இன்று தாவா அமைப்புக்கள் தனிநபர் களை ஷிர்கில் இருந்து விடுவிப்பதற்கான தாவா முன்னெடுப்புக்களை பாரியளவில் மேற்கொள்ளும் அதேவேளை மனிதன் மனிதனை வணங்கும் ஆட்சிமுறை பற்றிய ஷிர்க்பற்றி தாவா முன்னெடுப்புக்களையும் நாம் காணமுடியாதுள்ளது.
ஒரு ஆட்சியாளன் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு ஆட்சிசெய்யாத நிலையையும் மனித சட்டங்களை நடைமுறைப்படுத்துவதனையும் காணும் அதேவேளைஆட்சியாளர்களை கேள்விக்குட்படுத்தி ஏகத்துவத்தை நிலைநாட்டுவதற்கான எந்த முனைப்பையும் காணமுடியாதுள்ளதுடன் அத்தகைய ஆட்சியாளர்களது கட்டளைகளை செவிசாய்த்தபடி தனிமனித ஷிர்க் விடயத்தில் அதீத அக்கறை எடுக்கப்படுகிறது.
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் ஏகத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்ட அதேவேளை அந்த ஜாஹிலிய்ய சமூகத்தில் காணப்பட்ட சமூக அமைப்பு அவர்களது அரசியல், மற்றும் பொருளில் ஒழுங்கு பற்றி கண்டித்ததுடன் அதற்கான மாற்றீட்டு வாழ்க்கைத் திட்டத்தை முன்மொழிந்து மக்களை தூய இஸ்லாமிய வாழ்கைமுறையின் பக்கம் அழைத்தார்கள்.
இதன் விளைவான இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சஹாபிய சமூகம் வாழ்வினது அனைத்துத் செயலாக்க அமைப்பினுள்ளும் (Life System) ஏகத்துவ நடைமுறை பிரதிபலிக்க பாடுபட்டார்கள்.
இன்று நாம் வாழும் முதலாளித்துவ மதஒதுக்கல் சிந்தனையை அடிப்படையாக கொண்ட ஆட்சி முறையின் கீழ் நவீன ஜாஹிலிய சூழலில் வாழும் மக்களை குப்ரிய வாழ்வில் இருந்து அழைப்பதுடன் ஜாஹிலிய வாழ்க்கைமுறையில் எமது முஸ்லிம்கள் கொண்டுள்ள மோகம் மற்றும் பற்றினால் ஏற்படும் ஆபத்து பற்றி விழிப்பூட்ட வேண்டியுள்ளது.
இத்தகைய மேலைத்தேய வாழ்க்கை முறையை கருத்தியல் அடிப்படையில் கேள்விக்குட்படுத்தி இஸ்லாத்தை மாற்றீட்டு வாழ்க்கை முறையாக முன்மொழிந்து அவற்றை முழுமையாக அமுல்படுத்தத் தேவையான இஸ்லாமிய அரசினை ஒரே தலைமையின் கீழ் நிறுவிட பாடுபடசெய்வது அனைத்து தாவா அமைப்புக்களதும் பாரிய பொறுப்பும் கடமையும் என உணரவேண்டும்.
அத்தகைய இஸ்லாமிய அரசினால் மாத்திரமே ஷிர்க்கை தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் முற்று முழுக்க ஒழித்திட முடியும். அதுவே குர்ஆன் சுன்னா வாழ்வின் சகல துறைகளில் நபி வழியில் அமுல்படுத்தப்பட வழிவகுக்கும்! ஷிர்க் பித்அத்துக்களை நிரந்தரமாக முஸ்லிம் உம்மத்திடம் இருந்து களைவதற்கு வழிவகுக்கும்!
சிந்திப்போம்! இவ்வுண்மையை உணர்வோம்! ஆக்கபல தாவாக்களை முன்னெடுப்போம்!
No comments:
Post a Comment