஜாலத்தின் கீழ் பின்வருமாறு பொதுவாக குறிப்பிடப்படும் . " ஒருவன் தனது கைத்தடியை விரும்பியவாறு சுழட்டிச் செல்லலாம் ஆனால் அடுத்தவனின் மூக்கு நுனிவரைதான் " என்று அந்த எல்லையை கூறி நிற்கும் .
ஆனால் (ரைட் இஸ் மைட் )' பலமுள்ளவன் சரியானவன்' எனும் யாப்பில் இல்லாத இரகசிய விதி ,முன்னால் நிற்கும் மூக்கை அடிக்கடி இடம் மாற்றச் சொல்லும் !? தேவைப்பட்டால் தனது கைத்தடியை முன்னால் இருக்கும் மூக்கின் உள் விட்டு ஆட்டி ஜனநாயக விரோதி என்ற 'சுவரில்லா சித்திரத்தை வரைந்து ' புறந்தள்ளும் !? தனக்கு மட்டும் அம்மா அடுத்தவனின் அம்மா சும்மா !? என்பது தான் இன்றைய ஜனநாயக 'பொலிடிகல் டிப்லோமடிக்' !?
இந்த விதியை (நம்பாமல்) நம்பி இஸ்லாத்திற்கு எதிரான குப்பார்களின் சதிகளுக்கெதிராக அந்த( எல்லை தெரியாத ) பக்கச்சார்பு கருத்துச் சுதந்திரத்தை நம்பி போராடுவதில் எந்தப் பயனும் இருக்காது . இன்று எமக்கு சாதகம் போல் இருக்கும் ஆனால் நாளை எமது எதிரியின் சாதகத்தால் எமது உணர்வுகள் ஏறி மிதிக்கப் பட சட்ட மூலம் கொண்டு வரப்படலாம் . அதுவும் ஜனநாயக இயங்கு விதியில் எம்மை சமரசம் செய்யக் கேட்கும் .
நேற்று தலைப்பாகையை கேட்டது நாளை தலையை கூட கேட்கலாம் ! முண்டமாக வாழ்ந்தாலும் நானும் ஜனநாயக வாதி எனும் வார்த்தைகள் எமது சமூகத்தில் இருந்து ஒலிப்பது கேட்கின்றது . உங்களுக்கும் கேட்கிறதா !!??
No comments:
Post a Comment