Sep 7, 2013

அல்ஹு கும் ஷரியா (பகுதி-1) Divine Rules (AlHukm Shar’iah)

ஷரியா என்பது சட்டம் இயற்றுபவரின் உரையாகும் (Speech of the legislator) அது அடியார்களின் செயலோடு தொடர்புடையது. அது அல்குர்ஆன், ஹதீஸ்முத்தவாதிர போன்ற திட்டவட்டமாக நிருபிக்கப்பட்டவையாக இருக்கலாம் அல்லது முத்தவாத்திர் அல்லாத ஹதீஸ் போன்ற திட்டவட்டமாக நிருபிக்கப்படாதவையாக இருக்கலாம். திட்டவட்டமாக நிருபிக்கப்பட்டவையாக இருந்தால் அதன் அர்த்தம் நிச்சயமானது அதனுடைய ஹு குமும் திட்டவட்டமானது. இதற்கு உதாரணம் தொழுகையில் நிறைவேற்றவேண்டிய ரகாஅத்கள் இவை ஹதீஸ் முத்தவாத்திரில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதுபோலவே வட்டி தடை செய்யப்பட்டிருப்பது திருடன் கை வெட்டப்படுவது விபச்சாரம் செய்தவருக்கு (ADULTERER) கசையடி கொடுக்குப்படுவது ஆகியவை திட்டவட்டமான சட்டங்களாகும் அவைகளுக்கு சரியான திட்டவட்டமான ஒரே அர்த்தம் தான் உண்டு.

சட்டம் இயற்றுபவரின் உரை திட்டவட்டமாக இருந்தும் நிச்சயமான அர்த்தத்தைக் கொடுக்கவில்லையெனில் அதனுடைய ஹு கும் திட்டவட்டமற்றது. உதாரணமாக ஜிஸ்யா தொடர்பாக உள்ள குர்ஆனின் வசனம். அந்த வசனம் திட்டவட்டமானது ஆனால் அதன் அர்த்தம் திட்டவட்டமானது அல்ல. ஹனபி மத்ஹுப் அதை ஜிஸ்யா என்று அழைக்க வேண்டுமன்று அதை செலுத்தும் நிலையிலுள்ளவர்கள் தாழ்வுநிலையை வெளிபடுத்த வேண்டிம் என்றும் நிபந்தனை செய்திருக்கிறது. எனினும் ஷாபி மத்ஹுப் இதை ஜிஸ்யா என்று அழைக்கத் தேவையில்லை என்றும் அதை இருமடங்கு ஸகாத் என்று அழைத்துக் கொள்ளலாம் என்றும் இதை செலுத்தும் நிலையிலுள்ளவர்கள் தாழ்வுநிலையை வெளிபடுத்தவேண்டிய கட்டாயம் இல்லை என்றும் இஸ்லாமிய சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொண்டால் போதும் என்றும் நிபந்தனை செய்திருக்கிறது.

சட்டம் இயற்றுபவரின் உரை முத்தவாத்திர்ஹதீஸ் அல்லாத திட்டவட்டமாக நிருபிக்கப்படாதவையாக இருந்தால் அதனுடைய ஹு கும் நிச்சயமற்றது, அதன் அர்த்தம் திட்டவட்டமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரியே. உதாரணம் ஷாவ்வாலில் ஆறுநாட்கள் நோன்பு நோற்பது அல்லது விவசாய நிலத்தை குத்தவைக்கு விடுவதை தடைசெய்வது ஆகியவை, இவை இரண்டிற்கும் சுன்னாவில் ஆதாரம் இருக்கிறது.

சட்டம் இயற்றுபவரின் உரையிலிருந்து சரியான இஜ்திஹாத் முலம் ஹு கும் ஷரியா விளங்கிக் கொள்ளப்படுகிறது. எனவே ஒரு முஜ்தஹிதுடைய இஜ்திஹாத் ஹு கும் ஷரியாவை உருவாக்குகிறது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு முஜ்தஹிதிற்கும் அல்லாஹ்(சுபு)வின் ஹு கும் எதுவென்றால் இஜ்திஹாத் மூலம் ஒரு முஜ்தஹித் அதிகபட்சமாக சாரியாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கருதி எதைக்கொண்டு வருகிறாரோ அந்த ஹு கும் தான்.

சட்டப்படி பொறுப்புள்ள ஒருவர் (MUKALLAF) ஒரு பிரச்சினையிலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சினையிலோ இஜ்திஹாத் செய்யும் திறன் பெற்றவராய் இருந்து அதன் அடிப்படையில் ஒரு ஹு குமை இஸ்தின்பாத் செய்து கொண்டுவந்தால் பிறகு அந்த குறிப்பிட்ட பிரச்சினையில் வேறு முஜ்தஹிதை பின்பற்றுவதற்கு அவருக்கு அனுமதியில்லை என்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும். ஏன் எனில் அவர் எந்த அபிப்ராயம் சரியானது என்று கருதுகிறாரோ அதிலிருந்து வேறுபட்ட ஒரு அபிப்ராயத்தை தக்லீத் (TAQLEED) செய்வதற்கு அவருக்கு அனுமதி இல்லை. இஜ்திஹாத் பற்றிய சில முக்கிய அறிவை பொற்றவராய் ஓருவர் இருந்து ஆதாரங்களை (DALEEL) விளங்கிக்கொண்டு ஒரு ஹு குமை தக்லீத் செய்வராக இருந்தால் அவர் முத்தபீ (MUTTABI) எனப்படுவார். இதன்படி இந்த முத்தபீக்கு அல்லாஹ்(சுபு)வின் ஹு கும் எதுவென்றால் அவர் எந்த முஜ்தஹிதின் அபிப்ராயத்தை பின்பற்றுகிறாரோ அந்த ஹு கும் தான்.


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

No comments:

Post a Comment