Sep 3, 2013

எகிப்திற்கு வந்துள்ள புது ஃபிர்அவ்ன்

சென்ற வாரம் கெய்ரோவில் நடந்த படுகொலை சம்பவத்தைக்கண்டு உலகமே அதிர்ச்சிக் குள்ளானது. இந்த படுகொலை, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவ தலைமை தளபதி அப்துல் ஃபத்தாஹ் அல் சிசியின் தலைமையில் நடந்தது. 03-07- 2013 – ல் நடந்த இராணுவப் புரட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முர்சி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தை சார்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் அமைதியான போராட்டத்தில் பல வாரங்களாக ஈடுபட்டார்கள்.

கெய்ரோவில் உள்ள ராபியத்துல் அதவியா சதுக்கத்தில் தொடர்ச்சியாக அமைதி போராட்டம் நடந்துவந்த நிலையில், 12 -8 2013 -ல் இராணுவ முகாம் முன்பு எதிர்பாராதவிதமாக நடைபெற்ற துப்பாக்க்கிச்சூட்டில் சில ராணுவத்தினரும் பொதுமக்களும் உயிரிழந்தனர். இதைக் கண்டித்து இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் உயிரிழந்தனர், 400 -க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். ஆனால் 14 -8- 2013 அன்று, இந்த போராட்டத்தை கலைக்கும் வண்ணம், ராபியத்துல் அதவியா சதுக்கம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் எகிப்து இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அமைதியாக போராடிய பொதுமக்களில் 600 பேர் உயிரிழந்தனர், 3717 பேர் காயமுற்றனர். ராபியத்துல் அதவியா பள்ளிவாசல் ஒரு அவசர மருத்துவமனையாக மாறி, பெண்களும் குழந்தைகளும் அடைக்கலம் தேடும் இடமாக ஆகியது. தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் அந்த பள்ளிவாசல் முற்றிலும் எரிந்து போனது.

15 -8 2013 அன்று அந்த பள்ளிவாசலில் 12 க்கும் மேற்பட்ட உடல்களை யாரும் உரிமை கோரவில்லையென செய்திகள் வந்தன. இறந்தவர் யாரென்று அடையாளம் காண்பதற்காக உறவினர்கள் பிளாஸ்டிக் ஷீட்களை விலக்கி தேடியது நெஞ்சை உருக்கியது. இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட பலருக்கு அனுமதி கிடைக்கவில்லை. 16 -8- 2013 அன்று இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நடந்த மோதலில் மேலும் 64 பேர் உயிரிழந்து மொத்த எணிக்கை ஒரே வாரத்தில் 700 ஐ கடந்தது.

அப்துல் ஃபத்தாஹ் அல் சிசி அமெரிக்காவின் கைக்கூலி

இந்த சம்பவம் ஒரு யதார்த்தமான அத்துமீறல் மட்டுமன்றி வாஷிங்டனால் முழுமையாக திட்டமிடப்பட்ட ஒன்றாகும். அமெரிக்க உதவி செயலாளர் வில்லியம் பர்ன்ஸ் மற்றும் இரு அமெரிக்க செனட்டர்களான ஜான் மெக்கெயின் மற்றும் லிண்ட்சே கிரகாம் ஆகியோர் அப்துல் ஃபத்தாஹ் சிசியை சந்தித்து முர்சி ஆதரவாளர்களை எப்படி கலைக்கவேண்டுமென்று திட்டமிட்டனர். இதையடுத்து, சிசி முஸ்லிம் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து முர்சிக்கு எதிராக இராணுவத்துடன் செயல்படவேண்டுமென்று எச்சரிக்கை விடுத்தார். ஆனால், சர்வதேச அழுத்தம் இருந்தும் முஸ்லிம் எதிர்க்கட்சியினர் அதை ஏற்கவில்லை.

அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தங்களின் வஞ்சனை, மோசடி மற்றும் கபடத்தை திரும்பவும் காண்பித்துவிட்டனர். அது போதாதென்று சிசி ஆட்சியை ஊக்குவிக்கும் வண்ணம் 1.3 பில்லியன் டாலரை அமெரிக்காவும், 5 பில்லியன் டாலரை அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான சவுதி அரேபியாவும் அளித்துள்ளது. இதிலிருந்து அமெரிக்கா எகிப்தை எந்த அளவிற்கு முக்கியமான பிராந்தியமாக கருதிகிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.அமெரிக்கா தன்னுடைய இராணுவ தளவாடங்களை, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல எகிப்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. ஹெரிடேஜ் நிறுவன ஆய்வாளர் ஜேம்ஸ் பிலிப்ஸ் கூறுகையில், “மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவம் பிரவேசிக்க எகிப்து ஒரு முக்கிய மைல் கல் ஆகும் “. சென்ற ஆண்டு மட்டும் – 2000 க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானப்படையின் விமானங்கள் எகிப்து வழியாக சென்றுள்ளது, 35 க்கும் மேற்பட்ட அமெரிக்க கடல்படை கப்பல்கள் எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றுள்ளது. மேலும் சூயெஸ் காழ்வாய் வழியாக சென்ற அமெரிக்க கப்பற்படையின் கப்பல்கள், நிற்காமல் கடந்து சென்றுள்ளது. காசாவிலிருந்து எகிப்துக்கு முக்கிய நுழைவாயிலான ரபாஹ் எல்லையை இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக மூடி வைத்துள்ளது.

பான்-ஆப்ரிக்கன் பத்திரிக்கையாளர் பயோமி அஜிகிவே கூறுகையில், 03 – 7- 2013 -ல் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் சாக் ஹகெலுக்கும் எகிப்து இராணுவத்திற்குமிடையே தொடர்ந்து விரிவான பேச்சுவார்தைகள் நடைபெற்றது. மேலும் அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் இராணுவ தேவைகளுக்கு எகிப்து முக்கியமாக இருப்பதால் இதை இராணுவ புரட்சி என்று கூட அமெரிக்க கூறவில்லை என்கிறார்.

முஸ்லிம் சமுகத்தின் பொறுப்புகளும் ஒற்றுமைக்கான அவசியமும்

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:- உங்களில் யாரேனும் காலையில் எழும் போது, முஸ்லிம்களின் விவகாரங்களைப்பற்றிய அக்கறை இல்லாமல் இருப்பாரானால், அவர் நம்மை சார்ந்தவரல்லர் (முஸ்லிம்). இந்த ஹதீஸின் மூலம் முஸ்லிம்களின் விவகாரங்களை நாம் அறிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்பதை விளங்கிக்கொள்ளலாம். முஸ்லிம்களின் ஒற்றுமைக்கும் நலனுக்கும் எவ்வித தீங்கும் நேராமல் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது நம்மீது கடமையாக உள்ளது.அமெரிக்கா மற்றும் மற்ற மேற்கத்த்திய நாடுகள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் சூழ்ச்சிகளை அறிந்து செயல்பட வேண்டும். முஸ்லிம்களின் விவகாரங்களில் இஸ்லாமிய ஷரிஆ வராமல் இருக்க அந்நாடுகள் செய்யும் சூழ்ச்சிகள்தான் எகிப்து மற்றும் மற்ற அரபு நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள் என்பதை நாம் உணரவேண்டும். மேலும் இதற்காண ஒரே தீர்வான ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் நமக்கு விட்டுசென்ற முஸ்லிம்களின் கேடயமான கிலாஃபத்தின் மூலம் இஸ்லாத்தை நிலைநாட்டி முஸ்லிம்களின் ஒற்றுமையை ஒங்க செய்யவேண்டும்.

நம்முடைய பொறுப்புகள்

1. அல் சிசி, அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கத்திய அரசியல் சூழ்ச்சிகளுக்கு துணை புரிந்து துரோகம் புரிவதை அம்பலப்படுத்த வேண்டும்

2. மனித உயிர்களுக்கு மதிப்பின்றி செயல்பட்ட சிசி ஆட்சியை தட்டிக்கேட்கவேண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரி, தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தவேண்டும்

3. எகிப்து மற்றும் ஏனைய அரபு நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை குறித்து முஸ்லிம்களுடன் கலந்துரையாட வேண்டும் . நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழியில் நம்முடைய அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்புகளை சீர் செய்யவேண்டும் என்று விளக்கவேண்டும்

4. எகிப்தில் உள்ள தைரியமுள்ள நம்முடைய சகோதர சகோதரிகளுக்காக நாமும் துஆ செய்து மற்றவர்களையும் துஆ செய்ய கூற வேண்டும் .

அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான். [அல் குர்ஆன் 29:11]

எகிப்து தூதரகத்திற்கு வைக்க வேண்டிய கோரிக்கைகள்

1. முகம்மது முர்சி மற்றும் அவருடைய ஆதரவாளர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும்.

2. இராணுவ ஆட்சியை புறக்கணித்து அமெரிக்க சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்.

3. கட்டுப்பாடற்ற ஜனநாயக ஆட்சிமுறையை புறக்கணித்து, இஸ்லாமிய அடிப்படையிலான கிலாஃபத்தை நிலைநாட்ட வேண்டும்.

No comments:

Post a Comment