Jul 12, 2014

சீன அரசின் Xīnjiāng மாகாண முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகளும் அதன் எதிர் விளைவுகளும் !!


 
 



ரமழான் மாதம் வந்து விட்டாலே, ஒரு கரப்பான் பூச்சியை அல்லது ஓர் எலியை பார்ப்பது போல் முஸ்லிம்களை தொடர்ந்து கவனமாக அவதாானிக்கும் சீன காபிர்கள்.

Xinjiang. சரியாக சொன்னால் சீனா ஆக்கிரமித்த கஸகிஸ்த்தான், கிருக்கிஸ்த்தான், தஜிக்கிஸ்த்தான பெரு நிலப்பகுதி. சீன அரசு ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதம் வந்து விட்டால் Xinjiang-ல் உள்ள முஸ்லிம்களின் அடிப்படை மனித உரிமைகளை மிக மோசமாக நசுக்குவது வழமையான விடயம். இம்முறையும் அது தனது அதிகார எல்லைகளிற்கு அப்பால், பொது நிறுவனங்களின் ஊடாகவும் அவர்களின் மீது தனது காட்டுத்தனமான உரிமை மீறல்களை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்துள்ளது. இதில் தனியார் கம்பனிகள், தொழிற்சாலைகள், பாடசாலைகள், கல்லூரிகள் என பலவும் அடங்கும். மாகாணம் முழுவதும் இந்த சட்டங்கள் அமுலானாலும் இதன் உச்ச தாக்கங்கள் தலைநகர் உரும்கியிலேயே விளைந்துள்ளது.

ஒரு காலத்தில் பெரும்பான்மையாக உய்க்குர் முஸ்லிம்களும், அடுத்த சிறுபான்மையாக கஸாக் முஸ்லிம்களும் இருந்த இந்த மாகாணத்தில் சீன அரசு மிக நீண்டகாலமாக திட்டமிட்ட சட்டவிரோத குடியேற்றங்களை உருவாக்கி அங்கு 5 விகிதமாக இருந்த ஹான் இன சீனர்களை உய்க்குர் முஸ்லிம்களிற்கு சமானமாக பெருக்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி 42:42 என்ற சம விகிதாச்சாரத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளதுடன் கஸாக் முஸ்லிம்களை மிகச் சிறுபான்மையாளர்களாகவும் மாற்றியுள்ளது. உய்க்குர், கஸாக் மொழிகளை பேசுவதை பின்னிலைப்படுத்தி மன்டரின் மொழியை கட்டாய அரச மொழியாக சீன அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. சரி ரமழானில் என்ன நடக்கிறது அங்கே என்று பார்ப்போம்.

இந்த ரமழானில் பாடசாலை மாணவர்களும் நோன்பு பிடிக்க முடியாத நிலை. கல்லூரி நிறுவாகங்கள் ஒரு உணவுப்பார்சலையும், தண்ணீர் போத்தலையும் முஸ்லிம் மாணவர்களிற்கு பலவந்தமாக கொடுத்து அதனை மதியம் உண்டு பருகும் படி வற்புருத்துவதுடன் யார் உண்கிறார்கள்?, யார் உண்ணவில்லை? என்பதனை கவனாக கண்காணிக்கிறார்கள். உண்ண மறுக்கும் மாணவர்கள் பற்றிய விபரம் உடனடியாகவே மாகாண பொலிஸாரிற்கு தெரியப்படுத்தப்படுகிறது. குறித்த மாணவர்களின் வீடுகளிற்கு உடனடியாக விரையும் பொலீஸார் அந்த மாணவர்களின் தாய் தந்தையர் மேல் விசாரணைகளை மேற்கொள்வதுடன் தேச துரோக வழக்குகள் வரை பதிவு செய்கின்றனர்.

இதற்கு ஒரு படி மேலாக Kashgar Normal College நிர்வாகம் சென்றுள்ளது. மாணவர்களிற்கு கடந்த மாதமே அது ஒரு சுற்று நிருபம் அனுப்பியுள்ளது. அதில் யாராவது நோன்பு நோற்றால் அவர்களை உடனடியாகவே வெளியேற்றுவோம் என்றும், இதற்கு முன் அவர்கள் தங்கள் கல்லூரியில் பெற்ற டிப்ளோமா மற்றும் உயர் சான்றிதல் கற்கை நெறிகளை உடனடியாகவே வலிதற்றதாக இரத்தச் செய்வோம் என்றும் அறிவித்துள்ளது.

இந்த நிலைமை தொழிற்சாலைகள், அலுவலகங்கள், தனியார் வேலைத்தளங்கள், சுரங்க அகழ்வு நிலையங்கள் என்று எல்லா மட்டங்களிலும் கடுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது. அரச ஸ்தாபனங்களிலும், அலுவலகங்களிலும் கேட்கவே தேவையில்லை. கரப்பான் பூச்சியை அவதானமாகப்பார்க்கும் நிலையில் நோன்பு மாதத்தில் முஸ்லிம்கள் சீன காபிர்களால் உற்று நோக்கப்படுகிறார்கள்.

தராவீஹிற்கு தடை. ரமழான் உபந்நியாசங்களிற்கு தடை. சிறப்பு பிரசங்கங்களிற்கு தடை. ஏன் 03 பேர் ஒன்றாக ரமழானில் கூடி நின்று பேசுவதற்கும் தடை. இப்தார் நிகழ்வுகள் கூட தங்கள் வீடுகளில் மட்டும் தமக்கு தாமே நிகழ்த்திக்கொள்ள வேண்டும். அடுத்த வீட்டிற்கு சென்று கூட்டாக நோன்பு திறந்தால் கூட அது, புரட்சிகர சீனக்குடியரசிற்கு எதிரான ஒன்று கூடல் என்றே சட்டம் சொல்கிறது. புரிகிறதா ரமழானின் நிலை வடமேல் சீன மாகாணத்தில்?...

ஆனால் இந்த உரிமை மீறல்களையும், சீன அரசின் கடுமையான சட்ட நடவடிக்கைகளையும் பொருட்படுத்தாமல் தங்கள் ஈமானிய உந்துதலால் இரகசியமாக பல்லாயிரக்கணக்கான உய்க்குர் சீனர்கள் நோன்பு நோற்கிறார்கள். சின்சியாங்கின் பெரு நகரங்களிளேயே சீன காவலர்களினால் மோப்பம் பிடிக்க முடிகிறது. 1005 சிறு நகரங்களும் கிராமாங்களும் உள்ள இந்த மாகாணத்தில் அவர்களால் இதனை தடுக்க முடியாமல் போயுள்ளதே உண்மை நிலை.

ஐயன்ஸ்டைன் சொல்லும் ஒரு தாக்கத்திற்கு மறு தாக்கம் உண்டு எனும் பொளதீக விதி, சீனாவிற்கும் பொருத்தம். உரும்கியில் சீன அரசு செய்யும் ரமழான் மாத ஏதேச்சாதிகார நடைமுறைகள் பற்றி இப்போது சின்சியாங்கின் கிராமப்புர மக்கள் இது பற்றி பேசுகிறார்கள். விவசாயிகளாகவும், சுரங்க தொழிளார்களாகவும், தொழிற்சாலை வேலையாட்களாகவும் தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்ட இவர்கள் இப்போது பீஜிங்கின் அநியாயங்கள் பற்றியும், ஹான் இனத்தவரின் இனவாத சட்டங்கள் பற்றியும் தங்களிற்குள் கூடி கூடி வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டார்கள்.

சீன அரசு 14 நகரங்களில் எது நடக்கக்கூடாது என எதிர்பார்த்ததோ அது இப்போது 1005 கிரமாங்களில் நடந்து கொண்டிருக்கிறது. புரட்சி பற்றிய பேசிய தேசம், உலக புரட்சிகளிற்கு வித்திட்ட தேசம் இப்போது செய்யும் பாசிஸ அடக்குமுறைகளிற்கு எதிராக மக்கள் தங்களிற்குள் பேசும் காலம் உருவாகி விட்டது. இதுபற்றியும், இதன் பின்னராக அடுத்த கட்டங்கள் பற்றியும் இதே சீன அரசின் பிதா மாவோ சேதுங் தனது லிட்டில் ரெட் புக்கில் என்ன சொல்லியுள்ளார் என்பதை இவர்களே உணரவில்லை.

by:Abu Sayyaf

No comments:

Post a Comment