சிறுபான்மை என்ற அடங்கிய பார்வையில்
'கொசுவுக்கும்' கொம்பு கொடுத்தோம் !
அதை சீவிவிட்டு பேரினப் பேய்களை எம்மீது
ஏவிவிட நாசத்தின் சக்திகள் வந்தபோது ...!!!
பிச்சை வேண்டாம் உன் நாயைப் பிடி
என்ற 'சரண்டர் பொலிடிக்சில் ' எமக்கு நாமே
சமாதியும் தோண்டினோம் !
'தேசிய' நியாயத்தில் 'குப்பார் ' எம் மார்க்கத்தை
விலைபேசியபோது ! தயங்காமல் அந்த வியாபாரத்தில்
எஞ்சியதையும் விற்று அந்த 'தாகூத்தின் ' சின்னத்தை
ஒரு சுண்ணத்தாக பேசி 'மஸ்ஜித்' மினாராக்களில்
கம்பீரமாய் பறக்கவும் விட்டோம் ! - 'ஹலால்' பொலிசியை
'நஷனல் எக்ஸ்போட்டுக்காக ' இலவசமாக்கி
இடி விழுந்த நியாயங்களில் வெற்றியாய் பேசியது !
நாளைய செய்தியாய் எம் தூய 'அகீதாவுக்கும்'
'சந்தூக்கு' வாங்கவா !?
இந்த கொத்தடிமை சாசனத்தின் பின்னும்
உடைப்பதை உடைத்தார்கள் !! தடுப்பதை தடுத்தார்கள் !!
இப்போதும் நாம் 'லகும் தீனுக்கும் வலியதீன் 'என
'மன்சூஹ் ' ஆன வசனத்தை ஓதி ஒதுங்கப் பார்த்தோம் !!
விட்டார்களா பாவிகள் !? இனி நாம் சொல்வதுதான்
'நியூ வெர்சன்' இஸ்லாம் என 'கலிமாச்' சொல்லாதவன்
கண்டிசன் வேறு போடுகிறான் !!!?
இப்போதும் 'சபூர் ' வாதத்தோடு 'ஹுப்புதுன்யா '
ரீசனோடு ' வஹியை அடிவருடி 'அல்லாஹ்விடம்
பாரம் சாட்டிவிட்டு 'அல்ஹம்துலில்லாஹ் 'என
வாழ்க்கை வண்டி ஓட்டுபவனா உண்மை முஸ்லீம் !!!
No comments:
Post a Comment