Jun 20, 2014

இறையாதிக்கம் (ஹாகிமிய்யத்துல்லாஹி)

2. இறையாதிக்கம் (ஹாகிமிய்யத்துல்லாஹி)

இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூலிருந்து... பகுதி 4


உலகத்தைப் பற்றிய இக்கருத்துக்களின் அடிப்படையில் யார் உண்மையில் இவ்வுலகின் மீது ஆதிக்கம் செலுத்துகிறானோ அவனே மனிதன் மீதும் ஆதிக்கம் செலுத்துபவன் என்று குர்ஆன் கூறுகின்றது. கட்டுப்பத்தக்கூடிய, கட்டளையிடக்கூடிய அதிகாரம் அவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

இவ்வுலகத்தில் சிறிய அணு முதற்கொண்டு வானளாவிய விண்வெளி அமைப்புவரை அல்லாஹ்வுக்கு கீழ்படிந்தே செயல்படுகின்றன. அதுபோன்ற மனிதனைப் பொறுத்த வரையிலும் அவனுடைய வாழ்க்கையில் அவனால் கட்டுபடுத்த இயலாத பகுதிகள் இறைவன் வகுத்த நியதிகளின் படியே செயல்படுகின்றன. ஆனால் மனிதன் சிந்தித்து முடிவுக்கக்ககுடைய விசயங்களில் தனது ஆளுமையை அல்லாஹ் பலவந்தமாக திணிப்பதில்லை. மாறாக இறைவேதங்களின் வாயிலாக வழிகாட்டுகிரான்!!

அவ்வழிவந்த இறுதிவேதம்தான் திருக்குர்ஆன் . அறிவு பூர்வமாக சிந்தித்து அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளுமாறு, கட்டுப்பாடு நடக்குமாறு குர்ஆன் மனிதனுக்கு அறிவுறுத்துகிறது.

பல்வேறு கோணங்களில் குர்ஆன் இதை விரிவாக வலயுறுத்துகின்றது.


(அ) இவ்வுலகின் ‘ரப்’ தான் மனிதனின் ‘ரப்’ (இரட்சகன்) ஆகவும் உள்ளான். அவனுடைய ‘ரபூபிய்யத்’ தையே ஏற்று நடக்கவேண்டும்:

6:162. நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

6:163. “அவனுக்கே யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லிம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்).

7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

114:1. (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

114:2. (அவனே) மனிதர்களின் அரசன்;

114:3. (அவனே) மனிதர்களின் நாயன்.

10:31. “உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.

10:32. உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?


No comments:

Post a Comment