Showing posts with label உம்மத். Show all posts
Showing posts with label உம்மத். Show all posts

Oct 8, 2015

பிரிவினை ஷிர்கின் அடையாளம் !!

உலக அக்கிரமக்காரகளின் கூட்டுச் சதியால் உலகைத் தொழும் வஞ்சகர்களால் முஸ்லிம் சமூகத்தின் உள்ளிருந்து கழுத்தறுக்கும் முனாஃபிக்குகளால் முஸ்லிம்களின் முதுகில் ஏறி வெட்டி எறியப்பட்ட கிலாஃபத் எனும் இஸ்லாமியத் தலைமையை இழந்து நூற்றாண்டு கடந்து விட்டது .தலையில்லா முண்டமாய் உயிரற்ற ஜடமாய் முஸ்லிம் சமூகம் வாழ்கின்றது.

  இஸ்லாத்தின் தலைமையை விட்டு விலகி நிற்கவும் அனுமதியில்லை பிணங்கினால் பிளவு பட்டால் வீரம் வீணாகும் .சோரம் போய்விடுவீர்கள் எச்சரிக்கை என்கிறது அல்குர்ஆன் (8:46) 

  தலைமையில்லா இந்த முஸ்லிம் உம்மா நூற்றாண்டாய் இலக்கின்றி வாழ்கின்றது .இக்கால கட்டத்தில் பட்ட துன்பங்கள் படும் அவதிகள் சொல்லி மாளாது .

 ஆப்கான் வீதிகளிலும் ஈராக்கின் நகரங்களிலும் சிரியாவிலும் லிபியாவிலும் அமெரிக்கா குண்டு மழை பொழிகின்றது .

  ஈமானின் விளிம்பில் நிற்கும் முனாஃபிக்குகளோ இன்னும் வீரியமாய் முஸ்லிம்களை காரிஜியாக்கள் என்கிறார்கள் .
 
முஸ்லிம்களை பிரிக்க முஸ்லிம்களை காஃபிராக்க தனிப் பள்ளிவாசலைக் கட்டக் காசு கொடுக்கிறார்கள் .

அமெரிக்க எஜமானிய யூத கிறித்தவ ஷிர்க்கின் கூட்டுப் படையினரின் நோக்களிந்து முஸ்லிம்களை எகிப்திலும் காஸாவிலும் கொல்கிறார்கள் இந்த முனாஃபிக்குகள் !

   அன்று நபி (ஸல்) அவர்களைக் கொல்லத் துடித்த முஷ்ரிக்குகளின் முனாஃபிக்குகளின் கூட்டுப் பட்டாளம் இன்று தலைமையில்லா முஸ்லிம்களைக் கொல்கின்றது .கேட்க நாதியில்லை .

முஸ்லிம்களின் இறைச்சியை விற்கிறான் பர்மாக்காரன் என்றால் முஸ்லிமை மாட்டு இறைச்சிக்காக  கொல்கிறார்கள் பாரத நாட்டினர் .

  நபி (ஸல்) கூறினார்கள் ஒரு முஸ்லிம் அநியாயமாகக்
கொல்லப்படுவதை அல்லாஹ் ஒருபோதும் சகிப்பதில்லை .அதை விட இந்த உலகம் முழுவதும் அழிந்து போவதை அல்லாஹ் பொருட்டாய் கருதுவதுமில்லை .( திர்மிதி)

  தலைமையில்லா இன்றைய உலகில் முஸ்லிம்களின் உயிருக்கும் உடைமைக்கும் உரிமைக்கும் எந்த மதிப்புமில்லை .மரியாதையுமில்லை .அத்தோடு முஸ்லிம்களை ஒன்றிணைய விடாமல் தடுக்கும் சூழ்ச்சிகளுக்கும் பஞ்சமில்லை .

   புரட்சி மின்னலாய் ஆயிரமாயிரம் குட்டித் தலைவர்கள் தோன்றிக் கொண்டேயிருக்கிறார்கள் .புற்றீசல்கள்போல்!!

  பிரிவினை எனும் ஷிரிக் அவிழ்க்க முடியாத முடிச்சாகி விட்டது .பெரும் பிரச்சனையாகி விட்டது .முஸ்லிம்களை முடக்கியும் விட்டது .

  ஒற்றுமையாய் ஒருடலாய் ஒரே சுவராய் கீறிலில்லா ரசம் போகாத கண்ணாடியாய் வாழ வேண்டிய முஸ்லிம்கள் இன்று வகை தொகையின்றி பிரிந்து கிடக்கின்றார்கள் .

அதே முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் கருத்து முரண்பட்டு மோதிக் கொண்டபோது , அந்தலுசியா எனும் ஸ்பெயினிலிருந்து துரத்தப்பட்டார்கள் .அதுபோல இந்தியாவிலும் பிரித்தாளப்பட்டு அரசியல் அடிமைகளாக்கப் படுகிறார்கள் .

பிரிந்து கிடப்பது நரகின் விளிம்பின் மீது மனிதர்களை நிறுத்தி அழகு பார்க்கும் ஷைத்தானின் கோர விளையாட்டு .சாத்தானின் சூழ்ச்சி ! ஷிர்க் என்பதே ஏகத்துவத்தை மறுத்து அல்லாஹ்வின் கண்ணியத்தை பங்கிட்டுக் கொள்ளும் பிரிவினை !

  அருளுக்கொரு கடவுள் , அன்புக்கொரு கடவுள் , அறிவுக்கொன்று , அழிவுக்கொன்று , எனக்கு உனக்கு என எண்ணிலடங்கா கடவுள்களை உருவாக்கும் தனித்தனி கடவுள்களின் பிரிவுதான் ஷிர்க் .பிரிவு என்பதே ஷிரிக்கின் அடையாளம் .

  தீனை நிலைநாட்டுகள் ! அதில் பிரிந்து விடாதீர்கள் !   அல்குர்ஆன் (42:13)

ஷைத்தானின் சூழ்ச்சியால் பிரிந்து கிடந்த மனித குலத்தை மீண்டும் ஒரே குலமாய் உருவாக்க அனுப்பபட்டவர்கள் தான் நபிமார்கள் .அதில் இறுதியானவரே முஹம்மது (ஸல்) 

   நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பிரித்து விடாதீர்கள் .சேர்ந்து வாழுங்கள் .பிறர் பற்றி நல்லெண்ணம் கொள்ளுங்கள் .

ஒருவர் மற்றொருவரின் கழுத்தை அறுக்கும் காஃபிராகி விடாதீர்கள் .பிரிந்து நிற்பவர்கள் , தனித்தனி அடையாளங்களோடு தனித்து நிற்பவர்கள் நரகத்திற்குரியவர்கள் .

 நாம் பிரிந்து விட வேண்டாம் .
அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பற்றுவோம் .இழந்த இஸ்லாத்தின் தலைமையை கிலாஃபத்தை மீட்டெடுப்போம் !


சகோ. எஸ்.எம்.புஹாரி.


Sep 3, 2015

இது தான் உன் விதியா...??

தனது நாட்டில் நாசம் செய்து கொண்டு இருக்கோம்  போருக்கு  அஞ்சி  நாட்டைவிட்டு தப்பி செல்லும் போது ஏற்பட விபத்தில் 12 சிரியா முஸ்லிம் மக்கள்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் ஒரு சிறுவனின் உடல்  துருக்கி போட்ரம் கடலோர பகுதியில் கரை ஒதுக்கியது.
 
வாழ்க்கைப் பயணத்தை ஏதேனும் ஒரு நாட்டில் தொடர சிரியாவிலிருந்து கடல் வழியாக சென்று கொண்டிருந்த படகு ஒன்று கிரீஸ் தீவு அருகே கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் 5 குழந்தைகளும் அடங்குவர்.
 
அந்த 5 குழந்தைகளில் கரை ஒதுங்கிய 3 வயது சிறுவனின் உடலை ஐரோப்பிய கடற்படை போலீஸார் மீட்டனர்
 
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்"   
 
வாழ்வு தேடிய உனது ஓட்டம்!!
இன்று கரையை கடந்தது மரணமாக!!
இறைவனின் விதிப்படி உன் இம்மை வாழ்வு முடிந்து!!
மறுமையின் வாழ்வைத் தேடி ஓடிவிட்ட!!
யா அல்லாஹ்(சுபு) இந்த சிறுவனை சொர்கத்தின் பூ சிட்டுகளாக அக்கி அருள் பொழியாக!!! ஆமீன்!!
 
 



 

அய்லம் அல்-குர்டி மற்றும் அவரது மூத்த சகோதரர். (Aylan Al-Kurdi and his older brother)

Aug 29, 2015

சிரியாவில் இருந்து ஐரோப்பாற்கு தஞ்சம் அடையும் முஸ்லிம்கள்!!

 
சிரிய மோதல் : தப்பி வந்த அகதிகள் உயிர்களை போர் , அடக்குமுறை, வறுமை தப்பிக்க முயன்று ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஆண்டு ஐரோப்பாவில் நுழைந்திருக்கின்றன. பெரும்பாலான சிரியாவில் மோதல் வெளியேறுபவர்கள் , மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் அகதிகள் வகைப்படுத்தப்படுகின்றன. மோதல் மேற்பட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது முதல், சுமார் எட்டு மில்லியன் மக்கள் - அல்லது மக்கள் தொகையில் 40% - தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினார்கள். நான்கு மில்லியன் மக்கள் அண்டை மாநிலங்களில் இப்போது பெரும்பாலான, முற்றிலும் நாட்டைவிட்டே வெளியேறி உள்ளனர்.
 
இந்த செய்தியை BBC நிறுவனம் தெரிகிறது.

Jul 13, 2014

அப சரணய் அரசியலில் தம்பி நீ வாழ


அப சரணய் அரசியலில் தம்பி நீ வாழ ...
அசிங்கத்தை நேசித்து அயோக்கியத்துடன்
சமரசம் பேசு!
அல்லாஹ்வின் மார்க்கத்தை அளவோடு நிறுத்தி விடு!
சேப் ஆக வாழ நீ
காசாவை பேசாதே! காஸ்மீரை பார்க்காதே !
வன் உம்மா கென்செப்டை
வழக்காறு ஆக்காதே!
சடத்துவம் வேண்டி நீ
சகோதரத்துவம் தொலைத்து விடு!
அநீத தீவில் சிறுபான்மை சுண்டெலி நீ!
புர்கான் ஒரு புத்தகம் போல்
வாசிக்க இருக்கட்டும்!
கோவணத்தால் தலை மறைத்து
அவுரத்தை அவுட் ஆக்கு!
அஹ்லாகின் கடை போட்டு
ஈமானை விலை பேசு!
ஹுப்புத்துன்யாவுக்கு ஹிக்மத்
லேபல் இடு!
கொத்தடிமை சாசணத்தை
விஷம் போல் பார்க்காதே !
தேசிய கோதாவில் பாசிச பார்வையை வெள்ள தேசிய பாசம் காட்டி
தவ்ஹீதை நொக் அவுட் ஆக்கி!
அப சரணய் அரசியலில் "தம்பி"
நீயும் வாழ வேண்டும்!
.............உரிமையுடன்...................
உல(க) மா(க்கள்) சபை

Jul 8, 2014

யதார்த்தம் பிழைக்குதே!!!

எம் தீராத தாகம் தீர்க்க கானல் நீரா !?
இதுதான் அதுவா !? அதுதான் இது என்றால் 
அடுத்தவைகள் அதிர்ந்திருக்க வேண்டுமே !?
அரண்ட கண்களால் பார்த்தால் எல்லாம் 
பேய்தான் !? உங்களுக்கு பொறாமை 
நச்சரிப்பான எச்சரிப்பும் நையாண்டியும் எமக்கு !?

'ஆர்மி அரசாண்டால் வெடிதீர்க்கும் சாத்திரங்கள்' 
என ஒரு நூதனத்தை சாதனையாக்கி விட்டீர்களே !
காத்திருந்ததால் கனியவில்லை அதனால் 
அடித்துப்பறித்து 'கார்பைட்' போட்டு பழுக்க வைப்போம் !
என 'கம்யூனிஸ்ட் 'பாணியில் சிலரின் வினோத விளக்கங்கள் !
'மாஒ சேதுங் ' ஒன்றும் நமக்கு நபியல்லவே !
உள் மனம் எச்சரித்து உசாராக்கியது !
சுன்னாவில் தேடாமல் இது என்ன சுதந்திரம் !!!

அவசியத்தின் அவசரம் அதுதான் 
கல்லடித்து வீழ்த்தினோம் என்கிறீர்கள் !
அநீதி அதை எதிர்த்தது வரை சற்று சரி என்றாலும் 
அந்த பிரகடனம் தான் முற்றாய் பிழைக்கிறதே!
மாங்காய் அல்ல இது அல்லாஹ்வின் மார்க்கம் !
புரியவில்லையா உங்களுக்கு !?

காலத்தின் கட்டாயம் என கற்பழித்தவனுக்கே 
கல்யாணம் கட்டி வைக்கப்படும் பெண் போல !
இந்த உம்மத்துக்கு அதை தீர்வாய் காட்டும் 
கட்டப்பஞ்சாயத்துகள் இன்று ஏராளம் தாராளம் !
குயிலுக்கு அழகாய் கூவமுடியும் 
இது அக்மார்க் உண்மை மாற்றுக் கருத்தும் எமக்கில்லை 
ஆனால் அதற்கு கூடு கட்டி 
குஞ்சுக்கு அடைகாக்க முடியுமென்றால் 
யதார்த்தம் பிழைக்குதே!!!

May 28, 2014

அந்த நாள் மறந்து விட்டதா ?


அந்த நாள் மறந்து விட்டதா ? இந்த முஸ்லீம் உம்மத்தின் மீது உத்தியோக பூர்வமாக தாகூத்திய அடிமை சாசனம் வரையப்பட்ட நாள் . காசா முதல் காஸ்மீர் வரை கந்தலாக்கப்பட்ட இந்த முஸ்லீம் உம்மத்தின் உயிர் ,உடமை மானம் பற்றி தட்டிக்கேட்க நாதியற்றதாக்கி அல்லாஹ்வின் அடிமை மட்டுமே என்ற கண்ணியத்தின் வரலாறு ;தேசம் ,தேசியம் , அரபி, அஜமி, வெள்ளையன்,ஆபிரிக்கன் என்ற எல்லைக் கோடுகள் மூலம் களங்கப் படுத்தப் பட்ட நாள் . இஸ்ரேல் எனும் இரக்கமற்ற இரத்தக் காட்டேரி தன்னை சுற்றியிருந்த அரசியல் விலங்கின் பூட்டை உடைத்து தனது சாவகாசமான
சரித்திரப் படுகொலைகளுக்கு சொடுக்குப்போட்டு பாதை அமைத்த நாள் . 

போஸ்னிய புதைகுழிகளில் குற்றுயிராய் கதறிய இந்த உம்மத்தின் அழைப்பாக " இஸ்லாத்தின் படை எங்கே ?" எனும் வினாவுக்கு வெட்கித்துப்போய் மௌனத்தை பதில் அளிக்க ஏதுவாய் அமைந்த
நாள் . சிந்துவில் எம் உம்மா சிதறடிக்கப்பட்டபோதும் ,காவித் துரியோதனர்கள் துகில் உரித்து எம் சகோதரிகளை மானபங்கப்படுத்திய போதும் "இன்னொரு முஹம்மது பின் காசிம் வரமாட்டாரா ? " என்ற வினாவுக்கு 'பொலிடிகல் டிப்லோமடிக்' புரியாது கண்ணீரோடு வெறுங்கை ஏந்தி பிரார்த்தனை மட்டும்
புரிந்த நாள் . மியன்மாரின் படுகொலை நாடகத்தில் அரசியல் திருப்பத்தின்
இரத்த சாட்சியமாய் இந்த உம்மத்தின் உதிரங்கள் விலைபேசப்
பட்டபோது மாதக்கணக்கில் வேடிக்கை பார்க்க வைத்த நாள் .

மொத்தத்தில் முஸ்லீம் எனும் சகோதரத்துவ சிந்தனை திசைமாறி ; குப்பார் வீசிய பிச்சைப் பாத்திரத்தில் வாழ்க்கை குதிரைஒட்டி சுகம் காண்பதில் சுவனம் நுழையலாம் எனும் ஜாஹிலீயத் மார்க்கமாக முஸ்லிமின் தலையில்
ஏறி யகூதிய கடிவாளத்தை சிலுவையின் முகவரியோடு பூட்டிய நாள். அது எந்தநாள் ??

 இஸ்லாத்தின் ஒரே தலைமையும், அரசியல் இராஜ தந்திர கேடையமுமான
இஸ்லாமிய கிலாபா வீழ்த்தப்பட்ட நாள். அது ஹிஜ்ரி 1342 ரஜப் மாதம் பிறை 28. ஆனால் இது முடிவுரை எனும் தப்புக் கணக்கில் யூத ,கிறிஸ்தவ எதிரிகளால் கொக்கரிக்கப்பட்ட வார்த்தைப் புரளி என்பது புரியும் காலம்
வெகுதூரத்தில் இல்லை . நம்புங்கள் அந்த முஹம்மதின் (ஸல் ) படை மீண்டும்வரும் ;ஏனென்றால் "சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது அசத்தியம் நிச்சயம் அழிந்து போவதே " நீங்கள் அல்லாஹ்வுக்கு (சுப ) உதவி செய்தால்அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதிப் படுத்துவான் . அவன் கேட்கும் உதவி நீங்கள் அவன் பிரதிநிதி என்பதை உறுதிபடுத்த நிபந்தனை அற்று அவனது மார்க்கத்தை மீண்டும்
சக்தியாக்க உதவுங்கள் என்பதே . அல்லாஹ்வின் தூதருக்கும் (ஸல் ) அந்த
சஹாபாக்களுக்கும் உதவிய அதே ஜிப்ரீல் (அலை ) தனது வானவர்
படையோடு எமக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார் . அல்லாஹு அக்பர்............

Oct 13, 2013

இன்றைய முஸ்லிம் இளைஞர்களின் சிந்தனைப்போக்கும் மீளமைப்புச் செய்யப்படுவதற்கான வழிமுறையும்!

இன்று எமது இளைஞர்கள் மத்தியில் "மேற்கினது வாழ்க்கை" முறை மற்றும் கலாச்சாரம் குறித்த ஒரு வகையான மோகம் மேலோங்கிய நிலையில் தமது "வாழ்வினது மொடலாக அவர்கள் நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும்" அடிப்படையாக கொள்வதனை சர்வசாதாரணமாக காணலாம்.

இத்தகைய குப்பார்களது நடை, உடை, பாவனை போன்றவற்றை “பெஷன் “ என்ற பெயரில் இவர்கள் பின்பற்ற நினைப்பதற்கு காரணம் இவர்களுக்குள் உள்ள இஸ்லாம் குறித்த அடிப்படைச் சிந்தனையில் உள்ள தெளிவின்மையும் இவர்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமிய வரலாற்றையும் சரிவர படிக்காமல் இருப்Pதுமேயாகும்.

முதலில் எமது இளைஞர்கள் இஸ்லாத்தை ஒரு "மதமாகவும் வெறும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் மார்க்கமாகவும்" இவர்கள் நோக்குவதால் இவர்கள் தொழுதால் போதும் அல்லது எப்படி வேண்டும் என்றாலும் தனது வாழ்வை ஒழுங்குபடுத்த முடியும் என்று நினைப்பது அவர்கள் இஸ்லாத்தை விளங்கியுள்ள விதத்தில் உள்ள குறைபாடாகும்.

உண்மையில் இஸ்லாம் "அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் உள்ள தொடர்பை ஒழுங்குபடுத்துவதுடன் நின்றுவிடாமல்" அது "பொதுவாழ்வில் மனிதன் எதிர்நோக்கும் அரசியல், பொருளியல், சமூகவியல், கல்வி மற்றும் வெளிநாட்டு உறவுகள் என்பவற்றை ஒழுங்குபடுத்தத் தேவையான செயலாக்க அமைப்புக்களை கொண்ட குர்ஆன் சுன்னா அடிப்படையில் இவற்றை ஒழுங்குபடுத்துகின்ற ஒரு வாழ்க்கைமுறையாக வாழ்கைச் சித்தாந்தமாக" ஒரு முழுமையான இஸ்லாமாக பார்க்காமல் இருப்பதால் ஏற்படும் குறைபாடாகவே நாம் பார்க்கலாம்.

அவ்வாறு பார்க்கத்தவறுவதாலேயே மதஒதுக்கல் சிந்தனையில் இருந்து பிறந்த முதலாளித்துவ தாராண்மைவாதச் சிந்தனை, மற்றும் செயலாக்க அமைப்புகள் என்பவற்றினது தாக்கத்திற்கு அவன் “நாகரீகம்” எனும் பெயரில் கண்ட கண்ட ஜாஹிலிய்ய சிந்தனைகளைக் கொண்டு தனது இளமைப் பராயத்தை ஒழுங்குபடுத்த முற்படுகிறான்.

இதற்கு பிரதான காரணம் அவனுக்கு போதிக்கப்படும் இஸ்லாமும் அவன்காணும் தாவா முறைகளும் வெறும் இபாதாக்களை செய்யத் தூண்டுவதுடன் நின்றுவிடுவதேயாகும்!

உண்மையில் இஸ்லாத்திற்கு அன்னியமான இஸ்லாத்தை குழிதோண்டிப் புதைக்க முற்படும் மேற்கினது கலாச்சார படையெடுப்பும், வாழ்கை முறையையும், சிந்தனைப்படையெடுப்பையும், ஒரு முஸ்லிம் இளைஞன் உணரவேண்டுமாயின் அதற்கு அவன் இஸ்லாத்தை ஒரு முழுமையான வாழ்க்கைச் சித்தாந்தமாக (Ideology) வாழ்க்கை முறையாக அவன் விளங்க வேண்டும்.

அவற்றை அடிப்படையாக கொண்டு இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப் படையெடுப்பை எதிர்கொள்வதற்கு தன்னைப் பண்படுத்திக் கொள்வானாயின் அவன் இத்தகைய மேற்கினது ஜாஹிலியத்தில் இருந்து விடுபட்டு இஸ்லாத்தை மிகவும் அக்கறையுடன் தனது தனிப்பட்ட வாழ்வில் முடிந்தளவு பின்பற்ற முற்படுவதுடன் அது சமூகவாழ்வில் மலர்வதற்கான தடைக்கற்களையும் அறிய முற்பட்டு உரிய தாவாக்களை முன்னெடுக்கக் கூடிய ஒரு இஸ்லாமிய இளைஞனாக மாறுவான்.

அத்துடன் இஸ்லாம் சமூக வாழ்வில் முழுமையாக பின்பற்றப்படுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அவன் உணர முற்படும்போது 


1.இன்று முஸ்லிம்களுக்கா ஒரே தலைமை உலகில் இல்லாததும்,
2.முஸ்லிம் உம்மத் தேசியவாதச் சிந்தனைக்குள்ளும்,
3. மேற்கினது முதலாளித்துவ ஜனனாயக விழுமியங்களிலும் கொண்டுள்ள நம்பிக்கை முறைபற்றியும் அவன் உணர ஆரம்பிப்பான்.

அவற்றில் இருந்து உம்மத்தை விடுவிக்கத் தேவையான உரிய தாவாக்களையும் அவன் மேற்கொள்வான்.

அது அவன் வாழும் நாட்டில் உள்ள அரசியல் மற்றும் ஏனைய மேற்கினது வாழ்க்கை முறைபற்றிய அடிப்படைப் பார்வையில் உள்ள சமூக, கலாச்சார சீர்கேடுகளை கோடிட்டுக் காட்டி இஸ்லாத்தை ஒரு மாற்றீட்டு வாழ்க்கைத் திட்டமாக அவன் பிற சமூகத்திற்கு தாவா செய்ய வழிவகுக்கும்.

அத்துடன் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் இஸ்லாம் ஒரே தலைமையின் கீழ் நிறுவப்பட்டு, முழுமையாக அமுல்படுத்தப்படுவதன் அவசியம் குறித்தும், இஸ்லாமிய வெளிநாட்டு கொள்கை மூலமாக தாவா மற்றும் ஜிஹாத் மூலம் அவ்வரசு உலகில் இஸ்லாம் மீள ஒழுங்குபடுத்தி இன்றுள்ள முதலாளித்துவ தலைமைத்துவத்தை மாற்றீடு செய்யும் ஒரு தலைமையாக இஸ்லாம் மீண்டும் வரவேண்டும் எனும் “சீரியசான இஸ்லாமிய” இளைஞனாக அவன் மாறுவான்.

இத்தகைய சிந்தனைப்போக்கு அவனை நிச்சயம் வழிகேட்டில் இருந்து பாதுகாத்து மறுமையில் ஈடேற்றம் பெறவழிவகுப்பதுடன் இஸ்லாத்திற்கும் பலம் சேர்க்கும்.



Mohideen Ahamed Lebbe

Sep 10, 2013

உலக நாடுகளின் முஸ்லிம்களின் விகிதாசாரம்.

இவ்வளவு பெரிய உம்மத் இன்று பலவீனப்பட்டுள்ள பின்னணியை நாம் சரியாக உணர்ந்து உரிய பரிகாரத்தை தேடி ஈடேற்றம் பெற்ற முன்மாதிரியான சமூகமாக மாறவேண்டும்.

அதற்கு நாம் இன்று இழந்து நிற்கும் ஒரே இஸ்லாமிய தலைமை அவசிம். அதுவே எமது கேடயம்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாக பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள்.”
(அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)


உலக நாடுகளின் முஸ்லிம்களின் விகிதாசாரம்.

1. Afghanistan 100%
2. Albania 75%
3. Algeria 99%
4. Angola 25%
5. Argentina 2%
6. Australia 2.09%
7. Azerbaijan 93%
8. Bahrin 100%
9. Bangladesh 85%
10. Bhutan 5%
11. Brazil 0.6%
12. Burma 10%
13. Canada 1.48%
14. Cntral africn rpblc 55%
15. China 11%
16. Egypt 94%
17. Ethopia 65%
18. Fiji 11%
19. France 7%
20. Georgia 11%
21. Germeny 3.4%
22. Greece 1.5%
23. Guinea 95%
24. Guyana 15%
25. Hongkong 1%
26. India 14%
27. Indonesia 95%
28. Iran 99%
29. Iraq 97%
30. Isreal 14%
31. Italy 1%
32. Japan 1%
33. Jordan 95%
34. Kenya 30%
35. Kuwait 89%
36. Lebanon 70%
37. Libya 100%
38. Maldives 100%
39. Malasiya 52%
40. Mauritius 19.5%
41. Mayotte 99%
42. Nigeria 75%
43. Oman 100%
44. Pakistan 97%
45. Phillipines 14%
46. Qatar 100%
47. Romania 20%
48. Russia 18%
49. Saudi arab 100%
50. Singapore 17%
51. Somalia 100%
52. Sri lanka 9%
53. Sudan 85%
54. Syria 90%
55. Tazakistan 85%
56. Tanzania 65%
57. Thiland 14%
58. Tunisia 98%
59. Turkey 99.8%
60. UAE 96%
61. UK 2.5%
62. USA 3.75%
63. Uzbekistan 88%
64. Palestine 97.5%

நபிமார்கள் வந்த நாடுகள்

Adam(A.S) - Sri Lanka
Nooh(A.S) - Jordan
Shoaib(A.S) - Syria
Saleh(A.S) - Lebanon
Ibrahim(A.S) - Israel
Ismail(A.S) - Saudi Arabia
Yakoob(A.S) - Palestin
Ishaq(A.S) - Palestin
Yusuf(A.S) - Palestin
Looth(A.S) - Iraq
Ayub(A.S) - Amman
Hood(A.S) - Yamen
NABII MUHAMMAD (S.A.W) - Saudi Arabia

நபிமார்கள் வாழ்ந்த காலம்

Adam(A.S) - 1000 Yrs
Nooh(A.S) - 950 Yrs
Shoaib(A.S) - 882 Yrs
Saleh(A.S) - 586 Yrs
Zakariyya(A.S) - 207 Yrs
Ibrahim(A.S) - 195 Yrs
Sulaymaan(A.S) - 150 Yrs
Ismail(A.S) - 137 Yrs
Yakoob(A.S) - 129 Yrs
Musa(A.S) - 125 Yrs
Ishaq(A.S) - 120 Yrs
Haroon(A.S) - 119 Yrs
Yusuf(A.S) - 110 Yrs
Eesa(A.S) - 95 Yes
NABII MUHAMMAD(S.A.W) - 63 Yr

via facebook bro

Sep 6, 2013

குப்ரிய ஏகாதிபத்தியமும் முஸ்லீம் உம்மாவும் .(ஒரு சிறப்புப் பார்வை.)

ஒவ்வொரு ஏகாதிபத்தியத்தினதும் நோக்கமும் பண்பும் ஒன்றுதான் .அது தனது மேலாதிக்க நிலையை காப்பற்றிக்கொள்ளவும் , தனது அழிவைத் தடுக்கவும் அரசியல் ,இராணுவ ,பொருளாதார ரீதியாக ஆக்கிரமிப்புகளை செய்து தன்னை சாராத அடுத்த மனிதர்களை எவ்வகையிலேனும் கட்டுப்படுத்தும் ,மேலும் தன்னை வளப்படுத்த வளங்களை அளவு கணக்கின்றி சுரண்டும் ,கட்டுப்படுத்தும் .இத்தகு பணிகளுக்காக எந்த ஒரு கொடூரமான அழிவையும் ,அழிப்பையும் செய்யும் .

எனவே இத்தகு அதிகாரங்களுக்கு எதிராக அநீதியை எதிர்க்கும் மக்கள் போராட எழுவது இயல்பானது .அந்த வகையில் மனித குல வரலாறு நெடுகிலும் வடிவங்களில் வேறுபட்ட ஏகாதிபத்தியங்கள் தமது அடக்குமுறையை மனித சமூகத்தின் மீது பிரயோகித்து வந்துள்ளது . மனித குலமும் தனக்கு தெரிந்த வழிமுறைகளில் இத்தகு மேலாதிக்க சக்திகளுக்கு எதிராக போராடியே வந்துள்ளனர் . ஆனால் இந்த போராட்டப் பாதையின் உன்னத வடிவத்தை மிகச் சரியாக வரைவிலக்கணம் செய்தது இஸ்லாம் தான் என்றால் அது மிகையான கருத்தல்ல .

எப்படி ? மனிதன் மனிதன் மீது அடிமைப்படும் மனோபாவத்தையும் ,சூழ்நிலையையும் முற்றாகவே , தவிர்த்தல் , தடுத்தல் , தவிடுபொடியாக்கல் என்பதில் இருந்துதான் இஸ்லாம் சொல்லும் ஏகாதிபத்திய எதிர்ப்பின் மூலவடிவம் தோற்றம் பெறுகிறது .

அது முன்னைய நபிமார்களின் வரலாற்றை வஹி சொல்லவந்து பிர் அவன் , நும்ரூத் போன்றோரை குறிப்பிட்டாலும் சரி ,அல்லது மனித குலத்தின் இறுதி வழிகாட்டியான முஹம்மத் (ஸல் ) அவர்களின் சமகால ஏகாதிபத்தியங்களான ரோம் , பாரசீகமாக இருந்தாலும் இத்தகு சக்திகளின் கைக்கூலிகளாக இருந்த குரைசிக் காபீர்களாக இருந்தாலும் இஸ்லாம் வேறுபடுத்தாமல் ஒரே பண்புடனே நோக்குகிறது .

இந்த வகையில் இத்தகு கொடூர சக்திகளுக்கு எதிராக வரலாற்று நெடுகிலும் இஸ்லாத்தின் மோதலும் இயல்பாகியது . இந்தப் போராட்டத்தின் தவிர்க்க முடியாத போராளிதான் முஸ்லீம் . அவனது பணியும் பார்வையும் மிக உயர்ந்தது .இன்று தவறான வழிகாட்டலாலும் திட்டமிட்ட சதிகளாலும் ,தனது சுய பலவீனங்களாலும் இப்பணியை மறந்தான் . இப்பணிக்காகவே கட்டமைக்கப் பட்ட தனித்துவமான கிலாபத் எனும் ஒரே தலைமையைக் கொண்ட இறைவனின் பிரதி நிதித்துவ ஆட்சியையும் இழந்தான் .

விளைவு முழு உலகையும் ஆக்கிரமித்த அந்த ஏகாதிபத்திய அதிகாரப் பேய் முஸ்லீம் நிலங்களையும் குடிகொண்டு இரத்தம் குடிக்க கற்றுக் கொண்டது . நர வேட்டையின் குத்தகை களஞ்சியமாக முஸ்லீம் நிலங்களை பாவிக்கும் ஏகாதிபத்தியம் இப்போது 'காசாவில்' சியோனிஸ 'ரெகுலாவாக ' தனது திசை திருப்பும் கோரத் தாண்டவத்தை தொடங்கியுள்ளதாக தெரிகின்றது . எகிப்தின் இரத்தக் கலரியில் கண் கலங்கி நின்ற சுவடுகள் கூட மாறவில்லை !

இது ஆணவத்தில் நேற்று ஆடிய இந்த ஏகாதிபத்திய காட்டேரிகள் இன்று அச்சத்தோடு நடுங்கிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதன் ஆதாரம் .அதன் காரணம் ஒரே ஒரு வார்த்தை ! அது சிரிய போராளிகளின் உளப்பூர்வமான வார்த்தையாக வெளிவரும் 'கிலாபா' தேசம் பற்றிய எதிர்வு கூறலே ! இப்போது முஸ்லீம் உம்மத்தை குப்பாரிய ஏகாதிபத்தியம் ஒரு திசை திருப்பும் போர் ஒன்றின் மூலம் அதன் உண்மையான மறுமலர்ச்சி பார்வையை விட்டும் தவிர்க்க பார்க்கிறார்கள் .

அழிவுகள் ,அழிப்புகள் மூலம் இந்த முஸ்லீம் உம்மத்தை திசை திருப்பி விட்டு இந்த ஏகாதிபத்தியங்களின் கூட்டு மீண்டும் கட்டமைக்கப்படும் சத்திய விடுதலையின் கேடயமான கிலாபா அரசின் மீள் வருகையை இரகசியமாக குழிதோண்டிப் புதைக்க நினைக்கிறார்கள் . அநியாயக் காரர்களும் அக்கிரமக்காரர்களும் முடிந்தால் எம் உயிரற்ற உடல்களின் மீது ஆட்சியை தொடரட்டும் என இலட்சியத் தெளிவோடு போராடும் அந்த தூய வீரர்களோடு அல்லாஹ் இருக்கின்றான் . அல்லாஹு அக்பர் ... அல்லாஹு அக்பர் ....

Sep 3, 2013

துர்ப்பாக்கிய நிலையில் எமது முஸ்லிம் உம்மத்!!!

இன்று காலனித்துவ சக்திகளது பலம் ஓங்குவதில் எமது முஸ்லிம் தலைமைகள் அதீத அக்கறையுடன் செயற்படும் துர்ப்பாக்கிய நிலையில் எமது முஸ்லிம் உம்மத்!

நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் நிறுவிய இஸ்லாமிய அரசும் அதனைத் தொடர்ந்து வந்த குலபாக்களது ஆட்சிமுறையும் முஸ்லிம்களது கண்ணியம் மற்றும் உடைமைகள் காக்கப்படவும் தீனுல் இஸ்லாம் உலகில் சகல துறைகளிலும் அமுலாக்கப்படவும் வழிவகுத்தது. மேலும் “ரோம்” மற்றும் “பாரசீகப் பேரரசுகளை” தம்வசப்படுத்தி இஸ்லாத்தை பரவலாக்கம் செய்ய வழிவகுத்தது. உலகில் மூன்றில் இரண்டுபகுதியை தம்வசப்படுத்தி உலக தலைமைத்துவத்தை வழங்கியது.

1924 உதுமானிய கிலபா வீழ்ச்சியுடன் முஸ்லிம்களுக்கான ஒரே தலைமை அழிக்கப்பட்டதன் விளைவாக முஸ்லிம்கள் 57 தலைமைகளான பிரிந்து காலனித்துவ சக்திகளது அடிவருடிகளால் சர்வாதிகார முறையில் ஆட்சிசெய்யப்பட்டார்கள்.

இவர்கள் தேசிய எல்லைக்குள் முஸ்லிம்களது வளங்கள், இராணுவம் முடக்கப்பட்டு மதஒதுக்கல் சிந்தனை அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டமுதலாளித்துவ நலன்களை காக்கும் ஜனநாயக ஆட்சிமுறைமூலமும் மன்னர் ஆட்சி முறைமூலமும் முஸ்லிம்கள் ஆட்சிசெய்யப்பட வழிவகுத்தார்கள்.

இவர்ளிடம் இஸ்லாம் மேலோங்கவேண்டும் குர்ஆன் சுன்னாவின்படி வாழ்வியல் விவகாரங்கள் ஒழுங்குபடுத்தப்படவேண்டும் எனும் சிந்தனைப் போக்கோ அல்லது முஸ்லிம்களது நலன்கள் பேணப்பட்டு அவர்களது கண்ணியம் பேணப்படவும் இஸ்லாத்தினது பொது எதிரிகள் உரிய முறையில் நடத்தப்பட்டு தீனுல் இஸ்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் எனும் எண்ணமோ இருக்கவில்லை.

இவர்கள் குப்பார்களான காலனித்துவ சக்திகளுடன் கைகோர்த்தபடி முஸ்லிம்கள் கருவறுக்கப்படுவதிலும் தங்கள் சுய நலன்களுக்காக முஸ்லிம் உம்மத்தை கூறுபோட்டு பலமிழக்கச்செய்வதிலும் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.

இத்தகைய இழிநிலைகளின் விளைவாக இலட்ச்சக்கணக்கான எமது முஸ்லிம் சகோரதர சகோதரிகளது உயிர்கள், உடைமைகள் அழிக்கப்பட்டதனை நாம் ஈராக், ஆப்கானிஸ்தான், காசா, மாலி, பர்மா, எகிப்து சிரியா,கஷ்மீர் போன்ற நாடுகளில் காணக் கூடிதாக உள்ளது.

இன்று முஸ்லிம்களுக்கான ஒரே தலைமையான கிலாபா அரசு இல்லாததனாலும் “முஸ்லிம்களது பாதுகாப்பு அரணாகிய இராணுவம்” தேசிய எல்லைக்குள் முடக்கப்பட்டு கூறுபோடப்படடுள்ளதாலும் பலம் குன்றிய நிலையில் முஸ்லிம் உம்மத் காணப்படுகிறது.

அதிலும் நாம் கைசேதப்படும் துர்பார்க்கியமான நிலையாதெனில் எமது முஸ்லிம் இராணுவத்தினரையே எமது சிறுவர்களை, முதியோர்களை, சகோதர சகோதரிகளை கொன்று குவிக்குமளவுக்கு காலனித்துவ சகதிகள் திட்டமிட்டு இன்றைய முஸ்லிம் தலைமைகளை வழிநடாத்துவதனை காணமுடிகிறது.

அதன் ஒரு மெகா வடிவமாக இன்று அமெரிக்கா தலைமையில் காலனித்துவ சக்திகள் அணிதிரண்டு சிரியாவில் முஜாஹிதீன்களை கருவறுக்க களமிறங்கியுள்ள நிலையில் எமது முஸ்லிம் தலைமைகள் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து எகிப்தில் இஸ்லாம் வந்துவிடக்கூடாது என்பதற்கு “அல்-சிசியை” பயன்படுத்தி ஆட்சிகவிழ்ப்பை செய்தது போல் சிரியாவில் “முஜாஹிதீன்களது கை மேலோங்கி” அங்கு மக்கள் கோரும் ஆட்சிமுறையான கிலாபா அரசு நிறுபவப்பட்டுவிட்டால் தங்களது ஆட்சி பீடங்களுக்கு கதிரைகளுக்கு பேராபத்து என்பதனை உணர்ந்து குப்பார்களது அணியினைப் பலப்படுத்துவதனைக் காணலாம்.

ஆனால் அ
ல்லாஹ் இவர்களது அனைத்து சதிகளையும் முறியடிக்கும் மிகப்பெரிய சதிகாரன் என்பதனை வெகுவிரைவில் இவர்கள் உணர்வார்கள்.

“முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கிக் தர விரும்புகிறீர்களா?” (4: 144)

“எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர். (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) "எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்" என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்;. அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்.” (5: 52)

“அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். “(61:8)

Aug 24, 2013

முஸ்லிம் உம்மத் பாடம் பெறவேண்டிய அடிப்படைகள்!

எகிப்தில் இஸ்லாம் நபிவழியல் மீள் எழுச்சி பெறுவதற்கான அடிப்படையான சிந்தனைகள்..! முஸ்லிம் உம்மத் பாடம் பெறவேண்டிய அடிப்படைகள்!

இன்று எகிப்தில் இஸ்லாம் மீள் எழுச்சிபெற்று அமுலாக்கப்பட நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு மதீனாவில் ஆட்சியை நிறுவினார்களோ அதுவே உங்கள் வழிமுறையாக இஸ்லாமிய அரசு நிறுவப்படுவதில் அமைய வேண்டும்.

இதற்கு எகிப்தியமக்களதும் முழு முஸ்லிம் உம்மத்தினதும் பணி என்ன என்பது பற்றி அவசியம் சிந்தித்து செயற்படவேண்டும்.

இதுகுறித்து பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டிய தேவையுள்ளது.

1.சிறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட முர்சியின் ஆதரவாளர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட உழைக்கவேண்டும்.

2.அமெரிக்காவின் பின்னணியில் இருந்து இராணுவத்தினால் வரையப்பட்ட அனைத்து திட்டங்களையும் வீசியெறிய பாடுபடவேண்டும்.

3.அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட இரத்தம் சிந்தக் காரணமான இராணுவ ஆட்சியில் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளை நோக்கியும் நகர கூடாது. மாற்றீடாக இஸ்லாமிய அடிப்படையில் ஆளப்படத் தேவையான கிலாபா அரசு வேண்டும் என்றும் மேற்கினது எந்த ஆட்சித் தலையீடும் தேவையில்லை என்றும் மக்கள் கோரவேண்டும்.

4.ஜனநாயக அரசியல் தந்திரோபாய விளையாட்டில் இருந்து முற்று முழுக்க விடுபட்டு, கிலாபாவை மாற்றீடாக கோரி மக்கள் பாடம் பெறவேண்டும். அல்ஜீரியாவிலும் பலஸ்தீனத்திலும் இருந்து இந்த ஜனநாயக அரசில் விளையாட்டில் மேற்கினது கை ஒங்கி ஏற்பட்ட அழிவுகளையும் இன்று எகிப்தில் ஏற்பட்டுள்ள முஸ்லிம்களது இக்கட்டான நிலையையும் கருத்திற்கொண்டு பாடம் படிக்க வேண்டும். இது குறித்த நபி மொழியினை கருத்தில் கொள்ள வேண்டும்.
' ஒரு விசுவாசி ஒரே புற்றினுள் இருமுறை தீண்டப்படமாட்டான்'

5.மதச்சார்பற்ற ஜனநாயக வழிமுறையிலான அனைத்து கோஷங்களையும் நிராகரிப்பதுடன் மேற்கினாலும் அமெரிக்காவினாலும் முன்வைக்கப்படும் குறுகிய கால நலன்களுக்கு மசிந்து விடக்கூடாது.

6.கடந்த காலங்களில் இஸ்லாமிய அமைப்புகளினால் “மதஒதுக்கல் சிந்தனையில் கட்டியமைக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியமைப்பினால் இஸ்லாம் முற்றாக அமுல்படுத்தப் படமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு தோல்வியடைந்துள்ளது” என்ற சிந்தனையை விதைத்து மக்கள் “ஜனநாயகம் எனும் மேற்கினது ஆட்சிமுறைக் கருவியினூடாக இஸ்லாம் அமுல்படுத்தப்பட முடியாது” என்ற செய்திகுறித்து மக்களை விழிப்படைய செய்ய வேண்டும். நம்பிக்கையூட்ட வேண்டும்.

7.எகிப்தில் கிலாபா நிறுவப்படத் தேவையான நுஸ்றாவை கோரி இராணுவத்தை இஸ்லாம் அமுலாக்கப்படுவதிலும் பொது எதிரியினது அனைத்து இராணுவ முன்னெடுப்புகளை எதிர்கொள்வதிலும் பயன்படுத்த கோரும் ஹிஸ்புத் தஹ்ரீரின் மாற்றீட்டு வழிமுறைபற்றி சிந்திக்க வேண்டும். அதற்கான வெகுஜன அபிப்பிராயத்தை திரட்டுவதிலும் மக்கள் நம்பிக்கையூட்டப்படுவதிலும் பாரிய தஃவா முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

8.இவ்வாறு எகிப்தில் நாளை ஒரு கிலாபா உருவாக்கப்படுமானால் முஸ்லிம் நாடுகளில் உள்ள இராணுவம் நுஸ்றாவை வழங்குவதற்கும் இவர்களது கரம் பலப்படுத்தப்படுவதற்குமான அரசியல் முன்னெடுப்பு தஃவாக்கள் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும்.

9.கிலாபா அரசின் கீழ் வாழும் அனைத்து மக்களும் எவ்வித பாகுபாடும் இன்றி நீதமாக நடத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கையை கடந்த வரலாற்றுச் சான்றுகிளில் இருந்து வழங்கி மக்கள் மனங்களை வெல்ல வேண்டும். அவர்களுக்கு “கிலாபா அரசில்” நம்பிக்கையூட்டி அதன் உருவாக்கத்தில் பங்களிப்பு செய்ய ஆக்கபல தஃவா முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.

10.அல்லாஹ்வினது உதவியும் வெற்றியும் வந்து கிலாபா நிறுவப்படும்வரை பொறுமையுடன் தொடர்ந்து தஃவா முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து துன்பங்களையும் அவனது தீன் நிலைநாட்டப்படுவதற்காக சகித்துக்கொள்ள வேண்டும்.

Aug 23, 2013

சிரியாவின் இரசாயன ஆயுதப் பிரயோகம் சொல்லும் செய்திகள். (ஒரு கணிப்பு.)




சிரியாவின் இரசாயன ஆயுதப் பிரயோகம் பசர் அல் அசாத்தின் உண்மை நிலையை மீண்டுமொருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது . அத்தோடு மேற்கின் பக்குவமான முதலைக் கண்ணீரும் அதன் மீடியாக்களால் இதன் விடயத்தில் வடிக்கப் பட்ட நிலையில் இந்த சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட இராணுவ அரசியல் பற்றிய பார்வைகள் இதன் மூலம் மறைந்து போகின்றது .

பசர் அல் அசாதின் தரப்பு குறித்த ராக்கெட்டுகளை தான் ஏவவில்லை என மறுப்பதுடன் வேண்டுமானால் அதுபற்றி ஆய்வு செய்ய சர்வதேச சமூகத்தை வேண்டியுமுள்ளது .சம்பவம் இடம்பெற்ற பகுதி தலைநகர் டமஸ்கசின் மாகாண எல்லையான Ghouta என்ற பகுதியே

கடந்த புதன்கிழமை அதிகாலை இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதும் இன்னும் சில சந்தேகங்களை ஏற்படுத்தி நிற்கின்றது .பொதுவாக சிரியக்களம் அதன் புரட்சிப் போராளிகளால் மரபு + கெரில்லா உத்தி கொண்ட போராட்ட முன்னெடுப்புகளை கொண்டே நகர்த்தப்பட்டுள்ளது .பொதுவாகவே ஊடுருவித் தாக்குதல் போன்ற இராணுவ உத்திகளை கெரில்லா அணிகள் இருளோடு கூடிய அதிகாலை நேரத்திலேயே மேற்கொள்வர் . இதன் போது எதிரி அணியின் பலம் வாய்ந்த பாதுகாப்பு நிலைகள் உடைக்கப் படுவதோடு எதிரி வான் வழி உதவிகளை பெற்றுக் கொள்ள முடியாது போவதே அதற்கு காரணமாகும் .

பின்னர் சிதறிய எதிரிகளை 'கட் அவுட் ' போட்டு பிரித்து வேட்டையாடும் நிலை வரும்போது விடிந்து விடும் எதிரியோடு மிக நெருக்கமான சுடு தூரத்துக்குள் போராளிகள் வந்து விடுவர் இப்போதும் எதிரி ஆட்லறி உதவிகளையோ , வான் வழி உதவியையோ எதிர்பார்க்க முடியாது .அந்த வகையில் போராளிகள் குறித்த பகுதி ஊடாக டமஸ்கஸ் நகரை நெருங்கும் ஒரு பாரிய தாக்குதலை தொடுத்த வேலை சிரிய இராணுவத்தின் offensive line ,மற்றும் defensive line தாண்டிய நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் .(கிடைத்த தகவல்களின் படி டமஸ்கஸ் நகரம் சிரியப் போராளிகளால் முற்றுகையிடப் பட்டுள்ளது .)

பசர் அல் அசாதின் அண்மைய அறிக்கைகள் இன்னும் ஒரு விடயத்தை குறித்துக் காட்டுகின்றது .அது சர்வதேச தலையீட்டின் தேவையை இப்போது அவர் சிரியாவில் எதிர் பார்க்கிறார் என்பதே ஆகும். . கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை இது சிரியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாகவும் இதில் வேறு தலையீடுகள் தேவையில்லை என்று காட்டமாக கூறிய அவர் இப்போது சர்வதேச தலையீட்டை வேண்டி வருகிறார். எனவே இந்த சில்லரைக் கடவுளின் அல்லது முதலாளிக் கடவுள்களின் வேலையாக கூட இரசாயன ஆயுதப் பிரயோகம் இருக்கலாம்.

ஜனநாயக சிரியா மீதான புதிய package , U.N மற்றும் NATO இராணுவ சப்பாத்துக்கள் சிறிய மண்ணில் கால் பதிக்க அவசியம் வந்ததை காட்டும் நியாய அடையாளமாக கூட இந்த சம்பவம் இருக்கலாம். இஸ்ரேலின் தூக்குக் கயிற்றையும் , முதலாளித்துவத்தின் தோல்வி அரசியலையும் , உருவாக விட்டு பார்த்துக் கொண்டிருக்கவா முடியும்!? அழிந்து போவதை விட ஆழித்தாவது சற்று வாழ்வோம். எனும் நப்பாசை தான் இன்றைய சிரியா மற்றும் எகிப்து சொல்லும் செய்திகள் ஆகும்.

Aug 19, 2013

உம்மத் எனும் சிந்தனை


இன்று உம்மத் எனும் சிந்தனைக்கு தடைக்கற்களாக இருப்பது தேசியவாதச் சிந்தனை. இதன் விளைவாக இன்று முஸ்லிம் உம்மத்தினது இராணுவ பலம் துண்டாடப்பட்டுள்ளதுடன் மேற்கின ஏஜன்ட்களாக முஸ்லிம் ஆட்சியாளர்கள் இருப்பதால் இன்று முஸ்லிம் இராணுவம் முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்ற துர்பாக்கி நிலைக்கு உம்மத்தை இட்டுச் சென்றுள்ளது. இது எதிரிகளுக்கு மேலும் பலம்சேர்த்துள்ளது.

அத்துடன் தேசியவாதச் சிந்தனையின் காரணமாகவே முஸ்லிம் உம்மத்தினது வளங்கள் மேற்கினால் சுரண்டப்படுவதுடன் அது மேற்கினது முஸ்லிம் ஆட்சியாளர்களால் துஸ்பிரயோம் செய்யப்படுகிறது. இதனால்தான் சோமாலியா மற்றும் எதியோப்பியாவில் பட்டினியால் வாட சவூதி போன்ற அரபிய நாடுகள் செல்வச் செழிப்பில் இருப்பதனை காணலாம்.

முழு உலகிற்கும் தேவையான எரிபொருள், கேஸ் ,தங்கம், இரும்பு போன்றவை பெரும்பாலும் முஸ்லிம்நாடுகளில் காணப்பட்ட போதிலும் தேசியவாதச் சிந்தனையின் காரணமாக இவ்வளங்கள் அத்தேசத்தின் சொத்தாக கணிக்கப்படுவதால் அதில் முஸ்லிம் உம்மத்திற்கு பங்கில்லாமல் இருப்பதனை நாம் காணலாம்.

அதேவேளை இன்று ஈமான் அடிப்படையில் முழு உலகில்வாழும் முஸ்லிம்களும் சகோதரத்துவ பிணைப்பால் இணைக்கப்பட்டிருந்தும் அவர்கள் தேசியவாதச் சிந்தனைக்கு ஆட்பட்டிருப்பதால் இன்று முஸ்லிம் நாடுகளில் ஏற்படும் மேற்கினது படையெடுப்பினால் அல்லலுறும் போதும் இந்த தேசியவாதப்பிணைப்பு இந்த சகோதரத்துவப் பிணைப்பை நலிவடையச் செய்துள்ளது. அத்துடன் தேசியவாதம் மனிதாபிமானமற்றதும் இனவாதத்திற்கு வழி கோலுவதும் தரக்குறைவான சிந்தனையின் வெளிப்பாடுமாகும். இஸ்லாத்திற்கு முரணான ஒரு கருத்து ஆகும்.

ஆகவே இத்தகைய இழிநிலையில் இருந்து உம்மத்தை விடுவிக்க முஸ்லிம்களது பலம் ஓங்கிட தேசியவாதச் சிந்தனையை களைந்து உம்மத் எனும் சிந்தனையை விதைத்திடுவோம். அதுவே இஸ்லாம் உலகில் மீள ஆட்சி நிலைக்குவருவதற்கும் முஸ்லிம்கள் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதற்கும் வழிவகுக்கும்.