முஸ்அப் இப்னு உமைர் (ரலி ) முஸ்லீம்களால் அறியப்பட்ட சஹாபி .ஆனால் இவரின் அறிந்தும் அலட்டிக்கொள்ளப்படாத பக்கம் ஓன்று இருக்கின்றது . அது மதீனாவை இஸ்லாத்தின் அரசியல் இராஜ தந்திர செயல் நிலமாக மாற்றிய மிக நுணுக்கமான இஸ்லாமிய பிரச்சாரத்தை வெற்றிகரமாக செய்த ஒரு சித்தாந்தப் போராளி இவர் உண்மையில் இவரின் மனோநிலையில் இருந்து நாம் சிந்தித்துப் பார்க்கும் போதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்களின் ஆச்சரியமான ஆட்தெரிவு பற்றி நாம் அதிசயிக்க வேண்டியுள்ளது .
ஒரு இலட்சிய வாத போராட்டம் தனது இலக்கின் செயட்கட்ட வடிவத்தை அடையாத வரை
அது கற்பனா வாதமே . இந்த கற்பனா வாதம் நகைக்கப்படும் ,பரிகாசிக்கப்படும் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்களுக்கும் இந்நிலை ஏற்பட்டது .
உண்மையில் சித்தாந்தப்போர் என்பது ஆயுதப் போர் போன்றதல்ல . இங்கு இரு தரப்பு இரத்தம் சிந்தல் இருக்காது .
பலமான எதிரியின் மத்தியிலும் பலவீனமான குரலாகவேனும் சித்தாந்தப்போர் தொடுக்கப் பட்டுக்கொண்டே இருக்கும் . தனது குரல்வளையை எதிரியின் கால்கள் நசிக்கும் போதும் தனது இலட்சிய வாதத்தின் முனகலாகத்தான் சித்தாந்தப்போராளியின் வலி கூட வெளிப்படும் .
சமரச முற்றுகையும் , துரோகத்தை வேண்டிய விலை பேசலும் இங்கு சர்வ சாதாரணம் . சிலநேரம் இவை மரணத்தை விட கொடியது .
விரும்பி துரோகியாவதும் , சூழ்நிலையால் துரோகி ஆவதும் என துரோக நுளைவிட்கு இருவழி இருந்தாலும் விளைவு ஒன்றுதான் ஒருவன் தானே தூக்கில் தொங்குவதும் , பலாத்காரமாக தொங்கவிடப்படுவதும் மரணம் எனும் ஒரே விளைவைத்தான் தரும் !
ஒரு சித்தந்தப்போராளியின் உண்மையான மரணம் அவனது கழுத்து துண்டாடப்படுவதல்ல ! மாறாக அவனது கருத்து துண்டாடப்படுவது ! முஸ் அப் இப்னு உமைர் (ரலி ) உஹுதில் சஹீதாக்கப்பட்டது நாம் அறிந்த விடயம் ஆனால் அதற்கு
முன்னே அவர் தனது கருத்து வலிமையால் விதையாகிவிட்ட உண்மை உணரப் பட்டது மிக சொற்பமே !

No comments:
Post a Comment