Mar 6, 2014

உதிரம் சிந்தும் மக்களுக்காக நிதி வசூலிப்பது மட்டும் போதாது !

சவுதி அரேபியாவின் முஃப்தியான ஷேக் அப்துல் அஜீஸ் ஆலு ஷேக் அவர்கள்,சவுதியின் குடிமக்கள், அதனுள் வசிப்பவர்கள், குறிப்பாக பெரும் வியாபாரிகள், வணிகர்கள் மற்றும் செல்வந்தர்களிடம் அதி விரைவில் சிரிய சகோதரர்களுக்கு உதவிட நன்கொடையை “சவுதி அரேபியாவின் தேசிய பிரச்சாரக் குழுவி ற்கு(National Campaign of Saudi Arabia)” அளிக்க வேண்டினார். மேலும் சிரிய மக்களுக்கு உதவி செய்வதற்காகவும்  நிதியுதவி பெற்றுக்கொள்வதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட இக்குழு சவுதி அரேபியாவின் “ஒரே அதிகாரப்பூர்வ குழுவாக” இருப்பதால் இதில் எளிதாகவும் தங்கள் விருப்பப்படியும் நன்கொடைகளை செலுத்தும்படி  கேட்டுக்கொண்டார்.சிரியாவிலுள்ள நம் சகோதரர்களின் வேதனைகளிலிருந்து விடுவிக்குமாறும்  கொடுங்கோலர்களின் அடக்குமுறையிலிருந்து பாதுகாக்குமாறும் ஆலு ஷேக் அவர்கள் அல்லாஹ் سبحانه وتعال விடம்  வேண்டினார். மேலும் அவர், சிரிய மக்களுக்கு உதவுவதற்கான இந்த தேசிய பிரச்சாரக்குழுவின் பங்கு குறித்தும், குறிப்பாக சிரிய மக்களின் வேதனையை நீக்கவும் அவர்களின் பிரச்சினையை தீர்க்கவும், உள்துறை அமைச்சர் இளவரசர் முஹம்மது பின் நாயிஃப்  மேற்கொண்டுள்ள நிதிவசூல்  குறித்தும் பாராட்டுக்களை தெரிவித்ததோடு,இத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்குமாறும் வேண்டிக் கொண்டார்
 
இச்செய்தியில் பின்வரும் விளக்கத்தை காணலாம்
1. கொன்று குவிக்கப்பட்ட, புனித்தன்மை மீறப்பட்ட, வெளியேற்றப்பட்ட, நாடு அழிக்கப்பட்டு  மிகவும் மோசமான குற்றவியல் தாக்குதலுக்கு உள்ளாகி  பசியை போக்கவும் தங்கள் மானத்தை மறைக்கவும் பணமின்றி – வேறு வழியின்றி தவிக்கும் சிரிய மக்களுக்கு உதவுவது ஒவ்வொரு இஸ்லாமிய உம்மத்தின் மீது கட்டாயமாக இருக்கிறது.
2. ஷாம் தேச மக்களுக்கு பணம் மட்டுமே தேவை என்று  யார் கூறியது? வணக்கத்துக்குரியவன்  அல்லாஹ் ஒருவனே என்றும்  முஹம்மது صلى الله عليه وسلم அவர்கள் அவனின் திருத்தூதர் என்றும்  சாட்சி கூறி  அல்லாஹ் سبحانه وتعال ஒருவனையே  வணங்கும்  மக்களை, ஈரானிய – ரஷ்ய ஆயுத உதவியுடன்  அமெரிக்காவின் துணைகொண்டு வேரறுத்துக் கொண்டிருக்கும் பஷாருல் அசாதிற்கெதிராக  ராணுவத்தை அனுப்பி  உதவி செய்வதே சிரிய மக்களுக்கான  மிகப்பெரிய அவசர தேவையாகும்.
3. அறிவாற்றல் பெற்றவர்களிலுள்ள உண்மையாளர்கள், முஸ்லிம்நாடுகளின்  ராணுவத்தினர், ஹிஜாஸ் மற்றும் முஸ்லிம்  நாடுகளிலுள்ள அதிகார செல்வாக்கு கொண்ட அனைவர்களுக்கும்  நாங்கள்  தெரிவித்து கொள்வது:-
முஸ்லிம் நாடுகளில் உள்ள அரசுகள் நூற்றுக்கணக்கான பில்லியன்  டாலர்களைவிட அதிக அளவில் மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளிடம் ஆயுதம் வாங்கி குவித்துக் கொண்டிருக்கின்றன. 2013-ம் ஆண்டு மட்டும் சவுதி அரேபியா ஆயுதம் வாங்க 60 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது.இது உலகளவில்  ஆயுதத்திற்கு செலவிடும் பெரிய நாடுகளின் பட்டியலில் 4வது இடத்தை சவுதி அரேபியாவிற்கு தந்தது.19/02/2014 அன்று முஃப்தி அறிவித்த அதே நாளில் ஏற்பட்ட சலாம் ஒப்பந்தம் சவுதியின் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய   தனது பங்கின் விலையை அதிகரிப்பதாக அறிவித்ததன் மூலம் பிரித்தானிய நிறுவனமான BAE ன் படி மதிப்பை பெற்றுக் கொண்டது. இது வாளியில் நமக்கு தெரிந்த ஒரு சொட்டு நீர் ஆகும்….ஆகவே எதற்காக இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும்? கிடங்கில்  இவ்வளவு ஆயுதம் இருப்பதற்கான காரணம் என்ன? இந்த ஆயுதங்கள் உம்மத்தினை பாதுகாக்கவும், திருத்தலங்கள் மற்றும்  அவர்களின் நிலங்களை பாதுகாப்பதற்கானது அல்லவா?
4. அல்லாஹ் سبحانه وتعال அவனிடம் உதவி கோரும் முஸ்லிம் ராணுவத்திற்கு உதவுவதாக வாக்களித்து இருக்கிறான். அல்லாஹ் سبحانه وتعال கூறுகிறான்:-
وَإِنِ اسْتَنْصَرُوكُمْ فِي الدِّينِ فَعَلَيْكُمُ النَّصْرُ
” எனினும் அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினால், உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும்”
                                                                                                        (அல்அன்ஃபால், 8:72)
ஆகவே, நபி  صلى الله عليه وسلم அவர்களை பின்பற்றுபவர்களிலிருந்து வந்த சிப்பாய்களே,  மேற்கின் கைக்கூலிகலான உங்கள்  ஆட்சியாளர்களால் உங்களுக்கு இடப்பட்ட சங்கிலிகளை உடைத்தெறிவீவீர்களாக! அச்சங்கிலியானது  அல்லாஹ் سبحانه وتعال உங்கள் மீது கட்டளையிடப்பட்ட காரியத்திலிருந்து உங்களை தடுத்துக்கொண்டிருக்கிறது.
நாங்கள் இஸ்லாமிய உம்மத்தின் உண்மையாளர்களை அழைக்கிறோம், குறிப்பாக அதிகாரத்தில் உள்ளவர்களை, ஹிஸ்புத்தஹ்ரீரூடன் இணைந்து கிலாஃபத்தை உருவாக்க உழைக்குமாறு அழைக்கிறோம்.. அந்த கிலாஃபா  இஸ்லாத்தை  தன்னகத்தே நடைமுறைப்படுத்தி இஸ்லாத்தை வெளியுறவு  கொள்கையாகக் கொண்டு உலகிற்கு வழிகாட்டும். அதன் மூலம் இஸ்லாத்தை ஒளிகாட்டும் செய்தியாகவும் கொண்டு செல்லும். கிலாஃபா என்பது உம்மத்தின்  வலிமையான கேடயமாகும். அது உம்மத்தின் மீதும், அதன் திருத்தலங்கள் மற்றும் புனிதமானவை மீதும் எந்தவொரு அத்துமீறலையும் அனுமதிக்காது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اسْتَجِيبُواْ لِلّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُم لِمَا يُحْيِيكُمْ
“ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்”
(அல் அன்ஃபால், 8:24)
Osman Bakhash
Director of the Central Media Office of Hizb ut Tahrir
source:- www.khilafah.com

No comments:

Post a Comment