கிலாஃபத் பற்றிய 100 கேள்விகள்


முன்னுரைஜனவரி 2012 ல் முதல் வருடத்தில் அடி எடுத்து வைத்த அரபு புரட்சிக்கு பின் அரபுலகில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது அதோடு மட்டுமல்லாமல் அதனுடைய அதிர்வுகள் இன்னும் உலகை குலுக்கி கொண்டிருக்கிறது. இவ்வேளையில் முஸ்லிம் உலகில் நடைபெற்று வரும் இந்த புரட்சி பற்றிய கண்ணோட்டங்கள் உள்ளேயும் வெளியேயும் சதா மாறிய வண்ணம் இருக்கின்றது.

முஸ்லிம் உலகில் நடைபெற்ற தேர்தல்களில் மதசார்பற்ற கட்சிகள் தோல்வி அடைந்ததை தொடர்ந்து மேற்குலகம் தன்னுடைய நிலைப்பாடு பற்றி மறு பரிசீலனை செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறது. தொடக்கத்தில் இஸ்லாமிய வாக்கியங்களை உபயோகித்து வெற்றி பெற்ற இஸ்லாமிய கட்சிகள் பின்னாளில் யதார்த்தத்தில் நிலைபெற்று இருக்கும் ஆட்சி முறைக்கு வழி கொடுத்துள்ளன மேலும் இந்த பிராந்தியத்தில் இஸ்லாத்திற்கான குறள் ஓங்கி வருவதன் காரணத்தால் இஸ்லாம் மற்றும் மதசார்பின்மை இவற்றிற்கு இடையே கடுமையான விவாதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்த புரட்சியை கடத்துவதற்கான முயற்சியை மேற்குலகம் தொடர்ந்து செய்து வருகிறது ஏனெனில் இங்கு ஏற்படும் மாற்றம் ஒரு செயற்கை மாற்றம் என்ற அளவில் இருப்பதற்காக வேண்டிய காரியங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சவால்களை எதிர்கொள்ளவும் இந்த புரட்சி கடத்தப்படாமல் இருக்க இஸ்லாத்தின் பக்கம் தெளிவான அழைப்பை மேற்கொள்ள வேண்டும் மற்றும் அந்த அழைப்பானது இஸ்லாம் முழுமையான அளவில் நடைமுறை படுத்துவதற்காக மட்டுமே இருக்க வேண்டும். இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால்? இஸ்லாமிய அமைப்பு தான் மிகச்சிறந்த அமைப்பு என முஸ்லிம்களாகிய அனைவரும் நம்பிக்கை கொண்டுள்ளனர் ஆனால் அது நடைமுறையில் எவ்வகையான திட்டங்களை செயல்படுத்தும் என தெளிவாக அறிந்து வைத்திருக்காமல் அதை முஸ்லிம்கள் ஆதரிக்கின்ற காரணத்தால் அவர்களுடைய மனதில் பலவிதமான கேள்விகள் எழும் வாய்ப்புள்ளது. உண்மையில் இஸ்லாத்திற்கு இந்த 21 ம் நூற்றாண்டில் ஆட்சி செய்யும் திறன் இருக்கின்றதா? முஸ்லிம் உலகில் உள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கான தீர்வை இஸ்லாம் கொண்டுள்ளதா? வெளி நாடுகளுடனான உறவை பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது? இன்றைய பிரிவினைவாத பிரச்சினைகளை இஸ்லாம் தீர்க்குமா? இஸ்லாமிய அமைப்பை எங்ஙனம் அமைப்பது? இது தன்னுடைய பொறுப்பை பற்றி கேள்வி கேட்க அனுமதிக்கும் அமைப்பாக இருக்குமா அல்லது பிரதிநிதித்துவ அமைப்பாக இருக்குமா? இது போன்ற நடைமுறை கேள்விகளுக்கு எளிதாக பதிலளிக்கும் நோக்கத்தில் இந்த புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகம் அரசமைப்பு, பொருளாதாரம், வெளியுறவு கொள்கை மற்றும் சட்டம் போன்ற மிக முக்கிய அம்சங்களை அலசியிருக்கும். சமூக அமைப்பு, அரசியலமைப்பு, பொருளாதார அமைப்பு, நீதித்துறை போன்ற இஸ்லாமிய அமைப்புகள் பற்றி பல நூல்கள் வெளியாகியுள்ளது. இந்த இஸ்லாமிய அமைப்பின் பலதரப்பட்ட விஷயங்கள் பற்றி ஆழமாக புரிந்து கொள்வதற்கு இந்த ஒழுங்குககள் தமக்கு மையமாக கொண்டுள்ள அடிப்படை கருத்து பற்றிய ஒரு அடிப்படை புரிந்துணர்வை கொண்டிருப்பது அவசியமாகும்.

இந்த புத்தகத்தின் குறிக்கோள் இஸ்லாமிய நிலைப்பாட்டை விளக்குவதே ஆகும், இதை அதிகப்படியான விவரங்கள் தேவைப்படாமல் தெளிவாகவும் எளிதாகவும் எல்லோராலும் எளிதல் புரிந்து கொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதிலுள்ள பதில்கள் சம்மந்தப்பட்ட துறைகளில் விளாவாரியான ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு வழிவகை அமைத்து மேற்கொண்டு அது பற்றி தீவிர ஆராய்ச்சி செய்ய உதவி புரியும்.

Sources: sindhanai.org