Jaish al Muhjireen wal-Ansar-ன் கட்டுப்பாட்டு பிரதேசங்களை குறிவைக்கும் சிரிய இராணுவம்


சிரியாவின் அலிபோ மாகாணத்தில் பஸர் அல்-அஸாதின் படைகளிற்கும் போராளிகளிற்கும் இடையில் மீண்டும் உக்கிரகமான சண்டைகள் மூண்டுள்ளன. பல இடங்களிலும் சண்டைகள் நடைபெறுவதுடன் மேலதிக போராளிகள் சண்டைக்களங்கள் நோக்கி அனுப்பப்படுகின்றனர். இரு தரப்பினரும் பரஸ்பரம் எதிரி பதுங்குகுழிகளை தகர்த்தழித்தவாறு முன்னேறும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். சற்று முன் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் முன்னரங்க பதுங்கு குழிகளை கைப்பற்றும் நோக்குடன் சிரிய இராணுவ பரா துருப்பினர் கெமிக்கல் வெப்பன்களை உபயோகித்துள்ளதாக தெரிய வருகிறது. இதனால் பல முனைகளில் முன்னிலை பாதுகாப்பு அரண்களை விட்டு போராளிகள் பின்வாங்கியுள்ளனர். toxic ரக கெமிக்கல்களினை சிரிய இராணுவம் உபயோகித்துள்ளது.

Sheikh Najjar பகுதியில் நடைபெறும் சண்டைகளில் பல அமைப்புக்களை சேர்ந்த போராளிகளும் ஒன்றிணைக்கப்பட்டு தாக்குதல்களையும் தற்காப்பு சமர்களையும் நடாத்தி வருகின்றனர். ஒரு போதுமில்லா பெருமெடுப்பில் சிரிய படையினர் அலிபோவின் எதிரி நிலைகளை தகர்த்தழிக்கும் நோக்குடன் ஒரு புதிய ஒப்பரேஷனை ஆரம்பித்துள்ளனர். அலிபோவினை சூழ உள்ள பகுதிகளிலும் தாக்குதல்கள் விரிவடைந்து வருகின்றன. ஒரே சமயத்தில் எதிரியின் பல நிலைகளையும் தாக்கி ஊடுருவும் வியூகத்தை சிரிய இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். Beni Zeid, Al-Marj, al-Helvaniya Al, Al-Gulek, Al-Maasaraniya, Duvar al-Haouz, Duvar al-Jandul, al-Kallyas and Sakan Shababiபோன்றவற்றில் செருக்களம் உக்கிரகமடைந்துள்ளது. மேலும் Zhdeyda, Arbid, Kveris, Heylyan, al-Jbeil, Beit Jned போன்ற பிரதேசங்களிலும் சண்டைக்களங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Jaish al-Muhajireen wal Ansar. அபூ ஒமர் அல் செசின் தலைமையில் இயங்கும் இவ்வமைப்பில் சோவியத் குடியரசின் பிரதேசங்களை சேர்ந்த போராளிகள் பலர் அங்கம் வகிக்கின்றனர். சிரியர்களினதும் அராபியர்களினதும் தலைமையின்றி விதேசிகளினால் இந்த அமைப்பு வழி நடாத்தப்படுகிறது. இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அலிபோவின் இலக்குகளையே பெருமளவில் சிரிய படைகள் குறிவைத்து தாக்கி வருகின்றன. ஆட்பலம் போதாத நிலையில், சமர்களத்தில் காயமடைந்து களத்தில் இருந்து வெளியேற்றும் போராளிகளிற்கு பதிலாக புதிய போராளிகளை களமிறக்க முடியாத ஒரு இக்கட்டான நிலையை இவ்வமைப்பு சந்தித்துள்ளது. இவர்களிற்கு உதவும் பொருட்டு ஜபாஃ அல்-நுஸ்ராவின் சமரணிகளும், அஹ்ரார் அஷ்-ஷாமின் சமரணிகளும் இவர்களது கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி விரைந்து வருகின்றன.

வழமை போன்று யுத்த டாங்கிகளையும், துருப்புகாவி கவச வாகனங்களையும் முன்னகர்த்தாமல் ஆட்டிலறி ஷெல்களை கொண்டு தாக்குதல் நடாத்தும் சமகாலத்தில் விமான குண்டு வீச்சுக்களையும் நிகழ்த்தி அந்த இடைக்கால பகுதியில் டாங்கிகளையும் லைட்இன்பன்ட்றி படையினரையும் முன்னகர்த்துமும் விதமாக சிரிய இராணுவம் தனது தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. முன்னேறும் இராணுவத்தினரிற்கு எதிராக போராளிகள் ரொக்கெட் மற்றும் மோட்டர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். Al-Sahel கிராமத்தினை நோக்கி முன்னேறிய சிரிய இராணுவ டாங்கி ஒன்றையும் கவச வாகனங்கள் மூன்றையும் போரளிகள் ரொக்கெட் லோஞ்சர்கள் மூலம் தாக்கியழித்துள்ளனர். டமஸ்கஸ்ஸின் புறநகர் பகுதிகளான Jobar மற்றும் Kabun இலும் சண்டைகள் வலுப்பெற்றுள்ளன.

http://khandaqkalam.blogspot.ae/2014/03/blog-post_17.html#more
Reactions:

0 comments:

Post a Comment

வாசித்தவர்கள்

Blog Archive

தொகுப்புகள்

'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்
Powered by Blogger.

Map IP Address
Powered byIP2Location.com

Follow by Email

Enter your email address:

Delivered by FeedBurner

இஸ்லாமிய மறுமலர்ச்சி

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

About Me

My photo
“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com