Showing posts with label Sri Lanka. Show all posts
Showing posts with label Sri Lanka. Show all posts

Apr 7, 2014

இஸ்லாமிய இயக்கங்கள் எங்கே செல்கின்றன !!?

அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) கூறியுள்ளார்கள் .

"நிச்சயமாக எனது சமூகத்தின் மீது நான் பயப்படுவதெல்லாம் வழி கெடுக்கும் தலைவர்களைப் பற்றியேயாகும்."
அபூதாவூத்4252

சம்பிரதாய பூர்வமான சில ஏற்பாடுகளோடு சூழலின் ஆதிக்க அதிகாரத்தை அங்கீகரித்த ஒரு வாழ்வின் மீது முஸ்லீம் உம்மத் இன்று பழக்கப்பட்டுள்ளது . அதாவது முஸ்லீம் உம்மாவின் தெளிவான இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசியல் பார்வை முற்றாக கைவிடப்பட்டு குப்ரோடு ஒன்றிய வாழ்வுக்கான அரசியல் களம் இஸ்லாமிய இயக்கங்களால் முன் மொழியப்படும் அளவுக்கு சூழ்நிலை மோசமாகியுள்ளது .

இப்போது நடைமுறை ரீதியாக குப்ரின் விருப்பு வெறுப்புகளை ,ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு தக்கன பிழைத்தல் வாழ்வை நோக்கி இஸ்லாத்தின் பெயரோடு முஸ்லீம் உம்மத்தை அழைப்பது மட்டும்தான் 'தவ்வா ' என்பதாக மூத்த 'தாயிகள் 'வெளிப்படையாக பேசி நிற்கின்றனர் .இந்த சரணடைவு பாதை தான் காலத்தின் தேவையாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது .

இங்கு 'ஹராத்தோடு' கலந்த விடயங்கள் 'ஹலால் 'என்ற பெயரில் மிகச் சுலபமாக ஜீரணிக்கப்படும்! சில பாரிய ஹராம்களின் பாரதூரங்கள் ஏதோ சிறு பாவம் போல சித்தரிக்கப்படுவதும் இன்று அன்றாட நிகழ்வு . மிக அண்மையில் ஒரு பொலிஸ்மா அதிபர் ஒரு பிரசித்தமான இயக்கத்தின் 'இஜ்திமாவிட்கு' சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார் . அவர் அங்கு பௌத்த சிந்தனையை சிறப்பாக 'பிரித்' ஓதி! பேசிவிட்டு விட்டு போயுள்ளார் ! கேட்டால் மத நல்லிணக்கம் என அதற்கு ஒரு நியாயம் சொல்கிறார்கள் !!!இதை 'சிர்க்கோடு ' நல்லிணக்கம் என அழகாக மொழி பெயர்க்கலாமே!!!

இன்னொரு பிரசித்தமான இயக்கம் ஜெனீவாவுக்கு எதிராக ,இலங்கை அரசுக்கு ஆதரவாக பகிரங்கப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள் !! இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிராக நிகழ்ந்த எத்தனையோ அநீதிகளுக்கு முன் பெயரளவு பெறுமானத்தோடு அடக்கி வாசித்த அரசியலை . ஜெனீவாவுக்கு எதிராக முடுக்கி விட்டிருப்பது யாரை திருப்திப் படுத்தவாம் !? இதை சரியாக புரிந்து கொண்டால் 'பிர் அவ்னுக்கு' பிடில் வாசிக்கும் இவர்களது அரசியல் தரம் புரிந்து போகும் .

தவ்ஹீதை கப்ரு வணக்கத்தில் கண்டு பிடித்த இவர்களுக்கு ,தமது தூய அகீதாவுக்கு மண்ணள்ளிப் போடும் இத்தகு மடத்தனம் புரியாதது அதிசயமே .சிர்க்கை,பித் அத்தை நுணுக்கமாக கண்டுபிடிக்கும் இந்த இயக்கங்களுக்கு இஸ்லாமிய அரசியல் அகீதாவுக்கே ஆப்படிக்கும் 'ரித்தத்' வழிமுறையான குப்ரிய பொலிடிக்ஸ் உடன் உறவு கொள்வதில் தெளிவில்லாதது ஆச்சரியமே!

ஒரு முஸ்லிமினது அனைத்து செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவது இஸ்லாமிய ஷரீஆவாகும். அவன் தான் விரும்பியபடி வாழமுடியாது. மனித சட்டங்களை ஏற்று வாழ முற்படவும் முடியவே முடியாது . இஸ்லாத்தோடு வாழ்வு ,அல்லது இஸ்லாத்துக்காக தன்னை மரணம் வரை அர்ப்பணித்து போராடுதல் . இது தவிர ஒரு இடைக்காலம் இல்லவே இல்லை .

அல்லாஹ்வுடைய ஏவல் விலக்கல்களை தமது வாழ்வில் கடைப்பிடித்து வாழக் கடமைப்பட்டுள்ளான். அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றி வாழமுடியாது. இது குறித்து அல்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது.

“நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார். எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்" (20: 123-124)

http://khandaqkalam.blogspot.ae/2014/03/blog-post_29.html#more

Mar 26, 2014

இஸ்லாமிய இயக்கங்கள் எங்கே செல்கின்றன !!?


சம்பிரதாய பூர்வமான சில ஏற்பாடுகளோடு சூழலின் ஆதிக்க அதிகாரத்தை அங்கீகரித்த ஒரு வாழ்வின் மீது முஸ்லீம் உம்மத் இன்று பழக்கப்பட்டுள்ளது . அதாவது முஸ்லீம் உம்மாவின் தெளிவான இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசியல் பார்வை முற்றாக கைவிடப்பட்டு குப்ரோடு ஒன்றிய வாழ்வுக்கான அரசியல் களம் இஸ்லாமிய இயக்கங்களால் முன் மொழியப்படும் அளவுக்கு சூழ்நிலை மோசமாகியுள்ளது .
இப்போது நடைமுறை ரீதியாக குப்ரின் விருப்பு வெறுப்புகளை ,ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு தக்கன பிழைத்தல் வாழ்வை நோக்கி இஸ்லாத்தின் பெயரோடு முஸ்லீம் உம்மத்தை அழைப்பது மட்டும்தான் 'தவ்வா ' என்பதாக மூத்த 'தாயிகள் 'வெளிப்படையாக பேசி நிற்கின்றனர் .இந்த சரணடைவு பாதை தான் காலத்தின் தேவையாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது .
இங்கு 'ஹராத்தோடு' கலந்த விடயங்கள் 'ஹலால் 'என்ற பெயரில் மிகச் சுலபமாக ஜீரணிக்கப்படும்! சில பாரிய ஹராம்களின் பாரதூரங்கள் ஏதோ சிறு பாவம் போல சித்தரிக்கப்படுவதும் இன்று அன்றாட நிகழ்வு . மிக அண்மையில் ஒரு பொலிஸ்மா அதிபர் ஒரு பிரசித்தமான இயக்கத்தின் 'இஜ்திமாவிட்கு' சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார் . அவர் அங்கு பௌத்த சிந்தனையை சிறப்பாக 'பிரித்' ஓதி! பேசிவிட்டு விட்டு போயுள்ளார் ! கேட்டால் மத நல்லிணக்கம் என அதற்கு ஒரு நியாயம் சொல்கிறார்கள் !!!இதை 'சிர்க்கோடு ' நல்லிணக்கம் என அழகாக மொழி பெயர்க்கலாமே!!!
இன்னொரு பிரசித்தமான இயக்கம் ஜெனீவாவுக்கு எதிராக ,இலங்கை அரசுக்கு ஆதரவாக பகிரங்கப் போராட்டத்தில் இன்றைய தினம் இறங்கியுள்ளார்கள் !! இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிராக நிகழ்ந்த எத்தனையோ அநீதிகளுக்கு முன் பெயரளவு பெறுமானத்தோடு அடக்கி வாசித்த அரசியலை . ஜெனீவாவுக்கு எதிராக முடுக்கி விட்டிருப்பது யாரை திருப்திப் படுத்தவாம் !? இதை சரியாக புரிந்து கொண்டால் 'பிர் அவ்னுக்கு' பிடில் வாசிக்கும் இவர்களது அரசியல் தரம் புரிந்து போகும் .
தவ்ஹீதை கப்ரு வணக்கத்தில் கண்டு பிடித்த இவர்களுக்கு ,தமது தூய அகீதாவுக்கு மண்ணள்ளிப் போடும் இத்தகு மடத்தனம் புரியாதது அதிசயமே 

Oct 25, 2013

முஸ்லீம் எனும் அடையாளத்தை விட்டுக் கொடுத்தால் நாம் யார் !?


(ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப் பட்ட 'சோனி 'எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து ( இறுதிப் பகுதி )

அந்த 1990 அக்டோபர் 29 ம் திகதி யாழ்ப்பாண முஸ்லீம் பகுதி அதிகாலையிலேயே விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப் படிருந்தது . சேம்பரில் ஏற்றப்பட்ட தோட்டாக்கள் எம்மில் பதியும் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது .ரிகரை நெருங்கிய புலி விரல்கள் அழுத்தத் துடிக்கும் ஆசையோடு துருதுருத்துக் கொண்டிருந்தது. 'மெக்சிமம் ' பிடுங்கி விட்டு விரட்டி அடிப்பது மட்டும்தான் கட்டளை என்பதால் முஸ்லீம் மூளைகளை சிதறடிக்கும் இரத்த விளையாட்டுக்கு இப்போது சந்தர்பம் இல்லையே என அந்த ஆயுத பாணியான வீர வேங்கைகள் வெறுப்போடு வெறுங்கை சிவிலியன்களான எம்மை பார்த்துக் கொண்டிருந்தார்கள் .

பின்னாளில் இளம்பருதி என அழைக்கப்பட்ட அந்நாள் ஆஞ்சநேயர் புலிகளின் கட்டளையை அறிவிக்கிறான் . ("பராக் பராக் இதனால் (சோனி )எனப்படும்) முஸ்லீம்களுக்கு அறிவிப்பது என்வென்றால் கிழக்கு பகுதியில் வாழும் முஸ்லீம்களின் செயல்களால் கோபாவேசத்தில் துடித்துக் கொண்டிருக்கும் கிழக்குப் புலிகளின் முஸ்லீம் வேட்டைக்கு நீங்கள் உள்ளாகி அழிந்து போகாமல் இருக்க உங்களை உயிரோடும் மானத்தோடும் அனுப்பி வைக்கிறோம் " என்ற முடிவுதான் அதுவாகும் .வேடிக்கையான நியாயம் !

ஒரே இயக்கம் ,ஒரே தலைவர் ,ஒரே தலைமை ,ஒரே கட்டளை என நேற்றுவரை பேசியவர்களின் இந்த வார்த்தைகள் விசித்திரமாக இருந்தது ! கிழக்குப் புலிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அந்த 1990 களில் அவர்கள் யாரின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள் !? பிரபாகரனுக்கு வாகரைப் பாலம் அப்போதே சிம்ம சொப்பனமாகவா இருந்தது !? என்ற கேள்வி ஒருபக்கம் இருக்க குறைந்த பட்சம் கிழக்குப் புலிகள் வடக்கில் வந்து ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க முடியாத ஒரு புலித் தலைமை கேலிக் கூத்தாக இல்லையா !?

இந்த சம்பவத்தை நியாயம் காட்ட விடுதலைப் புலிகளாலும் ,இன்று வரை உள்ள அதன் வால்களாலும் ,எஞ்சி சிதறிப் போயுள்ள அதன் நகங்களாலும் ,சதைகளாலும் , சிங்கத்துக்கு சாமரம் வீசும் முன்னாள் உறுப்பினர்களாலும் முடியவே முடியாது . யாழ் பரியோவான் கல்லூரி அதிபர் ஆனந்த ராஜா சுடப்பட்டதட்கும் மன்னார் அரச அதிபர் மஹ்ரூப் சுடப் பட்டதற்கும் இடையில் ஒரு பொதுக் காரணம் இருந்தது . அது இலங்கை இராணுவத்தோடு , அரசோடு சேர்ந்து புலிகள் விரும்பாத நடத்தையில் அவர்கள் ஈடு பட்டார்கள் என்பது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அப்பால் இருக்கும் உண்மையாகும் .

ஆனால் வடக்கு கிழக்கின் முழு முஸ்லீம் சமூகத்தையும் விடுதலைப் புலிகள் குறிவைத்த இரத்த தாகத்தின் பின் ஈழ விடுதலை இலட்சியத்தை தாண்டிய ஒரு 'அசைன்மெண்ட் பொலிடிக்ஸ் 'இருப்பது நிரூபிக்கப் பட இந்தியன் றோ போல ,அமெரிக்க C .I .A போல , இஸ்ரேலின் மொசாட் போல முஸ்லீம்களாகிய எம்மிடம் உளவுப் பிரிவில்லை . அல்லது இந்த உளவுப் பிரிவுகள் போலவே முஸ்லீம் எதிர்ப்பு என்ற பொது அஜன்டாவுக்குள் புலிகள் வந்ததில் இவர்களை இணைத்து சந்தேகப் படாமல் இருக்கவும் முடியவில்லை .

" மட்டக் கிழப்பான் ...." என கிழக்கு முஸ்லீம்களை கீழ்த்தரமாக பார்க்கும் சாதீயத்தின் ஏதோ ஒரு வடிவம் வடக்கு முஸ்லீம்களிடம் ஒட்டி இருந்தது . முஸ்லிமை முஸ்லிமே கீழ்த்தரமாக பார்க்கும் இந்த அசிங்கத்துக்கு சூப்பரான ஆப்பு விடுதலைப் புலிகளால் கிடைத்தது . குப்பார் குப்பார் தான் . தாகூத் தாகூத் தான் ;இங்கு இஸ்லாம் முஸ்லீம் என்ற எதிரியின் பொதுப் பார்வைக்குள் ஒன்று சேர்க்கப் பட்டே அடிக்கப் படுவோம் என்ற ஒரு பொது உண்மை அப்போது எனக்குப் புரிந்தது .

இங்கு சாபி ,ஹனபி ,ஹன்பலி , மாலிகி என்றோ ,தப்லீக் , ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வான் ,சலபி , தவ்ஹீத் என்றோ அரபி ,அஜமி என்றோ குப்பார்கள் எம்மை பார்க்கப் போவதில்லை . எமது தனித்துவம் வெளிப்படும் ஏதாவது ஒரு சந்தர்பத்தில் நிச்சயம் நாம் வேட்டை யாடப்படுவோம் . நடந்ததும் அதுதான் ,நடப்பதும் அதுதான் . அதற்காக முஸ்லீம் என்ற அடையாளத்தை என்றும் எம்மால் விட்டுக் கொடுக்கவா முடியும் !

Oct 21, 2013

ஓமர் முக்தாரின் போராட்டமும் ஈழப் போராட்டமும் ஒரு ஒப்பீடு ....


ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி ' எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து (PART 09)

“ஓமர் முக்தார்” முசோலினியின் ஃபாசிச காலனியாதிக்க வெறியில் சீரழிந்த லிபியா நாட்டின் ‘முஸ்லீம் ’ போராளிதான் ஓமர் முக்தார். ஓமர் சுமார் 20 ஆண்டுகள் இத்தாலிய ஆதிக்க வெறியைச் சமாளித்து எதிர்த்து நின்று, 1931ல் ஒரு போரில் காயம்பட்டு, இத்தாலிய ராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, பழி சுமத்தப்பட்டு அவரது மக்களுக்கு முன்பாகவே தூக்கிலிடப்பட்டார்.

வியட்நாம் போரில் அமெரிக்கா உணர்ந்தது போல் இங்கு பெரும்படை கொண்ட இத்தாலி அரசு, சிறு கூட்டமாய் இருப்பினும் சொந்த மண்ணை விட்டுக்கொடுக்கக் கூடாதென்ற உணர்வில் உந்தப்பட்ட போராளிகளின் கொரில்லாப் போர்முறையைச் சமாளிக்க முடியாமல் திணறியது முசோலினியின் பாசிச இராணுவம் .

ஓமரின் புத்திசாலித்தனம், வீரம், நாட்டின் நிலப்பரப்பு பற்றிய தேர்ந்த அறிவு ஆகியவற்றின்முன் இத்தாலியின் மிகப்பெரிய ராணுவமும் நவீனத் தளவாடங்களும் ஒன்றும் செய்ய முடியவில்லை . அதனால் ஒவ்வொரு முறை அடிவாங்கும்போதும் லிபிய மக்களை அநியாயமாகச் சித்திரவதை செய்து வெறியைத் தணித்துக்கொள்கின்றனர் ஜெனரல் க்ரேசியானி தலைமையிலான இத்தாலியினர்.

அதுமட்டுமன்றி அப்பாவி மக்களைக் கூட்டம் கூட்டமாக அகதி முகாம்களென்ற பெயரில் சிறைப்படுத்தித் துன்புறுத்துகின்றனர். அதில் பெரும்பகுதி மக்கள் இறக்கின்றனர். ஓமர் தூக்கிலிடப்பட்டாலும் அம்மக்கள் தொடர்ந்தும் போராடினார்கள் . விடுதலை பற்றிய அவர்களது தெரிவு நவகாலனித்துவ மனித அடிமைத்துவத்தின் மறுபிரவேசம் என்பது புரியாமல் அம்மக்கள் இருந்தார்கள் என்பது இஸ்லாத்தை முன்னிறுத்தி ஆராயும் போது 'ஹைலைட்டாகும் ' முக்கிய விடயம் .

மன்னர் முறை முடியாட்சி மமதைகளுக்கு பின்னாலும் , முஸ்தபா கமால் அதாதூர்கின் துருப்பிடித்த தேசிய நஞ்சுக் கோட்பாட்டின் பின்னாலும் உடைந்து அணிதிரண்ட இஸ்லாமிய உம்மத்தின் தவறான நடத்தையின் பொதுப் போக்கிலே ஒமர் முக்தாரின் விடுதலைப் போர் உள்ளடங்கி விடுவதை 1981 களில் திரைப்படமாக அந்த வரலாறு பார்க்கக் கிடைத்த போது என்னாலும் உணர முடியாதிருந்தது .

கொடிய இனவாத யுத்தம் சூடு பிடித்த ஆரம்பப் பொழுதுகளில் தான் இந்த ஓமர் முக்தார் விடுதலைப் போரின் உதாரண வீரனாக வடபுல யாழ்ப்பாணத்தில் அறிமுகமானார் .சிந்தனை வீழ்ச்சியின் உச்சத்திலும் எஞ்சி நின்ற மார்க்கத்தின் எச்சங்களிலும் நின்று பார்க்கும் போது சுதந்திரம் தொடர்பாகவும் , ஜிஹாத் தொடர்பாகவும் தவறான வரைவிலக்கணம் அன்று எனக்குள் பதிந்ததும் தவிர்க்க முடியாதது.

இருந்தும் அன்று எனக்குத் தெரிந்த வகையில் ஈழப் போராட்டத்தோடு ,லிபிய சுதந்திரப் போரை ஒப்பிட்ட போது ஒரு அதீத தூய்மை இழப்பை ஈழ விடுதலைப் பாதை அடைந்திருப்பதை அன்றே கணித்தேன் . கல்வியங்காட்டில் TELO வின் சிறீ சபாரத்தினம் சுடப்பட்டு 'டயர்' போடப்பட்டபோதும் , PLOT மென்டிஸ் கொடூரமாக சிறைப் படுகொலை செய்யப்பட்ட போதும் சில முடிவுகளை என் உள்மனது எடுத்துக் கொண்டது .

அதுவரை ஜெனரல் கிரசியாணியாக தெரிந்த லலித் அத்துலத் முதலி விடுதலைப் புலிகளின் கிட்டு வாக மாறிப்போக , முசோலினி போல் தெரிந்த ஜே .ஆர் .ஜெயவர்தன ,வேலுப்பிள்ளை பிரபாகரனாக மாறிப்போனார் . ஆதிக்க வெறி என்பதன் அப்பட்ட வடிவங்களாக இவர்கள் இருந்தாலும் தமிழர்களால் இன்றும் ஒரு உயர்ந்த அந்தஸ்தில் வைத்து இவர்கள் பார்க்கப் படுவது ஆச்சரியமானது .

குறைந்தளவு போராளிகள் , பலம் வாய்ந்த எதிரி மக்கள் இழப்பை தவிர்க்க சண்டைக் களங்களை மக்கள் இல்லாத பாலைவனங்களையும் , மலைப்பாங்கான பகுதிகளையும் நோக்கி இழுத்துச் சென்ற ஓமர் முக்தாரின் போரியல் யுக்தி என்பவற்றுக்கு முன்னால் விடுதலைப் புலிகள் செய்த சமர்கள் ,தாக்குதல்கள் ஒரு பாரிய தவறை கொண்டியங்கியதை என்னால் காணக்கூடியதாக இருந்தது .

மக்களே புலிகள் ,புலிகளே மக்கள் ! என்ற பார்வையின் கீழ் 'பொசிசன்' எடுத்து பதுங்கித் தாக்கும் ஒரு 'டூல் ' ஆக தமிழர்கள் மாறிப்போக ,மறுபக்கம் சிவிலியன் என்ற கரிசனை இல்லாத இலங்கை இராணுவம் தாக்குதல்களை தொடுத்தது ! 'இழப்புகள் எமக்கு புதியவை அல்ல ' என்ற வீர வசனத்தோடு பிணக் குவியல்கள் வீடியோ நாடாக்களாக நிதி சேகரிப்புக்காக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செயப்பட்டது .முல்லியவலையின் இறுதிச் சமர்வரை வேலுப்பிள்ளை பிரபாகரனின் யுத்த பிரபுத்துவம் மரணத்தின் பின்னும் இன்றுவரை சாதித்த ஒரே சரித்திரம் இதுதானாகும்.

ஓமர் முக்தாரின் ஒரே பார்வை தனது போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும் என்பதே ஆகும் . ஜெனரல் கிரசியாணி போராளிகளை ஒரு திசையை நோக்கி தாக்குதல் வியூகத்தில் விரட்டிச்சென்ற போது கூட அவருக்கு இரண்டு முடிவுகள் இருந்தன. 1. துனீசியா ,அல்ஜீரியா ,எகிப்து போன்ற பகுதிகளை நோக்கி தப்பிச் செல்வது .2. சாகும் வரை சண்டையிடுவது . இதில் இரண்டாவது முடிவிலேயே ஓமர் முக்தார் இருந்தார் . ஏறத்தாழ 2000 போராளிகளை பறிகொடுத்தாலும் இத்தாலிய அதிகாரம் அற்ற லிபியாவை நோக்கி மக்கள் நகர வேண்டும் என்பதே அவரது கனவு ஆகும் . அவரது தன் தளபதிகளுக்கான இறுதிக் கட்டளையும் இதுவாகத்தான் இருந்தது .

கொல்லப்படும்வரை தாக்குதல் என்ற முடிவோடு கால்களை கட்டியவர்களாக வெறுமையான பாலை நிலத்தில் இத்தாலிய டாங்கிகளுக்கு முன் வெறும் 'ரைபிள்களோடு 'சண்டையிட்ட காரணமும் இதுதான் . போராளிகள் மரணிக்கலாம் போராட்டம் மரணிக்கக் கூடாது . அந்த வகையில் ஓமர் முக்தார் தூக்கில் இடப்பட்டதும் அவரது கனவு நிதர்சனமானது . ஈழ விடுதலைப் போரில் 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதுதான் மிச்சம் .

ஒரு சராசரி பாமர யாழ் முஸ்லிமின் குறிப்பிடத்தக்க வீரம் !



ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி ' எனும் முஸ்லீம்களின் நினைவுகளில் இருந்து ....(PART 08)

கடந்த 12 அக்டோபர் 2013 அன்று நிஸ்தார் அஹமட் என்பவர் இறைவனடி சேர்ந்தார் ,நீர்கொழும்பை பிறப்பிடமாகவும் ,யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் வாழ்ந்திருந்த இவர் 1990 களில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முஸ்லீம் இனத்துடைப்பு எனும் கேவல அரசியலை செய்வதற்கு சற்று சில நாட்களுக்கு முன் 10 பிள்ளைகளுடன் கூடிய தன் குடும்ப சகிதம் இலங்கையின் தென்பகுதிக்கு புலம் பெயர்ந்தவர் .

இனவாத யுத்தத்தின் அருவருப்பான சின்னங்களில் ஒன்றான அகதி முத்திரை இவர் குடும்பத்துக்கும் கிடைத்தது .நிவாரணம் , உணவு முத்திரை ,அரைவயிற்று சோறு எனும் கசப்பான அனுபவங்களை இவர் குடும்பமும் தாராளமாகவே அனுபவித்தது .அர்த்தமற்ற ஒரு ஆயுதக் கலாசாரத்தின் விளைவு வட்டத்தில் இவர் குடும்பமும் மறுக்க முடியாத ஒரு அங்கமாகியது .

ஏறத்தாழ மூன்று தசாப்தங்களுக்கு மேல் வடபுல யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருந்த இவர் நெல்லியடி , குருநகர் , சோனகதெரு போன்ற பகுதிகளில் வாழ்ந்திருந்த பழுத்த அனுபவசாலி .கொடிய இனவாத யுத்தத்தின் மோசமான விளைவுகளை இவரும் ,இவர் குடும்பமும் சந்தித்திருந்த போதிலும் வடபுல யாழ்ப்பாணத்தோடு ஓர் இனம் புரியாத பற்றிருந்த காரணத்தினால் யுத்தம் சூடு பிடிக்க ஆரம்பித்தும் இறுதிவரை புலம் பெயராமல் இருந்தார் .

1990 களில் இரண்டாம் கட்ட நாசகாரம் ஈழ விடுதலை என்ற பெயரில் விடுதலைப் புலிகளால் பிரகடனப் படுத்தப் பட்டபோது ,இலங்கை விமானப் படையின் குண்டு வீச்சுக்கு இவரது வீடும் இலக்கானது. இதன் பின்னரே புலம் பெயரும் முடிவை எடுத்தார் .

தொழுகையை விடாப்பிடியாகவும் , இமாம் ஜமாத்துடனும் நிறைவேற்றும் இவரிடம் ,இவருக்கு புரிந்த விபரங்களின் அடிப்படையில் ஈழ விடுதலைப் போராட்டத்தை முற்றாகவே குறைகாண்பார் .அத்தோடு தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்களுடன் இணைந்திருந்த முஸ்லீம் இளைஞ்சர்களை கண்டு அர்த்தமற்ற அந்த முயற்சியை கைவிட்டு விடும்படி பணிப்பார் .அத்தோடு பல அந்நிய மனிதர்களை இஸ்லாத்தை தழுவ வைத்த உதாரணமும் இவருக்கு உண்டு .

இவர் PLOT இயக்கத்தை சேர்ந்த நிலந்தன் என்று அழைக்கப்பட்ட 'இக்பாலின் ' தாய் மாமன் . மேலும் விடுதலைப் புலிகளின் கப்டன் பாரூக் என அழைக்கப் பட்ட 'ஹனீபா ' எனும் அக்கரைப்பற்று இளைஞன் வரை அக்காலத்தில் இவரோடு பரிச்சயமானவர்கள் .இந்த இருவரது மரணங்களிலும் தனக்கு சந்தேகம் இருப்பதாக இவர் அடிக்கடி கூறுவார் . அத்தோடு யாழ்ப்பாணத்தில் EROS இயக்கத்தில் இருந்தவரும் ,பின்னர் இலங்கை இராணுவத்தின் 'கஜபா ரெஜிமென்டில்' இருந்து மர்மமான முறையில் மரணத்தை தழுவிய சித்தீக் இவரது கடையில் சிறு வயதில் இருந்தே பணியாற்றியுள்ளார் .

ஒருமுறை ஆயுதக் கொள்வனவுக்காக நிதி சேகரிப்பு நடவடிக்கை ஒன்று தொடர்பாக பாரூக் சோனக தெரு மக்களிடம் வந்த சந்தர்ப்பத்தில் இவர் பாரூக்கை தனியே அழைத்து "இது வீண் வேலை இது இஸ்லாமிய போராட்டம் அல்ல " என கூற மௌனமாக தலையை குனிந்தவாறு கேட்டுவிட்டு சென்றுள்ளான் பாரூக் .(பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளோடு இணையச் சென்ற முஸ்லீம்களை நோக்கி பாரூக் இது இஸ்லாமிய போராட்டம் அல்ல நீங்கள் இதில் இணைய வேண்டாம் என இரகசியமாக புத்திமதி கூறியதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும் .)

அன்று விடுதலைப் புலிகளின் வட பிராந்திய தளபதியாக இருந்த கிட்டு வின் கட்டளையின் பிரகாரம் ஜெலீல் மாஸ்டரையும் , வெள்ளையனையும் மண்டையில் போட்டது (படுகொலை செய்தது ) இந்த பாரூக் தான் என்றவகையில் மிகக் கடுமையான விமர்சனம் இவருக்குண்டு .

ஆழ்ந்த படிப்பறிவோ ,மிகத் தெளிவான மார்க்க அறிவோ இல்லாத நிலையிலும் இரத்த வெறிபிடித்த இனவாத யுத்தத்தையும் அதன் கொடூரத்தையும் பாமர முஸ்லிமாக இருந்து இந்த நிஸ்தார் அஹமட் புரிந்திருந்தது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றது .ஒரு சாதாரண ரொட்டிக்கடை முதலாளிக்கு ஈழப் போராட்டத்தில் இருந்த இத்தகு சராசரிப் பார்வை தட்டிக் கழித்து விட முடியாதது .

1987 அக்டோபர் மாதம் விடுதலைப் புலிகள் (IPKF) இந்திய அமைதிகாக்கும் படையுடன் தமது சண்டையை தொடங்கினர் .ஏறத்தாழ சிவிலியன்கள் புலிகள் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி ஏதோ பாகிஸ்தான் போடர் போல நினைத்து இந்திய அமைதிப் படை அட்டகாசமாக முன்னேறிக் கொண்டிருந்தது .
புதிய சோனக தெரு என அழைக்கப் பட்ட பொம்மை வெளிப் பகுதியில் கண்ணிவெடிகளைப் புதைத்து காத்திருந்தது ஒரு புலிகளின் அணி . வழமை போலவே அதிகாலை சுபஹுத் தொழுகைக்கு முன்னர் பள்ளிக்கு சென்ற இந்த நிஸ்தார் அஹமட் ஒரு துணிகரமான வேலையை செய்துள்ளார் . அது என்ன ?

குறித்த தாக்குதல் இடம்பெற்றாலும் இந்தியர்களின் முன்னேற்றத்தை தடுக்க முடியாது .ஆனால் அந்த சேதத்தின் மூலம் வெளியாகும் பழிவாங்கும் கோப உணர்வு அப்பகுதியில் வாழும் முஸ்லீம்கள் மீது காட்டப் பட்டால் விளைவு மிகவும் மோசமாக இருக்கும் என முடிவெடுத்தார்.

தனது மருமகன்களில் ஒருவரை அழைத்துக் கொண்டு கண்ணிவெடி புதைக்கப் பட்டுள்ள பகுதிக்கு விடியாத அந்த நேரத்தில் சென்று வயர்களை அறுத்து சுற்றி எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் பழைய பொருட்கள் போடும் அறைக்குள் போட்டு விட்டார் .

விடுதலைப் புலிகளால் நிலைமை புரியப்பட்டது நன்றாக விடிந்த பின்னர்தான் ஆகும் .அவர்கள் கோபத்தோடும் ஆவேசத்தோடும் யார் இதை செய்தது !? எனத் தேடியபோது சம்பந்தமே இல்லாதவர் போல் அங்கிருந்தார் .பின் அவரது வீட்டில் துணி உலர்த்தும் கொடி கட்டப் பட்டது இந்த வயர்களை வைத்தே என நகைச்சுவையாக கூறுவார் இந்த நிஸ்தார் அஹமட் !இத்தகு ஒரு சராசரி பாமர யாழ் முஸ்லிமின் தைரியம் நிச்சயமாக நினைவு கூறப்படவேண்டியதே .

சிந்தனை வீழ்ச்சியில் உதித்த ஆபத்தான ஆலிம்கள் !

ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி ' எனும் முஸ்லீம்களின் நினைவுகளில் இருந்து ....(PART 07)


வரலாறு தனது பதிவில் சில மனிதர்களை பற்றி காணாமல் சென்றுவிடும் அவர்கள் செய்த சில செயல்களை அறியக்கிடைக்கும் போது அதிர்ச்சியோடு சேர்ந்த ஆச்சரியம் எமக்கு ஏற்படுவதுண்டு . இலங்கையின் வடபுல யாழ்ப்பாண முஸ்லீம்களின் வரலாற்றிலும் இத்தகு மனிதர்கள் நிறையவே இருக்கின்றார்கள் .அதில் பலர் அல்லாஹ்வை சந்திக்க சென்று விட்டார்கள் . இன்னும் சிலர் அறியப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .

1990 அக்டோபர் நாட்களில் விடுதலைப் புலிகளால் பலாத்கார இனத்துடைப்பாக முஸ்லீம்கள் விரட்டப் பட்டதற்கு முன்னர் ,இனவாத யுத்தத்தில் முஸ்லீம் உம்மத் ஒரு கொடூரத்தையும் ,அசிங்கத்தையும் கண்டது .ஆயுதக் கவர்ச்சியிலும் , சூழ்நிலை வாதத்திலும் கட்டுண்டு அதன் பக்கம் இழுபட்டுச் செல்லும் முஸ்லீம் இளைஞ்சர்கள் தொடர்பில் கவலை கொண்டது .

முஸ்லீம் உம்மத்தின் சமூக செல்வாக்கு மிக்க நபர்கள் இந்த விடயம் பற்றி தமக்கு தெரிந்த வகையில் ஆழமாக அன்று சிந்தித்தார்கள். அந்த வகையில் அமைப்பு ரீதியான ஒரு கட்டமைப்பு வடிவத்தை கொடுப்பது தவிர வேறு வழி அவர்களுக்கு தெரியவில்லை .அஹிம்சையை 'வெபனுக்கு' சிங்கர் ஆயில் போட்டு' ரீபிரஷ்' பண்ணவே பாவிக்கும் போராட்டமாகவே கருதும் விடுதலைப் புலிகள் போன்ற கொடூரிகளுக்கு மத்தியில் இந்த முடிவைத் தவிர வேறு வழி தெரியவில்லை .

முஸ்லீம்களின் தனித்துவம் , அடையாளப்படுத்தல் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவே இந்த 'இளைஞ்சர் அமைப்பாகும் ' தவிர ஈழப் போராட்டத்தின் பெயரில் கொலைகாரக் கொள்ளையர்களாக வலம்வரும் ஆயுத தாரிகளுக்கு எதிராகவோ , அல்லது இனத் துவேசத்தின் தெளிவான வடிவமாக வலம்வரும் சிங்கள அரச பயங்கர வாதத்துக்கு எதிராகவோ முஸ்லீம்கள் இத்தகு அமைப்பை ஏற்படுத்தவில்லை .

ஏதோ ஒரு வகையில் இந்த இளைஞ்சர் அமைப்பில் கட்டுண்டு போக இருந்த இளைஞ்சர்களை காட்டிக் கொடுக்கவும் இஸ்லாத்தின் பெயரோடு கோடரிக் காம்புகள் முளைத்தன , சந்தர்ப்ப சம்பவங்கள் சிலதும் நடந்தன ,சமூகம் சகோதரத்துவத்தை விலைபேசி சாத்தானிய அதிகாரத்தை தம்மீது திணித்துக் கொள்ள தயாரானது , தப்லீக் ஜமாஅத் ,ஜமாஅதேஇஸ்லாமி மோதல் என்ற அசிங்கமான 'பிரேம் வேக்' விடுதலைப் புலிகளை நரி முகத்தோடு முஸ்லீம் உம்மத்துக்கு தீர்ப்பு சொல்ல இழுத்து வந்தது .

சமூகப் பற்று மிக்க ஒரு சிறந்த மனிதரான ஜெலீல் மாஸ்டர் மற்றும் , 'வெள்ளை'என்று அழைக்கப்படும் இளைஞ்சனை சுட்டுக் கொன்றதோடு விடுதலைப் புலிகளின் official நடவடிக்கைகள் யாழ் முஸ்லீம் உம்மத்தினுள் பிரவேசிக்கின்றது .'ஹாக்கீமியத்தை பேசி இகாமதுத் தீனை தனது முடிவாக கூறியவர் புலிகள் எனும் ஒரு கொடிய 'தாகூத்தை ' காக்கா' பிடித்து தனது ஆதிக்க வெறிக்கு 'டிபென்ஸ் லைன் ' போட்டது இங்கு குறிப்பிட்டு கூறத்தக்கது .

இறுதியாக யாழ் முஸ்லீம்கள் விரட்டப் படுவதற்கு முன்னர் சமூக செல்வாக்கு மிக்க மனிதர்களை ,இளைஞ்சர்களை விடுதலைப் புலிகள் தமது கைதிகளாக்கி ,சமூகத்தை ஒரு தெளிவான வழிகாட்டல் பெறக்கூடிய நிலையை இல்லாமல் செய்தபின்னே விரட்டி அடித்தனர் . சூழ்நிலைக்காக புலித் தாகூத்தை 'காக்கா' பிடித்தவரும் இங்கு கைதியாகிறார் !

இவர் பேசிய 'ஹாக்கிமீயதும் இகாமதுத் தீனும் இன்று வரை பிறவிக் குருடன் கொடுத்த கொக்கு பற்றிய விளக்கம் போல இருக்கின்றது .'சிந்தனை வீழ்ச்சி வடித்தெடுத்த அகௌரவத்தின் வடிவங்கள் தம்மை 'தாயிகளாக' தம்பட்டம் அடிப்பது யாழ்ப்பாணத்துக்கு மட்டுமல்ல ,முழு முஸ்லீம் உம்மத்துக்கும் அவமானம் மட்டுமல்ல ஆபத்தானதுமாகும் .

(இன்ஷா அல்லாஹ் இன்னும் வளரும் ..)

Oct 13, 2013

ஆயுதக் கலாச்சாரத்தில் புதைந்த நியாயங்கள் ! ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி ' எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து ....(PART 06)




நான் பிறந்த பூமியில் கிடைத்த அனுபவங்கள் பல பாடங்களை எனக்கு கற்றுத் தந்தது . விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் இஷ்டம்போல் வடக்கு கிழக்கில் ஆட்டம் போட்டனர் . வட தமிழீழ எல்லையையும் ,தென் தமிழீழ எல்லையையும் பற்றி தெரியாதவன் கூட தோளில் ரைபிள் தொங்கும் துணிவில் எமக்கு முன்னாள் அரசியல் பேசினான் . அவர்களுக்கு தெரிந்த ஒரே அரசியல் சிங்கள இராணுவத்தை சுடுவது என்பது மட்டுமே .

சித்தாந்தம் பேசிய இயக்கவியல்' சோத்துப் பார்சளாக ' பேசப்பட்டது. 1980 களின் தொடக்கத்தில் இருந்தே ஈழ விடுதலைப் போராட்டத்தின் அசுர வளர்ச்சி இயக்கங்களுடனான போட்டிகள் உள்ளார்ந்த படுகொலைகளோடு ,ஒவ்வொரு இயக்கமும் தன்னை நியாயப் படுத்தவும் ,மக்கள் ஆதரவை திரட்டிக் கொள்ளவும் பல்வேறு நடவடிக்கைகளை செய்து கொண்டிருந்தது .

ஆட்டைக் கடித்து ,மாட்டைக் கடித்து ,மனிதனைக் கடித்து ,கடைசியில் அவர்கள் கடவுளாக நம்பிய சிலைகளையும் விட்டு வைக்கவில்லை .கோயில் நகைகளும் கொள்ளையடிக்கப் பட்டன .குற்றங்கள் மாறி மாறி ஒவ்வொரு இயக்கங்கள் மீதும் போடப்பட்டது .'சீன் கொனரி , ரோஜர் மூர் போன்ற ஜேம்ஸ் பாண்ட் மூவியின் ஹீரோக்கள் போல தமிழர்களில் அதிகமானோர் தமிழ் இயக்கங்களை நம்பிக்கொண்டிருந்தனர் .

ஆனால் 'ரெகுலா ' திரைப்படத்தில் இரத்தக் காட்டேரியாக வரும் 'கிறிஸ்டோபர் லீக்களை ' தான் தாம் வளர்க்கிறோம் என்பது மக்களுக்கு புரியவில்லை . அதைவிட புரியாதிருந்த விடயம் எல்லாவற்றையும் மிஞ்சக் கூடிய பயங்கரமான 'பிரடேடர்களை ' (கொடிய உயிர்க்கொல்லிகளை ) விடுதலைப் புலிகள் என்ற பெயரில் தாம் வளர்ப்பது புரியாமல் அந்தக் காலத்தில் வெளிவந்த திரைப்படங்களின் பெயர்களை ஒவ்வொரு இயக்கங்களுக்கும் சூட்டினர் !

LTTE - அலைகள் ஓய்வதில்லை .
EROS - தூரத்து இடிமுழக்கம் .
TELO - தூறல் நின்னு போச்சி .
EPRLF - பயணங்கள் முடிவதில்லை .
PLOT - விடியும் வரை காத்திரு .

இப்படி பெயர் சூட்டி நிகழ்காலம் ,எதிர்காலம் பற்றிய எந்த அரசியல் பார்வையும் இல்லாமல் ஒரு ஆயுதக் கலாச்சாரத்தை தமிழர்கள் கட்டிவளர்தனர் .மக்களுக்காக போராட்டமா ? போராட்டத்துக்காக மக்களா ?இந்தக் கேள்விக்கான விடை கேட்டவர்கள் 9MM பரிசோடு துரோகிகள் ஆக்கப் பட்டார்கள் . ராஜினி திரணகம போன்ற சிலர் மட்டுமே சரித்திரமாக மாறினார்கள் .ஆனால் நியாயம் புதைக்கப்பட்ட இந்த படுகுழி மிக நீண்டது ஆழமானது எல்லா ஈழப் போராட்ட இயக்கங்களுக்கும் இதில் பங்குள்ளது .

இது இப்படி இருக்க மனிதக் கேடயங்கள் என்ற போரியலையே இயக்கங்கள் நம்பியிருந்தன .விடுதலையின் விலைகள் என்ற பெயரில் ஒரு அவலமான இராணுவ கலாச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது .எல்லா இயக்கங்களையும் அழித்து விடுதலைப் புலிகள் தம்மை தனிப்பெரும் இயக்கமாக அறிமுகப் படுத்தியபோது அதை ஒத்துக் கொண்டார்கள் .

'கேடயமாய் எம்மை காத்த எம் மக்களே ! வாளாகவும் இனி மாறுங்கள் '... என்ற இவர்களது பிரச்சாரப் பாடலில் அவர்களே ஒத்துக்கொண்ட விடயமாகும் . ஒரு புறம் இன அழிப்பை பற்றி சற்றும் கவலைப்படாத சிங்கள பேரினவாதம் ! தமிழர்களை மணல் மூடைகளாக மாற்றிய அற்புதப் போராளிகள் என அதர்ம நியாயங்கள் விரிந்து சென்றன .

அழிவுகளையும் ,அழிப்புகளையும் பிரச்சாரப் படுத்தி ஆதரவுத் தளங்கள் ,நிதித் தேடல்கள் என தற்கொலை அரசியல் தரப்படுத்தப் பட்டது .விரிந்து சென்ற ஆயுதக் கலாசாரம் சூழலை ஆக்கிரமித்தது . காலப்போக்கில் சூழலாகவே மாறிப்போனது .பாடசாலையில் 'காந்தியை சுட்டது கோட்சே ' என ஆசிரியர் கூறினால் , 'சேர் சுட்டது எந்தவகை பிஸ்டல் !? பட்டது மார்பிலா நெற்றியிலா !? என கேட்கும் தரத்தில் மாணவர்களும் மாறிப்போய் இருந்தார்கள் .

வெற்றுத் தோட்டாக்களையும் , வெடிக்காத தோட்டாக்களையும் , எதோ முத்திரை சேகரிப்பு போல சிறார்கள் செய்யத் தொடங்கி இருந்தார்கள் . சாதீயம் தலைக்கேறிய தமிழ் சமூகத்தில் இராணுவ வியலும் இயக்க வடிவில் சாதிகளுக்குள் உட்புகுந்தன .

சாதாரண பிரச்சினைகளுக்கு கூட 'கிரனைட்டை '
கொண்டு வந்து மிரட்டும் தரத்தில் மனிதம் அங்கு கேள்விக்குறி ஆக்கப் பட்டிருந்தது ! இத்தகு சூழ்நிலையில் தான் முஸ்லீம்களும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் .

இந்த சூழ்நிலைத் தாக்கங்களில் முஸ்லீம் இளைஞ்சர்களும் இழுபடத் தொடங்கினர் .கௌரவ மிரட்டல்கள் மூலம் முஸ்லீம்களின் வாகனங்கள் கொள்ளையிடப்பட்டன .முஸ்லீம் உம்மத் தன்னைப் பற்றி சிந்தித்தது . தனது பாதுகாப்பு வாழ்வியல் உத்தரவாதம் பற்றி மிக ஆழமாகவே சிந்தித்தது .

சமூக செல்வாக்கு மிக்க நபர்கள் தமது அறிவுக்கு எட்டிய வகையில் இதற்காக முயற்சி செய்தார்கள் .இவர்களது நோக்கம் எந்தப் பேரினவாதத்துக்கும் எதிராக ஆயுதம் ஏந்துவது அல்ல .தனது சமூகத்தின் சுய பாதுகாப்பு மட்டுமே .

இங்கு நாவாந்துறையில் இருந்த தமிழனிடம் இருந்த 'கிரனைட் பற்றி அலட்டிக் கொள்ளாத விடுதலைப் புலிகள் யாழ்ப்பாண சோனக தெரு முஸ்லீமிடம் இருந்த 'கிரனைட் ' பற்றி தீவிரமான பார்வையே பார்த்தது . இஸ்லாமிய தமிழன் ஆக விரும்பாத 'காக்கா '(முஸ்லீம் ) கையில் ஆயுதம் இருப்பது ' ஜிஹாத் ' என்ற தெரியாத விடயத்தில் தெரிந்த வார்த்தையை போட்டு விளக்கம் கொடுத்து, முஸ்லீம்களை தமிழர்களுக்கு இன்னொரு எதிரியாக அநியாயமாக இனம் காட்டினர் .

(இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும் )

http://khandaqkalam.blogspot.ae

உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள்…..!

இவர்கள் அல்லாஹ்வுக்கு மாத்திரம் அஞ்சக் கூடியவர்களாகவும் ஹக்கிற்காக போராடுபவர்களாகவும் தீனுல் இஸ்லாத்தினது பாதுகாவலர்களாகவும் திகழவேண்டும்!

இதுவே, இஸ்லாம் எழுச்சிபெற மறுமலர்ச்சிபெற இஸ்லாத்திற்கு எதிரான தீயசக்திகள் தோற்கடிக்கப்பட வழிவகுக்கும்!

நபி (ஸல்) கூறினார்கள் :
'உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள். நபிமார்கள் தீனாரையோ திர்ஹமையோ வாரிசுச் சொத்தாக விட்டுச் செல்லவில்லை. எனவே எவர் ஒருவர் அவ்வறிவைப் பெற்றுக் கொண்டாரோ அவர் முழுமையானதொரு பங்கைப் பெற்றுக் கொண்டவராவார்.'

இந்த வகையில் “சித்தீக்” எனும் உண்மையை உரைக்கம் பண்பு “அமானா” எனும் அமானிதம் பேணும் பண்பு “பதானா” எனும் புத்திகூர்மை “தப்லீக் “ எனும் பிரச்சாரம் என்ற நான்கு வகைப் பண்புகளும் நபிமார்களது பண்புகளாகும்.

இத்தகைய உண்ணதமான பண்புகளுக்குச் சொந்தக்காரர்களாக, வாரிசா எமது உலமாக்கல் இருக்கும் போதுதான் வஹியின் ஒளியில் முழுமனித சமூகதிற்குமான நேர்வழி கிடைப்பதற்கும் குர்ஆன் சுன்னாவின்படி மனித சமூகம் வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் வழிவகுக்கும்.

இத்தகைய உண்ணதமான பணியை சுமந்த உலமாக்கல் அச்சமற்றவர்களாகவும் அல்லாஹ்வுக்கு மாத்திரம் அடிபணிந்து நடப்பவர்களாகவும் ஹக்கிற்காக போராடுபவர்களாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் உலகில் நீதி நிலைக்கும். மனித சமூகம் நல்வழிப்படும்.

இன்று உலகில் முஸ்லிம் ஆட்சியாளர்களது அநீதியை எதிர்த்து போராட வேண்டிய மிகப் பாரிய பணியை உலமாக்கள் கொண்டுள்ளதுடன் அல்லாஹ்வுடைய தீன் வாழ்வின் அனைத்து துறைகளிலும் ஒழுங்குபடுத்தப்பட முஸ்லிம்களது ஒரே தலைமை மீள நபி வழியில் உருவாக உழைக்கவும் கடமைப்பட்டவர்கள். இவர்களது மார்க்க உபதேசங்களில் இத்தகைய இஸ்லாமிய தலைமை உருவாகுவதன் அவசியம் பற்றி அதிகம் அழுத்தம் தொணிக்கவேண்டும்.

இன்று இலங்கையில் பேரினவாத சக்திகளது “இனவாதப் போக்கு” மற்றும் “இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனையுத்தம்” போன்றவற்றில் எமது உலமாக்களது பங்குபற்றி மிகப்பெரிய கேள்வி உள்ளது.

இவர்களுக்கு சமூகத்தை வழிநாடாத்துவதற்கான பாரிய பொறுப்புள்ளது. குப்பார்களுக்கு இஸ்லாத்தை தெளிவு படுத்தவும் அவர்களது நச்சுக்கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.

இன்று உலமாக்களில் பெரும்பாலானவர்கள் மேற்கினது மதஒதுக்கல் சிந்தனைத் தாக்கத்திற்குற்பட்டு இஸ்லாத்தை பள்ளிக்குள் முடக்கிய நிலையில் தமது உபதேசங்களை நிறுத்திக் கொள்கிறார்கள்.

இவர்கள் இஸ்லாத்தை இன்றுள்ள முதலாளித்துவ உலக ஒழுங்கினது மாற்றீடாக அதன் வாழ்வியல் அம்சங்களை, பொருளாதார முறைமைகளை, அரசியல் ஒழுங்கை முன்வைத்து ஒடுக்கப்பட்டுள்ள உலக மக்களுக்கு இஸ்லாம்தான் ஒரே தீர்வு என்பது பற்றி ஆக்கபல கருத்தியல் முன்னெடுப்புகளை எடுக்க தவறியிருப்பதனை நாம் காணலாம்.

இன்று முஸ்லிம்களது ஈமானுக்கு வேட்டு வைக்கும், இருப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போக்கை கண்டும் மௌனித்தபடி தானும் தன்பாடும் என்றபடி வாழும் மார்க்க அறிஞர்கள் தங்களது அமானிதம் பற்றி சிந்திக்கவேண்டும்.

அத்துடன் முஸ்லிம் புத்தி ஜீவிகள் இஸ்லாம் எனும் கண்ணாடியினூடாக இன்று முஸ்லிம்களுக்கு எதிரான சிநத்தனையுத்தத்தை பார்த்து உரிய தஃவாக்களை முன்னெடுக்க வேண்டும். இதுவே எமது எதிர்கால சந்ததிகளது இருப்பை பாதுகாப்பதுடன் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்கும்.

சிந்திப்போம்! ஆக்கபல தஃவாக்களை முன்னெடுப்போம்! பேரினவாத தீயசக்திகளது நச்சுக்கருத்துக்களை எதிர்கொள்வோம்! இஸ்லாத்தை முற்படுத்துவோம்!



Mohideen Ahamed Lebbe 

Oct 9, 2013

சடவாத மதஒதுக்கல் சிந்தனை

அனைத்து தீமைகளுக்கும் அரணாக மேற்கினது முதலாளித்துவ சடவாத மதஒதுக்கல் சிந்தனையுள்ளது.

இலங்கையில் முஸ்லிம்கள் ஒரு சமூகமாக அல்லாது ஒரு மக்கள் கூட்டமாகவே வாழகிறார்கள். நாம் வாழும் சமூகம் மத ஒதுக்கலையும் முதலாளித்துவ சடவாதச் சிந்தனைகளையும் அடிப்படையாகக் கொண்டது. 

மத ஒதுக்கல் சிந்தனையின் காரணமாக எந்த ஒரு பாவச்செயலும் சட்ட ரீதியாகத் தடைசெய்யப்படுவதில்லை. அத்துடன் தனி நபர் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு பிரஜைக்கு பாவங்களைச் செய்யும் சந்தர்ப்பங்களை சமூகம் வழங்குகிறது. பாவங்கள் செய்யும் போது ஒருவருக்கு ஏற்படுத் தடைகளை அகற்றும் பொறுப்பையும் அரசு சமூகம் சுமந்துள்ளது.

முதலாளித்துவச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டே தீர்மானங்கள் எடுக்கப்படுவதால் முதலாளி வர்க்கம் மதுக்கடைகளையும் விபச்சார விடுதிகளையும் சமூகத்துக்குள் நிறுவுகின்றன.

சடவாதச் சிந்தனையின் காரணமாக ஐம்புலன்களுக்குள் அகப்படாத இறைவனையும் மறுமையையும் மறுப்பதால் அல்லது புறக்கணிப்பதால் உலக வாழ்வு மாத்திரமே உண்மை எனக் கொள்ளப்படுகிறது. எனவே வாழ்வின் இலட்சியம் புலன் இன்பங்களை உச்சப்படுத்துவது மாத்திரமாகவே கொள்ளப்படுகிறது.

எந்தப்ப பாவங்களை முஸ்லிம் மக்கள் கூட்டம் தடுக்க விரும்புகிறதோ அந்தப் பாவங்கள் அத்தனையும் இலங்கைச் சமூகத்தினால் வளர்க்கப்படுகிறது. குறைந்த பட்சம் வளர்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. எனவே பாவங்களின் ஒழிப்பு என்பது வெறும் பாவங்களுக்கு எதிரான போராட்டமல்ல. அது மதஒதுக்கல் சிந்தனைக்க எதிரான போராட்டம். அது முதலாளித்து அரசியல் மற்றும் சடவாத சமூகக்கட்டமைப்புக்கு எதிரான போராட்டம்.
இன்று பாவங்களின் தாயாக விளங்கும் மதஒதுக்கல் முதலாளித்து மற்றும் சடவாதச் சிந்தனைகளும் அச்சிந்தனைகளைக் கொண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட சமூகக் கட்டமைப்புகளும் என்பதனை நாம் உணரவேண்டும்.

இன்று பத்திரிகைகள், வானொலி, டீவி, இன்டர்நெட், சினிமா, டீவிகேம்ஸ் மற்றும் எமது பல்கலைக் கழகங்கள் போன்றவை மதஒதுக்கல் முதலாளித்துவ சடவாதச் சிந்தனைகளை பிரதிபலிப்பதுடன் அச்சிந்தனைகளை பாதுகாப்பதற்கு அரசியல் மற்றும் சமூக நிறுவனங்கள் மக்கள் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் வெறும் ஊடகங்களாகும்.

இன்று எல்லா முஸ்லிம்களுக்கும் போதைப்பொருள் பாவனை அல்லது விபச்சாரம் ஹறாம் என்பதும் அது ஈருலக வாழ்வையும் நாசமாக்கும் என்பதும் தெரியும். இருந்தும், எம்மில் சிலர் இப்பாவங்களில் ஈடுபடுகின்றனர். இது குறித்து மிம்பர்களில் பேசப்பட்டாலும் பாவச்செயல்கள் ஒழிந்துவிடப்போவதும் இல்லை.

இது இவ்வாறு இருக்கும் போது மற்றொரு பக்கத்தில் இவ்வாறான தவறான சிந்தனைகளால் உந்தப்பட்டு கெட்டுப்போன இளைஞர்கள் இஸ்லாத்திற்கு எதிரான மேலைத்தேய கலாச்சார யுத்தத்தினால் காயப்பட்டவர்கள். இவர்களுக்கு வெறும் புத்திமதி கூறல், பயங்காட்டல் அவர்களது பழங்க வழக்கங்களில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போவதும் இல்லை.

இந்த அடிப்படையை உணர்ந்து நாம் இன்றைய இஸ்லாத்திற்கு எதிரான கலாச்சார மோதல்கள் பற்றி தெளிவாக உணர்ந்து மேலைத்தேய சிந்தனைகளில் இருந்து எமது இளைஞர்களையும் யுவதிகளையும் பாதுகாப்பதுடன் அது இஸ்லாமிய சிந்தனைகளுக்கு எந்தளவு அச்சுறுத்தலானது என்பன பற்றிய அறிவூட்டல் வழங்க வேண்டும்

Oct 7, 2013

ஈழப் போராட்டத்தின் பெயரில் அகதியாக்கப் பட்ட 'சோனி 'எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து ... (PART 5)



இனவாதம் தலையில் ஏறி சிங்கள சிவிலியன் வாழ்வின் மீதும் அத்து மீறியதன் பின்னால் தமிழர் போராட்டம் தரமிழந்து போனதை வட ,கிழக்கு மாகாண முஸ்லீம்கள் உணர்ந்து கொண்டனர் .இன்னும் அந்த ஈழப் போராட்டத்தை ஈனர் போராட்டமாக மாற்றிய ஆரம்ப நிகழ்வு 1990 அக்டோபரில் நிகழ்ந்தது .

அது தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் வாழ்ந்த பூர்வீக குடிகளான முஸ்லீம் சமூகத்தை பலாத்கார வெளியேற்றம் செய்ததாகும். கேட்கப் பார்க்க ஆள் இல்லாவிட்டால் எதையும் செய்வானாம் என்பதுபோல் விடயங்கள் நடந்தன .

'செக் பாயிண்ட் ' போட்டு உள்ளதை பிடுங்கி "இதெல்லாம் ஈழத்தின் சொத்து " என வீர வசனம் பேசி பகல் கொள்ளைக்கு 'பொலிடிகல் ' நியாயம் சொன்னது எனக்கும் என் சமூகத்துக்கும் அதிர்ச்சி அளித்தது .உலகமும் கண்டுகொள்ளவில்லை .

ஏதோ மாமியார் வீட்டில் இருந்து மருமகளை விரட்டியது போலவே லண்டன் B .B .C யும் செய்தி வாசித்ததாக பின்னாளில் என் நண்பன் சொன்னான் .

பின்பொருமுறை வேலுப்பிள்ளை பிரபாகரன் லண்டன் B .B .C யில் "நேரம் வரும்போது முஸ்லீம்களை மீள அழைப்போம் " எனக் கூறியபோது , 'டிவோர்ஸ் ' விடயத்தை 'கவுன்சிலிங் ' போட்டு முடித்த திருப்தியில் வடமாகாண முஸ்லீம்களை ஏதோ LTTE வீட்டு பொண்டாட்டி போல ஆக்கப் பார்த்தார் B .B .C யின் சங்கர் அண்ணா !

அப்போது ஒரு உண்மை எனக்கு தெளிவாக புரிந்தது . அது தம்பியின் காட்டு தர்பார் இலங்கையில் இருக்க அதற்கு அண்ணரின் அரசியல் நியாயப் படுத்தல் லண்டனில் இருந்து ஒலிக்கிறது என்ற உண்மையாகும் .கடைசிவரை வடக்கு ,கிழக்கு முஸ்லீம் விவகாரம் ஒரு இனத்துடைப்பாக ,இன ஒடுக்கு முறையாக நோக்கப்படவே இல்லை .

நிவாரணப் பிண்டங்களாகவே முஸ்லீம் உலகினாலும் நோக்கப்பட்டோம் . அகதி என்ற வார்த்தை எம்மைப் பார்த்து உச்சரிக்கப் பட்டபோது நெஞ்சம் வலித்தது .வெறும் இரண்டு மணி நேரத்தில் முஸ்லீம் சிவிலியன்களை அநியாயமாக கையேந்திகளாக மாற்றிய சாதனைக்காக ஈழத் தாய் கோழி அடித்து விடுதலைப் புலிகளுக்கு சாப்பாடு போட்டிருப்பாளோ இல்லையோ ,சமாதியில் இருக்கும் சேர் ! பொன்னம்பலம் இராமநாதன் திருப்தி அடைந்திருப்பார் . எப்படி ?

1915 ஆம் ஆண்டு சிங்கள முஸ்லீம் கலவரத்தின் போது சேர் ! பொன்னம்பலம் இராமநாதன் முழுக்க முழுக்க சிங்களவர்களுக்கு சார்பாக முஸ்லீம்களுக்கு எதிராக பரிந்துரைத்தார் . இந்த வரலாற்றுப் போக்கில் இரு பேரினங்களும் முஸ்லீம் எதிர்ப்பில் தெளிவான உறவைக் கொண்டுள்ளன . இந்த கசப்பான முஸ்லீம் எதிர்ப்புணர்வு பிரபாகரனுடைய மரபணுவிலும் கலந்து போனது ஒன்றும் ஆச்சரியமில்லை .

(இன்ஷா அல்லாஹ் தொடரும் )

Oct 2, 2013

உங்களிற்கு தெரியுமா? “புலிப்பயங்கரவாதத்தை அழிக்க உதவிய பீ.ஜே.பி. பயங்கரவாதிகள்”





திடீர் தமிழ் இன உணர்வாளர்கள் பலர், நரேந்திர மோடியை ஆதரிக்கும் பொழுதே அவர்களது சாயம் வெளுத்து விடுகின்றது. மோடியை பிரதமராக்கத் துடிக்கும் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தான், புலிகளின் அழிவு ஆரம்பமாகியது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தோல்வியின் விளிம்பில் நின்ற சிங்கள இராணுவத்திற்கு உதவும் நோக்குடன், "இந்தியர்களின் ஜென்ம விரோதியான" பாகிஸ்தானுடன் இரகசியமாக ஒத்துழைத்த கதை யாருக்குத் தெரியும்?

2000 ம் ஆண்டு, புலிகள் திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தி, யாழ் குடாநாட்டின் பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். ஸ்ரீலங்கா படையினர் புறமுதுகிட்டு ஓடிக் கொண்டிருந்தனர். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சாவகச்சேரி பகுதியும் பறிபோன பின்னர், ஸ்ரீலங்கா அரசு இந்தியாவின் உதவியை நாடியது. மரணப் பொறிக்குள் சிக்கிய படையினரை காப்பாற்றுவதற்காக, அன்றைய பாஜக அரசு வியூகம் வகுத்தது. இந்திய இராணுவத்தை அனுப்பி, சிங்களப் படையினரை வெளியேற்ற இருப்பதாக அறிவித்தது. அது புலிகளை ஏமாற்றுவதற்கான, பாஜக அரசின் சூழ்ச்சி என்பது சில நாட்களில் தெரிய வந்தது.

ஈழப்போரில் அதுவரையில் பாவிக்கப் படாத நவீன ஆயுதமான, பல்குழல் பீரங்கிகள் பாகிஸ்தானில் இருந்து வந்திறங்கின. ஒரு மீட்டர் இடைவெளி விடாமல், சீறிப் பாய்ந்து வந்த ராக்கட் தாக்குதல்களுக்குள் நின்று போரிட முடியாத, புலிகளின் படையணிகள் பின்வாங்கிச் சென்றன. யாழ் குடாநாடு மீண்டும் சிறிலங்காப் படைகளின் வசம் வந்தது. இதிலிருந்து பல உண்மைகளை புரிந்து கொள்ளலாம். ஸ்ரீலங்கா அரச படைகளின் தோல்வியையும், புலிகளின் தமிழீழ வெற்றியையும் பாஜக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த விஷயத்தில், அதற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எந்தவொரு கொள்கை முரண்பாடும் இருக்கவில்லை.

இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில், புலிகளின் பலம் மேலோங்கி இருந்தது. ஸ்ரீலங்கா படையினர் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர். 2000 ம் ஆண்டு, அதிசயப் படத்தக்க வேகத்துடன் தாக்குதல் நடத்திய புலிகள், ஸ்ரீலங்கா படையினர் வசம் இருந்த ஒட்டுசுட்டான், மாங்குளம் போன்ற வன்னிப் பகுதிகளையும், நாவற்குழி, சாவகச்சேரி போன்ற யாழ் குடாநாட்டின் பகுதிகளையும் சில நாட்களுக்குள் கைப்பற்றினார்கள்.

யாழ் குடாநாடு முழுவதும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தால், அன்றே தமிழீழம் பிரகடனம் செய்திருப்பார்கள். அன்றிருந்த சிங்களப் படைகள், யுத்தம் செய்யும் மன நிலையில் இருக்கவில்லை. தப்பினோம், பிழைத்தோம் என்று நாலாபுறமும் சிதறி ஓடிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தருணத்தில் தலையிட்டு, புலிகளை மேற்கொண்டு முன்னேற விடாது தடுத்த சக்தி எது தெரியுமா? இந்தியாவில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு தான் முடிவை மாற்றி எழுதியது. புலிகள் யாழ் குடாநாட்டை விட்டு வெளியேறா விட்டால், இந்திய இராணுவத்தை அனுப்பப் போவதாக எச்சரித்தது.

2000 ம் ஆண்டு, சாவகச்சேரி போரில் இடம்பெயர்ந்தவர்கள் என்னிடம் தெரிவித்த வாக்குமூலத்தில் இருந்து:

//பூநகரியில் இருந்து கேரதீவு, சங்குப்பிட்டி வழியாக ஊடுருவிய புலிகளின் படையணிகள், திடீர் தாக்குதல் மூலம், நாவற்குழி, கைதடி ஆகிய இடங்களை கைப்பற்றினார்கள். புலிகள் மட்டுவில் வரையில் வந்து விட்டனர். சாவகச்சேரி நகர எல்லையில் அமைந்த வயல் பகுதியில், திடீரென குவிக்கப்பட்ட இராணுவத்தினர் ஆட்டிலெறி பூட்டிக் கொண்டிருந்தார்கள். அவற்றைக் கண்ட மக்கள் ஏதோ ஒரு பெரிய போர் வரப் போகின்றது என்று நினைத்து வீடுகளை விட்டு வெளியேறினார்கள்.

சில நாட்களில் புலிகள் சாவகச்சேரி நகர்ப் பகுதிக்கும் வந்து விட்டார்கள். சிங்களப் படையினர் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு படையினர் முகத்திலும் கிலி தென்பட்டது. படையினர் நாலாபக்கமும் சிதறி ஓடிக் கொண்டிருந்தார்கள். சிலர் பொது மக்களின் சைக்கிள்களை பறித்துக் கொண்டு ஓடினார்கள். அப்போது சில அந்நிய நாட்டவர்கள் தோன்றி, ஸ்ரீலங்கா படையினரை பின்வாங்க விடாமல் தடுத்தார்கள்.

ஆனாலும், சாவகச்சேரி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது. ஸ்ரீலங்கா படைகள் கொடிகாமம், பளை ஆகிய இடங்களில் நிலை கொண்டிருந்தனர். அப்போது போர் தற்காலிகமாக நின்றிருந்தது. யாழ் குடாநாட்டிற்குள் புலிகளின் முற்றுகைக்குள் சிக்கிய படைகளை வெளியேற்ற சம்மதிப்பதாக இந்தியா அறிவித்தது. இதனால், விரைவில் யாழ் குடாநாடு முழுவதும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வந்து விடும் என்று புலிகள் நம்பினார்கள்.

ஆனால், அந்தக் கால அவகாசம், பாகிஸ்தானில் இருந்து மல்ட்டி பரல் ராக்கெட் வருவதற்காகத் தான் என்பது அன்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அப்போது சாவகச்சேரி பகுதியில் பொதுமக்கள் யாரும் இருக்கவில்லை. புலிகள் மட்டுமே நின்று கொண்டிருந்தார்கள். இராணுவத்தினரின் பல் குழல் பீரங்கிகள் ஏவிய ராக்கெட்டுகள், ஒரு மீட்டர் இடைவெளி விடாமல் வந்து விழுந்தன.

ஒரு குறிப்பிட்ட பகுதியில், ஒரே நேரத்தில் பல குண்டுகள் வந்து வெடித்தன. சாவகச்சேரியில் இருந்த கட்டிடங்கள், வீடுகள் எல்லாம் தரை மட்டமாகின. அதற்குள் சிக்கிக் கொண்ட பொதுமக்கள் யாருமே உயிரோடு தப்பவில்லை. அப்படியான சூழ்நிலையில், புலிகள் அங்கே நிற்பதானது கூட்டாக தற்கொலை செய்வதற்கு ஒப்பானது. அதனால், யாழ் குடாநாட்டை பிடித்த புலிகளின் படையணிகள் வந்த வேகத்தில் திரும்பிச் சென்றன.//

இந்தியாவில் அன்று ஆட்சியில் இருந்த பாஜக அரசு, புலிகளின் மகத்தான வெற்றியை அனுபவிக்க விடாமல் தடுத்தது. நவீன ஆயுதமான மல்ட்டி பரல் ராக்கெட்டுகளை பாகிஸ்தான் தான் கொடுத்தது. ஆனால், அது இந்திய அரசின் ஒப்புதல் இன்றி நடந்திருக்க முடியாது. அன்று புலிகள் மல்ட்டி பரல் தாக்குதலை சமாளித்து நின்றிருந்தாலும், அடுத்த கட்டமாக இந்தியப் படைகளை இறக்குவதற்கு ஆலோசிக்கப் பட்டது. பாஜக அரசு அனுப்பும் இந்திய இராணுவம் வந்திறங்கி இருந்தால், (2009 ல் முடிந்த) இறுதிப் போர் அப்போதே நடந்திருக்கும். பிரபாகரன் கூட தனது மாவீரர் தின உரையில் அதனைக் குறிப்பிட்டு இருந்தார். இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே யாழ் குடாநாட்டில் இருந்து வெறியேற வேண்டி இருந்த உண்மையை ஒப்புக் கொண்டார்.

மோடியை ஆதரிக்கும் "சமூக உளவியலும்", ராஜபக்ஷவை ஆதரிக்கும் "சமூக உளவியலும்" ஒன்று தான். இரண்டுமே சிறுபான்மையினத்திற்கு எதிரானவை. மோடியை ஆதரிக்கும் இந்து பேரினவாதிகளுக்கும், ராஜபக்ஷவை ஆதரிக்கும் சிங்கள பேரினவாதிகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? இந்து பேரினவாதிகளுக்கு முஸ்லிம் இனப்படுகொலை ஒரு பொருட்டல்ல. சிங்கள பேரினவாதிகளுக்கு தமிழ் இனப்படுகொலை ஒரு பொருட்டல்ல.

புலிகளின் அழிவுக்கு சுழி போட்ட, பாஜக வின் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரிக்கும் ஒருவர், உண்மையான தமிழ் இன உணர்வாளராகவோ, அல்லது புலி ஆதரவாளராகவோ இருக்க முடியாது. அவர்கள் அணிந்திருக்கும் தமிழ் முகமூடி, என்றோ ஒருநாளைக்கு கிழியும் என்பது எதிர்பார்த்தது தான். அவர்களது தமிழ் இன உணர்வு வாய்ச் சவடால்கள் எல்லாம் மோடி பிரதமராகும் வரையில் தான். அதற்குப் பிறகு ராஜபக்சவுடனும் சொந்தம் கொண்டாடுவார்கள்.

நன்றி :- கைபர் தளம்

Sep 27, 2013

ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி 'எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து .....(PART 03)



'சோனி' ,காக்கா , முக்கால் , தொப்பி பிரட்டி ,என்ற காரண இடுகுறிப் பெயர்களால் அனேகமாக வடபகுதி தமிழர்களால் அழைக்கப்படும் முஸ்லீம்கள் அந்த 1990 அக்டோபர் மாதம் தமது பூர்வீக வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக விடுதலைப் புலிகளால் விரட்டப் பட்டனர் .

இந்த இனத்துடைப்புக்கு புலிகள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை காரணம் சொன்னார்கள் .முஸ்லீம்கள் துரோகிகள் ! காட்டிக் கொடுத்தார்கள் என்றார்கள் ! இந்தக் காரணங்கள் எனக்கு சரியானதாக புரியவில்லை . ஏதோ ஒன்று இடித்தது ?

வட தமிழ் ஈழ எல்லையையும் தென் தமிழ் ஈழ எல்லையையும் பற்றி புரியாமல் , மகசீன் , கொகிங்காண்டில் , பிஸ்டல் கிரிப் , ரிகர் ,எ ய் மின்மர் , பரல் என்ற எல்லைக்குள் நின்று கிளஸ் நிகோ ரைபிளை ஏதோ ஈழம் பெற்றுத்தரும் 'டூளாக' நம்பிக் கொண்டிருக்கும் அவர்களது போராளிக்கே தெரியாத விடயம் அது . எனக்கும் என் சமூகத்துக்கும் மட்டும் எப்படித் தெரியும் !?

ஆழ்ந்த சிந்தனையோடு ஈழப்போராட்டத்தின் ஆரம்ப பொழுதுகளை ,அதாவது விடுதலைப் புலிகளின் பாசையில் சொன்னால் முதலாம் கட்ட ஈழப் போருக்குள் நுழைந்தேன் ....

'தந்தனத்தோம் என்று சொல்லியே ... ' என்று ஆரம்பிக்கும் வில்லுப்பாட்டு அனேகமாக எல்லோருக்கும் தெரியும் . விடுதலைப் புலிகளும் ஒரு வில்லுப்பாட்டு ஒலி நாடாவை 1980களில் வெளியிட்டனர் .புராணங்களையும் ,இதிகாசங்களையும் ,ஆன்மீக விளக்கங்களையும் வில்லுப்பாட்டாக கேட்ட தமிழ் மக்களுக்கு இந்த புலிகளின் வில்லுப்பாட்டு சுவையாகவும் ,வித்தியாசமாகவும் இருந்தது .

தமிழ் ஈழம் சம்பந்தமாக சிந்தாந்த விளக்கம் அதில் இருக்கவில்லை . தாக்குதல் , வெறியூட்டல் சம்பந்தமாகவே அந்த அழைப்பு இருந்தது .இலங்கை இராணுவத்தின் மிக கீழ்த்தரமான வன்முறைகள் இத்தகு கள நிலவரத்தை விரும்பும் நிலையில் தமிழ் மக்களை ஆக்கியிருந்தது .

அந்த வில்லுப்பாட்டில் இருந்து வரும் ஒரு கட்டம் இப்படி இருந்தது .புலிகளின் ஒரு கண்ணிவெடி தாக்குதல் சம்பவத்தை அது இவ்வாறு சொன்னது ..." பிரிகேடியர் ஆரிய பெருமா ஆருயிர் என்று அறியாத நிலையில் வாகனத்தோடு பதினைந்து அடி உயரம் வரை எழுந்து கீழே விழுந்து மாண்டு போனார் " என்ற வசன வரிகள் தமிழ் மக்களை புல்லறிக்க வைத்தது.

ஒரு சிங்கள இராணுவ பிரிகேடியரை சிதற அடிக்கும் தரத்தில் பொடியன் மார் வந்துள்ளனர்! என்ற பெருமிதம் மறுபக்கத்தில் இலங்கை அரசு' பபலோ' கவச வாகனங்களை கொள்வனவு செய்ய தென்னாபிரிக்காவோடு

ஒப்பந்தம் போடப்போகும் யுத்த அரசியல் பற்றி உணர மறுத்தது .இத்தகு பிரச்சார உத்திகளை கொண்டு ஆதரவு ,மற்றும் நிதி தேடும் பலத்த போட்டி அப்போது நிலவியது .

LTTE,TELO,PLOT,EPRLF, EROS, TELA, போன்ற பல இயக்கங்கள் இருந்த அந்த காலப்பகுதியில் TELO இயக்கம் பல படிகள் முன்னேறி சாவகச்சேரி போலீஸ் விசேட அதிரடிப்படை முகாம் மீதான தாக்குதலை வீடியோ பிரதியாக வெளியிட்டது .

ஆங்கில சினிமாவில் மட்டுமே யுத்தம் பார்த்த தமிழர்களுக்கு அதில் வரும் கதாநாயகர்கள் போல் போராளிகள் மாறிக்கொண்டிருந்தனர் . ஆனால் தாம் 'இரத்தக் காட்டேரிகளை , வளர்க்கிறோம் என்பது புரிய வெகுகாலம் எடுக்கவில்லை .

இந்த சூடான இரத்தத்தில் இலாப அறுவடைகளை ஏகாதிபத்திய முதலாளித்துவம் பக்குவமாக பெற்று வந்தது .எப்படி ? இந்த

ஈழத்தின் பெயரில் எழுந்த யுத்த பிரபுத்துவ சாம்ராஜியத்தில் முஸ்லீம் மட்டும் இவர்கள் குறிவைத்துப் பழகும் சராசரி இலக்காக எப்படி மாறினான் ! ?
அடுத்த பதிவில்
இன்ஷா அல்லாஹ் சொல்கிறேன். ( இன்னும் வளரும்...)

Sep 24, 2013

சிந்திக்க ஒரு சில உண்மைகள்.




கடந்த கால வரலாற்றில் நாம் எதிர்கொண்ட நிகழ்வுகளை ஆய்வு செய்வதன் மூலம் நிகழ் காலத்தின் சில சம்பவங்கள் பற்றிய சரியான கோணத்தை ஊகிக்கக் கூடியதாக இருக்கும் .

விடுதலைப் புலிகளின் முஸ்லீம் எதிர்ப்பு தொடர்பில் இப்போது பேசி என்ன பயன் ? என்பது சிலர் என்முன் வைக்கும் கேள்வியாகும் .நான் இங்கு பேச வருவது ஒரு அடிப்படையான பொதுக் குணகம் பற்றியதே . அதன் ஆதார வடிவமாக விடுதலைப் புலிகள் வருகிறார்கள் .ஆனால் விடயம் அவர்களோடு மட்டும் மட்டுப் படுத்தப் பட்டதல்ல .

முஸ்லீம் எதிர்ப்பு என்பது முழு உலகின் பொது விதி ஆக வடிக்கப்பட்டு விட்டது . அவன் தன் சுய வடிவம் சுயநிலை மறந்து உலகின் போக்கில் தன்னை இணைத்துக் கொள்ள நினைத்தாலும் ஒரு பிரிகோட்டு அடையாளம் அவனை எப்படியாவது வேறுபடுத்துகிறது ! அது ஏன் ? என்ற கேள்வியை ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் கேட்கவேண்டும் .

தனக்கான வாழ்வியலை தான் விரும்பியவாறு தானே தீர்மானிக்கும் உரிமையை முஸ்லீம் முற்றாகவே இழந்தவன் . அவனின் நடத்தைகளை 100% இறை வஹியே அமைத்துத் தரவேண்டும். என்ற பிரதான நிபந்தனையின் பேரிலேயே அவன் முஸ்லிம் ஆகிறான் . இந்த உண்மை முஸ்லீம்களால் உணரப்படாத வரை மனித அடிமை ஆதிக்க அரசியலை விட்டும் அவனுக்கு விடுதலை இல்லை . தாகூத்களின் கெடுபுடிகளும் ஓயப்போவதில்லை .

இனவாதம் ,மதவாதம் ,நிறவாதம் ,வர்க்க வாதம் ...இப்படி தான்தோன்றித் தனமான வழியிலேயே அதிகாரங்கள் சுயநலமிக்க இழிவான அரசியலை உலகில் செய்துகொண்டிருக்கிறார்கள் .அந்த வகையில் மனித நடத்தைக்கான இயங்கு விதி என்பது மனித ரூபத்தில் ஒரு கொடூரமான பேசும் விலங்குகளின் கையில் ஒப்படைக்க்கப் பட்டுள்ளது . அவை தீர்வு தரும் என்ற தவறான பார்வை முஸ்லிமையும் விட்டுவைக்கவில்லை .

குப்ர் தனது சுய நலத்திற்காகவே சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் வரையறுத்துள்ளது .சுதந்திரம் என்ற போலி நாடகத்தின் பெயரில் ஏகாதிபத்தியங்ளின் நவ காலணிகளை, தேசியம் என்ற கௌரவ சிறைச்சாலை வடிவில் திறந்து விட்டபோது, அதன் பொது இயல்பான பிரித்தாளும் கொள்கையின் கீழான இன, மத , குல ,கோத்திர ரீதியான மோதல்களும் அதில் உள்ளடக்கப் பட்டு விட்டது .

ஏகாதிபத்தியங்களின் இந்த பிரித்தாளும் விதிக்குள் இருந்து மனித சமூகம் தனது தீர்வுகளை தேடுவது நிச்சயமாக ஒரு தெளிவான தற்கொலை அரசியலே ஆகும் .அனேகமாக இங்கு அவர்களின் உச்ச பயன்பாட்டு அடிப்படையில் இயங்க விடப்படல் என்ற பிடி கயிறு சிலபோது சிலரை தனிப்பெரும் 'சண்டியர்களாக' காட்டி நிற்கும் .

அழித்தல் ,ஒடுக்குதல் , வரம்பு மீறுதல் , என்ற கோரமான ஒரு தற்காளிக பாத்திரத்தை ஏற்படுத்துவதன் மூலம் இவர்கள் சில காலம் விட்டு வைக்கப் படலாம் .விடுதலைப் புலிகளுக்கும் நடந்தது இதுதான் .இன்னும் சிலருக்கு நடக்கப் போவதும் இதுதான் .

பிராந்திய ஆதிக்கத்திற்கான வளம் மிக்க ஒரு தேசிய சிறைச்சாலை இலங்கை .பாத்திரங்களையும் ,சூழ்நிலைகளையும் காலத்துக்கு காலம் மாற்றுவதன் ஊடாக முதலாளித்துவ மேலாதிக்கங்கள் ஒரு போட்டிச் சந்தையாக இலங்கையை பயன் படுத்திப் போகிறார்கள் . இதை குறிப்பாக முஸ்லீம்கள் உணர வேண்டும் .

ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி 'எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து .....(PART 02)




அந்த அக்டோபர் 1990 இலங்கையின் வடபுலத்தில் வாழ்ந்த ஏறத்தாழ 120000 முஸ்லீம்களுக்கு ஒரு கசப்பான அத்தியாயத்தை தொடக்கி வைத்தது . தமிழீழ விடுதலைப் புலிகள் அந்த முஸ்லீம்களை அவர்களது பூர்வீக வாழ்விடங்களில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றியது இந்த அக்டோபர் மாதத்திலே தானாகும் .ஒரு தெளிவான இனத்துடைப்பின் வடிவம் பக்குவமாக அரங்கேற்றப் பட்டது .

யாழ்ப்பாணம் ,மன்னார் ,முல்லைத்தீவு ,சாவகச்சேரி போன்ற முக்கியமான முஸ்லீம் குடிசன செறிவுமிக்க பகுதிகள் முதல் பட்டி தொட்டி எங்கும் தேடித்தேடி முஸ்லீம்கள் விரட்டப் பட்டனர் ! சில நாள் அவகாசத்திலும் , ஒரு நாள் அவகாசத்திலும் , இரண்டு மணிநேர அவகாசத்திலும் முஸ்லீம்கள் ஆயுத முனையில் வெளியேறப் பணிக்கப் பட்டனர் .

விடுதலைப் புலிகளின் இந்த நடவடிக்கை எதேச்சையான ஒன்றாக எனக்குப் படவில்லை .ஏறத்தாழ 65000 முஸ்லீம்கள் வாழ்ந்த மன்னாருக்கு 5 மணிநேர அவகாசம் கொடுக்கப் பட்டது . அத்தோடு எடுத்துச் செல்லும் பொருட்களின் அளவு வரையறுக்கப் படவில்லை . அதே நேரம் 15000 முஸ்லீம்கள் வாழ்ந்த யாழ்பாணத்துக்கு 2 மணிநேரம் மட்டுமே கொடுக்கப் பட்டது ! அத்தோடு 'சொப்பிங் பாக்கில் ' சில உடுப்புகளும் 200 அல்லது 300 ரூபாய் பணமும் தவிர கலட்ட முடியாத மோதிரம் கூட வெட்டி எடுக்கப் பட்டது ! யூதப் பாணியிலான இந்த நடவடிக்கை ஏன் !? இத்தகு கேள்விகளோடு கடந்து போன அந்தக் காலத்தினுள் எனது நினைவுக் குதிரையை தட்டிவிட்டேன் .....

இறுகிய முகத்தோடும் 'துப்பாக்கி சேம்பரில் ' ஏற்றிய 'தோட்டாவை எம்மீது துப்ப ஒரு சந்தர்ப்பம் வராதா ? என்ற ஏக்கத்தோடும் அந்த பாசிசக் கும்பல் நாம் வெளியேறக்கூடிய அணைத்து சந்திகளிலும் காவலரண் போட்டு எம்மை கொள்ளையடித்துக் கொண்டிருந்தது . குழந்தையின் பால் போத்தல் முதல் , வயதானவர்களின் வெத்திலைப் பெட்டிவரை ஒரே கண்ணோட்டமே அவர்களுக்கு இருந்தது .

சாதீயம் தலைக்கேறிய அந்த தமிழ் சமூகத்தில் சிற்சில நடவடிக்கைகள் தவிர வாழ்வியல் ஒழுங்கில் பெரிய மாற்றம் அவர்களோடு எமக்கு இருக்கவில்லை. 'அல்ஹம்துலில்லாஹ் ' எதோ ஒரு ஓரத்தால் ஒரு வேற்றுமை எம்மில் இருந்து எட்டிப்பார்த்தது ! அது எம்மில் இருந்த ஈமான் என்றால் மிகையான கருத்தல்ல .

இந்த நிகழ்வுகளுக்கு சில காலங்களுக்கு முன் இந்த பாசிசப் புலிகள் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற சாதீய அடையாளத்தை எம்மீது திணிக்க வந்தபோது எதிர்த்தோம் . நாம் தமிழ் பேசும் முஸ்லீம்கள் என்ற விடயத்தை அழுத்திச் சொல்லி விடாப்பிடியாக நின்றோம் .

அப்போது சரணடைந்து இருந்தால் சிலவேலை புலி நகத்துக்கு 'பாலிஸ் 'போடும் வேலையும் ,மனித சதை படிந்த அந்த கொடிய பற்களை துலக்கிவிடும் வேலையும் , இன்னும் சிலநேரம் அந்தப் புலிகளின் அதை .. கழுவிவிடும் வேலையும் அந்த காட்டுத் தர்பாரில் சிலகாலம் கிடைத்திருக்கலாம் .நாங்கள் எங்களை சத்தியத்தால் மட்டுமே அடையாளப்படுத்த இடம் கொடுத்தோம் .

அந்த இரண்டு மணிநேரம் பல ஆச்சரிய சம்பவங்களை சொல்லிப் போனது . தமிழ் 'யோனிக்காக ' போய் கலப்புக் குடும்பம் கட்டிவாழ்ந்த சோனகனுக்கும் ஈமான் வந்தது ! கள்ளுத் தவறணையில் தமிழனோடு 'பாட்னர் சிப் ' போட்டு பருகினவனுக்கும் ஈமான் வந்தது !

" நல்லூரில் முஸ்லீம் உம்மத்து வாழ்ந்தபோது குடிநீர் கிணற்றில் பன்றி வெட்டிப்போட்டு துரத்தினான் " என பழைய வரலாற்றை பாட்டன் சொன்ன போது நம்ப முடியவில்லை . ஆனால் முல்லிய வாய்க்காலில் மூளை சிதறி மாண்ட வேங்கையின் கட்டளையில் பல விடயங்கள் தெளிவாகப் புரிந்தது .

எம்மில் யாரும் பொட்டு வைத்து வீபூதி பூச தயாராக இருக்கவில்லை ! பிள்ளையாரை ,முருகனை , இயேசுவை கும்பிட தயாராக இருக்கவில்லை ! பல அழுக்குகள் படிந்திருந்தும் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம் என்ற தெளிவான முடிவோடு எஞ்சியிருந்த ஈமானுக்காகவே அகதியானோம் .

(இன்ஷா அல்லாஹ் இன்னும் வளரும் )

Sep 23, 2013

ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப் பட்ட 'சோனி ' எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து .......(PART 01)




ஒரு ஆறாத காயமாய் ஆகிவிட்ட அந்த அக்டோபர் 1990 களின் நினைவுகள் எப்போதும் என் விழி ஓரத்தில் ஒரு துளி கண்ணீரை விட்டுச் செல்வது தவிர்க்க முடியாதது .கலீல் ஜிப்ரான் போல் அந்த ஆழமான சோகத்தை ஒரு கவிதையில் வடித்து விடும் புலமை எனக்கில்லை . அந்த இரண்டு மணிநேரம் ..... பிறந்து வளர்ந்து உணர்வுகளோடு உறவாடிய அந்த பூமியை விட்டும் சென்று விட வேண்டுமாம் ....

அந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நடந்த அந்த சம்பவங்கள் என்னை விட்டு விலக மறுத்தன .நிர்ப்பந்த வெளியேற்றம் மூலம் கிடைத்த அகதி அந்தஸ்து போல விடாப்பிடியாக இருந்தது ! ஒரு தேசிய விடுதலை என்ற சுய அழிவு வன்முறை அரசியல் பலரது அர்த்தமற்ற தியாகங்களில் சிலரது சுயநலத்துக்காக பயன்பாட்டுப் போனது .இந்த விடயத்தை ஒரு சராசரி மனிதனாக இருந்து என்னால் பார்க்க முடியாது ஏனென்றால் நான் முஸ்லிம் .

"தாயின் மடியில் ஆடும் கால்கள் துள்ளி ஓடி வரும் பூவின் விரல்கள் குதிரை மீட்ட பயணம் தொடங்கி விடும் .... ஏங்கிடும் துவக்கு வீழ்ந்திடும் முன்னே புதுக்கரங்கள் அதை ஏற்கும் ..." என்ற விடுதலைப் புலிகளின் பாடல் போலவே 'ஹிட் அண்ட் ரன்னில் ' தொடங்கிய சிறுபிள்ளைதனமான இராணுவக் கலாச்சாரம் பக்தி பூர்வமாக அவர்களால் கட்டி வளர்க்கப் பட்டது .காட்டும் இலக்கை நோக்கி கண் மண் தெரியாமல் சுட்டால் ஈழம் கிடைத்துவிடும் ! என்ற அர்த்தமற்ற நம்பிக்கையில் சிறுவர் போராளிகள் முதல் பலர் களமிறக்கப் பட்டிருந்தனர் .

அலறி மாளிகை முதல் செங்கோட்டை வரை மட்டுமல்ல பாகிஸ்தான் முதல் வாசிங்டன் வரை இந்த சூடான இரத்தத்தில் சுகம் கண்டனர் ! இஸ்ரேல் முதல் சீனாவரை இந்த படுகொலை வியாபாரத்துக்கு பங்காளி ஆகினர். எதிலும் இலாபம் என்ற முதலாளித்துவ 'மாபியா ' அரசியலில் மனித உயிர்கள் முழு உலகத்தைப் போலவே இலங்கையிலும் மதிப்பிழந்து போனது ஆச்சரியமில்லைதான் .அர்த்தமற்ற இந்த அயோக்கியத் தனத்தில் வலுக்கட்டாயமாக முஸ்லீம் உம்மத்தும் முடிச்சுப் போடப்பட்டது .

'துவக்கு துவக்கு துவக்குப் போரை துவக்கு துவக்கு ..' என அரசியல் மேடைகளில் தூபமிட்டவர்கள் 'பார்லிமென்ட் பொலிடிக்ஸில் ' பக்குவமாய் 'பொசிசன் ' எடுத்துக் கொண்டனர் ! இந்த ஏமாற்றம் கண்டு நீண்டு வளர்ந்த துரோகிகள் 'லிஸ்டோடு' கொலைக் கலாச்சாரம் கொடிகட்டிப் பறந்தது . 'இவர்களை மண்டையில் போடுவதால் தமிழீழத் தாய் புன்சிரிப்பாள் ' என்ற புது மொழியோடு 'சோனியை '(முஸ்லிமை ) GUN பொயிண்டில் இம்சிப்பதால் தமிழீழத் தாய் பேரானந்தம் அடைவாள் !? என்ற வரிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டது மிகப் புதுமையானது !

'கேட்டது தமிழ் ஈழம் கிடைத்தது ஜப்பான் JEEP ! ' என துரையப்பாவுக்கு சொன்ன தமிழ் போராளிகளும் ,அந்த முதலாளித்துவ சதுரங்கத்தில் 'சோசலிசத்' தமிழ் ஈழம் ! என பொய்க்கால் குதிரை ஓட்டிய தோழர்களும் , நேற்று இவர்களால் ' கிளைமோர் ' வைக்கப் பட்ட ஆமிக்காரன் 'டிபென்டரில் ' வந்து SCOT கொடுக்க இன்று ஜப்பான் கார்களில் போவதும் ,போதாக் குறைக்கு ஆட்சிக் கதிரைக்காக அடிபுடிப் படுவதும் . துரோகத்தின் வரைவிலக்கணம் பற்றி மீண்டும் இவர்களுக்கு சந்ததியாரும் , உரும்பிராய் சிவகுமாரனும் வந்து வகுப்பெடுக்க வேண்டும் போல்தான் இருக்கிறது .ஆனால் இவர்களால் பலவந்தமாக சொந்தமண்ணில் இருந்து விரட்டப்பட்ட நான் மட்டும் அன்றிலிருந்து இன்று வரை விடாப்பிடியாக முஸ்லிமாகவே இருக்கிறேன்.


(இன்ஷா அல்லாஹ் தொடரும்...)

http://khandaqkalam.blogspot.ae/2013/09/part-01.html?spref=fb

Sep 20, 2013

நீங்களும் கப்பல் பார்க்கப் போனீர்களா !?



கொழும்புத் துறைமுகத்தை 'லோகோஸ் ஹோப் ' எனும் கப்பல் புத்தகங்களை சுமந்து ஆல் கடலில் ஒரு அறிவுச் சுரங்க வடிவில் வந்திருக்கின்றது. இக்கப்பல் வருவது இதுதான் முதற் தடவையல்ல .இலவசமாக சென்று ரசித்து புத்தகங்கள் உட்பட பல பொருட்களை கொள்வனவு செய்துவர மக்கள் வெள்ளமும் அலை மோதுகிறது . இந்த முஸ்லீம் உம்மத்தும் நிறையவே செல்கிறது .

முதலில் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் .புத்தகங்களை விற்கும் இலாபத்தை நோக்கமாக வைத்து இந்தக் கப்பல் வரவில்லை அந்த விடயமே ஒரு பக்குவமான முகமூடி ! அது ஒரு அகீதாவின் உருவத்தை நாகரீகம் ,நடத்தை , அபிமானம்,சமூக உதவி என்ற போர்வைக்குள் புகுத்தி பொதுநலன் என்ற வெளிப்பார்வையோடு வந்துள்ளது .

"அவர்கள் வந்தபோது அவர்கள் கையில் 'பைபிள்' இருந்தது . எமது கையில் தேசம் இருந்தது .எம்மை கண்ணை மூடி ஜெபிக்கச் சொன்னார்கள் . பின் கண்ணை திறந்து பார்த்த போது எம் கையில் பைபிள் இருந்தது அவர்கள் கையில் தேசம் இருந்தது ! இந்த ஆபிரிக்கக் கவி வடிவம் ஒரு தெளிவான விடயத்தை குறித்து நிற்கிறது .

முதலாளித்துவ சித்தாந்தம் 'செக்கியூலரிச ' வடிவில் மதத்தையும்
வாழ்வையும் பிரித்து வைத்தாலும் கிறிஸ்தவ மதத்தோடு அதன் பற்றுள்ள பார்வை ,விசுவாசம் மாறவே மாறாது . பரலோகத்தில் இறைவனின் எல்லையை வைத்து விட்டு பூலோகத்தில் எத்தகு வாழ்வையும் வாழலாம் . சர்ச்சுக்குள் சென்று பாவமன்னிப்பு கேட்டால் போதுமானது . பாவச் சுமையை இன்னொருவர் சுமப்பார் !

அற்புதமான இந்த கொள்கை சுயநலம் பிடித்த குள்ள நரிகளின் கழுத்திலும் சிலுவையை தொங்கப் போட்டதில் ஆச்சரியம் இல்லைதான் .இவர்கள் செல்லுமிடமெல்லாம் இந்த கிறிஸ்தவத்தையும் கொண்டு செல்வார்கள் . இந்த மதம் இவர்களது சுயநல வாழ்வில் தலையிடாது .மாறாக தேவைக்கு உதவும். இவர்கள் அடித்தாலும் மறுபக்கம் அணைக்கும் கரமாக இந்த முதலாளிகளுக்கு மதம் 'சப்போர்ட்' ஆகியது .

அரசியல் அற்ற அரசியலும் ,சிலபோது அரசுக்குள் ஒரு அரசாகவும் ! கிறிஸ்தவம் இருக்கும் .உதாரணமாக பண்டைய சிலுவைப்போருக்கும் நவீன 'போஸ்னியா ' WAR இற்கும் இடையில் அரசியலாக அது கிறிஸ்தவர்களை இயக்க வில்லையா !?

இன்னொரு புறம் அரச சார்பற்ற குழுக்கள் மூலம் SOFT HAND வேதங்களாக இந்த கிறிஸ்தவ மதத்தை பயன் படுத்தியே சிந்தனை யுத்தத்தை முழு உலகிலும் ,இஸ்லாத்தின் பூமியிலும் இந்த முதலாளித்துவ வாதிகள் சிறப்பாக முன்வைத்தனர் வென்றனர் . எனவேதான் இவர்களது 'மிசனரிகளுக்கு' இராஜ தந்திர பாதுகாப்பு முழு உலகிலும் சாதாரணமாகவே கிடைத்து விடுகிறது .' ஜெனரல் சீசி ' யும் பரக் ஒபாமாவும் இத்தகு சிந்தனா வடிவத்தில் தான் ஒன்றானவர்கள் .

அப்படி ஒரு கப்பல் தான் நீங்கள் பார்த்து ரசித்து, சிந்தனை வயப்பட கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது . அதாவது 'மிசனறிக் கப்பல் ! சிந்தனை மாற்றத்துக்கான புதிய விதைகளை விநியோகிப்பார்கள். நாம் வீசிவிட்டு சென்றாலும் எங்காவது சிலது முளைக்கும் . முதலாளித்துவ வாழ்வியலுக்கு சாதகமாக . பள்ளி வாசலில் தேசியக்கொடி ஏற்றியது வரை அவர்கள் தந்து நாம் ஜீரணித்த சிந்தனை தானே !



http://khandaqkalam.blogspot.ae/2013/09/blog-post_18.html#more




Sep 15, 2013

நபி (ஸல்) மக்காவில் நிறைவேற்றிய பணி.

சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில் எமது முதல் பணி நபி (ஸல்) மக்காவில் நிறைவேற்றிய பணி.

அது ஒரு அரசியல்பணி. ஆனால் ஆட்சி அதிகாரம் மூலம் நிறுவும் பணியல்ல.

மதீனாவில் அதிகாரம் கிடைத்த பின்பு ஒரு அரசு என்ற அடிப்படையில் இஸ்லாத்தை முழுமையான உள்நாட்டினுள் அமுல்படுத்தியதுடன் வெளிநாட்டுக்கம் தாவா மற்றும் ஜிஹாத் மூலம் அரசு எடுத்துச்சென்றது. அது முஸ்லிம்களதும் இஸ்லாத்தினதும் நலன்களை காப்பாற்றியது.

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் எவ்வாறான ஒரு ஜாஹிலிய சமூக அமைப்பையும் அரசில் தலைவர்களையும் எதிர்கொண்டு இஸ்லாத்தை மக்கள் மயப்படுத்தி மக்கள் மனங்களில் மேலோங்கச் செய்தார்களோ அதேபோன்று இன்றுள்ள நவீன ஜாஹிலிய சிந்தனைகளையும், வாழ்க்கை முறையையும், சமூக அமைப்பையும் கேள்விக்குட்படுத்தி மாற்றீடாக இஸ்லாத்தை முன்வைக்கும் அரசியல் பணியை அனைத்து உலமாக்களும் செய்ய முற்படுவதுடன் ஒவ்வொரு முஸ்லிமும் இதில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

அத்தகைய அரசியல் பணியை செய்வதன் மூலமாக இலங்கை மக்கள் மனங்களில் இஸ்லாம் ஒரு மாற்றீட்டு வாழ்க்கைத்திட்டமாக அறிமுகப்படுத்தப்படமுடியும்.

அத்துடன் நாளைய இஸ்லாமிய உலக ஒழுங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தேசங்களை இணைத்து நபி வழியில் உருவாகும் போது சிறுபான்மையாக வாழும் எமது நலன்கள் நிச்சயம் காக்கப்படும்; எங்களது கண்ணியம் பேணப்பட்டும்; குர்ஆன் சுன்னாவின்படி சகல துறைகளிலும் நாம் வாழுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் எமக்கு இன்ஷா அல்லாஹ் ஏற்படுத்தி தரும்.

Mohideen Ahamed Lebbe via Facebook

Sep 10, 2013

வட்டியும் முஸ்லிம்களும்...மீளுவதற்கான வழி முறைகள் ....?


வட்டி நரகிற்கு இட்டுச் செல்லும். ஆம் நாம் அதனைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். அது குறித்து ஏகப்பட்ட மார்க்கச் சொற்பொழிவுகள்!

ஆனால் ஊரில் வட்டி வங்கிகள் திறக்கப்படும் போது அதனை எம்மால் எதிர்க்க முடியாது காரணம் வட்டி வங்கிகளை நடைமுறைப்படுத்துவது அரசு.

இது நமது நம்பிக்கைக்கு முறனானது. நமது ஈருலக வாழ்வையும் நாசப்படுத்தக்கூடியது.

அப்படியாயின் சிறுபான்மை முஸ்லிம்களின் பொறுப்பு?

இஸ்லாம் தனிமனித வாழ்வில் வருவதற்கு தனிமனிதனது ஈமான் செல்வாக்குச்செலுத்தும்.

ஆனால் பொதுவாழ்வில் அந்த ஈமான் நிலைத்திட அதனை அமுல்படுத்திட சமூகத்திற்கு அதிகாரம் தேவை. அந்த அதிகாரத்தை வழங்குவது அரசு.

இன்று இலங்கை ஒரு முதலாளித்துவ சிந்தனையில் தமது பொருளியல் ஒழுங்கை ஒழுங்குபடுத்தும் அரசு. அது நிச்சயம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளியல் ஒழுங்கை அமுலாக்கும். அதே நேரம் முஸ்லிம்கள் வட்டிகடைகளை மூட முட்பட்டால் என்ன நடக்கும்? அதற்கான பவர் எம்மிடம் இருக்கா?

அப்படியாயின் மாற்றுவழி சிறியளவில் நாம் இஸ்லாமிய வங்கிகளை நாடலாம் ஆனால் அது தற்காலிகமானது.

அதே நேரம் அது ஏதோ அடிப்படையில் இலங்கையில் உள்ள ஒரு வட்டி வங்கியுன் தொடரபை கொண்டிருக்கும். முஸ்லிம் நாடுகளில் வட்டியின் நிலை? ஆம் அங்கு கூட வட்டிவங்கிகளின் செல்வாக்கு இருக்கவே செய்கிறது. அல்லது அந்த நாடு தமது முதலீட்டை ஏதாவது முதலாளித்துவ வட்டி வங்கிகளில் வைப்பிலிட்டடு செயற்படுகிறது.
அவ்வாறாயின் மாற்று வழி?

நிச்சயமாக அது இஸ்லாம் எதிர்பார்கும் உலக தலைமைத்துவம் மீளவரும் போதுதான் சாத்தியம். ஏனெனில் இன்று அநேகமான இஸ்லாமிய நாடுகளின் அரசியல் விவகாரங்களின் தலையீடு மேற்கத்தைய முதலாளித்துவ ச்கதிகளில் தங்கியுள்ளதால் இந்நிலை தொடரவே செய்யும்.

இஸ்லாமிய கிலாபா எனும் ஆட்சி வரும்போது கிடைக்கும் இஸ்லாமிய உலக ஒழுங்கே மாற்றீட்டு பெருளாதாரத்தை உலகிற்கு வழங்கும். அதற்கே அந்த முழுமையான அதிகாரம் உண்டு. அத்தலைமைத்துவமே முழுமையான பாதுகாப்பையும் இஸ்லாம் சகல துறைகளிலும் அமுலாக்கப்படுவதற்கும் வழிவகுக்கும்.

1924 ஆம் ஆண்டுக்கு முன்பு நபி (ஸல்) அவரகள் மதீனாவில் ஆட்சியை நிறுவும் வரை இஸ்லாம் இவ்வாறான ஒரு தலைமைத்துவம் மூலமே சகல விவகாரங்களையும் ஒழுங்கு படுத்தியது.

இந்த உண்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாம் பல மட்டங்களில் சிந்தனையை தூண்ட வேண்டும்.

from Mohideen Ahamed Lebbe 

Aug 13, 2013

ஒரு பிறை பல பெருநாள் !!!



(கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜித் உட்பட 24 மஸ்ஜித்கள் மீது இதுவரை கைவைக்கப் பட்டுள்ளது.புத்தகாயாவில் வெடித்த குண்டுக்காக பீரிட்ட உலமா சபையின் கண்டனச் சீற்றத்தின் ஒரு துளியாவது இலங்கை மஸ்ஜித் விவகாரங்களில் வெளிப்படவில்லை ! ஆனால் கண்ட பிறையை வானிலை ஆய்வுகளை முன்னிறுத்தி மறுக்கும் துணிவு மட்டும் மிக அற்புதமாக வெளிப்பட்டுள்ளது !? இலங்கை முஸ்லீம் உம்மாவை சர்வதேச முஸ்லீம் உம்மாவை விட்டும் பிரித்து தாம் அதன் 'பஞ்சாயத்து' போர்ட் ஆகி சிங்கத்தின் வேலிக்குள் கன்றுக் குட்டிகளாக முஸ்லீம் உம்மாவை குடியிருக்க வைக்க விரும்பும் அடிவருடிக் குள்ளநரிகளை இனம் காண இந்த பிறை விவகாரம் ஒரு நல்ல சந்தர்ப்பமே )

இலங்கையில் இம்முறை (அதாவது ஹிஜ்ரி 1434) ரமழான் மாதம் நிறைவு செய்வது மற்றும் ஷவ்வால் மாத தலைப்பிறையை கணித்தல் தொடர்பில் மிகப் பெரிய ஒரு சர்ச்சையே முஸ்லீம் உம்மத்துக்கு மத்தியில் ஏற்பட்டது .இறுதியாக இரு வேறுபட்ட தினங்களில் (அதாவது ஆங்கிலக் கலண்டரின் படி வியாழன் (08/08/2013) ,வெள்ளி (09/08/2013) ஆகிய தினங்களில் ) பெருநாளை கொண்டாடியது .

29 நோன்புகளை நோற்றிருந்த முஸ்லீம் உம்மா புதன்கிழமை (அதாவது ஆங்கிலக் கலண்டரின் படி 07/08/2013 ) அன்று மாலை பிறை பார்க்குமாறும் ,பிறை தென்படும் பட்சத்தில் கொழும்பு பெரிய பள்ளி வாசலுக்கு தகவல் தரும் படியும் உலமா சபையினால் அறிவுறுத்தப்பட இதனடிப்படையில் 08/08/2013 வியாழக்கிழமை பெருநாள் வருவதற்கான சாத்தியப்பாடு எதிர்வு கூறப்பட்டிருந்தது .( ஆனால் அரச விடுமுறை 09/08/2013 வெள்ளிக் கிழமையே ஆங்கிலக் கலண்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது .)

பிறை தெளிவாக தெரியக்கூடிய பகுதியை சேர்ந்த முஸ்லீம்கள் இதனடிப்படையில் பிறை பார்க்க தம்மை தயார் படுத்தி அவதானித்ததன் மூலம் ஷவ்வால் மாத தலைப்பிறை கிண்ணியா , புத்தளம் , மன்னார் , பேருவளை போன்ற பகுதிகளில் காணப்பட்டது . மேலும் கொழும்பு பெரிய பள்ளி ,மற்றும் உலமா சபைக்கு தகவல் அனுப்பப் பட்டும் ,உலமா சபை அதிர்ச்சிகரமாக கிடைத்த தகவல்களை புறக்கணித்து வானொலி மூலம் 08/08/2013 வியாழக் கிழமை நோன்பு நோற்று ரமழான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து 09/08/2013 வெள்ளிக்கிழமை பெருநாளை கொண்டாடுமாறு அறிவிப்புச் செய்தது .

இதன் பின்னர் பிறை பார்க்கப் பட்டதாக உறுதிப்படுத்திய பகுதி முஸ்லீம்கள் (கண்ட பிறையை காணவில்லை என்றா கூறமுடியும் !? என்ற அடிப்படையில் ) வியாழக்கிழமை அன்று தாம் பெருநாளை கொண்டாடப் போவதாக அப்பகுதி உலமா சபை பிரதிநிதிகளின் ஏகமனதான ஆதாரவோடு முடிவெடுத்தனர் . இந்த முடிவின் பின்னரே உலமா சபையின் இன்னொரு சர்ச்சைக்குரிய முகம் வெளித்தெரிய ஆரம்பித்தது .

'ஹலால்' விவகாரத்தில் வெற்றிகரமாக பின்வாங்கிய உலமா சபை இந்த 'ஹிலால் '(பிறை)விவகாரத்தில் முஸ்லீம் உம்மத்தின் ஒரு பகுதியினர் மீது ஒரு அதிரடித் தாக்குதலை வியாழக்கிழமை பகல் ஒரு மணியளவில் அதன் தலைவரின் வார்த்தை தோட்டாக்கள் மூலம் பின்வருமாறு நடாத்தியது . அது இது தான் வியாழக்கிழமை நோன்பை விட்டவர்கள் தௌபா செய்ய வேண்டும் ,ஒரு நோன்பை களாச் செய்ய வேண்டும் என்ற முடிவே ஆகும் .இது பலவீனப் பட்டுள்ள முஸ்லீம் உம்மா விடயத்தில் 'இளகிய இரும்பு கிடைத்தால் கொல்லன் ஓங்கி ஓங்கி அடிப்பானம் என்பது போல இருந்தது .

இந்த விடயம் பல்வேறு தரப்பினர் மத்தியில் பல்வேறு கோணங்களில் பேசப்பட்டாலும் முஸ்லீம் உம்மா சர்வதேச சமூகம் என்ற வகையில் சிந்திக்க வேண்டிய மிகச் சரியான திசை எது ? என்பது பற்றி சற்று ஆராய்வது பொருத்தமாகும் .முதலில் பிறைக் கணிப்பு தொடர்பாக முஸ்லீம் உம்மத்தினுள் இருக்கும் பிரதான சர்ச்சைகள் என்ன ?என்று நோக்கினால் 1.சர்வதேசப்பிறை 2.தேசியப்பிறை என்ற இரண்டு பிரிவுகள் பொதுவாக முஸ்லீம் உம்மத்தின் மத்தியில் இருப்பது தெரியவரும் .

அதிலும் சர்வதேசப் பிறையை ஏற்பவர்களில் சவூதி அரேபியா போன்ற குறித்த பகுதியின் கணிப்பீட்டை மற்றும் ஏற்போர் , உலகின் எப்பகுதியின் பிறைக் கணிப்பையும் ஏற்போர் என இரண்டு பிரிவுகள் இருக்கின்றனர் .அதேபோல தேசியப்பிறை கணிப்பீட்டில் நியம எல்லை ,தூரம் ,மற்றும் பிராந்தியப் பிரிவுகள் என ஏற்றுக்கொள்ளும் விடயத்தில் சர்ச்சைகள் இருக்கின்றன .ஆக மொத்தமாக ஒரு சம்பிரதாய பூர்வமான சடங்காக இந்த பிறை விவகாரம் மாறி முஸ்லீம் உம்மத்தின் மீதான ஒரு அவசியமான இறை கட்டளையை புறக்கணிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது .

அதாவது நோன்புக்காக பிறை ,பெருநாளுக்காக பிறை ,ஹஜ்ஜுக்காக பிறை என்ற குறுகிய வட்டத்தோடு இந்த பிறை விவகாரம் மங்கிப் போய் விடுகிறது ! வஹியின் வழிகாட்டலின் அடிப்படையில் இந்தப் பார்வை சரியானதா ? பிறை விடயத்தில் வஹி எதிர்பார்க்கும் செயற்திட்டம் என்ன ? என்பது பற்றி மிக ஆழமாக சிந்திக்க வேண்டும் . அதற்கான ஒரு தொடக்கத்தை மட்டுமே நான் கீழே தருகின்றேன் .

தேய்ந்து வளரும் பிறையைப் பற்றி நபியே அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு காலங் காட்டியாகவும் ஹஜ்ஜை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது 
(அல் பகரா :வசனம் 189)


நிச்சயமாக அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை 12 ஆகும் ; வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாளில் இருந்தே அவனது பதிவேட்டில் (இவ்வாறே இருந்தது .)அவற்றில் 4 மாதங்கள் புனிதமானவை. இதுவே சீரான மார்க்கம் ஆகும் . எனவே , அந்த மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள் ........ 


( அத்தௌபா : வசனம் 36)


மேலே தந்த வஹியின் வசனங்கள் மனித சமூகத்திற்கு பொதுவான காலங்காட்டியாக (வளர் ,தேய்) பிறை என்ற விடயம் இருப்பதை காட்டி நிற்கின்றது .அத்தோடு முஸ்லீம் சமூகம் அந்த மகத்தான பணியை முழு உலகத்திற்காகவும் ,மனித சமூகத்திற்காகவும் பொறுப்பு மிக்கவர்களாக தமது கையில் எடுத்து பிறையை அடிப்படையாக கொண்ட மாதாந்த நாட்காட்டியை ஒரே திகதிக் கோட்டின் அடிப்படையில் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தையும் பணித்து நிற்பதாக நான் கருதுகிறேன் .

இந்த அடிப்படையில் தான் ஹிஜ்ராவை அடிப்படையாக கொண்ட கலண்டர் முறையை உமர் (ரலி ) சிந்தித்து அமுல் படுத்தி இருக்கலாம் . இந்த முன்மாதிரியைக் கொண்ட விடயம் தொழில் நுட்ப கால மாற்றங்களில் சிறப்பாக விரிவு படுத்தப் பட்டிருக்க வேண்டும் .ஆனால் இன்று மனித சமூகத்தின் ,முஸ்லீம் சமூகத்தின் பல்வேறு அவசிய விடயங்களில் இஸ்லாத்தின் சுதந்திரமான பிரயோகமான அதன் கிலாபா அரசு இன்று இல்லாததால் கைவிடப்பட்டுள்ளது . அதிலே இதுவும் ஒன்றாகும் .


(தொடரும் .....)

Jul 7, 2013

இந்த முடிவு சரிதானா !?


சிதறிய சில்லரைகளாய் சிங்களத் தீவில் சிக்கித் தவிக்கும் சிறுபான்மை நாம் சமரச சதிவலையில் சரண்டர் 'பொலிடிக்சை' குப்பார் சொல்ல சமத்துவம் ,சகவாழ்வு என்று
தனித்துவம் தொலைத்து தத்துவம் பேசுகிறோம் !!

தொட்டிலில் இருந்து கபுறு வரை கபிடளிசம் கோடு போட
அதில் ரோடு போட்டு வாழ்க்கை வண்டி விட்டு
'அல்ஹம்துலில்லாஹ்' சொல்லுவது யாரை ஏமாற்ற !?
உன் சிலையை வணங்க மாட்டோம் ஆனால்
பூஜைக்கு பூத்தருவோம் என்ற புது விளக்கம் புரியவில்லை !!

'ஹிஜாபும் ,நிகாபும் ' இங்கு தேவையில்லை ''அவுரத்'
ஒன்லி அரேபியன்ஸ் ' என்று முஸ்தபா கமாலின்
பேரப் பிள்ளைகள் இங்கு பட்டிமன்றம் போட
சல்மான் ருஸ்டியும் , தஸ்னிமா நஸ்ரினும் சபாஸ் போட
'லம்யா கடோல்' புன்முறுவல் பூக்கிறார் !!

நேட்டோவோடு கைகுலுக்கி ,வீட்டோ பவர்களின்
தத்துப் பிள்ளையாகி சுவரில்லா சித்திரமாய் இஸ்லாம்
காட்டும் 'ஹிக்மத் ' தொண்டர்கள் பெரும்பான்மைக்குள்
சிறுமைப்பட்டுப் போக நாமும் வாழவேண்டும்
இந்த இம்மையில் இழிமை பட்டாலும் பரவாயில்லை!!
எனும் முடிவு சரிதானா !?