சிரியாவை துண்டாட அமெரிக்காவின் திட்டம்ஸைக்ஸ் பைகாட் ஒப்பந்தத்தின் நூறாவது ஆண்டு மற்றும் சிரிய புரட்சியின் ஐந்தாவது ஆண்டில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி சிரியாவிற்கான அமெரிக்காவின் திட்டம் உறுதியானது என கூறினார். அவையின் வெளியறவு கமிட்டியிடம் அமெரிக்க அமைச்சர் தாம் ஏற்கனவே திட்டமிட்டபடி போர் நிறுத்தம் ஏற்படாமல் போனால் அல்லது ஒரு மாற்று அரசு ஏற்படுவதற்கான ஒரு உண்மையான மாற்றம் வரும் மாதங்களில் ஏற்படாமல் போனால் சிரியாவை பிரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ள தனது அடுத்த திட்டத்தை நோக்கி செல்ல இருப்பதாக கூறினார். “சிரியாவை முழுமையாக இப்படியே காலம் தாழ்த்தி வைத்திருப்போமேயானால் மிகவும் காலம் கடந்து போயிருக்கும்”, என ஜான் கெர்ரி கூறினார். [1] “நாம் (பேச்சுவார்த்தை) மேஜையில் வெற்றி பெறாமல் போனால் கைவசம் உள்ள அடுத்த திட்டத்தை மேற்கொள்வது குறித்து தற்போது  தீவிரமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது”[2]. ஸைக்ஸ் பைகாட் ஒப்பந்தத்தின் நூறாவது ஆண்டு மற்றும் சிரிய புரட்சியுன் 5வது ஆண்டில் அமெரிக்கா என்ன விலை கொடுத்தேனும் தற்போது நிலவி வரும் நிலை நீடித்து இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்கா நீண்ட நாட்களாக முயற்சித்து வரும் போர் நிறுத்தமானது 2015  டிசம்பர் மாதம் வியன்னா மாநாட்டில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது, இது பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜெனீவா மாநாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும்.  அனைத்து உச்சிமாநாடுகள் மற்றும் பேச்சுவார்த்தைகளின் மையமாக அல்-அசாதுடன் எதிரணியினர் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு ஒரு மாற்று அரசை உருவாக்குவதே. இது போன்ற மாநாடுகளில் கலந்து கொள்ள அனுப்பப்பட்ட அழைப்புகள் எப்போதும் ஒரு சிலருக்கு மட்டுமே விடுக்கப்பட்டது அதிலும் குறிப்பாக இந்த திட்டத்திற்கு ஓத்து போகும் சில குழுக்களை மட்டும் தேர்ந்தெடுத்து விடுக்கப்பட்டது. முந்தய அரசில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களை சேர்த்து கொண்டதும் அரசின் மாற்றத்தை கோரிக்கையாக வைத்த ஆதிக்கம் வாய்ந்த குழுக்களை வெளியேற்றியதும் இந்த ஜெனீவா பேச்சுவார்த்தைகள் அல்-அசாத் அரசை தக்கவைப்பதற்காக வேண்டியே நடைபெறுகிறது என்பதை வெளிக்காட்டுகிறது மற்றும் இந்த திட்டத்தை எதிர்ப்போரை தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறது. தற்போது நிலவிவரும் போர் நிறுத்தமும் நிச்சயம் தோல்வியை சந்திக்கும் என்பது எதிர்மாறானதல்ல மாறாக அது அமெரிக்காவின் நிலைபாடான தமாஸ்கஸில் அரசை தக்கவைப்பதன் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. இது அல் ஜசீராவால் குறிப்பிடப்பட்டது:  “இந்த பிரச்சினையின் தொடக்கத்தில், அமெரிக்கா வெளிப்படையாக (சிரிய அதிபர்) பஷார் அல்-அசாதிற்கு எதிராக நின்றது. ஆனால் அதே சமயம் எதிரணியருக்கு தவறான வாக்குறுதிகளை தொடர்ந்து கொடுத்து வந்தது. இப்போது அதன் உண்மையான நிலைபாடு வெளிப்பட்டுள்ளது. அமெரிக்கா அசாதிற்கு எதிராக நிற்கவில்லை.  பேச்சுவார்த்தையில் அசாத் கலந்துகொள்ள அது சம்மதம் தெரிவித்துள்ளது மேலும் அவரை ஒரு தலைவராகவும் அங்கீகரித்துள்ளது. [3]
மேலும் சிரியாவையும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் துண்டாடும் கொள்கையை அமெரிக்கா சில காலமாக கொண்டுள்ளது. இன்று, அமெரிக்க அதிகாரிகள் ஒரு காலத்தில் அரபுலகை துண்டாடுவது சாத்தியப்படாத ஒரு இலக்காகவும் வெளிப்படையாக அதை பற்றி துண்டாடும் எண்ணம் என்பது ஆபத்தானது என்று கருதிய காலாவதியான திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளனர். அரபுலகின் பிரச்சினை குறித்து பல்வேறு வாக்கியங்களை உபயோகித்து விவரித்து வருகின்றது அதாவது “மண்ணில் மூழ்குகிறது,” “பிரச்சினையின் உச்சி,” “பால்கனைசேஷன்,” அல்லது “மத்திய கிழக்கின் மிகப்பெரிய முயற்சி,” போன்ற அனைத்தும் இன்று வரை தொடர்ந்து நீடித்து வரும் ஐரோப்பிய மேலாதிக்கத்தையும் நலன்களையும் பாதுகாத்து வந்த 1916 ல் நடைபெற்ற ஸைக்ஸ் பைகாட் ஒப்பந்தத்திலிருந்து திருப்பி விடுவதற்கான முயற்சிகளாகும். 2006 ம் ஆண்டு ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல்.  ரால்ஃப் பீட்டர்ஸ்  பழங்குடி, பிரிவினைவாத மற்றும் கோத்திரத்தின் அடிப்படையிலான மத்தியகிழக்கு மற்றும் ஆசிய எல்லைகளை சிந்திப்பது என்னும் ஆயதப்படை ஜர்னலில்
 ”இரத்த எல்லை (Blood borders)”யை கோடிட்டு காட்டினார்.[4] சிரியா மற்றும் பெரும்பாலான மத்தியகிழக்கு பகுதிகளை துண்டாடும் எண்ணத்தை புஷ்ஷின் ஆதரவாளர்கள் கொண்டிருந்தனர் அவர்கள் ஒரு தெளிவான பிளவு: realm ஐ தக்கவைத்து கொள்வதற்கான ஒரு புதிய வழிமுறை(strategy) என்னும் திட்டத்தை வரைந்தனர். இந்த ஆவணம் சதாம் ஹுசேனை அப்புறப்படுத்த வேண்டும் மற்றும் சிரியாவை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தது.   பிரிவினையை ஒரு கருவியாக உபயோகித்து தற்போது நிலவிவரும் நிலையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அமெரிக்கா நெடு நாட்களாக கொண்டுள்ள திட்டத்தின் ஒரு அங்கமாகும்.
தற்போது போர் நடைபெற்று வரும் சிரியா எல்லைகள் தான் அமெரிக்கா நாடிய எல்லைக்கோடுகளாக இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன சிரியாவை பிரிக்கும் வகையில் வட பகுதிகளான ஹஸாகா முதல் கோபானி மற்றும் துருக்கிய எல்லை வரையிலான பகுதிகளில்  வரலாற்றின் பெரும் பகுதியல் அதிகமாக குர்திய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வட பகுதியான இத்லிப் மாகானத்திலிருந்து யுப்ரைடஸை கடந்து ஈராக்கிய எல்லையிலுள்ள அல்-ரக்கா வரையில் அஹ்லுஸ் சுன்னாவினர் பெரும்பான்மையாக வசித்து வரும் பகுதியாகும். நாட்டின் மையப்பகுதியான டமாஸ்கஸலிருந்து லடாக்கியா மாகாணம் வரை, அரசின் விசுவாசிகள் மற்றும் சிறுபான்மையினரான அலவிகள் வசித்து வருகின்றனர் இந்த பகுதி தானாக ஒரு நாடாக உருவாகக்கூடும். இந்த புதிய வரைபடம்  ஸைக்ஸ்-பைகாட் ஒப்பந்தம் ஏற்பட்ட பின் சிரியா எப்படி சித்தரிக்கப்பட்டுள்ளது என்ற உண்மையான பிரஞ்சு வரைபடத்தை காட்டிலும் வேறுபட்டிருக்கவில்லை மக்களிடம் பிரித்து இந்த நாட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயன்றதால் பிரான்ஸ் இந்த வரைபடத்தில்  1920 களில் பல திறுத்தங்கள் மேற்கொள்ளும் கட்டாயத்திற்கு உள்ளானது. எவ்வாறிருப்பினும் இப்போது எழும் கேள்வி என்னவெனில் ஜான் கெர்ரியும் அவரது கூட்டாளிகளும் தீட்டும் வரைபடமானது இப்போது நிலவி வரும் நிலையிலிருந்து  மாறுபட்டிருக்குமா மேலும் அது நிலைத்திருக்குமா என்பது தான்?
மக்களுடைய மதிப்பு மற்றும் கலாச்சாரம் ஸைக்ஸ்-பைக்காடிற்கு முற்றிலும் மாறுபட்டிருந்த காரணத்தால் அது தோல்வி அடைந்துவிட்டது. நூறு வருடங்களுக்கு பிறகு ஸைக்ஸ்-பைக்காட் வரைந்த எல்லையை போன்று வரையப்பட்டுள்ள இன்றைய எல்லைகளும் அந்த பிராந்திய மக்களால் அங்கீகரிக்கப்படவில்லை அதனால் இன்றும் அது நிலைபெறுவதில் தோல்வியை சந்தித்து வருகிறது எல்லையை போல் மக்கள் தங்களது
இஸ்லாமிய அடிப்படையில் கொண்டுள்ள ஒற்றுமையை கைவிட்டு தேசியவாத அடையாளங்களை  தனதாக்கி கொள்ளவார்கள் என்ற நம்பிக்கையில் இதுவரை இல்லாத இந்த எல்லைகள் புது அமைப்புகளை உருவாக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு ஈராக்கியர், சிரியர், ஜோர்டானியர் அல்லது லெபனியர் போன்ற ஒன்று இல்லாமல் இருந்தது, இந்த தேசங்கள் திட்டமிட்டு உருவாப்கப்பட்டவை ஆகும். தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் வல்லுனர்கள் முன்வைப்பது புதிய வகையான இனம் சார்ந்த பிரிவினைவாத அடையாளங்களை தவிர வேறில்லை. கெர்ரி மற்றும் ஒபாமாவின் ஸைக்ஸ்-பைகாட்டின் 21ம் நூற்றாண்டின் வடிவமானது இனவாத அடிப்படையில் எல்லைகளை பிரித்து உருவாக்க வேண்டும், இவைகளை குழுக்கள் போன்ற அமைப்பதால் இந்த பிராந்தியத்தில் இவைகளால் ஆதிக்கம் செலுத்த முடியாது இது மட்டுமல்லாமல் இவை அனைத்து வகையிலும் நிலைத்திருக்க அரும்பாடு பட வேண்டும். இதன் காரணத்தால் தான் கெர்ரி மேற்கொள்ளும் இத்திட்டமும் தோல்வி அடையும்.
சிரியாவை பிரிப்பது குறித்த ஜான் கெர்ரியின் அறிவப்பு உண்மையான மாற்றம் வேண்டும் என்ற புரட்சிப்படையினர் தங்களது கோரிக்கையை கைவிட வேண்டும் என்பதற்காக
பல கருத்தரங்கங்கள் மற்றும் உச்சி மாநாடுகள் நடத்திய பிறகும் அவர்களை சம்மதிக்க வைப்பதில் அமெரிக்கா தோல்வி அடைந்ததை ஒட்டி வந்ததாகும். ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சிரியாவின் போராட்டத்தில் அந்நாட்டு மக்கள் அதில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது என்பது யாரும் எதிர்பாராதது, ஆனால் அம்மக்கள் சிரிய அரசை மரணத்தின் விளிம்பிற்கு கொண்டு சென்றுள்ளனர், புரட்சியாளர்கள் மீது தாக்குதல்களை கொண்டு செல்வதற்கு பதிலாக தனது அரசை தற்காத்து கொள்ளவதற்கே வெளியிலிலுந்து உதவியை தொடர்ந்து எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்தம் நிச்சயமாக தோல்வியை அடையக்கூடும், ஏனெனில் இதில் அரசிற்கு எதிராக போராடும் புரட்சி குழுவினர் ஈடுபடுத்தவில்லை, மற்றும் இந்த சிரிய புரட்சியின் எதிர்காலம் அமெரிக்கா இந்த விஷயத்தில் பெரும்பாலும் எவ்வாறு  அனுகுகிறது என்பதை பொறுத்து தீர்மானிக்கும்.
அத்நான் கான்
[1]http://www.theguardian.com/world/2016/feb/23/john-kerry-partition-syria-peace-talks
[2]http://sputniknews.com/politics/20160225/1035293806/kerry-plan-.html#ixzz41Hnw8Yve
[3]http://www.aljazeera.com/blogs/middleeast/2016/01/shifting-lines-syria-160131100323293.html
[4] http://www.armedforcesjournal.com/blood-borders/

sindhanai.org