Showing posts with label இஸ்லாமிய மாதம். Show all posts
Showing posts with label இஸ்லாமிய மாதம். Show all posts

Jun 21, 2016

ரமழானும் உம்மத்தின் அதிமுக்கிய பொறுப்புக்கள் இரண்டும்!

       

 
அல்லாஹ்(சுபு) தனது நிறைவான ஞானத்திலிருந்தும், அதியுயர் அதிகாரத்திலிருந்தும் தனது அடியார்களில் சிலரை விட சிலரை மேன்மைப்படுத்தியிருக்கிறான். பூமியில் சில இடங்களை விட  சில இடங்களையும், சில சமூகங்களை விட சில சமூகங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறான். அது போன்றே ரமழான் மாதத்தை ஏனைய அனைத்து மாதங்களையும் விடவும் சிறப்பான மாதமாக அறிவித்திருக்கிறான். அதற்கொரு முக்கிய காரணத்தையும் அவன் திருக்குர்ஆனிலே குறிப்பிடுகிறான்.

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது;
(அல் பகறா:185)

எனவே ரமழானின் அடிப்படைச் சிறப்பு  என்னவென்றால் அது அகிலத்தாருக்கு வழிகாட்டியை கொண்டு வந்திருக்கிறது. அண்ட சராசரங்களை படைத்து கட்டியாளும் அந்த ரப்பின் நற்செய்திகளையும், எச்சரிக்கைகளையும் சுமந்து வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இறுதித்தூதான புர்கானை மாத்திரமல்லாது, தவ்ராத்தையும், இன்ஜீலையும், சபூரையும் கூட ரமழான் மாதத்திலேயே அல்லாஹ்(சுபு) அருளியிருப்பது ரமழானின் தனிச் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்.

அத்தகைய சிறப்புக்குரிய மாதமான ரமழானிலே திருக்குர்ஆனை அருளிய அல்லாஹ்(சுபு), அது யாருக்கு வழிகாட்டியாகப் பயன்படும்; என்பது பற்றியும் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறான்.

இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; தக்வா பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
(அல் பகறா:2)

உறுதியான இறைவிசுவாசமும், அனைத்து சந்தர்ப்பத்திலும் அவனது பிரசன்னத்தை மறந்திராத விழிப்புணர்வும், என்றும் அவனது விசாரணைக்கு அஞ்சி வாழ்கின்ற இறையச்சமும் உள்ள ஒருவருக்கே அல்லது ஒரு சமூகத்திற்கே அல்குர்ஆன் வழிகாட்டியாக தொழிற்படும் என்பதே இதன் பொருளாகும். ரமழானிலே மனித குலத்திற்கான வழிகாட்டலை வழங்கியதற்காக அந்த மாதத்தை ஏனைய மாதங்களை விட சிறப்பித்த அல்லாஹ்(சுபு), அந்த வழிகாட்டலால் பயன் பெறக்கூடிய ஒரு சமூகத்தின் முக்கிய பண்பான தக்வாவை வளர்ப்பதற்கான ஓர் பயிற்சியையும் அதே மாதத்திற்குள் பொதித்திருப்பது அவனது வழிகாட்டலின் பரிபூரணத் தன்மையை நிரூபிக்கிறது. ரமழானில் நோன்பை  அல்லாஹ்(சுபு) கடமையாக்கியிருப்பது அதற்காகத்தான். நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம் குறித்து விபரிக்கும் இந்த திருமறை வசனம் இதனை தெளிவுபடுத்துகிறது.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தக்வாயுடையோர் ஆகலாம்.
(அல் பகறா:183)

எனவே ரமழான் மாதத்தை அடைந்திருக்கின்ற முஸ்லிம் உம்மத்தின் மீது குறைந்தது இரண்டு முக்கிய பொறுப்புக்கள் இருக்கின்றன. முதலாவது, மனிதகுலத்தின் வழிகாட்டியான அல்குர்ஆனை தனது வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் அமூல்படுத்த அது தயாராக வேண்டும். அல்லது அதற்காக முயற்சிக்க வேண்டும். இரண்டாவது, அந்த வழிகாட்டலை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளக்கூடய மனோபாவமான தக்வாவை இந்த மாதத்தில் மிக ஆழமாக வளர்த்துக் கொள்ள அது எத்தனிக்க வேண்டும்.

முதலாவது அல்குர்ஆனை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வது என்பதன் பொருள் என்ன என்பதை மேற்குறிப்பிட்ட அல் பகறாவின் 185 வசனத்தின் ஊடாக சுருக்கமாக பார்ப்போம்...

இந்த வசனத்தின் ஆரம்பத்தில் அல்குர்ஆனை அல்ஹுதா என அல்லாஹ்(சுபு) அறிமுகப்படுத்துவது “ அது சத்தியத்தின்பாலும், ஸிறாத்தல் முஸ்தக்கீமின் பாலும் வழிகாட்டக்கூடியது என்ற பொருளிலும், கால, இட வேறுபாடுகளைக் கடந்த முழு மனதிகுலத்திற்குமான பூகோள வழிகாட்டி என்ற பொருளிலுமாகும்.

தொடர்ந்து பய்யினாத் மின் அல் ஹுதா என்று அல்லாஹ்(சுபு) தெரிவிப்பது, அந்த வழிகாட்டலுக்கான (அனைத்தையும் பற்றிய) மிகத்தெளிவான விளக்கமாக அது அருளப்பட்டிருக்கிறது என்பதையும், அது எதனுடனும் ஒப்பிடமுடியாத, இன்னொருவரால் கொண்டு வர முடியாத அல்லாஹ்(சுபு) வின் தீர்க்கமான அத்தாட்சி என்பதையும் தெளிவுபடுத்துவதாகும். இமாம் அல் மவர்தி இந்த வசனத்தில் வருகின்ற (பய்யினாத் மில் அல் ஹுதா மற்றும் அல் புர்கான்) என்ற சொல்லாட்சிகள் குறித்து குறிப்பிடும் போது “அது எது ஹலால், எது ஹராம் என்பதை விளக்குவதாகவும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடிய அளவுகோளாகவும் வந்திருக்கிறது” என விளக்குகிறார்கள்.

இறுதியாக அல்குர்ஆன் தன்னை அல் புர்கான் அதாவது அளவுகோல் என்று அழைக்கும் சொல்லாட்சி அது சத்தியத்தையும், அசத்தியத்தையும், நல்லதையும், கெட்டதையும், நல்ல செயலையும், கெட்ட செயலையும் வேறு பிரிக்கக் கூடியது என்ற பொருளை விளக்குவதாக அமைந்துள்ளது. இமாம் அல் பைதாவி அல்குர்ஆன், தன்னை “பய்யினாத் மின் அல் ஹுதா மற்றும் அல் புர்கான் - என இரு விதமாக அறிமுகப்படுத்துவதன் ஊடாக சொல்லவருவது, அல்லாஹ்(சுபு), அல்குர்ஆனை அற்புதத்தன்மை பொருந்திய, மனிதகுலத்திற்கான வழிகாட்டியாக அருளியுள்ளதுடன் அது சத்தியத்தின்பால் வழிகாட்டக்கூடிய மிகத்தெளிவான வசனங்களின் தொகுப்பாகவும் இருக்கிறது. மேலும் அது தனக்கும்; ஏனைய பிழையான சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் இடையான வித்தியாசத்தை பிரித்துக் காட்டக்கூடியதாகவும் இருக்கிறது” என்று விளக்கம் அளிக்கிறார்கள்.

ரமதான் மாதத்திலே அல்குர்ஆனின் மகிமை பற்றி மஸ்ஜித்கள், குத்பாக்கள், வெகுசன ஊடகங்கள் என அனைத்திலும் ஞாபகமூட்டப்படுவதைப் பார்க்கிறோம். இம்மாதத்தில் அதனை ஓதுவதன் சிறப்புப்பற்றியும், அது தரக்கூடிய அதியுயர் வெகுமதி பற்றியும் நாம் தொடர்ந்து நினைவு படுத்தப்படுகிறோம். எனினும் நாம் மேலே சுட்டிக்காட்டியதைப்போல அதனை முழுமையான அந்தஸ்த்துடன் அணுகுகிறோமா? அல்லது அது வெறுமனவே பாராயணம் செய்வதற்கும், ஒரு சில கிரிகைகளில் ஓதுவதற்கும் மாத்திரம் பயன்படுகிறதா? ஏன் அல்குர்ஆனை ஹுதாவாவும்(வழிகாட்டி), அல் புர்கானாகவும்(அளவுகோல்) நாம் பயன்படுத்துவதில்லை? ஏன் முஸ்லிம் உம்மத்தின் விவகாரங்களை அல்குர்ஆன் தீர்மானிப்பதில்லை?  இவை போன்ற கேள்விகளுக்கு நேர்மையாக பதில் அளித்தால் எமது அணுகுமுறையின் ஆபத்து புலப்படுவதுடன் இன்று உம்மத் அடைந்துள்ள இழிநிலை ஏற்பட்டதற்கான காரணிகளும் தெளிவாகும்.

இன்று தராவீஹ் தொழுகைகளிலே அல்குர்ஆன் அதிகமதிகம் பாராயணம்  செய்யப்படுவதும், நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அல்லாஹ்(சுபு) திருப்த்தியைப் நாடி இந்த மாதத்திலே ஒருமுறையேனும் முழு குர்ஆனையும் ஓதி முடிக்க முயன்று வருவதும் சந்தோசமான விடயங்கள்தான். எனினும் அந்த அல் குர்ஆன் எதற்காக அருளப்பட்டதோ அந்த நோக்கத்தை இன்று வரை எம்மால் நிறைவேற்ற முடியாமல் அல்லவா இருக்கிறது? எமது சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் நீதித்துறைகள் அனைத்தும் அல்குர்ஆன் வழிகாட்டாத, இஸ்லாம் சொல்லாத அந்நிய சட்டங்களாலும், கொள்கைகளாலும் அல்லவா வழிநடத்தப்படுகின்றன? எமது அகீதாவுக்கும், பாரம்பரியத்திற்கும், கலாசாரத்திற்கும், வரலாறுக்கும் மாற்றமாக மனித மூளைகளிலிருந்து உதித்த சடவாத சிந்தனைகளினால் அவை கட்டுப்படுத்தப்படுவதையும், முதலாளித்துவ சிந்தனைகளாலும், முறைமைகளாலும் நாம் ஆளப்பட்டு வருவதையும் அல்லவா நாம் அனுபவித்து வருகிறோம்? காலத்திற்கு காலம் சீர்திருத்தம் என்ற வேடம் தரித்து வந்த அந்நிய சிந்தனைகள் அல்குர்ஆனை எமது நடைமுறை வாழ்விலிருந்து படிப்படியாகப் பறித்து விட்ட பிறகு நாம் இந்த இழிநிலையை அடைந்திருப்பது தவிர்க்க முடியாததுதான்.

இஸ்லாமிய அரசியல் அதிகாரம் சுமார் ஓர் நூற்றாண்டுக்கு முன்னர் முஸ்லிம்களின் கைகளிலிருந்து பிடுங்கப்பட்ட பின்னர் உம்மத்தின் விவகாரங்களை ஆளுகின்ற சட்டங்களும், முறைமைகளும் இஸ்லாம் அல்லாத மூலங்களிலிருந்தும், பெறுமானங்களிலிருந்தும் பெறப்பட்டு மோசடியான கொடுங்கோலர்களின் கரங்களினால் எம்மீது அமூல்படுத்தப்பட்டு வருகின்றது. தொடருகின்ற இந்த அரசியல் சாபத்தின் விளைவு சர்வாதிகாரமும், கொடுங்கோலும், வறுமையும், வன்முறையும், பலகீனமும், பாரபட்சமும் கொண்ட தேசமாக எமது தேசம் மாறியிருக்கிறது. அனைத்து வளங்களையும் பெருமளவில் கொண்ட எமது நிலங்கள் தற்போது பொருளாதார மேம்பாடற்ற, கைத்தொழில் முன்னேற்றமற்ற பிராந்தியங்களாகவும், மேற்குலகின் சுரண்டல் சந்தைகளாகவும்  உருமாறியிருக்கின்றன.

ஆனால் நம்பிக்கை தருகின்ற விடயம் என்னவென்றால் எமது மிக அண்மிய வரலாறு மாற்றத்திற்கான வேட்கை உம்மத்தில் மீண்டும் ஓங்கி வருவதை காட்டுகிறது. மக்கள் அதற்காக எவ்விலையையும் தர தயாராகி வருகிறார்கள் என்பதை தெரிவிக்கிறது. அரபுலகில் வெடித்த புரட்சிகள் மக்கள் மத்தியில் பலமான சிந்தனை அதிர்வை ஏற்படுத்தி இருக்கின்றன. சிரியாவிலே அரை தசாப்த்தங்களையும் தாண்டி இன்று வரை பஷாருக்கு எதிரான புரட்சி நிலைத்து நிற்கிறது என்றால் அது குறைத்து மதிப்பிடமுடியாத நல்ல சமிஞ்ஞையே. அல்ஹம்துலில்லாஹ்!

உம்மத்தில் தோன்றியிருக்கின்ற இந்த மாற்றம் ஆறுதல் அளித்தாலும் எப்போது அல்குர்ஆன் எமது அரசியல் சாசனத்தின் அடிப்படையாக மாறுகிறதோ, எமது வாழ்வியல் விவகாரங்களை தீர்மானிக்கும் சக்தியாக செயற்பட ஆரம்பிக்கிறதோ அப்போது மாத்திரமே உண்மையான மாற்றம் சாத்தியமாகும். எமது துயரங்களும், கஷ்டங்களும் அது வரையில் அகழப் போவதில்லை. அந்த உண்மை மாற்றத்தை அடைவதற்கு அல்குர்ஆன் தன்னைத்தான் அறிமுகப்படுத்துவதைப்போல அல்குர்ஆனை உம்மத் பூரண வழிகாட்டியாகவும் (ஹுதாவாகவும்), அந்த வழிகாட்டலின் விளக்கமாகவும், தனது வாழ்வுக்கான ஒரேயோரு அளவுகோலாகவும்(புர்கானாகவும்) முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே மறுமலர்ச்சியின் பாதையில் அதனால் பயணிக்க முடியும்.

அல்குர்ஆனை முஹம்மத்(ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் இவ்வாறு எடுத்துக்கொண்டதன் விளைவுதான் அவர்களால்; முழுக்க முழுக்க அல்குர்ஆனிய ஆளுமைகளாக நடமாட முடிந்தது. அல்குர்ஆனிய சமூகமொன்றை முதன்முறையாக மதீனாவில் நிலைநாட்ட முடிந்தது. இதேபோன்றதொரு ரமழான் மாதத்திலே பத்ர் களமானது, யவ்முல் புர்கானாக - (சத்தியவான்கள் யார்?, அசத்தியவான்கள் யார்? எனத் தீர்மானிக்கும் நாளாக) மாறியதென்றால் அதற்கு காரணம் அல்குர்ஆனை அவர்கள் அல்புர்கானாக ஏற்றுக்கொண்டதே. அதேபோல அவர்கள்  அல்குர்ஆனை ஒரு பாரிய சமூகப்புரட்சியின் ஆயுதமாக எடுத்துக்; கொண்டதன்; விளைவுதான் மீண்டும் ஒரு ரமழானில் மக்காவை வெற்றி கொண்டு முழு அரேபிய தீபகற்பத்தையும் இஸ்லாத்தின் ஆளுகைக்குள் கொண்டு வந்தது.

இவ்வாறு அல்குர்ஆன் தம்மீது சுமத்திய பொறுப்பின் பரப்பை ஸஹாபாக்கள் மாத்திரம் புரிந்திருக்க வில்லை. அதற்கு பின்னர் வந்த இஸ்லாமிய சமூகமும் பல நூற்றாண்டுகளாக உணர்ந்திருந்தது. அதனால்தான் எவ்வாறு ரமழான் மாதம் ஸஹாபாக்களுக்கு வெற்றியின் மாதமாக அமைந்ததோ, அவர்களுக்கு பின் வந்தவர்களுக்கும் அது வெற்றியின் மாதமாக திகழ்ந்தது. சலாஹ}த்தீன் அய்யூபி ஹித்தீன் சமரில் சிலுவை யுத்தக்காரர்களுக்கு முடிவு கட்டியதும், ஐன்ஜாலூத் போரில் சைப்புத்தீன் குத்ஸ் தாத்தாரியர்களை முறியடித்ததும் இந்த மாதத்தில்தான் என்பதை நாம் மறந்துவிடலாகாது. எனவே அல்குர்ஆனை முழுமையான வழிகாட்டியாக, நிரந்தரமான அளவுகோலாக கைக்கொள்ள வேண்டிய பொறுப்பை இன்றைய முஸ்லிம் உம்மத் ஏற்றாக வேண்டும். அதனை இந்த ரமழான் மாதம் அவர்களுக்கு ஞாபகப்படுத்துமாக இருந்தால் அது விமோசனத்தின் முதற்படியாக அமையும்.

எனினும் தாஹுத்திய சிந்தனைகளின் ஆதிக்கத்தின் கீழும், கொடுங்கோண்மையான குப்ரிய ஆட்சிகளுக்கு கீழும் பல இருண்ட யுகங்களை கடந்து வருகின்ற உம்மத்திற்குள் இந்த தலைகீழ் மாற்றம் தோன்றுவது இலகுவான காரியமல்ல. அந்த மாற்றம் மிக உறுதியான ஈமானும், துடிப்புள்ள தக்வாவும் இருக்கின்ற ஒரு உம்மத்தில் மாத்திரமே தோற்றம் பெறும். இந்தக்கருத்து நாம் இந்தக் ஆக்கத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட இரண்டாவது பொறுப்பின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகிறது. அதுதான் தக்வாவை அடைந்து கொள்வது பற்றியது.  அல்லாஹ்(சுபு) நோன்பை கடமையாக்கியிருப்பதும், இராப்பொழுதுகளில் நின்று வணங்கச் சொல்லியிருப்பதும் அல்லாஹ்(சுபு)வின் பிரசன்னத்தை கனப்பொழுதும் மறவாத ஓர் உயர்ந்த உம்மத்தை தோற்றுவிக்கவே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ரமழானிலே இரவு பகலாக வளர்க்கப்படும் இந்த மனோபாவம் அல்லாஹ்(சுபு)வின் வழிகாட்டலை உம்மத்தின் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அமூல்படுத்துவதற்கு இன்றியமையாதது. எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும், எத்தனை சோதனைகளை கடக்க வேண்டி ஏற்பட்டாலும் அவனது தீனை இந்த உலகத்திலே நிலை நாட்டுவதற்கு தக்வா எனும் இந்த மனோநிலையே அடிப்படையான ஆயுதம். எப்போது தக்வா என்னும் இந்த மனோநிலை உம்மத்திடம் வலுவிழந்து போனதோ, எப்போது அல்லாஹ்(சுபு)விற்கு மாற்றாக அவனது சிருஷ்டிகளின் பால் அதனது அவதானமும், அச்சமும் தோன்றியதோ அப்போதே அழிவின் பாதையை அது திறந்து விட்டது. அந்த அழிவின் பாதையில் மிக நீண்ட தூரம் பயணித்தது. தக்வாவுடையவர்களுக்கு மாத்திரம்தான் இந்த அல்குர்ஆன் வழிகாட்டும் என அல்லாஹ்(சுபு) கூறியதை மெய்ப்படுத்தும் விதமாக தக்வா இல்லாத நிலையில் அல்குர்ஆன் அணுகப்பட்டபோது உம்மத்தின் வழிகாட்டலுக்கும், வளர்ச்சிக்கும் அது வடிகாலாக அமையவில்லை. உம்மத் தக்வாவின் வீழ்ச்சியால் அல்குர்ஆன் வசனங்களுக்கு தனது ஆசாபாசங்களுக்கு ஏற்ப விளக்கம் அளிக்க முற்பட்டது. கிரேக்க தர்;க்கத்தின் அடிப்படையிலும், இந்திய தத்துவங்களின் அடிப்படையிலும் அதனை வியாக்கிஞானம் செய்தது. பிற்காலத்தில் அதிகளவில் மேற்குலக சிந்தனைகள் அவற்றின் இடத்தை பிடித்தன. சத்தியமும், அசத்தியமும் கலந்த, இஸ்லாமும், குப்ரும் குலைந்த ஒரு கலவையை நவீன கால இஜ்திஹாத், நடைமுறைக்கேற்ற இஸ்லாம் என்று அது பெருமிதத்துடன் அறிமுகம் செய்தது. இவ்வாறு உம்மத் பார்த்துக்கொண்டு இருக்கும் நிலையிலேயே அதனது வாழ்விலிருந்து அல்குர்ஆன்; பறிக்கப்பட்டது. அது வெறுமனவே மனனமிடுதலுக்குள்ளும், அழகான பாராயணத்துக்குள்ளும், அலங்காரமான பிரதிகளுக்குள்ளும் முடங்கிப்போனது. எதனால் இந்த உம்மத்திற்கு வெற்றியும், கண்ணியமும் கிட்டியதோ அந்த ஆற்றல் சக்தி அதனிடமிருந்து பறிபோனது.

அதனால் அன்று முஃமீன்களைக் கண்டால் குலைநடுங்கிய குஃப்பார்கள்; இன்று முஃமீன்களின் முதுகுகளில் ஏறி சவாரி செய்யும் நிலை தோன்றியிருக்கிறது. உம்மத்தின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அதனது வளங்கள் கபளீகரம் செய்யப்படுகின்றன. சுயமரியாதையும், கண்ணியம் இழந்த நிலையை அது அடைந்து நிற்கிறது. அதனது பிரச்சனைகளுக்கு அந்நியர்கள் பஞ்சாயத்து சொல்கிறார்கள். அல்குர்ஆன் இருக்க வேண்டிய ஸ்தானத்தில் குஃப்ரிய சிந்தனைகள் அமர்ந்துள்ளன. மொத்தத்தில் இஸ்லாமிய வரலாற்றில் என்றும் வீழ்ந்திடாத அதலபாதாளத்தில் இன்றைய உம்மத் வீழ்ந்து கிடக்கிறது.

எனவே உம்மத் இந்த மாபெரும் வீழ்ச்சியிலிருந்து மீண்டு, மீள வரலாறு படைக்க வேண்டுமென்றால் இந்த  ரமழானில் அல்லாஹ்(சுபு)வை வணங்குவதிலும், அவனுக்கு கட்டுப்படுவதிலும் தனது உட்சாகத்தையும், விருப்பத்தையும் வெளிக்காட்டுகின்ற உம்மத் ரமழானுக்கு இந்தச் சிறப்பு எங்கிருந்து வந்தது என்பது பற்றி சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ரமழான் அல்குர்ஆன் அருளப்பட்டதால்தான் சிறப்பிக்கப்பட்டதென்றால் அந்த அல்குர்ஆன் இந்த உலகில் எந்த நோக்கத்தை நிறைவேற்ற வந்தது என்பது பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும். அல்லாஹ்(சுபு)வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதகுலத்திற்கான வழிகாட்டல் அல்குர்ஆனிலிருந்து மாத்திரம்தான் ஊற்றெடுக்க முடியும் என்பதை அது முழுமையாக நம்ப வேண்டும். தனது வாழ்விற்கான ஒரேயொரு அளவுகோல் அல்குர்ஆன் மாத்திரம்தான் என்பதில் அது உறுதியாக நிற்க வேண்டும். அத்தகைய ஒரு சூழல் உலகில் தோற்றம் பெறவேண்டுமென்றால் அது அல்குர்ஆனின் அடிப்படையில் அமைந்த இஸ்லாமிய ஆட்சியால் மாத்திரம்தான் சாத்தியமாகும் என்பதையும் அது உறுதியாக நம்ப வேண்டும். எனவே இந்த ரமழான் அத்தகையதோர்; தூய இஸ்லாமிய அரசியற் தலைமையை நிலைநாட்ட உழைக்கின்ற உம்மத்தை தயார்படுத்துமானால் அது ரமழானின் நோக்கத்தையும், அதிலே அருளப்பட்ட அல்குர்ஆனின் நோக்கத்தையும் ஒருசேர நிறைவேற்றிய பெருமையைப் பெறும். இன்ஷா அல்லாஹ்!
 

Oct 27, 2015

நவயுக பிர்அவ்ன்களின் பித்தலாட்டம்....!!!

 
இந்த முஹர்ரம் புத்தாண்டில் எம்மில் பலர் ஆசுரா நோன்பினை நோற்கும் பேற்றினைப்பெற்றிருப்போம். அத்தினம் பிர்அவ்வின் கொடுங்கோண்மையின் கீழ் அடிமை ஊழியம் செய்து வாழ்ந்த பனீ இஸ்ரேயில் சமூகம் தமது அடிமை விலங்கொடித்து முன்னேறிய தினம்.
 
அத்தினம் அண்ட சராசரங்களை கட்டிக்காக்கும் அல்லாஹ்(சுபு) வழங்கிய வாக்குறுதியை உண்மையாக எதிர்பார்த்து, அதன் மீது தூய்மையாக நம்பிக்கை கொள்வதின் விளைவை நிலைநிறுத்திய தினம்.
 
அத்தினம் இறைவனை நிராகரிக்கும் வலிமைமிக்க, ஈவிரக்கமற்ற, சர்வாதிகாரி ஒருவன், வரலாற்றில் மிகவும் அடிமட்டத்திலிருந்த, ஈமான் கொண்ட அடிமைச் சமூகத்தின் காலில் சரிந்து விழுந்த உயரிய சம்பவத்தை நினைவூட்டும் தினம்.
 
அல்லாஹ்(சுபு) அல்குர்ஆனில் சுட்டிக்காட்டும் இந்த மகத்தான உதாரணத்தில் தமது வரலாற்றில் அதலபாதாளத்தை அடைந்திருக்கும் இன்றைய முஸ்லிம் உம்மத்திற்கும் மிகத் தெளிவான வழிகாட்டல்கள் இருக்கின்றன.
 
பிர்அவ்ன் பனீ இஸ்ரவேலர்களின் ஆண்குழந்தைகளை கொலை செய்யுங்கள் என அறிவித்த வேளையில் அல்லாஹ்(சுபு) அந்த சமூகத்தில் பிறந்த குழந்தையான முஸா(அலை) அவர்களை பிர்அவ்னின் மாளிகையில், அவன் மனைவியின் மடியிலேயே எவ்வாறு வளர்த்தெடுத்தான் என்பது எமக்குத்தெரியும். பின் தவறுதலாகச் செய்த கொலையொன்றிற்கு தண்டிக்கப்படுவேன் எனப்பயந்து எகிப்பதிலிருந்து தப்பித்தோடிய முஸா(அலை), மத்யனில் தஞ்சம் புகுந்ததையும் நாம் அறிவோம். பின் அவரை தனது இறைத்தூதராய்த் தேர்ந்தெடுத்து அவர் யாரின் தண்டனையை பயந்தாரோ அவனின் அரசவைக்கே அனுப்பி வைத்து, பிர்அவ்னை வரம்பு மீறாதே என எச்சரிக்கச் சொன்னதையும், பனீ இஸ்ரவேலர்களை விடுதலை செய் என விண்ணப்பிக்கச் சொன்னதையும் நாம் அறிவோம்.

நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான். (28:4)
 
பிர்அவ்ன் தன்னை கடவுள் என அறிவித்து ஆகப்பெரிய அத்துமீறலை செய்த வேளையிலேயே அவனை நோக்கி மூஸா(அலை) இவ்வாறு அனுப்பப்படுகிறார். அதற்கு முன்னரே தனது இராணுவமயப்பட்ட அரசின் அசுர பலத்தால் மூஸா(அலை) த்தின் சமூகத்தை முழுமையாக அடிமைப்படுத்தி, அவர்களை கொலை செய்து, சித்திரவதை செய்து, கற்பழித்து, அவர்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களின் முதுகுகளின் மீது ஏறி நின்று தனது சுகபோக அரியாசனத்தை அவன் வடிவமைத்திருந்தான். இத்தகைய ஒரு அரசியற் பின்னணியிலேயே ஹாரூன்(அலை) அவர்களையும் அழைத்துக்கொண்டு, மூஸா(அலை) சத்தியத் தூதுடன் அவனின் அரண்மனைக்குள் நுழைகிறார்கள்.
 
“நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான். நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம் (20:43-44)
 
அவர்களின் அழைப்போ எக்குழப்பமுமற்றது. மிகச் சாதாரணமானது. அவர்களின் அழைப்பு வாழ்வின் யதார்த்தைப்பற்றிப்பேசியது. அவர்களின் அழைப்பு தூய்மையின்பாலும், நன்மையின்பாலும் வரச்சொன்னது.  அவ்வழைப்பு மன்னிப்பின்பாலும், விமோசனத்தின்பாலும் பிர்அவ்னுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. அவ்வழைப்பு முழுச் சமூகத்தையும் சத்தியத்திலும், நீதியிலும், சமாதானத்திலும் கட்டியெழுப்பும்படி சிபாரிசு செய்தது. எனினும் வழமையான கோடுங்கோலர்களைப்போலவே பிர்அவ்னும் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கும், தனது அத்துமீறலிருந்து திரும்புவதற்கும் சம்மதிக்க மாட்டேன் என்றான். மூஸா(அலை)வின், ஹாரூன்(அலை)இன் தூது சாதாரணமாகத் தோன்றினாலும், தனது ஆளுகையையும், தமது அரசின் பலக்கட்டமைப்பையும், தான் ஆளும் மக்களையும் தன்கறிந்திருந்த பிர்அவ்ன் இந்த அழைப்பு தனது ஆட்சியின் நியாயாதிக்கத்தை இல்லாது செய்து மக்களை புரட்சி செய்யத் தூண்டிவிடும் என்பதை ஐயமற உணர்ந்திருந்தான்.
 
மக்களின் ஆதரவும், அடிபடிதலுக்கான தயார்நிலையும் இல்லாதுபோனால் தனது சம்ராஜ்ஜியம் தடம்புரண்டுவிடும் என உணர்ந்த பிர்அவ்ன் மூஸா(அலை) இன் தூதுக்கு மக்கள் செவிசாய்க்காத ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை புரிந்து கொண்டான். அவரையும் அவரின் இறைச்செய்தியையும் எல்லி நகையாட நினைத்தான். அவர் முன்வைத்த அறிவார்ந்த சவாலுக்கு பதிலளிக்காது அவரை ஒரு குற்றவாளியாகவும், துரோகியாகவும் மக்கள் மனதில் இடம்பெறச் செய்ய நினைத்தான். இதனூடாக தனது அத்துமீறலை மறைத்துவிடலாம் எனக் கற்பனை செய்தான்.
 
(ஃபிர்அவ்ன்) கூறினான்: நீர் குழந்தையாக இருந்தபோது நாம் உம்மை எங்களிடம் வைத்து வளர்க்கவில்லையா? இன்னும், உம் வயதில் பல ஆண்டுகள் எங்களிடத்தில் நீர் தங்கியிருக்கவில்லையா? (எனக் கூறினான்.) ஆகவே, நீர் செய்த (கூடாத கொலைச்) செயலையும் செய்துவிட்டீர்; மேலும், நீர் நன்றி மறந்தவராகவும் ஆகிவிட்டீர்” (என்றும் கூறினான்). (26:18-19)
 
இவ்வாறு மாபாதகங்களின் முழுவடிவமாக இருந்த தனது குற்றங்களை மறைப்பதற்கு மூஸா(அலை) தவறுதலாக செய்த கொலையை திரும்பவும் விசாரணைக்கு எடுத்தான். மேலும் அவரை தனது குடும்பம் பாலகப்பருவத்திலிருந்து வளர்த்தெடுத்ததிற்கு செஞ்சோற்றுக் கடன் தீர்க்காது தனது ஆட்சிக்கெதிராக மக்களை தூண்டிவிடும் ஓரு நன்றிகெட்ட மனிதராக மக்களிடம் அறிமுகப்படுத்தி, மூஸா(அலை) நியாயமாக வாதத்தை மழுங்கடித்து அதனை வேறொரு திசைக்கு திருப்புவதற்கு முயன்றான் என அல்குர்ஆன் அவனது சூழ்ச்சியை குறிப்பிடுகின்றது. இந்தக்கட்டத்தில் மூஸா(அலை) அவனை வாயடைக்கச்செய்யும் விதமாக எவ்வாறு ஒரு அடிப்படைத்தர்க்கத்தை முன்வைத்தார்கள் என்பதை அல்குர்ஆன் அழகாக ஞாபகமூட்டுகிறது.

“பனூ இஸ்ராயீல்களை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இது நீ எனக்குச் சொல்லிக் காண்பிக்கக் கூடிய பாக்கியமாகுமா?” (26:22)
 
மூஸா(அலை) வாதத்தை திசை திருப்பும் பிர்அவ்னின் கைங்கரியத்திற்கு விலைபோகவில்லை. மாறாக அவன் ஏற்படுத்த விரும்பும் வாதத்திற்கான தளத்திற்கு சென்று அவர் வாதிக்க விரும்பவுமில்லை. மாறாக பிர்அவ்ன் முன்வைத்த வாதத்தையே அவனுக்கு எதிராக திருப்பும் முகமாக அவன் பனீ இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கொடுமையின் பால் அனைவரினதும் கவனத்தை திருப்பினார்கள். அதாவது நீ என்னை உன் மாளிகையில் வைத்து வளர்த்தெடுத்தாக கூறுகிறாயே, நீ பனீ இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தாது இருந்திருந்தால், உனது ஆட்சி மோகத்திற்காக அவர்களின் ஆண்குழந்தைகளை கொல்லதிருந்திருந்தால் நான் உனது மாளிகையை மிதித்திருக்க வேண்டிய நிலையே ஏற்பட்டிருக்காது. நான் எனது அன்னையின் மடியில் சந்தோசமாக வளர்ந்திருப்பேனே என்பதை நினைவூட்டி குற்றங்களிலெல்லாம் ஆகப்பெரிய குற்றத்தை நீதான் செய்திருக்கிறாய் என துணிச்சலாக தனது எதிர்வாதத்தை முன்வைத்தார்கள்.
 
பிர்அவ்னின் இந்த பித்தலாட்டத்திற்கும் இன்றைய நவயுக பிர்அவ்ன்களான சடவாத முதலாளித்துவ அரசுகளின் தலைவர்களின் கையாலாகாத்தனத்திற்கும் எந்தவொரு வேறுபாடுமில்லை. இஸ்லாம் முன்வைக்கும் நேர்மையான கேள்விகளுக்கு பதிலளிக்காது மக்களின் திசையை வேறுபக்கம் திருப்ப முயல்வதும் இஸ்லாத்தின் கீர்த்தியை கேவலப்படுத்த நினைப்பதுமே அவர்களிடம் காணப்படும் பெரும் ஆயுதமாக அவர்கள் கருதுகின்றார்கள். எவ்வாறு பிர்அவ்ன் தன்னை அனைவரினதும் இரட்சகனாக நிறுவ முற்பட்டானோ அதேபோல இந்த உலகில் எது சரி, எது பிழை என்ற தீர்மானத்தை நிர்ணயிக்க தமக்குத்தான் முழு அதிகாரம் இருப்தாக இந்த சடவாத தலைவர்களும் வாதிடுகின்றனர். பிரபஞ்சம், மனிதன் அவனது வாழ்வு தொடர்பான் உண்மையான யதார்த்தங்களை மூடி மறைத்து இறைவனின் இறைமையை மறுதளித்து, அவனுக்கு இருக்கும் சட்டமியற்றும் அதிகாரத்தை மறுதளித்து தம்மால் இறைச்சட்டங்களின் தலையீடின்றி இந்த உலகை நிர்வகிக்க முடியும் என்ற அசட்டுத்துணிவுடன் பிர்அவ்னின் முன்மாதிரியை இவர்களும் பின்பற்றுகின்றனர்.
 
எவ்வாறு பிர்அவ்ன் பனீ இஸ்ரவேலர்களை தனது அடிமைகளாக நடாத்தினானோ, அதேபோலவே தமது ஏகாதிபத்திய சுரண்டல் நிகழ்ச்சித்திட்டத்துடன் முஸ்லிம் உலகிலும் புகுந்திருக்கும் அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ காலனித்துவ நாடுகள் அதனை காலனிகளாக அடிமைப்படுத்தியுள்ளன. தமது நேரடி, மறைமுக ஆக்கிமிப்பை நிறுவுவதற்கு நேரடியாகவும், தமது முஸ்லிம் பெயர்தாங்கி கங்காணிகளினது கரங்களினாலும் மில்லியன் கணக்கான மக்களை கொன்றொழித்துள்ளனர். வளைகுடா யுத்தத்ததை தொடர்ந்து ஈராக்கிற்கு எதிராக விதிக்கப்பட்ட மருத்துவ, பொருளாதார தடைகளினால் மாத்திரம் அரை மில்லியன் குழந்தைகள் இறந்தன. இது தொடர்பாக அந்நாள் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மெடலின் அல்பிரைட் என்ற பெண்பேயிடம் கேட்கப்பட்டபோது அது தமது இலக்கிற்காக செலுத்தக்கூடிய ஒரு விலைதான் என ஈவிரக்கமற்று பதில் சொன்னதை நாம் மறந்திருக்க மாட்டோம். பின்பு 2003இல் சதாம் ஹ}சைனை வீழ்த்துவதற்காக இடம்பெற்ற  அமெரிக்க-பிரித்தானிய கூட்டுப்படையெடுப்பு மாத்திரம் குறைந்தது ஒரு மில்லியன் உயிர்களை பலியெடுத்தது என 'The Lancet' என்ற பிரித்தானிய மருத்துவச் சஞ்சிகை தெரிவித்தது.
 
எனினும் ஒரு முஸ்லிம் இந்த உலகில் ஒரு குற்றத்தை இழைத்து விட்டால் மாத்திரம் அதனை பெரும் பூதமாக பூதாகரப்படுத்தி அதற்கெதிராக முழு உலகையும் அணிதிரட்டும் முயற்சியை இவர்கள் செய்வதற்கு பின்நிற்பதில்லை. எவ்வாறு பிர்அவ்ன் மூஸா(அலை) அவர்கள் தவறுதலாகச்  செய்த கொலைக்குற்றத்தை பூதாகரப்படுத்தி பேசி தனது கொடுங்கோலை நியாயப்படுத்த நினைத்தானோ அது போலவே இவர்களும் ஒரு முஸ்லிம் எதிர்விளைவாகச் செய்யும் செயலை மாத்திரம் அதன் காரணிகளைக்கூட ஆராயாது, அதனை தனிமைப்படுத்தி, பெரிதாக்கிக்காட்டி அதற்குள் தாம் செய்யும் அட்டூழியங்களை அனைத்தையும் மறைக்க நினைக்கின்றனர்.
 
மறுபக்கத்தில் பிர்அவ்ன் எவ்வாறு தான் மூஸா(அலை)க்கு செய்த உபகாரத்தை சொல்லிக்காட்டினானோ அதற்கு ஒப்பாக, இந்த முதலாளித்து அரசுகளும், முஸ்லிம்கள் அவர்களின் தேசங்களில் அடைக்கலம் புகுந்து வாழும்போது செய்த உபகாரத்தையும், முஸ்லிம் உலகிற்கு தாம் வழங்கும் உதவிகளையும் இலஞ்சமாகப்பெற்றுக்கொண்டு தம்மை அனுசரித்துப்போகுமாறு வெட்கம் கெட்டுக் கோருகின்றனர்.
 
எவ்வாறு பனீ இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தாது, அவர்களின் குழந்தைகளை கொல்லும் கொள்கைளை பிர்அவ்ன் பின்பற்றாது இருந்திருந்தால் மூஸா(அலை) பிர்அவ்னின் மாளிகைக்குள் வளரவேண்டி ஏற்பட்டிருக்காதோ அதேபோல, உண்மையில் இந்த காலனித்துவ மேற்குலகின் தலையீடு முஸ்லிம் உலகில் இல்லாதிருந்திருந்தால் மேற்குலகின் (IMF, World Bank, etc.) பிச்சைக்காசுக்காக காத்திர வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டிருக்காது. பொருளாதார மீட்சிக்காக மேற்குலகில் அடைக்கலம் புக வேண்டிய கேவலமும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்காது. எமது தேசங்களை ஆக்கிரமித்து, காலனித்துவப்படுத்தி, மக்களை அடிமைப்படுத்தி, வளங்களை கொள்ளையடித்து, எமது அரசான கிலாஃபத்தை நிர்மூலமாக்கி, எம்மீது தமது முகவர்களை ஆட்சியாளர்களாக நியமிக்காது இருந்ததிருந்தால் மேற்குலகின் பக்கம் கூட நாம் தலை வைத்து படுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
 
பின்பு பிர்அவ்ன் சதித்திட்டம் தீட்டினான்...அல்லாஹ்(சுபு)வும் தனது திட்டத்தை பூர்த்தியாக்கினான்...
 
ஆயினும் (மிஸ்ரு) பூமியில் பலஹீனப் படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்கவும் நாடினோம். இன்னும், அப்பூமியில் அவர்களை நிலைப்படுத்தி ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் இவர்களைப்பற்றி எ(வ் விஷயத்)தில் பயந்து கொண்டிருந்தார்களோ அதைக் காண்பிக்கவும் (நாடினோம்).(28:5-6)
 
அல்குர்ஆனின் நிழலில் இன்றைய முஸ்லிம் உம்மத்திற்கெதிரான முதலாளித்துவ உலகின் சதித்திட்டங்களை ஆய்வு செய்யும் போது, மூஸா(அலை) அவர்களின் வரலாறு எமது போராட்டத்தில் நாம் எவ்வாறு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை எச்சரிக்கிறது. உண்மையான, நேர்மையான போராட்டத்தை எதிர்கொள்ள சக்தியற்ற கொடுங்கோலர்கள் எப்போதும் தீட்டும் சதித்திட்டங்களின் பாரதூரங்கள் பற்றியும், மக்களின் கவனத்தை சத்தியத்திலிருந்து திசை திருப்பும் முயற்சிகளையும் நாம் நன்குணர வேண்டும் என்ற பாடத்தையும் இந்த வரலாறு எமக்கு கற்றுத்தருகிறது.
 
மிக நுணுக்கமான திட்டங்களாக, எதிர்கொள்ளவே முடியாத அபாரமான முயற்சிகளாக இஸ்லாத்தின் எதிரிகளின் திட்டங்கள் விதம் விதமாகத் தென்பட்டாலும், அவை  அனைத்தும் பல்லாயிரம் வருடங்களாக திரும்பத்திரும்ப முயற்சிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்ட முயற்சிகள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. இறுதியில் ஈமானில் புடம்போடப்பட்ட இறைவிசுவாசிகளுக்கு முன்னால் அவை அனைத்தும் தடம்புரண்டு  அல்லாஹ்(சுபு) திட்டமே வெல்லும் என்ற உண்;மையையே மூஸா(அலை) அவர்களின் வரலாறும், ஆசுரா தினமும் எமக்கு ஒரு சிறந்த போராட்டப்பாடமாக முன்வைக்கிறது.
 
அல்லாஹ(சுபு) அல்குர்ஆனின் வெளிச்சத்தில் எமது போராட்டப்பாதைகளை நிர்ணயிக்க எமக்கு  என்றென்றும் வழிகாட்டுவானாக!

Oct 26, 2015

ஹிஜ்ரி 1437 ! அல்ஹம்துலில்லாஹ் சொல்வதா !? இன்னாலில்லாஹ் சொல்வதா !?

 
ஹிஜ்ரி 1437 ! அல்ஹம்துலில்லாஹ் சொல்வதா !? இன்னாலில்லாஹ் சொல்வதா !?

ஒரு சுயநலமிக்க கொடூரமான குப்ரிய சித்தாந்த அதிகாரத்தின் கீழ் அந்த அசத்திய (அ)நாகரீகத்தின் அடிப்படையில் மாதங்களையும் வருடங்களையும் கணிப்பிட்டு ஏதோ பெயருக்காக ஹிஜ்ராவை கல்குலேட் பண்ணுவது முஸ்லீம்களுக்கு இன்று ஒரு சம்பிரதாயம் !

அந்தவகையில் இன்னொரு முஹர்ரமும் பிறந்துள்ளது .

அல்ஹம்துலில்லாஹ் சொல்வதா 1? இன்னாலில்லாஹ் சொல்வதா !? என்பதே இப்போதுள்ள கேள்வி !

ஹிஜ்ரி 1437 அவலத்தின் அரவணைப்புடன் முஸ்லீம் உம்மத்துக்கு வந்தனம் கூறுகிறது ! சந்தி சிரிக்கும் சகோதர சண்டை ! எதிரிக்கு எடுபிடி ஆகிய கேவல அரசியல் ! உசூலிய விவாதத்துக்குள் உம்மத்தை அமரவைத்தல்!அசுர ஆதிக்கத்தில் அடிவாங்கும் வழமை என விழி பிதிங்கி விடிவை தேடும் நிலையில் முஸ்லீம் உம்மத்துக்கு ஹிஜ்ரா என்ற வரலாற்று விடிவு இன்று புலப்படாத ஒரு ஆன்மீக இதிகாசமே!

அதிலும் தேசம் ,தேசியம் ,சர்வதேசம் என இருக்கின்ற பிறையையும் எட்டாக வேறு பிரித்து விட்டார்கள் ! அதோடு சில மதப் பூசாரிகளிடம் இருக்கும் பஞ்சாங்கம் போல ஆளுக்கொரு கணிப்பு சொல்லும் கண்றாவி ஆகிவிட்டது இஸ்லாத்தின் கலண்டர் என்பதுதான் இன்று கவலையாக இருக்கிறது ! பக்காவான பன்றியின் தொழுவத்தில் பசுக்கன்று தான் தானாக வாழ நினைத்தால் சாத்தியமா!?

மலத்தை மரமாக்கி கழிவை இலை ஆக்கி உண்ணும் பக்குவத்தில் மாறுவது தவிர மாற்று வழி இருக்குமா !? நடந்துள்ளது அதுதான் .இஸ்லாம் என்பது ஒரு தனித்துவமான சித்தாந்தம் ,முதலாளித்துவம் என்பது இன்னொரு சித்தாந்தம் இங்கு உடன்பாடு என்பதற்கு வழியே இல்லை . ஒரு சித்தாந்தம் அதன் விழுமியங்களையும் அதன் நாகரீகத்தையும் சுமந்த வாழ்வியலை கொண்டிருக்கும்.

அந்தவகையில் கிரிகேரியன் (சூரிய ) கலண்டர் கணிப்பு என்பது குப்ரின் நாகரீகம் அதில் இஸ்லாத்துக்கோ ,முஸ்லீமுக்கோ பங்கில்லை என்பதை முஸ்லீம் உம்மத் உணர வேண்டும் . இன்னும் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட அது ஒரு பலம்மிக்க அரசியல் அதிகாரமாக உருவாக வேண்டும் அதன் மூலம் மாத்திரமே முஸ்லீம்களின் இம்மை ,மறுமை வாழ்வு வெற்றி அடையும் என்பதையும் பிறையை அடிப்படையாக கொண்ட சந்திரக்கலண்டரை அந்த ஒரே தலைமையிலான கிலாபா அரசு மாத்திரமே மிக சிறப்பாக அமுல் படுத்தும் என்பதும் தீர்க்க தரிசனமான வரலாற்று உண்மையாகும் .

நன்றி
ஹந்தக் களம்

இந்த ஹிஜ்ராவில் நம்முடைய முயற்சி?

 
ஹிஜ்ரி 582ம்  சலாஹூதீன் அய்யூபி(ரஹ்) அவர்கள் கிலாஃபத்தின்முஜாஹிதீன்களுடன் இணைந்து சிலுவைப்படையினரை ஒரே நாளில்சிரியாவினின்றும் விரட்டியடித்து ஆக்கிரமிப்பிலிருந்த அனைத்துப் பகுதிகளையும் மீட்டார்.
 
 
ஹிஜிரி ஏழாம் நூற்றாண்டில் மங்கோலியர்கள் ஆசியாவில்தமது ஆதிக்கத்தை பரவச்செயதனர். செங்கிஸ்கான் தன்னை மனிதகுலத்தின் பாவத்திற்காக தண்டிக்கும் கடவுளின் சாட்டை எனக் கருதினான்.ஹிஜிரி 617-ல் சமர்க்கண்ட்,ரேஹமதான் போன்ற பகுதிகள் அவனின் வாள் வீச்சிற்கு ஆட்பட்டு 7,00,000 ற்கும்மேற்பட்டோர்கொல்லப்பட்டனர்.ஹிஜிரி 656 ல் செங்கிஸ்கானின் பேரனான ஹூலாகு மூலம் அப்பேரழிவு தொடர்ந்தது இஸ்லாமிய அரசின் தலைநகரான பாக்தாதும் இதிலிருந்து தப்பவில்லை. இப்படையெடுப்பில் 1,800,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சொல்லொண்ணாதுயரத்திற்கு ஆட்படுத்தப்பட்டனர். மஸ்ஜித்களில்மதுபானம் தெளிக்கப்பட்டது. தொழுகைக்கு அதான்(பாங்கு) சொல்வதும் தடை செய்யப்பட்டது.
 
இத்தகைய கொடுமைகட்கு மத்தியில் இஸ்லாமிய பகுதிகள் அனைத்துமே அதே நிலைக்கு ஆளாகிவிடலாம் என்ற நிலையில் ஸைபுதீன் குத்ஸ்(ரஹ்) அவர்கள் முஸ்லிம் படையை ஒருங்கிணைத்து ஐன் ஜாலுத் எனுமிடத்தில்ஹிஜ்ரி 658 ஆம்ஆண்டுரமலான் மாதத்தில்மங்கோலியப் படையை அடியோடு வீழ்த்தினார். அல்லாஹ்سبحانه وتعالىவின்உதவியால் கிட்டிய இவ்வெற்றியினால் முழு உலகும் நிம்மதிப்பெருமூச்சுவிட்டது.
 
இத்தகைய மாபெரும் நிகழ்வுகள்  முஸ்லிம்களுக்கு  மாபெரும் உத்வேகத்தை அளிக்கவேண்டும். நம்முடைய முன்னோர்களான சத்திய சீலர்கள் பெற்ற எழுச்சியையும் வெற்றியையும் நாம் நினைவில் நிறுத்துவோம். ரமலான் மாதத்தின்புத்துணர்ச்சிகாரணமாக நமது முன்னோர்கள் தங்கள் முன்சவாலாகத் தோன்றிய அனைத்துசெயல்களையும் சிறப்பாகசெய்து முடித்தனர். பகல் நேரத்தை போர்க்களத்திலும், இரவு நேரத்தை இபாதத்திலும்கழித்தனர். வெறுமனே துஆவுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் செயல்களிலும் சாதித்தனர்.
 
இந்த ஹிஜ்ராவில் நம்முடைய முயற்சி ?

May 23, 2014

இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது


عادَت أَغاني العُرسِ رَجعَ نُواحِ


திருமண கீதங்கள் ஒப்பாரிக்காக திரும்பின

وَنُعيتِ بَينَ مَعالِمِ الأَفراحِ

உன்னுடைய மரணம் குதூகல அடையாளத்துடன் அறிவிக்கப்பட்டது

كُفِّنتِ في لَيلِ الزَفافِ بِثَوبِه

திருமண இரவன்று அந்த ஆடையால் உனக்கு கஃபனிடப்பட்டது

وَدُفِنتِ عِندَ تَبَلُّجِ الإِصباحِ

அதிகாலைப் பொழுதில் நீ அடக்கம் செய்யப்பட்டாய்

شُيِّعتِ مِن هَلَعٍ بِعَبرَةِ ضاحِكٍ

ஆனந்தக்கண்ணீருடன் திகிலூட்டம் புடைசூழ உன் அடக்கம் நடந்தேறியது

في كُلِّ ناحِيَةٍ وَسَكرَةِ صاح

ஒவ்வொரு நிலப்பகுதியும் மரண வேதனையால் அலறியது

ضَجَّت عَلَيكِ مَآذِنٌ وَمَنابِرٌ

மிம்பர்களும் மினாராக்களும் உனக்காக ஓலமிட்டன

وَبَكَت عَلَيكَ مَمالِكٌ وَنَواحِ

பேரரசுகளும் மாகாணங்களும் உனக்காக அழுதன

الهِندُ والِهَةٌ وَمِصرُ حَزينَةٌ

இந்தியா துக்கத்தால் தடுமாறியது; எகிப்து கவலையுற்றது

تَبكي عَلَيكِ بِمَدمَعٍ سَحّاحِ

இவை உனக்காக கண்ணீர் பெருக்கெடுக்க அழுதன

وَالشامُ تَسأَلُ وَالعِراقُ وَفارِسٌ

ஷாம்,ஈராக் மற்றும் பாரசீகம் வினவின

أَمَحا مِنَ الأَرضِ الخِلافَةَ ماحِ

உங்களுடைய நிலத்திலிருந்து கிலாஃபத்தை யாராவது துடைத்தெறிந்து விட்டார்களா?

وَأَتَت لَكَ الجُمَعُ الجَلائِلُ مَأتَماً

மேன்மை பொருந்திய நன்மக்கள் உன்னுடைய அடக்கத்தில் பங்கெடுத்தனர்

فَقَعَدنَ فيهِ مَقاعِدَ الأَنواحِ

அவர்கள் ஒப்பாரி வைக்குமிடத்தில் அமர்ந்தார்கள்

يا لَلرِجالِ لَحُرَّةٍ مَوؤودَةٍ

ஓ ! மனிதா ! உயிருடன் புதைக்கப்பட்ட கண்ணியமிக்கவளை கவனி !

قُتِلَت بِغَيرِ جَريرَةٍ وَجُناحِ

இவள் எந்த குற்றமோ பாவமோ செய்யாமல் கொல்லப்பட்டிருக்கிறாள்

(“امير الشعراء – கவிஞர்களின் அமீர்” என்று போற்றப்படும் எகிப்திய கவி அஹ்மது ஷவ்கி அவர்கள் முஸ்லிம் உம்மத்தின் ஒரே தலைமையான கிலாஃபா வீழ்த்தப்பட்டபோது மனம் வருந்தி பாடிய அரபுக் கவிதைகளிருந்து சில வரிகள்)

உலக முஸ்லிம்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கிலாஃபா கி.பி.1924, மார்ச் 3(ஹிஜ்ரி 1342 ரஜப் 28) ஆம் ஆண்டு முஸ்தஃபா கமால் பாஷா என்ற துரோகியால் இஸ்தான்புல் நகரில் வீழ்த்தப்பட்டது. அன்றைய தினம் உஸ்மானிய கிலாஃபத்தின் கலீஃபாவாக விளங்கிய அப்துல் மஜீத் இஸ்தான்புல் நகரிலிருந்து சூரிய உதயத்திற்கு முன்பாக நாடு கடத்தப்பட்டார். முஸ்லிம்களின் தலைமை அழிக்கப்பட்டதன் காரணமாக முஸ்லிம் உம்மா அநாதையாக்கப்பட்டதோடு அவர்களின் விவகாரங்களை மேற்குலகம் தீர்மானிக்க வேண்டும் என்ற இழிநிலையும் உருவானது. முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அவமானத்தால் மேற்குலகு அடைந்துகொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு 1924 ஜூன் 24 ல் லாஸானில் நடைப்பெற்ற உடன்படிக்கைக்கு பிறகு தன்னுடைய வெறுப்புணர்வை கீழ்க்கண்டவாறு உமிழ்ந்தார்.

“The situation now is that Turkey is dead and will never rise again because we have destroyed its moral strength, the Khilafah and Islam.”

“துருக்கி இப்பொழுது வீழ்ந்துவிட்டது.. அது ஒருபோதும் மீண்டு எழுந்து வராது. ஏனெனில் அதன் உயிரோட்ட சக்தியான கிலாஃபத்தையும் இஸ்லாத்தையும் நாம் வீழ்த்திவிட்டோம்.”

நபி صلى الله عليه وسلمஅவர்களால் இஸ்லாமிய அரசு மதீனாவில் நிறவப்பட்டதிலிருந்து நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் காலம் முதல் உஸ்மானிய பேரரசு ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் 3 ) முஸ்தஃபா கமால் அதா துர்க்கினால் வீழ்த்தப்படும் காலம் வரை, கிலாஃபா இந்த உலகில் நிலை கொண்டிருந்தது.

கிலாஃபத்தையும் இஸ்லாத்தையும் தகர்க்கும் முதல் முயற்சியாக பதினொன்றாம் நூற்றாண்டில் முதலாவது சிலுவைப்போரை போப் இரண்டாம் உர்பன் துவக்கி வைத்தார்..எனினும் இவர்களின் இருநூறு ஆண்டுகால சிலுவை ஆக்கிரமிப்பை சலாஹுதீன் அய்யூபி(ரஹ்) அவர்கள் தகர்த்தெறிந்தார்கள்.

கவுன்ட் ஹென்றி டெகாஸ்ட்ரி என்ற பிரஞ்சு எழுத்தாளர் 1896 ஆம் ஆண்டு எழுதிய “இஸ்லாம்” என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளதாவது:-

“I cannot imagine what the Muslims would say if they heard the tales of the mediaeval ages and understood what the Christian orators used to say in their hymns; all our hymns even those which emerged before the 12th century emanated from one concept which was the cause of the crusades, these hymns were filled with hatred towards the Muslims due to the total ignorance of their religion. As a result of those hymns and songs, hatred against that religion became fixed in people’s minds, and the erroneous ideas deeply rooted, some of which are still carried nowadays. Everyone used to regard the Muslims as polytheists, disbelievers, idol worshippers and apostates.”

“மத்தியகால கற்பனை கதைகளைப்பற்றி கேள்விப்பட்டாலோ,அதைப்பற்றி கிறிஸ்தவ கதாசிரியர்களின் கடவுள் துதிபாடுதலில் கூறப்பட்டவற்றை கேள்விப் பட்டாலோ முஸ்லிம்கள் என்ன கூறுவார்கள் என்று என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. நமது அனைத்து துதிபாடுகளும் 12-ம் நூற்றாண்டிற்கு முன்னர் கிளம்பிய ஒரு கோட்பாட்டை அடிப்படையாக கொண்டவைகள். அதுவே சிலுவைப் போர் ஏற்பட காரணமாக அமைந்தது. இப்புகழ் பாட்டுக்கள் அனைத்தும் முஸ்லிம்கள் மீது வெறுப்பை உள்ளடக்கியதாக இருந்தது. இது முஸ்லிம்களின் மதத்தை பற்றிய அவர்களின் அறியாமையால் ஏற்பட்டது. இவ்வகையான துதிபாட்டுகள், இஸ்லாமிய மார்க்கத்தின் மீதான வெறுப்பை கிறிஸ்தவ மக்களின் மனதில் நிரந்தரமாக்கியது.இதன் மூலம் ஆழ்ந்து வேரூன்றிய சில தவறான எண்ணங்கள் இன்றளவும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைவரும் முஸ்லிம்களை பல் தெய்வ கொள்கை உடையவர்கள் எனவும் இறைமறுப்பாளர்கள் எனவும் சிலை வழிபாட்டாளர்கள் எனவும் கிரிஸ்தவ சமயத்திலிருந்து வெளியானவர்கள் எனவும் கருதிக் கொண்டிருக்கிறார்கள்”.

முஸ்லிம்களுடன் நீண்டகாலம் போராடி தோல்வி கண்ட சிலுவை ஆக்கிரமிப்பாளர்கள், ஆயதப்போராட்டத்தால் முஸ்லிம்ளை ஒருபோதும் வீழ்த்தமுடியாது என்பதை விளங்கிக் கொண்டார்கள். எனவே முஸ்லிம்களை சிந்தனை ரீதியாக பலவீனப்படுத்தினால் மட்டுமே வெற்றிபெறமுடியும் என்பதை உணர்ந்து அதற்கான சதித் திட்டங்களைத் தீட்டினார்கள். எனவே இதற்காக 16 ஆம் நூற்றாண்டின் முடிவில் மால்டாவில் ஒரு மையத்தை கிறிஸ்தவ மிஸனரியினர் நிறுவினார்கள்.மால்டாவை தலைமையிடமாக்க் கொண்டு முஸ்லிம்களின் உள்ளத்தில் மேற்கத்திய நச்சு சிந்தனைகளை பிரிட்டிஷ்-பிரஞ்சு-அமெரிக்க மிஸனரியினர் விதைக்கலாயினர்.இந்த காலகட்டத்தில்தான் முஸ்லிம்களிடையே மேற்கத்திய சிந்தனைகள் ஊடுருவத் துவங்கியது.

இவர்கள் இஸ்லாத்திற்கு மாற்றமான தேசியவாதம், விடுதலை போன்ற குஃப்ர் சிந்தனைகளை முஸ்லிம்கள் மத்தியில் அதிகளவில் பிரச்சாரம் செய்து இஸ்லாமிய சிந்தனையை ஆட்டங்காண வைப்பதன் மூலம் கிலாஃபத்தைத் தகர்த்துவிடும் முயற்சியில் இறங்கினார்கள். இதற்காக பெய்ரூட் மையம் துவக்கப்பட்டது.கிலாஃபா ஆட்சியினுள் அவர்கள் மிஸனரிகளை அனுப்பி கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை அமைப்பதன் ஊடாகவும், புத்தகங்கள், துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதின் ஊடாகவும் தமது கருத்துக்களை விதைத்ததுடன் சில இரகசிய நிறுவனங்களையும் அமைத்தனர்.அவர்கள் சமூகத்தில் பலதரப்பட்ட மட்டத்தில் உள்ளவர்களுக்குள் ஊடுருவினர். இதற்காக கல்வி நிறுவனங்களில் தமது கவனத்தை அதிகமாக செலுத்தினர். இத்தகைய முயற்சியின் பலனாக அவர்கள் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் அறிவுஜீவிகளைக் கவர்ந்தனர். கிலாஃபத்தின் பகுதியில் ஊடுருவி அதை பலவீனப்படுத்தினால் மட்டுமே தங்களால் வெற்றிபெற முடியும் என்பதால், குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் அரபு தேசியவாதத்தையும், துருக்கிய தேசியவாதத்தையும் விதைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றனர்.இதற்காக துருக்கிய இளைஞர் சங்கம் என்ற இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.கிலாஃபத்தை அழித்த முஸ்தஃபா கமால் பாஷா இதில் உறுப்பினராக இருந்தான்.

எனவேதான் முஸ்தபா கமால் இவ்வாறு கூறினான்:-

“Was it not because of the Khilafah, Islam and the clergy that the Turkish peasants fought and died for five centuries? It is high time Turkey looked after her own interests and ignored the Indians and the Arabs. Turkey should rid itself of leading the Muslims.”

“துருக்கி குடியானவர்கள் கடந்த ஐந்து நூற்றாண்டு காலமாக கிலாஃபா, இஸ்லாம் மற்றும் திருச்சபைக்காக சண்டையிட்டு உயிர் நீத்துள்ளார்கள். இனி துருக்கி தன்னுடைய நலன்களை மட்டுமே கவனித்துக் கொண்டு இந்தியர்கள் மற்றும் அரபியர்களை புறக்கணிக்க வேண்டும். மேலும் முஸ்லிம்ளை தலைமை தாங்குவதிலிருந்து துருக்கி தன்னை விலக்கிக் கொள்ள வேண்டும்”

ஒரே அமீரின் கீழிருந்த கிலாஃபத்தின் நிலப்பரப்பை பல நாடுகளாக கூறுபோட்டு தங்களின் ஏஜண்டுகளை ஆட்சியில் அமர்த்துவதற்காக 1916 ஆம் ஆண்டு பிரிட்டனும் ஃபிரான்ஸும் ஒன்றிணைந்து Sykes-Picot agreement என்று அறியப்படும் ரகசிய ஒப்பந்த்ததை ஏற்படுத்தினர். ஃபிரான்ஸ் தூதர் Georges-Picot மற்றும் பிரிட்டிஷ் அரசியல் ஆலோசகர் Mark Sykes மத்தியில் இந்த சதித்திட்டத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தென்கிழக்கு துருக்கிய பகுதி, ஈராக்கின் வட பகுதி,சிரியா,லெபனான் போன்ற நிலப்பரப்புகளை ஃபிரான்ஸ் எடுத்துக் கொள்வது எனவும்,ஜோர்டான்,ஈராக்,ஹைஃபா போன்ற பகுதிகளை பிரிட்டன் எடுத்துக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.இன்றைய மத்திய கிழக்கு நாடுகளின் எல்லைக்கோடுகள் Sykes-Picot ஒப்பந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டன.

கிலாஃபத்தை வீழ்த்துவதற்கு பிரிட்டன், ஃபிரான்ஸ்,ரஷ்யா போன்ற நாடுகள் திட்டம் தீட்டினர்.இதில் முஸ்தஃபா கமாலை முன்னிறுத்தி பிரிட்டன் சதிவலையை பின்னியிருந்தது.இதன் விளைவாகவே முஸ்தஃபா கமால் பாஷா உஸ்மானிய கிலாஃபத்தின் அதிகாரத்தில் நுழைய முடிந்தது.துருக்கியின் விடுதலைக் குறித்து விவாதிக்க 1922 ஆம் ஆண்டு லாஸான் மாநாட்டை பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் கர்ஸன் பிரபு கூட்டினார்.கிலாஃபத்திலிருந்து துருக்கியை விடுவிக்க கீழ்க்கண்ட நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன.

1.கிலாஃபத்தின் ஒட்டுமொத்த மறைவு

2. கிலாஃபத்தின் எல்லையிலிருந்து கலீஃபாவை வெளியே துரத்துதல்

3.கிலாஃபத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்தல்

4. துருக்கியை மதச்சார்பற்ற நாடாக பிரகடனம் செய்தல்


இந்த நான்கு நிபந்தனைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் மாநாடு வெற்றியாக கருதப்பட்டது.எனினும் துருக்கியில் வாழ்ந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் கிலாஃபத்தை தங்களின் இதயத்தில் வைத்து போற்றியதால் பல நூற்றாண்டுகளாக இருந்துவந்த முஸ்லிகளின் தலைமையை ஒரேயடியாக வீழ்த்த முடியவில்லை.இதனால் லாஸான் மாநாட்டு தீர்மானங்கள் தோல்வியை தழுவியது.ஆயினும் பிரிட்டன் தன்னுடைய தந்திர முயற்சியை விட்டுவிடவில்லை. எனவே தங்களின் கங்காணி முஸ்தஃபா கமாலை முழு பலத்தையும் பிரயோகித்து கிலாஃபத்தை வீழ்த்துமாறு கூறினர்.இறுதியாக கி.பி.1924, மார்ச் 3(ஹிஜ்ரி 1342 ரஜப் 28) ஆம் ஆண்டு முஸ்தஃபா கமால் முழு பலத்தை வைத்து அச்சுறுத்தி கிலாஃபத்தை அகற்றுவதற்கான மசோதாவைக் கொண்டுவந்து கிலாஃபத்தை அழித்தான்.

முஸ்தஃபா கமால் அத்தாதுர்க் என்ற பிரிட்டனின் கங்காணி மூலம் அதிகாரப்பூர்வமாக கிலாஃபா அழிக்கப்பட்ட்தும் முஸ்லிம் உம்மத்தின் வாழ்வியலிலிருந்து இஸ்லாம் பிரிக்கப்பட்டு, முதலாளித்துவம் திணிக்கப்பட்டது. இஸ்லாமிய பூமி பல தேசங்களாக பிளவுபடுத்தப்பட்ட நிலையில் முஸ்லிம்களை நோக்கிய குஃப்ஃபார்களின் பிடி வலுவடைந்தது. எனவே மேற்குலகு தமக்கு அடிவருடிகளாக விளங்கிய முஸ்லிம்களை அங்கு ஆட்சியாளர்களாக ஏற்படுத்தி இஸ்லாத்தை அழிக்கின்ற முயற்சியில் வெற்றி கண்டனர். மேற்குலக எஜமானர்களின் பொருத்தத்தை அடைவதற்காக முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்த உம்மத்தை பலவந்தமாக ஒடுக்கினர். அவர்கள் கிலாஃபத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று பாடுபடுபவர்களையும் கடுமையாக ஒடுக்கிவருகின்றனர்

கிலாஃபத்தை அழித்தபின்னர் காலனியாதிக்க காஃபிர்கள் ஓய்ந்துவிடவில்ல. அந்த கிலாஃபா மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவேதான் கர்ஸன் பிரபு இவ்வாறு கூறினார்:-

“We must put an end to anything which brings about any Islamic unity between the sons of the Muslims. As we have already succeeded in finishing off the Caliphate, so we must ensure that there will never arise again unity for the Muslims, whether it be intellectual or cultural unity”

“முஸ்லிம்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறியவேண்டும். கிலாஃபத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றி பெற்றதைப்போல உணர்வுப்பூர்வமாகவோ, பண்பாட்டு ரீதியாகவோ வேறு எந்த வகையிலும் முஸ்லிம்களிடையே ஒற்றுமை ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.”

எனவேதான் கிலாஃபத்தின் மீள்வருகை குறித்து அச்சமும் கவலையும் கொண்டிருந்த அமெரிக்க அதிபராயிருந்த புஷ் இவ்வாறு கூறினார்:-

“…establish a violent political utopia across the Middle East, which they call Khilafah, where all would be ruled according to their hateful ideology… This Khilafah would be a totalitarian Islamic empire encompassing all current and former Muslim lands, stretching from Europe to North Africa, the Middle East and Southeast Asia”. …………Washington Post

“ மத்திய கிழக்கில் கிலாஃபத்திற்காக அழைப்பு விடுப்பவர்கள் வெறுப்புமிக்க சித்தாந்தத்தின்(இஸ்லாம்) அடிப்படையில் ஆட்சி செய்ய முயல்வதாகவும், அந்த கிலாஃபா என்பது தற்போதைய மற்றும் முந்தைய இஸ்லாமிய நிலங்களை உள்ளடக்கிய …பரந்து விரிந்த ஐரோப்பாவிலிருந்து வடஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து தென்கிழக்கு ஆசியா வரையிலான பகுதிகளை உள்ளடக்கிய முழுமையான இஸ்லாமிய அரசாகும்”.


ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரொவ் சமீபத்தில் இரண்டாவது ஜெனீவா மாநாடு முடிவுற்றதும் NTV தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“It is important that the political process is accompanied by combining the healthy forces, who are thinking about their homeland, and not about the establishment of the Khilafah in the Middle East and North Africa. To unite them and help them in many different ways to combat a terrorist threat. This is a goal for the whole region and for the world”.

“சிரியாவின் அரசியல் நிகழ்வானது தன் தாய்நாட்டின் சிந்தனை கொண்ட ஆரோக்கியமான சக்திகளுக்கிடையே ஒருங்கிணைந்ததாக அமைய வேண்டுமே தவிர, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் கிலாஃபத்தினை மீண்டும் நிறுவுவதற்காக அமையக்கூடாது. தாய்நாட்டின் சிந்தனை கொண்ட சக்திகளை ஒருங்கிணைத்து பல வழிகளில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவ வேண்டும். இதுவே அனைத்து பிராந்தியத்திற்கும் அனைத்து உலகிற்குமான குறிக்கோளாகும்.


மேற்குலகினர் மீண்டும் கிலாஃபா ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஏராளமான தடைக்கற்களை ஏற்படுத்தியுள்ளனர்.

*தேசியவாதம்,தேசப்பற்று,சோஷலிஸம்,மதச்சார்பின்மை போன்ற சிந்தனைகளை முஸ்லிம்களின் உள்ளத்தில் திணித்துவிட்டனர்.இதற்கான அரசியல் குழுக்களையும் தன்னார்வ நிறுவனங்களையும் முஸ்லிம் உலகில் ஏற்படுத்தியுள்ளனர்.

*இஸ்லாத்திற்கு முரணான பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களை இதற்காகவே வடிவமைத்தனர்.இது முஸ்லிம்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

*முஸ்லிம் உலகின் பொருளாதாரத்தை மேற்கத்திய காலனியாதிக்க அரசுகளும், அந்நாட்டின் தனியார் நிறுவனங்களும் தங்கள் பிடியில் வைத்துள்ளனர்.இதனால் முஸ்லிம் உம்மா தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

*முஸ்லிம் நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்சனைகளை ஊக்குவித்து அதில் மேற்குலகம் குளிர் காய்ந்து வருகிறது.

அரபு லீக்,இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC - Organisation of Islamic countries) போன்ற அமைப்புகளை மேற்குலகினர் தோற்றுவித்து முஸ்லிம்களின் பிரச்சனைகளை இதன் மூலமாகவே தீர்த்துவைக்க முடியும் என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

*முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள் மேற்கத்தியர்களின் ஏஜண்டுகளாக இருப்பதால் இஸ்லாத்தை முற்றாக புறந்தள்ளிவிட்டு முதலாளித்துவ ஆட்சியமைப்பை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். மேலும் இஸ்லாத்தை மீண்டும் இந்த பூமியில் நிலைநாட்ட பாடுபட்டுவரும் முஸ்லிம்களை தங்களின் மேற்கத்திய எஜமானர்களின் முழு ஆசீர்வாதத்துடன் ஒடுக்கி வருகின்றனர்.

எனினும் இவர்களின் சதிவலைகளையெல்லாம் அறுத்தெறிந்து உலகளாவிய முஸ்லிம்கள் முன்னேறி வருகின்றனர்.எனவே இந்த மாபெரும் பணியில் பங்கெடுக்காத சகோதர சகோதரிகள் இனியும் காலம் தாழ்த்தாமல் கிலாஃபத்தின் மீள்வருகைக்காக பாடுபடுபவர்களுடன் இணைந்து தோள் கொடுப்போம்.

May 7, 2014

வரலாற்றின் ஒளியில் இஸ்லாமிய நாட்காட்டி

முஸ்லிம்களின்  வணக்க வழிபாடுகளான நோன்பு, ஹஜ் போன்றவற்றை தீர்மானிப்பதற்கு இஸ்லாம் பிறையை அளவுகோலாக்கியுள்ளது. அதேபோன்று  பிறையை மையமாக வைத்து முடிவுசெய்யப்படும்  சந்திர நாட்காட்டி மூலமாக ஸகாத் கணக்கீடு,இத்தா,போர் விலக்கப்பட்ட மாதங்கள் போன்றவற்றை தீர்மானிக்கவேண்டும் என்பதையும் இஸ்லாம் வரையறுத்திருக்கிறது.
يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ
(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்:“அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன.  (அல் பகரா:189)
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அல்லாஹ்வுடைய (பதிவுப்)புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அதில் (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய) நான்கு மாதங்கள் புனிதமானவையாகும். (அத்தவ்பா:36)
هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ مَا خَلَقَ اللَّهُ ذَلِكَ إِلَّا بِالْحَقِّ يُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசம், சந்திரனை ஒளிவுள்மாகவுளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(சந்திரனாகிய) அதற்கு மாறிமாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை.அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.    (யூனூஸ்:5)
முஸ்லிம்களின் நாட்காட்டி சந்திரனை அடிப்படையாகக்கொண்டே அமையவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. மேற்கண்ட வசனத்தில் சந்திரனை மனிதர்களுக்கான நாட்காட்டி என்பதாக அல்லாஹ் سبحانه وتعالىகூறுகிறான்.இன்று உலகை ஆதிக்கம் செலுத்தும் கிரிகோரியன் நாட்காட்டி(Gregorian calendar – Solar calendar) துல்லியமற்றதாகும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. கடந்த காலங்களில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டதிலி­ருந்து இதன் தரத்தை விளங்கிக் கொள்ளலாம்.தகவல் தொடர்பிற்காக முஸ்லிம்கள் இந்த நாட்காட்டியை பயன்படுத்துவது தவறில்லை என்றாலும் பிறையை அடிப்படையாகக்கொண்ட துல்லியமான சந்திர நாட்காட்டியின்(Lunar calendar) முக்கியத்துவத்தை முஸ்லிம்கள் அறியாமல் இருப்பது வருந்தத்தக்க விசயமாகும்.  மேற்கத்திய நாகரீகத்தின் மயக்கத்தின் காரணமாக முஸ்லிம் உலகு இஸ்லாமிய நாட்காட்டிக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. சில முஸ்லிம் நாடுகள் சந்திர நாட்காட்டியை பின்பற்றுவதாக கூறிக்கொண்டாலும்,அவர்கள் வடிவமைத்துள்ள நாட்காட்டிகள் தேசியவாத எல்லைக்கோட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பிராந்திய நாட்காட்டிகளாகும்.எனவே இவர்களின் ஹிஜ்ரா நாட்காட்டியில் ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் மத்தியிலான தேதியிலும் மாறுபாடு உள்ளது.மனித சமுதாயம் பின்பற்றமுடியாத இத்தகைய நாட்காட்டிகளால் கிரிகோரியன் நாட்காட்டியை போற்ற வேண்டிய நிலைக்கு இந்த உம்மத்தை இவர்கள் ஆளாக்கியுள்ளனர்.
இஸ்லாமிய வரலாற்றில் நடந்த மாபெரும் நிகழ்வான ஹிஜ்ரத்தை மையமாகக் கொண்டு  உருவாக்கப்பட்ட ஹிஜ்ரா நாட்காட்டியை  உமர்(ரலி) அவர்கள் இந்த உம்மத்திற்கு நற்கொடையாக  வழங்கினார்கள். இதன் காரணமாக இந்த உம்மத்தின் வரலாறு தொடர்ந்து பாதுகாக்கப்பட்டதோடு, சீரான ஒரே சமுதாயமாக இந்த உம்மா சுடர்விட்டு பிரகாசிக்கவும் வழிவகுத்தது.
ஆரம்ப காலத்தில் முஸ்லிம்கள் சந்திரனை மையமாக் கொண்டு மாதங்களை கணக்கிட்டு வந்தனர்.ஆனால் ஆண்டுகளின் கணக்கை,முன்பு  மக்காவில் நடைமுறையில் இருந்துவந்த யானையாண்டு மூலமாக குறிப்பிட்டு வந்தார்கள்.கலீஃபா உமர்(ரலி) அவர்களின் காலத்தில் எழுந்த சில சிக்கல்களை தீர்த்து வைப்பதற்கு நாட்காட்டியை உருவாக்கவேண்டிய அவசியமான சூழல் ஏற்பட்டது. ஒரு மனிதர் இன்னொருவருவரிடம்   ஷவ்வால் மாதத்தில்  திரும்ப  அளிப்பதாக கூறி கடன் வாங்கியிருந்தார். கடன் வாங்கியவர் அதை நிறைவேற்றாததால்,உமர்(ரலி) அவர்களிடம் இதுபற்றி முறையிடப்பட்டது. எந்த ஆண்டின் ஷவ்வால் மாதத்தில் கடனை திரும்ப அளிப்பதாக வாக்குறுதி கூறினீர்கள் என்பதாக உமர்(ரலி)அவர்கள் வினவியபோதுதான் இந்த பிரச்சனையின் ஆழம் உணரப்பட்டு இஸ்லாமிய நாட்காட்டி ஒன்றை உருவாக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேலும் இஸ்லாமிய அரசான கிலா ஃபத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த  பாக்தாத் மாகாணத்திற்கு ஆளுநராக அபூமூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்களை கலீபா உமர்(ரலி) அவர்கள் நியமித்திருந்தார்கள். அபூமூஸா அல்அஷ்அரீ(ரலி)அவர்கள், உமர்(ரலி) அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள்.அதில் உங்களிடமிருந்து வரும் கடிதங்களில் தேதிகள் இல்லாதாதால் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக முறையிட்டிருந்தார்கள். எனவே  உமர்(ரலி)அவர்கள் இஸ்லாமிய நாட்காட்டியை உருவாக்குவது தொடர்பாக ஸஹாபாக்களை கலந்தாலோசித்தார்கள்.அப்போது ஸஹாபாக்களால் கூறப்பட்ட நான்கு ஆலோசனைகளும், நபி صلى الله عليه وسلم அவர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருந்ததன.
فَلَمَّا جَمَعَ عَلَى ذَلِكَ قَالَ قَوْمٌ أَرِّخُوا لِلْمَوْلِدِ وَقَالَ قَائِلٌ لِلْمَبْعَثِ وَقَالَ قَائِلٌ مِنْ حِينِ خَرَجَ مُهَاجِرًا وَقَالَ قَائِلٌ مِنْ حِينِ تُوُفِّيَ
1) நபி صلى الله عليه وسلمஅவர்கள் பிறந்த ஆண்டு 2) இவ்வுலகைவிட்டு பிரிந்த ஆண்டு 3) நபியாக தேர்வு செய்யப்பட்ட ஆண்டு 4)ஹிஜ்ரா மேற்கொண்ட ஆண்டு (ஃபத்ஹுல் பாரி)..அலி(ரலி) அவர்கள் தெரிவித்த ஆலோசனையின்படி  ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுகளின் கணக்கை துவங்குவது என்று இறுதியாக முடிவு செய்யப்பட்டது.
جَمَعَ عُمَرُ النَّاسَ فَسَأَلَهُمْ مِنْ أَيِّ يَوْمٍ يُكْتَبُ التَّارِيخُ؟ فَقَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: «مِنْ يَوْمِ هَاجَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَرَكَ أَرْضَ الشِّرْكِ» فَفَعَلَهُ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ
உமர் (ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து ‘வருடத்தை எந்த நாளிலிருந்து துவங்கலாம்?’ என்று ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் இணைவைப்பு பூமியை விட்டு ஹிஜ்ரா  சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்’ என்றார்கள். அவ்வாறே உமர் (ரலி) அவர்கள் செய்தார்கள்.  (ஸயீத் பின் முஸய்யப் , ஹாகிம்)
مَا عَدُّوا مِنْ مَبْعَثِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلاَ مِنْ وَفَاتِهِ، مَا عَدُّوا إِلَّا مِنْ مَقْدَمِهِ المَدِينَةَ
மக்கள் (ஆண்டுக் கணக்கை) நபி صلى الله عليه وسلمஅவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்டதிலிருந்தோ அவர்களுடைய மறைவிலிருந்தோ கணக்கிடவில்லை; மதீனாவுக்கு(ஹிஜ்ரா செய்து) வந்ததிலிருந்தே கணக்கிட்டார்கள்.    (ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), புகாரி)
முஸ்லிம்களின் நாட்காட்டி ஹிஜ்ரா நடந்தேறிய ஆண்டிலிருந்து துவங்கவேண்டுமென்று உமர்(ரலி) அவர்களால் முடிவு செய்யப்பட்டதிலிருந்து ஹிஜ்ரத்தின் முக்கியத்துவத்தை நாம் விளங்கிக் கொள்ளலாம்.நபி صلى الله عليه وسلمஅவர்கள் மக்காவில் இஸ்லாத்தை நிலைநாட்ட உரிய  ஆதரவு கிடைக்காததால் அதைச்சுற்றி வாழ்ந்த பல்வேறு கோத்திரத்தார்களிடம் இஸ்லாத்தை எடுத்துரைத்து ஆதரவு கோரினார்கள்.இக்கடின முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்காமல் பெரும் இன்னல்களை சந்தித்தார்கள். மதீனாவிலிருந்த  வந்த அவ்ஸ்,கஸ்ரஜ் கோத்திரத்தார்களிடமிருந்து   இஸ்லாமிய அரசை நிறுவ நபி صلى الله عليه وسلمஅவர்களுக்கு உதவி  கிடைத்தது.எனவே நபிصلى الله عليه وسلمஅவர்கள் அதற்குரிய முன்னேற்பாடுகளுடன் ஹிஜ்ரா மேற்கொண்டு மதீனாவில்  இஸ்லாமிய அரசை  நிறுவினார்கள். எனவே இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட  இந்த ஆண்டிலிருந்து இஸ்லாமிய ஆண்டை துவங்குமாறு உமர்(ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
நபி صلى الله عليه وسلمஅவர்கள் ஹிஜ்ரா மேற்கொண்டு ரபீவுல் அவ்வலில் தான் மதீனா வந்தடைந்தார்கள்.  ஆனால் ரபீவுல் அவ்வல் மாதத்தை வருடப்பிறப்பின் முதல் மாதமாக வைத்திருக்க வேண்டும். அறியாமைக் கால மக்கள் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தை வைத்திருந்ததாலும், ஹஜ்ஜை முடித்துவிட்டு ஹாஜிகள் அப்போதுதான் திரும்புவார்கள் என்பதாலும் முஹர்ரம் மாதத்தை முதல் மாதமாக்கலாம்  என்று உஸ்மான்(ரலி) அவர்கள் கூறியதன் அடிப்படையில் உமர்(ரலி) அவர்கள், முஹர்ரம் மாதத்தை வருடத்தின் முதல் மாதமாகக்கொண்ட  ஹிஜ்ரா நாட்காட்டியை ஏற்படுத்தினார்கள்
ثُمَّ قَالَ بِأَيِّ شَهْرٍ نَبْدَأُ فَقَالَ قَوْمٌ مِنْ رَجَبٍ وَقَالَ قَائِلٌ مِنْ رَمَضَانَ فَقَالَ عُثْمَانُ أَرِّخُوا الْمُحَرَّمَ فَإِنَّهُ شَهْرٌ حَرَامٌ وَهُوَ أَوَّلُ السَّنَةِ وَمُنْصَرَفُ النَّاسِ مِنَ الْحَجِّ
எந்த மாதத்தை முதல் மாதமாகக் கணக்கிடுவது என்றபோது, சிலர் ரஜப் என்றும் சிலர் ரமலான் என்றும் குறிப்பிட்டனர். உஸ்மான் (ரலி) அவர்கள் முஹர்ரம் என்று கூறினார்கள். ”ஏனெனில் இந்த மாதம் கண்ணியமிக்க மாதம் (போர் தடை செய்யப்பட்ட மாதம்) என்பதாலும் மக்கள் ஹஜ் செய்து விட்டு திரும்பும் போது வரும் முதல் மாதம் என்பதாலும் முஹர்ரம்” என்று குறிப்பிட்டார்கள்.        (ஃபத்ஹுல் பாரி)
முஸ்தஃபா கமால் பாஷா என்ற கைக்கூலியைக்கொண்டு ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டிருந்த முஸ்லிம்களை மேற்கத்திய காஃபிர்கள் சிதறடித்தனர்.இதன் காரணமாக தேசியவாத அடிப்படையில் முஸ்லிம் நாடுகள் தோற்றம் பெற்றன. ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக உலக முஸ்லிம்களின் ஒரேஅமீராக இருந்துவந்த கலீஃபாக்களால்  நடைமுறைப்படுத்தப்பட்ட இஸ்லாமிய நாட்காட்டியை கிலாஃபத்தை வீழ்த்திய பிறகு (ஹிஜ்ரி 1342, ரஜப் 28) முஸ்தஃபா கமால் பாஷா முடக்கினான்.
தேசியவாத மயக்கத்தில் இந்த உம்மத்தை மூழ்கடித்த முஸ்லிம் ஆட்சியாளர்கள், இஸ்லாமிய நாட்காட்டியை பின்பற்ற இயலாத நாட்காட்டி என்ற அளவிற்கு உருமாற்றிவிட்டனர்.சில முஸ்லிம் நாடுகள் ஹிஜ்ரா நாட்காட்டியை பின்பற்றுவதாக கூறிக்கொண்டாலும்,அவர்கள் வடிவமைத்துள்ள நாட்காட்டி  தேசியவாத எல்லைக்கோட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மண்டல நாட்காட்டிகள் ஆகும்.சர்வதேச நாட்காட்டி என்ற நிலையிலிருந்து தரம் தாழ்த்திய இவர்களின் சந்திர நாட்காட்டியில் ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் மத்தியிலான தேதியிலும் மாறுபாடு உள்ளது.மனித சமுதாயம் என்றுமே பின்பற்ற முடியாத இத்தகைய நாட்காட்டிகளால், இந்த முஸ்லிம் உம்மா ஒரே சமுதாயம் என்ற நிலையிலிருந்து கீழிறங்க வழிவகுத்துள்ளனர். இனி மீண்டும் வரவிருக்கின்ற முஸ்லிம்களின் ஒரே தலைமையான கிலாஃபா அரசால் மட்டுமே நம்முடைய முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஹிஜ்ரா  நாட்காட்டிக்கு உயிரோட்டம் அளிக்க இயலும் என்பதில்  ஐயமில்லை.
Sources : http://sindhanai.org/

Oct 28, 2013

முஹர்ரமும், நவயுக பிர்அவ்ன்களும்! பகுதி - 1

இந்த முஹர்ரம் மாதத்திலே அருள்பாளிக்கப்பட்ட ஆசுரா தினம் எம்மை விட்டு நகர்ந்து சென்றுள்ளது. முஹர்ரம் மாதம் என்பது அல்லாஹ்வினது புனித மாதமாகவும், முஸ்லிம்களினது மிக முக்கிய மாதமாகவும் இருக்கின்றது. இந்த மாதம் ஹிஜ்ரி நாட்காட்டியில் முதலாவது மாதமாகவும், அல்லாஹ் புனிதப்படுத்திய மாதங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது.அல்லாஹ் அத்தவ்பா 36ம் வசனத்தில் கூறுகிறான் “நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஒரு வருடத்திற்குப்) பன்னிரெண்டாகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவையாகும். (இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று செயல்படுவதற்குரிய) அதுதான் நேரான மார்கமாகும். எனவே அவற்றில் (நீங்கள் வரம்புமீறி) உங்களுக்கு நீங்களே நீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்.”


இந்த குர்ஆனிய ஆயத்தில் “நீங்கள் வரம்பு மீறாதீர்கள்” என்ற சொற்றொடருக்கு இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் விளக்கம் அளிக்கையில் “நீங்கள் வரம்பு மீறாதீர்கள் ” என்ற சொற்றொடர் அனைத்து பன்னிரெண்டு மாதங்களை சுட்டிக்காட்டிய பின், அவற்றிலிருந்து நான்கு மாதங்கள் விசேடமாக புனிதமானவையாக தேர்ந்தெடுக்கப்பட்டு கூறப்பட்டுள்ளதால், இந்த நான்கு மாதங்களிலும் செய்யப்படுகின்ற தவறுகள் மிகவும் பாரிய தவறுகளாகவும், அவற்றில் செய்யப்படுகின்ற நன்மைகள் நிறைந்த பலனை தரக்கூடியவை எனவும் தெரிவிக்கிறார்கள்.

இந்த நான்கு மாதங்களும் எவை என்பது குறித்து புஹாரியின் 2958ம் ஹதீஸில் பதிவாகியுள்ளது.ரஸ_ல்(ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ பக்றா (றழி) அறிவிக்கிறார்கள்“வருடம் என்பது பன்னிரெண்டு மாதங்களையுடையது. அவற்றில் நான்கு புனிதமானவை. துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் எனும் தொடர்ச்சியாக வருகின்ற மாதங்களும், ஜூம்மதுல் ஆகிருக்கும் ஸஃபானுக்கும் இடையே வருகின்ற ரஜப் மாதமுமாகும்.”
இவற்றிலிருந்து அல்லாஹ்வும், ரஸ_ல் (ஸல்) அவர்களும் இந்த மாதங்களுக்கு விஷேட முக்கியத்துவத்தினை வழங்கியுள்ளாரகள் என்பது புலப்படுகிறது.

இந்த மாதத்தின் சிறப்புக் குறித்து ரஸ_ல் (ஸல்) அவர்கள் கூறும் போது “ரமழானுக்கு அடுத்தபடியாக, நோன்பு நோட்பதிலே சிறப்பான மாதம் அல்லாஹ்வுடைய மாதமான முஹர்ரமாகும்” என்றார்கள். (முஸ்லிம்-1982)
மேலும் இமாம் அஹ்மத் ஒரு ஹதீஸினை பதிந்துள்ளார்கள் “இந்த நாளில் (முஹர்ரம்)தான் ஜூது மலையில் நு}ஹ்(அலை)அவர்களின் கப்பல் ஒதுங்கியது. ஆகவே நு}ஹ்(அலை) அவர்கள் இந்நாளில் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காக நோன்பு நோற்றார்கள்.

இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிப்பதாக இமாம் புஹாரி அறிவிக்கின்றார்கள்
“துதர் முஹம்மத்(ஸல்)அவர்கள் மதீனாவுக்கு வந்த சமயத்தில், ஆசுராவினது தினத்தில் யூதர்கள் நோன்பு நோற்றிருப்பதை அவதானித்தார்கள். அவர்கள் “இது என்ன” என வினவினார்கள். அதற்கு அவர்கள் “இது புனித நாளாகும். இந்நாளிலேதான் அல்லாஹ் இஸ்ரவேலர்களின் சந்ததியினரை அவர்களின் எதிரிகளிடமிருந்து பாதுகாத்தான். ஆகவே மூஸா(அலை) அவர்கள் இந்நாளில் நோன்பு நோற்றார்கள் என்றார்கள்” அதற்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் “மூஸாவினிடத்தில் உங்களைவிட எங்களுக்கு உரிமை அதிகமுள்ளது” எனக் கூறி முஹம்மத்(ஸல்) அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றார்கள். முஸ்லிம்களையும் அந்நாளில் நோன்பு நோட்கும்படி கூறினார்கள். (புஹாரி-1865)

மேலே சுட்டிக்காட்டப்பட்ட திருகுர்ஆன், மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் முஸ்லிம்கள் முஹர்ரம் பிறை 9,10ம் தினங்களில் நோன்பு நோற்று மூஸா(அலை) அவர்களையும், பிர்அவ்னின் காலகட்டத்தையும் ஞாபகப்படுத்தி வருவது நாமறிந்ததே. அதே போன்று திருமறை, பிர்அவ்ன் எவ்வாறு தனது மக்களை தன்னை “ரப்” ஆக ஏற்றுக்கொள்ளும்படியும், தனக்கு அடிபணியும்படியும் நிர்ப்பந்தித்து வந்தான் என்பதையும் எமக்கு ஞாபகப்படுத்துகிறது. மேலும் அவனது மிகப்பெரிய அறியாமையின் வெளிப்பாடாக தானே வாழ்வையும், சாவையும் நிர்வகிப்பவன் என்ற கருத்தை அவன் எவ்வாறு வெளிப்படுத்தி வந்தான் என்பதும் எமக்கு வரலாறு புலம்படத் தெரிவிக்கிறது.

தனது கருத்தை உறுதிப்படுத்துவதற்காக இரண்டு அடிமைகளை ஒன்று கூட்டி, அதில் ஒருவனை கொல்லும்படி கட்டளையிட்டான். மற்றைய அடிமையை விடுவித்தான். இத்தகைய ஒரு செயலை செய்ததன் ஊடாக தானே ஒரு மனிதனின் உயிரை பறிப்பவனும், வழங்குபவனும் ஆவேன் என வாதிட்டான்.எனினும் அல்லாஹ்வின் துதர் மூஸா(அலை) அவர்கள் மிகவும் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு அவனது அறியாமைக்கு பதில் அளித்தார்கள். அல்லாஹ் தினமும் சூரியனை கிழக்கில் உதிக்கச் செய்து மேற்கில் மறையச் செய்கிறான். நீ சொல்லுவது உண்மையானால் இந்த தினத்திற்கு மறுநாள் சூரியனை மேற்கிலே உதிக்கச் செய்து, கிழக்கிலே மறையச் செய்ய முடியுமா? என வினவினார்கள். இந்த வினா அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் அது அவனது அறியாமையை அவனுக்கு புலப்படுத்திய போதும், அவனிடமிருந்த அகம்பாவமும், பெருமையும் அவனை துய்மையான தௌஹீதை ஏற்க தடையாக இருந்து விட்டது.

இதுபோன்றே எப்பொழுதெல்லாம் சத்தியம், அசத்தியத்தை எதிர்கொள்கிறதோ அப்போதெல்லாம் அசத்தியம் சத்தியத்தியத்தின் முன்னால் மண்டியிடுகிறது. எனினும் அசத்தியவாதிகள் அவர்களது கர்வத்தின் காரணமாக சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

Oct 27, 2013

வருகிறது முஹர்ரம் இப்படி வரவேற்போம் !


                                              

ஈமான் கொண்டோரே !நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் ;அன்றியும் ,சைத்தானின் அடிச்சுவடுகளை பின் பற்றாதீர்கள் .நிச்சயமாக அவன் உங்கள் பகிரங்க விரோதியாவான் .

எனவே தெளிவான ஆதாரங்கள் உங்களிடம் வந்த பின்னும் , நீங்கள் சறுகி விடுவீர்களானால் ,(உங்களை தண்டிப்பதில் )நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன் ;தீர்க்கமான அறிவுடையவன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் . (சூரா அல் பகரா வசனங்கள் 208,209)

இன்னொரு முஹர்ரத்தையும் நாம் நெருங்கி விட்டோம் .ஆனாலும் அரசியல் அநாதைகளாக , கேட்பார் அற்றவர்களாக அல்லாஹ்வின் எதிரிகளின் சகல விதமான அடாவடித் தனங்களையும் சந்தித்தவர்களாகவே இந்த இஸ்லாமிய புதுவருடத்தையும் அடைய இருக்கின்றோம் .வழமை போலவே ஒரு சராசரி நாளாகவா இந்த நாளும் முஸ்லிமை வந்தடையப் போகின்றது ?

ஹிஜ்ராவை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய ஆண்டுக்கணிப்பின் இலட்சியவாத பேருண்மை ,ஒவ்வொரு முஸ்லிமையும் நான் யார் ? எங்கிருந்து வந்தேன் ? எதற்காக வந்தேன் ? எங்கே செல்லப் போகிறேன் ? எனும் வினாக்களுக்கு ஆழமான பதிலை புரியவைக்கும் ஒரு நிகழ்வாகும் .

ஒரு சிலவேளை மக்காவில் மிக ஆழமான காயம்பட்ட மூத்த சஹாபா பெருமக்களுக்கு அந்த உண்மை இயல்பாகவே புரிந்திருக்கும் .ஏனென்றால் இஸ்லாம் எனும் இலட்சியத்தோடு இல்லை அந்த இலட்சியமாகவே மாறி நின்று அன்று போராடியவர்களின் வெற்றி அத்தியாயம் இந்த ஹிஜ்ரத்தில் இருந்துதான் மைல்கல் ஆகின்றது .

முஹர்ரத்தின் வரவை இத்தகு வடிவத்தில் இருந்து நோக்கும் பக்குவம் எமக்கில்லை .காரணம் சத்தியத்தை உணர்ந்து அதன் அடைவுக்கான தியாகங்களை சுவையானதாக கருதும் மனப்பக்குவத்தில் நாமில்லை . அதற்கான அடிப்படைக் காரணமும் இருக்கத்தான் செய்கிறது . அதை உணர்ந்து கொள்ள இப்போது நாம் எத்தகு சூழ்நிலையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற புரிதல்களில் இருந்து விடயத்தை ஆராய்வது பொருத்தமானது .

குப்ர் முற்றாக சூழ்ந்த ஆதிக்க கட்டமைப்பு , அதன் நாகரீக கலாச்சார பதிப்புகளோடு கூடிய அசிங்கமான வாழ்வியல் போக்கில் முஸ்லீம்களாகிய நாம் விரும்பியோ ,விரும்பாமலோ இழுத்து வரப்பட்டிருக்கிறோம் .அந்த வகையில் அத்தகு தாக்கங்களின் புரிதல்கள் ,நடத்தைகள் ,தீர்வுகள் என்பன ஒரு அன்றாட நிகழ்வாகவே போய்விட்டது .

அது வருடக்கணிப்பு என்ற விடயத்திலும் இஸ்லாமியப் பார்வையும் தேடலுமற்ற ,அல்லது இஸ்லாமிய வருடக்கணிப்பின் வரலாற்றின் மீது பூரண உளத் தாக்கமற்ற மனோபாவம் கொண்டவர்களாக முஸ்லீம்களாகிய எம்மை மாற்றியுள்ளது .ஆனாலும் ஒரு சம்பிரதாயமாக இந்த முஹர்ரத்தையும் வரவேற்கிறோம் .


(ஆனால் எமது வாழ்வியல் நடத்தைகளின் வருடக்கணிப்பு பிரயோகம் என்பது ஆங்கில 'கலண்டரை ' அடிப்படையாக கொண்டு இடம்பெறுவதை யாராலும் மறுக்க முடியாது .இன்று எம்மில் ஒருவரிடம் இன்றைய திகதியை ,அல்லது குறித்த ஒரு நாளைப் பற்றி கேட்டால் ,ஆங்கில 'கலண்டர் ' பிரகாரம் பதில் சொல்வது சாதாரண இயல்பு .இது ஏன் என்றால் எது உலகின் அதிகார ஆதிக்க சக்தியாக இருக்கின்றதோ ,அந்த சிந்தனையின் தாக்கமும் விருப்பு வெறுப்பும் மனித வாழ்வியலை தீர்மானிக்கும் விடயமாகிவிடும் . இந்த பொது விதியில் முஸ்லீம்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல.)

முதலில் ஒரு விடயத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் மிகத் தெளிவான 'இஜ்திஹாதே ' ஹிஜ்ராவை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய கலண்டர் முறையாகும் .இந்த விடயத்தில் உமர் (ரலி )யின் சமகாலத்திலோ ,அவருக்குப் பின்னாலோ எந்த ஒரு கலீபாவோ ,இமாமோ முரண்படவோ ,மாற்றுக்கருத்தோ கொள்ளவில்லை .

இஜ்திஹாத் மூலம் பெறப்பட்ட முடிவு ஒரு இபாதத் என்பதிலும் எந்த இமாம்களுக்கு மத்தியிலும் கருத்து வேறுபாடுகளும் இல்லை .அந்த வகையில் 1924 ம் ஆண்டு வரை இருந்த இஸ்லாமிய கிலாபா அரசின் சகல விதமான நிர்வாக நடவடிக்கைகளும் இந்த ஹிஜ்ரா கலண்டரை அடிப்படையாக கொண்டே இடம்பெற்றுள்ளன . முஸ்லீம் உம்மாவும் தனது அன்றாட நடத்தைகளை ஹிஜ்ரா கலண்டரை அடிப்படையாக வைத்தே செய்தும் வந்துள்ளது ;என்பது மறுக்க முடியாத உண்மை .

முஸ்லீம் உம்மத்தில் ஆங்கில ஆண்டுக்கணிப்பு நூதனமாக எப்போது உட்புகுந்தது? என்று பார்த்தால் ,இஸ்லாத்தின் அரசியல் அதிகார ஆதிக்கத் தரம் வீழ்த்தப் பட்டு குப்ரிய அதிகார ஆதிக்க வடிவத்தினுள் முஸ்லீம் கட்டுப்பட்டு போன பின்புதான் ஆகும் .எனவே இங்கும் ஆட்சிக்கும் வாழ்வியலுக்கும் இடையிலான தவிர்க்க முடியாத இடைத்தொடர்பு முஸ்லீம்களால் மிகக் குறிப்பாக நோக்கப்பட வேண்டியதாகும் . இஸ்லாமிய அரசற்ற பூரண இஸ்லாமிய வாழ்வு முஸ்லிமுக்கு சாத்தியமே அற்றது .

மேலும் உண்மையிலேயே ஆங்கில கலண்டர் முறை கிறிஸ்தவ மதத்தையும் ,சமரச பேரத்தின் அடிப்படையிலும் அதன் பின்னால் ஆண்டுவந்த மன்னர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ,நிர்ப்பந்த மாற்றங்களை சுமந்த வடிவமே ஆகும் .

அத்தகு மேட்டுக்குடி அரசர்களின் பெயர்களையும் , நாள் மாத மாற்றங்களையும் , கிறிஸ்தவ மதவியலின் கோட்பாட்டிடமான ,கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்கு பின் என்ற அடிப்படையையும் கொண்டு கட்டமைக்கப் பட்ட ஒரு கணிப்பு முறையே ஆங்கிலக் கலண்டர் ஆகும் .எனவே இத்தகு முறைமையில் முஸ்லிமும் பங்களிப்பு செய்வது ஆழமாக சிந்திக்கப் படவேண்டிய விடயம் .

உதாரணமாக ஏப்ரல் 1ம் திகதியை முட்டாள்கள் தினமாக கூறுவதும் ,டிசம்பர் 25ம் திகதியை கிறிஸ்து பிறந்த நாளாக பெயரளவிலாவது கருதுவதும் சிறுவயது முதல் முஸ்லீம்களாகிய நாம் கடைப்பிடிக்கும் கணிப்பு முறையாகும் .இந்த நம்பிக்கையில்லாத நம்பிக்கையின் கீழ் இருந்துதான் எம்மை அறியாமல் ஒரு வேற்று நாகரிகத்தின் கருத்து ஆதிக்கம் ஏற்பட்டு விடுகின்றது . அதாவது 'பொசிடிவ் 'ஆகவோ 'நெகடிவ் 'ஆகவோ ஒரு வழிதவறிய குப்பாருக்காக முஸ்லீம்களாகிய நாம் பயன்பாட்டுப் போக இந்த ஆங்கிலக் கலண்டர் முறை ஒரு காரணமாகி விடுகிறது .

இன்னும் உமர் (ரலி ) கலீபாவாக இருக்கும் அன்றைய பொழுதுகளில் ஆங்கிலக் கலண்டர் முறையும் ,இன்னும் வேறுபட்ட காலக் கணிப்பு முறைகளும் இருக்கத்தான் செய்தது . ஆனால் அதை எடுத்து பயன்படுத்துவதில் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த காரணத்தினால் தான் . ஹிஜ்ராவை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய நாகரீகத்துக்கான கலண்டரை 'இஜ்திஹாத்' செய்திருக்கலாம் .

எமது சத்திய மீள் கட்டுமானமும் ,பூரண இஸ்லாமிய மயப்பட்ட நாகரீகத்தையும் இஸ்லாத்தின் அதிகாரத்தில் இருந்து மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் . அது அற்ற நிலையில் குப்பாரின் நரித்தனமான சதிகளில் முஸ்லீம்களாகிய நாம் சிக்குவது தவிர்க்க முடியாதது .அதற்கான சிறந்த ஆதாரங்களில் ஒன்றே அவர்கள் எமக்கு கற்றுதந்துள்ள ஆங்கிலக் காலக் கணிப்பீட்டு முறையாகும் .

சூழ்நிலை ,நிர்ப்பந்தம் ,தவிர்க்க முடியாமை போன்ற பதில்களோடு குப்ர் தெளிவாகவே தன்னைத் தழுவ அழைக்கிறது .எமது" செவிமடுத்தோம் வழிப்பட்டோம் " என்ற நடத்தை யாருக்காக? என்பதே எதிர்வரும் முஹர்ரத்தை முன்னிறுத்தி நாம் தீர்மானிக்க வேண்டிய நேரமிது .நாம் முஸ்லீம்கள் என்ற அசைக்க முடியாத பதிலை சொல்ல ,செயலால் பூரணமாக காட்ட எமது கேடயமான கிலாபா அரசு இன்று அவசரத் தேவையாக இருக்கின்றது .அதன் கீழ் மட்டுமே இஸ்லாமிய வாழ்வோடு கூடிய எமது கண்ணியம் பாதுகாக்கப் படும் இன்ஷாஅல்லாஹ் .

எனவே அவ்வழியில் சிந்திப்போம் , அதற்காக பிரார்த்திப்போம் ,அதன்வழி பூரண தியாகத்தோடு முயற்சிப்போம் .இந்த உறுதிப்பாட்டுடன் இந்த முஹர்ரம் வரவேற்கப் படட்டும் .அல்லாஹு அக்பர் ....!.அல்லாஹு அக்பர் ....!

Oct 24, 2013

இதோ இன்னொரு முஹர்ரம் ....



அது கலீபா உமர் (ரலி ) ஆட்சிக்காலம் ; அபூ மூசா அல் அஸ் அரி (ரலி )  கலீபாவிட்கு எழுதிய கடிதத்தின் வரிகளின் முக்கியத்துவம் கலீபாவால் உணரப்பட்டது . அப்படி என்னதான் எழுதியிருந்தார் ?விடயம் இதுதான் " உங்களிடம் இருந்து வரும் கடிதங்களில் காலம் குறிப்பிடப்படுவதில்லை " எனும் செய்தியே அது . கலீபா முக்கியமான சஹாபாக்களை ஓன்று கூட்டி ஆலோசித்தார்கள் . முஸ்லீம் உம்மாவின் காலக்கணிப்பின்' கலண்டர் ' உதித்தது . அந்தக் கட்டங்கள் சுருக்கமாக உங்கள் கண்முன் தருகிறேன் .கீழே அவதானியுங்கள் .

ஆலோசனை கட்டத்தில் பற்பல ஆலோசனைகள் சிலர்  நபி (ஸல்) அவர்களின் பிறப்பில் இருந்து வருடக்கணிப்பை தொடங்கலாம் என்றனர் ,இன்னும் சிலர் நுபுவத்திளிருந்து தொடங்கலாம் என்றனர் ,ஒரு சாரார் ஹிஜ்ரத்தில் இருந்து தொடங்கலாமே என்றனர் . இந்த  ஆலோசனையே ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது . சிந்திக்க வேண்டிய இடம் இதுதான் .
                                           
இந்த ஹிஜ்ரத்தின் நிகழ்வுதான் உண்மையில் இஸ்லாத்தின் கட்டமைப்பு வடிவத்தை , அதன் பிரத்தியோகமான நாகரீகத்தை காட்டக்கூடிய   ,அதன் பூரண பிரயோகத்தின் திட்டமிட்ட வாயிலாக அமைந்தது .  'சுரகாவிட்கு' பாரசீக மன்னரின் தங்கக் காப்புகள் பெற்றுத்தரப்படும் என்ற  வாக்குறுதி வழங்கப்பட்டதும் இந்த ஹிஜ்ராவில் தான் .அதாவது இனி தாகூத்திய சாம்ராஜ்யங்கள் இறைவனின் படைக்கு முன் நிம்மதியாக நிமிர்ந்து நிற்க முடியாது . என்ற எதிர்வு கூறப்பட்ட சுப செய்தி சொல்லப்பட்டதும். இந்த ஹிஜ்ராவில் தான் . அதாவது சத்தியத்துக்கும் அசத்தியதுக்கும் இடையில் அதிகாரப் பிரிகோடு தெளிவாக வரையப்பட்டது.
                                                                         
அதனையடுத்து எந்த மாதத்தில் இருந்து வருடக் கணிப்பை மேட்கொள்ளலாம்  என்ற ஆலோசனை மேட்கொள்ளப்பட்டது .அதன் போது சில சஹாபாக்கள் நபி (ஸல் ) ஹிஜ்ரத் சென்ற ரமலான் மாதத்தை முன் மொழிந்தனர் .ஆனால் தீர்மானிக்கப்பட்டதோ 'முஹர்ரம் ' காரணம் இஸ்லாம் பூரணப்படுத்தப்பட்ட 'துல்ஹஜ் ' மாதத்தை இறுதியாக்கி அதற்கு அடுத்ததாக வரும் 'முஹர்ரம் ' தலை மாதமாக அங்கீகரிக்கப்பட்டது . அத்தோடு இந்த மாதம் அல் குர் ஆன் குறிப்பிடும் புனித மாதங்களில் ஒன்றுமாகும் . இதுதான் இஸ்லாமிய 'கலண்டர் 'உத்தியோக பூர்வமாக பிறந்த வரலாறாகும்.

இன்று இன்னோர் முஹர்ரத்தை நாம் எதிர்கொள்ளப்போகிறோம் . ஆனால் அரசியல் அனாதைகளாக!! பசித்த எதிரியின் புசிக்கும் பண்டங்களாக !! எமது நிலங்களில் 'டெண்ட் 'அடித்த எதரிகளின் செருப்புகளாக வீற்றிருக்கும் மனிதர்கள் முன்னாக  , 'வெஸ்டனை' சிஷ்டமாக்கி இனி இதுதான் இஸ்லாம் என கூச்சலிடும் மேற்கின்  அடிவருடித்தன மேதாவிகள் முன்பாக .  யா அல்லாஹ் உனது கருணையை எங்கள் மீது பொழிவாயாக இந்த சாபக்கேடுகளில் இருந்து எங்களுக்கு மீட்சியை தருவாயாக . மீண்டும் தூய இஸ்லாத்தின் அதிகார நிழலில் கண்ணியம் பொருந்திய முஸ்லீம்களாக வாழ அருள் பாலிப்பாயாக.

http://khandaqkalam.blogspot.ae