இஸ்லாமிய சிந்தனா ரீதியாகவும் ,கொள்கை ரீதியாகவும் அழுத்தமான பயிற்றுவிப்புகள ் இல்லாமல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழ்நிலை வாத செயற்கட்ட நடவடிக்கைகளுக்க ுதான் இஸ்லாமிய இயக்கங்கள் இன்று முன்னுரிமை கொடுக்கின்றன .
முதலாளித்துவ ஏகாதிபத்திய சிந்தனா வாதத்தின் எதிர்பார்ப்பை ஒத்த இத்தகு கருத்துப் போக்கு போட்டிச் சந்தையை ஒத்த பிரச்சார வலை விரிப்புகளோடு மக்கள் முன் நிற்கின்றன . நிகழ்கால ஜாஹிலீய கவர்ச்சிகளின் முன் வாழ்வு என்பதை இஸ்லாமிய வடிவத்தோடு கொடுத்தல் என்பதில் "மக்கள் திருப்தியே மகேசன் திருப்தி " என்பதே சில இஸ்லாமிய இயக்கங்களின் அமுத வாக்கு .
சிக்கல் இல்லாத பிரச்சாரம் , சமூக சேவை என்பவற்றின் மூலம் தம்மை தக்க வைத்தல் ,ஆட்சேர்த்தல் ,தம்மை நியாயம் காட்டல் என்ற கருத்தியலோடு கல்வி, தொழிற்பயிட்சி , முகவர் சேவைகள் ,போன்ற சுய விளம்பர வடிவமெடுத்துள்ள சில 'தவ்வா 'கம்பனிகள் முன் மக்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை எதை தெரிவு செய்வது ? எவ்வாறு தெரிவு செய்வது? என்பதே .
இன்று காணப் படக்கூடிய எல்லா இஸ்லாமிய இயக்கங்களையும் முன்னிறுத்தி பின்வரும் வினாவை தொடுத்தால் சில நேரம் அவர்களுக்கும் மக்களுக்கும் மயக்கம் தீரலாம் .அது இஸ்லாத்தை நிலைநாட்டும் கருவி (tool ) இயக்கங்களா ? அல்லது இயக்கத்தை நிலை நிறுத்துவதற்கான கருவி (tool ) இஸ்லாமா ? என்ற வினாவே அதுவாகும் .
இந்த வினாவுக்கு முன் இன்றைய நிகழ்கால நடப்புகளின் படி இயக்கங்களுக்காக த் தான் இஸ்லாம் என்ற பதில் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை .இந்த மனோ நிலையில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களின் வரவுகள் தான் முஸ்லீம் சமூகத்தின் இயல்பான சிந்தனைத் தரத்தை விட்டும் தூரப் படுத்தியுள்ளதுட ன் பிரிவினைகளையும் நியாயப்படுத்தி உள்ளது .
தமக்கென வரையறுத்த ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி அடுத்த இயக்கங்களையும் அங்கீகரிக்கிறோம ் என வெளிப்படையாக கூறிக் கொண்டு உள்ளார்ந்த ரீதியாக அடுத்த இயக்கங்களுக்கு எதிராக சேறு பூசி மக்கள் மத்தியில் 'கூல் கேம் கொடுக்கும் இன்டலிஜென்ட் கிரிமினல் டிப்லோமடிக் இயக்கங்கள் ஒருபுறம் .
தாம் மட்டுமே சரியானவர்கள் அடுத்த இயக்கங்கள் வழிகேடர்கள் என வெளிப்படையாகவே சொல்லி சவால் விட்டு சண்டைக்கிழுத்து சுய சுத்தம் காட்டி சகோதரத்துவ சண்டையில் தாமே ஏகபோக பிரச்சார வேங்கைகள் என மார்தட்டி நிற்போர் மறுபுறம் .
மொத்தத்தில் இஸ்லாத்தை மீள் கட்டமைக்க வந்தவர்கள் அதிகரித்துப் போனதால் அவர்களே இஸ்லாமிய சமூகப் புற்றின் ஆபத்தான' கான்சர் செல்களா '? என்ற சந்தேகத்தின் மத்தியில்
இந்த உள்ளார்ந்த சச்சரவுகள் எமக்கு விசனத்துக்குரிய தாகவும் , குப்பார்களுக்கு வேடிக்கையான வாடிக்கையாகவும் மாறிவிட்டதும் கவலையான உண்மைதான் .
தயவு செய்து மனதார ஒப்புக் கொள்ளுங்கள் நான் மேலே தந்த விடயங்கள் சூழ்நிலையின் சுருக்கங்களே தவிர விமர்சிப்பு அல்ல . சகோதரத்தை விட மேலோங்கி விட்ட இயக்க
வாதங்கள் எம்மை இன்னும் பின்னடையவே செய்யும் . அல்லாஹ்வுக்காக இந்தத் தவறில் இருந்து தவிர்ந்து கொள்வோமா ?
சிக்கல் இல்லாத பிரச்சாரம் , சமூக சேவை என்பவற்றின் மூலம் தம்மை தக்க வைத்தல் ,ஆட்சேர்த்தல் ,தம்மை நியாயம் காட்டல் என்ற கருத்தியலோடு கல்வி, தொழிற்பயிட்சி , முகவர் சேவைகள் ,போன்ற சுய விளம்பர வடிவமெடுத்துள்ள
இன்று காணப் படக்கூடிய எல்லா இஸ்லாமிய இயக்கங்களையும் முன்னிறுத்தி பின்வரும் வினாவை தொடுத்தால் சில நேரம் அவர்களுக்கும் மக்களுக்கும் மயக்கம் தீரலாம் .அது இஸ்லாத்தை நிலைநாட்டும் கருவி (tool ) இயக்கங்களா ? அல்லது இயக்கத்தை நிலை நிறுத்துவதற்கான
இந்த வினாவுக்கு முன் இன்றைய நிகழ்கால நடப்புகளின் படி இயக்கங்களுக்காக
தமக்கென வரையறுத்த ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி அடுத்த இயக்கங்களையும் அங்கீகரிக்கிறோம
தாம் மட்டுமே சரியானவர்கள் அடுத்த இயக்கங்கள் வழிகேடர்கள் என வெளிப்படையாகவே சொல்லி சவால் விட்டு சண்டைக்கிழுத்து
மொத்தத்தில் இஸ்லாத்தை மீள் கட்டமைக்க வந்தவர்கள் அதிகரித்துப் போனதால் அவர்களே இஸ்லாமிய சமூகப் புற்றின் ஆபத்தான' கான்சர் செல்களா '? என்ற சந்தேகத்தின் மத்தியில்
இந்த உள்ளார்ந்த சச்சரவுகள் எமக்கு விசனத்துக்குரிய
தயவு செய்து மனதார ஒப்புக் கொள்ளுங்கள் நான் மேலே தந்த விடயங்கள் சூழ்நிலையின் சுருக்கங்களே தவிர விமர்சிப்பு அல்ல . சகோதரத்தை விட மேலோங்கி விட்ட இயக்க
வாதங்கள் எம்மை இன்னும் பின்னடையவே செய்யும் . அல்லாஹ்வுக்காக இந்தத் தவறில் இருந்து தவிர்ந்து கொள்வோமா ?
No comments:
Post a Comment