May 29, 2013

இதோ ஒரு நிஜத்தின் கதை அது இன்றைய சிரியா!


'அஸ் ஸஹாம் ' இந்த முஸ்லீம் உம்மாவின் வாக்களிக்கப்பட்
இஸ்லாமிய பூமிகளில் ஓன்று .
அதில் 'அசாத் ' அதிகாரம் அருவருப்பான விஷம் கலந்த
புதைக்கப்பட வேண்டிய ஜாஹிலீய குப்பை .
அதை அகற்றிவிட எம் மக்கள் மீண்டுமொருமுறை
உணர்வோடு துணிந்தார்கள் .

அந்த (அசாத் எனும் ) அசிங்கம் வழமை போலவே தனது
அதிகாரக் கரங்களோடு வெகுண்டு எழுந்தது .
அராஜகம் தலை விரித்தாட உயிரோட்டமான இந்த உம்மா
இரத்த சரித்திரத்தால் மறுபடியும் வேட்டையாடப்பட்டது .

அச்சத்தின் முன் மண்டியிடத்தூண்டிய இந்த நர வேட்டையில்
அவன் உடன் பிறப்புகளான ( ஷியா ) குள்ள நரிகளும் காட்டுத்தனமாக
களம் குதிக்க பயங்கர வேட்டைதான் .
அங்கு (அசாத் )ஆட்சி வீழ்த்தப்பட்டால் எழப்போவது
இன்னொரு இஸ்லாமிய சுத்த சரித்திரமானால் ?!!
அஞ்சியது அமெரிக்க இஸ்ரேல் கூட்டு காரணம் அதனால்
சரியப்போவது அவர்களது ஆதிக்க கோட்டையல்லவா!

அவர்கள் வழமையான பாணியில் அங்கு ஒரு
அசுத்தமான சதிகளின் சரித்திரத்தை அரங்கேற்றினார்கள் !
ஆசாத் படை , ( வெஸ்டர்ன் ஆதரவு )போராளிப்படை , மக்கள் படை !
AK 47 வேசஸ் M16 = 'ரியல் சிரியா ' என்றுதான்
'மீடியாக்கள்' பாடியிருக்க வேண்டும் .
அவை ஓலமிட்ட திசை வேறு 'அல்ஜெசீராவும் 'கூட !
அழிவின் விதமும் அழிக்கப்படும் விதமும் வேறு வேறுதான்.
ஆனால் விளைவு ஒன்றுதான் எம் உம்மாவின் உதிரம் !!??

அங்கு (குர்பான் கொடுக்க ) இருக்கும் (மக்கள் எனும் )ஆடுகளை காக்க
'NATO' எனும் சிலுவை அணிந்த ஓநாய் கூட்டத்தை வேறு களம் குதிக்க
சொன்னார்கள் எம் உலமாக்கள் ! எல்லையை திறந்து அந்த ஜாஹில் கூட்டத்துக்கு கூடாரம் வேறு கட்டிக் கொடுத்தார்கள்!
'ஜனநாயக வைரஸில்' வார்த்தெடுக்கப்பட்ட எம் தனிப்பெரும்
தேசியத் தலைவர்கள்! .

ஆசாத் தப்புவது கடினம் ஆனால்
மத்திய கிழக்கை குண்டுச்சட்டியாக்கி தமது அரசியல்
குதிரையை நினைத்தவாறெல்லாம் ஓட்டுவது
அமெரிக்காவிற்கு கைவந்த கலையாகி விட்டது !
எனவே எதிர் பார்க்கப்படுவது 'பிரீடோம் போர் திமோகிரசி இன் சிரியா '
'அல்லாஹு அக்பர் ' என்பதை மேலதிகமாக
சேர்ப்பதையும் அங்கீகரிப்பார்கள் !

பாவம் இவர்கள் விளையாடுவது அல்லாஹ்வின்
முன்னறிவிப்புகளோடு என்பது நாம் அறிந்த சுப செய்தி !
காலத்தால் சுணங்கினாலும் 'குப்பாரின் ஒபரேசன்'
சுகம் வரும் போல் இருக்கும் ஆனால் ஆள் தப்பாது என்றுதான்
முடியும் இன்ஷா அல்லாஹ் .. 'அஸ் சஹாம் ' கிலாஃபத்தை பிரசவிக்கப் போவதும் இன்ஷா அல்லாஹ் உண்மை....

No comments:

Post a Comment