Mar 14, 2014

ஜனநாயக மயக்கம் ஒரு முஸ்லிமின் ஆபத்தான தேர்வு !




நிச்சயமாக வேதத்தில் அல்லாஹ் இறக்கியவற்றை மறைத்துவிட்டு அதற்குப் பகரமாக சொற்பக் கிரயத்தை வாங்குகின்றனரோ அதைகையோர் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதனையும் )உட்கொள்வதில்லை; மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவுமாட்டான் ;அவர்களை (பாவத்தினின்றும் )பரிசுத்தமாக்கவும் மாட்டான் ;அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையும் உண்டு .

இதைகையோர்தாம் நேர்வழிக்கு பதிலாக வழிகேட்டையும் ,மன்னிப்புக்கு பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் .ஆகவே (நரக)நெருப்பின் மீது அவர்களை சகிக்கச் செய்தது எதுவோ ?

இது (ஏனென்றால் ) நிச்சயமாக அல்லாஹ் ,உண்மையைக் கொண்டு (பூரண வழிகாட்டலோடு ) இவ்வேதத்தை இறக்கி வைத்தான் என்பதனால் ஆகும் . நிச்சயமாக இவ்வேதத்தில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (உண்மையை விட்டு )தூரமான பிளவிலேயே இருக்கிறார்கள் .
(சூரா அல் பகரா : வசனங்கள் 174,175,176)

ஜனநாயகம் தொடர்பான நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு என்பன இன்று முஸ்லீம்களிடம் மிக அதிகமாகவே ஏற்பட்டுள்ளது .அத்தோடு முஸ்லீம் உம்மத்தின் புத்தி ஜீவிகள் பலரும் இந்த ஜனநாயகத்துக்கும் இஸ்லாத்துக்கும் இடையில் ஒரு உள்ளார்ந்த தொடர்பு இருப்பதாக கூறுவதோடு மட்டும் நின்றுவிடாது ,இஸ்லாத்தின் அதிகார அரசியல் வடிவம் ஜனநாயகத்தை ஒத்தது என்ற தவறான சிந்தனையை முஸ்லீம் உம்மத்தின் மத்தியில் முன்வைத்துள்ளனர் .


பூரணத் தன்மையற்ற ஒப்பீடு ,தவறான எடுகோள்கள் என்பனவே இத்தகு தீர்மானத்தை நோக்கி இவர்களை இட்டுச் சென்றுள்ளது .ஒரு உண்மையை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் ;அதாவது முதலாளித்துவ சித்தாந்தமும் ,கம்பியூனிச சித்தாந்தமும் தாமே அதன் சொந்தக் காரர்கள் என மார்தட்டிப் பேசிய அரசியல் வடிவமே இந்த ஜனநாயகமாகும் . அதாவது இறைவனின் உலகம் தொடர்பான அதிகாரத்தை தந்திரமாக புறக்கணிக்கும் முதலாளித்துவமும் , இறைவனே இல்லை என்ற கம்பியூனிசமும் தமது அரசியல் உருவத்தை வெளிப்படுத்த இந்த ஜனநாயகத்தை பயன் படுத்தி உள்ளனர் .


உண்மையில் இந்த ஜனநாயகத்தின் மூலம் நடந்தது என்னவென்றால் சமூக வாழ்வு அச்சுறுத்தலுக்கும் ,அடக்கு முறைக்கும் தான் முகம் கொடுத்துள்ளது , இன்றும் கொடுத்துக் கொண்டுள்ளது . அதாவது இந்த ஜனநாயகத்தை பயன்படுத்தியே இன ,மத , நிற ,சாதி இப்படி பல்வேறு வடிவங்களை கொண்ட கூட்டு மற்றும் ,தனிநபர் சர்வாதிகாரங்கள் தலைதூக்கின என்றால் அது மிகையான கருத்தல்ல . இந்த வகையில் நோக்கினால் ஜனநாயகம் என்பது பொதுநலன் என்ற அடிப்படையில் தனது இலக்கை அடைய முடியாத பெயரளவு கொள்கையே ஆகும் .


சுயநலமும் தான் தோன்றித் தனமும் கொண்ட சக்திகள் தம்மை ஒரு கௌரவ உருவமாக சித்தரிக்க இந்த ஜனநாயகம் மிகவும் துணை போய் உள்ளது .இன்றுவரை இத்தகு அடையாளப் படுத்தளுக்கான பாதுகாப்பான துணை சாதனமாகவும் ஜனநாயம் விளங்கி வருவதை எவராலும் மறுக்க முடியாது .அப்படிப் பார்த்தால் ஒரு சீரான சமூக வாழ்வின் அச்சுறுத்தலாக இது தொழிற்படுகிறது . 

அந்த வகையில் பார்த்தால் இந்த ஜனநாயகத்தை வழிமுறை ஆகவோ ,சிந்தனை ஆகவோ ,கருவியாகவோ கொண்டு மனித விழுமியங்களை இதுவரை பேண முடியவில்லை . விடயம் அப்படி இருக்க இத்தகு தோல்விகரமான அதிகார பிரயோக கருவிக்கு இஸ்லாமிய வடிவம் கொடுக்கும் அவசியம் ஏன் !?

இன்னும் மனோ இச்சை , மற்றும் தனிமனித விருப்பு வெறுப்புகளின் கூட்டு வடிவத்தில் இருந்தே ஜனநாயகத்துக்கான அதிகார பலம் வரையறுக்கப் படுகிறது . இங்கு ஒரு விடயம் கூட்டு விருப்பத்தின் அடிப்படையில் சரி காணப்படும் .அதன் நன்மை ,தீமை , பண்பு ,விளைவு என்பன பற்றி சிந்திக்கப்பட மாட்டாது . ஒவ்வொரு மனிதனும் தனது கைத்தடியை சுழற்றியவாறு அடுத்தவனின் மூக்கு நுனிவரை செல்லலாம் !! என்பதே ஜனநாயகம் சொல்லும் தனிநபர் செயட்சுதந்திர எல்லையாகும் . இது இஸ்லாம் வகுத்துள்ள தனி நபர் செயட்சுதந்திர எல்லையோடு ஒத்துப் போகின்றதா ?

இஸ்லாம் மனிதனை இறைவனின் பிரதிநிதி (கலீபா )ஆக வரையறுத்து அவனது உலகியல் நடத்தைக்கான கட்டமைப்பு வடிவத்தையும் 'வஹி ' (இறை கட்டளை ) மூலம் வரையறுத்து விட்டது . ஒருவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லீமான மறு நொடி முதல் விரும்பியோ ,விரும்பாமலோ இந்த கட்டளையை பின் பற்றுவதில் இருந்தே ,அவனது வாழ்வியலுக்கான அரசியல் வடிவமைக்கப் படுகிறது . இதை இன்னும் சுருக்கமாக சொன்னால் ஹலால் ,ஹராம் என்ற நியதிக்குள் இருந்தே ஒரு முஸ்லிமின் வாழ்வு உருவப்படுதப் படும் .இதற்கு அப்பால் தனிமனித விருப்புகளோ , கூட்டு விருப்புகளோ அவனை கட்டுப்படுத்த முடியாது .

இப்படி இருக்க ஹலால் ,ஹராமை அடிப்படையாக கொள்ளாத ஒரு பன்முக ஜனநாயக சமூகக் குழுமத்தில் இருந்து ஒரு முஸ்லீம் எவ்வாறு சிந்திக்க முடியும் !? இத்தகு கேள்வியில் இருந்தே ஜனநாயகத்தின் சிந்தனை தரத்தோடு முஸ்லீம் உம்மத்தை சமரசம் செய்யவைக்கும் ஆபத்தை உணரமுடியும் . ஒவ்வொரு நபிமார்களும் அவர்களது கவும் களும் ,மக்காவில் அல்லாஹ்வின் தூதர்(ஸல் ) வரை ஜனநாயக விருப்பத்தை மறுத்த போராட்ட வரலாற்றோடு தான் தமது பிரச்சாரப் பணியை முடுக்கி விட்டுள்ளனர் . என்ற பேருண்மை முஸ்லீம் உம்மத்தால் உணரப்படவேண்டும் .

அதாவது 'மனோ இச்சையை தெய்வமாக்குதல் ' என்ற கொடிய 'சிர்க்கில்' இருந்தே குப்ரிய சித்தாந்தம் ஜனநாயகம் எனும் கொள்கையை வகுத்துள்ளது . இப்போது இது எவ்வாறு இஸ்லாத்தோடு ஒத்துப்போகும் !? சற்று சிந்திப்போமா ?

http://khandaqkalam.blogspot.ae/2013/12/blog-post_10.html

No comments:

Post a Comment