(ரமழான் அல்குர் ஆனின் மாதம் அதன் சுவையை உணர்ந்த எம் முன்னோர்கள் எவ்வாறு மாற்றம் பெற்றார்கள் !? நாம் சிந்திக்க சில வரிகள் )
கோத்திர வெறியும் ,பழிவாங்கும் உணர்வும் மலிந்த பண்டைய அரேபிய தீப கற்பம் ; ஒரு சாராரின் ஒட்டகம் இன்னொரு சாராரின் தோட்டத்தில் நுழைந்து மேய்ந்து விட்டது எனும் ஒரே அற்ப காரணத்தி ற்காக பரம்பரை பரம்பரையாக வாட்களால் மனித இரத்தம் சுவைத்த சமூகம் . ஒரு தந்தையின் மரண சாசனம் அன்று விசித்திரமாக இருந்தது அது 'இன்னாரின் மண்டை ஓட்டில் நீ மது அருந்த வேண்டும் 'என மகனிடம் கடைசி ஆசையாக பணித்தது .
சுற்றியிருந்த ரோம் ,பாரசீக 'ஜென்டில் மேன்கள் ' எல்லாம் கூட இவர்களை 'இடியட்சாக ' சொல்லாமல் சொல்லி பக்குவமாக அவர்களது தேவைகளுக்கு பயன் படுத்தும் பண்ணை இடையர்களாக வேறு கருதிக் கொண்டிருந்தார்க
பெண் குழந்தை அவர்களுக்கு கேவலத்தின் சின்னம் அதை குழி தோண்டிப் புதைப்பது தான் அவர்களுக்கு கெளரவம் ! விபச்சாரம் அன்று வியாபாரம் மட்டுமல்ல ஒரு திருமண வழிமுறையும் கூட ! கணவனே கூட்டிக் கொடுப்பான் பிறக்கும் குழந்தைக்கு தானே தந்தை என மார்தட்டியும் கொள்வான் ! இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் . இப்படியான ஜாஹிலீயத் ஆண்டு வந்த சமூகத்தை தான் 'வஹியின் ' வீச்சு தலை கீழாக புரட்டிப் போட்டது .
இன்றும் அதே ஜாஹிலீயா தலை விரித்து ஆடுகின்றது சற்று வித்தியாசமாக அறிவியல், தொழில் நுட்பத்தால் அலங்கரிக்கப் பட்டுள்ளது . இன்னும் நவீனம் காலத்தின் தேவை என்பவைகளால் சரிகாணப்பட்டுள்
No comments:
Post a Comment