Aug 31, 2013

மனித உரிமைகள் அமைப்பு முஸ்லிம்களது உரிமைகளை பாதுகாக்குமா?




அமெரிக்கா தலைமையிலான பேரரசின் கீழ் நிறுவப்பட்டு தொழிற்படும் மனித உரிமைகள் அமைப்பு முஸ்லிம்களது உரிமைகள் மீறப்படும்போது அது குறித்து ஆக்கபூர்வமாக இதுவரைக்கும் எதுவித நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதா?

ஈராக்கில் ஆப்கானில் காசாவில் மாலியில் பர்மாவில் சிரியாவில் எகிப்தில் என்று மனித உரிமைகள் அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகளால் அல்லது ஏகாதிபத்திய அமெரிக்காவினால் மீறப்படும் போது அவர்கள் எத்தகைய மனித உரிமைகளை பாதுகாத்துள்ளார்கள் என்பது குறித்து முஸ்லிம்களாகிய நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

நிச்சயமான குப்பார்கள் முஸ்லிம்களது விவகாரத்தில் கருணைகாட்ட மாட்டார்கள். இது வரலாற்று உண்மை.

இது இவ்வாறு இருக்கும் போது இன்னும் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்தப் போலியான சர்வதேச அரசியல் நலன்களின் பின்னனியில் தொழிற்படும் ஒரு சர்வதேச அமைப்பிடம் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து முறையிடுவதால் இந்த மனித உரிமைகள் அமைப்பு ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கு எதிராகவோ அல்லாது முதலாளித்துவ நலன்களுக்கு எதிராகவே எந்நவிதமான அதிரடி நடவடிக்கைகளை முஸ்லிம்களது விடயத்தில் எடுத்து நீதியை நிலைநிறுத்துமா?

இல்லவே இல்லை. இன்று ஷரீஆச் சட்டம் எந்த முஸ்லிம் நாட்டில் பகுதியாக அமுலாக்கப்பட்டாலும் மனித உரிமைகள் அமைப்பு மடித்துக் கட்டிக்கொண்டு களமிறங்கி இஸ்லாத்தை கற்காலத்திற்கு கொண்டு சென்று காட்டுமிராண்டித் தனமான சிந்தனைகளையும் சட்டங்களையும் கொண்ட மார்க்கமாக சித்தரிக்க முற்படும் போக்கை மிகத் தீவிரமாக முன்னெடுத்து மனித மனங்களை இஸ்லாத்திற்க எதிராக திருப்புவதில் பாரிய பங்களிப்பை வழங்கும்.

அப்படியானால் ஒரு முஸ்லிம் யாரிடம் இந்த மனித உரிமை மீறல்களை முறையிடுவது?

எமது 1300 வருட வரலாற்றில் முஸ்லிம்களது உரிமைகள் மாத்திரமன்றி இஸ்லாத்தின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த குப்பார்களது உரிமைகளையும் எவ்வாறு அந்த கிலாபா அரசுகள் பேணியது என்பதனை நாம் உணர்ந்து இன்று முஸ்லிம் உம்மத் இழந்துள்ள கிலாபா அரசை மீள நிறுவுவதன் மூலமே முஸ்லிம்களது உரிமைகள் பாதுகாக்கப்படமுடியும் என்ற அடிப்படை உண்மையை நாம் கருத்திற்கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment