Aug 3, 2013

இது காலமுள்ள காலம்வரை பேசப்படும் இஸ்லாமிய வீரத்தின் வார்த்தைகள்.


.............." எத்தனையோ சிறு சிறு கூட்டத்தினர் பெரும் பெரும் கூட்டத்தினரை அல்லாஹ்வின் உதவியோடு வெற்றி கொண்டிருக்கிறார்கள் .மேலும் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் " (சூரா அல் பகரா வசனம் 249)

ரமழான் வந்தவுடன் விசேடமாக அல்பத்ர் சமர்க்களம் அனேகமாக எல்லா முஸ்லீம்களாலும் நினைவு கூறப்படும் .இந்த சமரைப் பற்றி பேசப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் "அதில் ஒரு களப் போராளியாய் நானும் இருந்திருக்கக் கூடாதா என்ன கைசேதமே" என அதில் கலந்து கொள்ளாத ஒவ்வொரு முஸ்லிமும் கவலைப்படும் அளவுக்கு அந்தப் போரின் இஸ்லாமிய தரப்பு பங்காளிகளுக்கு அல்லாஹ் (சுப ) ஒரு வாக்குறுதியை அளிக்கிறான் ; அது சுவனம் நிச்சயிக்கப் பட்ட நன்மாராயமே ஆகும் .

இந்தப் போர் தொடர்பில் பக்கம் பக்கமாக விபரிக்க பல விடயங்கள் இருந்தாலும் இஸ்லாமிய சித்தாந்தம் ஆழப்பதிந்த வடித்தெடுத்த சில நூறு மனிதர்கள் குறைசிக காபீர்களின் அதீத இராணுவ வலிமைக்கு முன் கேள்விக்குறியாக்கப் பட்ட நிலையிலேயே
இறைவன் வாக்களித்த இரு வெற்றிகளில் ஒன்றை தேர்வது முஸ்லீம்கள் முன் வைக்கப் படுகின்றது . அந்நிலையில் இஸ்லாமியப் படையணி எடுத்த ஆச்சரியமான முடிவுதான் எம்மை சிந்திக்க வைக்கின்றது .

வெறும் 40 சண்டை செய்யத்தக்க நபர்களைக் கொண்ட அபூ சுப்யானின் வியாபாரக் கூட்டமா ? பூரண சமரணியாக வரும் அபூஜஹலின் 1000 இராணுவமா ? எடுத்த முடிவோ அதிர்ச்சியானது . சந்திக்கப் போவது குரைசி இராணுவத்தையே !?கிடுகலங்கிய முனாபிக்குகள் வெருண்டோட வழி தேடினர் 'கனீமத்' தேடி களம் வந்த பலருக்கு 'கபுரின்' வாசனை தொடை நடுங்கிகளாக்கி சிதறி ஓடவைத்தது.

இப்போது எஞ்சியிருந்தது 'வஹி ' வடித்தெடுத்த வார்ப்புகள் மட்டுமே . வீரம் அவர்களிடம் இல்லை இல்லை வீரமே அவர்களாக ' வாழ்ந்தால் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிமை என்ற வாழ்வு அல்லது ஷஹீத் களாக சுவனத்தில் நுழைவு ' என ஹுப்புதுன்யாவை விரட்டி அடித்து நிமிர்ந்து நின்றார்கள் .அல்லாஹ்வின் தூதரின்
(ஸல் )அவசர ஆலோசனை ஒன்றின் பின் இஸ்லாமிய படையணியின் சுப்ரீம் கமாண்டர்கள் தரத்தில் இருந்த அபூபக்கர் (ரலி ) ,உமர் (ரலி ) போன்றோர் அந்த சத்தியப் படையின் முன் உரை நிகழ்த்தினார்கள் . இப்போது முஹாஜிர்களில் ஒருவரான கமாண்டர் மிக்தாத் இப்னு அமர் (ரலி )எழுந்து பேசினார்கள் .

இதோ அவரது வார்த்தைகள் "அல்லாஹ்வின் தூதரே ! அல்லாஹ் உங்களுக்கு காட்டிய வழியில் செல்லுங்கள் .நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம் .வல்லாஹி !

"மூஸாவே ! அவர்கள் அதில் இருக்கும் வரை ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம் . நீங்களும் உமது இறைவனும் (அங்கு )சென்று (அவர்களுடன் ) போர் புரியுங்கள் .நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக் )கொண்டிருப்போம் ".
(அல் குர் ஆன் அத்தியாயம் 5: வசனம் 24)

என்று பனூ இஸ்ரவேலர்கள் நபி மூஸா (அலை ) அவர்களிடம் கூறியது போல் நாங்கள் உங்களிடம் கூற மாட்டோம் . மாறாக நீங்களும் உங்களது இறைவனும் போர் புரியுங்கள் . நாங்களும் உங்கள் இருவருடன் சேர்ந்து போர் புரிவோம் .சத்தியத்தின் மீது உங்களை அனுப்பியவன் மீதாணையாக ! நீங்கள் எங்களை (மக்காவுக்கு அருகில் உள்ள )'பர்குல் கிமாது ' வரை அழைத்துச் சென்ராலும் உங்களுடன் மிகத் துணிவோடு வருவோம் " என்று கூறி முடித்தார் . இந்த வீர உரையைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவரைப் பாராட்டி அவருக்காக பிராத்தனை புரிந்தார்கள் .

இப்போது அன்சாரிகளின் முடிவு பற்றி அல்லாஹ்வின் தூதரின் ஆர்வம் திரும்பியது .காரணமும் இருந்தது அகபா உடன்படிக்கைப் பிரகாரம் மதீனாவுக்கு வெளியில் சென்று போராடுவது என்ற நிபந்தனை இல்லாதிருந்தது .அங்கிருந்து பதில் தந்தது கமாண்டர் ஸ அத் இப்னு மு ஆத் (ரலி )யின் ரத்தினச் சுருக்கமான அந்த பதில் இது தான் .

" அல்லாஹ்வின் தூதரே !தங்கள் இல்லங்களில் இருந்து கொண்டு உங்களுக்கு உதவி புரிவது மட்டுமே கடமை என அன்சார்கள் நினைப்பார்கள் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா ?
அன்சார்கள் சார்பாக நான் பேசுகிறேன் ; அவர்களின் சார்பாக நான் பதில் தருகிறேன் ;நீங்கள் விரும்பிய இடத்துக்கு செல்லுங்கள் ;நீங்கள் விரும்பியவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளுங்கள் ; விரும்பியவர்களோடு உறவை துண்டித்து விடுங்கள் ;நீங்கள் வேண்டியதை எங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள் ;நீங்கள் விரும்பியதை எங்களுக்கு கொடுங்கள் ; நீங்கள் எங்களிடம் இருந்து எடுத்துக் கொண்டது நீங்கள் எங்களுக்காக விட்டு விடுவதை விட மேலானதாகும் எங்களின் செயல்கள் உங்களின் கட்டளைக்கு இணங்கவே இருக்கும் ;வல்லாஹி நீங்கள் எங்களை 'கிம்தான் ' பகுதியில் உள்ள 'பர்க் ' வரை அழைத்துச் சென்றாலும் நாங்கள் உங்களோடு வருவோம் . வல்லாஹி நீங்கள் எங்களை கடலுக்குள் அழைத்துச் சென்று மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம் "என்று ஸ அத் இப்னு மு ஆத் (ரலி ) கூறியதன் பின்னர் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல் )மிகுந்த ஆனந்தம் அடைந்தவர்களாக வெற்றி பற்றிய சுப செய்தியை கூறினார்கள் (.அல்லாஹ்வின் எதிரிகள் வெட்டி வீழ்த்தப்படும் இடங்கள் தமது கண்களுக்கு தெரிவதாக அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் .)

வெறும் ஆட்கள் தொகையை காரணம் காட்டிய சரணடைவு அரசியலை எவ்வித இராஜ தந்திரப் பின்புலமும் அற்ற ,போர் செய்ய தடை செய்யப் பட்டிருந்த மக்கா வாழ்விலும் முஸ்லீம்கள் செய்திருக்க வில்லை . அரசியல் இராஜ தந்திரப் பின்புலம் மிக்க மதீனாவின் காலப்பகுதியிலும் முஸ்லீம்கள் செய்திருக்க வில்லை .

'குப்ர்' போட்ட 'செக்கியூலரிச'அதிகார ரோட்டில் 'தாகூத்திய கண்டிசனின் 'கீழ் 'ஜாஹிலீய லைசனோடு' இஸ்லாமிய வண்டியோட்ட நினைக்கும் மொடர்ன் இஸ்லாம் சிந்தனைத் தரம் சுன்னா வழியல்ல என்பதை புரிந்து கொள்ள இஸ்லாத்தின் சீராவை சரியாக ஆராய வேண்டும் தவிர 'அபூஜாஹில்ஹலை ' திருப்திப் படுத்தி அல்ஹம்து லில்லாஹ் என இஸ்லாத்தை வாழவைக்கலாம் என்ற பார்வையும் மிகத் தவறானது .அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன் மிக்க கிருபையுடையவன் 

No comments:

Post a Comment