Sep 10, 2015

அகதியை கீழே தள்ளிய பெண் வீடியோகிராபர் நீக்கம்

அகதியை கீழே தள்ளிய பெண் வீடியோகிராபர் நீக்கம்




ஹங்கேரியில் குழந்தையுடன் ஓடிச் சென்ற சிரியா அகதியை கீழே தள்ளிய பெண் வீடியோகிராபர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

ஹங்கேரி எல்லையோர கிராமத்தில் ஏராளமான அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். அவர்கள் குறித்த செய்தி சேகரிக்க அங்கு பல பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளர்கள் குவித்துள்ளனர். போலீஸார் அகதிகளை குறித்து கணக்கெடுத்துக் கொண்டி ருந்தனர். அப்போது அகதி ஒருவர் குழந்தையுடன் அங்கிருந்து ஓடிச் சென்றார்.

அப்போது அதனை படம் எடுத்துக் கொண்டிருந்த உள்ளூர் தொலைக்காட்சியை சேர்ந்த பெண் வீடியோகிராபர், அந்த நபரை உதைத்ததுடன் அவரது காலை இடறி கீழே விழச் செய்தார். அவர் குழந்தையுடன் கீழே விழுந்து காயம் அடைந்தார்.



இந்த சம்பவத்தை மற்றொரு வீடியோகிராபர் படம் எடுத்தார். அதுவும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதையடுத்து அகதியை தாக்கிய பெண் வீடியோகிராபரை நீக்குவதாக அவர் பணியாற்றிய தொலைக் காட்சி சேனல் அறிவித்துள்ளது.
 
THE HINDU

No comments:

Post a Comment