Showing posts with label ஆப்கான். Show all posts
Showing posts with label ஆப்கான். Show all posts

Jul 19, 2016

இன்றைய உலகில் எங்காவது இஸ்லாமிய ஆட்சி நடைபெறுகிறதா..??



இன்றைய உலகில் எங்காவது இஸ்லாமிய ஆட்சி நடைபெறுகிறதா, அதாவது சவூதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் (தாலிபானிற்கு கீழ்) போன்ற நாடுகளில்?


ல்லை
, தற்போதய முஸ்லிம் நாடுகள் இஸ்லாமிய சட்டத்தின் சில பகுதிகளை மட்டுமே நடைமுறை படுத்தி வருகின்றன: அதிகப்படியாக அவை குடும்பவியல் சட்டங்களின் சில பகுதிகளை உபயோகித்து வருகின்றன, ஆனால் எந்தவொரு நாடும் முழுமையாக தன் சட்டங்களையும் கொள்கைகளையும் இஸ்லாமிய அடிப்படையில் பிரித்தியேகமாக அமைத்து கொள்ளவில்லை. பாகிஸ்தானில், இஸ்லாமிய சட்டத்தை குடும்ப பிரச்சினைகளை தீர்க்கவும் அல்லது இஸ்லாமிய உணர்வுகள் மீது தான் அக்கறை கொண்டுள்ளதாக அடையாள படுத்துவதற்காக மட்டுமே உபயோகித்து வருகிறது, ஹுதூத்(தண்டனை) சட்டத்திலும் இதே நிலை தான். இது தான் தகுதியற்ற ஊழலுற்ற அரசாங்கங்கள் மற்றும் அவைகளின் மேற்கத்திய எஜமானர்கள் மற்றும் ஊடகங்கள் இஸ்லாமிய சட்டம் செயலற்று இருப்பதாகவும் மேலும் அதனால் சமூகத்தை நிர்வகிக்க முடியாது என்று சித்தரிப்பதற்காக செயல்படுத்தும் திட்டமாகும்.3

பல லட்சக்கணக்கான திருக்குர்’ஆன் பிரதிகள் மற்றும் இஸ்லாமிய நூல்களை அன்பளிப்பாக வழங்கலாம் மற்றும் உலகெங்கும் பள்ளிவாயில்கள் நிர்மானிக்க அதிகப்படியான நிதிகளை சவூதி அரேபியா அன்பளிக்காக வழங்கலாம், எவ்வாறிருப்பினும் சில இஸ்லாமிய அடிப்படைகளை கொண்ட சட்டங்கள் மற்றும் சில மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களையும் கொண்டு சவூதி அரேபியா ஒரு கலப்படமான சட்டங்களையே பின்பற்றி வருகின்றது. எனினும் இஸ்லாமிய கண்ணோட்டத்தை தக்கவைத்துக்கொள்ள அவைகளை அது சட்டங்கள் என குறிப்பிடுவதில்லை. இஸ்லாமிய சட்டங்களையும் மனிதன் இயற்றிய சட்டங்களையும் வேறுபடுத்தி காட்ட சவூதி பிரத்தியேகமாக குறிப்பிட்ட சில வார்த்தைகளை உபயோகிக்கின்றது. அரசியலமைப்பு சம்மந்தமான ஒரு அரபி நூலில் அதன் ஆசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார், “சவூதியில் விதி(ஆனூன்) மற்றும் சட்டம்(தஷ்ரீ’) போன்ற வார்த்தைகள் இஸ்லாமிய ஷரீஆவிலுருந்து எடுக்கப்பட்டவைகளை குறிப்பிடுவதற்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது…4 மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களை பொறுத்தவரை அதாவது அமைப்புகள் (அந்திமா) அல்லது வழிமுளைகள (த’லீமாத்) அல்லது பிரகடனங்கள் (அவாமிர்)……. இது தவிர ஒரு பரம்பரை முடியாட்சியான சவூதி அரேபியா மார்க்க நிறுவனங்களை முதலாளித்துவ மற்றும் மேற்கத்திய உலகிற்கு ஆதரவான திட்டங்களுக்கான எதிர்ப்புகளை கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக உபயோகித்து வருகிறது.

இதை போன்று தாலீபானும் இஸ்லாத்தின் சில அம்சங்களை நடைமுறை படுத்தி வந்தது. ஆப்கானிஸ்தானை தாலீபான்கள் ஆண்ட போது அவர்கள் ஒருபோதும் தாங்கள் இஸ்லாமிய அரசாங்க முறையான கிலாஃபத் முறையை பின்பற்றுகிறோம் என்று கூறியதில்லை, மாறாக தங்களை ஒரு அமீரகமாகவே அடையாள படுத்தியது அது வெளியுறவு கொள்கை அற்ற ஒரு சில சட்ட வறையறைகளை கொண்டு ஒரு எல்லைக்குள் மட்டுமே செயற்படும் ஒரு அரசியல் நிறுவனமாக தான் செயல்பட்டது. இஸ்லாமிய ஆட்சியமைப்பானது பொருளாதாரம், சமூகவியல், ஆட்சிமுறையாக இருக்கட்டும் மேலும் வெளியுறவு கொள்கை அமைத்து கொள்வது ஆகட்டும் இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களையும் நடைமுறை படுத்தக்கூடியதாக இருக்கும், கிலாஃபத்தானது ஒரு தனித்து விடுபடக்கூடிய நாடு கிடையாது.

ஈரானிய அரசியலமைப்பு பல அம்சங்கள் இஸ்லாத்தோடு ஒத்து போகக்கூடிய வகையில் இருக்கின்றன அதேபோல மற்றவைகள் இஸ்லாத்திற்கு நேர் எதிராக உள்ளது. ஈரானிய அரசியல் சாசனத்தின் விதி 6 இவ்வாறு கூறுகின்றது: “ஈரானின் இஸ்லாமிய குடியரசு, நாட்டின் விவகாரங்களை ஜனாதிபதி, இஸ்லாமிய கலந்தாய்வு சபை உறுப்பினர்கள், கவுன்சில் உறுப்பினர்கள் போன்றவர்களை தேர்தல்கள் நடத்தி தேர்த்தெடுப்பது உட்பட பொதுஜன கருத்தை அறிந்து அதன் அடிப்படையில் நாட்டின் விவகாரங்களை மேற்கொள்ள வேண்டும், அல்லது பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் அதன் சில விவகாரங்களில் அரசியல் சாசனத்தின் இதர விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை தழுவி மேற்கொள்ள வேண்டும்.” இஸ்லாமிய அமைப்பை கொண்ட அரசியலமைப்பு – அதாவது கிலாஃபத்தானது முழுமையாக இஸ்லாமிய ஆதாரங்களை அடிப்படையாக கொண்டதாகும். ஈரானின் விஷயத்தில் இது பொருந்தாது ஏனெனில் அது தனது அரசியலமைப்பில் ” நாட்டின் விவகாரங்களை தேர்தல்கள் மூலம் வெகுஜன கருத்தை அறிந்து அதன் அடிப்படையில் செயல்படுவதாக” அறிவிக்கிறது”. இஸ்லாத்தை பொறுத்தவரை நாட்டின் விவகாரங்கள் வெகுஜன கருத்தின் அடிப்படையில் அல்லாமல் ஷரீ’ஆவின் அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்படும்.

Sources: sindhanai.org

Oct 28, 2015

பாகிஸ்தான், ஆப்கன் நிலநடுக்க பலி 300 ஆக அதிகரிப்பு

சேதமடைந்த தங்களது வீட்டை சுற்றிப் பார்க்கும் சிறுவர்கள். | படம்: ஏஎப்பி.  

சேதமடைந்த தங்களது வீட்டை சுற்றிப் பார்க்கும் சிறுவர்கள். | படம்: ஏஎப்பி.
 
வடக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பாதிப்பால் ஆப்கன் மற்றும் பாகிஸ்தானில் பலியானோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.
 
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.5 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம், இந்தியாவிலும் உணரப்பட்டது. டெல்லி, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.
 
இதனால் பாகிஸ்தானின் ஸ்வாட், பெஷாவர், கசூர், கல்லார் கஹார், பைஜார் பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டது.
 
நிலநடுக்கத்துக்கு ஆப்கானிஸ்தானில் 90-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 
இதேபோல பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர் உள்ளிட்ட பல நகரங்களிலும் 237 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் தரப்பில் பலி மற்றும் காயமடைந்தவர்களின் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
The Hindu

Sep 16, 2015

ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய அகதிகள்


ஆப்கானியர்கள் ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய அகதிகள்


ஹெலினா மாலிக்யர்

இவர் ஆப்கான் அரசியல் ஆய்வாளர் மற்றும் வரலாற்றாசிரியர் ஆவார்.

கடந்த ஆண்டு வரை, ஆப்கானியர்கள் தான் உலகின் பெரிய அகதி மக்கள்காக இருந்தனர் என்று எழுதி இருக்கிறார்.

மேலும் அவர் இதை பத்தி கூறும் போது ஏன் நாம் ஆப்கான் பற்றி பேசவில்லை? என்று வினாவை தொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு வரை நாட்டின் முழு மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் ஆப்கானியர்கள் அகதி மக்கள்காக இருந்தன. கிட்டத்தட்ட 2.6 மில்லியன் மக்கள்களை  அகதியாக்கி உள்ளனர். இன்று 12 சதவிகித்தை தாண்டிய சிரியா மக்களால் இவர்கள் இரண்டாவது மிகப் பெரிய அகதிகள் குழுவாக ஐரோப்பிய கடற்கரையும் மற்றும் எல்லையும் கடந்து வருகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நிறுவனம், அறிக்கையின்படி, 40,000 க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை ஐரோப்பாவில் தஞ்சம் முயன்று வருகின்றன.

பல தசாப்தங்களாக ஆப்கான் அகதிகள் நேரிட்டதே துன்பியல், பல பயங்கரமான மரணம்  மேற்கத்திய மற்றும் சொல்லப்படாத கஷ்டங்களை சந்தித்திருக்கிறார்கள். இன்னும் பல குடும்பங்கள்  எளிமையாக ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் செய்திய கேட்க காத்திருக்கிறார்கள். ஆனாலும் இவர்களின் நிலைமை ஊடகங்களில் தலைப்பு செய்தியாக  இன்னும் மாறவில்லை.

கடந்த வாரம் ஆஸ்திரிய காவல்துறை தனியாக இருந்த ஒரு சிறிய வேன் பின்புறம் அடைக்கப்பட்டு இருந்த  24 இளம் ஆப்கானியர்கள் மீட்கப்பட்டனர். இது போலவே ஆஸ்திரியாவில் ஒரு லாரியில் 71 பேர் இறந்து கிடந்தனார்.

Source: Al Jazeera

Oct 1, 2013

அமெரிக்கா எதற்காக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற நினைக்கிறது

 ஆப்கானிஸ்தானிலிருந்து 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா வெளியேறுவது குறித்து சமீப காலமாக நிறைய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.எனவே  அமெரிக்காவின் ஆப்கானிய குறிக்கோள் நிறைவேறிவிட்டதா? அல்லது இது வெறும் தந்திரமான நகர்தலா என்பதை ஆய்வு செய்யவேண்டியது அவசியமாகும்.
அமெரிக்காவிற்கு  முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியங்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் விளங்குகிறது. ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுக்க பின்வரும் காரணங்கள்  முக்கியமானவையாகும்.
1. யுரேசியா பகுதியில் ரஷ்யா மற்றும் சீனா ஆதிக்கம் செலுத்துவதை தடுத்து நிறுத்துவது.
2. கிலாஃபா வருவதை தடுப்பது.
3. காஸ்பியன் கடல் மற்றும் மத்திய கிழக்கு பகுதியிலுள்ள இயற்கை எரிவாய்வு மற்றும் பெட்ரோலிய  வளங்களை  தன்னுடைய  ஆதிக்கத்தின்கீழ் தக்கவைத்துக்கொள்வது.
4.காஸ்பியன் கடல் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளிலுள்ள எரிவாய்வு போக்குவரத்து பாதுகாப்பை தன் கட்டுக்குள் வைத்திருப்பது.
இதை கீழ்கண்ட ஆதாரத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
      “யுரேசியா நிலையான அரசியல் அமைப்பையும் திறன் வாய்ந்த நாடுகளையும் தன்னகத்தே கொண்ட பகுதியாகும்.கடந்த கால நிகழ்வுகளை உற்றுநோக்கும்போது உலகளாவிய வல்லரசுகள் தங்களின் ஆதிக்கத்தை யுரேசியா பிராந்தியத்திலிருந்தே துவங்கியுள்ளார்கள் என்பதை விளங்கமுடிகிறது.பிராந்திய செல்வாக்கை அடையமுனையும், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவும் இந்தியாவும் யுரேசியாவில் உள்ளது.அதேசமயம்   அமெரிக்காவின் முதன்மைத்தனத்தை அச்சுறுத்தும் அரசியல் மற்றும் பொருளாதார ஆற்றலை  இவ்விரு நாடுகளும் கொண்டுள்ளன. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட , ராணுவத்திற்கு அதிகப்படியான செலவு செய்யும் ஆறு நாடுகள் இந்த பிராந்தியத்தில் உள்ளன.அதைப்போன்றுஇவை அணு ஆற்றலை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் கொண்டுள்ளன. உலகிலுள்ள மக்கள் தொகையில் 75%இங்குதான் உள்ளது.மேலும் 60GNP (Gross National Product – மொத்த தேசிய உற்பத்தியையும்75% ஆற்றல் வளத்தையும் கொண்டுள்ளது. இவையனைத்தையும் ஆராயும்போது யுரேசியா பகுதி அமெரிக்காவை விட சக்தி கொண்டதாக உள்ளது. இந்த பகுதியை ஆதிக்கம் செலுத்தும் சக்தியானதுஉலகின் மூன்றில் இரண்டு பங்கு செழிப்புடைய பொருளாதார பிராந்தியத்தை(மேற்கு ஐரோப்பா மற்றும் கிழக்காசியா) தன் கட்டுக்குள் கொண்டுவரமுடியும். கிட்டத்தட்ட தானாகவே மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவை ஆதிக்கம் செலுத்த முடியும்.இப்பகுதியில் அதிகார பங்கீட்டின் மூலம் என்ன விளைவு ஏற்படும் என்றால், யுரேசியா நிலப்பரப்பானது அமெரிக்காவிற்கான  உலகளாவிய முக்கியத்துவத்தையும் வரலாற்று மரபுகளையும் தீர்மானிக்கும் முக்கிய பகுதியாக கருதப்படுகிறது.
                                            Zbigniew Brzezinski, "A Geostrategy for Eurasia", Foreign Affairs, September/October 1997 ]
     “எந்த ஒரு பெரிய சக்தியும் யுரேசியாவில் உருவாவதைத் தடுப்பதே அமெரிக்காவின் முக்கிய நோக்கமாகும். அதன் முரண்படும் உண்மைகள் என்னவெனில், அந்த தலையீட்டின் நோக்கம் எதையும் அடைவதற்கில்லை. அரசியல் மேலலங்காரத்தின்மூலம் அவர்கள் எதை கூறினாலும், அது அதற்கு எதுவும் நேராமல் தடுப்பதற்காகும். எந்த பகுதியிலும் ஒரு சக்தி ஏற்பட்டால் அதை தடுத்து நிறுத்தும் அதிகாரம் அமெரிக்காவிற்கு உண்டு. அதன் நோக்கம் அந்த இடங்களில் நிலைத்தன்மையை உருவாக்குவதற்கல்ல;நிலையற்ற தன்மையை உருவாக்குவதே ஆகும்.இதை நாம் இஸ்லாமிய எழுச்சியின்போது அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். அது ஒரு மாபெரும் சக்தியான கிலாபா மீண்டும்  எழுவதை தடுப்பதையே விரும்புகிறது.அமெரிக்காவிற்கு யுரேசியாவில் அமைதியை நிலைநாட்டும் எண்ணம் அறவே கிடையாது. இந்த மோதல்கள் எதற்காக என்றால்,இந்த பிராந்தியத்தில் ஒரு சக்தி உருவாவதை தடுக்கவும்,நிலையற்ற தன்மையை உருவாக்கவும் தானே  தவிர சீரமைப்பை நிலைநாட்டுவதற்கல்ல.
                                                       [ George Friedman, "The next 100 years, a forecast for the 21st Century", 2009 ]
யுரேசிய பகுதியில் அமெரிக்காவின் இலக்கு என்ன என்ற  விசயத்தில் அங்குள்ள குடியரசு கட்சிக்கும் ,ஜனநாயக கட்சிக்கும் மத்தியில் எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது. இப்பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் புஷ்ஷிற்கும் ஒபாமாவிற்குமிடையே மாற்றுக்கருத்து கிடையாது.
இவ்விரு கட்சிகளுக்குமிடையே அவர்களின் நோக்கத்தை செயல்படுத்தும் உத்தியில்தான் கருத்துவேறுபாடு உள்ளது. அதாவது, அமெரிக்காவின் ஆப்கானிய ஆக்கிரமிப்பை எப்படி சட்டப்படி முறைப்படுத்துவது; ஒருவகையான நிலைத்தன்மையை தக்கவைத்துக் கொள்வது; என்னன்ன காரணங்களைக் கொண்டு நோக்கத்தை அடையலாம்? போன்றவற்றின் செயல்முறை உத்தியில் எப்பொழுதும் ஒபாமா மற்றும் புஷ் அரசுகளுக்கிடையே கருத்துவேறுபாடு இருந்து வந்துள்ளது. அதேபோன்று ஒபாமாவின் அதிகாரிகளுக்குமிடையே இதே போன்ற கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. ஆகவே அவர்களின் செயல்திட்டம் பலமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பலமுறை ஒபாமாவின்கீழ் இந்த செயல்முறை மாற்றபட்டாலும், அவர்களின் செயல் திட்டம் இறுதியாக நான்கு முக்கிய குறிக்கோள்களில் நிலைபெற்றது.
1. ஆப்கானிஸ்தானின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் திறனை அதிகரிப்பது; அதாவது ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப்படை, காவல்துறை, இராணுவம் போன்றவற்றை கட்டமைப்பது. தகுதிவாய்ந்த அமெரிக்க விசுவாசமுள்ள ஆளுநர்களை நியமிப்பது மற்றும் ஆப்கானிய அரசிலுள்ள ஊழலைக் குறைப்பது.
2. அல்காயிதா மற்றும் அமெரிக்க ஆதிக்கத்தை எதிற்கும் புஷ்தூன் பகுதியைச் சார்ந்த முஜாஹிதீன்களை அழிப்பது.
3.நடுநிலையான எண்ணம் கொண்ட தாலிபான்களை அவர்களின் இயக்கத்திலிருந்து வெளியேற்றி ஆப்கானிய அரசில் பங்கு பெற ஊக்குவிப்பது.
4. நேட்டோ, பாகிஸ்தான், ஈரான், இந்தியா, ரஷ்யா, சீனா, மற்றும் பிற நாடுகள்   அமெரிக்காவுடன் இணைந்து ஆப்கானிய பிரச்சனையை தீர்க்க பலதரப்பட்ட அனுகுமுறையுடன் கூடிய  ஒரு பிராந்திய சூழலில் ஆப்கானிய செயல்முறை உத்திகளை அமைப்பது.
அமெரிக்கா தன்னுடைய செயல்திட்டங்களை ஆப்கானிஸ்தானில் நிறைவேற்ற திண்டாடுகிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.எனவே ஆப்கானிஸ்தானில் வெற்றியடைய முடியாது என்பதை ஒபாமாவும், அமெரிக்காவின் கூட்டாளிகளும் ஆழ்ந்து உணர்ந்துள்ளார்கள்.
ஆப்கானிஸ்தான் குறித்த தன்னுடைய நிலைபாட்டை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய தூண்டிய முக்கியமான  பல காரணிகளை பார்க்கவேண்டியிருக்கிறது.
சர்வதேச காரணிகள்
*  2008 ஆம் ஆண்டு அமெரிக்காவின்  லேமேன் பிரதேர்ஸ் நிறுவனம் வீழ்ந்ததால் சர்வதேச நிதி அமைப்பு  நெருக்கடிக்கு  உள்ளானதோடு கிட்டத்தட்ட நொறுங்கியது. இந்த நிகழ்வானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.அது வெளிநாடுகளில் போர்புரிவதற்கான நிதியை ஒதுக்குவதில்  மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியது.
*  ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போரில்   அமெரிக்க இராணுவம் இழைத்த கொடூரங்கள் கறையாக படிந்துவிட்டது. இராணுவ அளவை வெளிநாடுகளில் பராமரிக்க முடியவில்லை. தன்னுடைய இராணுவ எண்ணிக்கையை கட்டுப்படுத்தவேண்டிய மிகப்பெரிய நெருக்கடியில் அமெரிக்கா உள்ளது.
ஈராக்கில் 2003 ஆம் ஆண்டிருந்து அமெரிக்கா தன்னுடைய ஆதிக்க  சக்தியை இழந்துவிட்டது. ரஷ்யா,பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு கொடுத்து வரும் அழுத்தம் அதிகரித்து வருகிறது.ஆசிய பசிபிக் பிராந்தியத்தைப் பொறுத்தவரை சீனா மேலோங்கிவருவது அமெரிக்காவிற்கு கவலையளிப்பதாய் உள்ளது. இதைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ஆதிக்கத்திற்கு சீனா  மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்பதாக அமெரிக்கா அஞ்சுகிறது.தேசிய திறனாய்வு கவுன்சிலின் முன்னாள் துணைத்தலைவர் கிரகாம் புல்லர் 2006 ஆம் ஆண்டு அமெரிக்கா தன்னுடைய எதிரிகளிடம் எதிர் கொள்ளும் சவால்களை இவ்வாறு விவரித்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு  நாடுகள் பலவகையான உத்திகள் மற்றும் தந்திரங்கள் மூலம் புஷ்ஷின் காரியங்களை திசை திருப்புவதன் மூலமாகவும்,கடினமாக்குவத்தின் மூலமாகவும்,வரம்பு விதிப்பதின் மூலமாகவும்தடுப்பது  அல்லது தாமதப்படுத்துவது என்பதன்  மூலமாகவும் அந்த உத்திகளை உயிரற்ற்றதாக ஆக்க முயற்சிக்கின்றன. இந்த எதிர்ப்பு பலதரப்பட்ட நோக்கங்களைக் கொண்டு செயல்படுகிறது.
                                                                                                             [ "Strategic Fatigue", National Interest, 2006 ]
இதுபோன்ற சர்வதேச காரணிகள் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் இரண்டு இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
1. அமெரிக்கா 2001 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 500 பில்லியன் டாலர்களை ஆப்கானிஸ்தான் போரில் செலவழித்துள்ளது. இராணுவத்திற்கான நிதியைக் குறைத்ததால் அமெரிக்கா  பல்வேறு முனைகளில் போரிடுவதற்கு  மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியது. நியூயார்க் டைம்ஸ் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் “Panetta to Offer Strategy for Cutting Military Budget” என்ற தலைப்பில் இவ்வாறு அறிக்கை வெளியிட்டது.
நிதி நெருக்கடியின் காரணமாகவும் கடந்த கோடை காலத்தில் அமெரிக்கா கடனை செலுத்த முடியாமல் ஏற்பட்ட சூழலின் காரணமாகவும் பெனட்டாவிடம் ராணுவத்தை குறைக்கும் ஒரு திட்டத்தை கேட்டுக்கொண்டது. அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஒரே நேரத்தில் இரண்டு போர்களை சந்திக்கும் தன்மையை அமெரிக்கா இழந்துவிடும். எவ்வாறெனில் ஒரு பெரிய போரை சந்திக்க இராணுவத்தை பயன்படுத்தினால் போதும் எனவும்மற்றொரு பாகத்தில் சிறிய தாக்குதல் மூலமாகவும் பேரழிவு நிவாரணம் வழங்குவதன் மூலமாகவும் அந்த பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிப்பதன் மூலமாகவும் நிறைவேற்றலாம் என்பதாக கூறப்பட்டது.
அமெரிக்கா ஒருகாலத்தில் தன்னால் இரு போர்களை ஒரே நேரத்தில் செய்ய முடியும் என்று கர்வம் கொண்டிருந்த நிலை மாறி, இன்று தன்னால் ஒரு போரை மட்டுமே செய்ய முடியும் என்று ஒத்துக் கொண்டுள்ளது.
2. அமெரிக்கா இன்று எந்த போருக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகிவிட்டது. அமெரிக்காவிற்கோ தற்போது பன்முனைகளில் சவால்கள் எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போரை சமாளிக்கவும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுடனும் மத்திய கிழக்கிலும் போர் புரிய வேண்டிய சூழலை சமாளிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. சீனாவின் அபார வளர்ச்சி அமெரிக்க அரியல் கொள்கையை தீர்மானிக்கும் நிபுணர்களுக்கு மிகவும் கவலை  அளிப்பதாய் உள்ளது.
2012 ஆம் ஆண்டு மார்ச்  மாதத்தில் Congressional Research Service அறிக்கையை “Pivot to the Pacific? The Obama Administration’s “Rebalancing” Toward Asia“என்ற தலைப்பில்அறிக்கையை  தயாரித்தது. அந்த அறிக்கை துல்லியமாக கூறுவது யாதெனில்…
   “மைய ஆதாரத்தின் அடிப்படை நம்பிக்கை என்னவெனில்,அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் நிறையீர்ப்புதேசிய பாதுகாப்பு மற்றுஉத்தி பொருளாதார அக்கறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  அது ஆசியாவை நோக்கி நகர்ந்துள்ளது. மேலும் அமெரிக்க உத்தி மற்றும் முன்னுரிமைக்கேற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா அதிக முக்கியத்துவத்தை ஆசிய பசிபிக் பகுதியில் செலுத்தவேண்டியது தவிர்க்க முடியாதது என்று அரசியல் நோக்கர்கள் கூறி வருகிறார்கள்.கடந்த சில வருடங்களாக இப்பிராந்தியத்திலுள்ள பல நாடுகள் சீனாவின் வளர்ச்சியை தடுக்க அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கையை ஊக்குவின்றன.அமெரிக்க தன்னுடைய இராணுவத்தை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து குறைத்து ஆசிய பசிபிக் கடற்பகுதியை நோக்கி  நகர்த்தியுள்ளது.அமெரிக்கா இந்த பகுதிக்கு அதிக முக்கியத்தும் அளிப்பதையே இது காட்டுகிறது.தேவையேற்படின் அமெரிக்கா இராணுவ மோதலுக்கும் தயாராகவே உள்ளது. அமெரிக்கா தன்னுடைய அரசியல் ஈடுபாட்டை  ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து மாற்றி கிழக்காசியா நோக்கி திருப்பி உள்ளதையே இது காட்டுகிறது.
பிராந்திய காரணிகள்
மூன்று பிராந்திய காரணிகள் அமெரிக்காவிற்கு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. ஆதலால் அது ஆப்கானிஸ்தானில் நிலைத்தன்மையை ஏற்படுத்த தெளிவான முடிவை எடுக்கும் நிலையை ஏற்படுத்தியது.
ஐரோப்பாவின் தலைமையிலான நேட்டோ படைகள் அமெரிக்க ஆப்கானிய படையெடுப்பை  பலமுறை தடுத்திருக்கின்றன. 2003 ஆம் ஆண்டு முதல் நேட்டோ படையெடுப்பு சர்வதேச பாதுகாப்பு படையின்கீழ் துவக்கப்பட்டதோ, சில ஐரோப்பிய நாடுகள் தங்களின் படைகளையும் தளவாடங்களையும் ஆபத்து நேரும் பகுதியில் ஈடுபடுத்தாமல் தவிர்த்து வந்தன. பெல்ஜியம், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் தங்களின் படைகளை ஆப்கானிஸ்தானின் அமைதியான பகுதியில் நிறுத்த விரும்பின. நேட்டோ அமர்வுகளில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் போனது.  மேலும் அமெரிக்கா போருக்கான முன்னுரிமையை வேறு பகுதிக்கு மாற்றியதால் ஆப்கானிய போரை தொடர்ந்து நடத்துவது சிரமமாயிற்று.இறுதியாக 2012 ஆம் ஆண்டு சிக்காகோவில் நடைபெற்ற அமர்வில் நேட்டோ நாடுகள் தோல்வியுற்ற ஆப்கானிய போரின் திரைச்சீலையை இறக்க   சம்மதித்தார்கள். அந்த மாநாட்டின் வாக்குமூலம் கூறுவது என்னவென்றால்,
  பத்து வருடங்கள் போர்  புரிந்துள்ளதாலும் சர்வதேச பொருளாதாரம் வீழ்சியடைந்து விட்டதாலும்நூற்றாண்டு காலமாக தங்களை ஆக்கிரமிக்கும் அந்நியர்களை தோல்வியுற செய்தவர்களிடம் எங்களின் உயிர்களையோ சொத்துக்களையோ இழக்க விரும்பவில்லை.
பாகிஸ்தானின் பழங்குடியினர் பகுதிகளில், குறிப்பாக வடக்கு வசீரிஸ்தானில் அதிகமான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா தவறிவிட்டது.அதிக ஈடுபாட்டுடன் தங்கள் எஜமானர்களுக்காக அதிகமாக உழைத்துக்கொண்டிருக்கும் சர்தாரி, கயானி போன்ற எஜெண்டுகளாலேயே முடியவில்லை. பிரிட்டனின் ஆலோசனையின் பேரில் இந்தியாவும் ஆப்கானிஸ்தானை வெற்றிகொள்ள அமெரிக்காவிற்கு உதவாமல் சிரமத்தையே கொடுத்தது.  இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே இருக்கும் பல எதிர்ப்பு நடவடிக்கைகளை குறைக்க அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை ஏற்காமல் நிராகரித்ததால், பாகிஸ்தானால் ஆப்கானிய எல்லையில் தன்னுடைய படையை அமர்த்தி அமெரிக்கா எதிர்நோக்கி வரும் எதிர்ப்பை அடக்க உதவமுடியாமல் போனது.
உள்நாட்டுகாரணிகள்
ஒபாமாவிற்கும் இராணுவ தலைமைக்குமிடையே படை குறைப்பு சம்பந்தமாகவும் செயல்பாட்டு உத்திகளை நிறைவேற்றும் காலம் சம்பந்தமாகவும் வெளிப்படையாகவே மோதல் ஏற்பட்டதன் காரணமாக ஜெனரல் மெக் கிறிஸ்டல் பனி நீக்கம் செய்யப்பட்டார். இது அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினரின் மன உறுதியைக் குறைப்பதாக அமைந்தது. மேலும் புஷ்தூன் மக்களின் எதிர்ப்பை வலுவடைய செய்தது. அமெரிக்க கடற்படை பிரிவு தளபதி ஜெனெரல் ஜேம்ஸ் கன்சாய் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவது எப்போது என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது இவ்வாறு கூறினார்:-
சில வகைகளில் நாம் சரி என்று நினைப்பது இப்போது நமது எதிரிகளுக்கு அநேகமாக ஊக்கம் விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. அவர் தமக்குத்தாமே இதை கூறுகிறார் என்று நாம் நினைக்கிறோம்.உண்மையில் இடைமறிக்கப்பட்ட கருத்துக்கள் கூற வருவதுநாம் எப்பொழுது வரை தாக்குப்பிடிக்கவேண்டும்…. நான் உண்மையாக  நினைக்கிறேன்.,சில காலம் முன் வரை.நமக்கு சாதகமான  திருப்புமுனை ஏற்படும் என்று ..”                        [ US General: Afghan        deadline 'giving enemy sustenance', BBC News Online, August 24 2010 ]
அமெரிக்கப் படைகளின் மோசமான நடத்தைகள்,அவர்களை ஆப்கானிஸ்தான் மக்களிடமிருந்து அன்னியப்படுத்தியது மட்டுமல்லாமல், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு  எதிராக போராடிய மக்களின் எதிர்ப்பு உக்கிரத்தையும் அதிகப்படுத்தியது. குர்ஆனை கிழித்தது, முஜாஹிதீன்களின் உடலில் சிறுநீர் கழித்தது, பெண்களையும் குழந்தைகளையும் இரக்கமில்லாமல் கொன்று குவித்தது, புஷ்தூன் பகுதியில் தஜிக் மக்களைக் கொண்டு சோதனை மேற்கொண்டது போன்ற ஈனச்செயல்களின் காரணமாக ஆப்கானிஸ்தான் மக்களின் எதிர்ப்பு மென்மேலும் உறுதியடைந்தது. ஆகவே சர்வதேச, பிராந்திய, உள்நாட்டு காரணிகள் அமெரிக்காவின் செயல்பாட்டு உத்தியை கைவிட்டுவிட்டு தாலிபான்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி ஒரு கவுரமான வெளியேற்றத்தை நாட நிர்பந்தித்தது. எனினும் அமெரிக்கா இதைக்கொண்டு யுரேசியாவிற்கான செயல் திட்டத்தை கைவிட்டுவிட்டது என்று கருதக்கூடாது.  அதை வெறுமனே நிறுத்திவைத்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானை ஓர் ஏவுதளமாக  அமெரிக்கா பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.
எனினும் இன்ஷா அல்லாஹ் கிலாஃபத்தின் மீள்வருகையானது ஆப்கானிஸ்தான் மற்றும் முஸ்லிம் நாடுகளை ஏப்பம் விட நினைக்கும் அமெரிக்காவின் இலட்சியத்தை தகர்த்தெறி வதோடு,  என்றைக்குமே பகல் கனவாக ஆக்கிவிடும்.
                                                                           Source: http://sindhanai.org/

Sep 9, 2013

ஒரு தேசத்தின் வேஷம் கலைகிறது !



அது 2001 செப்டம்பர் 11 திகதி வழமை போலவே விடிந்த அந்தப் பொழுது ஒவ்வொரு அமெரிக்க குடிமகன் உள்ளத்திலும் 1940 களில் ஜப்பான் நடத்திய 'பேர்ல் ஹார்பர் ' தாக்குதலை விட பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது .

9/11 என்ற சுருக்கப் பெயரோடு அழைக்கப்படும் இந்த நாள் சர்வதேச அரசியலின் நகர்வுப் பாதையை உத்தியோக பூர்வமாக இன்னொரு திசையை நோக்கி நகர்த்தியது . இன்னொரு வகையில் சொல்வதானால் முதலாளித்துவ ஏகாதிபத்தியம் தன் பெற்றோலிய கொள்ளைக்கான ஆயுத பூஜையை தன் சுய பலியோடு தொடங்கிய நாளாக குறிப்பிடலாம் .

பலியிட கடாக்களை வளர்ப்பதும் ,அதில் சிலதை தன் மார்பில் பாய வென்றே வளர்த்து அந்த நியாயத்தில் அதை உருட்டி ,பிரட்டி பின் தேவையான சந்தர்ப்பத்தில் பலியிடுவது கபிடலிச பொலிடிக்ஸ் பயன் படுத்தும் அடிப்படை விதி என்பது புரியாவிட்டால் நான் இங்கு பதிவிடுவது உணரக் கூடியதாக இருக்காது .

சதாம் ஹுசைனோ , கடாபியோ , அல்லது 9/11 தாக்குதலின் முக்கிய குற்ற வாளியாக இனம் காட்டப்பட்ட ஒசாமா பின் லாடனோ இந்த புரபிட் பெனிபிட் பலிக்கடா அரசியல் விதியில் தப்பிக்க வில்லை .

அமெரிக்கா என்ற தேசத்தின் ஆரம்பமே இரத்தக் கரை படிந்தது தான் .
அது செவ்விந்தியர் என்ற அந்த நிலத்தின் சுதேசிகளை கொன்று குவித்து ,அடிமைப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்ததுடன் தான் ஆரம்பித்தது .

இந்த வகையில் இவர்கள் சொல்லும் ஜனநாயகம் எனும் அரசியல் அகீதாவை நாம் இப்படியும் நோக்கலாம். சில ஏமாளிகளான மக்களால் , சில ஏமாளிகளான மக்களை அழித்து ,அடக்கி சில குறிப்பிட்ட மேட்டுக்குடி மக்களை வளத்தோடும் ,பலத்தோடும் வாழவைப்பதாகும் .

அந்த வகையில் இந்த 9/11 சம்பவம் சிலருக்காக பல எதிர்கால அரசியல் , பொருளாதார இலாபங்களை நோக்கிய சுய அழிப்பின் மூலமான ஒரு ஆதார வடிவ நியாயத்தை ஏற்படுத்தும் திட்டமாக இருக்கலாம் ; எனும் சந்தேகத்தை வலுப்படுத்த அதன் பின்னால் நடந்த வளம் மிக்க முஸ்லீம் உலகம் மீதான அதன் இராணுவ ஆக்கிரமிப்பு சிறந்த ஆதாரமாகப் படுகின்றது . இப்படிப் பார்த்தால் united state இன் ஒவ்வொரு குடிமகனும் கூட பக்குவமாக வளர்க்கப்படும் குறித்த சில முதலாளிகளின் பலிக்கடாக்கள் தான் என்று ஆகிவிடும் .

இந்த 9/11 சம்பவம் அடிப்படைவாதி ,தீவிரவாதி என்ற வார்த்தைகளை தாண்டிய ஒரு பதப் பிரயோகமான இஸ்லாமிய பயங்கர வாதம் என்ற கருத்தியலை பின் லாடன் மீதும் ' அல் கைதா ' மீதும் அள்ளி வீசுவதன் மூலம் முழு மனித குலத்துக்கும் ஒரு பொது எதிரியை உருவாகிவிட்டான் ! என்ற பிரச்சார யுத்தம் மூலம் தான் செய்யப்போகும் சில எதிர்கால வேலைகளுக்காக 'advance நியாயத்தையும் ,அதற்கான கூட்டு அணியையும் தயார்படுத்தியது .

எது எப்படியோ இந்த முதலாளித்துவ மேட்டுக்குடிகளின் இலாப அறுவடைக்கான பலிக்கடாக்கள் முஸ்லீம்கள் மட்டுமல்ல ,அமெரிக்கர்களும் ,ஏன் முழு மனித சமூகமும் தான் என்ற வகையில் ஒரு உண்மையான விடுதலைப்போரை நியாயமான பார்வையுள்ள முழு உலகும் எதிர் பார்த்துள்ளது . அது அந்த முதலாளித்துவமே தேர்ந்துள்ள எதிர் சக்தியான இஸ்லாத்தின் நிழலில் இருந்துதான் என்பது புரியும் காலம் வெகுதூரத்தில் இல்லை .

Sep 1, 2013

என்றும் மறவாத நினைவுகளில் புதைந்துள்ள உண்மைகள் !(பகுதி 03)

ஆப்கான் சோவியத் யுத்தம் சூடு பிடித்திருந்த அந்த இறுதிப் பொழுதுகளில் அமெரிக்கா தனது அசிங்கம் மிக்க சுயநலக் கரம் ஆப்கான் முஜாஹிதீன்களுக்கு சார்பாக நேரடியாகவே பங்களிப்பு செய்திருந்தது போலக் காட்ட தனது மீடியாக்களை பல்வேறு வழிகளில் பாவிக்கத் தொடங்கியது .

ஆப்கன் யுத்தத்துக்கு நிதி சேர்க்கும் சாட்டில் மாபியாத் தனமாக ஹெராயின் ,கொகாயின் வியாபாரத்தை வேறு ஆப்கான் போடர்களில் படர விட்டிருந்த அமெரிக்கா , தான் எப்படியான ஆயுத உதவி செய்தேன் என்பதைக் காட்ட 'ஹோலிவூட் ' பாணியில் சொன்ன கதைதான் FIRST BLOOD (PART 3) அல்லது RAMBO (PART 3) திரைப்படம் ஆகும் .

'சில்வஸ்டர் ஸ்டலோன் ' என்ற பிரபல்யத்தைப் ஹீரோவாக போட்டு 1988 களில் இந்தத் திரைப்படம் வெளிவந்த போது ஆப்கான் முஜாஹிதீன்கள் தலைநகரான காபூலை நெருங்கி இருந்தார்கள் . அப்போது ஆப்கான் ஜனாதிபதியாக இருந்த 'நஜீபுல்லா ' தன் மூட்டை முடிச்சுகளை கட்ட ஆரம்பித்திருந்தார் . ஆப்கான் இராணுவத்தின் தளபதியாக இருந்த 'அப்துர் ரசீத் தோஸ்தம் ' மதில் மேல் உள்ள பூனை போல இருந்தார் .

எப்போதும் அமெரிக்கா தனது 'இமேஜை' தக்க வைக்கவும் ,தோல்விகளை மறைக்கவும் , தனது எதிரிகளை கிண்டல் அடிக்கவும் தனது அச்சங்களை வெளிப்படுத்தவும் 'ஹோலி வூட் ' எனும் மீடியா நாசகாரியை பாவிப்பது வழமை . அந்த வகையில் வியட்நாம் தோல்வி தொடர்பில் 'TOUR OF DUTY' போன்ற திரைப் படங்களின் வரிசையில் RAMBO (PART 3) ஆப்கானில் தனது பிரசன்னத்தை காட்டி முஜாஹிதீன்களின் தியாகத்தை பக்குவமாக கொச்சைப் படுத்தியது .

அமெரிக்க சார்பாக ஒரு ஆயுத விநியோக நடவடிக்கையில் சோவியத் படையிடம் கைதான ஒரு அதிகாரியை மீட்கும் 'வன் மேன் ' ஆர்மியாக 'சில்வஸ்டர் ஸ்டலோன் ' ஆப்கான் நுழைந்து இக்கட்டில் மாட்டியிருக்கும் ஆப்கான் மக்களை காக்கும் மனிதாபிமான சப் மிசனிலும் சிறப்பாக பணியாற்றி சோவியத் பட்டளியன்களை துவம்சம் செய்வது தான் கதை .

இதில் நிஜத்தில் வெற்றி அடைந்து கொண்டிருக்கும் முஜாஹிதீன்களை எதோ நவீன யுத்த மரபு தெரியாத காட்டன் தரத்தில் காட்டி 10 வருட தியாகத்தை 2 மணிநேரத்தில் சிதைத்து விட்டுப் போனது .
அத்தோடு தனது இரட்சிப்பு இல்லாமல் சோவியத் ரஷ்யர்களை தோற்கடித்து இருக்கவும் முடியாது என்ற செய்தியையும் சொல்லிப் போனது . இன்னும் சில பதிவுகளோடு இன்ஷா அல்லாஹ் மறுமுறை சந்திக்கிறேன்.

Aug 30, 2013

என்றும் மறவாத நினைவுகளில் புதைந்துள்ள உண்மைகள் ! (பகுதி 02)

அது வீரத்தின் நிலம் என்பது புரியாமல் கம்யூனிச செங்கரடி தன் நாஸ்திக சித்தாந்த நாகரீகத்தை ஆப்கானில் பதிக்க முனைந்தான் . அந்த வீர சமூகத்தை மண்டி போட வைக்க அலெக்சாண்டருக்கும் முடியாமல் போனது ! பிரிட்டிஷ் காரனுக்கும் முடியாமல் போனது ! என்பதை உணராமல், அல்லாஹ்வுக்கு மட்டுமே சிரம் சாய்த்த ஒரு சமூகத்தை மீண்டும் ஒருமுறை கம்யூனிசமும் மண்டி போடவைக்க முயன்று பார்த்தது . முடிந்ததா ?

'தாகூத்களுக்கு' அடிமைப்படுவதை விட சஹாதத் மேலானது என அந்த சமூகம் தெளிவாகவே முடிவெடுத்தது . ஆரம்பத் தோல்விகளில் அது அனுபவத்தைக் கண்டது . எதிரியை அளவிட்டது . USSR எனும் சுப்பர் பவரின் இராணுவ ,அதி நவீன ஆயுத வலிமை இங்கு சுவன ஆசையின் முன் செல்லாக் காசாக மாறியது . ஆப்கான் முஸ்லீம் உம்மத் கிடைத்ததைக் கொண்டே போராட்டத்தை தொடங்கியது .

இந்த தூய போராட்டம் தொடரும் வழியில் முழு உலகில் இருந்தும் ஜிஹாதிய ஆர்வளர்கள், இமாம்கள் என ஒன்று குவிக்கப் பட்ட ஒரு களமாகவே ஆப்கன் மாறிப்போனது .ஒரே கல்லில் பல மாங்காய் கள் விழுத்த இந்த ' ஜிஹாதை'அமெரிக்க பயன்படுத்தியது . 'அது ஏன் எப்படி ?.
காரணங்கள் இதுதான் .

1. பனிப்போரின் வலுச் சமநிலையை உடைத்து சோவியத் யூனியனின் அரசியல் இராணுவ பலத்தை கேள்விக்குறி ஆக்குவதன் ஊடாக தனது ஆதிக்க சக்தியை வலுப்படுத்துவது .

2. குறிப்பாக சவூதி அரேபியா உட்பட மத்திய கிழக்கின் ஜிஹாதிய ஆர்வளர்கள் ,இமாம்களை ஆப்கானை நோக்கி நகர்த்துவதன் ஊடாக மத்திய கிழக்கின் தனது பிராந்திய ஆதிக்கத்துக்கும் , அதன் ஆட்சியாளர்களுக்கும் (குறிப்பாக சவூதியின் மன்னராட்சிக்கு ) எதிரான சவால்களை தவிர்ப்பது .

3. சவூதி அரேபியாவுடன் , அமெரிக்கா இராணுவ பொருளாதார ரீதியான ஒப்பந்தங்களை இலகுவாக செய்து கொண்டது .(அதன் மூலம் பழைய இருப்பில் இருந்த ஆயுதங்களின் தொகுதிகள் ஆப்கானுக்கு வழங்கவென சவூதி அரேபியாவிற்கு விற்கப்பட்டது .)

4. குறித்த இந்த இலக்குகளை தனது நேரடித் தலையீடோ ,செலவோ இன்றி முஸ்லீம் உம்மத்தின் உயிர் ,உடமைகளை பலியிட்டு செய்ய வைத்தது .

(சவூதியின் முதவாக்கள் ஆப்கான் ஜிஹாத் விடயத்தில் அது ஜிஹாத் தான் என்றும் அதில் மரணிப்பவர்கள் 'ஷஹீத் ' எனவும் 'பொசிடிவ் ரிபோர்ட் ' கொடுத்தனர் . ஆனால் சிரிய விவகாரத்தில் மௌனம் !, எகிப்து விவகாரத்தில் அந்த கிங் கோப்ராக்கள் நெகடிவ் ரோல் ! முஸ்லீம் உம்மத்தே இது உனது சிந்தனைக்கு !)

இப்படி பல இலாப அறுவடைகளை ஆப்கான் , USSR யுத்தத்தை வைத்து அமெரிக்கா செய்துள்ளது .என்பது வியப்பான செய்தியாக சிலருக்கு இருக்கலாம் . இந்த ஆப்கான் 'அசைன்மெண்டுக்கு' பாகிஸ்தான் உளவுப் பிரிவான I .S .I தெளிவாகவே அமெரிக்கா பயன் படுத்தியது . இதன் பின் ஆப்கான் பெருநிலம் முஜாஹிதீன்களின் பக்கம் முற்றாகவே வீழ்ந்தது . ஆனால் இஸ்லாமிய சரீயாவை விரும்பிய ஆப்கான் மக்களுக்கு அந்த இலக்கை அடைய முடிந்ததா !? இந்த கேள்விக்கு விடையை இன்ஷா அல்லாஹ் இன்னொரு பதிவில் தருகிறேன் .

Aug 29, 2013

என்றும் மறவாத நினைவுகளில் புதைத்துள்ள உண்மைகள் !


சோவியத் யூனியன் (USSR ) என்ற பெயர் புதிய தலைமுறையினருக்கு சற்று அறிமுகமல்லாமல் போயிருக்கும் . கம்யூனிசத்தின் சித்தாந்தக் கடவுள் கார்ல் மார்க்ஸ் வடித்த' டாஸ் கபிடல் ' எனும் நூலின் 'தியரிக்கு' பிராக்டிகல் கொடுக்க 'லெனின் கிராட் ' எனும் இன்னொரு கடவுளால் உருவாக்கப் பட்ட தேசமே சோவியத் யூனியனாகும் . இன்று இந்த கூட்டு யூனியன்கள் எல்லாம் உடைந்து ரஷ்யா எனும் கௌரவப் பிச்சைக்காரனாக அது காட்சி தந்தாலும் அதன் அடாவடித்தனம் மட்டும் குறைந்த பாடில்லை .

" அரசியல் அதிகாரம் என்பது துப்பாக்கி பரல்களில் இருந்து பிறக்க வேண்டும் " என்ற வார்த்தைகளின் வடிவமான இந்த தேசத்தின் உண்மை பலருக்கு புரியும் போது, தங்கள் நெற்றிகளுக்கு முன்னாலும் ஒரு துப்பாக்கி தோட்டாவை துப்பத் தயாராக இருந்தது மட்டுமே கடைசிப் பார்வையாக இருந்தது .

"நூறு பேச்சு மேடைகளும் , ஆயிரம் துண்டுப் பிரசூரங்களும் சாதிக்காததை ஒரு துப்பாக்கித் தோட்டா சாதித்து விடும்" என்ற இவர்களின் இரண்டாம் கடவுள் 'லெனின் கிராட் ' சொன்னதை கச்சிதமாக செய்தது அதன் உளவுப் பிரிவான கே .ஜி .பி . யும் ,அதன் இராணுவமும் .

நாஸ்திக வாத அகீதாவை கொண்ட இந்த சோவியத் யூனியன் எனும் வல்லரசோடு முஸ்லீம்கள் பலப்பரீட்சை செய்த முதல் களமே ஆப்கானிஸ்தான் .இந்த செங்கரடிகளின் இராணுவ மேலாதிக்க வாதத்தின் அழிவுக் கதவுகளை ஆப்கான் உத்தியோக பூர்வமாக திறந்தது 1970 களின் இறுதிப் பகுதியிலேதான் ஆகும் .

1990 கள் வரை தொடர்ந்த இந்த பலப்பரீட்சை மூட்டை முடிச்சுகளோடு ஆப்கானை விட்டு சோவியத் இராணுவம் வெளியேறியவுடன் அதன் இராணுவ வலிமை பற்றிய 'இமேஜ்' ஜுஜூபி வடிவத்தை அடைந்தது .இந்தப் போரில் இன்னொரு பார்வையாக புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் வியட்நாமின் படு தோல்விக்கு சோவியத் யூனியனை பழிவாங்க அமெரிக்காவுக்கு நல்ல சந்தர்ப்பமாகவும் ஆகியதாகும் .

சோவியத் ஆப்கானில் அடைந்த இராணுவத் தோல்வி மற்றும் அதன் ஆட்சித் தலைவராக இருந்த மிக்கைல் கொர்பச்சோ வழங்கிய சீர்திருத்தக் கொள்கைகள் என்பன கொம்யூனிச அகீதாவை அங்கு கோமா நிலைக்கு ஆக்கி முதலாளித்துவத்திடம் சரண்டராகும் நிலைக்கு ஆக்கியது .இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் தொடர்ந்த பனிப்போர் எனும் ஆதிக்கச் சண்டைக்கு முற்றுப் புள்ளியும் வைத்தது . இந்த தோல்வி அரசியலின் முடிவுரைப் பந்தி ஆப்கான் களத்தில் இருந்துதான் எழுதப் பட்டது என்பது 'ஓபன் சீக்கிரட்' .

தெற்காசியாவில் இருந்த அதிகம் அறியப்படாத ஒரு முஸ்லீம் பெருநிலத்தை உலக முஸ்லீம் உம்மாவின் இதயங்களில் பசுமையாக விதைத்ததும் இந்த தியாகப் போராட்டம்தான் என்றால் அதுவும் மறுக்க முடியாதது .அதேபோல கம்யூனிச பிசாசை விரட்ட அமெரிக்கா எனும் பூதம் ஏன் பின்னால் நிற்கின்றது !? என்பதை உணராமல் முஸ்லீம் உம்மா போராடிய தவறும் மறுக்க முடியாதது தான் ஆகும் .

'புரபிட் அன்ட் பெனிபிட் பேசில்' துரோகத்தனமான 'டபுள் கேம்' கொடுப்பது U .S பொலிசியின் பிரதான எண்ணக்கரு என்பது புரியாமல் ,அந்த முதலாளித்துவம் விரித்த சதிவலையில் நாஸ்திக செங்கரடிகள் எதிர்ப்பு என்ற ஒருபக்க பார்வையை மட்டுமே முஸ்லீம் உம்மத் பதித்தது .

'அல்லாஹு அக்பர்' என கையில் இருந்த 'கிளஸ் நிகோ ரைபிளின் ரிகரை ' தட்டுவது பற்றி இருந்த ஆர்வம் ,தனது தலையில் இருந்த சிந்தனை 'ரிகரை தட்டுவதில் இந்த உம்மாவுக்கு அன்று இருக்கவில்லை .நாஸ்திக அகீதாவுக்கு எதிரான கடுமையான பார்வை நாசகரமான 'செக்கியூலரிச முதலாளித்துவக் கடவுளின் ஆதிக்கம் பற்றி மற்றும் குள்ளநரித்தனம் பற்றி ஆராய விடவில்லை . அது எப்படியான திட்டமிடல் !? நடந்தது என்ன !? இன்ஷா அல்லாஹ் இன்னொரு பதிவில் தருகிறேன்.