அந்த அக்டோபர் 1990 இலங்கையின் வடபுலத்தில் வாழ்ந்த ஏறத்தாழ 120000 முஸ்லீம்களுக்கு ஒரு கசப்பான அத்தியாயத்தை தொடக்கி வைத்தது . தமிழீழ விடுதலைப் புலிகள் அந்த முஸ்லீம்களை அவர்களது பூர்வீக வாழ்விடங்களில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றியது இந்த அக்டோபர் மாதத்திலே தானாகும் .ஒரு தெளிவான இனத்துடைப்பின் வடிவம் பக்குவமாக அரங்கேற்றப் பட்டது .
யாழ்ப்பாணம் ,மன்னார் ,முல்லைத்தீவு ,சாவகச்சேரி போன்ற முக்கியமான முஸ்லீம் குடிசன செறிவுமிக்க பகுதிகள் முதல் பட்டி தொட்டி எங்கும் தேடித்தேடி முஸ்லீம்கள் விரட்டப் பட்டனர் ! சில நாள் அவகாசத்திலும் , ஒரு நாள் அவகாசத்திலும் , இரண்டு மணிநேர அவகாசத்திலும் முஸ்லீம்கள் ஆயுத முனையில் வெளியேறப் பணிக்கப் பட்டனர் .
விடுதலைப் புலிகளின் இந்த நடவடிக்கை எதேச்சையான ஒன்றாக எனக்குப் படவில்லை .ஏறத்தாழ 65000 முஸ்லீம்கள் வாழ்ந்த மன்னாருக்கு 5 மணிநேர அவகாசம் கொடுக்கப் பட்டது . அத்தோடு எடுத்துச் செல்லும் பொருட்களின் அளவு வரையறுக்கப் படவில்லை . அதே நேரம் 15000 முஸ்லீம்கள் வாழ்ந்த யாழ்பாணத்துக்கு 2 மணிநேரம் மட்டுமே கொடுக்கப் பட்டது ! அத்தோடு 'சொப்பிங் பாக்கில் ' சில உடுப்புகளும் 200 அல்லது 300 ரூபாய் பணமும் தவிர கலட்ட முடியாத மோதிரம் கூட வெட்டி எடுக்கப் பட்டது ! யூதப் பாணியிலான இந்த நடவடிக்கை ஏன் !? இத்தகு கேள்விகளோடு கடந்து போன அந்தக் காலத்தினுள் எனது நினைவுக் குதிரையை தட்டிவிட்டேன் .....
இறுகிய முகத்தோடும் 'துப்பாக்கி சேம்பரில் ' ஏற்றிய 'தோட்டாவை எம்மீது துப்ப ஒரு சந்தர்ப்பம் வராதா ? என்ற ஏக்கத்தோடும் அந்த பாசிசக் கும்பல் நாம் வெளியேறக்கூடிய அணைத்து சந்திகளிலும் காவலரண் போட்டு எம்மை கொள்ளையடித்துக் கொண்டிருந்தது . குழந்தையின் பால் போத்தல் முதல் , வயதானவர்களின் வெத்திலைப் பெட்டிவரை ஒரே கண்ணோட்டமே அவர்களுக்கு இருந்தது .
சாதீயம் தலைக்கேறிய அந்த தமிழ் சமூகத்தில் சிற்சில நடவடிக்கைகள் தவிர வாழ்வியல் ஒழுங்கில் பெரிய மாற்றம் அவர்களோடு எமக்கு இருக்கவில்லை. 'அல்ஹம்துலில்லாஹ் ' எதோ ஒரு ஓரத்தால் ஒரு வேற்றுமை எம்மில் இருந்து எட்டிப்பார்த்தது ! அது எம்மில் இருந்த ஈமான் என்றால் மிகையான கருத்தல்ல .
இந்த நிகழ்வுகளுக்கு சில காலங்களுக்கு முன் இந்த பாசிசப் புலிகள் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற சாதீய அடையாளத்தை எம்மீது திணிக்க வந்தபோது எதிர்த்தோம் . நாம் தமிழ் பேசும் முஸ்லீம்கள் என்ற விடயத்தை அழுத்திச் சொல்லி விடாப்பிடியாக நின்றோம் .
அப்போது சரணடைந்து இருந்தால் சிலவேலை புலி நகத்துக்கு 'பாலிஸ் 'போடும் வேலையும் ,மனித சதை படிந்த அந்த கொடிய பற்களை துலக்கிவிடும் வேலையும் , இன்னும் சிலநேரம் அந்தப் புலிகளின் அதை .. கழுவிவிடும் வேலையும் அந்த காட்டுத் தர்பாரில் சிலகாலம் கிடைத்திருக்கலாம் .நாங்கள் எங்களை சத்தியத்தால் மட்டுமே அடையாளப்படுத்த இடம் கொடுத்தோம் .
அந்த இரண்டு மணிநேரம் பல ஆச்சரிய சம்பவங்களை சொல்லிப் போனது . தமிழ் 'யோனிக்காக ' போய் கலப்புக் குடும்பம் கட்டிவாழ்ந்த சோனகனுக்கும் ஈமான் வந்தது ! கள்ளுத் தவறணையில் தமிழனோடு 'பாட்னர் சிப் ' போட்டு பருகினவனுக்கும் ஈமான் வந்தது !
" நல்லூரில் முஸ்லீம் உம்மத்து வாழ்ந்தபோது குடிநீர் கிணற்றில் பன்றி வெட்டிப்போட்டு துரத்தினான் " என பழைய வரலாற்றை பாட்டன் சொன்ன போது நம்ப முடியவில்லை . ஆனால் முல்லிய வாய்க்காலில் மூளை சிதறி மாண்ட வேங்கையின் கட்டளையில் பல விடயங்கள் தெளிவாகப் புரிந்தது .
எம்மில் யாரும் பொட்டு வைத்து வீபூதி பூச தயாராக இருக்கவில்லை ! பிள்ளையாரை ,முருகனை , இயேசுவை கும்பிட தயாராக இருக்கவில்லை ! பல அழுக்குகள் படிந்திருந்தும் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம் என்ற தெளிவான முடிவோடு எஞ்சியிருந்த ஈமானுக்காகவே அகதியானோம் .
(இன்ஷா அல்லாஹ் இன்னும் வளரும் )
No comments:
Post a Comment