Jul 17, 2014

என் பலஸ்தீனச் சகோதரனே..!!

என் பலஸ்தீனச் சகோதரனே..!!
துஷ்டனின்,
உஷ்ண ரவைகளை-உன்
நெஞ்சினிலே சுமந்து,
இன்று நீ..
இம் மண்ணிலே சரிந்தாய்!
இறைவனின் வழியில்..
மரணத்தை சுகிக்கவே.. நீ
போர்க்களம் புகுந்தாய்!
அடக்குமுறை ஒழிந்து,
சத்தியம் மிகைக்கவே.. நீ
போர்க்கொடி சுமந்தாய்!
நீ சிந்தியது உதிரம் அல்ல!
நானிலத்திற்கு நிழல் தரப்போகும்..
விருட்சத்திற்கு வார்க்கப்பட்ட நீர்!
மண்ணிலே புதைக்கப்பட்ட உன் உடல்..
விருட்சத்திற்கு உரம்!
அமைதி கொள் தோழனே..
அமைதி கொள்!
இன்று தானே நீ
ஓய்வு கொள்கிறாய்!!
ஏ.எச்.ரெஸா-உல்-ஹக்
engalthesam.lk

No comments:

Post a Comment