Aug 20, 2013

இஸ்லாமிய சர்வதேச உறவுகள்….!

இஸ்லாமிய உலகில் உள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒரே பிரதேசமாகவே கருதப்படும். ஏனெனில் முஸ்லிம்கள் அனைவரும் தனித்துவம் கொண்ட ஒரே உம்மத் என்பதாலாகும். அவர்கள் அனைவரும் ஒரே அரசாக, ஒரே மக்களாக,ஒரே அணியாக வாழவேண்டியது வாஜிபாகும்.

ஆகவே, இந்நாடுகளுக்குள் இருக்கும் உறவு அந்நிய நாட்டு உறவாகவோ வெளிவிவகார கொள்கையின் வட்டத்திற்குள்ளோ இருக்கமாட்டாது.

இஸ்லாமிய அரசு இந்த நாடுகளுடன் ஒருபோதும் அந்நிய நாடுகளுடன் வைத்துள்ள இராஜதந்நதிர உறவுகளையோ எவ்வித உடன்படிக்கை களையோ மேற்கொள்ளாது.

இந்த நாடுகள் அனைத்தும் கிலாபத் அரசின் பகுதியாக காணப்படும். இவர்கள் வாழும் பிரதேசம் தாருள் இஸ்லாமாக இருக்கும் பட்சத்தில் கிலாபத் அரசின் குடிமக்களாக கருதப்படுவார்கள். அவர்கள் பிரதேசம் தாருள் குப்ராயின் தாருள் குப்ரில் வாழும் முஸ்லிம்களாக கருதப்படுவார்கள்.

மேற்கிலும் கிழக்கிலும் உள்ள நாடுகள் தாருள் ஹர்பாக காணப்படும். இந்நாடுகளுடன் முஸ்லிம்களது நலனையும் கிலாபத்தின் நலனையும் அடிப்படையாக கொண்டுள்ள வெளிநாட்டு உறவுகள் இருக்கும். இறை சட்டத்தின் அடிப்டையில் இந்நாடுகளது வெளிநாட்டு உறவுகள் தீர்மானிக்கப்படும்.

இந்நாடுகளுடன் குறித்த தவணையில் நட்புமுறையில் (வர்த்தகம், பொருளாதாரம், விவசாயம், அறிவியல்) ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படமுடியும். இவ் ஒப்பந்தங்களின் போது முஸ்லிம்களதும் கிலாபத் அரசினதும் நலன்கள் கருத்திற்கொள்ளப்பட்டதாவவே அமையும்.

முஸ்லிம்களுடன் போர்க்குணத்துடன் நடந்துகொள்ளும் காலனித்துவ நாடுகளுடன் முன்னெச்செரிக்கையாக கிலாபா அரசு நடந்து கொள்வதுடன் இராஜ உறவுகள் வைத்துக்கொள்ளப்பட மாட்டாது. இந்நாட்டு இராஜ தூதரகங்கள் கிலாபத்தினது முஸ்லிம் தேசத்திற்குள் இருப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. இந்நாட்டு மக்கள் வீசா மற்றும் கடவுச் சீட்டுடன் மட்டுமே இஸ்லாமிய நிலப்பரப்பில் அனுமதிக்கப்படுவார்கள்.

முஸ்லிம்களுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் நாடுகள் கிலாபத்தின் போர்ப்பிரகடன நாடுகளாக கருதப்பட்டு எதிரி நாடுகளுடனான இராஜ உறவுகள் மேற்கொள்ளப்படும்.

மேற்குறித் அடிப்படையிலான வெளிநாட்டு உறவுகள் இன்று உலகில் எந்த ஒரு முஸ்லிம் நாடுகளிலும் இல்லை.

அதேவேளை இத்தகைய நிபந்தனைகள் சுமார் 1300 வருடகாலமாக இஸ்லாமிய கிலாபா அரசு இருந்த வேளையில் கடைப்பிடிக்கப்பட்டு முஸ்லிம்களது கண்ணியம் மற்றும் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது.

இன்று கிலாபா அரசு இல்லாதபடியில் முஸ்லிம் நாடுகள் காலனித்துவ மற்றும் ஏகாதிபத்திய நாடுகளது சுடுகாடுகளாக மாறி முஸ்லிம்களது உயிர்களுக்கும், உடைமைகளுக்கும், இயற்கை வளங்களுக்கும் வேட்டு வைக்கப்பட்டு முஸ்லிம் உம்மத் இந்த அந்நிய சக்திகளால் சூரையாடப்படுகிறது.

எனவே, ஒரு கலீபாவை நியமிக்க வேண்டியது உலகின் அனைத்துப் பகுதியிலும் வாழும் முஸ்லிம்கள் மீது வாஜிபாகவுள்ளது.

முஸ்லிம்கள் மீது அல்லாஹ் கடமையாக்கிய மற்றைய கடைமைகளைப் போலவே இக்கடமையை நிறைவேற்றுவதும் கட்டாயமாகவுள்ளது.

சிந்திப்போம்! ஆக்கபல தஃவாக்களை முன்னெடுப்போம்!

No comments:

Post a Comment