May 3, 2013

பல முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவின் கொடூர விசாரணை முறைகளுக்கு உதவி !!


Sources From http://darulaman.net/ 
Camp X-Ray: the USs Prime Concentration Camp

அண்மையில் open society Foundation வெளியிட்ட அறிக்கை ஒன்றில்1, உலகின் 54 நாடுகள் சீ.ஐ.எ (C.I.A) இன் கொடூர விசாரணை முறைகளுக்கு இரகசியமாக உதவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, அஜர்பைஜான், எகிப்து, இந்தோனேஷியா, ஈரான், ஜோர்டான், லிபியா, சிரியா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன், உஸ்பெகிஸ்தான், சவுதி அரேபியா போன்ற முஸ்லிம் நாடுகcம் அடங்கும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் இஸ்லாமிய மறுமலர்ச்சியை தடுக்க முயலும் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும், இஸ்லாமிய ஆட்சியின்பால் அழைக்கும் முஸ்லிம்களை தொடர்ந்தும் சித்தரவதை, நாடு கடத்தல் போன்ற அராஜக நடவடிக்கைகளுக்கு உட்படுத்துகிரர்கள்.

முஸ்லிம்களின் கண்ணியத்தை துச்சப்டுதும் இந்த செயல்களுக்கு உதவிவரும் முஸ்லிம் நாட்டுத் தலைவர்கள் அமெரிக்காவின் அடிவருடிகளே என்பது இந்த அறிக்கை உறுதிபடுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

إنَّمَا الإِمَامُ جُنٌَّة يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتََّقى ِبهِ َفِإنْ َأمَرَ ِبتَ ْ قوَى اللَّهِ عَزَّ وَجَلَّ وَعَدَ َ ل كَا َ ن َلهُ ِب َ ذلِكَ َأجْرٌ وَِإنْ يَْأمُرْ ِبغَيِْرهِ كَا َ ن عََليْهِ مِنْهُ

“இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாக பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள்.” (அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)

இன்றைய முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு கேடயமாக இல்லாமல், பலி கொடுக்கும் கொடுங்கோலர்களாகவே உள்ளார்கள்!

لَّا يَتَّخِذِ الْمُؤْمِنُونَ الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِن دُونِ الْمُؤْمِنِينَ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ إِلَّا أَن تَتَّقُوا مِنْهُمْ تُقَاةً وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ

விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமது பாதகாவலர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.  (ஆல இம்ரான்: 28)

முஸ்லிம்களே !

இஸ்லாமிய ஆட்சிமுறையான கிலாஃபா முஸ்லிம்களுக்கும் முழு மனித சமுதாயத்திற்கும் நற்பலன் அளிக்கக்கூடியது. கிலாஃபத்தில் முஸ்லிம்களின் பாதுகாப்பும் கண்ணியமும் கட்டிக்காக்கப்படும். கிலாஃபாத்தை நிலைநாட்டுதல் என்பது முஸ்லிம்களின் ஜீவாதாரப்பிரச்சனையாக இருப்பதோடு கட்டாயக்கடமையாகவும் இருக்கிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَحُولُ بَيْنَ الْمَرْءِ وَقَلْبِهِ وَأَنَّهُ إِلَيْهِ تُحْشَرُونَ

“ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும் அவன் தூதரும் உங்களை உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்தின்பால் அழைத்தால் அதற்கு நீங்கள் பதிலளியுங்கள்.”

(அல் அன்பால்: 24)

No comments:

Post a Comment