'கிலாஃபா' விடயத்தில் சமரசம் செய்ய முஸ்லிம்கள் ஒரு கனமும் சம்மதிக்க மாட்டார்கள் பகுதி - 04

3. ஒட்டுமொத்த உம்மத்தின் அவலங்களுக்கும், முழு மனித குல நாசத்திற்கு காரணமான மேற்குலக கொள்கைகளுக்கும் எதிராக நாம் உரத்துக்குரல் கொடுக்க வேண்டும்.
 

முஸ்லிம் நாடுகளை நேரடியாக ஆக்கிரமிப்புச் செய்வது தொடக்கம் அப்பாவிப் பொதுமக்கள் மீது Drones (ஆளில்லா விமானங்கள்) மூலம் தாக்குதல் நடத்துவது, இன, குழு ரீதியாக பதற்றத்தை தூண்டி விடுவது, முஸ்லிம்களின் அவலங்களுக்கு முக்கிய காரணமான கொடுங்கோல் கங்கானிகளை ஆட்சியில் அமர்த்தி ஆதரவளிப்பது, ஒரு முஸ்லிம் தரப்பிற்கு எதிராக இன்னுமொரு தரப்பிற்கு ஆயுதம் வழங்கி வன்முறைக்குள் தள்ளுவது என இவர்கள் எமக்கு செய்து வரும் அநியாயங்கள் சொல்லிடங்கா. 
 
 
2003 இல் அமெரிக்க, பிரித்தானிய கூட்டுப்டையினர் ஈராக்கை ஆக்கிரமிப்புச் செய்த நாளிலிருந்து ஏற்கனவே பல நெருக்கடிகளை முகங்கொடுத்து வந்த மத்திய கிழக்கின் அழிவுப்பாதை மிகத்தீவிரமடைந்தது. மேற்குலகு பல போலிச்சாட்டுக்களை முன்வைத்த போதிலும் மேற்குலகின் தலையீடு எக்காலத்திலும் மத்திய கிழக்கின் அமைதிக்கும் சுபீட்சத்திற்கும் ஏதுவாய் அமைந்ததில்லை. மாறாக பாரிய அழிவுகளும், அவலங்களும், கொடுமைகளும், கொடூரங்களும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விதத்தில் அந்தப் பிராந்தியத்தை எப்போதும் பதட்ட நிலையில் பேணுவதிலேயே இவர்கள் கண்ணும் கருத்துமாய் இருந்திருக்கிறார்கள். எனவே உலகளாவிய முஸ்லிம்கள் இது மத்திய கிழக்கில் தானே நடக்கிறது என வாழாவிருந்து விடாமல் எம்மால் முடிந்த அனைத்து வழிகளிலும் மத்திய கிழக்கில் மேற்குலக காலணித்துவ தலையீட்டுக்கு எதிராகவும், அவர்கள் அங்கு கடைப்பிடிக்கும் வெளிநாட்டுக்கொள்கை தொடர்பாகவும் தோலுரித்துக் காட்ட வேண்டும். அதனூடாக அவர்களின் அவலட்சண முகத்தை உலக அரங்கில் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். மேலும் முடிந்த அனைத்து வழிகளிலும் உம்மத் மீண்டும் சரியான திசையில் எழுச்சி பெறுவதற்காக உதவ வேண்டும். குரல் கொடுக்க வேண்டும்.
 

முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும்இ ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (9:71)
 
 
பகுதி - 03 / பகுதி - 05

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Sources From
Darul Aman.Net