சிரியாவில் போராடும் அணிகளுல் அபூபக்கர் அல்-பக்தாதியின் Islamic State of Iraq and Levant (ISIS) அணியானது பலம் வாய்ந்தது. உலகின் பல பகுதிகளில் இருந்தும் இஸ்லாமிய போராளிகள் இதில் இணைந்து வருகின்றனர். சிரியா, ஈராக், ஜோர்தான் பழங்குடியினத்தவர்கள் இதன் தலைவரிற்கு பைஅத் எனும் உறுதிப்பிரமாணத்தை நிறைவேற்றி வருகின்றனர். இவரின் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படாத அணிகளை சிரிய சமர்க்களத்தில் இருந்து அகன்று விடுமாறு இவரது அணி கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் இவர்களால் ரக்கா நகர் பிரதேசம் கைப்பற்றப்பட்டது. அங்கு அவர்கள் இஸ்லாமிய அஷ்-ஷரீஆ சட்டத்தை பிரகடனம் செய்துள்ளதுடன் பூரணமாக அதனை அமுல்படுத்தவும் முனைந்துள்ளனர். பிரச்சனை அதுவல்ல. அங்கு வாழும் கிறிஸ்தவர்கள் மீது ஜிஸ்யா எனும் வரியை விதித்துள்ளனர். கட்டாயமாக அவர்கள் அதனை செலுத்த வேண்டும் என்பது அவர்களது உத்தரவு.

Omar Osman. இப்படி சொன்னால் புரியாது போகலாம். இவரிற்கு இன்னொரு பெயருண்டு. Abu Qatada al-Filistini. இவரை பற்றி பல பதிவுகளை வெளியிட்டுள்ளோம். இங்கிலாந்து அரசால் ஜிஹாத்திற்கு முஜாஹித்களை தயார் செய்து அனுப்பும் அல்-காயிதா தொடர்பாளர் என்று குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஆதாரங்கள் எதுவுமின்றி விடுதலை செய்யப்பட்டவர். பின்னர் ஜோர்தானிய அரசிடம் கையளிக்கப்பட்டார். அவரை அம்மானில் உள்ள உயர் நீதி மன்றம் கடந்த பெப்ரவரி 27ம் திகதி பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பான பிரிவில் விசாரணை செய்தது. அந்த இடைக்கால பகுதியில் அவர் அல்-ஹயாத் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எல். அமுல்படுத்தியுள்ள ஜிஸ்யா வரியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஷேய்ஹ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள். “ரக்காவில் உள்ள கிறிஸ்தவர்கள் மீது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் விதித்துள்ள ஜிஸ்யா எனும் வரியானது அஷ்-ஷரீயாவின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். அதே அஷ்-ஷரீஃஆவின் இன்னொரு பிக்ஹை அவர்கள் ஏன் மறுதலிக்கிறார்கள்?. இரண்டு தரப்பு ஒப்பந்தம் செய்யப்படாமல், ஒரு தரப்பினர் மட்டும் தன்னிச்சையாக அமீருல் முஃமீனீன் என தம்மை தாமே பிரகடனம் செய்வதன் ஊடாக அவர்கள் இதனை வரியாக விதிக்க முடியாது.”

“ஷாமின் ஆட்சி அதிகாரம் என்பதன் எல்லைகள் எது?. காலையில் முஜாஹித்களின் கைகளில் இருக்கும் அதிகாரம் மாலையின் ஷியாக்களின் கைகளிற்கு மாறுகிறது. 06 மாதம் தக்க வைத்திருக்கும் நிலப்பிரதேசம் மீண்டும் எதிரிகளால் வெற்றிகொள்ளப்படுகிறது. அது மீண்டும் அதே சுழற்ச்சியில் முஜாஹித்களினால் கைப்பற்றப்படுகிறது. நிரந்தரமான நிலப்பிரதேசம் என்பதற்கான எந்த அறுதியான தெளிவுகளும் இல்லாத காலைகளிலும் மாலைகளிலும் கிலாபாவை அறிமுகம் செய்ய முடியாது. இந்த நிலையில் எப்படி கிறிஸ்தவர்களிடம் ஜிஸ்யா கேட்பது.”

“கிறிஸ்தவர் சமூகம் அப்படி ஜிஸ்யாவை தான் கொடுப்பது என்று முடிவிற்கு வந்தாலும் யாரிடம் கொடுப்பது. அபூபக்கர் பக்தாதியிடமா. நாளை ஜுலானி வந்து ஜபாஃவிற்கு தர வேண்டும் என்பார். நிலையான இஸ்லாமிய தரப்பு எது என்று தெரியாத நிலையில் ஜிஸ்யா பிரகடனம் அர்த்தமற்றது. இதுவே எனது தெளிவான நிலைப்பாடாகும். சிரியாவின் என் மதிப்புமிக்க முஜாஹித்களிற்கான நஸீகத்துமாகும்.”

“ஜிஸ்யா வரியை மட்டும் வாங்குவதா கிலாபா?. குஃபார்களிற்கான இஸ்லாமிய அரசின் சேவைகள், எதிரிகளிடம் இருந்து அவர்களை காப்பதற்கான கடமை, அவர்களிற்கான உயிர், பொருள் பாதுகாப்பு உத்தரவாதம் என்பவற்றையும் வழங்குவது இஸ்லாமிய அரசின் கடமை. அதனை எந்த முஜாஹிதா அணியால் பரிபூரணமாக வழங்க முடியுமோ அவர்கள் ஜிஸ்யாவை அறிவிடுவதில் மாற்று கருத்துக்கள் எனக்கு கிடையாது. ஆனால் அப்படி யாரையும் நான் காணவில்லை. எந்த அணியாகட்டும். அல்லாஹ்விற்காக போராடும் முஜாஹித்கள் அனைவரும் என்னிலும் மேலானவர்களாகவே நான் அவர்களை பார்க்கின்றேன். ஆனால் அவர்களின் விருப்பு வெறுப்புக்களிற்காக இஸ்லாத்தை உயர்த்தவும் முடியாது தாழ்த்தவும் முடியாது.”

“ஐ.எஸ்.ஐ.எஸ். சிரியாவின் 12 மாகாணங்களிலும் உள்ள குப்பார்களிற்கான பாதுகாப்பை தாங்கள் வழங்குவோம் என்று அறிவித்துள்ளதை மதிக்கின்றேன். ஆனால் அவர்களால் பல முஸ்லிம் போராளிகளின் உயிர்களிற்கே பாதுகாப்பில்லாத நிலையையும் நான் காண்கின்றேன். அண்மையில் அய்மான் அல்-ஸவாஹிரியின் தோழரை கொன்றது யார் என்ற கேள்வி ஒன்றே போதும் இந்த பிரச்சனையை புரிந்து கொள்ள.”

“எமது முதன்மை இலக்கு டமஸ்கஸ்ஸின் கொடிய எதிரியையும் அவனிற்கு துணை நிற்கும் ஷியாக்களையும் வெற்றிகொள்வதாகும். அதன் பின்பு அந்த உன்னத போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து தரப்பினரும் தேர்வு செய்யும் ஒரு தலைமை பற்றி சிந்திப்போம். அல்லாஹ் எம் செயல்கள் அனைத்திற்கும் போதுமானவன். அவன் எமக்கு நேரான வழியை மட்டும் காட்ட வேண்டும் என்பதே எனது அநுதினமும் கேட்கும் பிரார்தனையாக உள்ளது.”
Reactions:

0 comments:

Post a Comment

வாசித்தவர்கள்

Blog Archive

தொகுப்புகள்

'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்
Powered by Blogger.

Map IP Address
Powered byIP2Location.com

Follow by Email

Enter your email address:

Delivered by FeedBurner

இஸ்லாமிய மறுமலர்ச்சி

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

About Me

My photo
“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com