Feb 12, 2013

பிசாசை விரட்டியபின் சந்திக்க இருக்கும் பூதம் ! (ஒரு பார்வை)

சிரியாவின் பற்றமான சூழ்நிலை பற்றி ஆராய்ந்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோர்ன் கெர்ரி தெரிவித்துள்ளார் . அங்குள்ள நிலைமையை சமாளிக்கவும் வன்முறைகளை தடுக்கவும் இராணுவ ,இராஜதந்திர நடவடிக்கை பற்றி இப்போது அமெரிக்க அரசு தீவிரமாக ஆராய்வதாக கனேடிய வெளியுறவு அமைச்சருடன் கடந்த பெப்ரவரி 08 இல் நடந்த சந்திப்பொன்றில் அவர் தெரிவித்தார் .

அந்த சந்திப்பில் குறிப்பிட்ட இன்னொரு முக்கிய விடயமே" சிரியாவில் உள்ள சில அமைப்புகள் பற்றி நாம் விசேட கவனம் செலுத்தவேண்டும் ஏனெனில் அவை மிகுந்த ஆபத்தானவை" என்ற கருத்தாகும் . இந்த அச்சம் மிகுந்த வார்த்தைகள் அமெரிக்க அரசால் வெளியிடப்படுவது இதுதான் முதல் தடவை அல்ல . ஆனால் சிரியாவின் இன்றைய நிலைமைகள் மிக நீண்ட நாட்களாக மீடியா இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில் வெளிவரும் இந்த கருத்தானது திட்டங்கள் தயாரான நிலையில் ஒரு கூட்டுச் சதிக்கான முன்னறிவிப்பாக எம்மால் கருத முடியும் . 

அமெரிக்க அச்சம் என்னவென்றால் சிரியாவில் இயங்கும் இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு தேசிய அரசை பேசி நிற்கவில்லை என்பதே ஆகும் . ஆரம்ப போராட்ட சூழ்நிலையில் நிமிர்ந்து நின்ற சிரிய தேசியக்கொடி வெள்ளையில் கருப்பு' எழுத்தில் லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ..' என்ற வடிவத்தில் பறக்க ஆரம்பித்ததும் , இராணுவ தாக்குதல் அணிகள் கருப்பில் வெள்ளை எழுத்தில் லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ..' என்ற வடிவத்தில் பறக்க ஆரம்பித்ததும் , தான் சூழ்நிலைகளின் சிக்கலை வெளிப்படுத்தி நின்றது . 

அமெரிக்க உளவுப் பிரிவான C .I .A யின் கழுகுக் கண்களுக்கு லிபியாவில் கடாபி தெளிவாகத் தெரிந்ததும் , அதே கண்களுக்கு தெரியாமல் பசர் அல் அசாத் கச்சிதமாக தப்பித்ததும் சிரியாவில் அமெரிக்க நிலைப்பாடு என்ன ? என்பதை விளக்க போதுமானதாகும் . மேலும் சிரியாவின் இராணுவ ஆய்வு மையத்தின் மீதான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை எதிர்காலத்தில் நடக்கப் போகும் சூழ்நிலைகளின் பிரதான பாத்திரங்களை அறிமுகப் படுத்துவதாகவே உள்ளது . 

மேலும் துருக்கிய தலைநகரமான அங்காராவில் அமைந்திருந்த அமெரிக்க தூதரகம் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான சம்பவமும் எப்படியான ஒரு முற்றுகை சூழலை மத்திய கிழக்கு , குறிப்பாக சிரியா எதிர் கொள்ளப் போகிறது என்பதை குறித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது . இப்போதுள்ள கேள்வி பிசாசை விரட்டி அடிக்கும் இறுதிக் கட்டத்தில் இருக்கும் சிரிய இஸ்லாமிய போராளிகள் முதலாளித்துவ பூதத்தை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே ! ஏனென்றால் இந்தப் பூதம் தன்னை அடிமையாக்கி ஒரு அரசியல் அற்புத விளக்கில் அமர்ந்து கொண்டு , சிரியர்களை அலாவுதீன் ஆக்கும் சக்தி வாய்ந்தது . ஆனால் அல்லாஹ் (சுப ) இவர்களை விட நுணுக்கமான சதிகாரன் என்பதை இன்ஷா அல்லாஹ் உலகம் உணரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

No comments:

Post a Comment