Feb 21, 2013

பசுந் தோல் போர்த்திய புலிகள் யார் !?

"வணிகத்தில் இலஞ்சம் கொடுப்பது குற்றமில்லை " ! இவ்வாறு கூறுவது 'மாபியா ' இயக்கத்தின் தலைவரோ ,அல்லது ஒரு முன்னாள் 'ரவுடியோ ' அல்ல மாறாக ஒரு புகழ் பெற்ற வரலாற்றை பறை சாற்றி நிற்கும் முன்னாள் காலனித்துவ வாத நாடான 'இத்தாலி 'யின் முன்னால் பிரதமரான 'சில்வியோ பெர்லஸ்கோனி 'ஆவார் .

இத்தாலியின் முக்கிய பிரமுகர்களுக்கு 3600 கோடி இந்திய ரூபா மதிப்பில் 12 அதி நவீன 'ஹெலிகொப்டர்களை ' கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்ள 'பின் மெக்கானிக்கா ' எனும் இத்தாலிய நிறுவனம் 360 கோடி ரூபா இலஞ்சம் கொடுத்ததாக காரணம் காட்டி கைது செய்யப்பட்டிருக்கும் அந்த நிறுவனத்தின் அதிகாரியான 'கியுசெப் ஓர்சி ' தொடர்பில் , அவருக்கு சார்பாக இந்த கருத்தை 'இத்தாலி 'யின் முன்னால் பிரதமரான 'சில்வியோ பெர்லஸ்கோனி ' தெரிவித்துள்ளார் . மேலும் அவர் இது விடயத்தில் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கூறிய 'ஹைலைட்டான சில கருத்துக்களை கீழே தருகின்றேன் .

* " இலஞ்சம் என்பது நடைமுறையில் இருக்கும் விடயம் ! அவசியம் ஏற்படும் நிலையில் அதை கொடுப்பதில் தவறில்லை "

* "உலக அளவில் இத்தாலியின் வணிக நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வது வணிக உலகில் தற்கொலைக்கு ஒப்பானது இந்த நடவடிக்கை இத்தாலியின் சர்வதேச வணிகத்தை பாதிக்கும் "

* "இது ஒரு ஒழுக்க நெறி சார்ந்த விடயம் எனக்கூறுவது நகைப்புக்கிடமானது ! (முதலாளித்துவ ) வணிக உலகில் இதுபோல் விடயங்களை பெரிது படுத்தும் நிலையில் உங்களால் ஒரு சிறந்த வணிக 'ஜம்பவான்கலாக ' மிளிர முடியாது "

மேலே தந்த விடயங்கள் நிகழ்கால முதலாளித்துவ உலகின் சூழ்நிலையை விளக்க முதலாளித்துவம் தன்னைப் பற்றி தானே அளிக்கும் 'சாத்தானிய ' சாட்சிகளாகவே எம்மால் கருத வேண்டியுள்ளது . இந்த கருத்துரையின் படி உலகின் அதிகாரத்தை இத்தகு ஊழல்களை,வரம்பு மீறல்களை அங்கீகரித்து அரசியல் செய்யத்தக்க ' பசுந் தோல் போர்த்திய புலிகளால் ' மட்டுமேசெய்ய முடியும் . என்ற 'ஜங்கிள் லோவை ' 'பிரக்டிகல் வே ' என காட்டி நிற்கின்றது . இந்த அநியாய விதியின் கீழே பின்வரும் விடயத்தையும் சற்று ஒப்பிடுவது பொருத்தம் என நம்புகிறேன் .

பெரும்பான்மை ,சிறுபான்மை என்ற அரசியல் கொந்தளிப்பில் இலாபம் அனுபவித்து அரசியல் செய்யும் 'ஜனநாயக ' வாக்கு வியாபாரத்தை பற்றித்தான் நான் சொல்ல வருகின்றேன் . மனித நேயத்தை இரண்டாம் பட்சமாக்கி பெரும்பான்மை எனும் பக்கச் சார்பின் மீது அதிகார கதிரையை இருத்தி அதில் அலாதியாக அமர்ந்து இன ,மத , குல ,வர்க்க ,நிற வேறுபாடுகளை தூண்டி ஆட்சி செய்யும் தேசிய ,சர்வதேசிய அரசியல் வியாபாரத்தின் வணிகர்கள் பற்றியும் ,அந்த முதலாளிகளுக்கு வாக்கு பலம் கொடுத்து முட்டல்களாகும் நம்மைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும் . 'பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள் ' எனும் பழமொழி சொல்வது போல் தீமையின் ஆணிவேரே இன்று உலகின் தனிப்பெரும் ஆதிக்க சக்தியாக தன்னை நிலைநாட்டி நிற்கும் தீய முதலாளித்துவ அரசுகளே .என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் 

No comments:

Post a Comment