Oct 10, 2013

பொருளீட்டல் பற்றிய இஸ்லாமிய பார்வை!


"அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி வட்டியை தடைசெய்திருக்கிறான்." (2:275)

வட்டி தடைசெய்யப்பட்டிருப்பதால் பணத்தை வங்கிகளில் சேமித்துவைத்து வட்டியைப் பெற்றுக்கொள்ளும் நிலை இருக்காது.

தேவைக்குமேல் எஞ்சியுள்ள பணத்திற்கு முஸ்லிம்களிடமிருந்து 2.5% ஸகாத் வசூலிக்கப்படுகிறது.

இதன்காரணமாக மக்கள் தங்கள் தேவைகளுக்கு தாராளமாக செலவு செய்துகொள்ளவும் தேவைக்குமேல் எஞ்சியுள்ள பணத்தை முதலீடுசெய்யவும் ஊக்கம் பெறுகிறார்கள்.

இது ஆரோக்கியமான பொருளாதாரசூழல் ஏற்படுவதற்கு இன்றியமையானதாக இருக்கிறது, ஏனெனில் செல்வம் ஒரேஇடத்தில் குவிந்துதிருப்பதால் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டுவிடாமல் சமுதாயத்தின் அனைத்துதரப்பு மக்களிடமும் அது சுற்றிக்கொண்டிருக்கும்.

மக்கள் தாராளமாக செலவுசெய்யும் போதும் பணத்தை தொழிலில் முதலீடுசெய்யும்போதும் வேலைவாய்ப்புகள் உருவாகுவதற்கும் சூழல் தானாகவே ஏற்பட்டுவிடும்.

இந்தஇடத்தில் வட்டிஅடிப்படையில் கடன் பெற்றுக்கொள்ளும் தற்கால நிலையை சற்றுகவனமாக ஆய்வுசெய்து விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் மக்கள் வட்டியின் தீயவிளைவுகளை இன்னும் சரியாக அறிந்துகொள்ளவில்லை.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை அல்லாஹ்(சுபு) வின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தேவையுள்ளவர்களுக்கு கடன்கொடுப்பதை முஸ்லிம்கள் மேற்கொள்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்.

“தேவையுள்ளவர்களுக்கு கடன்கொடுப்பது தர்மம்செய்வதில் உள்ளதாகும்,”


முதலாளித்துவ சமூகத்தில் கடன்கொடுப்பவர் லாபத்தை மட்டும் பெற்றுக்கொள்கிறார், எந்தநஷ்டத்திற்கும் அவர் பொறுப்பேற்றுக் கொள்வதில்லை. இதுஅநீதமான தீயசெயலாகும்.

இஸ்லாத்தின் அடிப்படையில் லாபத்தில் பங்குகொள்பவர் நஷ்டத்திலும் பங்குகொள்ளவேண்டும், இதுதான் இஸ்லாம் அங்கீகரித்த வியாபாரக்கூட்டு (partnership) அல்லது தொரில்நிறுவன மாதிரி (company model) ஆகும்.

No comments:

Post a Comment