Jul 18, 2014

இது ஒரு 'டோர் கீபரின் ' கதை !!!

ஒருபக்கம் போலந்தில் இருந்தும் லித்துவேனியாவில் இருந்தும் உக்ரைனில் இருந்தும் லட்சக்கணக்கான யூத அகதிகள் உதுமானிய கிலாபத்தின் அதிகார எல்லைக்குள் தஞ்சம் புகுந்து கொண்டிருந்தார்கள் .

கி பி 17 இல் இந்த நிகழ்வு நடக்கின்றது . கிறிஸ்தவ கொசாக்க்குகளின் கோரத் தாண்டவத்தில் மறுநாள் பொழுது விடிவதே அந்த யூதர்களின் ஒரே கவலையாக இருந்தது. உயிரை கையில் பிடித்தவர்களாக உதுமானிய கிலாபாவின் எல்லைக்குள் மட்டுமே தங்கள் பாதுகாப்பு; என்ற நம்பிக்கையோடு அவர்கள் வருகிறார்கள் .

அவர்கள் நம்பிக்கை வீண் போக வில்லை. அந்த சத்தியத்தின்
பூமி இந்த சதிக்கும்பளையும் உள்வாங்க தவறவில்லை. ஆனால் இறைவனோடு சவால் விட்ட அந்த சந்ததிக்கு எப்போதும் பிறவிக்குணம் மாறவில்லை ! சிலரைத் தவிர . இப்படி வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கித் தவித்த இந்த யூதர்களுக்கு மத்தியில் 'சபாதி இஜ்வி ' என்ற ஒரு யூதனின் பெயர் அதிகமாக அடிபடத் தொடங்கியது .

போலந்தில்' பொக்டன் செமீயில் நிகியின்' வெறிபிடித்த கிறிஸ்தவ இராணுவம் நாளுக்கு ஆயிரம் என கணக்கு வைத்து யூதர்களை கொல்லத் தொடங்கிய அந்த காலப்பகுதியில் இந்த 'இஜ்விக்கு ' வயது இருபத்தி இரண்டு . ஆனால் அந்த வயதிலேயே ஒரு யூத 'ரப்பி' (மதகுரு )ஆக அறியப்பட்டிருந்தான் .

ஆனால் இதற்கு மேலும் ஒரு கிரீடம் சூட்டிக்கொள்ள அவன் துணிந்தான் . " ஓ யூதர்களே ! ஒரு தேவ தூதரின் குரலை நான் கேட்டேன் . யூத இனத்தை பாதுகாக்க என்னை நபியாக இறைவன்
தேர்ந்துள்ளான் " என ஒரு அறைகூவல் விட்டான் .தங்கள் வம்சத்தில் மட்டுமே நபிமார்கள் பிறக்க வேண்டும் என்ற நப்பாசையோடு இறுதித் தூதரான முஹம்மது (ஸல் ) அவர்களை புறக்கணித்த இந்த பாவத்தின் சந்ததியில் அதிகமானோருக்கு இந்த அழைப்பு பிடித்துப் போனதில் ஆச்சரியம் இல்லை . அவனுக்கு பின்னாலும் ஒரு கூட்டம் திரண்டது .

கடுமையான கிறிஸ்தவ அடக்குமுறைகளால் உணர்ச்சி வசப்பட்டிருந்த யூதர்கள் அறிவை தொலைத்து இவனுக்கு பின்னால் அணி திரண்டனர் . ஜெரூசலத்தை மையப்படுத்திய யூத சாம்ராஜிய கனவை அவன் பேசியது யூதர்களை இன்னும் இது விடயத்தில் உசுப்பேத்தியது . ஆனால் விடயங்களை இரண்டு கண்கள் துல்லியமாக அவதானித்துக் கொண்டிருந்தன. அவர் உதுமானிய கிலாபாவின் அன்றைய கலீபா .

உலகளாவிய ரீதியில் இந்த நாசப் பிரச்சாரத்தை இஜ்வி பரப்பினான். யூத சடங்குகளில் பல மாற்றங்களை செய்து பல சமஸ்தானங்களை ஏற்படுத்தி அதற்கு மன்னர்களையும் தேர்வு செய்தான் . பின்னர் ஒரு பெரிய ஆதரவாளர் படையுடன் துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லை நோக்கி வந்தான் . இதுதான் எல்லை என முடிவு செய்த கலீபா இஸ்லாமிய இராணுவத்தை வைத்து இவரை மடக்கிப் பிடித்து காவலில் வைத்தது . அதிர்ந்து போனார்கள் இஜ்வியின் ஆதரவாளர்கள் .

உதுமானிய கலீபா இஜ்விக்கு இரண்டு தேர்வுகளை மட்டுமே முன்வைத்தார் .
1. இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுதல் .
2.உயிரை விடுவது .

இறை தூதர்களுக்கு எல்லாம் அரசராக தன்னை பிரகடனப்படுத்திய இஜ்விக்கு தனது செயல்களின் விபரீதம் அப்போதுதான் புரிந்தது . இயல்பிலேயே உயிருக்கு பயந்த யூதர்கள் விடயத்தில் இஸ்லாமிய இராஜதந்திரம் ஒரு தெளிவான பொறியை வைத்தது . அது இஜ்வியை தூதராக ஏற்ற அந்த மதிகெட்ட கூட்டத்தையும் வீழ்த்தும் திட்டமாக இருந்தது .

அந்த இஜ்வி சற்றும் தாமதிக்காமல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான் . ஒரு தொடை நடுங்கியையா நாம் நம்பியிருந்தோம் !? என யூதர்களில் பலர் மனக்கிலேசம் அடைந்தார்கள் . கலீபா அவனுக்கு
'மேமத் எபிண்டி' என புதிய பெயர் வைத்தார் . கூடவே ('ரோயல் டோர் கீபர் ' ) ராஜ வாயில் காப்பாளன் என ஒரு பட்டத்தையும் கொடுத்து 'வாழ்க்கைச் செலவும் கொடுக்க முடிவெடுத்தார் . இது பாம்பை பெட்டிக்குள் பூட்டும் அரசியலாக இருந்தது .

இதற்கு பின்னாலும் ஒரு வேடிக்கை நிகழ்ந்தது . அது இஜ்வியை மிக அதிகமாக நேசித்த ஒரு தொகை யூதக் கூட்டம் .இதுதான் வழி என ஒரு குருட்டுப் பார்வையோடு ஒளியான சத்திய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது .

இஸ்லாம் அதிகாரத்தில் கம்பீரமாக நின்ற காலத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை .'குப்ர்' கொடிகட்டிப்பறக்கும் இன்றைய அரசியலில் புறநடையாக 'தாகூத்கள்' பயன்படுத்த முடியாது, என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை . வெறும் உணர்வின் விளிம்பில் நின்று நிகழ்காலத்தை பார்ப்பதை விட எம் கண் முன் நடக்கும் நிகழ்வுகளை சற்று அறிவு பூர்வமாக அலசுவது சிறந்தது .அல்லாஹ் சூழ்ச்சிகளை விட்டும் நம்மை பாதுகாக்கட்டும் .

No comments:

Post a Comment