Feb 19, 2013

ஒட்டு மொத்த 'கிரிமினல்களின் ' பக்குவமான புகழிடம் எது ?


குடிமக்களின் பெயரில் ஒரு சர்வாதிகார நியாயம் அதுதான் ஜனநாயகம் . ஆண்டிக்கு ஆண்டியே அரசனாம் !! இப்படித்தான் சொன்னார்கள் . சுதந்திரத்தை அடுத்தவனின் மூக்கு நுனிவரை நீட்டமுடியும் என்று துள்ளிக் குதித்தார்கள் . அதன் வடிவம் பற்றிய ஆசை எப்போதும் நிராசையானது தவிர இன்றுவரை நியாயமாகவில்லை . பகல் கொள்ளைக்கும் ,பக்கச் சார்புக்கும் , படு பாதகங்களுக்கும் அது துணை போனதே தவிர உருப்படியாக அது என்றும் தீர்வு சொன்னதில்லை .
மக்களின் விருப்பே ஜனநாயகத்தின் முடிவு இப்படி சொல்லி பகட்டான ஒரு தேர்தலும் வைக்கப்படும் . பல கட்சிகள் ,பல வாக்காளர்கள் இறுதியில் சிதறிய வாக்குகளில் மக்களின் எதிர்பார்ப்புகள் சிதைக்கப்பட்டு புதைக்கப்படும் .அதாவது கூட்டாட்சி என்ற குப்பை சாம்பாரில் அவிந்த வெங்காயங்கள் சில ஆட்சி ஏறி அதிகார தம்பட்டமடிக்கும் .
35% வாக்குகளை பெற்ற சில சாக்கடைகள் சந்தனமாக நெஞ்சு நிமிர்த்தி அதிகார பெருமை பேசும் ! அப்படியானால் மறுபக்கத்தால் 65% மக்களின் எதிர் வாக்குகளின் நிலை என்ன !? இதுதான் ஜனநாயகம் என்றால் மக்களால் தீர்மானிக்கப் படுவது என்பது எங்கே !? புல்லுப் போட்டால் பால் கொடுக்கும் பரிதாப ஜாதியா மக்கள் !
வாக்குறுதியை வீசி வாக்குகளை கறக்கும் வழிமுறையின் கீழ் ஒரு தேசியப் பண்ணை எனும் அயோக்கியத்தனம் தவிர உலகம் இதுவரை சாதித்தது என்ன !?
சாமர்த்தியமான பேச்சுத் திறமையும் , ஒரு வெள்ளையும் சொல்லையுமான வெளித்தோற்றம் போதும் ; ஒருவனது 'ரியல் பயோ டேட்டா ' அவுட் ஒப் ஆர்டர்' ஆகி 'நியூ வெர்சன் அவுட் புட் ஆகிவிடும் !' சண்டியன் ,சண்டாளன் சரித்திர நாயகன் ஆகிவிடுவான் ! மக்கள் தொகை பற்றியே தெரியாதவன் மக்கள் தலைவன் ஆகிவிடுவான் !சினிமாவில் விடும் சில வார்த்தை ரீலையே சிலர் தங்கள்' ப்ரோபோசனால்' வாழ்க்கை ரீலாக்கி 'பொலிடிக்ஸ்' செய்யவும் புறப்பட்டு விடுவார்கள் .
ஜனநாயகத்தில் மேலோங்கிய நாடுகளாம் பிரான்ஸ் ,ஜேர்மன் , என்பன .அதில் மூக்கு நுனிவரை சுதந்திரம் பேணப்படும் என்ற வாக்குறுதி முஸ்லீம் பெண்களின் 'ஹிஜாப் ' விடயத்தில் யாரின் மூக்கை குடைந்தது ? அவிழ்த்துப் போட்டால் கண்களால் சில்மிஷம் செய்து உள்ளத்தால் பாலியல் சுகம் பெறும் அருவருப்பான, அத்தோடு ஆபத்தான காமக் கலாச்சாரத்துக்கு வழிவிடவில்லையே !? என்ற ஒரே கரணம் தான் இந்த அவிழ்ப்பு சு(க )தந்திரத்தை ஜனநாயகத்தில் வேண்டி நிற்கின்றதா !?
நீதி ,நியாயம் ,நேர்மை போன்ற எல்லாம் இன்று சந்தர்ப்ப வாதமான ஒரு பேசு பொருள் தான் . 'துப்பாக்கியோடு வந்து விஸ்வரூபம் 'காட்டிச் செல்வதெல்லாம் சர்வ சாதாரணம் இந்த எரியும் வீட்டில் கொள்ளி பிடுங்கவும் ,எண்ணை ஊற்றவும் வழக்குப் போட்டு பிழைப்பு நடத்தவும் , சமரசம் பேசி சமபந்தியில் அமரவும் , 'கிரிமினல் ரூட்டில் டிப்லோமடிக் பொலிடிக்ஸ் ' செய்யவும் என ஒட்டுமொத்த அநியாயக் காரர்களுக்கும் ஒரே புகழிடம் இந்த ஜனநாயக அரசியலே .

No comments:

Post a Comment