Sep 3, 2015

குடியேறிகள் ரயிலைவிட்டு இறங்க மறுப்பதால் பதற்றம்

ஹங்கேரியத் தலைநகர் புடாபெஸ்டுக்கு மேற்கே அமைந்திருக்கும் தற்காலிக முகாமை வந்தடைந்திருக்கும் ரயிலில் இருந்து குடியேறிகளை வலுக்கட்டாயமாக இறக்குவதற்கு காவல்துறையினர் முயன்றுவருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Image captionரயிலைவிட்டு இறங்க மறுக்கும் குடியேறிகள் "நோ கேம்ப், நோ கேம்ப்" என்று சத்தமிட்டுவருகின்றனர்.

இரண்டு நாட்களாக புடாபெஸ்ட் சர்வதேச ரயில் நிலையத்திற்குள் குடியேறிகளை அனுமதிக்க மறுத்த ஹங்கேரி பிறகு அவர்களை அனுமதித்தது.
அந்த ரயிலில் ஏறிய குடியேறிகள் அந்த ரயில் தங்களை ஆஸ்த்ரிய எல்லைக்கு அருகில் கொண்டுசேர்க்கும் என குடியேறிகள் கருதியதாக அந்த ரயிலில் பயணம் செய்யும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
ஆனால், அந்த ரயில் பிக்ஸ்கே டவுனிலேயே நின்றுவிட்டது. இதையடுத்து அந்த ரயிலில் பயணம் செய்த குடியேறிகள், "நோ கேம்ப்.. நோ கோம்ப்" என்று ரயிலின் கதவுகளில் தட்டியபடி கோஷமிட்டனர்.
காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக இறக்கப்பட்டவர்கள், மீண்டும் அதே ரயிலில் ஏறிவருகின்றனர். ரயிலில் கடுமையான வெப்பம் நிலவுகிறது.
ஹங்கேரியில் இருக்கும் முகாமில் பதிவுசெய்துகொண்டால் தங்களால் ஜெர்மனி உள்ளிட்ட பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முடியாது என குடியேறிகள் அஞ்சுவதாக பிபிசியின் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
நன்றி BBC

No comments:

Post a Comment