Jul 13, 2014

டெல்-அவிவ் நகரம் மீது தொடங்கியது ஹமாசின் கடகட பிளாங்கெட் மிசைல் தாக்குதல்!


இஸ்ரேல் மீதான தாக்குதலை ஹமாஸ் இயக்கம் தீவிரப்படுத்த உள்ளது என நேற்று விறுவிறுப்பு.காமில் எழுதியிருந்தோம். உளவு வட்டார தகவல்களின்படி எழுதப்பட்ட, ‘இரவோடு இரவாக ஹமாஸின் ஆயுதக் கிடங்கில் இருந்து வெளியே வந்த ஏராள ஏவுகணைகள்!’ என்ற அந்தக் கட்டுரை வெளியாகி சில மணி நேரத்தில் நேற்றிரவு, இஸ்ரேலிய தலைநகர் டெல்-அவிவ் மீது கடகடவென ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.

முன்பு நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு தெரியுமா?

நேற்றிரவு நடத்தப்பட்டது, பிளாங்கெட் மிசைல் தாக்குதல்!

அதன் அர்த்தம் என்னவென்றால், எந்தவொரு இலக்கையும் குறி வைக்காமல், கடகடவென அடுத்தடுத்து ஒரு நகரத்தின் வெவ்வேறு பகுதிகளை நோக்கி ஏவுகணைகளை ஏவுவது.

இதைத்தான் நேற்றிரவு செய்தது, ஹமாஸ் இயக்கம்.

இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால், பிளாங்கெட் மிசைல் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன் இஸ்ரேலுக்கு 1 மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டது.

இஸ்ரேலியர்களின் ஹீப்ரூ மொழியில் டைப் செய்யப்பட்ட எச்சரிக்கை ஒன்று ஹமாஸ் இயக்கத்திடம் இருந்து இஸ்ரேலிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், “இன்னமும் சரியாக ஒரு மணி நேரத்தில், டெல்-அவிவ் நகரம் மற்றும் அதற்கு அருகிலுள்ள பகுதிகளை நோக்கி எமது பெரிய தாக்குதல் ஒன்றை எதிர்பாருங்கள்” என எழுதப்பட்டு இருந்தது.

உடனே இஸ்ரேலில் அவசர கதியில் காரியங்கள் நடக்க தொடங்கின, நகர் முழுவதும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஏவுகணை தடுப்பு சாதனமான Iron Dome batteries, தயார் நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஹமாஸ் எச்சரித்தது போலவே, சரியாக 1 மணி நேரத்தில் காசா பகுதியில் இருந்து ஏவுகணைகள் கடகடவென சீறிக்கொண்டு வரத் தொடங்கின….

வந்த ஏவுகணைகளில் சிலவற்றை மட்டுமே, Iron Dome batteries தடுத்து வீழ்த்தியது. மீதி ஏவுகணைகள் டெல்-அவிவ் நகரத்திலும், அதன் புறநகர் பகுதிகளிலும் போய் வீழ்ந்தன. நகரம் முழுவதும் அபாய எச்சரிக்கை சைரன் ஒலித்துக் கொண்டிருந்தது.

டெல்-அவிவ் நகரின் பகுதிகளான ஹெர்சிலியா, ரமாட் ஹஸ்ரொன், பெட்டாச் திக்வா, பினே பிரெக், ரமாத் கான் உட்பட பல இடங்களில் ஏவுகணைகள் விழுந்து வெடித்துள்ளன. நேற்றிரவு நடந்த இந்த பெரிய தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை (பெரும்பாலும் அவற்றை இஸ்ரேல் வெளிப்படையாக அறிவிப்பதில்லை)

No comments:

Post a Comment