Jul 22, 2016

நீங்கள் எப்படி!?


முஸ்லீம் உம்மத் எப்படியான சிக்களில் சிக்கியுள்ளது? அதன் மீட்சிக்கான சிந்தனை எவ்வாறு அமைய வேண்டும்? முரண் சிந்தனை கவர்ச்சியை ஏற்பதால் ஏற்பட்டுள்ள விளைவுகள் இப்படி பல விடயங்களை சொல்ல வரும்போது...

‪#‎சிலருக்கு‬ புரிகிறது.
#சிலருக்கு கடுப்பு!
#சிலருக்கு பிரச்சினையே தெரியாது!
#சிலருக்கு பிரச்சினை புரிந்தாலும் நாம் சொல்லும் அரசியல் தீர்வில் நம்பிக்கையில்லை!
‪#‎சிலர்‬ பிரச்சினையின் கோணங்களை மாற்றிப் புரிந்ததால் தொலைந்த தீர்வு அர்த்தமற்றது என்பர்!
#சிலருக்கு பிரச்சினையும் புரியும் தீர்வும் புரியும் ஆனால் அதை அடையும் பாதையில் குழப்பங்கள் இருக்கும்!.......

இப்படி பல்வேறு முரண் நியதிகள் கொண்டு முஸ்லீம் உம்மா இயங்கும் நிலையில் முதற்கட்டம் தீர்வு இதுதான் என ஒரு மையப் புள்ளியில் முஸ்லீம் உம்மத்தை ஒன்று குவிப்பதற்கான பணியே இன்று எமக்கு பிரதானமாகிறது! அந்த வகையில் இஸ்லாத்தின் வலுமிக்க இராஜதந்திர பின்புலம் கிலாபா அரசியலின் மீள்கட்டுமானத்தில் இருந்தே தீர்வு இருக்கும் என்பதும், இஸ்லாத்தின் செயல் கட்டமைப்பு ரீதியான பல வெற்றிகளை கிலாபா அரசின் கீழ் இருந்துதான் அல்லாஹ்(சுப) அளித்துள்ளான் என்பதும் எமது ஆழ்ந்த புரிதல். எனவே முஸ்லீம் உம்மா எதிர் கொள்ளும் சிக்கல்களின் தீர்வு என்ற விடயத்தில் கிலாபா அரசு அவசியமாக இருக்கிறது. எனவே கிலாபா அரசியல் எனும் இபாதத்துக்காக உடல் உள உணர்வு ரீதியாக நாம் ஒரு பொது நிலைப்பாட்டை நோக்கி உம்மத் உடன்படுவதே முதல் நிலை தீர்வாக நாம் முன் மொழிகிறோம்! இதை 1.அகீதா ரீதியாகவும் 2.சகோதரத்துவ ரீதியாகவும் 3.இடம் நில பொருள் வள பலத்தின் மூலமும் கட்டமைத்து சுண்ணாவின் வழியில் அமுல் படுத்த வேண்டும் என்ற மக்கள் எழுச்சியை அடுத்த தீர்வியல் இலக்காக குறிப்பிடுகிறோம்!

அடுத்து ரசூல்(ஸல்) காட்டித்தந்த அமைப்பில் அதற்கான தகுதி மிக்கவர்களிடம் நிபந்தனையற்ற உதவியை வேண்டி இந்த வேண்டுதலை முன்வைக்கிறோம். அதில் ஒடுக்கப்படுகிறோம் கைது செய்யப்படுகிறோம் சித்திர வதைகளுக்கு முகங் கொடுக்கிறோம் தடை செய்யப்படுகிறோம்!!!

எமது முடிவின் யதார்த்தத்தை உணர பின்வரும் வரலாற்று பேருண்மை மீது அவதானம் செலுத்த வேண்டியுள்ளது! அதாவது இஸ்லாத்தின் எதிரிகளிடம் இருந்து முஸ்லீம் உம்மா எப்போதிருந்து அரசியல், இராணுவ ,பொருளாதார, சிந்தனா ரீதியான சவால்களை எதிர்கொள்ள தொடங்கியது!? என்று கேட்டால் உடனேயே ரசூல்(ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கை தொடங்கி அப்படியே தாத்தாரியர் சிலுவைப் யுத்தம் என நகர்ந்து இன்றைய காஸ்மீர் விவகாரம் வரை அடுக்கிக் கொண்டே போகலாம்! இந்த வரலாற்று ஆய்வின் தீர்விடமாக நாம் குறிப்பிடும் கிலாபா அரசு என்ற இராஜதந்திரம் தொழிட்பட்டு நிற்பதை இஸ்லாத்தை புரிந்த எவராலும் மறுக்க முடியாது.

ஆனால் இப்படியான சிக்கல்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டன என்ற தீர்வு விடயத்தை ஆராயும் போது அல்லாஹ்வின் தூதரது(ஸல்) செயல் ரீதியான இராஜதந்திரத்தை கருது கோளாக எடுத்து தீர்வு விடயங்கள் பகுப்பாய்வு செய்யப் படுவதில்லை! உதாரணமாக விட்டுக் கொடுப்பு என்றதும் ஹுதைபியா விவகாரத்தை பாய்ந்தடித்து ஆதாரம் காட்டும் பலர்! ஆனால் அத்தகு சூழலின் ஒப்பீட்டு சமவலு ,தள ஒற்றுமை பற்றி பகுப்பாய்வு அற்றே இவர்கள் பேசுகின்றனர்! இவர்களுக்கு தமது செயல் இஸ்லாத்தின் அங்கீகாரமாக இருப்பதாக அடையாளம் காட்ட வேண்டிய கட்டாயம் மட்டுமே இருக்கிறது! இது போல ஏறாளமான சிந்தனை ஒப்பீட்டு பிழைகள் உம்மாவிடம் இருக்கிறது!

இவ்வாறு அவர்கள் பிழையான வியூகத்தில் தொழிற்படுவதை விமர்சித்து சுட்டிக்காட்ட முயலும் போது எம்மை அவர்கள் வாயடைக்க நினைக்கின்றனர் 1.இவர்கள் வாய் வீச்சாளர்கள் இவர்களிடம் தீர்வில்லை! 2.இவர்களை இஸ்லாத்தின் எதிரிகளே உருவாக்கியுள்ளனர்! 3.இவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய வழிகேடர்கள்! என்ற எதிர்ப் பிரச்சாரங்களை பரவலாக முடுக்கிவிடுகின்றனர்! எமது விமர்சனங்களின் மீது உறுதியான ஆதாரங்களை சமர்பித்து பதில் கூற முடியாத நேரத்தில் இத்தகு திசைதிருப்பும் உத்திகளுக்குள் புகுந்து தம்மை பலப்படுத்த நினைக்கின்றனர்! ஆனால் இத்தகயவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றுகின்றனர் என்பதே உண்மை!

இத்தகய இயக்க வாதம்சார் அச்சுருத்தலுக்காக அவர்கள் விடும் தவறுகளையும் அரசியல் வங்குரோத்து தனத்தையும் விமர்சனப்படுத்தக் கூடாது என அவர்கள் நினைத்தால் அதுவே கருத்தியல் சர்வாதிகாரமாகும்! மேலும் ஒருவன் வந்து குப்ருக்கும் அது சார் சிந்தனை கொண்டவனுக்கும் பைஆ பண்ணுவது இஸ்லாம் கூறும் பைஆவுக்கு நிகரானது ஜனநாயக அரசு கிலாபா அரசுக்கு நிகரானது எனக்கூறும்போது அதை ஆதரிக்க செக்கியூலரிச தீனை ஏற்ற பலர் வரலாம்! இன்று அதுதான் நடக்கிறது! எமது குறைந்தபட்ச எதிர்ப்பையாவது இவர்களுக்கு காட்டாதுவிடின் இத்தகு காலக் கபோதிகள் தமது குருட்டுத் தனத்தை சிந்திக்க சந்தர்ப்பம் இல்லாது போய்விடும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு கூட இஸ்லாம் எனும் தீனை ஒரு டிப்லோமடிக் தரத்துக்கு கொண்டுவர பல வருடங்கள் தேவைப்பட்டது! இவ்வளவுக்கும் வஹி அவருக்கு நேரடியாகவே தன் வழிகாட்டலை வழங்கியது! எமக்கும் மாற்று வழிகள் இல்லை அதே பாதை அதே வழிமுறைதான் அது 60 வருடங்களாக இருந்தாலும் 600 வருடங்களாக ஆனாலும் சரியே! ‪#‎சிந்தனைமாற்றம்‬‪#‎நிபந்தனையற்ற‬ உதவி கிடைக்கும்வரை எமது முயற்சிகளை வேகப்படுத்துவது தவிர மாற்றுவழி எதுவுமில்லை!

No comments:

Post a Comment