இன்று முஸ்லீம் உம்மாவுக்கு ஏற்பட்டுள்ளது ஆன்மீக வறுமையே என்ற கருத்து சிலரால் அழுத்தமாக முன்வைக்கப் படுகின்றது . மேலும் அஹ்லாக்கின்மையும் ஒழுக்க வீழ்ச்சியும் தான் முஸ்லீம் உம்மாஹ்
எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கான காரணமாகும் என சர்வ சாதாரணமாக
பேசப்பட்டு வந்தாலும் இந்தப் பார்வையில் ஒரு தெளிவின்மை தெரிவதை யாரும்மறுக்க முடியாது .
இஸ்லாத்தின் பார்வையில் ஆன்மீகம் என்பது என்ன ?
என்ற வினாவில் இருந்தே நாம் விடயங்களை ஆராய முற்படுவது சிறந்தது . அதாவது குறிக்கப்பட்ட சில கிரியைகளை அழுத்தமாக ஒருபக்கம் பின்பற்றிவிட்டு ,வாழ்வின் மற்றைய பகுதிகளை எதோ ஒரு வழியில் தொடரும் பகுதிப் பிரயோகமா இஸ்லாம் சொல்லும் ஆன்மிகம் ? அப்படியானால் ஆன்மீகமும் வாழ்வியலும் இரு வேறுபட்ட துருவங்கள்
என்பதா ? உலகத்தை நேசிப்பதும் மரணத்தை வெறுப்பதும் என்பது குப்ரியத்தின் அடிப்படைப்பண்பு குப்ரிய சித்தாந்தம் இந்த எண்ணக்கருவில்
இருந்தே தனது தேடல்களையும் ,தேர்வுகளையும் , தீர்வுகளையும் வேண்டி நிற்கும் .முஸ்லீமும் இத்தகு மனோபாவத்தில் இருப்பானாக
இருந்தால் நிச்சயமாக இங்கு ஓர் சித்தாந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றுதானே அர்த்தம் !
உலகில் வாழ்வுக்காக எதையும் இழக்கும் மனோபாவம் தான் நிச்சயமாக ஆன்மீக வறுமை இறைவனை இன்முகத்தோடு சந்திப்பதற்காக எதையும் தாங்கும் மனோபாவத்தில் தம்மை மாற்றிக் கொள்வதில் இருந்து தான்
இஸ்லாமிய மீள் எழுச்சிக்கான அடிப்படைப் போராளி உதயமாகிறான்.
எனும் உண்மையை முஸ்லீம்களாகிய நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment