“இறுதிப் பலஸ்தீனியன் இருக்கும் வரை ஹமாஸை அழிக்க முடியாது” - Ismail Haniyeh (ஹமாஸின் பிரதி அரசியல் தலைவர்)
இஸ்ரேலின் காஸா மீதான தாக்குதல்கள் பற்றி காஸாவின் முன்னாள் பிரதமரும் ஹமாஸின் அரசியல் பிரிவின் பிரதித் தலைவருமான Ismail Haniyeh அவர்கள் அல்-அக்ஸா தொலைக்காட்சிக்கு கடந்த திங்கட்கிழமை காஸாவின் நிலவறையொன்றில் இருந்த அளித்த பேட்டி வெளியாகியுள்ளது. அதில் அவர் பலஸ்தீனத்தின் அழிவிற்கு முழு உலக நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும் என சாடியுள்ளார்.
“இஸ்ரேல் கடந்த 08 வருடங்களாக காஸாவை முழு முற்றுகைக்கு உள்ளாக்கி வந்துள்ளது. இந்த சட்டவிரோத முற்றுகையை உலக நாடுகளும் கண்டிக்கவில்லை, எமது சகோதர அரபு தேசங்களும் கண்டிக்கவில்லை. இப்போது அது காஸாவின் ஒரு பகுதியை அழிக்க முனைகிறது. அப்போதும் இந்த சர்வதேசமும், முஸ்லிம் தேசங்களும் இதனை தடுக்காமல் வாழாவிருக்கின்றன. யூஹுதிகளின் கொலை வெறிக்கு எமது இரத்தத்தின் மீது உறுதி கூறுகிறோம், நாம் சளைக்காமல் போராடுவோம் என்று. அது போலவே இந்த பிரச்சனை தீரா வேண்டும் என்றால் யூதர்கள் சிந்தும் இரத்தத்தின் பின்பே அது நடக்கும். ”
“எம்மை இஸ்ரேல் தாக்கும் போது, எமது சிறார்களையும், எமது குழந்தைகளையும் கொன்றொழிக்கும் போது, அவர்கள் மேல் இரசாயன ஆயுதங்களை பிரயோகிக்கும் போது எதுவும் பேசாத அமெரிக்காவும் ஐரோப்பாவும், நாம் யூதர்களிற்கு பதிலடியை கொடுக்கும் போதும் அதில் பல வெற்றிகளை ஈட்டும் போதும் சிந்தப்படும் யூதர்களிற்காகவும் அவர்களது இரத்தத்திற்காகவும் இந்த தேசங்கள் ஆழ்ந்த கவலைகளை வெளியிடுகின்றன. இஸ்ரேலின் செயலிற்காக வக்காலத்து வாங்குகின்றன.”
“நாம் யார் மேலும் நம்பிக்கை வைத்து எமது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. அது போலவே யார் மேலும் நம்பிக்கை வைத்து எமது போரட்டத்தை முடிவிற்கு கொண்டு வரப்போவதுமில்லை. எங்கள் அனைத்து நம்பிக்கைகளும் தவக்கல்களும் அந்த ஏக இறைவன் மீது மட்டும் தான். அவன் எமக்கு உதவுவான் என நாம் உறுதியாக நம்புகிறோம். அவனது வானவர்கள் எமக்கு உதவ அனுப்பப்படுவார்கள் எனவும் உறுதியாக நம்புகிறோம்.”
“ரபாஃவின் வாசலினால் வரும் அத்தியாவசியப் பொருட்களை காட்டி எமது போராட்டத்தை எகிப்து கட்டுப்படுத்த முடியாது. இது இறை பாதையில் நடக்கும் போராட்டம். எமது கடைசி குழந்தை மரிக்கும் வரை பலஸ்தீனத்தின் துப்பாக்கிகள் ஓயாது. யூதனின் அச்சமும் விலகாது.”
“உலகம் துவங்கியது முதல் அது முடியும் வரை பலஸ்தீனத்திற்கு என்று ஒரு வரலாறு உண்டு. இருக்கிறது. அந்த வரலாற்றின் எந்தப் பகுதியில் நின்று நான் இதை கூறுகின்றேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் பலஸ்தீனர்கள் அல்-அக்ஸாவின் சொந்தக்காரர்கள். உலகின் பெரும் அறிஞர்களும், தளபதிகளிலும் இங்கிருந்து வெளியாகியுள்ளார்கள். அந்த பரம்பரையில் வந்த ஒவ்வொரு பலஸ்தீனியனும் தனது மண்ணிற்காக போராடுவான். எமது விடா முயற்ச்சியான கடுமையான போராட்டத்தின் ஊடாக அந்த வெற்றியை விடுதலையை உறுதிப்படுத்துவோம்.”
“என் கண் முன் எனது சகோதரிகளும் சகோதரர்களும் கொல்லப்படுவதை கண்டு துடித்து போகிறேன். ஆனால் நாங்கள் வெற்றியின் வாயற்கதலை திறந்து விட்டோம். இந்த காஸாவின் சண்டைகள் அதற்கான படிக்கட்டுக்கள். அந்த படிக்கட்டுக்களின் கீழ் பலஸ்தீனியர்களின் உதிரம், சதை, எலும்பு எல்லாம் புதைந்து கிடக்கிறது.”
“நாம் நாளை இஸ்ரேலை வெற்றி கொள்ள முற்படும் போது எம்மை பயங்கரவாதிகள் என்று கூறி உலகத்தின் சர்வதேசப் படைகள் காஸாவை முற்றுகையிடும். அது எமக்கும் தெரியும். அதையும் தாண்டி நாம் அல்லாஹ்வின் வானவர்களுடன் சேர்ந்து அவர்களையும் எதிர்ப்போம். அல்ஹம்துலில்லாஹ்.”
No comments:
Post a Comment