Oct 10, 2013

இருப்பில் இல்லாத பொருட்களை விற்பனை செய்வதை இஸ்லாம் தடைசெய்துள்ளது.

இருப்பில் இல்லாத பொருட்களை விற்பனை செய்வதை இஸ்லாம் தடைசெய்துள்ளது.

இன்றுள்ள வியாபார நடவடிக்கைகளில் தங்களிடம் இருப்பிலில்லாத பொருட்களை forward selling அல்லது short selling என்றமுறையில் விற்பனைசெய்வதை காண்கிறோம்.

வியாபாரம் செய்வதற்கு பொருட்கள், நாணயங்கள், வியாபாரத் தளவாடங்கள் ஆகியவை இருக்கவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

ஹக்கீம் இப்னு ஹாஸம் (ரளி) அறிவித்துள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

அல்லாஹ்வின்தூதரே(ஸல்) என்னிடம் இல்லாத பொருட்களை விற்பனைசெய்யுமாறு ஒருமனிதர் என்னிடம் கூறுகிறார் என்று நான் கூறினேன். உம்மிடம் இல்லாதபொருட்களை நீர் விற்பனைசெய்வது கூடாது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள். (நூல்: அஹமது)

தாராளவர்த்தக சந்தை மற்றும் பொருளாதார ஆதிக்கம் ஆகியவற்றை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.

இஸ்லாமிய பொருளாதாரம் என்பது உலகவர்த்தக சந்தையில் அழிவை ஏற்படுத்தும் கட்டுப்பாடற்ற முதலாளித்துவ பொருளாதாரமும் அல்ல.

அனைத்து வர்த்தக அமைப்புகளையும் அரசுடமையாக்கி அரசின் முழுகட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கம்யூனிஸ பொருளாதாரமும் அல்ல.

அரசுசொத்து. பொதுசொத்து. தனியார்சொத்து ஆகியவற்றை அங்கீகரித்து அவற்றிற்குரிய தனித்தன்மையான விதிமுறைகளை இஸ்லாம் வரைந்திருக்கிறது.

எண்ணெய்வளங்கள். கனிமவளங்கள். நிலவாயு போன்ற பெரும் இயற்கைவளங்களை மேற்கத்திய முதலாளித்துவ நிறுவனங்கள் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டிருக்கின்றன.

இயற்கைவளங்கள் என்பது பொதுமக்களின் சொத்தாகும் அவற்றை தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு ஏகபோகமாக உரிமையாக்கிக் கொள்வதை இஸ்லாம் தடைசெய்திருக்கிறது.

இன்று முஸ்லிம் உலகத்திலுள்ள இயற்கைவளங்களை கொள்ளையிடுவதற்காக மேற்கத்தியநாடுகள் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன.

அபூதாவூதில் அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்:

"பசுமைவளங்கள்(காடுகள்) நீர்வளங்கள்(கடல்.ஆறு போன்றவை) நெருப்பு(எரிவாயு போன்ற ஆற்றல்வளங்கள்) ஆகியமூன்றின் பலன்களை மக்கள் அனைவரும் பங்கிட்டுக்கொள்வார்கள்"

No comments:

Post a Comment