Jul 20, 2014

“Battle Rats” - வியட்நாமிய களங்களை ருசிக்கும் யூத இராணுவ படையணிகள் !!



by:Abu Maslama

“ எதிரி பெரும் படையாக திரண்டு வரும் போது நீ உன்னை சிறு சிறு குழுக்களாக மாற்றிக்கொள். எதிரி உன்னை இலக்கு வைத்து தாக்குதலிற்கு ஆயத்தமாகும் போது உன் ஒவ்வொரு குழுக்களும் தனித்தனியாக எதிரியை இலக்கு வைத்து தாக்குதலிற்கு தயாராக வேண்டும் ” - ஜெனரல் சன்-சூ (Art of War).

இஸ்ரேலின் தரை வழியான படை நகர்வில் இந்த யுத்தத் தத்துவத்தை ஹமாஸ் பின்பற்ற ஆரம்பித்துள்ளது. இதற்கு பல இடங்களிலும் நடந்த சண்டைகள் சாட்சியம் பகர்கின்றன. அமெரிக்காவிற்கு வட வியட்டநாம் எப்படி மரணப் புதைகுழியாக மாறியதோ அது போன்றே இஸ்ரேலிய படைகளிற்கு காஸாவும் இரத்தத்தினால் குழைந்த சதுப்பு நிலங்களாக காத்திருக்கின்றன. ஒரு தேசத்தின் பெரும் படையை, அதி நவீன ஆயுத வல்லமையை கொண்ட இராணுவத்தை எதிர்த்து சுற்றி வளைக்கப்பட்ட ஒரு குறும் நிலப்பரப்பில் சண்டையிடுதல் என்பதும் தமது இருப்பை தக்க வைத்தல் என்பதும் இராணுவ ரீதியில் சாத்தியமானதா?, என்பது ஒரு சாமானியனிற்கும் எழும் சாதாரண கேள்விகள். இந்த கேள்விகள் இஸ்ஸத்தீன் அல்-கஸ்ஸாம் படையணிகளிற்கு தெரியாததும் புரியாததும் அல்ல.

எப்படி காஸாவை கூறு போடும் விடயத்திலும் அங்குள்ள ஹமாஸையும், இஸ்லாமிக் ஜிஹாத்தையும் அழித்தொழிக்கும் விடயத்தில் யூத அரசிடம் ஒரு திட்டம் உள்ளதோ அது போலவே காஸாவில் களமிறங்கியுள்ள பலஸ்தீன போராளிகளிடமும் ஒரு திட்டம் உள்ளது. வருங்கால சண்டைகள் இதனை உண்மைப்படுத்தலாம். முள்ளிவாய்க்காலில் புலிகள் மக்களை மனிதக் கேடயமாக வைத்து அழிந்து போன வரலாற்று உதாரணங்களை வைத்து ஹமாஸின் கதியும் அதுதான் என பல தமிழ் ஊடகங்கள் ஆருடங் கூறுகின்றன. அப்படித்தான் நடக்கும் என்றால் இஸ்ரேலிய அரசு இலங்கையின் நட்சத்திர தளபதிகள் பொன்சேகா, சவீந்திர சில்வா, ரவிப்பிரியா என பலரிடம் என்ன செய்வது எப்படி செய்வது என்று ஆலோசனை கேட்டிருக்கும்.

அப்படி ஒரு களச்சூழலை காஸாவில் உருவாக்க முடியாது என்பது இஸ்ரேலிய இராணுவத்திற்கு நன்கு தெரியும், அது போலவே ஹமாஸிற்கும் அது தெரியும். இங்கே இஸ்ரேலிற்கு தேவை ஹமாஸை ஒன்று மொத்தமாக அழிப்பது அல்ல. அப்படி அழிப்பதாக இருந்தால் ஒட்டுமொத்த காஸா மக்களையும் கொல்ல வேண்டும். ஒரு ஹமாஸின் போராளி மண்ணில் சாயும் போது 09 காஸாவின் இளைஞர்கள் அவன் கையிலிருந்து வீழ்ந்த துப்பாக்கியை மீண்டும் யூதர்களிற்கு எதிராக உயர்த்த போட்டி போடுகிறார்கள். ஹமாஸில் இருந்து காஸாவையோ காஸாவில் இருந்து ஹமாஸையோ ஒரு போதும் பிரிக்க முடியாது என்பேதே உண்மை. இஸ்ரேல் மேற்கொண்ட இன்றைய தாக்குதல்கள் மேலும் மேலும் ஹமாஸுடன் மக்களை இறுக மானசீகமாகவும் பொளதீகமாகவும் பிணைத்து வருகிறதே அன்றி வேறில்லை.

நேற்றைய ஹமாஸின் தாக்குதல் சம்பவம் ஒன்றை பார்ப்போம்......
தெற்கு காஸாவின் எல்லையில் Sufa-வை நோக்கி ஒரு சுரங்க வாயிலின் ஊடாக டனலை அமைத்திருந்தார்கள் அல்-கஸ்ஸாம் போராளிகள். அதன் ஊடாக சென்று இஸ்ரேலிய வேவுப்படையினரின் கண்களில் படும்படியாக சில நடமாட்டங்களையும் செய்திருந்தார்கள். உடனடியாகவே இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் அவர்களை நோக்கி கடும் தாக்குதலை ஆரம்பித்தது. போராளிகள் வேகமாக பின்வாங்கி சுரங்கம் ஊடாக காஸாவிற்குள் நுழைந்தார்கள். இவர்களை பின் தொடர்ந்து இரண்டு பிளட்டூன் IDF படையினர் சுரங்கத்தினுள் நுழைந்து தாக்கியவாறு காஸாவின் எல்லை வரை சென்றனர்.

தங்கள் போராளிகள் அனைவரும் தளம் திரும்பியதை உறுதி செய்த அல்-கஸ்ஸாம் விசேட தாக்குதல் அணியினர் ஏற்கனவே சுரங்கத்தினுள் பொருத்தி உருமறைப்பு செய்து வைத்திருந்த சைட் சார்ஜர்களை (கிளைமோர்) வெடிக்க வைத்தனர். அந்த சுரங்கம் தோண்டப்பட்ட விதமே குண்டுகள் வெடித்தால் அப்படியே சரியும் வண்ணம். நிலைமை தலைகீழானது. Sufa-வின் அருகே 03 ஹெலிகொப்டர்களில் அந்த டனலினுள் நுழைந்த இஸ்ரேலிய படையினரை ஸ்ட்ரெச்சர்களில் தூக்கிச் சென்றது இஸ்ரேலிய மீட்பு இராணுவம்.

எவ்வளவு இழப்புக்கள் யூத ஆக்கிரமிப்பு படையினரிற்கு நிகழ்ந்தது என்பது பற்றிய எந்த விபரத்தையும் இஸ்ரேலிய அரசு வெளியிடவில்லை. அவர்கள் அதனை வெளியிடவும் போவதில்லை. இது அவர்களது படையினரதும், சட்டவிரோத குடியேற்றக்காரர்களினதும் மனோ நிலையை, போர் வலுவை பாதிக்கும் என்பது அவர்களிற்கு தெரியும். அது போலவே ஹமாஸிற்கும் இழப்புக்களின் ரோஸ்டர் என்ன என்பதை அனுமானிக்க முடியாத நிலை.

இப்போது காஸாவின் சுரங்கங்களும் வெடிக்கின்றன. எலிகளை வேட்டையாடுவது போல பாய்ந்து சென்ற யூத இராணுவத்திற்கு இப்போது புரிந்திருக்கும் அவர்கள் எலிகள் அல்ல “பேட்டில் ரேட்ஸ்” என்று

No comments:

Post a Comment