Showing posts with label 'அஷ் ஷாமில்' (சிரியா). Show all posts
Showing posts with label 'அஷ் ஷாமில்' (சிரியா). Show all posts

Feb 3, 2018

சிரியாவில் அமெரிக்காவின் திட்டத்தை நடைமுறைபடுத்துவதில் எர்டோகனின் எரிச்சல்

அமெரிக்கா சிரியாவில் அதன் திட்டத்தை செயல்படுத்த எர்டோகனை (துருக்கியை) கொண்டுவருவதில் வெற்றி கண்டுள்ளது. எர்டோகன், அமெரிக்கா சிரியாவில் குருதிஸ்களுக்கு ஆதரவாக உள்ளதால் அதன் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வெள்ளியன்று சிரியாவின் ஆப்ரின்(Afrin) பிராந்தியத்தில் துருக்கியின் பீரங்கிகள் மற்றும் இராணுவ தடவாளங்கள் தரைமட்டமாக்கபட்டன. துருக்கி உள்துறை அமைச்சர் அமெரிக்க ஆதரவு பெற்ற குர்திஷ் போராளிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை ஒன்றை அறிவித்தார். அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக ஏழு ஆண்டுகால யுத்தத்தால் சிதைக்கப்பட்ட ஒரு பிராந்தியத்தை இன்னும் நிலைகுலைய செய்ய அது அச்சுறுத்தியது.
சிரியாவில் அஸ்ஸாதின் தலைமையால் முழு சிரியாவையும் தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. எனவே அமெரிக்கா மீண்டும் ஒரு திட்டத்தை தீட்டுகிறது. சிரியாவின் வடமேற்கு பகுதியில் அஸ்ஸாதிற்கு எதிராக போராடும் குழுக்களை கட்டுபடுத்துவதற்கு அமெரிக்காவிற்கு துருக்கியின் உதவி தேவைப்படுகிறது, ஏற்கனவே அலப்போவில் முஸ்லிம் போராளிகளை துருக்கி இராணுவம் அடக்கி ஒடுக்கி கொன்று குவித்ததால் இம்முறையும் அவ்வாறு செயல்பட அமெரிக்கா துருக்கியை உதவிக்கு அழைக்கிறது.
சிரியாவில் அஸ்ஸாதின் திறனற்ற செயலற்ற தன்மையால் ஈரானும் ரஷ்யாவும் அவர்களை(முஸ்லிம்களை) இடமாற்றம் செய்தது. குப்ரை தலைமையாக ஏற்றாலோ அல்லது குப்ர்க்கு ஆதரவாக செயல்படும்வரை முஸ்லிம்கள் ஒரு போதும் வெற்றி அடைய மாட்டார்கள். முஸ்லிம்கள் தங்கள் நாடுகளிலுள்ள காபிர்களுக்கு எதிராகவும் குப்ர்க்கு ஆதரவாக செயல்படும் அட்சியாளர்களை எதிராக உறுதியாக தீரத்துடன் போராட வேண்டும்.
இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை மட்டுமே உலக முஸ்லிம்களை ஒன்றுபடுத்தி முஸ்லிம்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து அவர்களை அமைதியாக வாழ வைக்கும். அத்தகைய அறிவார்ந்த தலைமைக்கு சத்திய பிரமாணம் செய்வதின் மூலம் மட்டுமே வெற்றி அடைய முடியும்.

Sep 7, 2016

சிரியாவில் குர்து மக்களுக்கு விமானம் மூலம் வான் பாதுகாப்பு

சிரியாவில் குர்து மக்களுக்கு விமானம் மூலம் வான் பாதுகாப்பை அமெரிக்கா வழங்குகிறது.
 
இஸ்லாம் மற்றும் முஸ்லிம் மகளுக்கு எதிராக சிரியாவில் நடந்துவரும் போரில் அமெரிக்கா தனது திட்டத்தை வகுத்து செயல்படுத்தி வருகிறது, ஏதாவது ஒரு வகையில் தனது அதிகார வரம்பை மீறி செயல்கள் போகும் பட்சத்தில் அமெரிக்கா தனது படையை உபயோகிக்க தயராகவுள்ளது. ( செய்தி – 19/8/2016  தி நியூயார்க் டைம்ஸ்)
 
குர்து போராளிகள் சிரியாவின் வடகிழக்கு பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர், இவர்கள் அமெரிக்காவுடன் இனைந்து ISIS ஐ எதிர்த்துவருகிறார்கள். சிரியாவின் பஷார் அல் அசாத் அரசின் விமானம் குர்து போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை தாக்கியதை கண்டித்து அமெரிக்கா உடனடியாக தனது விமானத்தை அந்த நிலப்பரப்பின் மேல் பரக்க செய்து குர்துகள் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக பென்டகன் செய்தி தெரிவித்துள்ளது. சிரியாவின் பஷார் அரசுக்கும், குர்து போராளிகளுக்கும் இடையே அவ்வப்போது சில சிறிய மோதல்கள் நடந்துள்ளதே தவிர இவ்விருவருக்கும் இடையே பெரிய அளவிலான போர் நடைபெறாத நிலையில் இந்த விமான தாக்குதலை சிரியா அரசு குர்துகள் மேல் தொடுத்துள்ளது.
 
அமெரிக்கா இது போன்ற உதவிகளை சிரியாவில் உள்ள மற்ற எந்த போராட்ட குழூக்களுக்கும் வழங்கவில்லை, இஸ்லாமிய போராட்ட குழூக்கள் அமெரிக்காவின் செயல் திட்டங்களை ஏற்கமருப்பதாலும் இஸ்லாத்தைமையமாக வைத்து செயல்படுவதாலும் அந்த போராட்ட குழுக்களுக்கு எதிராகவே அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
 
 
செய்தி பார்வை 20.08.16

சிரியாவின் அலெப்போவில் அடைந்த தோல்வி

 
சிரியாவின் அலெப்போவில் அடைந்த தோல்வியை அடுத்து  ரஷ்யா, முஸ்லிம்களுக்கு எதிரான போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது .
 
 ஆகஸ்ட் முதல் வாரத்தில் சிரியா மற்றும் ரஷ்ய ராணுவதாள் அலெப்போவில் ஏற்படுத்தப்பட்ட முற்றுகையை அங்குள்ள பல இஸ்லாமிய போராட்ட குழுக்கள் இனைந்து உடைத்தார்கள். இதில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து ரஷ்யா மதியதரைகடலில் நிறுதிவைத்துள்ள போர்க்கப்பல் மூலமாகவும், ஈரனிலுள்ள விமானதளத்தை பயன்படுத்தி  விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும் தனது தாக்குதலை சிரியாவிலுள்ள முஸ்லிம்கள் மீது தீவிரப்படுத்தியுள்ளது.
 
சிரியாவில் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்காக போராடும் முஸ்லிம்களை எதிர்த்து முதல் முறையாக ரஷ்யா போற்கப்பல் மூலம் ஏவுகணை தாக்குதலை தெடுத்துள்ளது.
 
இது போன்ற பலமுனை தாக்குதல் நடவடிக்கையை  மேற்கொள்வதன் மூலம் ரஷ்யா தனது ராணுவ திறனை நிரூபித்து சிரியாவில் தனது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்த முயல்கிறது. இதற்கு முன் சிரியாவில் லடாகியவில் உள்ள தனது ராணுவதளத்திலிருந்தும், காஸ்பியன் கடலில் நிறுத்தி வைத்துள்ள போர்க் கப்பல்கள் மூலமும் சிரியாவின் கொடுங்கோல் அரசுக்கு ஆதரவாக அங்குள்ள முஸ்லிம்கள் மீது போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது கூடுதலாக மத்திய தரைகடலில் நிறுதிவைத்துள்ள  போர்க்கப்பலில் இருந்து ஏவுகணைகள் மூலமும், ஈரானின் விமான தளங்கலில் இருந்து போர் விமானங்களை பயன்படுத்தி குண்டுமலைகலை பொழிந்தும் தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்காவின் முழு அனுமதியின் பெயரில் நடந்துவருகிறது, சிரியாவில் இஸ்லாத்திற்கு ஆதரவான போராட்டத்தை ஒடுக்க ஈரானின் ராணுவதளத்தை ரஷ்யா பயன்படுத்தும் அளவிற்கான ஒரு சுமூக போக்கையும் அமெரிக்கா அனுமதித்துள்ளது.
 
சிரியாவில் இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ரஷ்யா ஒருபுறம் அமெரிக்காவின் கொள்கைக்கு இணங்க செயல்படுவதால். கிரிமியா தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு வழிவிட்டுள்ளது
 
 உக்ரைனுடைய எல்லைகளுக்கு அருகில் பத்தாயிரம் வீரர்களை உள்ளடக்கிய ரஷ்யபடை நகர்த்தப்பட்டிருப்பதை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை, மேலும் பென்டகனோரஷ்யாவின் இந்த நகர்வை வழக்கமான பயிற்சி நடவடிக்கை தான், அதனால் உக்ரைனின் இறையாண்மைக்கும், எல்லைக்கும் பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளது.
 
 
செய்தி பார்வை 20.08.16

Sep 6, 2016

அலெப்போவின் விளக்கம் தரும் தருணம்

2012 ல் சிரியாவின் பொருளாதார மற்றும் வர்த்தக நகரத்தை புரடசி படைகள் வெற்றி பெற்று கைப்பற்றியது, இத்தருணத்தில் அது ஒரு தூரத்து கனவாக இருக்கின்றது. அலெப்போ மாகானத்தின் பெரும் பகுதியையும் அதே பெயரை கொண்ட அதன் தலைநகரத்தையும் கைப்பற்றியது அசாதிற்கு மாற்று சக்தியாக விளங்கும் ஒரு எதிர்ப்பை நிறுவ எதிர்ப்பாளர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. இது மேலும் அரசாங்கத்தின் பின்னடைவை வேகப்படுத்தியுள்ளதோடு அதன் வசமிருந்த பகுதிகளை இழக்க செய்துள்ளது இதன் காரணத்தா் அல்-அசாத் சிரியாவின் வட பகுதியை மீளும் முயற்சியை கைவிடும் நிலையை ஏற்படுத்தியது. ஆனால் இன்று இந்நாட்டில் நடைபெற்று வரும் போர்களில், அலெப்போவிற்கான போரே மிகப்பெரியதும் மற்றும் வெற்றியை முடிவு செய்யும் ஆற்றலுடைய உறுதியான போராகும் அது இப்போது விளக்கும் தருணத்தை அடையும் நிலையை எட்டியுள்ளது. அசாத் மற்றும் புரட்சியாளர்கள் இவ்விரு தரப்பினரும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளனர் ஒரு தீர்க்கமான ராணுவ வெற்றியின் மூலம் அசாத் தனது நிலையை உறுதி படுத்த விழைகிறார். அதே வேளையில் புரட்சியாளர்கள் தங்களது நோக்கம் நிலைத்திருக்க போராடுகிறார்கள். ஒரு வேளை அலெப்போவை இழந்து விட்டால் அதன் பிறகு அல்-அசாதிற்கு எதிராக எந்தவொரு ராணுவ வெற்றியை பெறுவது என்பது புரட்சியாளர்களுக்கும் சிரிய மக்களுக்கும் ஒரு நெடிய கனவாக ஆக்கிவிடும். அதே சமயம் அல்-அசாதிற்கு 10 மாதத்திற்கு முன்பு கவிழும் நிலையிலிருந்த தனது ஆட்சிக்கு புத்துயிர் ஊட்டியது போல் ஆகிவிடும்.


2016 ஜூலை 17ம் நாள் அன்று அசாதின் படைகள், ஈரானிய படைகள், ஹிஸ்புல்லாவின் வீரர்கள் ரஷ்ய விமானப்படை மற்றும் இதர புரட்சிப்படைகளின் உதவியோடு புரட்சியாளர்களின் கட்டுப்படாட்டில் இருந்த அலெப்போவின் கிழக்கு பகுதியில் இருக்கும் கடைசி தொடர்பு சாலையான கேஸ்டெலோ சாலையை தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர் இச்சாலை 2012ம் ஆண்டு முதல் புரட்சியீளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதுவே ஆயுதங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை கொண்டு செல்ல மீதமிருந்த ஒரூ பாதையாகும்.[1] அல்-அசாதின் படைகள் இப்போது புரட்சியாளர்கள் கடைசியாக தங்கள் கைவசம் வைத்திருந்த பலம் பொருந்திய பகுதயான அலெப்போ நகரத்தின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டு சுற்றி வளைத்துள்ளனர், அந்த மக்களுக்கு உணவு கிடைக்காமல் செய்தும் அவர்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தும் செயலை செய்து அவர்களை தண்டிக்க ஆரம்பித்துள்ளனர். அலெப்போ நகரத்ரிற்கு எதிரான அல்-அசாதின் ராணுவ நடவடிக்கை 2015 அக்டோபர் மாதம் தொடங்கியது இது ரஷ்ய தலையீடு நிறுத்தப்பட்ட பின்னரும் லட்டாக்கியா மற்றும் இத்லிபிலிருந்து புரட்சியாளர்களை பின்னோக்கி செலுத்தியதை அடுத்து நிகழ்ந்தது. ரஷ்ய ஆகாய சக்தி மற்றும் ஈரானிய தலைமை மற்றும் ஷிஆ புரட்சிப்படைகளின் உதவியை கொண்டு அலெப்போ மற்றும் இத்லிப் மாகாணங்களில் பன்முனை தாக்குதல் நடத்தியதில் எதிரணியினரை குழப்பத்தில் ஆழ்த்தியதோடு அவர்களை அளவுக்கு அதிகமாக தங்களது எல்லைகளுக்கு அப்பால் இழுக்க முடிந்தது. எதிர் படையினரை நகரப்பகுதிகளில் இருந்து வெளியேற்றி ஒரு தீர்க்கமான முடிவு தரக்கூடிய நடவடிக்கையை மேற்கொண்டு அந்நகரை சுற்றி வளைக்க சூழ்நிலைகளை தோதுவாக அமைக்கும் விதமாக இந்த நடவடிக்கைகள் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கில் உள்ள அலெப்போ நகரத்தில் உள்ள கிராம பகுதிகளில் நடைபெற்றது. ரஷ்ய விமானப்படையும் ஈரானின் மனித வளமும் பஷார் அல்-அசாத் அலெப்போ நகரத்தை அனைத்து புரத்திலும் முழுமையாக சுற்றி வளைக்க வைத்தது.

சர்வதேச சக்திகள், இவர்கள் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல, இவர்களும் புரட்சியாளர்களை பணிய வைக்க அதே போன்று தாக்குதல் நடத்தி படுகொலைகள் செய்தனர். ஜூலை 18ம் நாள் அமெரிக்க போர் விமானங்கள் மன்பிஜ் நகரத்தை அடுத்து ரத்தம் வழியச்செய்யும் ஒரு படுகொலையை நிகழ்த்தியது, இதில் 20 அப்பாவி குடிமக்கள் உயிரிழந்தனர் மேலும் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் காயம் அடைந்தனர்.[2] அதற்கு அடுத்த நாள் பிரஞ்சு போர் விமானங்கள் நீஸில் நடந்த தாக்குதலுக்கு பழி தீர்க்கும் விதமாக மன்பிஜ் நகரின் வடக்கே உள்ள டவ்கான் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தியது, இந்த உதிரம் வழியும் படுகொலை தாக்குதலில் பெரும்பாலான குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர் சில இடங்களில் மொத்த குடும்ப உறுப்பினர்கள் என 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர்.[3] ஜூலை 23ம் நாள் ரஷ்யாவும் அலெப்போவை சுற்றி பல இடங்களில் வான்வழி தாக்குதல்கள் நடத்தி குழந்தைகள் உட்பட 70 நபர்களை கொன்று குவித்தது. அனைத்து பயங்கர தாக்குதல்களும் பல உயிர்களை பலி கொண்டும், பெருமளவிலான உடமைகள் மற்றும் கட்டிடங்களை சேதப்படுத்தியும் இதன் காரணமாக இடர்பாடுகளுக்கு மத்தியில் சிக்கி இருந்த பிரேதங்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டெடுக்கும் பணியை சிரமமாக்கியது. புரட்சி்ப்படையினரின் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அலெப்போவின் கிழக்கு பகுதியில் அவர்களை சுற்றி வளைத்து அவர்களின் மீது தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

பலதரப்பட்ட எதிராளிகள் மற்றும் புரட்சிப்படையினருடன் அரசு கொண்ட அமைதி ஒப்பந்தம் அலெப்போவில் துவம்சம் செய்வதற்கான ஒரு முன் ஏற்பாடாக அரசு சரியாக பயன்படுத்தி கொண்டது. அனைத்து போர் நிறுத்த ஒப்பந்தங்களும் சிரிய பிரட்சியின் ஆரம்பத்திலிருந்து அரசு அதை பயன்படுத்தி தனது ஆதிக்கத்தை விரிவாக்க செய்தது பின்பு அந்த ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தங்களை முழுமையாக உதாசீனப்படுத்தியது. ஏப்ரல் 2012ல் நடைபெற்ற கோஃபி அன்னன் போர் நிறுத்த ஒப்பந்தம், அக்டோபர் 2012ல் ஈத் அல்-அழ்ஹாவில் நடைபெற்ற லக்தார் பிராஹிமி போர் நிறுத்த ஒப்பந்தம், ஜனவரி 2014ல் நடைபெற்ற பர்ஃஜா சுற்றுவட்டார போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் செப்டம்பர் 2014ல் நடைபெற்ற காபூன் சுற்றுவட்டார போர் நிறுத்த ஒப்பந்தம் போன்று 2011லிருந்து அல்-அசாத் பல்வேறு போர் நிறுத்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு பின்பு அதை மீறி உள்ளார். ஜபாதானி போர் நிறுத்த ஒப்பந்தமானது அதில் கையொப்பமிட்டவர்கள் அங்கிருந்து வெளியேறி இத்லிபிற்கு செல்ல வேண்டும் என்று நிபந்தனை கொண்டிருந்தது மற்றும் அல்-வார் போர் நிறுத்த ஒப்பந்தமும் அவர்களை இத்லிபிற்கு செல்ல வேண்டும் என்கிற நிபந்தனை கொண்டிருந்தது. இதேபோல் ஃஜபாதானி மற்றும் மதாயா போர் நிறுத்த ஒப்பந்தங்களின் படி மக்கள் இத்லிபிற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. டிசாம்பர் 2015ல் நடைபெற்ற அல்-வார் போர் நிறுத்த ஒப்பந்தம், எதிர்ப்பாளர்களின் துப்பாக்கி ஏந்திய வீரர்களை அந்த சுற்றுவட்டாரத்தில் இருந்து வெளியேறி இத்லிப் நோக்கி செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதக்கப்பட்டது, இதன் மூலம் ஹோம்சில் சண்டையிடுவதை நிறுத்தி புரட்சியின் தொட்டிலை முழுமையாக மீண்டும் அசாதிடம் ஒப்படைக்கும் விதமாக இருந்தது. எதிர்ப்பாளர்கள் மற்றும் பல அமைப்புகள் இத்லிபில் இருந்த காரணத்தினால் இந்த பகுதியில் ரஷ்ய விமானப்படைகளால் பலமாக தாக்கப்பட்டு அல்-அசாத் அரசு அந்த புரட்சியாளர்களுக்கு மரண அடி கொடுக்கவும் அலெப்பாவிற்கான பாதையை திறந்து வைக்கவும் வழிவகை செய்தது, இதன் மூலம் அரசை அந்த மக்களை சுற்றி வளைக்க செய்தது. இந்த அமைதி ஒப்பந்தம் என்பது புரட்சியாளர்கள் தரப்பிலிருந்து நிகழ்ந்தப்பட்ட ஒரு பெரிய தவறாகும் இது இறுதியில் அரசுக்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது.

ஜூலை 31ம் தேதி கிட்டத்தட்ட 20 பெரிய புரடசி குழுவினர், அலெப்போவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் முற்றுகையை முறிக்கும் எண்ணத்தில் தாக்குதலை தொடங்கினார்கள். அது அதன் நோக்கத்தை இன்னும் அடையவில்லை என்றாலும், இந்த தாக்குதல் ஒரு குறிப்பிட்ட முன்னேற்றத்தை அடைந்துள்ளது மேலும் இதன் மூலம் போராட்டக்குழுவினர் இடையே உள்ளுக்குள் ஒற்றுமையாக இருப்பது இன்றியமையாதது என்ற கண்ணோட்டத்தை உறுதிபடுத்தும். அனால் வெளிப்புற உதவி இல்லாதது கூடுதல் படைகள் இல்லாதது அலெப்போவில் தங்கள் உயிருக்காக போராடுபவர்கள் அந்த கணக்கிடும் தருணத்தை அடைவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றது. சில அமைப்புகள் துருக்கி, சவூதி அரேபியா, கத்தர் மற்றும் அமெரிக்காவிடம் இருந்தும் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவிகள் பெற்றிருந்தாலும் இந்த உதவிகள் அரசுக்கு எதிரான போரில் ஒரு நல்ல மாற்றத்தை தரக்கூடிய அளவிலான ஆயுத உதவி அவர்களுக்கு ஒருபோதும் வழங்கப்படவில்லை. புரட்சியாளர்களின் தற்காப்பை பலவீனப்படுத்துவதிலும் அலெப்போவில் தற்பொதைய சுற்றி வளைப்பிற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ. ம் முக்கிய பங்கு வகித்தது. புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அலெப்போவை கைப்பற்றவும் இத்லிபில் முன்னேற்றம் அடையவும் ஐ.எஸ்.ஐ.எஸ். பலமுறை முயன்றது. அதில் ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்ந்து தோற்றிருந்தாலும் புரட்சியாளர்களுக்கு இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டிருந்தது, 7000 வீரர்களை அது இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.[4] சிரியாவின் வட பகுதியில் உள்ள போராட்ட குழுவினர் கிழக்கிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் தாக்குதலையும், தெற்கிலருந்து நடத்தப்படும் அரசின் தாக்குதல்களையும் மற்றும் நாட்டின் அனைத்து திசையிலிருந்து ஈரானிய புரட்சிப்படையினருடன் சேர்ந்து ரஷ்யா தொடுக்கும் தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது இங்கு நடத்தப்பட்ட முற்றுகையின் காரணமாக ஒரு மாதம் காலம் தொடர்ந்து நடந்த போரினால் அவர்களின் தாக்குதல் திறனில் பலவீனத்தை ஏற்படுத்தியது.

அலெப்போவிற்கான போராட்டம் மற்றும் அதன் விளைவு சிரிய புரட்சியில் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். அல்-அசாதின் படைகள் கடந்த 5 ஆண்டுகளில் பல நகரங்களை கைப்பற்றியுள்ளது, ஆனால் அதற்கு அந்நகரங்களை தக்க வைத்துக்கொள்ளவதை விட அதற்கு அந்நகரங்களை கைப்படுத்துவது எளிதாக இருந்தது மேலும் அது கைப்பற்றிய அலெப்போ நகரை தக்கவைத்துக் கொள்ள அதற்கு ஒரு நகரத்தில் பிரச்சினை இருப்பது அதற்கு தேவை படுகிறது, அது புரட்சியாளர்களை வலுப்படுத்துவதற்காக வேண்டி பாடுபடும. இந்த புரட்சி ரஷ்யாவில் நடந்தது போன்று ஸ்டாலின்கார்ட் stalinguard தருணத்தை அடைந்துள்ள காரணத்தால் அலெப்போவிற்கான போராட்டம் நிச்சயமாக சிரியாவிலுள்ள மக்கள் ஒரு உண்மையான மாற்றத்தை கோரும் வண்ணம் நிச்சயமாக ஒரு தீர்வை தரும் வண்ணம் அமைந்திருக்கும்.

Reference : http://www.revolutionobserver.com/2016/08/aleppos-moment-of-reckoning.html



http://sindhanai.org/

Jul 27, 2016

துருக்கிய சதிப்புரட்சி - இவர் சொல்வது உண்மையானால்...?

- உஸ்தாத் சஈத் ரித்வான் !


தற்போது அஷ்ஷாமினுடைய நிலத்தில் நடந்தேறி வருகின்ற நிகழ்வுகள் சர்வதேச சக்திகளினதும், பிராந்திய சக்திகளினதும் அதிமுக்கிய கவனத்தை ஈர்த்துள்ள விடங்களாகும். ஏனெனில் அஷ்ஷாமிலே தொடருகின்ற போராட்டம் முதலில் முஸ்லிம்களுக்கும், இரண்டாவது ஐரோப்பாவுக்கும். மூன்றாவது அமெரிக்காவுக்கும், பின்பு ஏனைய தரப்பினர்களுக்கும் வாழ்வா சாவா போராட்டம் எனக்கருதும் அளவிற்கு கனதியானதாகும். அந்தப் போராட்டத்தின் முடிவிலே வெற்றியோடும், இலாபத்தோடும் திரும்புபவரே தோன்றவிருக்கும் அடுத்த யுகத்தின் அதிபதியாக வெளியேறுவதுடன், அதிலே தோற்கடிக்கப்படுவர் சர்வதேச அரங்கில் மதிப்பிழந்த செல்லாக்காசாகி விடும் சூழல் தோன்றிவிடும்.


சிரியாவில் புரட்சி வெடித்த சந்தர்ப்பத்திலிருந்து இன்றுவரை ஏனைய சர்வதேச சக்திகள் சிரிய விவகாரத்தில் மூக்கை நுழைப்பதை தடுப்பதற்காக அமெரிக்கா கடுமையான பிரயத்தனத்தை எடுத்து வருகிறது. இதுவரை காலமும் எவரேனும் அதற்குள் தலையிட்டு இருப்பார்களேயானால் அது அமெரிக்காவின் அனுமதியுடனோ அல்லது கடைசியாக ரஸ்யா தலையிட்டதைப்போல அமெரிக்காவில் வேண்டுதலின் பேரிலோதான் அவை இடம்பெறுகின்றன.


பேச்சுவார்த்தைகள் போன்ற அரசியல் வழிமுறைகளினூடாக, அல்லது ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டிப் படுகொலைகளினூடாக சிரியப் புரட்சியில் பாரிய அலுத்தத்தை பிரயோகித்து அமெரிக்கா வழங்குகின்ற தீர்வுக்கு இணங்கச் செய்யும் அமெரிக்காவின் அனைத்து முயற்சிகளும் படு தோல்வியில் முடிந்துள்ளன.


சிரியப்புரட்சி அனைத்து பிரதான தரப்புக்களையும் கதிகலங்கும் ஓர் சந்தியில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. குறிப்பாக யாருடைய கையில் களத்தின் கயிறுகள் இருக்கின்றனவோ அந்த அமெரிக்காவையே அது விழிபிதுங்கச் செய்துள்ளது.


பாவித்த அனைத்து துரும்புகளும் கை கொடுக்காத நிலையில் இந்த நெருக்கடி நிலையிலிருந்து வெறியேறும் பாதையாக துருக்கியை பயன்படுத்த அமெரிக்கா கண்ணமிட்டுக் கொண்டிருந்தது. அதன்படி அதனது நாசத்திட்டத்தை தனது முக்கிய முகவரான அர்துகானின் கரங்களால் அமூல்படுத்த அது காத்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய பிரபல்யத்தை தன்னகப்படுத்தியிருக்கும் அர்துகானுக்கு சிரியாவுக்குள் இயங்கும் சில குழுக்களிடையே காணப்படும் ஏற்பு நிலையை அது பயன்படுத்த நினைத்திருக்கிறது. குறிப்பாக சிரியாவுக்குள் ஈரானிய வகிபாகம் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு விடயமாக தோற்றம் பெற்றுள்ள நிலையிலும், சிரியாவுக்குள் ரஸ்ய - ஈரானிய கூட்டணி முயற்சி இனி பலிக்க போவதில்லை என்ற நிலை உருவாகியிருக்கின்ற நிலையிலும் அமெரிக்காவின் கவனம் துருக்கி மீது குவிந்துள்ளமை தவிர்க்கப்பட முடியாததே.


எனவே அது வரவிருக்கின்ற அரங்கிற்கு ஏற்றவாறு அனைத்தையும் தயார்படுத்த களத்திற்குள் குதித்துள்ளது. அவற்றில் முக்கியமானவை,


1. எதிர்கால சிரியா இஸ்ரேலுடன் விரோதத்தைப் பேண மாட்டாது என்பதற்கான உத்தரவாத்தை வழங்குவதற்காக துருக்கியின் சியோனிச யூதர்களுடனான உறவை சுமூகப்படுத்துவது.



2. “அஷ்ஷாமின் கொடுங்கோலன் பஷாரின் முழுமையான வெளியேற்றமே சிரியாவின் தீர்வுக்கான நிபந்தனை” என இதுவரை காலமும் பேரளவுக்காவது முன்வைத்து வந்த அர்துகானின் உறவை பஷாருடன் சுமூகப்படுத்தி பலப்படுத்துவது.



3 சிரியாவில் துருக்கியின் தலையீட்டால் ஈரானுக்கும் அதன் நலன்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான புரிந்துணர்வை ஏற்படுத்தி ஈரானுடனான உறவை மேம்மடுத்துவது.



4. துருக்கியின் தலையீட்டால் ஈராக்கின் உள்ளரங்கில்; ஏற்படக்கூடிய பாதிப்பை விளக்கி ஈராக்குடனான உறவை மேம்படுத்துவது.



5. திட்டத்தின் அனைத்து கட்டங்களிலும் அதனுடன் ஒருங்கிணைப்புடன் செயற்படவும், ஐரோப்பியத் தலையீட்டை தொடர்ந்து தள்ளி வைத்துக் கொள்வதற்கும் ரஸ்யாவுடனான உறவை சுமூகப்படுத்துவது



6. அண்மையில் இஸ்ரேலுடன் சமூகமான நல்லுறவை ஏற்படுத்திய கேவலமான செயலினால் அர்துகானின் பிரபல்யம் துருக்கிக்குள் சரிவடைந்து செல்வதை தடுத்து நிறுத்துவது. துருக்கிய இராணுவத்திற்குள் அர்துகானுக்கு எதிராக உருவாகி வரும் எதிர் சக்திகளின் விவகாரத்தை தீர்;த்து வைப்பது...


தமது அரசியல் தீர்மானப் பொறிமுறைக்கு வெளியே இடம்பெற்றதாக அர்துகானே ஏற்றுக்கொண்ட சம்பவமான ரஸ்ய தாக்குதல் விமானத்தை துருக்கிய விமானப்படை சுட்டு வீழ்த்திய சம்பவம் இந்த எதிர் சக்திகளின் வளர்ச்சியை தெளிவாகக் காட்டியது துருக்கிய நிகழ்வுகளை அவதானிப்போர் அறிந்த விடயமே.


7. சிரியக் களத்துக்குள் அர்துகான் முழுமையான நுழைவதாக இருந்தால் உள்நாட்டுக்குள் அவரை புறமுகுகில் குத்துகின்ற எந்தவொரு உறைவாளையும்; விட்டு வைக்க முடியாத நிலை உருவாகும். இத்தகைய உறைவாட்கள் இராணுவத்துக்குள் அவரை எதிர்க்கின்ற அணிகளில் பிரதிபலிக்கத் தொடங்கியிருந்ததால் அவற்றை முற்றாக அகற்றுவது.



மேலும் முக்கிய சில அவதானங்கள்...


முறியடிக்கப்பட்ட சதிப்புரட்சி, மக்கள் ஆதரவைத் திரட்டக்கூடிய விதத்தில் மக்களை விழித்து ஆற்றப்பட்ட எத்தகைய உரையையும் தாங்கி வராமலும், அர்துகானுக்கு எதிராக மக்களை தூண்டிவிடக்கூடிய விதத்தில் அவரது கொள்கைகளை அம்பலப்படுத்தாமலும், இன்னும் சொல்லப்போனால் சதியினை மேற்கொண்டவர்களின் இலக்குகளை சுட்டிக்காட்டக்கூடிய அல்லது சதிப்புரட்சியால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய நலனை சுட்டிக்காட்டக்கூடிய எத்தகைய சைக்கினையைக் கொண்டிராத வெறுமையாக ஒன்றாகவே காட்சியளிக்கிறது.


அதற்கும் மேலாக சதிப்புரட்சியின் இரு மருங்கிலுள்ளவர்களும் ஒரே திசையை பின்பற்றுபவர்கள். அர்துகானும், அவரது எதிராளிகளான பத்ஹ}ல்லாஹ் குலனும் அமெரிக்காவை பின்பற்றுவர்கள்!


மேலும் சதிப்புரட்சியினால் இராணுவத்துக்குள் தமக்கு இருக்கின்ற செல்வாக்கிற்கு என்னவாகும் என்பது பற்றி பிரித்தானியர்கள் வெளிப்படுத்திய ஆதங்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சதிப்புரட்சி தொடர்பாக பேசிய அமெரிக்க பேச்சாளர்களின் பேச்சுக்களில் சஞ்சலமற்ற நிலை தெரிகிறது.


மேலும்...

இந்த சதிப்புரட்சி அர்துகானினதும், அவரது அரசாங்கத்தினதும் பிரபல்யத்தை அதிகரிக்கும்.
மேலும் இராணுவத்தின் மீதான அவரது இறுங்குப்பிடியை உறுதிப்படுத்தும்.
அத்துடன் அவரது அரசியல் எதிராளிகளை மென்மேலும் பலகீனப்படுத்தும்.


இவை அனைத்தும் அர்துகானுக்கு கைகூடி வருமானால், சிரியாவில் அமெரிக்காவுக்காக சேவகம் செய்யும் துருக்கியின் வகிபாகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான வலிமையை அது அர்துகானுக்கு வழங்கும்.

முடிவாக,



சிரியா மீது துருக்கி செய்ய இருக்கின்ற தலையீடு சிரியப்புரட்சி தொடர்பான அமெரிக்காவின் அதிமுக்கியமானதும் ஆபத்தானதுமான செயற்திட்டங்களில் ஒன்றாகவே இருக்கப் போகிறது.


இந்தப் புரட்சிக்கு பலியாகிய துருக்கிய இராணுவம் அமெரிக்காவின் பலிக்கடாக்களாகியிருக்கின்ற அதேவேளை அரங்கேற்றப்பட்ட துருக்கிய சதிப்புரட்சியானது கொடியதொரு எதிர்காலத்திட்டத்திற்காக, காணப்படும் நிலைமைகளை கட்டுப்படுத்தவும், ஒழுங்கமைக்கவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு நிகழ்வாகவே தெரிகிறது. மாறாக அது ஏற்கனவே நடந்துகொண்டிருந்த முரண்பாடுகளின் ஒரு பகுதியாக தென்படவில்லை.


எனவே நிகழ்வுகள் எதை நோக்கி? எந்தளவு தூரத்திற்கு? எவ்வளவு காலத்திற்கு? நீளப்போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Source : Darulaman.net

Jul 22, 2016

வெடிகுண்டுத் தாக்குதலில் சிரியா அரசுப்படையினர் 40 பேர் பலி

AFP

அலெப்போ நகரில் வெடி குண்டு தாக்குதல் நடத்தி, சிரியா கிளர்ச்சிக்காரர்கள், சுமார் 40 அரசு ஆதரவு சிப்பாய்கள் மற்றும் போராளிகளை கொன்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.


படையினர் பெருமளவு பயன்படுத்தும் கட்டடத்துக்குக் கீழே தோண்டப்பட்ட சுரங்கப் பாதைக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாக பிரிட்டன் ஆதரவு பெற்ற மனித உரிமைக்கான சிரியா அவதானிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் வியாழக்கிழமையன்று நடத்தப்பட்டது ஆனால் அதன் விளைவுகள் தற்போதுதான் தெளிவாகத் தெரியவந்துள்ளது.

அலெப்போ நகர் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படைகளால் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


BBC

Jul 11, 2016

சிரியாவை துண்டாட அமெரிக்காவின் திட்டம்



ஸைக்ஸ் பைகாட் ஒப்பந்தத்தின் நூறாவது ஆண்டு மற்றும் சிரிய புரட்சியின் ஐந்தாவது ஆண்டில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி சிரியாவிற்கான அமெரிக்காவின் திட்டம் உறுதியானது என கூறினார். அவையின் வெளியறவு கமிட்டியிடம் அமெரிக்க அமைச்சர் தாம் ஏற்கனவே திட்டமிட்டபடி போர் நிறுத்தம் ஏற்படாமல் போனால் அல்லது ஒரு மாற்று அரசு ஏற்படுவதற்கான ஒரு உண்மையான மாற்றம் வரும் மாதங்களில் ஏற்படாமல் போனால் சிரியாவை பிரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ள தனது அடுத்த திட்டத்தை நோக்கி செல்ல இருப்பதாக கூறினார். “சிரியாவை முழுமையாக இப்படியே காலம் தாழ்த்தி வைத்திருப்போமேயானால் மிகவும் காலம் கடந்து போயிருக்கும்”, என ஜான் கெர்ரி கூறினார். [1] “நாம் (பேச்சுவார்த்தை) மேஜையில் வெற்றி பெறாமல் போனால் கைவசம் உள்ள அடுத்த திட்டத்தை மேற்கொள்வது குறித்து தற்போது  தீவிரமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது”[2]. ஸைக்ஸ் பைகாட் ஒப்பந்தத்தின் நூறாவது ஆண்டு மற்றும் சிரிய புரட்சியுன் 5வது ஆண்டில் அமெரிக்கா என்ன விலை கொடுத்தேனும் தற்போது நிலவி வரும் நிலை நீடித்து இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்கா நீண்ட நாட்களாக முயற்சித்து வரும் போர் நிறுத்தமானது 2015  டிசம்பர் மாதம் வியன்னா மாநாட்டில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது, இது பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜெனீவா மாநாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும்.  அனைத்து உச்சிமாநாடுகள் மற்றும் பேச்சுவார்த்தைகளின் மையமாக அல்-அசாதுடன் எதிரணியினர் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு ஒரு மாற்று அரசை உருவாக்குவதே. இது போன்ற மாநாடுகளில் கலந்து கொள்ள அனுப்பப்பட்ட அழைப்புகள் எப்போதும் ஒரு சிலருக்கு மட்டுமே விடுக்கப்பட்டது அதிலும் குறிப்பாக இந்த திட்டத்திற்கு ஓத்து போகும் சில குழுக்களை மட்டும் தேர்ந்தெடுத்து விடுக்கப்பட்டது. முந்தய அரசில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களை சேர்த்து கொண்டதும் அரசின் மாற்றத்தை கோரிக்கையாக வைத்த ஆதிக்கம் வாய்ந்த குழுக்களை வெளியேற்றியதும் இந்த ஜெனீவா பேச்சுவார்த்தைகள் அல்-அசாத் அரசை தக்கவைப்பதற்காக வேண்டியே நடைபெறுகிறது என்பதை வெளிக்காட்டுகிறது மற்றும் இந்த திட்டத்தை எதிர்ப்போரை தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறது. தற்போது நிலவிவரும் போர் நிறுத்தமும் நிச்சயம் தோல்வியை சந்திக்கும் என்பது எதிர்மாறானதல்ல மாறாக அது அமெரிக்காவின் நிலைபாடான தமாஸ்கஸில் அரசை தக்கவைப்பதன் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. இது அல் ஜசீராவால் குறிப்பிடப்பட்டது:  “இந்த பிரச்சினையின் தொடக்கத்தில், அமெரிக்கா வெளிப்படையாக (சிரிய அதிபர்) பஷார் அல்-அசாதிற்கு எதிராக நின்றது. ஆனால் அதே சமயம் எதிரணியருக்கு தவறான வாக்குறுதிகளை தொடர்ந்து கொடுத்து வந்தது. இப்போது அதன் உண்மையான நிலைபாடு வெளிப்பட்டுள்ளது. அமெரிக்கா அசாதிற்கு எதிராக நிற்கவில்லை.  பேச்சுவார்த்தையில் அசாத் கலந்துகொள்ள அது சம்மதம் தெரிவித்துள்ளது மேலும் அவரை ஒரு தலைவராகவும் அங்கீகரித்துள்ளது. [3]
மேலும் சிரியாவையும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் துண்டாடும் கொள்கையை அமெரிக்கா சில காலமாக கொண்டுள்ளது. இன்று, அமெரிக்க அதிகாரிகள் ஒரு காலத்தில் அரபுலகை துண்டாடுவது சாத்தியப்படாத ஒரு இலக்காகவும் வெளிப்படையாக அதை பற்றி துண்டாடும் எண்ணம் என்பது ஆபத்தானது என்று கருதிய காலாவதியான திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளனர். அரபுலகின் பிரச்சினை குறித்து பல்வேறு வாக்கியங்களை உபயோகித்து விவரித்து வருகின்றது அதாவது “மண்ணில் மூழ்குகிறது,” “பிரச்சினையின் உச்சி,” “பால்கனைசேஷன்,” அல்லது “மத்திய கிழக்கின் மிகப்பெரிய முயற்சி,” போன்ற அனைத்தும் இன்று வரை தொடர்ந்து நீடித்து வரும் ஐரோப்பிய மேலாதிக்கத்தையும் நலன்களையும் பாதுகாத்து வந்த 1916 ல் நடைபெற்ற ஸைக்ஸ் பைகாட் ஒப்பந்தத்திலிருந்து திருப்பி விடுவதற்கான முயற்சிகளாகும். 2006 ம் ஆண்டு ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல்.  ரால்ஃப் பீட்டர்ஸ்  பழங்குடி, பிரிவினைவாத மற்றும் கோத்திரத்தின் அடிப்படையிலான மத்தியகிழக்கு மற்றும் ஆசிய எல்லைகளை சிந்திப்பது என்னும் ஆயதப்படை ஜர்னலில்
 ”இரத்த எல்லை (Blood borders)”யை கோடிட்டு காட்டினார்.[4] சிரியா மற்றும் பெரும்பாலான மத்தியகிழக்கு பகுதிகளை துண்டாடும் எண்ணத்தை புஷ்ஷின் ஆதரவாளர்கள் கொண்டிருந்தனர் அவர்கள் ஒரு தெளிவான பிளவு: realm ஐ தக்கவைத்து கொள்வதற்கான ஒரு புதிய வழிமுறை(strategy) என்னும் திட்டத்தை வரைந்தனர். இந்த ஆவணம் சதாம் ஹுசேனை அப்புறப்படுத்த வேண்டும் மற்றும் சிரியாவை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தது.   பிரிவினையை ஒரு கருவியாக உபயோகித்து தற்போது நிலவிவரும் நிலையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அமெரிக்கா நெடு நாட்களாக கொண்டுள்ள திட்டத்தின் ஒரு அங்கமாகும்.
தற்போது போர் நடைபெற்று வரும் சிரியா எல்லைகள் தான் அமெரிக்கா நாடிய எல்லைக்கோடுகளாக இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன சிரியாவை பிரிக்கும் வகையில் வட பகுதிகளான ஹஸாகா முதல் கோபானி மற்றும் துருக்கிய எல்லை வரையிலான பகுதிகளில்  வரலாற்றின் பெரும் பகுதியல் அதிகமாக குர்திய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வட பகுதியான இத்லிப் மாகானத்திலிருந்து யுப்ரைடஸை கடந்து ஈராக்கிய எல்லையிலுள்ள அல்-ரக்கா வரையில் அஹ்லுஸ் சுன்னாவினர் பெரும்பான்மையாக வசித்து வரும் பகுதியாகும். நாட்டின் மையப்பகுதியான டமாஸ்கஸலிருந்து லடாக்கியா மாகாணம் வரை, அரசின் விசுவாசிகள் மற்றும் சிறுபான்மையினரான அலவிகள் வசித்து வருகின்றனர் இந்த பகுதி தானாக ஒரு நாடாக உருவாகக்கூடும். இந்த புதிய வரைபடம்  ஸைக்ஸ்-பைகாட் ஒப்பந்தம் ஏற்பட்ட பின் சிரியா எப்படி சித்தரிக்கப்பட்டுள்ளது என்ற உண்மையான பிரஞ்சு வரைபடத்தை காட்டிலும் வேறுபட்டிருக்கவில்லை மக்களிடம் பிரித்து இந்த நாட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயன்றதால் பிரான்ஸ் இந்த வரைபடத்தில்  1920 களில் பல திறுத்தங்கள் மேற்கொள்ளும் கட்டாயத்திற்கு உள்ளானது. எவ்வாறிருப்பினும் இப்போது எழும் கேள்வி என்னவெனில் ஜான் கெர்ரியும் அவரது கூட்டாளிகளும் தீட்டும் வரைபடமானது இப்போது நிலவி வரும் நிலையிலிருந்து  மாறுபட்டிருக்குமா மேலும் அது நிலைத்திருக்குமா என்பது தான்?
மக்களுடைய மதிப்பு மற்றும் கலாச்சாரம் ஸைக்ஸ்-பைக்காடிற்கு முற்றிலும் மாறுபட்டிருந்த காரணத்தால் அது தோல்வி அடைந்துவிட்டது. நூறு வருடங்களுக்கு பிறகு ஸைக்ஸ்-பைக்காட் வரைந்த எல்லையை போன்று வரையப்பட்டுள்ள இன்றைய எல்லைகளும் அந்த பிராந்திய மக்களால் அங்கீகரிக்கப்படவில்லை அதனால் இன்றும் அது நிலைபெறுவதில் தோல்வியை சந்தித்து வருகிறது எல்லையை போல் மக்கள் தங்களது
இஸ்லாமிய அடிப்படையில் கொண்டுள்ள ஒற்றுமையை கைவிட்டு தேசியவாத அடையாளங்களை  தனதாக்கி கொள்ளவார்கள் என்ற நம்பிக்கையில் இதுவரை இல்லாத இந்த எல்லைகள் புது அமைப்புகளை உருவாக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு ஈராக்கியர், சிரியர், ஜோர்டானியர் அல்லது லெபனியர் போன்ற ஒன்று இல்லாமல் இருந்தது, இந்த தேசங்கள் திட்டமிட்டு உருவாப்கப்பட்டவை ஆகும். தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் வல்லுனர்கள் முன்வைப்பது புதிய வகையான இனம் சார்ந்த பிரிவினைவாத அடையாளங்களை தவிர வேறில்லை. கெர்ரி மற்றும் ஒபாமாவின் ஸைக்ஸ்-பைகாட்டின் 21ம் நூற்றாண்டின் வடிவமானது இனவாத அடிப்படையில் எல்லைகளை பிரித்து உருவாக்க வேண்டும், இவைகளை குழுக்கள் போன்ற அமைப்பதால் இந்த பிராந்தியத்தில் இவைகளால் ஆதிக்கம் செலுத்த முடியாது இது மட்டுமல்லாமல் இவை அனைத்து வகையிலும் நிலைத்திருக்க அரும்பாடு பட வேண்டும். இதன் காரணத்தால் தான் கெர்ரி மேற்கொள்ளும் இத்திட்டமும் தோல்வி அடையும்.
சிரியாவை பிரிப்பது குறித்த ஜான் கெர்ரியின் அறிவப்பு உண்மையான மாற்றம் வேண்டும் என்ற புரட்சிப்படையினர் தங்களது கோரிக்கையை கைவிட வேண்டும் என்பதற்காக
பல கருத்தரங்கங்கள் மற்றும் உச்சி மாநாடுகள் நடத்திய பிறகும் அவர்களை சம்மதிக்க வைப்பதில் அமெரிக்கா தோல்வி அடைந்ததை ஒட்டி வந்ததாகும். ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சிரியாவின் போராட்டத்தில் அந்நாட்டு மக்கள் அதில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது என்பது யாரும் எதிர்பாராதது, ஆனால் அம்மக்கள் சிரிய அரசை மரணத்தின் விளிம்பிற்கு கொண்டு சென்றுள்ளனர், புரட்சியாளர்கள் மீது தாக்குதல்களை கொண்டு செல்வதற்கு பதிலாக தனது அரசை தற்காத்து கொள்ளவதற்கே வெளியிலிலுந்து உதவியை தொடர்ந்து எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்தம் நிச்சயமாக தோல்வியை அடையக்கூடும், ஏனெனில் இதில் அரசிற்கு எதிராக போராடும் புரட்சி குழுவினர் ஈடுபடுத்தவில்லை, மற்றும் இந்த சிரிய புரட்சியின் எதிர்காலம் அமெரிக்கா இந்த விஷயத்தில் பெரும்பாலும் எவ்வாறு  அனுகுகிறது என்பதை பொறுத்து தீர்மானிக்கும்.
அத்நான் கான்
[1]http://www.theguardian.com/world/2016/feb/23/john-kerry-partition-syria-peace-talks
[2]http://sputniknews.com/politics/20160225/1035293806/kerry-plan-.html#ixzz41Hnw8Yve
[3]http://www.aljazeera.com/blogs/middleeast/2016/01/shifting-lines-syria-160131100323293.html
[4] http://www.armedforcesjournal.com/blood-borders/

sindhanai.org

May 22, 2016

அமெரிக்கா சிரியாவிற்கென கொண்டிருக்கும் செயற்திட்டத்தை அடையாளம் காணுதல்

 

கடந்த வருடம் நடந்த “பாரீஸ் தாக்குதல்” மிகவும் துர்அதிர்ஷ்டமானது ஏனெனில் அது 130 அப்பாவி உயிர்களை கொன்றதோடு மட்டுமல்லாமல் இந்த சிரியாவில் நடைபெற்று வரும் புரட்சிக்கு எதிராக உலக சக்திகளை ஒன்று சேர்த்திருக்கின்றது. மேலும்  ஐ.எஸ்.ஐ.எஸ், அதன் செயல்கள் மூலம், இந்த புரட்சிக்கு இது போன்ற விளைவுகளை ஏற்படுத்துவது இது முதன்முறை கிடையாது.
 
 
சிரிய புரட்சி 2011 ல் அரபு புரட்சியின் ஒரு கிளையாக தொடங்கியது. இது அந்த ஆண்டின் மார்ச் மாதம் பல தரப்பட்ட சிரிய சமுதாயத்தினர் தங்களுக்கு நாட்டின் அரசியல் இயந்திரத்தில் அடிப்படை மாற்றங்கள் வேண்டி சாலையில் இறங்கி போராடியதன் மூலம் தொடங்கியது. போராட்டக்காரர்கள் அதிபரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை, ஆனால் அவர்கள் கோரியது அதிகாரத்தின் தூன்களாக இருக்கும் அனைத்தையும் பிடுங்கி பொது ஜனங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும் என்பதே.
 
 
இந்த நிகழ்வு நடப்பது பற்றி எதுவம் தங்களுக்கு தெரியாது என்றே மேற்குலகு அரசுகளின் ஆரம்பகால விளக்கங்களாக இருந்து வந்தன. அல்-அசாதின் குடும்பம் சிரியாவை பல ஆண்டுகளாக கொடூரமான, இரும்பு கரங்களை கொண்டு ஆட்சி செய்து வருகின்றது. முதலில் ஹாஃபிஸ் அல் அசாதிற்கு கீழ் அதன் பின்னர் அவருடைய மகன் பஷார் அல்- அசாதிற்கு கீழ், சிறிய சந்தேகத்திற்குரிய செயல்கள் செய்தவதால் கூட கைது செய்யப்பட்டும், சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டும்   (விடுவித்துக்கொள்ள முடியாத அளவில் சிரியாவில் சிறையில் அடைக்கப்பட்டும்) மேலும் பெரும்பாலும் கொல்லப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. ஆகையால், மேற்குலகின் அரசியல்வாதிகளின் எண்ணம் என்னவென்றால் துனீசியா மற்றும் எகிப்தில் செய்ததை போன்று சிரியாவில் செய்வதற்கு எவரும் துனிய மாட்டார்கள் என்பதே. உதாரணத்திற்கு, 2015 ம் ஆண்டு மார்ச் 7 ம் தேதி, சிரியாவில் போராட்டம் வெடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், ஃபாரீன் அஃப்பையர்ஸ் (Foreign Affairs) எனும் பத்திரிக்கை மைக்கேல் ப்ரோனிங் என்பவர் எழுதிய ” The Sturdy House that Asad Built: Why Damascus is not Cairo”. என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் வெளியிட்டது.[1] எனினும், இரண்டு மாதங்கள் கழித்து 2015 ம் ஆண்டு மே 19ம் தேதி, ப்ரோனிங்  ”Cracks in the House of Asad: Why a Supposedly Stable Regime Is Looking Fragile”. [2]என்ற தலைப்பில் மற்றொரு தலையெங்கம் எழுத நிர்பந்திங்கப்பட்டார்.
 
 
இதற்கு அடுத்தபடியாக ஆச்சரியத்தில் இருந்த அமெரிக்காவும் சிரியாவில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை விரும்பவில்லை. திரைமறைவில் அது சிரிய அரசுக்கு மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது, அதாவது 2000ம் ஆண்டில் ஹாஃபிஸ் அல் அசாத் இறந்தவுடன், அமெரிக்கா அவருடைய மகன் பஷாரை பதவியேற்க தூண்டியது. அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் மேடலின் ஆல்பிரைட், இது விஷயமாக இவ்வாறு கூறினார்: “டாக்டர். பஷார் அசாத் பொறுப்பேற்று கொண்டு ஆட்சி மாற்றத்திற்கான ஏற்பாடுகளை செய்வதை நான் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதுகிறேன்”. [3] அது முதற்கொண்டு பஷார் அல் அசாதை ஜான் கெர்ரியும் அமெரிக்க அரசை சார்ந்த மற்ற முன்னனி உறுப்பினர்களும் பலமுறை சந்தித்த நிகழ்வுகள் நடைபெற்றன[4] மேலும் இச்சந்திப்புகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் 70% விஷயங்களுக்கு பஷார் அல் அசாத் ஒப்புக்கொண்டதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. [5] இதன் விளைவாக அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் சிரியா மிகுந்த ஆதரவை அளித்து வருகிறது, எந்த அளவிற்கு என்றால் தனிநபர்களை அமெரிக்காவின் சார்பாக கொடுமை படுத்தும் அளவிற்கு இருந்து வருகிறது. [6]
 
 
ஆச்சர்யத்திற்கு இடமளிக்காத வகையில், இதன் காரணமாக, அமெரிக்கா சிரியாவில் நடைபெற்று வரும் புரட்சிக்கு ஒரு ” அரசியல் தீர்வை” மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறது. இந்த விஷயத்திற்காக ஆதரவை திரட்ட ஒரு சர்வதேச செயற்திட்ட குழுவை அமைக்க அது ஏற்பாடு செய்தது மேலும் ஜெனீவாவில் கருத்தரங்கம் முடிந்தவுடன் இந்த செயற்திட்ட குழு ஒரு “இறுதி செய்தியை” வெளியிட்டது அது அரசியல் தீர்வு” என்பதற்கான உண்மையான அர்த்தத்தை விளக்கியது: “அரசு மற்றும் எதிரணி உறுப்பினர்களை கொண்டு ஒரு அரசு மாற்றத்தை செயல்படுத்தும் ஒரு மேலான்மை குழுவை முழு செயலாற்றும் சக்திகளை உள்ளடக்கிவாறு உருவாக்க வேண்டும், மேலும் அரசு நிர்வாகங்கள் மற்றும் கைதேர்ந்த ஊழியர்கள் ராணுவப்படை மற்றும் பாதுகாப்புப்படை போன்றவை உள்ளடக்கிய  தொடர்ந்து செயல்படும் வண்ணம் அதை பரஸ்பர சம்மதத்துடன் அமைக்க வேண்டும்”. [7] வேறு வார்த்தையில் கூற வேண்டும் என்றால், அரசின் தலை விழுவது தான் அமெரிக்காவின் திட்டம், எந்த வகையில் என்றால் அரசின் மற்ற தூண்கள், ராணுவம் மற்றும் பாதுகாப்பு படை போன்றவற்றை முன்னிருந்தவாரே தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
 
 
ஆகையால், சிரிய புரட்சியாளர்களுக்கு உதவப்போவதில்லை என அமெரிக்கா முடிவெடுத்தது மேலும் ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது என ஹிலாரி கிளிண்டன் விவரித்தார். ” நீங்கள் ஒரு ராணுவ திட்டத்தை தீட்டக்கூடியவராகவோ அல்லது வெளியுறவு அமைச்சராகவோ இருந்து உங்களது கண்ணுக்கு புலப்படாத  நீங்கள் தொடர்பு வைத்துக்கொள்ள கூடிய ஒரு எதிரணி இருக்கின்றதா என்று கண்டு கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கையில்”, இதன் அர்த்தம் என்னவெனில் அமெரிக்காவிற்காக தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி அதற்காக வேலை செய்யக்கூடிய எந்தவொரு எதிரணியையும் கண்டுகொள்ள முடியாமல் போனது. [8] கார்னெகீ என்டோவ்மெண்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் என்னும் நிறுவனத்தில் பணிபுரியும் ஆரோன் லண்டு எனும் சிரியா ஆய்வாளர், கிளிண்டனின் கணக்கை ஊர்ஜிதப்படுத்தினார். “நீங்கள் மனித உரிமையை மதிக்கும் தூய்மையான, சுத்தமான, மதசார்பற்ற போராட்டக்குழுவை காணப்போவதில்லை ஏனெனில் அதுபோன்ற ஒன்று அங்கு இல்லவே இல்லை”, என்று கூறினார், மேலும் இதன் காரணமாகத்தான் அமெரிக்கா ஒரு” மிதவாத எதிரணியை” உருவாக்க முயலும் முயற்சிகள் முழுமையான தோல்வி அடைந்துள்ளது – சிரியன் நேஷனல் கவுன்சிலின் (SNC) ஆதிக்கமானது அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களின் வரவேற்பு அறை வரை தான் உள்ளது [9], அதே சமயம் அமெரிக்காவால் பயில்விக்கப்பட்ட சிறிய அளவிளான சிரிய வீரர்களில் பெரும்பாலோர் சுதந்திர போராட்டக்குழுவினருடன் மறுபடியும் சேருகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. [10]
 
 
இந்த சூழ்நிலையில் சிரியாவினுல் ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் வருகை அமெரிக்காவிற்கு பேருதவியாக அமைந்தது. 2013 ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி முதல் 2014 ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி வரை ஐ.எஸ்.ஐ.எஸ் சிரியாவில் நடத்திய தாக்குதல்களில் 64% மற்ற போராட்டக்குழுக்களின் மீது நடத்தப்பட்டதாகும் வெறும் 13% தாக்குதல்கள் தான் அரசின் மீது நடத்தப்பட்டது என ஜேன்ஸ் இன்டெலிஜென்ஸின் ஆய்வு தெரிவிக்கின்றது. அதேபோல் அல்-அசாதின் படைகள் ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ பெரும் அளவில் தொடாமல் விட்டுள்ளது. அதே காலத்தில் அது நடத்திய 982 தாக்குதல்களில் வெறும் 6% தாக்குதல்களை மட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் மீது நடத்தியுள்ளது. [11] ஆகையால் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் ன் வருகை சிரிய புரட்சியாளர்களுக்கு இரண்டாவது எதிரியை கொண்டு வந்துள்ளது மேலும் இதன் காரணமாக அவர்களுக்கு இரண்டாவது முனையை எதிர்கொள்ளும் சூழலை ஏற்படுத்தியுள்ளது, அவர்களை நோக்கி அல்-அசாத் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளிலிருந்து தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கும் வேளையில் ஐ.எஸ்.ஐ.எஸ் கிழக்கிலிருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
 
 
அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ் ஸிற்கு எதிராக பெரும் காரியம் செய்யும் என ஒருவரும் எதிர்பார்க்க முடியாது, ஆகையால், சிரியாவின் மேடையில் அவர்கள் தோன்றியதிலிருந்து அமெரிக்காவின் நோக்கமான அரசை தக்கவைக்கும் செயலுக்கு உதவியாக அமைந்தது அதாவது போராட்டக்குழுக்கள் அல்-அசாதை தோற்கடிப்பதிலிருந்து தடுத்து நிறுத்துவது. மேலும் நிச்சயமாக, ஐ.எஸ்.ஐ.எஸ் ஸிற்கு எதிராக அமெரிக்கா 2014 ல்  நடத்திய தாக்குதல்களில் மிகவும் அரிதாகவே அதன் ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் இலக்கை சென்றடைந்தது – இது தன்னிச்சையாக செயல்படும் போராட்டக்குழுக்களை தாக்க வேண்டும் என திட்டமிட்டு நடத்தப்பட்ட மறைமுக தாக்குதல்களாகும். [12]
 
 
ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ துடைத்தெறிவது ஒருபோதும் எங்களது நோக்கமாக இருந்தது அல்ல என ஒபாமா சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். “முதலில் அவர்களை கட்டுப்படுத்துவதே  ஆரம்பத்திலிருந்து எங்களுடைய நோக்கமாக இருந்து வந்தது, அவர்களை நாங்கள் கட்டுப்படுத்திவிட்டோம். அவர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் சிரியாவில் எந்தவொரு அடித்தளத்தையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. ஆனால் இந்த பகுதியல் ஐ.எஸ்.ஐ.எல் ன்  இந்த படிப்படையான முன்னேற்றத்தை உங்களால் பார்க்க முடியாது”. [13] என அவர் கூறினார்.
 
 
இவை அனைத்தையும் காட்டிலும், 2015 கோடையில் சிரிய அரசு கவிழ்ந்து விடுமோ என அமெரிக்கா அச்சமுற தொடங்கியது. குறைந்த இடைவெளியில் அரசு தன் கட்டுப்பாட்டிலுள்ள  லட்டாக்கியா மற்றும் டமாஸ்கஸ் ஆகிய பகுதிகளை தவிர இத்லிப், ஹோம்ஸ், அலெப்போ மற்றும் தெய்ர் அல்-ஜோர் ஆகிய பகுதிகளில் புரட்சியாளர்களிடம் தோற்றது. ஆனால் புரட்சியாளர்கள் இவ்விரு பகுதிகளையும் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்த ஒன்று கூடினர். [15] அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்த சூழ்நிலை பற்றி கலந்தாலோசிக்க  அதிகாரபூர்வமாக சந்திப்புகளை மேற்கொண்டனர். இந்த சந்திப்புகளின் வெளிப்பாடாக ரஷ்யா சிரிய அரசுக்கு ராணுவ ஒத்துழைப்பை வழங்க ஆரம்பித்தது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இவ்வாறு கூறினார்: நாங்கள் அனைவரும் ஒரு ஜனநாயக, ஒருங்கிணைந்த, மதசார்பற்ற சிரியாவை விரும்புகிறோம், அதை எப்படி அடைய போகிறோம் என்பது பற்றி சில விஷயங்களில் நாங்கள் கருத்து வேறுபாடு கொட்டுள்ளோம் (அமெரிக்காவுடன்). ஆனால் உடனடியாக எடுக்கப்போகும் சில நடவடிக்கைகள் குறித்து நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்”. [16]
 
 
லாவ்ரோவ் தெரிவித்த கருத்து வேற்றுமை என்னவென்றால் அமெரிக்காவின் “அரசியல் தீர்வில்” பஷார் அல் அசாதின் பங்கு என்ன என்பது தான், ஆனால் இந்த விஷயத்திலும்  இவ்விரு தரப்பினரும் வெகு விரைவில் ஒரு தீர்வை ஏற்படுத்தி கொண்டனர். 4 வருட காலமாக அசாத் வெளியேற வேண்டும் என நிர்பந்தித்து வந்த அமெரிக்கா 2015 அக்டோபர் மாதத்தில் திடீரென அவர் வெளியேற வேண்டும் ஆனால் உடனடியாக வெளியேற வேண்டும் என்பது அவசியமில்லை என திடீரென அறிவித்தது. வேறு வார்த்தையில் கூற வேண்டும் எனில், ரஷ்யாவின் நிலையில் அமெரிக்கா தன்னை நிலைநிறுத்தி தங்கள் இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேற்றுமையை சரி செய்தது. [16] கடந்த அக்டோபர் மாதம் மாஸ்கோ பயணம் மேற்கொண்ட அசாதிடம் கண்டிப்பாக தாங்கள் வெளியேற வேண்டும் என ரஷ்யா கூறியதாக இஸ்ரேலிலிருந்து வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. [17]
 
 
ஆகையால், 2015 அக்டோபர் தொடக்கத்தில் ரஷ்யா சிரியாவில் ராணுவ தாக்குதல்களை தொடங்கியது, இது அந்த நாட்டில் அமெரிக்காவின் நலன்களை பாதிக்கும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சி அல்ல. ஏனெனில் இது அமெரிக்காவின் நலன்களுக்கு ஆதராவாக, ரஷ்யா  அமெரிக்காவின் ஒப்புதலோடு தான் இதுபோன்று செயல்பட்டது. 2014 செப்டம்பரில் அமெரிக்கா எதை செய்ததோ அதே போன்று  ரஷ்யா சிரியாவில் தான் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்த வேண்டியே ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ  காரணம் காட்டியது ஏனெனில் அது ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் தன்னுடைய தாக்குதல்களை தொடங்கவில்லை. மாறாக, அதன் தாக்குதல் சிரிய அரசுக்கு அச்சுறுத்தலாக இருந்த மற்றும் அரசின் மீது தாக்குதல்களை மேற்கொண்ட  மற்ற புரட்சிக்குழுக்களின் மீது தான் இருந்தது. [18] லாவ்ரோவ் இதை விவரித்து இவ்வாறு கூறினார்: “நாங்கள்  இவ்விஷயத்தில் இந்த கூட்டணியுடன் ஒரே பார்வையை தான் கொண்டுள்ளோம். நாங்கள் ஒரே அனுகுமுறையை தான் கொண்டுள்ளோம்: அது ஐ.எஸ்.ஐ.எல், அல்-நுஸ்ரா அல்லது வேறு தீவிரவாத குழுக்களாக இருந்தாலும் சரி.” [19]
 
 
அத்தருணத்தில், லாவ்ரோவ் குறிப்பிட்ட கூட்டணியில் பிரான்ஸ் சேராமல் இருந்தது. உண்மையில், சிரியாவில் பிரான்ஸ் எப்போதும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின்  திட்டங்களுக்கு மாற்றமாகவே செயல்படும் வரலாறை கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, 2013 ல்,அசாத் டமாஸ்கஸிற்கு அருகில் கவ்ட்டா எனும் இடத்தில் ரசாயன ஆயுதங்களை உபயோகித்து 1,400 பேரை கொன்ற போது, பிரான்ஸ் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள கடின முயற்சி மேற்கொண்டது ஆனால் அதன்படி செயல்பட அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மறுத்துவிட்டார். மிக சமீபத்தில்,  அமெரிக்கா அல்-அசாத் வெளியேற வேண்டும் என்ற  தனது முந்தய கோரிக்கையிலிருந்து அரசு மாற்றத்தை செயல்படுத்தும் காலம்வரை சில மாதங்கள் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம் என்று பின்வாங்கிய போது, அல்-அசாதை வெளியேற்ற வேண்டும் என்ற நிலையில் தொடர்ந்து உறுதியாக இருந்தது. அமெரிக்காவும் ரஷ்யாவும் அல்-அசாத் பிரச்சினை பற்றி விவாதித்து கொண்டிருந்த சமயம், அசாத் அரசின் மீது போர் குற்றத்திற்கான விசாரணையை திடீரென பிரான்ஸ் தொடங்கியது. [20]
 
 
2015 செப்டம்பர் மாதம் சிரியாவில் பிரான்ஸ் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளும் அமெரிக்காவுடன் ஒன்றிணையாமல் நடத்தப்படவை ஆகும். [21] இதன் விளைவாக, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் அடங்கிய ஐந்து கண்கள் புலணாய்வு கூட்டணி எனப்படும் கூட்டணியில் பிரான்ஸ் இடம் பெறவில்லை. இந்த கூட்டணியில் மேற்கூறப்பட்ட ஐந்து நாடுகள் அத்தருணத்தில், லாவ்ரோவ் குறிப்பிட்ட கூட்டணியில் பிரான்ஸ் சேராமல் இருந்தது. உண்மையில், சிரியாவில் பிரான்ஸ் எப்போதும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின்  திட்டங்களுக்கு மாற்றமாகவே செயல்படும் வரலாறை கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, 2013 ல்,அசாத் டமாஸ்கஸிற்கு அருகில் கவ்ட்டா எனும் இடத்தில் ரசாயன ஆயுதங்களை உபயோகித்து 1,400 பேரை கொன்ற போது, ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பிரான்ஸ் மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டது ஆனால் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இதை செயல்படுத்த மறுத்துவிட்டார். மிக சமீபத்தில், அமெரிக்கா அல்-அசாத் வெளியேற வேண்டும் என்ற தன்னுடைய முந்தய கோரிக்கையை தளர்த்தி ஆட்சி மாற்றம் நடைபெறும் காலம் வரை சில மாத காலம் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம் என்று பின்வாங்கிய போது, பிரான்ஸ்  தொடர்ந்து அல்-அசாதை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் தொடர்ந்து திடமாக இருந்து வந்தது. அமெரிக்காவும் ரஷ்யாவும் அல்-அசாத் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த சமயம், பிரான்ஸ் திடீரென அசாத் அரசின் மீது போர் குற்றத்திற்கான விணாரணையை தொடங்கியது. [22]
 
 
நவம்பர் மாதம் 13ம் தேதி மாலை பாரீஸில் நடந்த தாக்குதல்கள் அமெரிக்காவுக்கு இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள  பெருமளவில் உதவி புரிந்தது.
 
 
அச்சமயம் அமெரிக்கா சிரியாவுக்கான தன் திட்டத்திற்காக உலகை ஒன்றிணைப்பதற்காக சர்வதேச சமூகத்துடன் வியன்னாவில் கலந்தாய்வில் இருந்தது. அதிகாரபூர்வமாக, இந்த கலந்தாய்வு “ஒரு தீர்வை காணவேண்டும்” என்பதற்காக ஒருங்கிணைக்கப்பட்டது, ஆனால் அங்கு நடந்த நிகழ்வுகளில் அது போன்ற ஒரு நிலை இருந்ததாக தெரியவில்லை. சிரியாவுக்கான வெளியுறவு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஸ்டாஃபன் டி மிஸ்டுரா அமைத்த செயற்குழுவின் அனைத்து தலைமை பொறுப்பையும் அமெரிக்கா ஏற்றுக்கொண்டு, ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான செயற்திட்டம் குறித்து வரையறுத்தது. உலகின் இதர முன்னனி நாடுகளான ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு தலைமை பொறுப்பு கொடுக்கப்படவில்லை இவர்கள் அனைவரும் அமெரிக்கா தயாரித்த செயற்திட்டத்தின் அடிப்படையிலான கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு தான்  அனுமதி அளிக்கப்பட்டது. வேறு வார்த்தையில் கூற வேண்டும் என்றால், அமெரிக்கா சர்வதேச சமூகங்கள் தான் முன்வைக்கும் தீர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகிறது, இந்த விஷயத்தில் ரஷ்யாவும் உடன்பட்டது. [23]
 
 
இது அந்த கலந்தாய்வின் முன்னேற்றத்தை தடுத்தது. அதாவது, பாரீஸ் தாக்கப்படும் வரை. நவம்பர் 14ம் தேதி, இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் திடீரென ஒரு ஒப்பதலுக்கு வந்தனர். சர்வதேச ஊடகங்கள்  வெளியிடப்பட்ட செய்தியாவது: “பாரீஸில் நடந்த தாக்குதலால் தூண்டப்பட்டு பதினேழு நாடுகள் சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடித்து வைக்க தங்களுக்கிடையே இருந்து வேற்றுமைகளை களைந்து ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து கொண்டனர்”. [24] “பாரீஸ் நகரி்ல் நடந்த தாக்குதல் தூதர்களை ஒன்று சேர்த்திருக்கின்றது, இவர்கள் தங்கள் அளவிலான முந்தய பேச்சுவார்த்தைகளில்  ஏற்பட்ட வேற்றுமைகளை களைய முடியாமல் இருந்தனர். இந்த பாரீஸ தாக்குதல் ‘நீங்கள் அசாதிற்கு ஆதரவாக இருக்கிறீர்களா இல்லையா என்பது முக்கியமில்லை என்பதை காட்டுகின்றது’, என்று லாவ்ரோவ் கூறினார், ‘ஐ.எஸ்.ஐ.எஸ் தான் உங்களது எதிரி’. [25]
 
 
சிரியாவிற்கான அமெரிக்காவின் திட்டங்களின் விவரங்கள் வரிமாறு:
 
. 2015 டிசம்பர் 14ம் தேதி: தூதர்கள் மறுபடியும் கூடி செயல்பாடுகளை சரிபார்க்க வேண்டும்.
 
. 2016 ஜனவரி 1ம் தேதி: சிரியா அரசையும் எதிரணியினரையும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா சபையிடம் கோரிக்கை வைக்க வேண்டும்
. 6 மாதங்களில் அல்லது 2016 மே மாதம் 14 ம் தேதி: சிரயா அரசுக்கும் எதிரணியினருக்கும் இடையே போர் நிறுத்தம் செய்து; புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சியை தொடங்க வேண்டும்.
. 18 மாதங்களில், அல்லது 2017 ம் ஆண்டு மே 14 ம் தேதி: ஐ.நா மேற்பார்வையில் புதிய அரசியல் அமைப்பின் கீழ் தேர்தல் நடத்த வேண்டும். [26]
 
மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அதனுடன் அல்-கய்தாவின் அங்கமான நுஸ்ரா ஃபிரண்ட் தீவிரவாத அமைப்பையும், போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்பாட்டில்  இருக்கும் நிலையிலும் ராணுவ தாக்குதல்கள் தொடுக்கும் பட்டியலில் இவர்களை வைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஜோர்டானிய அரசால் நிர்வகிக்கப்படும் இந்த பட்டியலில், பிற்காலத்தில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் திட்டங்களுக்கு உடன்பட மறுக்கும் சிரியாவின் இதர குழுக்களையும் சேர்த்துக்கொள்ளலாம். [27]
 
 
இந்த ஒப்பந்தத்திற்கு பிரான்சும் ஆதரவு தெரிவித்தது. அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் கார்டருக்கும் பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் ஜான்-வேஸ் லா டிரியானுக்கும் இடையே பாரீஸ் தாக்குதல் நடந்ததை தொடர்ந்து அந்த வார இறுதி நாட்களில் நடந்து தொலைபேசி உரையாடல்கள் மூலம் இரு நாடுகளுக்கு மத்தியில் உள்ள வேற்றுமைகள் களையப்பட்டது, இதன் விளைவாக சிரயாவில் அமெரிக்காவின் தலைமையில் செயல்பட பிரான்ஸ் சம்மதித்தது. இதன் பின்னர் அமெரிக்கா பிரான்சுடன் உளவுத்துறை தகவல்களை பரிமாற தொடங்கியது, மேலும் இவ்வாறு இரு நாடுகளும் சிரியாவில் ராணுவ தாக்குதல்களை ஒன்றினைந்து நடத்த தொடங்கியது. அமெரிக்காவால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிகளை நோக்கி பிரெஞ்சு போர் விமானங்கள் தாக்குதல் நடத்த தொடங்கியது. [28]
 
 
முடிவுறையாக, சிரியாவினுள் ஐ.எஸ்.ஐ.எஸ் ன் வருகை அல்-அசாத் அரசின் ஆட்சி நீடித்து இருக்க பெரும் உதவி புரிந்தது, மேலும் உண்மையில் அல்-அசாத் அரசுக்கு ஆதரவாக இருக்கும் சிரியாவின் மீதான அமெரிக்க, ரஷ்ய மற்றும் பிரெஞ்சு (மேலும் மற்றவர்கள்) நடத்தும் ராணுவ தாக்குதல்களை நியாயப்படுத்தும் வண்ணம் அமைந்தது, மேலும் இது உலகை சிரியாவிற்கான அமெரிக்காவில் திட்டத்தின் பால் ஒன்றிணைத்தது.
 
 
[1] “The Sturdy House that Asad Built: Why Dam­as­cus is not Cairo”, www.foreignaffairs.com/articles/syria/2011–03-07/sturdy-house-assad-built
[2] “Cracks in the House of Asad: Why a Sup­pos­edly Sta­ble Regime Is Look­ing Frag­ile”, www.foreignaffairs.com/articles/syria/2011–05-19/cracks-house-assad
[3] “Albright press brief­ing prior to depar­ture for Al-Asad funeral”, www.usembassy-israel.org.il/publish/peace/archives/2000/june/me0612d.html
[4] “Kerry dis­cov­ers Assad is no reformer”,
[5] www.enduringamerica.com/home/2010/12/1/wikileaks-document-syrias-assad-gives-the-ultimate-response.html
[6] “Syria: The Not So Long Ago Cher­ished US Part­ner in Intel­li­gence, Ren­di­tion & Tor­ture Oper­a­tions”, www.boilingfrogspost.com/2011/12/10/syria-the-not-so-long-ago-cherished-us-partner-in-intelligence-rendition-torture-operations/
[7] “Action Group for Syria: Final Com­mu­nique”, www.un.org/News/dh/infocus/Syria/FinalCommuniqueActionGroupforSyria.pdf
[8] “Clin­ton: Arm­ing rebels could help Al-Qaeda”, www.cbsnews.com/news/clinton-arming-syrian-rebels-could-help-al-qaeda/
[9] “Syr­ian Oppo­si­tion Groups Stop Pre­tend­ing”, www.newyorker.com/news/news-desk/syrian-opposition-groups-stop-pretending
[10] “Obama Admin­is­tra­tion Ends Effort to Train Syr­i­ans to Com­bat ISIS”, www.nytimes.com/2015/10/10/world/middleeast/pentagon-program-islamic-state-syria.html?_r=0
[11] “Is ISIS a US Proxy?”, www.revolutionobserver.com/2014/12/isis-a-us-proxy.html
[12] “Syria rebels dis­mayed by US air attacks on non-ISIS groups”, www.ft.com/intl/cms/s/0/12cd016e-4328-11e4-8a43-00144feabdc0.html#slide0 See also: www.revolutionobserver.com/2014/09/operation-saving-bashar-al-assad.html
[13] “Obama on ISIS: ‘We have Con­tained Them’ ”, www.realclearpolitics.com/video/2015/11/13/obama_on_isis_we_have_contained_them.html
[14] “String of losses in Syria leaves Asad regime increas­ingly pre­car­i­ous”, www.theguardian.com/world/2015/jun/11/syria-losses-east-assad-regime-precarious
[15] “Remarks with Russ­ian For­eign Min­is­ter Lavrov”, www.state.gov/secretary/remarks/2015/09/247662.htm
[16] “US says Asad must go, tim­ing down to nego­ti­a­tion”, www.reuters.com/article/2015/09/19/us-mideastcrisis-kerrytalks-idUSKCN0RJ0FX20150919
[17] “Putin told Assad ‘go or you’ll be made to go,’ Israeli offi­cials say”, www.timesofisrael.com/putin-told-assad-to-go-or-be-made-to-go-israeli-officials-say/
[18] “Rus­sians Strike Tar­gets in Syria, but not ISIS Areas”, www.nytimes.com/2015/10/01/world/europe/russia-airstrikes-syria.html
[19] “Rus­sia is strik­ing same tar­gets in Syria as US: Lavrov”, http://news.yahoo.com/russia-not-planning-air-strikes-iraq-lavrov-160921744.html
[20] “France more active than rest of the west in tack­ling Syria”, www.theguardian.com/world/2015/nov/14/france-active-policy-syria-assad-isis-paris-attacks-air-strikes
[21] “France launches its first airstrikes against ISIS in Syria”, http://edition.cnn.com/2015/09/27/middleeast/syria-france-isis-bombing/
[22] “France Launches Airstrikes Against Islamic State Strong­hold in Syria”, www.wsj.com/articles/u-s-providing-targeting-intelligence-to-france-for-strikes-on-islamic-state-after-paris-attacks-1447618522
[23] “Rus­sia accuses US of hijack­ing meet­ings to pre­pare for Syria talks, US says Moscow didn’t show”, www.usnews.com/news/world/articles/2015/11/12/russia-accuses-us-of-hijacking-preparations-for-syria-talks
[24] “Paris attacks: Syr­ian tran­si­tion plan reached by US, Rus­sia in Vienna talks”, www.smh.com.au/world/paris-attacks-syrian-transition-plan-reached-by-us-russia-in-vienna-talks-20151115-gkz9qa.html#ixzz3rqvYg8Vx
[25] “Syr­ian Tran­si­tion Plan Reached by U.S., Rus­sia in Vienna”, www.bloomberg.com/news/articles/2015–11-14/syrian-transition-plan-achieved-by-u-s-allies-kerry-says
[26] “Syr­ian Tran­si­tion Plan Reached by U.S., Rus­sia in Vienna”, www.bloomberg.com/news/articles/2015–11-14/syrian-transition-plan-achieved-by-u-s-allies-kerry-says
[27] “Syr­ian Tran­si­tion Plan Reached by U.S., Rus­sia in Vienna”, www.bloomberg.com/news/articles/2015–11-14/syrian-transition-plan-achieved-by-u-s-allies-kerry-says
[28] “France Launches Airstrikes Against Islamic State Strong­hold in Syria”, www.wsj.com/articles/u-s-providing-targeting-intelligence-to-france-for-strikes-on-islamic-state-after-paris-attacks-1447618522

http://sindhanai.org/

May 2, 2016

அமெரிக்கா சிரியாவிற்கென செயற்திட்டம் கொண்டுள்ளதா?


 

சிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள்  தங்களுக்கு இந்த விஷயம் முக்கியமற்றது எனவும் தங்களுக்கு அந்த நாட்டிற்கென எந்தவொரு செயற்திட்டமும்  இல்லை எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதனடிப்படையில் அன்மையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா  ஜெர்மனியில் ஜூன் 8ம் தேதி நடந்த எழுவர்(7) குழு (G7) உச்சி மாநாட்டில் ஒரு செய்தி அறிவப்பின்போது இவ்வாறு கூறினார்: “பயிற்சியளிப்பதையும் உதவி புரிந்து வருவதையும் அமெரிக்கா தொடர்ந்து செயல்படுத்தும்,” என கூறி அதன் பின்னர் “எங்களிடம் இன்னும் ஒரு முழுமையான செயற்திட்டம் இல்லை” என ஒப்புக்கொண்டார்.[1] அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டரும் ஜான் கெர்ரியும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ எதிர்கொள்ள ஒரு முழுமையான செயற்திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை என அறிவித்துள்ளனர்.  அமெரிக்காவின் சிரியா மற்றும் ஈராக்கின் நோக்கத்தை மேலும் சிக்கல் ஏற்படுத்தக்கூடிய அளவு வெளிதோற்றத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பெருமளவு சக்தியுடையதாக தோற்றம் அளித்தாலும், உண்மையில் அமெரிக்க அதிகாரிகள் அவர்களுடைய செயற்திட்டத்தை வெளி உலகிற்கு தெரிவிக்காமல் இருக்கின்றனர் இது அவர்களுடைய உண்மையான செயற்திட்டத்தை நடைமுறை படுத்துவதற்கு கால அவகாசம் எடுத்து கொண்டிருக்கின்றனர், இந்த உண்மை சிரியா எனும் அரங்கில் பங்கு கொண்டிருக்கும் அனைவருக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளை உற்று நோக்கினால் நமக்கு தெரியவரும்.

பஷார் அல்-அசாதின் அரசை பொறுத்தவரை அமெரிக்கா எப்போதும் ஒரே நிலைபாட்டை கொண்டிருக்கிறது, இது அதற்கென ஒரு தெளிவான செயற்திட்டத்தை கொண்டிருப்பதை காட்டுகிறது. மார்ச் 2011ல் புரட்சி முழுவீச்சில் தடைபெற்று கொண்டிருந்த சமயம், அமெரிக்காவின் திட்டத்தை மேற்கோள் காட்டி ஹிலாரி கிளிண்டன் இவ்வாறு கூறினார்: “சிரியாவின் உள்ளே நடைபெற்று கொண்டிருப்பவை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி வருகிறது, நான் அறிவது என்னவெனில் ஒரு மறு சீரமைப்பிற்கான திட்டத்தை கொண்டு வரும் வாய்ப்பு அவர்களிடம் உள்ளது. சிரியாவில் முன்னேற்றத்திற்கான வழி இருப்பதாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆகவே நாங்கள் எங்களுடைய அனைத்து நேசர்களுடன் தொடர்ந்து கை கோர்ந்து இந்த விஷயத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவோம்.” [2] இந்த புரட்சி மாதக்கணக்கிலிருந்து வருடக்கணக்காக நடைபெற்று கொண்டிருக்கிறது, அமெரிக்க அதிகாரிகள் அல்-அசாதை கண்டித்தார்களே தவிர அவரையோ அல்லது அவரது அரசை நீக்கவோ எதையும் செய்யவில்லை. பல நேரங்களில் உபயோகப்படுத்தப்பட்ட ரசாயன ஆயுதங்கள், கணக்கில்லாமல் போடப்பட்ட குழாய் வெடிகுண்டுகள், புரட்சி படைகளை உபயோகித்தது மேலும் பொது மக்களை ராணுவத்தை கொண்டு சுற்றி வளைத்தது மற்றும் அவர்கள் மீது குண்டு மழை பொழிந்தது இவ்வனைத்து செயல்களுக்கும் கண்டனத்தை தவிர அமெரிக்கா வேறு எதையும் செய்யாதததை காண்கிறோம், இது அல்-அசாதின் அரசு தொடர்ந்து பதவியில் நீடிக்க செய்யவும் மேலும் அவர் அந்த நிலையை தக்க வைத்து கொள்வதற்கான பாதுகாப்பு அரணாகவும் அமைந்தது. சிரிய அரசு பற்றிய அமெரிக்காவின் உண்மை நிலையை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பேனெட்டா சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் மூலம் ஊர்ஜிதமாக்குகிறது, அதில் அவர் இவ்வாறு கூறினார்: “அசாத் வெளியேறும்போது முக்கிய விஷயமாக நான் கருதுவது-நிச்சயமாக அவர் வெளியேறுவார்-அந்த நாட்டில் நிலைத்தன்மையை பாதுகாக்க முயல வேண்டும். மேலும் அந்த வகையான நிலைத்தன்மை நீடித்து இருக்க அதிக அளவிளான ராணுவத்தையும், காவல்துறையையும் பாதுகாப்பு படையினருடன் சேர்த்து நிலை நிறுத்த வேண்டும், மேலும் அவர்கள் ஜனநாயக முறையிலான அரசை ஏற்படுத்துவதற்கு முன் வருவார்கள் என நம்புகிறேன்.” [3] அமெரிக்கா இந்த புரட்சியின் முடிவு எதுவாகினும் இந்த அரசு தொடர்ந்து நீடிக்க விரும்புகிறது, ஒன்று அசாத் இருக்கும் நிலையில் அல்லது அசாத் இல்லாத நிலையில்.

சிரியாவின் புரட்சியானது மக்களை பல படை பிரிவுகளாக ஒருங்கிணைக்க வைத்தது, நாட்டின் வெளியே இருந்தும் பலர் தங்களுடைய சகோதரர்களுடன் சேர்ந்து அந்நாட்டிற்காக போராடத்தில் கலந்து கொண்டனர். அல்-அசாத் தேவை ஏற்படின் கொடூரமான முறைகளை கையாளக்கூடிய வழக்கத்தை கொண்டிருப்பவர் என்பதால் பெரும்பாலான உலகம் இந்த புரட்சியை அந்த அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என நம்பினர். ஆனால் புரட்சியாளர்கள் நாட்டின் அனைத்து முனைகளிலிருந்து அரசுக்கு எதிராக போராடி வருவதால், குறிப்பாக ராணுவத்திலிருந்து பல அதிகாரிகள் வெளியேறியதால், இந்த அரசு இந்த புரட்சியை தோற்கடிக்கும் திறனை முழுமையாக பெற்றிருக்கவில்லை; இந்த போராட்டம் வெகுவிரைவில் ஒரு இக்கட்டான நிலையை அடைந்தது. இங்கு தான் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தவும், ஆயுத உதவி செய்வதற்கும் மற்றும் சர்வதேச மாநாடுகளில் சிரியாவின் எதிர்காலம் குறித்து அவர்களுடைய கருத்தை கேட்பதற்கு தோதுவான ஒரு எதிரணியை உருவாக்கும் முயற்சியை தொடங்கியது. அமெரிக்கா மற்ற குழுக்களை விடுத்து சில குறிப்பிட்ட குழுக்களிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதிலிருந்து அதன் செயற்திட்டம் தெளிவாக தெரிகிறது. அதே போல் அந்த நாட்டின் நிலைப்பாட்டை மாற்றக்கூடிய அளவிற்கான எந்த குழுவிற்கும் போதிய ஆயுதத்தை அது வழங்கவில்லை. நான்கு வருடங்கள் ஆகின்றது, ஃபிரீ சிரியன் ஆர்மி(FSA), தி சிரியன் தேஷனல் கோஅலிஷன் (SNA) போன்ற அமைப்புகளை அமெரிக்கா வியாபாரம் செய்ய விரும்பாத அமைப்புகள் மறைக்க செய்தது. இஸ்லாமிய அமைப்புகள் உட்பட உண்மையான அமைப்புகளை விட மதசார்பற்ற அமைப்புகளை ஊக்கப்படுத்துவதே அமெரிக்காவின் செயற்திட்டமாகும். இந்த முயற்சி முற்றிலும் தோல்வி அடைந்தது இதன் காரணமாகவே அமெரிக்கா சிரியா அரங்கில் குழுக்களுக்கு நேரடியாக பயிற்சி அளிக்கப்போவதாக அறிவித்தது.[4] இவையனைத்தும் சிரியாவிற்கென அமெரிக்கா ஒரு தெளிவான செயற்திட்டத்தின் அடிப்படையில் செயலாற்றி கொண்டிருப்பதை காட்டுகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸின் வருகை சிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் புரட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதே தவிற எந்த விதத்திலும் அதற்கு உதவியாக இருக்கவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் விஜயமானது போராட்டக்காரர்கள் நாட்டின் தலைநகரான டமாஸ்கஸில் தாக்குதல்கள் நடத்தி கொண்டிருக்கையில் நடைபெற்றது. அல்-அசாத் அரசு வெகு சில வீரர்களை மட்டுமே  நம்பி இருந்தது மேலும் இந்த புரட்சியில் தாக்குபிடிக்க அது ஈரானிய உதவியையும் ஆதரவையும் முழுமையாக நம்பி இருந்தது.   இந்த வசந்தத்தில் இஸ்லாமிய வாசம் வீசுவது தெளிவாக தெரிகின்றது, இந்த அரசை நீக்கி இஸ்லாமிய அடிப்படையிலான ஒன்றை நிறுவ வேண்டியே போராட்டக்குழுக்களின் பெரும்பான்மையான கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த சமயத்தில் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் விஜயமானது வந்ததோடு இந்த புரட்சியை தடம்புரள செய்தது. ஜூன் 2014ல் மொசூலை வெற்றி கொண்டதிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் விரிவாக்கத்தை தொடக்கி வைத்தது.  ஐ.எஸ்.ஐ.எஸ் கைப்பற்றுவதற்கு உகந்த நிலையை ஏற்படுத்த உதவும் விதத்தில் ஈராக்கிய ராணுவத்திலிருந்து எண்ணிலடங்கா அதிகாரிகளை தங்களின் பொறுப்பையும்  நிலையையும் விட்டு செல்லுமாறு கட்டளையிடப்பட்டதாக அவர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர் என்பதை  நீண்ட நாட்களுக்கு முன்பிருந்தே ரெவல்யூஷன் அப்சர்வரில் (www.revolutionobserver.com) நாம் இந்த நிலைபாட்டை தெளிவாக விளக்கி வருகிறோம். ஈராக்கிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் சிரியா நோக்கி விரிவடைந்து அங்குள்ள அனைத்து போராட்ட குழக்களுடன் நீடித்து நடைபெறக்கூடிய யுத்தத்தில் நுழைந்தது. சிரியாவின் வட பகுதியில் போராட்ட குழுக்கள் வசமிருந்த பல பகுதிகளை கைப்பற்றியது. பிரபலமான சர்வதேச பாதுகாப்பு நிறுவனமான ஜேம்ஸ் இன்டெலிஜென்ஸ், 2014 ல் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய தாக்குதலில் 64% இதர போராட்ட குழுக்களின் மீது நடத்தப்பட்டது எனவும் அதே நேரத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய தாக்குதலில் வெறும் 13% அல்-அசாத் படையினரை நோக்கி இருந்தது என அறிவித்தது.[5]

இப்போது தெளிவாக்க்கூடிய விஷயம் என்னவெனில் அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ அழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ் ஈராக்-சிரியா இடையே தன்னுடைய படைகள் மற்றும் ஆயுதம் தாங்கி வாகனங்களுடன் தங்குதடையின்றி கடந்து செல்கின்றது, இந்த எல்லையோர பகுதியில் எவ்விதமான விமான தாக்குதல்களையும் அமெரிக்கா மேற்கொள்ளவில்லை.  பெறுவாரியான நிலப்பரப்பில் இவர்கள்  விரிவாக்கம் செய்தபோதும்  எதிரிகளின் எண்ணிக்கை இவர்களை விட 30 மடங்கு அதிகம் இருந்த போதிலும்  எப்படியோ எதிரணியினரை தோற்கடித்த போதிலும், டமாஸ்கஸ் அரசிற்கு நெருக்கமாக பாக்தாத் வந்தடையும் வரை அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ் ஸிற்கு எதிராக எதையும் செய்யவில்லை. அமெரிக்க விமானப்படையின் இந்த நிலைபாடு பல ஈராக்கியர்களையும் சிரியர்களையும் நிலைகுலைய செய்தது. அமெரிக்கர்கள் மற்றும் அதன் நேச நாடுகள் இதுவரை தாங்கள் எங்கும் அனுப்பியராத ஆகாயத்திலிருந்து  துள்ளியமாக தாக்கக்கூடிய போர் விமானங்களை கொண்டுள்ளது, இருந்த போதிலும் சமீபத்தில் ரமாதியில் நடந்த போரில் அமெரிக்க வெறும் 19 வான்வழி தாக்குதல்களை மட்டுமே நடத்தியது.[6] மேஜர். முஹம்மத் அல்-துலைமி, அன்பார் பிராந்தியத்தை சார்ந்த ஒரு ஈராக்கிய அதிகாரி “அன்பாரில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல்கள் எங்களது படைகளுக்கு ஐஃஎஸ்.ஐ.எஸ் ஐ எதிர்கொண்டு தடுத்து நிறுத்த எந்த வகையிலும் உதவவில்லை. அமெரிக்க தலைமையிலான கூட்டணி வான்வழி தாக்குதல்களின் செயலற்ற தன்மையால் நாங்கள் பெருமளவிளான இடங்களை இழக்க வைத்தது.” [7] என  கூறினார். அன்பாரில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் தரைப்படை பலத்தை சமாளிக்க போதுமான உதவிகளை  சர்வதேச படைகள் அளிக்கவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ் வெற்றியை கொண்டாட ரமாதியில் ராணுவ பேரணியை கூட நடத்தியது, அப்பேரணியில் அது கைப்பற்றிய அமெரிக்க ராணுவ தளவாடங்களும் அடங்கும், இருந்தும் அதன் மீது எவ்வித வான்வழி தாக்குதலும் நடத்தப்படவில்லை.[8] அமெரிக்க விமானப்படை கீழே வீசிய ராணுவ தளவாடங்கள் பல முறை நேரடியாக ஐ.எஸ்.ஐ.எஸ் கைவசம் சென்றடைந்தது.[9] ஐ.எஸ்.ஐ.எஸ் அல்-அசாதிற்கு எதிரான போராட்ட குழுக்களை திசை திருப்பும் விதமான போராட்டத்தை மேற்கொண்டதன் மூலம் அவர்களிடம் உள்ள பொருட்களையும் ஊக்கத்தையும் குறைத்து அவர்களை பலவீனமாக்கி வருகிறது. அமெரிக்காவின் கண்ணோட்டத்திற்கு ஒத்து போகும் வகையில் அமைந்திருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் ன் கண்ணோட்டம் தற்சமயம் அமெரிக்காவிற்கு சாதகமாக இருப்பதன் காரணத்தால் தான் அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ் ஸிற்கு எதிராக குறைவான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்பதை காட்டுகிறது.

புரட்சியின் உயிரோட்டத்தை வெளியேற்றும் செயற்திட்டத்தை அமெரிக்கா மிகவும் ஜாக்கிரதையாக செயல்படுத்தி வருகிறது, ஆனால்  அது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பல வருடங்களாக நடத்திய போரில் நேரடியாக ஈடுபட்டு தோற்றதை போன்றல்லாமல், அதன் செயற்திட்டமானது பிராந்தியத்திலுள்ளவர்கள் மற்றும் உள்நாட்டினரை பெரும்பாலும் ஈடுபடுத்தி தூரத்திலருந்து அதன் நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஆகும். அமெரிக்கா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை என்னவெனில்  போராட்டக்குழுக்களுக்கு எதிராக சில கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் மக்கள் அவர்களுடன் சேர்ந்து தொடர்ந்து போராடி வருவது தான். அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்கா விரும்பும் குழுக்கள் மக்கள் மத்தியில் துளி அளவு நம்பிக்கை கூட பெற்றிருக்கவில்லை. இதன் விளைவாக அமெரிக்கா சிரியாவில் ஒரு நெடிய போராட்டத்தை பல ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறக்கூடிய அளவிலான போராட்டத்தை  நடத்தி வருகிறது. இந்நிலை சிரியாவில் அமெரிக்கா இன்னும் சில ஆண்டுகள் ஈடுபட்டிருக்கும்  என்பதை சுட்டி காட்டுகின்றது. அமெரிக்கா விரும்பிய முடிவு ஏற்படாததன் காரணத்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வர நீண்ட காலமாகும். அமெரிக்க அதிகாரிகள் தங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படுவதற்குரிய நேரம் வரை காலம் தாழ்த்தப்பட வேண்டும் என்ற காரணத்தால் தான் தொடர்ந்து  தங்களிடம் எந்தவொரு முழுமையான செயற்திட்டம் இல்லை என்று கூறி வருகிறார்கள்.











[9] http://21stcenturywire.com/2015/02/18/in-plain-sight-coalition-forces-routinely-air-drop-military-supplies-to-isis-fighters-in-syria/

 

Apr 27, 2016

இரத்தம் வறண்டு மடிந்து கொண்டிருக்கும் அல் அஸாத்தின் அரசு!

 
சிரியப் புரட்சி ஐந்து ஆண்டுகள் நிறைவையும் தாண்டி தொடரும் நிலையில் இன்றைய களநிலையும், நாட்டை உரிமை கோரும் சண்டைகளும் எதை நோக்கிச் செல்கின்றன என்பதை சுருக்கமாக விபரிக்கிறது இந்தக் கட்டுரை!
 
சிரியப் புரட்சி ஐந்து ஆண்டுகளையும் தாண்டித் தொடரும் என மிகச் சிலரே கருதினர். மிகக் கொடூரமான டமஸ்கஸ் அரசின் கொலைவெறித் தாண்டவத்தில் அரபு வசந்தத்தில் தொலைந்து போனவர்களாக சிரிய மக்கள் அடையாளப்படுத்தப்படுவர் என்றே பலரும் எதிர்பார்த்தனர். சிரிய மக்களின் புரட்சிக்கு குருதித் துளிதான் முற்றுப்புள்ளி என அனேகர் வாதாடினர். ஆனால் இன்று கதை மாற்றி எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது. பஸார் அல் அஸதின் அரசும், அவனது  அழிவுப்படையும் இரத்தப்பெருக்கால் அழிந்து கொண்டிருக்கிறது. பிரமாண்டமாகக் காட்டப்படும் அவனது அரியணையும், கூலிப்படையும் அவனது முன்னைய நிலையின் நிழல்கள் மாத்திரமே என்றாகி விட்டன. அரைத் தசாப்தங்களாகத் தொடர்ந்த நெடிய யுத்தம் சிரிய அரசின் சக்தியை மிகைத்து விட்டது. எதிர்காலம் அரசின் திசையில் நிச்சயமாய் இல்லை என்பது ஏறத்தாழ உறுதியாகி விட்டது. இந்நிலை அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களும், புரட்சிப்படையும் பெற்ற தொடர் வெற்றிகளில் அரசின் குருதி வற்றி விட்டதன் விளைவு. இதை பல கோணங்களில் காணலாம்.
 
நாட்டின் நெட்டாங்கு, அகலாங்கு எங்கிலும் கிளர்ச்சிப் படைகளை ஐந்து முழு ஆண்டுகளாக எதிர்கொண்ட பஸாரின் அரசு சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது. நாட்டை ஒட்டு மொத்தமாக மீளப்பெறுவதற்கு பஸாரிடம் வளம் கிடையாது. நாட்டின் சனச்செறிவு குறைந்த வடக்கு பிராந்தியத்தையும், கிழக்குப் பிராந்தியத்தையும் மீளப் பெரும் நோக்கத்தை அவன் என்றோ கைவிட்டு விட்டான். இன்று அவனின் துருப்புக்களால் பாரிய அளவிலான தரைத் படை நகர்வை மேற்கொள்ள முடியாத நிலை. வெற்றி கொண்ட பெரிய பிராந்தியங்களை தக்க வைக்க முடியாத நிலை. இன்று பஸார் தலைநகர் டமஸ்கஸ்ஸையும், மத்தியதரை கடற்கரையை அண்டிய ஓர் ஒடுங்கிய பிராந்தியத்தையும் மாத்திரம் பாதுகாத்தால் தலை தப்பியது என்று சிந்திக்கும் நிலை.
 
இந்த மூலாபாயமும் அலவிகளின் முக்கிய பகுதிகளை பாதுகாப்பதை மையப்படுத்தியது. அதற்கு மேலால் நாட்டின் ஏனைய பகுதிகளில் கால் வைப்பதை அகலக்காலாக அரசு நோக்குகிறது. அதற்கான பலமோ, வளமோ அதற்கு கிடையாது. 2016, மார்ச் மாதத்தில் நடந்த “battle of Palmyra – பல்மீறா பகுதியை மீட்பதற்கான சமர்” இதற்கு ஓர் நல்ல எடுத்துக் காட்டு. இந்தச் சமர் முழுக்க முழுக்க சிரியத்துருப்புக்கள் அல்லாத அந்நிய உதவிப்படைகளால் தான் நடாத்தப்பட்டது. நாடெங்கும் போராடத்தேவையான சொந்தப்படை சிரிய அரசிடம் இல்லை என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. உண்மையில் பஸாருக்கு உதவி வரும் பல்தேசிய படைகளின் உதவியால் தான் பல்மீறா பகுதி மீளப்பெறப்பட்டது. யு.கே இன்டிபென்டண்ட் பத்திரிகை இது குறித்து குறிப்பிடும்போது, “ புகைப்படங்களின் ஆய்வு, சமூக வளைத்தளங்களின் இடுகைகள், ஈரானிய, ரஸ்ய ஊடகங்கள், ஏன்; சிரிய ஊடகங்கள் கூட நகர்வு ரஸ்யப்படைகளால் வழிநடாத்தப்பட்டதை, கூடுதலான எடுபிடி வேலைகள் ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படை ஜெனரலுக்கு கீழ் இயங்கிய ஆப்கானிய, ஈராக்கிய ஷிஆ இராணுவச் சிப்பாய்களால் மேற்கொள்ளப்பட்டதை தெரிவிக்கின்றன.” [1]
 
பஸாரின் துருப்புக்களின் எண்ணிக்கை இந்த ஐந்து வருடங்களில் மிக அதிகளவில் குறைந்துள்ளது. நாட்டை உரிமை கொண்டாட பஸாரின் இராணுவம்தான் அவனது துரும்புச் சீட்டு. அதுதான் முற்றுகைகளைத் தொடரவும், மனிதப்படுகொலைகளை புரியவும், வான்வெளித்தாக்குதல்களை நிகழ்த்தவும் அவனுக்கு உதவி வந்தது. சிரிய அரசின் குண்டுகளும், ஏவுகணைகளும் பல இலட்சம் மக்களை காவு கொண்டது மாத்திரமல்லாது முற்றாக அழிந்து சுடுகாடாய்போன ஹீம்ஸ்(Homs) போன்ற நகர்களை தரைப்படைகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவியது. எனினும் போரின் ஆயுள் அதிகரிக்க அதிகரிக்க, துருப்புக்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், படுகாயங்களால் ஏற்பட்ட அங்கவீனங்கள், இராணுவத்திலிருந்து சிப்பாய்களின் விலகி ஓடுதல்கள், தொடர்ந்தேர்ச்சையான இராணுவத் தோல்விகள் போன்றன அதிகரித்து சிரிய இராணுவத்தின் ஆளுமை வெகுவாக சரிந்துள்ளது. சில கணிப்புக்கள் ஆரம்பத்திலிருந்த 300,000 இராணுவத்திலிருந்து தற்போது 150,000 இராணுவத்தினர்தான் மிஞ்சியுள்ளதாகத் தெரிவிக்கின்றன. தனது இராணுவக் களநிலை மிகவும் பலகீனமாக உள்ளதை உணர்ந்த பஸார் வேறு வழியில்லாமல் தனது அலவி ஆதரவாளர்களிடம் இதுபற்றி தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டான். தனது அரசு மிக அதிகளவான இராணுவத் தோல்விகளைச் சந்தித்தது என்பதை அவன் ஒப்புக்கொண்டான். மே, 2015 இல் ஆற்றிய ஒரு உரையில் முதல்முறையாக தனது “வெற்றி வெற்றி” என்ற பாட்டை நிறுத்தி மயக்கம் தெளிந்த சில வார்த்தைகளை உதிர்த்தான் “ இன்று நாங்கள் ஓர் போரில் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம். ஒரு சமரிலல்ல. போர் என்பது ஒரு சமர் அல்ல. மாறாக அது பல சமர்களின் கோர்ப்பு. சமர்களைப் பொருத்தமட்டில் முன்னேற்றங்களும், பின்வாங்குதல்களும், வெற்றிகளும், தோல்விகளும், ஏற்றங்களும், இறக்கங்களும் யாதார்த்தமானதாகும்.” [2]
 
பஸாருக்கு தானே தொடுத்த யுத்தத்தை தொடர முடியாது போய் முற்று முழுதாக பிற சக்திகளிடம் தங்கியிருக்க வேண்டிய நிலை. கடந்த ஒக்டோபர் 2015 இல் ரஸ்யா, சிரிய போருக்குள் நேரடியாக மூக்கை நுழைத்தது சடுதியாக சரிய இருந்த பஸாரின் அரசுக்கு முட்டுக்கொடுக்கும் தருணத்திலேதான். அலவிகளின் பலப்பிராந்தியமான லடாக்கியாவை நோக்கி  கிளர்ச்சிப்படைகள் தாக்குதல் நடாத்த முன்னேறியிருந்த வேளைகள் இனிமேல் முழுமையாக பிறரின் தயவில் தான் பஸாரின் வண்டி ஓடும் என்ற நிலையை நிரூபித்தன. முதல் தடவையாக, ரஸ்ய விசேட படைகள் மாத்திரமல்லாது விலாதிமிர் புட்டினுடன் தொடர்புடைய கூலிப்படைகளும் சிரிய போர் முன்னரங்குகளில் போராடி வருவது வெளிச்சத்துக்கு வந்தது.[3] ஈரானிலுள்ள ஆப்கானிய ஷிஆப் போராளிகள், குறிப்பாக ஈரானிலுள்ள ஆப்கானிய ஹஸாரா அகதி மக்களைச் சேர்ந்த பல போராளிகள் மடிந்து வரும் செய்திகள் அதிகளவில் வெளிவரத் தொடங்கின.[4] பாக்கிஸ்தானிய ஷிஆ போராளிகளின் பங்களிப்புக்கள் பற்றிய தகவல்களும் இடைக்கிடையே வந்து மறைந்தன. இந்தத்தகவல் ஈரானில் அந்தப் போராளிகளின் மரணச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஊர்ஜிதம் செய்யபப்பட்டது. ஈரானியப்படைகளும், ஆப்கானிய, பாக்கிஸ்தானிய ஷிஆ போராளிகளும், ரஸ்ய விசேட மற்றும் கூலிப்படைகளும் தான் தற்போது அல் அஸாத் தொடரும் ஈனப்போருக்கு முதுகெழும்பாக இருக்கின்றன.[5]
 
பஸார் அல் அஸதின் ஆதரவுத்தளம் முழுச் சனத்தொகையில் வெறும் 12 சதவீதத்தையும் தாண்டாது. எனவே இராணுவத்தை விட்டு தப்பி ஓடிய, கொல்லப்பட்ட, அங்கங்களை இழந்த துருப்புக்களை மீண்டும் ஈடுசெய்வதற்கு இந்த ஆதரவுத்தளத்தில்தான் அஸாத் தஞ்சம் புக வேண்டும்.  போர் நீழ நீழ இந்த ஆதரவுத்தளமும் அதி வேகத்தில் சுருங்கிக்கொண்டே செல்லும். இடம்பெற்ற முழுப்போரையும் உற்று நோக்கினால் இராணுவத் தட்டுப்பாடு பஸாருக்கு தொடர்ந்து இருந்துகொண்டெ இருக்கிறது. ஆரம்பத்தில் தேசிய பாதுகாப்புப் படை (NDF) என்ற ஒரு அணியை உருவாக்கி இந்நிலை எதிர்கொள்ளப்பட்டது. பின்னர் பஸாருக்கு ஹிஸ்புல்லாஹ்வின் கை தேவைப்பட்டது. அதன் பின்னர் ஈரானின் இஸ்லாமிய புரட்சிப்பாதுகாப்புப் படை (IRGC) நேரடியாக தனது ஆதரவை வழங்கியது. பின்னர் இராணுவத்தினரின் உயிரிழப்புக்கள் அதிகரிக்கத் தொடங்க இராணுவம் ஈராக்கிய ஷிஆ போராளிகளையும், ஆப்கானிய ஷிஆ கூலிப்படைகளையும் துணைக்கு அழைத்தது.
 
உள்நாட்டுக்குள்ளும் அரசுக்கு ஆதரவு வட்டம் சுருங்கிக்கொண்டே வருகிறது. சிரியாவில் வாழும் துருஸ்(Druze) சமூகத்தினர் கூட அரசிலிருந்து சற்று ஒதுங்கியே நிற்கிறார்கள். அவர்கள் செறிந்து வாழும் சுவைதா பிராந்தியத்திலிருந்து தமது இளைஞர்கள் வெளியேறி அரசுக்காக நாடு தழுவிய ரீதியில் போராடுவதை அவர்கள் விரும்பவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலால் அலவி சமூகமும் மிகவும் களைப்படைந்து போயிருக்கிறது. பஸாருக்காக போராடக்கூடிய மிகக் குறைந்த ஆண்மக்களே அவர்களிடமும் உள்ளது. பஸாரின் இந்த கையறு நிலை மாறப்போவதில்லை. எனவே வெளிநாட்டுப் போராளிகளின் காலைப் பிடிக்க வேண்டியது அவனது தலைவிதியாகி விட்டது. சுருங்கக்கூறின், பஸார் அல் அஸதின் அரசு இன்று வரை மூச்சுத்திணறித் திணறி நிலைத்து நிற்பது வெளிநாட்டு ஆதரவினால் மாத்திரமே. மேற்குலக நலனை பாதுகாக்க டமஸ்கஸ்ஸிலுள்ள அவனது அரசின் இருப்பு எதுவரை தேவைப்படுகிறதோ அதுவரை இந்த ஆதரவும் தொடரும் என்பதே இன்றைய யதார்த்தம்.