Showing posts with label ஹமாஸ். Show all posts
Showing posts with label ஹமாஸ். Show all posts

Jul 24, 2014

பலஸ்தீனத்தின் துப்பாக்கிகள் ஓயாது. யூதனின் அச்சமும் விலகாது


“இறுதிப் பலஸ்தீனியன் இருக்கும் வரை ஹமாஸை அழிக்க முடியாது” - Ismail Haniyeh (ஹமாஸின் பிரதி அரசியல் தலைவர்)


இஸ்ரேலின் காஸா மீதான தாக்குதல்கள் பற்றி காஸாவின் முன்னாள் பிரதமரும் ஹமாஸின் அரசியல் பிரிவின் பிரதித் தலைவருமான Ismail Haniyeh அவர்கள் அல்-அக்ஸா தொலைக்காட்சிக்கு கடந்த திங்கட்கிழமை காஸாவின் நிலவறையொன்றில் இருந்த அளித்த பேட்டி வெளியாகியுள்ளது. அதில் அவர் பலஸ்தீனத்தின் அழிவிற்கு முழு உலக நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும் என சாடியுள்ளார்.

“இஸ்ரேல் கடந்த 08 வருடங்களாக காஸாவை முழு முற்றுகைக்கு உள்ளாக்கி வந்துள்ளது. இந்த சட்டவிரோத முற்றுகையை உலக நாடுகளும் கண்டிக்கவில்லை, எமது சகோதர அரபு தேசங்களும் கண்டிக்கவில்லை. இப்போது அது காஸாவின் ஒரு பகுதியை அழிக்க முனைகிறது. அப்போதும் இந்த சர்வதேசமும், முஸ்லிம் தேசங்களும் இதனை தடுக்காமல் வாழாவிருக்கின்றன. யூஹுதிகளின் கொலை வெறிக்கு எமது இரத்தத்தின் மீது உறுதி கூறுகிறோம், நாம் சளைக்காமல் போராடுவோம் என்று. அது போலவே இந்த பிரச்சனை தீரா வேண்டும் என்றால் யூதர்கள் சிந்தும் இரத்தத்தின் பின்பே அது நடக்கும். ”

“எம்மை இஸ்ரேல் தாக்கும் போது, எமது சிறார்களையும், எமது குழந்தைகளையும் கொன்றொழிக்கும் போது, அவர்கள் மேல் இரசாயன ஆயுதங்களை பிரயோகிக்கும் போது எதுவும் பேசாத அமெரிக்காவும் ஐரோப்பாவும், நாம் யூதர்களிற்கு பதிலடியை கொடுக்கும் போதும் அதில் பல வெற்றிகளை ஈட்டும் போதும் சிந்தப்படும் யூதர்களிற்காகவும் அவர்களது இரத்தத்திற்காகவும் இந்த தேசங்கள் ஆழ்ந்த கவலைகளை வெளியிடுகின்றன. இஸ்ரேலின் செயலிற்காக வக்காலத்து வாங்குகின்றன.”

“நாம் யார் மேலும் நம்பிக்கை வைத்து எமது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. அது போலவே யார் மேலும் நம்பிக்கை வைத்து எமது போரட்டத்தை முடிவிற்கு கொண்டு வரப்போவதுமில்லை. எங்கள் அனைத்து நம்பிக்கைகளும் தவக்கல்களும் அந்த ஏக இறைவன் மீது மட்டும் தான். அவன் எமக்கு உதவுவான் என நாம் உறுதியாக நம்புகிறோம். அவனது வானவர்கள் எமக்கு உதவ அனுப்பப்படுவார்கள் எனவும் உறுதியாக நம்புகிறோம்.”

“ரபாஃவின் வாசலினால் வரும் அத்தியாவசியப் பொருட்களை காட்டி எமது போராட்டத்தை எகிப்து கட்டுப்படுத்த முடியாது. இது இறை பாதையில் நடக்கும் போராட்டம். எமது கடைசி குழந்தை மரிக்கும் வரை பலஸ்தீனத்தின் துப்பாக்கிகள் ஓயாது. யூதனின் அச்சமும் விலகாது.”

“உலகம் துவங்கியது முதல் அது முடியும் வரை பலஸ்தீனத்திற்கு என்று ஒரு வரலாறு உண்டு. இருக்கிறது. அந்த வரலாற்றின் எந்தப் பகுதியில் நின்று நான் இதை கூறுகின்றேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் பலஸ்தீனர்கள் அல்-அக்ஸாவின் சொந்தக்காரர்கள். உலகின் பெரும் அறிஞர்களும், தளபதிகளிலும் இங்கிருந்து வெளியாகியுள்ளார்கள். அந்த பரம்பரையில் வந்த ஒவ்வொரு பலஸ்தீனியனும் தனது மண்ணிற்காக போராடுவான். எமது விடா முயற்ச்சியான கடுமையான போராட்டத்தின் ஊடாக அந்த வெற்றியை விடுதலையை உறுதிப்படுத்துவோம்.”

“என் கண் முன் எனது சகோதரிகளும் சகோதரர்களும் கொல்லப்படுவதை கண்டு துடித்து போகிறேன். ஆனால் நாங்கள் வெற்றியின் வாயற்கதலை திறந்து விட்டோம். இந்த காஸாவின் சண்டைகள் அதற்கான படிக்கட்டுக்கள். அந்த படிக்கட்டுக்களின் கீழ் பலஸ்தீனியர்களின் உதிரம், சதை, எலும்பு எல்லாம் புதைந்து கிடக்கிறது.”

“நாம் நாளை இஸ்ரேலை வெற்றி கொள்ள முற்படும் போது எம்மை பயங்கரவாதிகள் என்று கூறி உலகத்தின் சர்வதேசப் படைகள் காஸாவை முற்றுகையிடும். அது எமக்கும் தெரியும். அதையும் தாண்டி நாம் அல்லாஹ்வின் வானவர்களுடன் சேர்ந்து அவர்களையும் எதிர்ப்போம். அல்ஹம்துலில்லாஹ்.”

Jul 21, 2014

இதுவரை நடக்கும் காஸா யுத்தம் பற்றிய மீளாய்வு ...!!


காஸாவின் ஆக்கிரமிப்பு பொக்ஸிங் போன்றது. இதில் இஸ்ரேல் பொயின்ட்ஸ்களை பெறலாம். ஆனால் ஒரு போதும் ஹமாஸை நொக்- அவுட் பண்ண முடியாது.

ஸ்ரேலின் காஸா மீதான தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளினால் அதற்கு ஏற்பட்ட நல்ல மற்றும் கெட்ட அறுவடைகள் என்ன என்பது பற்றிய ஓர் ஆய்வு (இன்றைய திகதி வரை மட்டும்), சுருக்கப் பார்வையில்....  இஸ்ரேல் 2006-ல் இருந்து 04 சண்டைகளை நிகழ்த்தியுள்ளது. லெபனான் மீது ஒரு முறையும், காஸா மீது 03 முறையும் ஆக்கிரமிப்புக்களை நடாத்த முற்பட்டு தோல்விகளை சந்தித்து எதிர்பார்க்கப்பட்ட யுத்தத்திற்கான காலவரையறைகள் நீட்சி பெற்று சென்றதனால் தனது இராணுவத்தை பின்வாங்கியுள்ளது. 

ஸ்ரேல் எதிர்கொண்ட சாதக நிலைமைகள் (1)
  • 900-இற்கும் மேல் ஹமாஸ் போராளிகள் ரொக்கெட்களை ஏவினாலும் அவற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மிக சொற்பமானவையே. இது எதிரியின் ஏவுகணைகளின் தாக்கம் பற்றிய அச்சத்தை மதிப்பீடு செய்ய உதவுகிறது. 
  • இஸ்ரேலினுள் வந்து வீழ்ந்த காஸாவின் ரொக்கெட்களினால் பாரிய பொருளாதார சேதங்கள் ஏற்படாமை.
  • 2012-இற்கு பின்னர்  Iron Dome anti-missile system-த்தின் செயற்பாடானது மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளதுடன் எதிர்காலத்தில் இதனை மேலும் சிறப்பாக செயற்படதக்கதாக மாற்ற வேண்டிய தொழில்நுட்ப அளவீடுகளை பெற முடிந்தமை.
  • அல்-கஸ்ஸாம் படையணியால் மேற்கொள்ளப்பட்ட கடல் மற்றும் வான் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டமையும், அவர்களின் தாக்குல்கள் தோல்வியில் முடிந்தமையும்.
  • ஹமாஸிற்கு அரபு நாடுகளின் நேரடி உதவிகள் கிடைக்கப்பெறாமை.
  • ஹமாஸிற்கு ஆதரவாக வெளிநாட்டு முஸ்லிம் போராளிகள் களம் இறங்காமை.
  • மேற்குக்கரையில் காஸாவிற்கு ஆதரவாக அல்-பதாஃ செயற்படாமை.
  • மேற்குக்கரையில் ஹமாஸிற்கு ஆதரவாக அல்-அக்ஸா பிரிக்கேட் தாக்குதல்களை நடாத்தாமை.
  • இஸ்ரேலிய அராபியர்களின் கலவரங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டமையும் அவர்கள் மேலும் எந்த செயற்பாடுகளிலும் இறங்காமல் முடக்கப்பட்டமையும்.


ஸ்ரேல் எதிர்கொண்ட எதிர்மறை நிகழ்வுகள் (2)
  • காஸா தாக்குதல் பற்றிய இஸ்ரேலிய அமைச்சரவையில் ஏற்பட்ட முரண்பாடுகள்.
  • இஸ்ரேலிய கம்யூனிச மற்றும் மனித நேய அமைப்புக்களின் அரசு மீதான கடுமையான குற்றச்சாட்டுகளும், காஸா தாக்கதல்கள் மீதான எதிர்ப்பும்.
  • ரொக்கெட் தாக்குதல்கள் காரணமாக பொது மக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சம்.
  • எதிர்காலங்கள் ஹமாஸ் பெரிய தாக்கம் விளைவிக்கும் ஏவுகணைகளை ஏவுமோ என்ற பொதுமக்களின் அச்சம். 
  • அயன் டோம் எம்மை பாதுகாக்காது என்ற இஸ்ரேலிய பொதுமக்களின் உளநம்பிக்கையின்மை.
  • விமான தாக்குதல்களிற்கு முகம் கொடுத்த காஸா மக்கள் தாக்குதல்களை நிறுத்துமாறு ஹமாஸை எதிர்க்க முன்வராமை.
  • விமானங்களில் காஸாவில் போடப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும், குண்டுகளையும் கண்டு காஸா மக்கள் கலக்கமடையாமை.
  • தொடரான பல நாட்கள் சண்டைகளை மக்கள் விரும்பான்மை.
  • தொடரான பல நாட்கள் சண்டையினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பீடுகள்.
  • எதிர்பார்க்கப்பட்ட மேற்கு நாடுகளின் ஆதரவில் ஏற்பட்ட தளற்ச்சி.
  • மேற்குநாடுகளின் 2006 சண்டைகளில் (Operation Pillar of Defense) கிடைத்த ஆதரவு இம்முறை கிடைக்கப்பெறாமை.
  • சிரியா, சினாய் போன்ற பிரதேசங்களில் உள்ள போராளிகள் இஸ்ரெலிற்கு எதிரான தாக்குதல் மனோபாவத்திற்கு மாறியமை.
  • ஹமாஸின் தாக்குதல் திறனை மட்டுப்படுத்த முடியாமை.



ஸ்ரேல் எதிர்கொண்ட பாதக நிலைமைகள் (3)

  • இஸ்ரேலிய உளவமைப்புக்களின் ஹமாஸ் பற்றிய தவறான மதிப்பீடு.
  • இஸ்ரேலிய உளவமைப்புக்களின் இஸ்லாமிக் ஜிஹாத் பற்றிய தவறான மதிப்பீடு
  • இஸ்ரேலிய உளவமைப்புக்களால் பலஸ்தீன போராட்ட அமைப்புக்களின் அதி உட்ச இலக்குகள் (ஹைலி டார்கெட்டட் பிப்ஸ்) பற்றிய தகவல்களை திரட்ட முடியாதனால் பல தாக்குதல் இலக்குகள் தப்பித்தமையும், சந்தர்ப்பங்கள் வீணாக்கப்பட்டமையும்.
  • அல்-கஸ்ஸாமின் தாக்குதல் திறன்களினால் அது தனது அரசியல் தலைமைகளை கட்டுப்படுத்தும் பிரிவாக உருவாவதனால் ஏற்படும் இஸ்ரெலிற்கு எதிரான நிலைமைகள்.
  • ஹமாஸின் அரசியல் பிரிவை விட காஸாவின் பொதுமக்கள் அல்-கஸ்ஸாமில் இணைந்து செயற்பட விளையும் சந்தர்ப்பங்களை இந்த சண்டைகள் உருவாக்கியமை.
  • ஹமாஸின் இராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் படையணி பல சண்டைகளில் தங்களை மரபு இராணுவமாக வெளிப்படுத்திய நிலையில் தாக்குதல்களை எதிர்கொண்டமையானது அவர்கள் மரபு இராணுவமாக மாறுவதற்கான பல சாத்தியக்கூறுகளை அவர்களிற்கு வழங்கியுள்ளமை. 
  • இஸ்ஸத்தீன் எல்-கஸ்ஸாம் படையணி மரபு இராணுவ தன்மைகளை பெறுவதானல் இஸ்ரேலிய இராணுவம் எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள பாதகமான சவால்கள்.
  • அல்-கஸ்ஸாமின் ரொக்கெட் தாக்குதல் தளங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியாத இஸ்ரேலிய தாக்குதல்களின் இயலாமைகள்.
  • இஸ்ரேலிய தாக்குதல் விமானங்கள் கடந்த காலங்களைப் போல தாழப்பறக்க முடியாத நிலைமை. 
  • இஸ்ரேலிய கடற்கலங்கள் காஸாவின் கடற்கரை வந்து நின்று தாக்குதல் செய்ய முடியாமல் ஹமாஸினால் தடுக்கப்பட்டமை. 
  • இஸ்லாமிக் அல்-ஜிஹாத் அணியினர் மேற்கொண்ட நெடுந்தூர ஏவுகணை வீச்சும் அவற்றின் லோஞ்சிங் பேட்களை மொபைல் அமைப்பில் இடம்மாற்றும் செய்பாடுகளின் வேகமும் இஸ்ரேலிய விமானங்களாலும் ஆட்டிலறிகளினாலும் அவற்றை அழிக்க முடியாமல் போன நிலைமைகளும். 
  • இஸ்ரேல் சண்டைகளில் பெரிதுமும் தங்கியிருந்த மர்கவா டாங்கிகளின் பின்னடைவுகள். அவற்றை தாக்கியழிக்கும் ரஸ்ய தொழில் நுட்ப அன்டி டேங் லோஞ்சர்கள் அல்-கஸ்ஸாம், இஸ்லாமிக் ஜிஹாத் போராளிகளின் வசம் வந்தடைந்தமை.
  • ஹமாஸின் சுரங்கங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியாமை. 
  • ஹமாஸின் வெடிகுண்டு தயாரிப்பு நிலையங்களை பூரணமாக அழிக்க முடியாமை.
  • காஸாவில் ஹமாஸின் வெற்றியினால் பலவீனப்படுத்தப்படும் மேற்குக்கரையின் மஹ்மூத் அப்பாஸ் அணியினர். 
  • காஸாவின் வெற்றியினால் ஹமாஸ் மீதான மேற்குக்கரை இளைஞர்களின் ஆத்மார்த்த மோககும் அல்-பதாஃ மீதான நம்பிக்கை இழப்பும். இது ஹமாஸை மீண்டும் அங்கு காலூன்ற வழி வகுப்பது. 
  • காஸாவின் சண்டைகளை லிமிட்டர் வோர் ஸ்ட்டர்ஜியில் முடிக்க முடியாமல் போனமையினால் அதனை லோங் வோர் ஸ்ட்டர்ஜிக்கு மாற்ற வேண்டிய கள நிலைமைகளும் உலக கோப்பையில் லயித்த உலகம் இப்போது காஸாவை பார்க்க ஆரம்பித்த கால அவகாசத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள். 

கொல்லப்பட்ட 13 Golani Brigade இராணுவ வீரர்களும் புதைகுழியாக மாறிய “Shijaiya” நகரும்...!




“எதிரி முன்னேறும் போது நீ பின்வாங்கு. எதிரி இளைப்பாறும் போது நீ பாய்ந்து தாக்கு. பாம்பு போன்ற அதன் வரிசையை வசதியான வளைவுகளில் வெட்டி விடு. எதிரி நெருப்பாக வரும் போது நீ நீராக மாறிவிடு” - டக்டிஸ் ஒப் வோர் - மாஓ சேதுங் (தி லிட்டில் ரெட் புக்).

இது தான் நடந்தது காஸாவின் எல்லைப்புற நகரான Shijaiyah-வுக்கு அருகில் முன்னேறிய இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரின் Golani Brigade (1st Brigade)-இற்கும். இஸ்ரேலின் முதல் பிரக்கேட் இது. 1948-ல் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட போதே இதுவும் ஸ்தாபிக்கப்பட்டது. இஸ்ரேலின் முதன்மை தலைவர்கள் அனைவரும் இந்த பிரிக்கேட்டில் சேவையாற்றியுள்ளனர். சினாய் யுத்தம், 06 நாள் அரபு யுத்தம், அட்டிரசன் சண்டை, யோம் கிப்ர் சண்டை, உகண்டாவின் ஒப்பரேசன் என்டபே, லெபனானின் நதிக்கரையோர ஒப்பரேசன் லிடானி, முதலாம், இரண்டாம் லெபனான் யுத்தம், இரண்டு இந்திபாதாக்களிற்கு எதிரான தாக்குதல்கள் என இந்த பிரிக்கேட் மிகவும் அனுபவம் வாய்ந்தது. இதன் இரண்டு பிரிக்கேட் கொமாண்டர்கள் IDF-ன் பிரதம தளபதிகளாக கடமையாற்றியுள்ளனர். நம்பகமான வேகமாக தாக்குதல் நடாத்தி முன்னேறும் இன்பென்றி இது. 36-வது ஆர்மர் ரெஜிமண்டின் துணை பிரிக்கேட்.

“ஒப்பரேசன் புரடெக்டிவ் எட்ஜ்” (Operation protective Edge) எனும் இன்றைய காஸா மீதான தாக்குதலிற்கு இந்த அணியே முதன்மை அணியாக களமிறங்கியது. கடந்த சனிக்கிழமை பின்னிரவில் இது Shijaiyah-வின் எல்லை வரை முன்னேறி “பிளேசர் லைட்டினை” வானத்தை நோக்கி செலுத்திய போது இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் இந்த நகரின் எல்லைகளை நோக்கி குண்டுத்தாக்குதலை பரவலாக நிகழ்த்தியது. அதன் பின்னர் கோலானி பிரிக்கேட் தன் நகர்வை ஆரம்பித்தது. சுமார் 50 டாங்கிகள் கவச வாகனங்கள் முன்னகர்ந்த வேளையில் பலஸ்தீன போராளிகள் துப்பாக்கி தாக்குதல்களை நடாத்தினர். அதனைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் தங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தியவாறு நகரத் தொடங்கியது இந்த படையணி.

09 அல்லது 10 வாகனங்கள் முன்னகர்ந்த வேளையில் குறுக்காக இருபுறமும் இடைமறித்து பலஸ்தீன போராளிகள் கோலனி அணியை நோக்கி அகோரமாக தாக்குதல் நடாத்த ஆரம்பித்தனர். நிலத்தில் சிறு குழிகள் வெட்டி புரக் மூவ் செய்திருந்த பலஸ்தீன போராளிகளின் தாக்குதல் அணியொன்று டாங்கிகளை நோக்கியும் துருப்புக்காவி வாகனங்களை நோக்கியும் தாக்குதல்களை ஆரம்பித்தது. இதில் ஒரு டாங்கியும், இரண்டு கவச வாகனங்களும் தீப்ற்றி எரிந்தன. உடனேயே நகர்ந்த இராணுவம் தன் வாகனங்களை பின்னகர்த்த ஆரம்பித்தது.

முன்னாள் சென்ற வாகன அணி தனது தொடர்பு அறுக்கப்பட்ட நிலையில் கட்டளை தலைமையினால் அபோர்ட் த மிசன் கொமாண்ட் அவர்களிற்கு வழங்கப்பட்டது. தங்கள் டாங்கிகளும் வெடித்து விடும் என நினைத்து நிலத்தில் குதித்து கவர் எடுத்த நிலையில் பெக்வேர்ட் மூவினை செய்ய முனைந்தனர். இதன் போது நடந்த கடுமையான துப்பாக்கிச் சமர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்தது. இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தெரிவித் தகவல்களின் அடிப்படையில் தங்கள் தரப்பில் 13 கோலானி லைட் இன்பன்ட்றி சோல்ஜர்களை தாங்கள் இழந்துள்ளதாக அறிவித்துள்ளனர். பொதுவாகவே இஸ்ரேல் தனது இழப்புக்களினை பெரிதும் குறைத்து வெளியிடுவதே வழமை.

தாக்குதல்களிற்கு அல்-கஸ்ஸாம் போராளிகள் உரிமை கோரியுள்ளதுடன், “தாங்கள் நடாத்திய மோட்டார் தாக்குதல்கள் எதிர்பார்ததனை விடவும் அதிக இழப்புக்களை எதிரிக்கு ஏற்பட்டுள்ளதாகவும்” அறிவித்துள்ளனர். “இனி வரும் சண்டைகளிலும் குறுந்தூர மோட்டார்களின் பங்கானது முக்கியமானதாக இருக்கப்போகிறது” என்றும் கூறியுள்ளனர். அனுமானமாக 29 யஹுதி படையினரை தாம் கொன்றிருக்கலாம் என கணக்கு வெளியிட்டுள்ளனர். தங்கள் தரப்பில் ஒரு போராளி வீரமரணம் அடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். “நாம் அவர்களை எச்சரித்திருந்தோம். காஸாவினுள் நுழைந்தால் அதன் விளைவுகள் பயங்கரமானவையாக இருக்கும் என்று” என்ற தங்கள் முன்னைய எச்சரிக்கையையும் ஹமாஸ் நினைவூட்டியுள்ளது.

Shijaiyah தாக்குதல்களில் 100 இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் மாண்டு போயுள்ளனர். இவர்கள் அனைவரும் பொதுமக்கள். பலர் வீதிகளில் துடி துடித்து இறக்க தயாராகிய வேளையில் அம்புயுலன்ஸ்களை கூட அவர்கள் அருகில் கொண்டு சென்று நிறுத்த முடியாத அளவிற்கு படு கோரமான ஆட்டிலறி தாக்குதலை மேற்கொண்டது இஸ்ரேலிய இராணுவம். தங்கள் இழப்புக்களின் வலியை தாங்காமல் இதனை அவர்கள் நிகழ்த்தியிருந்தனர்.

எதிர்பார்க்கப்பட்ட களமுனை என்பதனால் ஹமாஸ் ஏற்கனவே அங்குள்ள மக்களை ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்திருந்த அகதி முகாம்களிற்கு நகர்த்தியிருந்தது. அதனால் பாரிய உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை. அப்படியிருந்தும் கூட அநியாயமாக 100 இற்கும் மேற்பட்ட உயிர்கள் சில மணித்தியாலங்களில் காவு கொள்ளப்பட்டுள்ளன. காஸாவின் மத்தியில் உள்ளள Shifa Hospital-இற்கு காயப்பட்டவர்கள் காலதாமதமாகி கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நடந்த இந்த ஆக்ரோசமான சமரின் வெடிப்புச் சத்தங்கள் காஸாவின் மத்திய பகுதிவரை கேட்கும் அளவிற்கு துப்பாக்கிச் சமர் வெடித்திருந்தது.

khaibarthalam

முக்கியச்செய்திகள் :



காஸா மீதான சியோனிஸ ஆக்கிரமிப்புத் தாக்குதல் ஆரம்பித்து இதுவரை...!

425 பேர் ஷஹீதாஹியுள்ளனர்.
அதில் 112 குழந்தைகள், 40 பெண்கள், 25 முதியவர்கள் அடங்குவர்.

4000 பேர்வரை காயப்பட்டுள்ளனர்.

அதே வேளை குறைந்தது 15 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ...

போராளிகளின் கணிப்பின் படி 30 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

75 பேர்வரை காயப்பட்டுள்ளனர்.

ஷுஜாஇய்யாக் குடியிருப்பு மீது இஸ்ரேலிய படை மேற்கொண்ட காட்டுமிராண்டித் தாக்குதலில் 60 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

அது சர்வதேச கவனத்தை தற்போது காஸா மீது திருப்பியுள்ள நிலையில் அதற்கெதிராக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டபடி உள்ளன.

தொலைக்காட்சியில் தோன்றி இஸ்ரேல் சார்பாக பேசுபவர்களின் நிலையை கவனிக்கும் போது ஆற்றாமையும் தோல்வியை மறைக்கும் முனைப்பும் தெளிவாக தெரிகிறது.

இனிமேல் இந்த இழப்புகள் இறுதியாக இருக்கட்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஹமாஸ் உள்ளிட்ட போராளிகள் இராணுவ , அரசியல் மற்றும் ஊடக ரீதியாக எடுக்கும் நகர்வுகள் காஸாவின் வானில் இஸ்ரேலின் ஒளிக் குண்டுகளுக்கும் மேலால் நம்பிக்கை நட்சத்திரமாக கண்சிமிட்டுகின்றன

Source&Press -Fairoos
Abusheik Muhammed

தேங்கி நிற்கும் யூத இராணுவம்..... நெருங்கி வரும் பலஸ்தீன் போராளிகள்.....!!



10 தினங்கள் தொடரான வான் தாக்குதல்களையும், கடற்தாக்குதல்களையும் நடாத்திய இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் கடந்த வியாழன் அன்று தங்கள் தரை ஆக்கிரமிப்பை ஆரம்பித்தார்கள். காஸாவின் இஸ்ரேல் பக்கத்தில் அமைந்துள்ள எல்லைகளை கடக்க முற்பட்ட போது அவர்களை அதிர வைத்தவை சுரங்க பாதைகளின் வாயில்கள். படைகளிற்கு முன்னதாக வேவுத்தகவல்களை வழங்கும் இஸ்ரேலிய அணியே இவற்றை முதலில் கண்டது. எல்லை கண்காணிப்பு கோபுரங்களையும், கண்காணிப்பு கமாராக்களையும் ஏமாற்றிய நிலையில் பலஸ்தீன போராளிகள் சுரங்க வாயில்களை இஸ்ரேலிய எல்லைகளினுள் அமைத்திருந்தனர்.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களின் படி 13 சுரங்க வாயில்களை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இவை ரபாஃவின் சிவிலியன் பாவனைக்கான சுரங்க வாயில்கள் போலல்லாது இராணுவ பாவனைக்கு உசிதாமான விதத்தில் அமைவுற்றிருந்தன. இதன் பின்னரே போராளிகள் இஸ்ரேலிற்குள் நுழையும் மார்க்கம் பற்றிய அவர்களது ஊகங்கள் ஊர்ஜிதமானது.

காஸாவின் கடற்கரையோரத்தினை பலஸ்தீன போராளிகள் கடுமையான கண்காணிப்பிற்குள் உள்ளாக்கியுள்ளனர். பல தாக்குதல் குழுக்கள் இதற்கண்மையில் கவர் எடுத்து காத்துள்ளன. கடல் மார்க்கமாக சடுதியாக உள்நுழையந்து தனது சிறப்பு ப் படை கொமாண்டோக்களை கொண்டு தாக்கும் இஸ்ரேலின் தந்திரோபாயம் பயனற்ற நிலையில் எல்லை வாயில்கள் ஊடாக நுழைய வேண்டிய நிலை இஸ்ரேலிய படைகளிற்கு ஏற்பட்டுள்ளது.

“ஸ்டீல் வோல்” என பலஸ்தீனப் போராளிகளையும் குறிப்பாக தற்கொலை தாக்குதல் நடாத்துபவர்களையும் உள்நுழைய விடாமல் கட்டிய உருக்கு மதில் சுவர்கள் இப்போது இஸ்ரேலிய படைகளிற்கும் எதிரியாக போய் விட்டது. நினைத்த சாதகமான இலக்கில் தங்கள் டாங்கிகளை நகர்த்த முடியாமல் தடுத்து நிற்கின்றன இந்த ஸ்டீல் வோல்கள். காஸாவினுள் உள்நுழைய வேண்டும் என்றால் இப்போது அவர்களும் “எவகேசன் பொயின்ட்ஸ்” எனும் நுழை அல்லது வெளியேறும் வாயில்கள் ஊடாகவே நகர வேண்டியுள்ளதால் அந்த வாயில்களை இலக்கு வைத்து பலஸ்தீன போராளிகள் தயாராக காத்திருக்கின்றனர்.

சுமார் 01 கிலோ மீட்டர் தூரத்தில் இருதரப்பும் நெருங்கி நிற்பதனால் விமான தாக்குதல்களை கூட துல்லியமான ஏவுகணைத்தாக்குதல்கள் என்ற வட்டத்தில் மட்டும் மட்டுப்படுத்தும் நிலை இஸ்ரேலிய படைகளிற்கு ஏற்பட்டுள்ளது. விமான குண்டுத்தாக்குதல்களை நினைத்தவாறு வீச முடியாது. அது பல வேளைகளில் தங்கள் தரப்பிற்கே சேதங்களை ஏற்படுத்தி விடும்.

தற்காப்பு சண்டைகளை ஹமாஸ் நிகழ்த்துகையைில் அதனை எப்படி எதிர் கொள்வது என்று தயார்படுத்தப்பட்ட இஸ்ரேலிய படைகள் இப்போது புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளன. ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் போராளிகள் தற்காப்பு சமர்களை செய்யும் பாதுகாப்பு வியூகங்களை அமைத்துள்ள போதிலும் அவர்கள் பல முனைகளிலும் திடீரென உட்புகுந்து தாக்குதல்களை நடாத்துகின்றனர்.

சுமார் 15 - 20 பேர் கொண்ட தாக்குதல் அணிகள் என்பதனால் அவர்கள் மேல் பெரும் குண்டுத்தாக்குதல்களை நிகழ்த்த முடியாத அதே வேளை பலஸ்தீன போராளிகள் பாம்பு போல வளைந்து கிடக்கும் டாங்கி மற்றும் கவச வாகன அணிகளை இலக்கு வைத்து ரொக்கெட் லோஞ்சர்கள் மூலமும், அன்டி டேங் லோஞ்சர்கள் மூலமும் 05 நிமிட தாக்குதல்களை நிகழ்த்து விட்டு தளம் திரும்பி விடுகின்றனர். எதிரியின் நகர்வை, தாக்குதல் நடாத்தும் இடத்தை இனங்கண்டு பதில் தாக்குதல் நடாத்துவதற்கு முன்பே இவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகின்றனர். காரணம் சிறு குழுவாகவே அவர்கள் தங்களது அசைவுகளை மேற்கொள்வதாகும்.

ஆட்டிலறிகளினால் தாக்குதல் நிகழ்த்த முடியாத அளவு களத்தில் நெருங்கி நிற்கிறார்கள் இரு தரப்பும். மோட்டார்களை கொண்டு மட்டும் எதிர்தரப்பு நோக்கி குண்டுகளை ஏவலாம். இஸ்ரேலிற்கு முடியுமான இந்த தாக்குதலை பலஸ்தீனப் போராளிகளினாலும் செய்ய முடியும

எர்பன் வோரை ஆரம்பித்தால் நகரின் கட்டங்களினுள் சண்டைகள் ஆரம்பமாகும். வான் தாக்குதலின் துணையை இழந்த நிலையில் சண்டைகளை ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு நேர்ந்தால் யூதப்படைகளின் உட்புகும் பாதைகளை பலஸ்தீன போராளிகள் துண்டாடி கட்அவுட் போட்டு விடுவார்கள். இதன் பின்பு இலகுவாக யூதப்படைகளை அழித்து விடுவார்கள். அது மட்டுமல்லாது காஸாவில் உள் நுழைந்து வெளியேறுவது என்றால் அது டாங்கிகளின் வழித்துணையுடன் மட்டுமே முடியும். டாங்கிகளை நகர்த்த முன்னர் ஏரியா கிளியரிங் செய்வதும், எனிமி அம்புஸ்ஸை நியூற்றலைஸ் பண்ணியாக வேண்டும். இப்போது இஸ்ரேலிய படைகள் இதைத்தான் செய்ய எத்தனிக்கின்றன.

Jul 20, 2014

ஹமாஸின் தலைவர் (அரசியல்) “Khaled Mashal” உலக முஸ்லிம்களை நோக்கி விடுத்த அழைப்பு...!



“ஹமாஸ்” காஸாவின் நிலங்களை மட்டுமல்ல, அந்த நிலங்களில் வாழும் மக்களின் ஆன்மாக்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இயக்கம். அதன் அரசியல் தலைவர் Khaled Mashal. 2004-ல் இஸ்ரேலினால் கொல்லப்பட்ட சகோதரர் அப்துல் அசீஸ் ரன்தீஸி அவர்களின் இழப்பிற்கு பிறகு ஹமாஸின் அரசியல் தலைவராக இருந்து வருபவர். இஸ்ரேலின் சின்-பெட் பல முறை இவரை படுகொலை செய்ய முயன்றும் இறைவன் அருளால் இன்றும் அதன் தலைமமையை கொண்டு செல்பவர்.

உலக முஸ்லிம் உம்மாவிற்கு அதன் இணையத்தளம் ஊடாக ஹமாஸ் சார்பாக அவர் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார்.

“ஓஹ்..... எமது உலக முஸ்லிம் சகோதர்களே..!! எங்களிற்கு இங்க என்ன நடக்கிறது என்பதனை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எமது மண்ணை யூத இராணுவம் மீண்டும் ஒரு முறை விழுங்க முற்பட்டுள்ளது. அவர்களிற்கு எதிரான எமது போராட்டம் இதுவரை நடந்ததையும் விட எழுச்சியுடனும் பல அர்ப்பணங்களிற்கு மத்தியிலும் இடம்பெற்று வருகிறது. யஹுதிகள் இப்போது ஒரு புதிய எதிரியுடன் மோதுகிறார்கள். ஆம் நாம் அவர்களிற்கு எதிராக பல எதிர்பாராத தாக்குதல் முறைகளையும் சண்டைகளையும் ஆரம்பித்துள்ளோம். இதனை நான் பெருமையுடனும் சந்தோசத்துடனும் இந்த புனிித ரமாழானில் உங்களிற்கு சொல்லிக்கொள்கிறேன்”.

“உலகம் முழுதும் முஜாஹித்கள் போராடுகிறார்கள். அதற்காக தங்கள் உயிர்களை இறைவனின் பாதையில் இழக்கிறார்கள். அது போன்றே காஸாவிலும் புனித யுத்தம் நடக்கிறது. நீங்கள் இந்த சண்டைகளில் பங்கேற்க அவாவுற்றிருப்பீர்கள். உங்கள் உளமார்ந்த இந்த எண்ணத்தை ஹமாஸின் சார்பில் பாரட்டுகிறேன். ஆனால் எமக்கு உங்கள் ஆட்பலம் தேவையில்லை. தாராளமாக எமது போராளிகள் அதற்காக திரண்டுள்ளார்கள். எமக்கு ஆயுதங்களும் தேவையில்லை. யஹுதிகளை எதிர்கொள்ளும் மனப்பலம் எம்மிடம் உண்டு. அதுவே எமது பிரதான ஆயுதம். ஆயுத தளவாடங்கள் எம்மிடம் கையிறுப்பில் உள்ளன. அவற்றை காஸாவிற்கு கொண்டு வந்து சேர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.”

“ஓ... எம் அன்பின் முஸ்லிம் சகோதரர்களே..!! எமக்கு மருந்துகள் தேவை. காயப்படும் எமது சகோதரிகளையும், சகோதரர்களையும் காப்பாற்ற அவை தேவைப்படுகின்றன. மேலும் வைத்தியர்கள் தேவை. யஹுதிகள் வீசும் குண்டுகள் அபாயகரமானவை. அவை எமது உடன் பிறப்புக்களை படுகாயப்படுத்துகின்றன. எமது குழந்தைகளிற்கு பால்மா தேவை. இந்த ரமழானில் நீங்கள் இவற்றை எமக்கு வந்து சேர்வதற்கு உரிய நடவடிக்கைகளை மட்டும் எடுங்கள். மற்றவற்றை எமது எல்-கஸ்ஸாம் பார்த்துக்கொள்ளும்.”

“ஹமாஸ் உங்களிடம் இறைஞ்சி வேண்டுகிறது. புனித ரமழானில் நீங்கள் யஹுதிகளின் அழிவிற்காக துஆ செய்யுங்கள். எமது நிலங்களை நாங்கள் மீட்க துஆ செய்யுங்கள். எமது சகோதரிகளினதும், குழந்தைகளினதும் அநியாயமான இரத்தம் வீணாகாமல் இருக்க துஆ செய்யுங்கள். யாரெல்லாம் ஸியோனிஸ்ட்களால் கொல்லப்பட்டார்களோ அவர்களிற்கு பிர்தவ்ஸ் எனும் ஜன்னத் கிடைக்க துஆ செய்யுங்கள். எமது ஆன்மீக தலைவரும் ஹமாஸின் தந்தையுமான சேய்ஹ் அஹ்மத் யாஸீன் (ரஹ்) அவர்கள் எம்மை எல்லாக் கருமங்களிலும் துஆவை கொண்டு ஆரம்பித்து துஆவை கொண்டு முடிக்கும் படி அடிக்கடி பணிப்பார்கள். அவர்கள் காட்டிய பாதையில் தான் நாம் பயணிக்கின்றோம். ஒ... முஸ்லிம் உம்மாவே உங்கள் துஆக்களை விட பெரிய ஆயுதம் கஸ்ஸாமிடம் இல்லை. அவற்றை நீங்கள் எங்களிற்காக வழங்குங்கள். ஆமீன். யஹுதியின் அழிவு இதில் இருந்தே ஆரம்பிக்கும் ......”.

“Battle Rats” - வியட்நாமிய களங்களை ருசிக்கும் யூத இராணுவ படையணிகள் !!



by:Abu Maslama

“ எதிரி பெரும் படையாக திரண்டு வரும் போது நீ உன்னை சிறு சிறு குழுக்களாக மாற்றிக்கொள். எதிரி உன்னை இலக்கு வைத்து தாக்குதலிற்கு ஆயத்தமாகும் போது உன் ஒவ்வொரு குழுக்களும் தனித்தனியாக எதிரியை இலக்கு வைத்து தாக்குதலிற்கு தயாராக வேண்டும் ” - ஜெனரல் சன்-சூ (Art of War).

இஸ்ரேலின் தரை வழியான படை நகர்வில் இந்த யுத்தத் தத்துவத்தை ஹமாஸ் பின்பற்ற ஆரம்பித்துள்ளது. இதற்கு பல இடங்களிலும் நடந்த சண்டைகள் சாட்சியம் பகர்கின்றன. அமெரிக்காவிற்கு வட வியட்டநாம் எப்படி மரணப் புதைகுழியாக மாறியதோ அது போன்றே இஸ்ரேலிய படைகளிற்கு காஸாவும் இரத்தத்தினால் குழைந்த சதுப்பு நிலங்களாக காத்திருக்கின்றன. ஒரு தேசத்தின் பெரும் படையை, அதி நவீன ஆயுத வல்லமையை கொண்ட இராணுவத்தை எதிர்த்து சுற்றி வளைக்கப்பட்ட ஒரு குறும் நிலப்பரப்பில் சண்டையிடுதல் என்பதும் தமது இருப்பை தக்க வைத்தல் என்பதும் இராணுவ ரீதியில் சாத்தியமானதா?, என்பது ஒரு சாமானியனிற்கும் எழும் சாதாரண கேள்விகள். இந்த கேள்விகள் இஸ்ஸத்தீன் அல்-கஸ்ஸாம் படையணிகளிற்கு தெரியாததும் புரியாததும் அல்ல.

எப்படி காஸாவை கூறு போடும் விடயத்திலும் அங்குள்ள ஹமாஸையும், இஸ்லாமிக் ஜிஹாத்தையும் அழித்தொழிக்கும் விடயத்தில் யூத அரசிடம் ஒரு திட்டம் உள்ளதோ அது போலவே காஸாவில் களமிறங்கியுள்ள பலஸ்தீன போராளிகளிடமும் ஒரு திட்டம் உள்ளது. வருங்கால சண்டைகள் இதனை உண்மைப்படுத்தலாம். முள்ளிவாய்க்காலில் புலிகள் மக்களை மனிதக் கேடயமாக வைத்து அழிந்து போன வரலாற்று உதாரணங்களை வைத்து ஹமாஸின் கதியும் அதுதான் என பல தமிழ் ஊடகங்கள் ஆருடங் கூறுகின்றன. அப்படித்தான் நடக்கும் என்றால் இஸ்ரேலிய அரசு இலங்கையின் நட்சத்திர தளபதிகள் பொன்சேகா, சவீந்திர சில்வா, ரவிப்பிரியா என பலரிடம் என்ன செய்வது எப்படி செய்வது என்று ஆலோசனை கேட்டிருக்கும்.

அப்படி ஒரு களச்சூழலை காஸாவில் உருவாக்க முடியாது என்பது இஸ்ரேலிய இராணுவத்திற்கு நன்கு தெரியும், அது போலவே ஹமாஸிற்கும் அது தெரியும். இங்கே இஸ்ரேலிற்கு தேவை ஹமாஸை ஒன்று மொத்தமாக அழிப்பது அல்ல. அப்படி அழிப்பதாக இருந்தால் ஒட்டுமொத்த காஸா மக்களையும் கொல்ல வேண்டும். ஒரு ஹமாஸின் போராளி மண்ணில் சாயும் போது 09 காஸாவின் இளைஞர்கள் அவன் கையிலிருந்து வீழ்ந்த துப்பாக்கியை மீண்டும் யூதர்களிற்கு எதிராக உயர்த்த போட்டி போடுகிறார்கள். ஹமாஸில் இருந்து காஸாவையோ காஸாவில் இருந்து ஹமாஸையோ ஒரு போதும் பிரிக்க முடியாது என்பேதே உண்மை. இஸ்ரேல் மேற்கொண்ட இன்றைய தாக்குதல்கள் மேலும் மேலும் ஹமாஸுடன் மக்களை இறுக மானசீகமாகவும் பொளதீகமாகவும் பிணைத்து வருகிறதே அன்றி வேறில்லை.

நேற்றைய ஹமாஸின் தாக்குதல் சம்பவம் ஒன்றை பார்ப்போம்......
தெற்கு காஸாவின் எல்லையில் Sufa-வை நோக்கி ஒரு சுரங்க வாயிலின் ஊடாக டனலை அமைத்திருந்தார்கள் அல்-கஸ்ஸாம் போராளிகள். அதன் ஊடாக சென்று இஸ்ரேலிய வேவுப்படையினரின் கண்களில் படும்படியாக சில நடமாட்டங்களையும் செய்திருந்தார்கள். உடனடியாகவே இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் அவர்களை நோக்கி கடும் தாக்குதலை ஆரம்பித்தது. போராளிகள் வேகமாக பின்வாங்கி சுரங்கம் ஊடாக காஸாவிற்குள் நுழைந்தார்கள். இவர்களை பின் தொடர்ந்து இரண்டு பிளட்டூன் IDF படையினர் சுரங்கத்தினுள் நுழைந்து தாக்கியவாறு காஸாவின் எல்லை வரை சென்றனர்.

தங்கள் போராளிகள் அனைவரும் தளம் திரும்பியதை உறுதி செய்த அல்-கஸ்ஸாம் விசேட தாக்குதல் அணியினர் ஏற்கனவே சுரங்கத்தினுள் பொருத்தி உருமறைப்பு செய்து வைத்திருந்த சைட் சார்ஜர்களை (கிளைமோர்) வெடிக்க வைத்தனர். அந்த சுரங்கம் தோண்டப்பட்ட விதமே குண்டுகள் வெடித்தால் அப்படியே சரியும் வண்ணம். நிலைமை தலைகீழானது. Sufa-வின் அருகே 03 ஹெலிகொப்டர்களில் அந்த டனலினுள் நுழைந்த இஸ்ரேலிய படையினரை ஸ்ட்ரெச்சர்களில் தூக்கிச் சென்றது இஸ்ரேலிய மீட்பு இராணுவம்.

எவ்வளவு இழப்புக்கள் யூத ஆக்கிரமிப்பு படையினரிற்கு நிகழ்ந்தது என்பது பற்றிய எந்த விபரத்தையும் இஸ்ரேலிய அரசு வெளியிடவில்லை. அவர்கள் அதனை வெளியிடவும் போவதில்லை. இது அவர்களது படையினரதும், சட்டவிரோத குடியேற்றக்காரர்களினதும் மனோ நிலையை, போர் வலுவை பாதிக்கும் என்பது அவர்களிற்கு தெரியும். அது போலவே ஹமாஸிற்கும் இழப்புக்களின் ரோஸ்டர் என்ன என்பதை அனுமானிக்க முடியாத நிலை.

இப்போது காஸாவின் சுரங்கங்களும் வெடிக்கின்றன. எலிகளை வேட்டையாடுவது போல பாய்ந்து சென்ற யூத இராணுவத்திற்கு இப்போது புரிந்திருக்கும் அவர்கள் எலிகள் அல்ல “பேட்டில் ரேட்ஸ்” என்று

இஸ்ரேலின் தரைநகர்வுகள் பற்றிய யூதக்குறிப்புகள் !!

 

 By:Abu Sayyaf

“ஓர் இராணுவ கொமாண்டரிற்கு தாக்குதலை ஆரம்பியுங்கள் என கட்டளை இடுவது இலகுவானது. ஆனால் அந்த தாக்குதலை ஆரம்பித்து முன்னகரும் சிப்பாய்க்கு மட்டுமே தெரியும் அது எவ்வளவு சிரமமானது என்று” . இஸ்ரேலிய படையினர் (I.D.F.) காஸா மீதான தரை சண்டைகளை இப்போது ஆரம்பித்துள்ளனர். காஸாவினுள் ஊடுருவி தாக்குதல்களை மேற்கொள்ளும் அவர்களிற்கு இரண்டு பணிகள் முன்னெழுந்து நிற்கின்றன. பலஸ்தீன போராளிகளை எதிர்கொண்டு அவர்களை அழித்தொழிப்பது அல்லது பின்வாங்க வைப்பது. காஸாவில் இருந்து இஸ்ரேலிய எல்லைகள் ஊடாக தோண்டப்பட்டுள்ள “டனல்ஸ்” எனும் சுரங்கப்பாதைகளை கண்டறிந்து அவற்றை அழித்து நிர்மூலமாக்குவது.

பெஞ்சமின் நெதன்யாகூ 2005-ல் இஸ்ரேலினால் திட்டமிடப்பட்ட காஸாவின் கரையோரங்களையும், வடக்கு காஸாவையும் முழுமையாக கைப்பற்றும் திட்டத்தின் அடிப்படையிலேயே மீண்டும் 2014-ல் ரமழான் மாதத்தை இலக்காக கொண்டு தனது தாக்குதல்களை ஆரம்பிக்குமாறு இஸ்ரேலிய வான்படைக்கு உத்தரவிட்டார். தொடரான வான் தாக்குதல்கள் ஊடாக காஸாவின் மாமூல் நிலையை சீர்குலைத்த பின்னர் தரை தாக்குதலை ஆரம்பித்து காஸாவை விழுங்குவது அவரது திட்டம். எல்லாமே அவர் திட்டப்படி நடந்தது. அவரது பாதுகாப்பு அமைச்சு வழங்கிய வோர் அஸஸ்மன்ட் ரிப்போர்ட் படி எதிர்பார்த்த ரொக்கெட் தாக்குதல்களை விடவும் பல மடங்கு அதிகரித்த ரொக்கெட் தாக்குதல்கள் அவரை யுத்தம் தொடர்பான மீளாய்விற்கு இட்டுச் சென்றது.

யுத்தம் ஆரம்பிக்க முன்னர் கூட்டப்பட்ட உயர் அமைச்சரவை கூட்டம் யுத்தம் ஆரம்பித்து ஒரு வாரகாலத்தினுள் மீண்டும் கூட்டப்பட வேண்டிய சந்தர்ப்பம் எழுந்தது இஸ்ரேலிற்கு. காஸாவிற்குள் இருந்து வந்து விழும் ரொக்கெட்களை தடுத்து விடலாம், அவற்றின் இலக்குகளும் அவ்வளது துல்லியம் இல்லை. ஆனால் சுரங்கப்பாதைகள் ஊடாக இஸ்ரேலிய எல்லைகளில் நுழைந்து ஏவப்படும் ரொக்கெட்களை அவர்களால் தடுக்க முடியாமல் போனது. கூடவே அவை இலக்கை சரியாக சென்றடைந்து தாக்கும் திறனையும் தடுக்க முடியாமல் போனது. பலஸ்தீனர்கள் உபயோகம் செய்யும் சுரங்கப்பாதைகள் ரஃபாவில் தான் இருக்கிறது என நினைத்த இஸ்ரேலிற்கு அது தங்கள் எல்லை வரை நீளும் எதிர்பார்க்கவில்லை.

1600 இற்கும் அதிகமான ரொக்கெட்கள் இஸ்ரேல் முழுதும் மழை போல பொழிந்தமை இஸ்ரேலை யுத்தம் தொடர்பான தந்திரோபாய மாற்றங்களை நோக்கி தள்ளியுள்ளது. பலஸ்தீன போராளிகளை பொருத்த அளவில் அவர்களின் இலக்கு எதிரியை உள்வாங்கி தாக்கியழிப்பது, முடிந்தால் அவர்களை உயிருடன் பிடிப்பது. யூத ஊடகங்கள் இதுவரை Beit Lahia மற்றும் Beit Hanoun போன்றவற்றின் எல்லைகளில் 13 சுரங்கப்பாதைகளை தாம் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளன.

கடல் வான் தரை என மூன்று நிலைகளில் இருந்தும் குண்டுத்தாக்குதல்களை சமகாலத்தில் நிகழ்த்திய பின்னர் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் காஸாவினுள் மெல்ல கவனமாக நுழைந்துள்ளனர். இந்த நகர்வில் இதுவரை இஸ்ரேல் 01 டேங்கையும், 03 துருப்பு காவி வாகனங்களையும், 01 தாக்குதல் கவச வாகனத்தையும் இழந்துள்ளது. பலஸ்தீன போராளிகள் தங்கள் சொந்த திட்டமிடல்களின் படி எதிரியை உள்வாங்கி தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர்.

தரையுத்தம் என்றால் இரு தரப்பினரும் நேரடியாகவே மோதிக்கொள்வர். காஸாவின் நுழைவாயில்கள் ஊடாக முன்னேற முயலும் இஸ்ரேலிய இராணுவம் சில மணித்தியாலங்கள் கடும் மோதல் பின்னர் எதுவும் இல்லாத நிலை. மீண்டும் மோதல் என பலஸ்தீன போராளிகள் விட்டு விட்டு அடிக்கும் சண்டைகளினால் தங்கள் வேகமான முன்னேற்றங்களை தவிர்த்து வருகின்றனர். அவர்களது முதன்நிலை இலக்காக சுரங்கப்பாதைகளை கைப்பற்றுவதே உள்ளது.

இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் “பாதுகாப்பு படையினரிற்கு எதையும் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் காஸா முழுவதையும் தம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள்” எனக் கூறியுள்ள அதே வேளை இஸ்ரேலிய முன்னால் இராணுவ ஜெனரல்கள் இந்த யுத்தத்தை பிரதமர் நினைப்பது போல முடிக்க முடியாது என அறிவித்துள்ளனர்.

காஸாவில் இஸ்ரேலிய படையணியினர் “கெரில்லா யுத்தத்தை” எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பலஸ்தீன போராளிகள் அதற்காகவே காத்திருக்கின்றனர். அவர்கள் ஒரு எர்பன் வோன் எனும் நகர்புற சண்டைகளை நிகழ்த்த தயாராகி விட்டனர். அதனை அவர்கள் தங்கள் அகதி முகாம்கள் வரை நகர்த்தி செல்லவுள்ளனர். இந்த சண்டைகளில் எதிரிகள் நேரடியாக சண்டையிடத போது எமது பலமிக்க டாங்கிகளால் ஒன்றும் செய்ய இயலாது. மேலும் அவர்கள் எமது டாங்கிகளை அழிப்பதனை முதல் இலக்காக கொண்டு தங்கள் தாக்குதல்களை வடிவமைத்துள்ளதை உணர முடிகின்றது” என தெரிவித்துள்ளனர்.

Brigadier-General Yousef al-Sharqawi இது பற்றி கூறுகையில் “இஸ்ரேலிய அரசு எதிர்பார்க்கும் 365 சதுர கிலோ மீட்டர் பரப்பை கைப்பற்றுவது என்பது இரண்டு மில்லியன் மக்களுடன் சம்மந்தம் உடையது. இதில் எல்லோருமே ஹமாஸ் அங்கத்தவர்களாக அல்லது ஆதரவாளர்களக இருக்கும் போது இதனை இஸ்ரேலிய அரசினால் செய்து முடிக்க முடியாது. தவறான இலக்கை மீண்டும் தவறான வழியில் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முட்டாள்த்தனமாக செயற்பாடுகளில் நெதன்யாகூ இறங்கியுள்ளார்” எனச்சாடியுள்ளார்.

ஜுவிஸ் டிபென்ஸ் ஸ்டடீஸ் எனும் அமைப்பு காஸா தரைச்சமர் பற்றி வெளியிட்டுள்ள அறிவிப்வில் “கடந்த காலங்கள் போலல்லாது ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் என்பன நாம் எதிர்பார்க்காத புதிய யுக்திகள் , ஆயுதங்கள் என்பனவற்றை இந்தச் சண்டைகளில் அறிமுகம் செய்துள்ள நிலையில், தரைச் சண்டைகளில் அதன் யுக்திகள் என்ன, ஆயுதங்கள் என்ன என்பது எமக்கு தெரியாது. இது எமது படையினரை வலிதாக காவு கொடுக்கும் ஒரு முயற்ச்சியாகவே கணிக்க கூடியதாக உள்ளது எனவும் இதன் வலி இஸ்ரேலை பலவீனப்படுத்துமேயல்லாது பலப்படுத்தாது” எனவும் தெரிவித்துள்ளது. “கட்டிடங்களை தரைமட்டமாக்குவதும், உயிர்களை கொல்வதும், சிறுவர்களை கைது செய்வதும் தான் யுத்தம் என நினைக்கின்றார் நெதன்யாகூ. ஆனால் இதன் பின்விளைவுகளும் இழப்புக்களும் இஸ்ரேலிற்கு கடுமையாக இருக்கும்” எனவும் தெரிவித்துள்ளது.

Jul 18, 2014

“ஹமாஸ்” ஈரானிய அஜண்டாவில் கட்டுண்டுள்ளதா?



by: Abu Khadeejah

நம்மில் பலரிற்கு ஒரு குழப்பம் உண்டு. பலஸ்தீனத்தில் போராடும் இஸ்லாமிய குழுக்களின் பெயர்கள் தொடர்பில் அவை எழுகின்றன. அல்-கஸ்ஸாம் படையணி, இஸ்லாமிக் ஜிஹாத், ஜுன்த்-அல்லாஹ், அல்-அக்ஸா பிரிக்கேட், அல்-குத்ஸ் பிரிகேட் இவையெல்லாம் ஹமாஸினுடையதா அல்லத தனியானவையா அவை என்பதே அந்தக் குழப்பம். இது பற்றிய சில புரிதல்களை இந்த பதிவின் ஊடாக ஆரம்பிப்போம். ஹமாஸ் எனும் இயக்கம் தன்னை மூன்று பிரிவுகளாக வகுத்துள்ளது. அதன் அரசியல் பிரிவை நாம் யாவரும் அறிவோம். அது போலவே அதன் இராணுவ பிரிவில் (இஸ்ஸத்தீன் அல்-கஸ்ஸாம்) சில தளபதிகளையும் நாம் அறிந்திருக்கலாம். அவர்களது உளவு மற்றும் வேவுத்தாக்குதல் பிரிவை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இஸ்ரேலின் மொஸாட்டும், ஸின்-பெட்டும் கூட தலையை பிய்க்கும் விடயம் இது. சொல்லப்போனால் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர்கள் பலரிற்கு கூட அதன் உளவுப்பிரிவு பற்றி துல்லியமாக எதுவுமே தெரியாது. இங்கு நாம் ஹமாஸின் கட்டமைப்பு பற்றி பேசவில்லை. மாறாக அவர்களது செயற்தளங்கள் பற்றியே பேச விளைகின்றோம்.

ஹமாஸ் காஸாவின் விடுதலைக்காக போராடும் இரண்டு இன்திபாதாக்களை செய்த மக்கள் இயக்கம். ஸியோனிஸ்ட்களின் அட்டூழியங்களை எதிர்க்கும் அதற்கு பதிலடி கொடுக்கும் உறுதி மிக்க அமைப்பு. அதே நேரம் தனது ஆளுகைக்குள் வேறு அமைப்புக்கள் செயற்படுவதை அது விரும்புவதில்லை. (வட இலங்கையில் விடுதலைப்புலிகளைப் போல). மாற்று அமைப்பு தலைவர்களை அதன் தளபதிகளை ஹமாஸ் கொலை செய்த வரலாறுகள் உண்டு. அதன் அறுவடையை இப்போது அவர்கள் அனுபவிக்கிறார்கள் என்பது வேறு விடயம். ஹமாஸின் கறுப்பு பக்கங்கள் பற்றி பேசுவது அல்ல இந்த பதிவின் நோக்கம்.

ஹமாஸ் தனது இராணுவ செயற்பாட்டிற்கு பெரிதும் ஹிஸ்புல்லாக்களை சார்ந்து நிற்க வேண்டிய தேவைகள் உள்ளன. இதற்கு பூகோள எல்லைகள் முதற்காரணியாக இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை ஹிஸ்புல்லாஹ்வும் நன்றாகவே பயன்படுத்தி வருகிறது. ஈரானிய அரசியல் பூகோள நலன்களிற்கான நகர்வுகளின் அடிப்படையிலேயே இவர்களது உதவி காஸாவிற்கு கிடைக்கிறது. இன்று நடக்கும் சண்டைகள் வரை ஹிஸ்புல்லாஹ் போராளிகளினால் வழங்கப்பம் ஆயுதங்கள், இராணுவ தொழில்நுட்ப அறிவுகள், சில நேரங்களில் தோழமை சூட்டாதரவு என அது ஹிஸ்புல்லாஹ்வின் கட்டுக்குள் இறுகியுள்ளது. காஸாவின் விடுதலைக்காக ஐ.எஸ். எனும் இஸ்லாமிய கிலாபாவின் படைகளை அழைக்க முடியாத அரசியல் நிர்ப்பந்தங்கள் நிறைந்த நிலையில் அது செயற்படும் கட்டாய நிலை உள்ளது. இதனால் ஹமாஸை ஸலபி சிந்தனைசார் அமைப்புக்கள் இதுவும் SHIA-க்களின் அமைப்பு என இலகுவாக சுட்ட வகைசெய்து விடுகிறது.

மேற்கு கரையிலும் காஸாவிலும் சமகால செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த ஹமாஸிற்கு ஒரு கட்டத்தில் மேற்குக்கரையை முற்றியும் இழக்கும் நிலை உருவாகியது. பல ஹமாஸின் தோழர்கள் அல்-பதாஃவினரால் கொலை செய்யப்பட்டனர். தடுத்து வைக்கப்பட்டனர். காஸாவை தங்கள் தளமாக மாற்றிக்கொண்ட ஹமாஸ் தன்னை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியமைத்ததில் வெற்றி கண்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல் திறன், ஆட்பலம் போன்ற பல இராணுவக்காரணிகளினால் இப்போது ஹமாஸிற்கு தனியாக போராட முடியாத நிலை உருவாகியுள்ளது. அதனால் ஏனைய போராட்டக்குழுக்களிற்கான வாயிலை ஆது சில வருடங்களாகவே திறந்து விட்டுள்ளது. இதனை நன்கு பயன்படுத்திக்கொண்ட ஏனைய போராளிக்குழுக்கள் இப்போது காஸாவின் சில பகுதிகளை தம் வசப்படுத்தி யூத அரசிற்கு எதிரான தாக்குதல்களை முன்னேடுத்து வருகின்றன.

இந்த புறநிலை களங்களிலேயே நாம் காஸாவின் இஸ்ரேலிற்கு எதிரான போராட்டத்தை நோக்குவது சரியாக அமையும். பல ஏனைய குழுக்களின் தாக்குதல்களைக் கூட ஹமாஸ் அவர்கள் செய்தது என செய்தி வெளியிடுவதில்லை. அவையும் தனது போராளிகளினால் செய்யப்பட்டது போன்ற மாயையை மெல்ல அனுமதிக்கிறது ஹமாஸ்.

ஹனபி, சாபி போன்ற பல மத்ஹப்புகள் சார்ந்த போராளிகளையும், இஃஹ்வானிய கொள்கைகளை சுமந்த போராளிகளையும் ஹமாஸ் தன்னகத்தே கொண்டுள்ளது. இஸ்லாமிய ஆட்சி, இஸ்லமிய எமிரேட்ஸ், இஸ்லாமிய கிலாபா என்றெல்லாம் ஹமாஸ் பேசியதே கிடையாது. பலஸ்தீன மண்ணின் விடுதலைக்கான, ஸியோனியஸ சக்திகளின் தாக்குதல்களிற்கு எதிரான ஒரு போராட்டக் குழுவாகவே அது தன்னை வெளிப்படுத்தி வருகிறது. மார்க்கம் சார்ந்த கொள்கைகள், பொருளாதாரம் சார்ந்த கொள்கைகள் என்றேல்லாம் ஹமாஸ் தன்னை தனித்துவமாக அடையாளப்படுத்தியதில்லை.

பலஸ்தீன் மீதான யூத குடியேற்றங்களை தடுப்பதுடன் அது தன்னை மட்டுப்படுத்திக்கொள்ள முனைகிறது. அல்-அக்ஸா (அல்-குத்ஸ்) மீட்பு போராட்டம் என்பதனை தனது கொள்கைரீதியான திட்டமாக கொண்டுள்ள போதிலும் அதற்கான வலிதான இராணுவ செயற்பாடுகள் பற்றி அது எந்த முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ளவில்லை. மண்ணின் விடுதலைக்கான மக்கள் இயக்கமாக அது தன்னை அடையாளப்படுத்தியதில் கணிசமான வெற்றியைக்கண்டுள்ளது. இதன் சர்வதேச உறவுகள் குறித்த கொள்கைகளும் ஒரு பக்கம் சாராத அதன் நலன்களிற்கு ஏற்ப மாறக்கூடிய செயற்திட்டத்தையும் அரசியல் நிகழ்ச்சி நிரலையும் கொண்டுள்ளது.

ஹமாஸ் பற்றிய பிரமாண்டமான மித்க்கள், மாயைகள், கனவுகள் என்பன தவறான அடித்தளங்களாகும். இஸ்லாமிய மார்க்க சட்ட வரையறைகளினுள் போராடும் ஒரு தேசிய அல்லது மண் விடுதலைக்கான இயக்கம் எனும் எல்லைகளிற்குள் அதனை பார்ப்பதே சிறந்தது. இதன் ஊடாக ஹமாஸினால் மட்டும் தான் காஸாவையும் பிலஸ்தீனையும் மீட்கவும் காப்பாற்றவும் முடியும் எனும் தவறான கற்பிதங்களை அகற்றிவிட முடியும்.

இன்சாஅல்லாஹ் எதிர்வரும் நாட்களில் ஏனைய அமைப்புக்களின் சித்தாந்த செயற்பாடுகள் பற்றிப்பார்ப்போம். ....

காஸா மீதான இஸ்ரேலிய போர் குற்றங்கள்...!

 

காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல் அதன் இரண்டாவது வாரத்தில் நுழைந்திருக்கையில், அந்த அட்டூழியங்கள் மீது மேலும் மேலும் ஆதாரங்கள் வெளி வந்து கொண்டிருப்பது, உலகெங்கிலும் சீற்றத்தின் பரந்தளவிலான வெளிப்பாடுகளை உருவாக்கி வருகிறது.

ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்காவின் பல போராட்டங்கள்,ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும் கூட, காசாவிற்கு எதிரான ஒருதலைபட்சமான "யுத்தத்தின்" குற்றகரமான குணாம்சத்தை மக்கள் அதிகளவில் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கின்றன.

ஜூலை 7இல் காசா மீது இடைவிடாத விமான தாக்குதல்கள் தொடங்கியதில் இருந்து, காசா பகுதியின் மீது இஸ்ரேல் 1,300க்கும் மேற்பட்ட குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளது, அதாவது ஒரு நாளின்24 மணி நேரத்தில் சராசரியாக ஒவ்வொரு ஒன்பது நிமிடத்திற்கும் ஒரு பாரிய குண்டு வெடிப்பாகும்.

எகிப்திய ஆட்சியால் முன்வைக்கப்பட்ட ஒரு போர்நிறுத்த பரிந்துரையைப் பரிசீலிக்க செவ்வாயன்று காலை இஸ்ரேலின் பாதுகாப்பு குழு ஒன்றுகூட இருப்பதாக செய்திகள் வெளியானதற்கு இடையே, இந்த தாக்குதல் சிறிதும் குறைக்கப்படவில்லை என்பதோடு, இஸ்ரேலிய துருப்புகளும் டாங்கிகளும் சாத்தியமான ஒரு தரைவழி படையெடுப்புக்காக காசா எல்லையோரங்களில் நிறுத்தப்பட்டு இருந்தன.

ஹமாஸ் மற்றும் இதர பாலஸ்தீன குழுக்களும் 900க்கும் அதிகமான ராக்கெட்டுக்களை வீசியுள்ளன, ஆனால் ஏற்பட்ட சேதங்களைப் பொறுத்த வரையில் ஒப்பிடுவதற்கு அங்கே ஒன்றும் இருக்கவில்லை. அந்த ராக்கெட்டுக்கள் மிக பழமையாகவும் மற்றும் இலக்கின்றியும் செலுத்தப்பட்டு இருந்ததோடு, பெரும்பாலும் திறந்தவெளியையே தாக்கி இருந்தன; அதில் இஸ்ரேலியர் ஒருவர் கூட கொல்லப்படவில்லை. பூமியில் அதிக மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகளில் ஒன்றான, அதாவது ஒவ்வொரு சதுர மைலுக்கும் 10,000கும் மேல் மக்கள் வாழும் காசாவில் விழுந்த இஸ்ரேலின் ஒவ்வொரு குண்டும், ஏவுகணையும் ஏதாவதொரு மனித வசிப்பிடங்களைக் குறி வைத்திருக்கிறது.

திங்களன்று இக்கட்டுரை எழுதப்படுகையில் காசாவில் பாலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை 185க்கும் மேலாக இருந்தது. இந்த பரந்த பெரும்பான்மையினர் எந்தவொரு பாலஸ்தீன ஆயுதமேந்திய குழுக்களின் போராளிகள் அல்ல, அப்பாவி பொதுமக்கள் ஆவார்கள், மேலும் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாக குறைந்தபட்சம் 50 குழந்தைகளும் இதில் உள்ளடங்குவார்கள். குறைந்தபட்சம் 1,200க்கும் மேலான காசாவாசிகள் காயமடைந்துள்ளனர்.

சமீபத்திய காசா தாக்குதல் தொடங்கியதற்குப் பின்னர், இஸ்ரேல் இராணுவமும் அதன் முதல் பலியாக மேற்கு கரையில் ஒருவர் கொல்லப்பட்டதை அறிவித்திருந்தது. மேற்கு கரையின் தெற்கு பகுதியில் உள்ள சாமுவா கிராமத்தில் 21 வயதான முனிர் அஹ்மத் ஹாம்டான் அல்-பதாரின் என்ற ஒரு பாலஸ்தீனியர், சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.காசா யுத்தத்திற்கு எதிரானதும், இஸ்ரேலிய கார்கள் மீது கல்வீச்சை உட்கொண்டிருந்ததுமான, ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டதே அவரது"குற்றமாக" இருந்தது.

பாலஸ்தீன அகதிகளுக்கு உதவும், காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண வேலைகள் அமைப்பின் கமிஷனர் ஜெனரல் பிறீ கிராஹென்புஹல் (Pierre Krähenbühl) திங்களன்று பத்திரிகைகளுக்கு தெரிவிக்கையில், காசா பகுதியில் வன்முறை தீவிரமடைந்திருப்பது குறித்தும் மற்றும் பாலஸ்தீன அகதிகள் உட்பட அது பொதுமக்களின் வாழ்வை மற்றும் ஸ்தூலப் பொருட்களின் எண்ணிக்கையை நாசமாக்கி வருவது குறித்தும் அவர் "ஆழமாக கவலை கொண்டிருப்பதாகவும்,எச்சரிக்கை அடைந்திருப்பதாகவும்" தெரிவித்தார்.

“சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு முரணாக, பொதுமக்களுக்கு எதிராகவோ மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்பிற்கு எதிராகவோ அல்லது அதற்கு ஆபத்து விளைவிக்கும் விதத்திலோ தாக்குதல்கள் நடத்துவதை முடிவுக்குக் கொண்டு வருமாறு,"அவர் இஸ்ரேலுக்கு அழைப்புவிடுத்தார்.

சர்வதேச சட்டத்தின் கீழ் யுத்த குற்றங்களாக கருதப்படும் பல தொடர்ச்சியான கொடூர சம்பவங்கள் செய்திகளில் வெளி வந்துள்ளன.பின்வரும் உண்மைகள், இஸ்ரேலிலும் உட்பட, உலக ஊடகங்களில் பரந்தளவில் வெளியானவை ஆகும்:

· வடக்கு காசாவின், ஜபாலியாவில் ஊனமுற்றவர்கள் மறுவாழ்வு மையத்தின் மீது இஸ்ரேல் குண்டுவீசியது, அதில் ஒரு செவிலியர் மற்றும் மூன்று ஊனமுற்றோர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டார்கள். ஏனையவர்கள் அந்த குண்டு வெடிப்பில் கடுமையாக தீக்காயங்களுக்கு உள்ளானார்கள். பெய்ட் லாஹியாவில் ஊனமுற்றவர்களின் வசிப்பிடத்தின் மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் மேலும் இருவர் கொல்லப்பட்டார்கள், நான்கு பேர் காயமடைந்தார்கள்.

· ஒரு உணவுவிடுதியில் உலக கோப்பை அரையிறுதி கால் பந்தாட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த எட்டு பாலஸ்தீனியர்கள் ஒரு இஸ்ரேலிய விமான தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். அந்த உணவுவிடுதி, குறிப்பாக முஸ்லீம்கள் பகல் முழுதும் நோன்பிருந்து இருட்டிய பின்னர் சாப்பிடும் ரம்ழானின் போது, மாலை நேரத்தில் உள்ளூர் மக்கள் ஒன்று கூடுவதற்குரிய இடமாக நன்கறியப்பட்டதாகும்.

· பெய்ட் ஹனோனில் ஹமாத் குடும்பத்தின் ஐந்து அங்கத்தவர்களைக் கொன்றும், மற்றும் 8 முதல் 13 வயது வரையிலான ஆறு குழந்தைகள் உட்பட காவாரா குடும்பத்தின் எட்டு அங்கத்தவர்களைக் கொன்றும், மற்றும் காசாவின் தலைமை பொலிஸ் அதிகாரியைக் கொல்லும் ஒரு முயற்சியில் அதிர்ச்சியூட்டும் வகையில் அல்-தாய்ஷ் குடும்பத்தின் 17 உறுப்பினர்களைக் கொன்றும், இஸ்ரேலிய யுத்த விமானங்கள் மீண்டும் மீண்டும் ஹமாஸின் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அதிகாரிகளின் குடும்பங்களை இலக்கில் இருத்தி வந்துள்ளது.

· காசா நகரின் எல் வாஃபா மறுவாழ்வு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பாஸ்மான் அலாஷி கொடுத்த தகவலின்படி, வெள்ளியன்று தனித்தனியாக ஐந்து முறை அந்த மருத்துவமனையை இஸ்ரேலிய விமானங்கள் தாக்கின. அந்த தாக்குதல்கள் மருத்துவமனையின் 30நோயாளிகளுக்கு வினியோகிக்கப்படும் மேல்மாடி தண்ணீர் தொட்டிகளைச் சிதைத்திருந்தது.

· ஜெனிவா தீர்மானங்களை மீறி, இஸ்ரேல் வேண்டுமென்றே காசாவின் அப்பாவி மக்களைக் குறி வைத்து வருகின்றது என்பதற்கு தெளிவான ஆதாரமாக, விமான தாக்குதல்களில் 1,000க்கும் மேற்பட்ட தனிநபர்களின் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது கடுமையாக சேதப்படுத்தப்பட்டு உள்ளன.

· இதற்கும் மேலாக காசாவிற்குள் மருந்து பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்கும் விதத்தில், இஸ்ரேல் மற்றும் எகிப்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கையால் விமானத் தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் மேற்கொண்டும் ஆபத்திற்கு உள்ளாகி உள்ளனர்.ஏற்கனவே பல மருத்துவமனைகள் குறைந்தளவிலான அடிப்படை மருந்து பொருட்களோடு ஓடிக் கொண்டிருக்கின்றன என்பதோடு,இன்னும் 10 நாட்களுக்கு குண்டுவீச்சு தொடர்ந்தால் பேரழிவாக போய் முடியுமென்று மருத்துவர்களும், மருத்துவ சேவை பணியாளர்களும் தெரிவித்தனர். இஸ்ரேலிய-எகிப்திய முற்றுகையானது, எரிவாயு இல்லாத பகுதிகளில் அவசியமான அவசர சேவைகளை வழங்க முடியாதபடிக்கு, ஆம்புலன்சுகளுக்கான எரிபொருள் வினியோகங்களையும் பாதித்துள்ளது.

· மத்திய காசாவில் அல்-நுஷ்ரத்தின் ஒரு மசூதி, சனியன்று இரவு நள்ளிரவு வேட்டைகளில் அழிக்கப்பட்டது, ஒட்டுமொத்த குடும்பங்களையும் அடியோடு அழிக்கும் அபாயத்தோடு, பெரும் எண்ணிக்கையில் பாலஸ்தீனியர்கள் ஒன்றுகூடும் கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட இதுபோன்ற டஜன் கணக்கான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.

· ஜூலை 9 அன்று, மிகத் தெளிவாக "தொலைக்காட்சி" என்று பெரிய சிவப்பு எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த காரை பாலஸ்தீன இதழாளர் ஹமீத் ஷெஹாப் ஓட்டிச் சென்று கொண்டிருக்கையில், ஒரு இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலினால் அவர் அங்கே எரிந்து சாம்பலானார். ஷெஹாப் உள்ளூர் பத்திரிகை நிறுவனமான மீடியா24க்காக வேலை செய்து வந்தவராவார். “காசா பகுதி மீதான கூட்டு தண்டனையின் கொடூரங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றங்களைக் காட்டி பாலஸ்தீன இதழாளர்களை அதைரியப்படுத்துவதற்கான திட்டமிட்ட மற்றும் வேண்டுமென்றே செய்யப்பட்ட" ஒரு நடவடிக்கையாக இந்த படுகொலையை பாலஸ்தீன இதழாளர்களின் கூட்டமைப்பு கண்டனம் செய்தது.

காசாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் மஹ்மொத் தஹீர்அல் ஜஜீராவிற்கு கூறுகையில், “மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் மீதான தாக்குதல்கள் மிகத் தெளிவாக ஒரு சர்வதேச சட்டமீறலாகும். சுகாதார மையங்களை மோதலில் இருந்து விலக்கி வைக்குமாறு உலக சுகாதார அமைப்பு அனைத்து கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறது," என்றார்.

பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதை நோக்கமாக கொண்டவை என்று இஸ்ரேலிய ஆட்சி குறிப்பிடும் சில நடவடிக்கைகளே கூட, சர்வதேச சட்டங்களின் கீழ் யுத்த குற்றமாக வருகின்றன. சான்றாக,ஜூலை 13இல், உடனடியாக ஒரு பெரிய இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதால் மக்களை வெளியேறுமாறு எச்சரித்து வடக்கு காசாவில் ஆயிரக் கணக்கான துண்டறிக்கைகளை இஸ்ரேலிய இராணுவம் வீசியது. அதன் காரணமாக சுமார் 17,000 மக்கள் வெளியேறினார்கள், இது அவர்களின் உயிர் வாழ்க்கை மீதான பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கொண்டு அப்பாவி மக்களை வேண்டுமென்றே இடம் பெயர்த்ததாக இருந்தது.

காசாவின் பொதுமக்களை இலக்காக வைத்து அவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்களை மூடிமறைக்க இஸ்ரேலிய அதிகாரிகள்,உயர்மட்டத்திலிருந்தும் கூட, எந்தவொரு முயற்சியும் செய்யவில்லை.ஞாயிறன்று அமெரிக்க தொலைக்காட்சி வலையமைப்பான ABCஆல் நேர்காணல் செய்யப்பட்ட பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தனியாஹூ,அவரது சொந்த குற்றங்களுக்கு ஹமாஸைக் குற்றஞ்சாட்ட முனைந்தார்,அவர் தெளிவற்ற விதத்தில்: “யார் மசூதிகளுக்குள் ஒளிந்திருப்பது? ஹமாஸ்.யார் மருத்துவமனைகளுக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பது?ஹமாஸ்.

யார் மக்கள் வசிப்பிடங்களிலோ அல்லது சிறார் பள்ளிகளுக்கு அருகிலோ இராணுவ மையங்களை அமைத்திருப்பது? ஹமாஸ். ஹமாஸ் காசாவின் மக்களை ஒரு மனித கேடயங்களாக பயன்படுத்தி வருகிறது என்பதோடு அது காசா மக்களுக்கு பேரழிவுகளையும் கொண்டு வந்து கொண்டிருக்கிறது," என்றார்.

முற்றிலுமாக அந்த சொற்களோடு, முரண்பட்ட விதத்தில், மசூதிகள்,மருத்துவமனைகள், மக்கள் வசிப்பிடங்கள் மற்றும் சிறார் பள்ளிக்கூடங்களை திட்டமிட்டு இலக்கில் வைத்ததை நெத்தனியாஹூ ஒப்புக் கொள்கிறார். இந்த ஒளிநாடாவே ஒரு யுத்த குற்ற தீர்ப்பாணயத்திற்கு ஆதாரமாக வைக்கப்பட வேண்டும்.

இஸ்ரேலிய பத்திரிகைகளிலேயே கூட, காசாவில் நடத்தப்பட்டு வருகிற அட்டூழியங்களின் அளவுகளின் மீது அங்கே ஒரு அதிருப்திகரமான விவாதங்கள் நிலவுகின்றன. “காசாவில் இஸ்ரேல் யுத்த குற்றங்களை நிகழ்த்தி வருகிறதா?" என்ற தலைப்பில் Ha’aretzஇல் வெளியான மிக கவனமான வார்த்தைகளைக் கொண்ட ஒரு கட்டுரை, இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் நடவடிக்கைளை விரிவாக ஆராய்ந்த பின்னர், அதன் முடிவுரையில், கவனமாக "ஆமாம்" என்று குறிப்பிட்டிருந்தது.

அந்த கருத்துரை குறிப்பிடுகையில், “அது வெறுமனே, தடை செய்யப்பட்டதான, மக்களைத் திட்டமிட்டு இலக்கில் வைத்தல் என்பது மட்டுமல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள். தாக்குதல்கள் அதன் இயல்பிலேயே இராணுவ இலக்குகளோடு சேர்ந்து, பொதுமக்களையோ அல்லது பொதுமக்களின் பொருட்களையோ கண்மூடித்தனமாக தாக்கினால்,அதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்... காசாவில் எந்த மாதிரியான சூழ்நிலைகளில் அந்த பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை எடுத்துக்காட்டும் சில அறிக்கைகளோடு சேர்ந்து, அங்கே பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பலர் அப்பாவி பொதுமக்கள் என்பதை புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுவதானது, இஸ்ரேல் தவிர்த்திருக்க வேண்டிய,அவற்றில் சில ஒருவேளை யுத்த குற்றங்களாகவும் வரையறை செய்யப்பட்டிருக்கக்கூடிய, சில நடவடிக்கைகளை நடத்தியுள்ளதற்கான சாத்தியக்கூறுகளை உயர்த்துகிறது.

'துல்லியமின்மையால்' அல்லது'தவறுதலாக' நடந்ததென்ற வாதங்களின் அடிப்படையில் அவற்றை விட்டுவிட முடியாதளவிற்கு அந்த விடயங்களின் எண்ணிக்கை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது," என்று குறிப்பிட்டது.

உலக கோப்பை உணவு விடுதி குண்டுவீச்சு மற்றும் ஹமாஸ் அதிகாரிகளின் ஒட்டுமொத்த குடும்பங்களை அழிப்பது உட்பட மேலே குறிப்பிட்ட பல சம்பவங்களை மேற்கோளிட்டுக் காட்டி அக்கட்டுரை தொடர்கையில், அது ஒரு குறிப்பிட்ட கேள்வியை முன்வைத்தது: “அங்கே வசித்த பல பொதுமக்களைக் கொன்ற ஒரு தாக்குதலான, IDF இராணுவ பிரிவு தளபதியின் வீட்டின் மீதான ஒரு தாக்குதலைக் குறித்து இஸ்ரேல் என்ன கூறும்? அதுபோன்றவொரு நடவடிக்கை சட்டவிரோதமானதென்றால், பின்னர் காசாவில் என்ன செய்யப்பட்டு வருகிறது," என்று கேள்வி எழுப்பியது.

Khaibar Thalam

Jul 17, 2014

காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலின் பின்புலம்

காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலின் பின்புலம்
காஸா மீதான தாக்குதல்கள் 6 வது தினமாகவும் தொடர்கின்றன. இதுவரை 100இற்கும் மேற்பட்ட நிராயுதபாணியான பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இம்முறையும்  சிவிலியன்களைத் தாக்கி பலஸ்தீன போராட்டத்தின் உயிர்ப்பை இல்லாமல் செய்யும் பாணியிலான யுத்தமொன்றைத் தான் நெதன்யாகு தொடுத்து வருகிறார்.
அதேவேளை  2008> 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் காஸா மீது இஸ்ரேல் நடாத்திய எந்த யுத்தத்திலும் ஹமாஸின் தளங்களை இலக்கு வைத்து தாக்குவதாக டெல்அவீவ் பிதற்றிக் கொண்டாலும் கூட மேற்சொன்ன  ஹமாஸின் ஆயுதக் கிடங்குகளையோ அல்லது இராணுவப் பயிற்றுவிப்புத் தளங்களையோ இஸ்ரேலிய இராணுவம் தாக்கவில்லை.
அவர்களால் அவ்வாறு தாக்கியழிக்கவும் முடியாது. தற்போது இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டு வரும் “Operation Protective Edge”என்ற பெயரில் இடம் பெறும் காஸா மீதான தாக்குதல்களை ஆரம்பிக்கும் போதும் Hamas will pay the price” (ஹமாஸ் இதற்கான விலையை கொடுக்கும்) என நெதன்யாகு குறிப்பிட்டாலும் இது வரை ஹமாஸின் எந்த இராணுவத் தளங்களையும் தாக்கியதாகவோ அல்லது வீரர்களை கொலை செய்தாகவோ தகவல்கள் இல்லை. வெறும் சிவிலியன்களைக் கொலை செய்யும் இராஜந்திரத்தைத்தான் டெல்அவீவ் பயன்படுத்துகின்றது.
ஏன் இஸ்ரேல் காஸாவை இலக்கு வைக்கிறது?
பொதுவாக ஒரு யுத்தத்திற்கோ அல்லது வன்முறைப் பிரயோகத்திற்கோ  இரண்டு இலக்குகள் இருக்கின்றன என பிரபல அரசியல் ஆய்வாளர் மர்வின் பிஷாரா குறிப்பிடுகிறார். அதில் முதலாவது  குறுகிய கால இலக்குகள். இவை இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் குறைந்தவை.
ஆனால் தனது நீண்ட திட்டத்திற்கு மக்களாதரவை பெற்றுத் தரக்கூடியவை. மற்றையது நீண்ட இராஜதந்திர இலக்குகள். இவை அரசியல் ரீதியில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை அதேநேரம் மக்களின் கவனக் குவிப்பை பெற்று நிற்கும் அம்சமல்ல.
தற்போது இடம்பெறும் இஸ்ரேலின் சிவிலியன்களை இலக்கு வைத்து தாக்கும் ஆகாய மார்க்க தாக்குதல்களை ஆழமான உற்று நோக்கும் போது மர்வின் பிஷாரா சொல்லிக் காட்டும் இரண்டு வகையான இலக்குகளையும் அடையாளப்படுத்தலாம். 
தற்போது இஸ்ரேல் காஸாவைத் தாக்குவதற்கு தீர்மானித்ததன் குறுகிய கால இலக்குகள் கீழ்வருமாறு :
1. மூன்று கிழமைக்கு முன்னர் இஸ்ரேலின் ஜெரூஸலம் பகுதியைச் சேர்ந்த 3இளைஞர்களை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்நிகழ்வு இஸ்ரேலினுள் பாரிய அமளிதுமளியை ஏற்படுத்தியது. நெதன்யாகு தலைமையிலான அரசு ஒரு கூட்டரசாங்கம் என்பதால் அரசில் அங்கம் வகிக்கும் ஏனைய தீவிர சியோனிஸ கட்சிகள் மக்களின் ஆதங்கங்களை தங்களது சுய அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்துவதற்கு ஏற்ற சந்தர்ப்பமாக இதனைக் கருதினர்.
எனவே  இஸ்ரேலிய இளைஞர்களுக்கு நடைபெற்ற கொலைக்கு பழிவாங்காத போது கூட்டரசாங்கத்தை தாங்கள் பழிவாங்கவும் தயாராக இருக்கிறோம் என அக்கட்சிகள் தெரிவித்தன. தீவிர சியோனிஸ கட்சிகளின் அக்கோரிக்கைள் மக்களிடத்தில் பாரிய வரவேற்பை  பெறவே  'ஹமாஸ்தான் இஸ்ரேலிய இளைஞர்களை கொன்றொழித்தது என்ற போலிக் குற்றச்சாட்டில் காஸாவைத் தாக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது. அப்போது தான் இன்னும்  தனது கூட்டரசாங்கத்தை பலப்படுத்தலாம் என நெதன்யாகு சிந்திக்கிறார்.
2. இரண்டாவது புதிய எகிப்திய அரசின் தன்மீதான விசுவாசத் தன்மையினை பரீட்சித்துப் பார்த்துக் கொள்வது. தற்போது இடம்பெறும் காஸா மீதான தாக்குதல்களின் பிரதான நோக்கங்களில் ஒன்று இதுவாகும் என எகிப்திய அரசியல் ஆய்வாளர் பஹ்மி ஹூவைதி குறிப்பிடுகிறார்.
கிட்டிய எதிர்காலத்தில் பிராந்தியத்தில் இஸ்ரேலிய அரசு மேற்கொள்ளப் போகும் அனைத்து விதமான முன்நகர்வுகளுக்கும் எகிப்திய ஆதரவின் தயார் நிலையை பரீட்சித்துக் கொள்வது முக்கியம். இந்த வகையில் தனக்கு எந்த சந்தர்ப்பத்திலும்எப்போதும் உதவி செய்வதற்கு எகிப்திய அரசு தயாரகத்தான் இருக்கிறது என்ற பச்சைக் கொடியை கைரோ நெதன்யாகுவிட்கு காட்டி விட்டதனைத்தான் சமீபத்திய காஸா மீதான தாக்குதல்களின் போதான எகிப்திய அரசின்  ஊடக அறிக்கைகள் காட்டி நிற்கின்றன.
மேற்கூறப்பட்டவை காஸா மீதான தாக்குதல்களை தொடுப்பதற்கு நெதன்யாகு தீர்மானித்ததன் பின்புலத்தில் தொழிற்பட்ட நேரடிக் காரணங்கள். இவை இராஜந்திர ரீதியில் பாரிய முக்கியத்துவம் பெற்றவை அல்ல.
காஸா மீதான தாக்குதல்களின் நீண்ட தூர மற்றும் இராஜதந்திர ரீதியான இலக்குகள் கீழ்வருமாறு :
1. சமீபத்தின் இஸ்ரேலின் இருப்புக்கே சவால் விட்ட ஹமாஸிற்கும் - பதாஹ்விற்கும் இடையிலான சமாதான உடன்படிக்கையை உடைத்து நொறுக்குவது. இந்தக் காரணத்திற்காகத் தான் மேற்கு நாடுகளும் காஸா மீதான தாக்குதல்களை மேற்கொள்வதற்கு இஸ்ரேலிய அரசுக்கு பச்சைக் கொடியைக் காண்பித்தது.
இதனுடாக  ஹமாஸை ஒரு துருவத்திலும்  பதாஹ்வை மறுதுருவத்திலும் தனித்து இயங்க விடுவது. இறுதியாக அவ்வாறு பதாஹ் தனிமைப்படும் பட்சத்தில் இஸ்ரேலுடன்  செல்லமாக  விளையாடும் போது அப்பாஸ்  சொல்லிக் காட்டும்'நாங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்வோம்'  என்ற வார்த்தையை இனியும் மொழியாமல் செய்வது.
மூன்றாவது நபரான அமெரிக்கா  சமாதானப் பேச்சுவார்த்தை என்ற அடிப்படையில் ஹமாஸை ஓரங்கட்டி விட்டு அப்பாஸின் தனியுரிமை பலஸ்தீனத் தலைமைத்துவத்தை நிலைப்படுத்துவது. மேலும் வரும் சில வருடங்களுக்கு'ஹமாஸ்-பதாஹ் கூட்டரசாங்கம்என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் செய்வது.
2. அரபுலகம் பயங்கர குழப்ப நிலைக்குல் தள்ளப்பட்டுள்ள தருணமிது. எனவே ஹமாஸின் ஆயுத பலத்தை குறைப்பதற்கும் பிராந்திய தனிமைப்படுத்தலையும் மேற்கொள்வதற்கு சிறந்த தருணமாக தறபோதைய அரபுலக சூழ்நிலைகளை இஸ்ரேல் கருதுகிறது. ஏற்கனவே  ஹமாஸை எகிப்திய அரசு 'தீவிரவாத அமைப்பு'என பிரகடனம் செய்துள்ள அதே வேளை  ஹமாஸிற்கு  அரசியல் ரீதியான ஆதரவளிக்கும் நிலையில் எகிப்திய இஃவான்களும் இல்லை. எனவேசந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஹமாஸைப் பலவீனப்படுத்தி காஸா அரசிலிருந்து தூக்கியெறிவது.
நெதன்யாகு இலக்கை அடைவாரா ?
 நெதன்யாகு உட்பட அவரது கூட்டுப் படை திகைப்படைய ஆரம்பித்துள்ளன. ஓரிரு தினங்களுக்கு முன்னர் பிரபல்யமான 'அல்குத்ஸ் அல்அரபி” பத்திரிகையின் முன்னால் பிரதம ஆசிரியரான அப்துல் பாரி அல் அத்வான் நெதன்யாகுவை கதிகலங்கச் செய்த 3 முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.
இம்மூன்று அம்சங்களும் சர்வதேச மீடியாக்களில் பாரிய கவனக் குவிப்புக்கு உட்படுத்தப்படாவிட்டாலும் கூட இஸ்ரேலிய இராணுவக் கட்டமைப்பின் திட்டங்களையே மீளவரைவதற்கு இஸ்ரேலிய இராணுவ ஜெனரல்களை நிர்ப்பந்தித்துள்ளது.
1. முதலாவது முறையாக டெல்அவீவ் நகரத்தின் உள்ளத்தை தொடும் அளவுக்கு நீண்ட தூரம் கொண்ட ஏவுகணைகளை ஹமாஸ் ஏவிவுள்ளமை. அதிலும் குறிப்பாகடெல்அவீவின் பென்கூறியன் விமான நிலையம் இந்த ஏவுகணை தாக்குதல்களால் பல மணிநேரம் மூடப்பட்டிருந்தது.    
பயணிகளின் பாதுகாப்பு கருதி டெல்அவீவிற்கு பறப்பதற்கு சில விமான சேவைகள் மறுப்பு தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. ஹமாஸிய ஏவுகணைகளின் புதிய பாய்ச்சல் இஸ்ரேலிய இராணுவத்தில் உளவியலில் பாரிய அச்ச அலைகளை உருவாக்கிவிட்டுள்ளது.
2. ஹமாஸின் ஐந்து படைவீரர்கள் கடல் வழியாக பயணம் செய்து இஸ்ரேலின் அஸ்கலான் பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமொன்றை தாக்கியமை. இதில் பாரிய உயிர் சேதங்கள் எதுவும் இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய்களுக்கு ஏற்படாவிட்டாலும் ஹமாஸின் புதிய தாக்குதல் அணுகுமுறைகளை The Shocking Attempt” என இஸ்ரேலிய ஊடகங்கள் விபரிக்கின்றன.
அதே வேளை  காஸாப் பகுதிக்கு சமீபமாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த யுத்த தாங்கியொன்றை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதில் அதிலிருந்த 3 இராணுவ வீரர்களும் பாரிய காயத்திற்கு உட்பட்டுள்ளனர். இத்தாக்குதலை ஆதாரம் காட்டி இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய்கள் காஸாவிற்குல் நில மார்க்கமாக நுழைவதனை பலரும் கண்டிக்கின்றனர்.
மேற்சொன்ன இரண்டு காரணங்களின் விளைவாக இஸ்ரேலின் குடியேற்ற திட்டங்களுக்கும்  நில ஆக்கிரமிப்புச் செயற்திட்டங்களுக்கும் எதிரானவர்களது தொகை இஸ்ரேலிய மக்கள் வட்டாரத்தில் அதிகரித்த வண்ணமிருக்கிறது. தற்போது காஸாவைத் தாக்கிக் கொண்டிருக்கும் தினங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட அனைத்துக் கருத்துக் கணிப்புக்களும் நெதன்யாகு வீணாக இஸ்ரேலை காட்டிக் கொடுக்கப் போகிறார் என்பதே அதிகமானவர்களது கருத்தாக இருந்தன.
போரின் இறுதி முடிவு எப்படி அமையும் ?
கடந்த ஒரு தசாப்த காலமாக நடைபெற்ற ஹமாஸிற்கும் - இஸ்ரேலிய இராணுவத்திற்கும் இடையிலான யுத்தங்களைப் பொருத்தவரை இறுதி வெற்றியானது போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை  வைத்து தீர்மானிக்கப்படுவதாக எப்போதும் இருந்ததில்லை.
மாறாக இறுதியில் நடைபெறும் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் யார் மீது யார் ஆதிக்கம் செலுத்துகின்றார் உடன்படிக்கையில் யாரது நிபந்தனைகளை யார் ஏற்றுக் கொள்கின்றார்மற்றும்  சர்வதேச தளத்திலும் இராஜதந்திர தளத்திலும் யாரின் வலுச் சமநிலை அதிகரித்துள்ளதுஎன்பதனைப் பொறுத்தே போரின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. அப்படித்தான் இஸ்ரேலும்  ஹமாஸூம் அதனை நோக்குகின்றது. சர்வதேசமும் அப்படித்தான் அதனைக் கணிப்பிடுகிறது.
இந்தப் பின்புலத்தில் 2012 வருடம் இடம்பெற்ற இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையிலான யுத்தத்தின் பின்னர் எகிப்தின் மத்தியஸ்தத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை ஹமாஸிற்கு இராஜதந்திர ரீதியாக பாரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தன. ஹமாஸ் விதித்த அத்தனை நிபந்தனைகளையும் இஸ்ரேல் அங்கீகரித்து யுத்த நிறுத்தத்திற்கு சம்மதித்தது.
இஸ்ரேலை அப்படியே தனது கூண்டுக்குல் கட்டிப் போடும் அளவுக்கு இறுக்கமானதாக ஹமாஸின் நிபந்தனைகள் காணப்பட்டன. எனவேதான்  சில மத்திய கிழக்கு விற்பன்னர்களின்  (உதாரணமாக அல்ஜஸீராவின் மார்வின் பிஷாரா) கருத்துப்படி தற்போது நடைபெறும் நெதன்யாகுவின் காஸா மீதான தாக்குதல்களின் ஒரு நோக்கம் ஹமாஸை பலவீனப்படுத்தி தனக்கு சார்பான முறையில் 2012 ஆண்டு எழுதப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீளவும் வரைவதாகும் என்கிறார்.
ஆனால் நெதன்யாகுவின் சிந்தனையில் உலாவந்த கற்பனைகளுக்கு மாற்றமாகவே கள நிலவரங்கள் தென்படுகின்றன. அதாவது  ஹமாஸின் மீது கடுமையான நிபந்தனைகளை விதிப்பதற்கு நெதன்யாகு விரும்பினாலும் கூட  ஹமாஸை கட்டுப்படுத்தும் வலுச் சமநிலை கொண்ட ஒரு நாடு மத்தியஸ்த்தம் வகிப்பதும் அதனுடாக ஹமாஸ் தானாகவே வந்து யுத்த நிறுத்தத்தை பிரகடனம் செய்வதும் இன்றியமையாதது.
மறுபுறத்தில் 'தான் எந்த விதத்திலும் யுத்த நிறுத்தத்திற்கு தயாராக இல்லை. எத்தனை நாட்களைக் கொண்ட நீண்ட போராட்டத்திற்கும் தயாரகவே இருக்கிறோம்'என அறிவித்துள்ளது. அத்துடன் ஹமாஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடைத்தரகராக நிற்கும் அளவுக்கு எந்த அரபு நாடும் இல்லை. 2012 வது ஆண்டு முஹம்மத் முர்ஸி அத்தகைய வலுவான பணியைச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிலவேளை தற்போது யுத்த நிறுத்த உடன்படிக்கையொன்று இடம்பெறுமானால் நிச்சயம்  அது ஹமாஸின் பிராந்திய வலுச்சமநிலையை பலவீனப்படுத்துவதற்கு மாற்றமாக அதனை அதகரிக்கச் செய்யலாம் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் ஆரூடம்.
அதேவேளை அவ்வாறுதான் ஹமாஸிற்கும் இஸ்ரேலுக்கும் மத்தியிலான யுத்த நிறுத்த உடன்படிக்கையொன்றுக்கு எகிப்து அல்லது வேறொரு நாடு நடுநிலை வகிக்கும் என்றிருந்தாலும் ஹமாஸின் நிபந்தனைகளையே இஸ்ரேல் ஏற்க வேண்டியிருக்கும் என்பது தெளிவு.
குறிப்பாக நடுத் தரகராக எகிப்து செயற்பட்டால் ஹமாஸிற்கும் -  ஸீஸியின் அரசுக்கும் இடையிலான முறுகல் நிலை ஓரளவு தணிவது போன்ற தோற்றப்பாடு எழலாம். இது ஹமாஸைப் பொருத்தவரை வெற்றியே. அவ்வாறில்லாமல் வோறொரு அரபு நாடு மத்தியஸ்தம் வகித்தால் அவர்களாலும் ஹமாஸின் நிபந்தனைகளை புறக்கணிக்க முடியாது. மொத்ததில் யுத்த நிறுத்த உடன்படிக்கை என்று வந்தாலும் கூட  அது ஹமாஸிற்கு வாய்ப்பானதாகவே அமையும்.
காஸாவும் அரபுலகமும் :
இறுதியாக இப்படியொரு குறிப்பையும் குறிப்பிட வேண்டும். அதாவது  ஹமாஸின் அரசியல் துறை பொறுப்பாளர் காலித் மிஷ்அல் 'நாங்கள் எந்த அரபு நாட்டுத் தலைவரிடம் கையேந்த மாட்டோம்” என குறிப்பிட்டிருந்தார். காஸா விடயத்தில் கட்டாரைத் தவிர பொதுவாக ஏனைய அரபு நாடுகள் மௌனம் காப்பது யதார்த்தம்.
அதற்கான பிரதான நியாயம் அந்நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கிறது என்பது மட்டுமல்ல. மாற்றமாக வெறும் 15 இலட்சம் மக்கள் 150 சதுர கிலோ மீற்றர் பரப்பில் வாழ்ந்து கொண்டு 1967 ஆம் ஆண்டு முழு அரபு நாடுகளும் இணைந்து வீழ்த்த முடியாதிருந்த இஸ்ரேலுடன் மோதுகிறது என்பதாகும்.
ஹமாஸை அரபுகள் எதிர்ப்பது அவர்களின் 'தலைகுனிவின்'  வெளிப்பாடு என்றும் சொல்லலாம்.  காஸா மக்களும் ஹமாஸூம் இஸ்ரேலுக்குள் மட்டும் தங்களது ரொக்கெட்டுகளை அனுப்பவில்லை.  மறுபுறத்தில் அவர்களது ஒவ்வொரு ரொக்கெட்டுகளும் அரபுகளின் உளவியலையும் தாக்கும் வலிமை வாய்ந்தவை. எனவேதான்  ஹமாஸை எப்படியாவது மடக்கிப் போடுவதற்கு அரபுத் தேசங்கள் நினைக்கின்றன.
ஸகி பவ்ஸ் (நளீமி)
நன்றி 
engalthesam.lk

Jul 16, 2014

ஹமாஸ் தலைவர்களின் வதிவிடங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீச்சு !! - சில தளபதிகள் மிஸ்ஸிங் ???


ஹமாஸ் - இஸ்ரேல் சண்டைகளில், இஸ்ரேல் ஹாமாஸின் முக்கிய அரசியல் இராணுவ தலைவர்களின் வீடுகளை இலக்கு வைத்து லேசர் கைடட் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது. 12 மணித்தியாலங்களினுள் 35 இற்கும் அதிகமான ஹமாஸ் தலைவர்களின் வீடுகள் என நம்பப்படுபவை நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. இதில் பலஸ்தீன காஸா பிரதமர் இஸ்மாயில் ஹனியூஃவின் உறவினர் வீடும் அடங்கும். இந்த வீட்டில் தனது பாதுகாப்பு கருதி அவர் அடிக்கடி வந்து தங்குவது வழமையான நடவடிக்கையாகும்.

ஹமாஸின் செய்தி தொடர்பாளர்கள் இது பற்றிய எந்த இழப்பு விபரங்களையும் வெளிவிடவில்லை. மேற்குக்கரையில் செயற்படும் அல்-பதாஃ அமைப்பினர் ஹமாஸின் சில தளபதிகள் மரணித்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன் அவர்களின் மரணத்திற்கு தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை ஹமாஸின் தலைமைக்கு தெரிவித்துள்ளனர். ஹமாஸ் சார்பு ஊடகங்களும் இஸ்ரேலிய தாக்குதலை மறுக்கவில்லை. அதே வேளை அல்-மனார் ஹிஸ்புல்லாஹ்வின் தொலைக்காட்சி சேவையில் ஹமாஸ் தனது சில முக்கிய தாக்குதல் தளபதிகளை இழந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

B.B.C. நேற்று வெளியிட்ட செய்தியில் நேற்றைய தினம் இஸ்ரேல் மேற்கொண்ட விமானத்தாக்குதலில் ஹமாஸின் 05 உயர் கொமாண்டர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல் வெயியிட்டிருந்தது. இஸ்ரேலிய இராணுவ இணையத்தில் வெளிவந்த செய்தி என அது தெரிவித்திருந்தது.

காஸாவில் இருந்து இது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை. அதே வேளை ஹமாஸ் தனது தாக்குதலை நிறுத்தியிருந்ததுடன் தனது போராளிகளின் 03 அணிகளை ரபாஃ எல்லையை நோக்கி நகர்த்தியுள்ளது. அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. அவை எதற்காக அங்கு செல்ல வேண்டும் என்ற கேள்விக்கான சில அவதானங்களை எமது அடுத்த பதிவில் தருகிறோம்.