ஏமன் மீதான போரில், சவுதி அரேபியாவில் உள்ள தனது ராணுவ ஊழியர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா குறைப்பதாக அறிவித்துள்ளது.
ஒபாமாவின் யுக்தியை அமெரிக்கா தொடர்கிறது, தொலைவிலிருந்து போர்களை இயக்கும் அந்த யுக்தியின் அடிப்படையில் சவுதி அரேபியாவில் உள்ள தனது ராணுவ ஊழியர்களை அமெரிக்கா குறைத்துள்ளது. (செய்தி – ரியுடர்ஸ்)
கூட்டுப்படை போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புதல், உளவு செயதிகள் பரிமாற்றம் போன்றவற்றை சவுதி அரேபியாவோடு ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்காக அமெரிக்கா கடந்த ஆண்டு “ஜாயின்ட் கம்பைன்ட் பிளானிங் செல்” என்ற செயல்திட்டதை தொடங்கியது, இதில் தற்போது ஐந்திற்கும் குறைவானவர்களே பனியமர்த்தபட்டுள்ளார்கள் என்று அமெரிக்காவின் கடற்படையின் செயதிதொடர்பாளர் லெஃப்டினன்ட் இயன் மேக் கன்னகெய் பஹ்ரைனில் ரியுடர்ஸ் செய்திகளுக்கு தெரிவித்தார்.
இந்த பணிக்காக சவூதி தலைநகர் ரியாத் உட்பட பல இடங்களில் ஆமாரத்தப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை 45 லிருந்து 5 ஆகா குறைக்கப்படுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு அமெரிக்க ராணுவத்தினர்களின்ண் எண்ணிக்கை குறைக்கப்பட்டும் ஏமனில் தொடுக்கப்படும் தாக்குதலின் தீவிரம் குறையவில்லை. இது தொடர்பாக குவைத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தீர்வின்றி முறிவுற்றதால் ஏமன் மீதான சவுதியின் தாக்குதல் தீவிரமடயக்கூடும்.
முஸ்லீம் நாடுகளில் அமெரிக்கா நேரடியாக் இறங்கி போர் புரியும் நம்பிக்கையை இழந்துவிட்டது, அதனால் மற்ற தோழமை நாடுகளின் உதவியின் மூலம் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயன்று வருகிறது. அமெரிக்காவின் இந்த நிலமையை எப்போது உலகம் கண்டறிந்து புரிந்துகொள்ளும்?
செய்தி பார்வை 20.08.16
No comments:
Post a Comment