Showing posts with label ஒற்றுமை (Unity). Show all posts
Showing posts with label ஒற்றுமை (Unity). Show all posts

Oct 8, 2015

பிரிவினை ஷிர்கின் அடையாளம் !!

உலக அக்கிரமக்காரகளின் கூட்டுச் சதியால் உலகைத் தொழும் வஞ்சகர்களால் முஸ்லிம் சமூகத்தின் உள்ளிருந்து கழுத்தறுக்கும் முனாஃபிக்குகளால் முஸ்லிம்களின் முதுகில் ஏறி வெட்டி எறியப்பட்ட கிலாஃபத் எனும் இஸ்லாமியத் தலைமையை இழந்து நூற்றாண்டு கடந்து விட்டது .தலையில்லா முண்டமாய் உயிரற்ற ஜடமாய் முஸ்லிம் சமூகம் வாழ்கின்றது.

  இஸ்லாத்தின் தலைமையை விட்டு விலகி நிற்கவும் அனுமதியில்லை பிணங்கினால் பிளவு பட்டால் வீரம் வீணாகும் .சோரம் போய்விடுவீர்கள் எச்சரிக்கை என்கிறது அல்குர்ஆன் (8:46) 

  தலைமையில்லா இந்த முஸ்லிம் உம்மா நூற்றாண்டாய் இலக்கின்றி வாழ்கின்றது .இக்கால கட்டத்தில் பட்ட துன்பங்கள் படும் அவதிகள் சொல்லி மாளாது .

 ஆப்கான் வீதிகளிலும் ஈராக்கின் நகரங்களிலும் சிரியாவிலும் லிபியாவிலும் அமெரிக்கா குண்டு மழை பொழிகின்றது .

  ஈமானின் விளிம்பில் நிற்கும் முனாஃபிக்குகளோ இன்னும் வீரியமாய் முஸ்லிம்களை காரிஜியாக்கள் என்கிறார்கள் .
 
முஸ்லிம்களை பிரிக்க முஸ்லிம்களை காஃபிராக்க தனிப் பள்ளிவாசலைக் கட்டக் காசு கொடுக்கிறார்கள் .

அமெரிக்க எஜமானிய யூத கிறித்தவ ஷிர்க்கின் கூட்டுப் படையினரின் நோக்களிந்து முஸ்லிம்களை எகிப்திலும் காஸாவிலும் கொல்கிறார்கள் இந்த முனாஃபிக்குகள் !

   அன்று நபி (ஸல்) அவர்களைக் கொல்லத் துடித்த முஷ்ரிக்குகளின் முனாஃபிக்குகளின் கூட்டுப் பட்டாளம் இன்று தலைமையில்லா முஸ்லிம்களைக் கொல்கின்றது .கேட்க நாதியில்லை .

முஸ்லிம்களின் இறைச்சியை விற்கிறான் பர்மாக்காரன் என்றால் முஸ்லிமை மாட்டு இறைச்சிக்காக  கொல்கிறார்கள் பாரத நாட்டினர் .

  நபி (ஸல்) கூறினார்கள் ஒரு முஸ்லிம் அநியாயமாகக்
கொல்லப்படுவதை அல்லாஹ் ஒருபோதும் சகிப்பதில்லை .அதை விட இந்த உலகம் முழுவதும் அழிந்து போவதை அல்லாஹ் பொருட்டாய் கருதுவதுமில்லை .( திர்மிதி)

  தலைமையில்லா இன்றைய உலகில் முஸ்லிம்களின் உயிருக்கும் உடைமைக்கும் உரிமைக்கும் எந்த மதிப்புமில்லை .மரியாதையுமில்லை .அத்தோடு முஸ்லிம்களை ஒன்றிணைய விடாமல் தடுக்கும் சூழ்ச்சிகளுக்கும் பஞ்சமில்லை .

   புரட்சி மின்னலாய் ஆயிரமாயிரம் குட்டித் தலைவர்கள் தோன்றிக் கொண்டேயிருக்கிறார்கள் .புற்றீசல்கள்போல்!!

  பிரிவினை எனும் ஷிரிக் அவிழ்க்க முடியாத முடிச்சாகி விட்டது .பெரும் பிரச்சனையாகி விட்டது .முஸ்லிம்களை முடக்கியும் விட்டது .

  ஒற்றுமையாய் ஒருடலாய் ஒரே சுவராய் கீறிலில்லா ரசம் போகாத கண்ணாடியாய் வாழ வேண்டிய முஸ்லிம்கள் இன்று வகை தொகையின்றி பிரிந்து கிடக்கின்றார்கள் .

அதே முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் கருத்து முரண்பட்டு மோதிக் கொண்டபோது , அந்தலுசியா எனும் ஸ்பெயினிலிருந்து துரத்தப்பட்டார்கள் .அதுபோல இந்தியாவிலும் பிரித்தாளப்பட்டு அரசியல் அடிமைகளாக்கப் படுகிறார்கள் .

பிரிந்து கிடப்பது நரகின் விளிம்பின் மீது மனிதர்களை நிறுத்தி அழகு பார்க்கும் ஷைத்தானின் கோர விளையாட்டு .சாத்தானின் சூழ்ச்சி ! ஷிர்க் என்பதே ஏகத்துவத்தை மறுத்து அல்லாஹ்வின் கண்ணியத்தை பங்கிட்டுக் கொள்ளும் பிரிவினை !

  அருளுக்கொரு கடவுள் , அன்புக்கொரு கடவுள் , அறிவுக்கொன்று , அழிவுக்கொன்று , எனக்கு உனக்கு என எண்ணிலடங்கா கடவுள்களை உருவாக்கும் தனித்தனி கடவுள்களின் பிரிவுதான் ஷிர்க் .பிரிவு என்பதே ஷிரிக்கின் அடையாளம் .

  தீனை நிலைநாட்டுகள் ! அதில் பிரிந்து விடாதீர்கள் !   அல்குர்ஆன் (42:13)

ஷைத்தானின் சூழ்ச்சியால் பிரிந்து கிடந்த மனித குலத்தை மீண்டும் ஒரே குலமாய் உருவாக்க அனுப்பபட்டவர்கள் தான் நபிமார்கள் .அதில் இறுதியானவரே முஹம்மது (ஸல்) 

   நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பிரித்து விடாதீர்கள் .சேர்ந்து வாழுங்கள் .பிறர் பற்றி நல்லெண்ணம் கொள்ளுங்கள் .

ஒருவர் மற்றொருவரின் கழுத்தை அறுக்கும் காஃபிராகி விடாதீர்கள் .பிரிந்து நிற்பவர்கள் , தனித்தனி அடையாளங்களோடு தனித்து நிற்பவர்கள் நரகத்திற்குரியவர்கள் .

 நாம் பிரிந்து விட வேண்டாம் .
அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பற்றுவோம் .இழந்த இஸ்லாத்தின் தலைமையை கிலாஃபத்தை மீட்டெடுப்போம் !


சகோ. எஸ்.எம்.புஹாரி.


Jul 23, 2015

நபி(ஸல்) அவர்களை அவமதிப்பதை முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!


முஸ்லிம்களின் ஆத்திரத்தை தூண்டக்கூடிய பிரான்ஸ் வார இதழின் நடவடிக்கை பற்றி பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டன. நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் சார்லி ஹெப்டோ (Charlie Hebdo) என்ற ஃபிரான்ஸ் பத்திரிக்கை கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்துள்ளது. கடந்தவாரம் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக ஊழியர்களில் 12 பேர்கள் முகமூடி அணிந்த போராளிகளால் கொல்லப்பட்டதற்கு பதிலளிப்பாக மீண்டும் கேலிச் சித்திரம் வரையப்பட்டுள்ளது! கடந்த சில வருடங்களாக நபி(ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து கேலிச்சித்திரங்களை வரையும் நடவடிக்கைகளில் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை முன்னணியில் இருந்துவருகிறது.

சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக ஊழியர்களின் கொலை பற்றி உணர்ச்சி மேலிட விவாதம் மேற்கொண்ட பத்திரிக்கைகளும் செய்தி ஊடகங்களும் பேச்சு சுதந்திரம் (Freedom of speech) தொடர்பான முஸ்லிம்களின் உடன்பாடற்ற மனநிலை குறித்து கேள்வி எழுப்பின! முஸ்லிம்கள் எதிர்செயல்பாடு கொண்டவர்கள் என்றும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் என்றும் சுதந்திரம்-(யீக்ஷீமீமீபீஷீனீ) என்ற சிந்தனையை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் அல்ல என்றும் அவை குற்றம் சுமத்தின!

 

முஸ்லிம்கள் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?

மேற்குலகின் ஜனநாயக மதச்சார்பின்மைவாதிகள்தான் முஸ்லிம்களை மீண்டும் மீண்டும் தூ£ண்டிவிட்டு வருகிறார்கள் என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் (War on Terror) என்ற கோஷத்தை முன்வைத்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் திட்டத்தில் மேற்குலகம் எத்தகைய நடிவடிக்கையையும் விட்டுவைக்கவில்லை.

செப்டம்பர் 11 க்கு பின்னர் முஸ்லிம்கள் பல்வேறு துயரங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அச்சுறுத்தல்கள், அவமானங்கள், ஆக்கிரமிப்புகள் என்று பல்வேறு இடர்பாடுகளை தங்களுடைய ஈமானின் நிமித்தம் முஸ்லிம்கள் சந்தித்து வருகிறார்கள். இஸ்லாமிய நிலப்பரப்புகளை வெறித்தனமாக ஆக்கிரமித்ததார்கள்! அபூகுரைப் மற்றும் குவான்டனாமோ சிறைகளில் முஸ்லிம்களிலுள்ள ஆண்களையும் பெண்களையும் அடைத்துவைத்து கொடூரமாக சித்ரவதை செய்தார்கள்! நபி(ஸல்) அவர்கள்மீது கேலிச்சித்திரம் வரைந்து வெளியிட்டார்கள்! நபி(ஸல்) அவர்களையும் அவர்களின் கண்ணியமிக்க மனைவியரையும் இழிவுபடுத்தும் வகையில் புத்தகங்களை வெளியிட்டார்கள்! புனிதமிக்க குர்ஆனை இழிவுபடுத்ததினார்கள்! ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்தார்கள்! ஸ்வீடன் நாட்டில் மஸ்ஜிதுகளுக்கு மினாரா கட்டுவதற்கு தடைவிதித்தார்கள்! மேலும் இதுபோன்று இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான எண்ணற்ற அநீத செயல்பாடுகளை கட்டவிழ்த்து வருகிறார்கள். 

முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொண்டுள்ளோம், மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் அனுப்பிய நபிமார்களில் முஹம்மது(ஸல்) அவர்கள் இறுதித்தூதராக இருக்கிறார்கள் என்பதிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இதற்கு முற்றிலும் முரண்பாடாக, மேற்குலக மதச்சார்பற்ற ஜனநாயக அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அச்சுறுத்தல், இழிவுபடுத்துதல், ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் முஸ்லிம்கள் சுதந்திரத்தை மதிப்பதில்லை என்று மேற்குலகவாதிகள் கூக்குரல் எழுப்புகிறார்கள்.

மதச்சார்பின்மை‎‎க்கும் மக்களாட்சிக்கும் பாதுகாவலன் என்று பறைசாற்றிக்கொள்ளும் ஃபிரான்ஸ் அரசு சமீபத்தில் முஸ்லிம்களின் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காமல் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கும் பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கும் தடைவிதித்துள்ளது! எனினும் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக கருதுகின்ற மாண்புமிக்க விவகாரங்களை காஃபிர்கள் தொடர்ந்து இழிபடுத்துவதை எதிர்க்கும்வகையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால், முஸ்லிம்கள் உணர்ச்சிவசப் படக்கூடியவர்களாகவும் எதிர்மறை செயல்பாடுகளை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள்! ஸவ்பான்(ரளி) அறிவித்துள்ள ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உணவருந்தும்போது ஒருவர் மற்றொருவரை விருந்திற்கு அழைப்பது போல் உங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக மக்கள் விரைவாக மற்றவர்களை அழைப்பார்கள். அந்நாட்களில் நாங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதின் காரணமாக இவ்வாறு நிகழுமா?’ என்று ஒருவர் வினவினார். இல்லை! அப்போது நீங்கள் திரளான எண்ணிக்கையில் இருப்பீர்கள், எனினும் கடல்நீரில் அடித்துச் செல்லப்படும் நுரை போன்று இருப்பீர்கள்! உங்கள் எதிரிகளின் உள்ளங்களில் உங்கள் மீதுள்ள அச்சத்தை அல்லாஹ் எடுத்துவிட்டு உங்கள் உள்ளங்களில் வஹ்னைபோட்டுவிடுவான்!என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களே! வஹ்ன் என்றால் என்ன?’ என்று ஒருவர் வினவினார். உலகத்தின் மீதுள்ள பற்று மற்றும் மரணத்தின் மீதுள்ள வெறுப்புஎன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்  (அபூதாவூது, அஹ்மது)‎‎‎‎‎‎‎‎

இன்றைய முஸ்லிம்களின் உண்மைநிலை குறித்து இந்த ஹதீஸ் தெளிவாக விவரிக்கிறது, 170 கோடி மக்கள் தொகையையும் பெட்ரோலியம், நிலவாயு போன்ற அரிய இயற்கை வளங்களையும் பெருங்குவியலாக பெற்றிருந்தபோதும் இன்றைய முஸ்லிம்களுக்கு எத்தகைய முக்கியத்துவமும் இல்லை! அவர்கள் கடலின் நுரையைப் போன்ற சிறுமையடைந்து கிடக்கிறார்கள்!

 

இதற்குரிய தீர்வுதான் என்ன?

ஆர்ப்பாட்டம் நடத்துவதன் மூலமாகவோ அல்லது ஃபிரான்ஸ் அரசுத்தூதருக்கும் ஐ.நா. பொதுச் செயலாளருக்கும் கடிதம் எழுதுவதன் மூலமாகவோ இந்த விவகாரத்திற்கு தீர்வு ஏற்படுத்தமுடியாது; மாறாக இத்தகைய விவகாரங்கள் கடந்த காலத்தில் ஏற்பட்டபோது அன்றைய முஸ்லிம் தலைவர்கள் அவற்றிற்கு எவ்வாறு தீர்வுகண்டார்கள் என்ற முன்னுதாரணத்திலிருந்து நாம் படிப்பினை பெறவேண்டும். சத்தியத்திற்கும் & அசத்தியத்திற்கும், இஸ்லாத்திற்கும் & குஃப்ருக்கும் எதிரான இப்போர் புதிதானதல்ல! இந்த தாக்குதல்கள் அனைத்தும் இஸ்லாத்திற்கு எதிராக நடத்தப்படும் போரின் வெளிப்பாடாகவே இருக்குகிறது. கடந்த 19 ம் நூற்றாண்டில் முஸ்லிம்களுடைய ஈமானுக்கு எதிராக காஃபிர்கள் தாக்குதல் நடத்தும் பொருட்டு நபி(ஸல்) அவர்களையும், அவர்களுடைய கண்ணியமிக்க மனைவி ஆயிஷா(ரளி) அவர்களையும் கேலி செய்யும் நாடகம் ஒன்றை அரங்கேற்ற முயற்சித்தார்கள்! இதற்கு பதிலளிப்பாக அன்றைய முஸ்லிம்களின் கலீஃபாவாக இருந்த அமீருல் மூஃமினீன் இந்த இழிசெயலை மேற்கொண்ட நாடுகளின் அரசுத்தூதர்களை அழைத்து அந்த நாடகத்தை நிறுத்தும்படி எச்சரிக்கை செய்தார், உடனடியாக அவை கலீஃபாவின் எச்சரிக்கைக்கு அஞ்சி தங்களுடைய நடவடிக்கையை நிறுத்திவிடுவதாக கூறிவிட்டன! அந்நாடுகள் பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் ஆகியவையாகும்!

கிலாஃபா ஆட்சியின்கீழ் பல்வேறு மதத்தை சார்ந்த மக்கள் ஒன்றாகவும் அமைதியாகவும் வாழ்ந்தார்கள், அதில் சிறுபான்மையினர் நசுக்கப்படவில்லை, ஏழைகள் கவனிப்பின்றி விட்டுவிடப்படவில்லை! உண்மையாகவே முஸ்லிம்கள், ஹிந்துக்கள், கிருஸ்த்தவர்கள், யூதர்கள், பௌத்தர்கள் ஆகியோர் கிலாஃபா அரசின்கீழ் நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதற்கு வரலாறே சான்றாக திகழ்கிறது.

பிரிட்டன் மற்றும் காலனியாதிக்க மேற்கத்திய அரசுகளின் பிரித்தாளும் கொள்கையின் அடிப்படையில்தான் முஸ்லிம்களின் நிலப்பரப்புகள் துண்டு துண்டுகளாக உடைக்கப்பட்டன! ஒற்றுமையாக வாழ்ந்துவந்த பல்வேறு மதத்தை சார்ந்தவர்கள் மத்தியில் பரஸ்பர வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் ஏற்படுத்தப்பட்டு ஓரிரவில் அவர்கள் எதிரிகளாக ஆக்கப்பட்டர்கள்!

 

கண்ணியமிக்க முஸ்லிம்களே!

நாம் மிகச்சிறந்த சமுதாயம் என்பதை நிச்சயமாக நினைவில் கொள்ள வேண்டும், மேற்கத்தியர்கள் நிச்சயமாக இதை உணர்ந்துள்ளார்கள். அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பெரும் திட்டங்களை தீட்டி செயலாற்றியபோதும் நம்மை சிறிதும் பலவீனப்படுத்த முடியவில்லை! எனவே நாம் உயிரினும் மேலாக கருதுகின்ற நமது இந்த விவகாரத்தில் இப்போது அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்! ஆம்! நமது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீதும் அல்லாஹ்வின் வேதத்தின் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்த துணிந்துள்ளார்கள்! நபி(ஸல்) அவர்கள்மீது கேலிச்சித்திரம் தீட்டுவதை நாம் கண்டித்தால் அவர்கள் மேலும் அதுபோன்ற கேலிச்சித்திரங்களை வரைந்து வெளியிட்டு வருகிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தை கழிவறையில் வீசியெறிகிறார்கள்! அதை தீயிட்டு கொளுத்துகிறார்கள்! இந்த இழிவான நடவடிக்கைகள் வாயிலாக நம்முடைய இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீதும் இறை வேதத்தின் மீதும் நாம் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை அசைத்துவிடலாம் என்று நம்புகிறார்கள்.

கிலாஃபா எனும் உண்மையான தலைமை இல்லாவிடில் நாம் மிகநெருக்கடியான சூழலில் தள்ளப் பட்டுவிடுவோம் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். நேர்வழிகாட்டப்பட்ட கிலாஃபாதான் நம்முடைய கண்ணியத்தையும், சிறைபட்டுக் கிடக்கும் நம்முடைய சகோதரர்களையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நமது நிலங்களையும் நமது மஸ்ஜிதுகளையும் திரும்பவும் மீட்டுக்கொடுத்து இஸ்லாமிய மாண்புகளை அடித்தளமாகக் கொண்ட சமூகத்தை அமைப்பதற்கு ஆற்றல்பெற்றது. இஸ்லாத்தின் கண்ணியத்தையும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கண்ணியத்தையும் முஸ்லிம்களின் கண்ணியத்தையும் பாதுகாக்க அது போராடும்!

 

இதற்கு நாம் எவ்வாறு பதிலளிக்கவேண்டும்!

நமது இருப்பிடங்களில் அமர்ந்துகொண்டு முஸ்லிம் உலகத்தின் இக்கட்டான நிலையை செய்திஊடகங்களில் பார்த்து துயரங்கொள்வதால் மட்டும் எத்தகைய பயனும் ஏற்படப்போவதில்லை. மாறாக எந்த நிலப்பரப்பில் நாம் இருந்தபோதும் இணைந்து செயலாற்றி நிச்சயமாக மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.

மேற்கத்தியர்களின் அச்சுறுத்தல்கள், நமது சகோதரர்களும் சகோதரிகளும் எதிர் கொண்டுள்ள இன்னல்கள் துயரங்கள், நமது இஸ்லாமிய நிலப்பரப்புகளின் ஆக்கிரமிப்புகள், வாழ்வியலில் நாம் அடைந்துள்ள பின்னடைவு போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரேயொரு தீர்வுதான் நமக்கு முன்பாக இருக்கிறது! ஆம்! ஒரே தலைமையின்கீழ் நாம் ஒன்றிணைய வேண்டும்! மனித சமுதாயம் முழுமைக்கும் நீதி செலுத்துவதற்கு திறன்பெற்ற செயலாக்க அமைப்பின்பால் நாம் ஒன்றிணையவேண்டும்! நமக்கு ஏற்பட்டுள்ள துயரத்திலிருந்தும் கீழ்நிலையிலிருந்தும் விடுபட வேண்டுமென்றால் நாம் நமது கரங்களை ஒன்றிணைக்க வேண்டும்! ஆம்! கிலாஃபத்திற்காக விடுக்கப்படும் அழைப்பில் நமது கரங்களை ஒன்றிணைக்க வேண்டும்!

எனவே நமது கட்டாயக்கடமை என்னவென்றால்,

·நமது உம்மத்தை பாதிக்கும் விவகாரங்கள் பற்றிய அறிவையும் அது பற்றிய விழிப்புணர்வையும் நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

·இந்த குறிக்கோளுக்கான ஹுகும்களையும் தீர்வுகளையும் குர்ஆன் சுன்னா அடிப்படையில் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

·அல்லாஹ் அருளியுள்ள ஷரீஆவை நிலைநாட்டுவதற்காகவும் முஸ்லிம்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் அழைப்புவிடுக்கும் உலக முஸ்லிம் சகோதரர்களுடன் நாம் இணைந்து நிற்கவேண்டும்.

·நமது சகோதர சகோதரிகளுக்காகவும் அல்லாஹ்வின் உதவிக்காகவும் நாம் துஆ செய்யவேண்டும்.

·இஸ்லாத்தையும் நபி(ஸல்) அவர்களையும் இழிவுபடுத்துவதை நிறுத்துவதற்குரிய தீர்வு என்பது நேர்வழிகாட்டப்பட்ட கிலாஃபா எனும் அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதுதான் என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். அது முஸ்லிம்களின் கேடயமாகும்! அதுவே தீனுடைய பாதுகாப்பாகும்! அதுதான் இஸ்லாத்தின் சின்னமாகவும் அதன் அச்சாணியாகவும் விளங்குகிறது! இன்னும் முஸ்லிம்களின் வாழ்வாகவும் அவர்களுடைய கண்ணியமாகவும் உடமையாகவும் விளங்குகிறது!

 

ஈமான்கொண்டவர்களே! அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களுக்கு உங்களுக்கு வாழ்வளிக்கும் விஷயத்தை நோக்கி அழைப்பு விடுத்தால் அதற்கு பதிலளியுங்கள்!    (அல்அன்ஃபால் : 24) 

 

 

www.sindhanai.org

Jul 19, 2014

வீரத்தின் வார்த்தைகள் புரியாதா !? (காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு )


"என்னை சிறை பிடித்ததும் சித்திரவதை செய்ததும் அல்லாஹ்வின் நாட்டம் தான் என்றால் நான் சஞ்சலப்படவில்லை ; என்னை சிறை பிடித்ததும் சித்திரவதை செய்ததும் 'ஜாஹிலியத் 'என்றால் நான் இந்த அல்லாஹ்வின் எதிரிகளிடம் மண்டியிடப்போவதுமில்லை ;
கல்வித்துறையை முழுமையாக இஸ்லாமிய மயமாக்கிடும் இலட்சிய இஸ்லாமிய ஆட்சியின் கீழ் மட்டுமே நான் அமைச்சர் பதவிகளை பற்றி சிந்தித்திட முடியும் ."
இந்த வார்த்தைகளின் சொந்தக்காரன் யார் தெரியுமா ? வேறு யாருமல்ல இஹ்வான்களின் மூத்த பிதாக்களில் ஒருவரான சையத் குத்ப் (ரஹ்) அவர்கள்தான் !
ஆயிரம் துண்டுப் பிரசூரங்களும் , நூறு பேச்சு மேடைகளும் சாதிக்காததை ஒரு துப்பாக்கித் தோட்டா சாத்தித்துவிடும் எனும் கருத்துடைய லெனினிய வாதிகளின் எகிப்திய எஜென்ட்டான காட்டேரி நாசருக்கும் வலித்தது இந்த இடம் தான் .
அவரது பேச்சும் ,பேனா முனையும் அணு ஆயுதங்களை விட'கிரெம்ளின்'தொடங்கி 'வைட்ஹவுஸ்' வரை இஸ்லாத்திற்கு முன்னால் சவாலுக்கு அழைத்தது.இந்த கோதாவில் காட்டேரிநாசர் கூட்டத்தை முஸ்லிம் உம்மாவின் கோமாளித்தனமான கோடாரிக்காம்பாக இனம் காட்டினார் சையத் குத்ப் (ரஹ்) . அதனால் இவருக்கு சிறை ,சித்திரவதை ,எனத்தொடர்ந்து தூக்கிலிடும் வரை ஓயவில்லை அந்த நயவஞ்சக பிறவிகள் .
அநியாயக்கார ஆட்சியாளர் முன் சத்தியத்தை முழங்கினார் இதுதான் அவரது ஒரே குற்றம் ;ஆதாரத்துக்கு இழுத்து வந்தது அவர் சிறையில் இறுதியாக எழுதிய நூல் 'மைல் கற்கள் ' பன்னிரண்டு அத்தியாயங்கள் கொண்ட இந்நூலின் இறுதி அத்தியாயம் 'இதுதான் பாதை இதுதான் பயணம் ' எனும் தலைப்பு.
அதில் 'சூரா அல் புரூஜ் ' குறிப்பிடும் அந்த விசுவாசிகள் பற்றிய செய்தி ! நீரில் நீராடவே அச்சப்படும் எம்மைப் போன்றவர்களுக்கு
அநியாயக்கார ஆட்சியாளனுக்கு முன்னால் சத்தியத்தோடு வாழ்வு அல்லது வீர சுவனம் எனும் முடிவில் நெருப்பில் நீராட துணிந்த ஒரு சமூகத்தின் வரலாற்றை காலத்தால் எரிக்க முடியாமல் அல்லாஹ்(சுப்) 'வஹி' யாக்கிய தூய வரலாறு . பாதை தெளிவு பயணிக்க யார் தயார் ? கேள்வி கேட்டு 'ப்ரோபிட் பேசில் ' பிரிண்ட் போடும் பிறவியுமல்ல சையத் குத்ப் (ரஹ்) ;சொன்னார் செய்தார்.
இவர் 'குப்ரியத்தின்' ஏஜெண்டுகளால் மட்டும் எதிர்க்கப்படவில்லை மாற்றமாக இஸ்லாத்தை பூசு பொருள் அரசியலாக பாவிக்கும் மனிதர்களும் ,சூழ்நிலைவாத மாயம் பிடித்தவர்களும் இவரை விமர்சன மேடையில் தரம் குறைக்கப்பார்க்கிரார்கள் !
பரவாயில்லை நாளை 'குத்சை'முஸ்லீம்களின் இரத்தச் சகதியாக்கி சியோனிச சாம்ராஜிய எல்லைக்குள் மதீனாவையும் உள்ளடக்கி இஸ்ரேல் எனும் கள்ளப்பிறப்பு உரிமை கோரும்போது விட்டுக்கொடுப்போடு சமரசம் செய்யுமா ? சமர் செய்யுமா ?என்பது கேட்கவேண்டிய கேள்விதான் !ஏனெனில் சியோனிச ஆலோசனையில் கிறிஸ்தவர்கள் ஆயுதம் தர எமக்கான கபுருகளை நாமே தோண்டுவதுதான் காலத்தின் தேவையாக எம்மால் உணரப்பட்டுள்ளது

Jul 11, 2014

பிளவு படுத்தப் பட்ட முஸ்லீம் உம்மாவும் , பிரித்து மேயும் மேற்கின் அரசியலும் .(காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு )


ஓன்று அமெரிக்காவை வருடும் தென்றல் ! மற்றையதோ வெற்று மீடியா மின்னல் !ஒன்றின் வருடும் குளிர்ச்சியும் மற்றையதன் எதிர்ப்பு 'இமேஜ் ' எனும் 'நைதரசனும் 'முதலாளித்துவ ஏகாதிபத்திய நிலைப்புக்கு காலத்தின் தேவைகளே !தவிர முஸ்லீம்கள் தெளிவாகவே ஏமாற்றப் படுகிறார்கள் . இன்னும் நம்ப வைத்தும் கழுத்தறுப்பார்கள் . இந்த வரைவிலக்கணத்தின் கீழ்தான் மத்திய கிழக்கு ,தெற்காசிய முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிலைகள் , முதலாளித்துவ 'தாகூத்தால்' தாபிக்கப் பட்டுள்ளன .
பிரித்தானியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த கர்சன் பிரபு 1924 ஜூலை 24 இல் 'லௌசான் ' ஒப்பந்தத்தின் பின்னர் தெரிவித்த பிரபல்யமான கருத்து கீழே வருகின்றது .
"இஸ்லாமிய மக்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறிய வேண்டும் . கிலாபத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றி கண்டதைப் போல உணர்வு பூர்வமாகவோ , பண்பாட்டு ரீதியாகவோ , வேறு எந்த வகையிலும் ஒற்றுமை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தின் முக்கிய விடயம் என்னவென்றால் துருக்கியை நாம் வீழ்த்தி விட்டோம் அது ஒருபோதும் மீண்டும் (கிலாபத்தின் அடிப்படையில் )எழுந்து வராது ; (குறுகிய சுல்தானிச ,தேசிய எல்லைகள் அடிப்படையில் எழுந்து வருவதில் நாம் அஞ்சத் தேவையில்லை) ஏனென்றால் நாம் இஸ்லாத்தின் ஆக்க பூர்வமான சக்தியான கிலாபத்தை வீழ்த்தி விட்டோம் .
இப்போது நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் சவூதி அரேபியா , ஈரான் ,துருக்கி ,கட்டார் ,எகிப்து ,டினூசியா , லிபியா ,ஈராக் ,சிரியா ,இந்தோனேசியா , மலேசியா , பாகிஸ்தான் , பங்களாதேஷ் ..... இப்படி ஒரு 'லிஸ்டை ' தயாரித்து பார்த்தால் ; இத்தகு அரசியல் சகதியில் புரட்டி எடுக்கப் பட்ட சாபக்கேட்டு அரசியலின் வடிவங்களாகவே இன்று காட்சி தருகிறார்கள.
இதற்குள் இருந்து தமது கௌரவ தென்றல் களையும் , கௌரவ மின்னல் களையும் காலத்தின் தேவை கருதி ஏற்படுத்தி விடுவதே முதலாளித்துவ ஏகாதிபத்திய சந்தைக்கு கொழுத்த இலாபத்தை பெற்றுத்தரும் விடயமாகும் . இத்தகு அரசியலில் சேர்த்தல் ,கூட்டல் , கழித்தல் அழித்தல் , அளித்தால் பக்குவமாக நாடக பாணியாக (நேரடி ,மறைமுகமாக ) முதலாளித்துவத்தால் மேற்கொள்ளப்படும் என்பதே 1924 இன் பின்னரான தொடர் நிகழ்வு .
இந்த வரிசையிலே தான் சவூதி ,ஷியா ஈரான் என்ற பாத்திரங்களாகும் ; இங்கு இரண்டின் தேவைகளும் அவர்களின் சேவைகளுக்காகவே என்பது பகிரங்க இரகசியம் இந்த நிலையில் முஸ்லீம் உம்மத்தின் முன் தமது துப்புக்கெட்ட 'இமேஜை' தூக்கிக் காட்ட மட்டுமே சிலவேளை (ரசூல் (ஸல் ) அவமதித்தது தொடங்கி ,பாலஸ்தீன் விவகாரம் வரை ) வாய் சவாடல் விடுவார்கள் .
நேற்றைய சல்மான் ருஸ்தியும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான் , பலஸ்தீனில் யகூதியும் தனது எல்லைகளை அகற்றிக் கொண்டே செல்கிறான் , அமெரிக்காவில் ஓட்டிய அவமதிப்பு 'ரீளின்' வடு காய முன்னே பிரான்சில் அதற்கு விளம்பரப் போஸ்டர் வெளியிடப்பட்டது . பிறகு பெல்ஜியத்தில் புதிய ரீல் விடப்பட்டது !!?? இப்படி இஸ்லாத்தின் மீது அவமதிப்பு தொடர்கிறது ,முஸ்லீம்கள் மீது அநியாயமும் தொடர்கிறது , முதலாளித்துவ ஏகாதிபத்தியத்துக்கு முஸ்லீம்களாகிய நாம் ஒரு கேலிக்குரிய பாத்திரங்களாகி விட்டோம் ! என்பது மட்டும் தான் உண்மை . வாய்சவாடல்களால் எமக்கு ஆகப் போவது எதுவுமில்லை.
இந்த வெத்து வேட்டுக்கள் வெந்த புண்ணில் ஈட்டியை பாய்ச்சும் பிரச்சாரங்களாகவே ஆகி விடுகின்றன . முஸ்லீம் உம்மத்தின் உண்மையான தீர்வும் , இஸ்லாத்தின் எதிரிகளின் அச்சமும் முஸ்லீம்களாகிய நாம் மீண்டும் ஒரே தலைமையில் ஓன்று பட்டு எழக்கூடிய கிலாபா ஆட்சி முறையிலே தான் தங்கி இருக்கின்றது .அதன் பெயரிலும் ஒரு படம் ஓட்டப்படா விட்டால் சரி !!!

Jul 5, 2014

இஸ்லாமிய ஆட்சி என்பது....?



1.வாழ்வில் எழும் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வை குர்ஆன் சுன்னாவில் இருந்து எடுத்து மனிதனது வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் ஆட்சிமுறைதான் இஸ்லாம் கூறும் ஆட்சிமுறையாகும்!

2.இஸ்லாம் ஆட்சிசெய்யப்படுவதென்பது குறித்த தேசத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக அமைய முடியாது.

3.அது தாவாமூலமும் ஜிஹாத் மூலமும் அவ்வரசினால் முன்னெடுக்ப்படவேண்டும்.

4.அத்துடன் ஒரு முஸ்லிமுக்கு பிரச்சினை என்றால் அந்த ஆட்சியாளன் அது குறித்து தீவிரமான நடவடிக்கை எடுத்து குறித்த இஸ்லாத்தின் எதிரியுடன் கடும்போக்கை கையாளவேண்டும்.

5.மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளனை பதவிநீக்கம் செய்யும் வழிமுறையாக காலவரையறை என்பது கிடையாது.

6. நான்கு வருடத்திற்கு ஒருமுறை விரும்பியவரை தெரிவுசெய்து ஆட்சிசெய்வது என்பது எமது வழிமுறை இல்லை. ஆட்சித் தலைவராக ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரிடம் தெளிவான குப்ர் வெளிப்படும் வரை அந்த ஆட்சியாளரை பதவி நீக்கம் செய்ய முடியாது.

7. அவ்வாட்சியாளர் இன்று முஸ்லிம்கள் கருவறுக்கப்படும் போது கண்டுகொல்லாமல் மேற்கோடும் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியவாதிகளோடும் கைகுழுக்கியபடி முஸ்லிம்களது விவகாரங்களை கவனிக்க முடியாது.

8. அவ்வாட்சியாளர் எதிரிகளுடன் உரிய முறைப்படி நடந்து உம்மத்தை மீட்கவேண்டும்.

9. இவை யாவற்றையும் இந்த பல்கட்சி முறைகளுடன் கூடிய எதிர்கட்சி ஆளும்கட்சி அமைப்பினால் வடிவமைக்கப்பட்ட மனிதன் சட்டத்ததை ஆக்கும் சட்டசபை வடிவமைப்புக்குள் இருந்து கொண்டு நிறைவேற்ற முடியாது. நிறைய விட்டுக் கொடுப்பபுடன் பகுதியாக தீனுல் இஸ்லாத்தை அமுல்படுத்த முடியுமே தவிர முழுமையாக இஸ்லாத்தை ஆளுகை நிலைக்குள் வைத்துக்கொள்ள முடியாது.

10. நாடுகளை அடித்துப்பிடித்து அதன் பாதுகாப்பு உள்ளேயும் வெளியேயும் உறுதிசெய்யப்டாத நிலையில் முழு உம்மத்திற்கும் கொடுக்கும் தலைமைத்துவம் இல்லை. அதன் அதிகாரமும் பாதுகாப்பும் முழுமையா அதன் ஆட்சிப்பரப்பு எல்லைக்குள் இருப்பதுடன் கலீபா வெளிப்படையாக இருந்து மக்களது விவகாரங்களை முழுமையாக கவனிப்பார். சரீஆவை முழுமையாக அதன் ஆட்சிக்குட்டபட்ட பகுதியினுள் அமுல்படுத்தி தஃவா ஜிஹாத் மூலம் எடுத்துச் செல்லும் அதிகாரத்தையும் பலத்தையும் பெற்றிருப்பார்.

இஸ்லாம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் அமுலாக்கப்படத் தேவையான அரசு கிலாபா அரசு அதுவாகும். இவ்வரசு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் நபி வழியில் மீள் உருவாக்கம் செய்யப்பட வேண்டும். அதுவே இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அனைத்து விதமான சவால்களுக்கும் முகம் கொடுக்கும் அரசாகும். இவ்வரசு முஸ்லிம் நாட்டு இராணுவ நுஸ்றாவுடன் நிறுவப்படுவது நபி வழியாகும். (அவ்ஸ் ஹஸ்றஜ் எனும் முஸ்லிம் இராணுவம் நபி (ஸல்) அவர்களுக்கு கொடுத்த பைஆ மூலம் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் நிறுவிய இஸ்லாமிய அரசு போன்று நிறுவப்பட வேண்டும். மதீன மக்கள் எவ்வாறு நபி (ஸல்) அவர்களுக்கு பையஅத் செய்து அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்திய நிலையில் முழுமையான அதிகாரத்தை அதன் எல்லையில் கொண்டிருந்தார்களோ அவ்வாறு அமைய வேண்டும்.)

அவ்வாறு நிறுவப்பட்டால்
1.அவ்வரசு இன்றுள்ள முஸ்லிம் நாடுகளுக்கு இடையிலான தேசிய எல்லைகளை களையச் செய்யும்.
2.முஸ்லிம்களை உம்மத் எனும் சகோதரச் சிந்தனையால் இணைக்கும்.
3.பொது எதிரியை எதிர்கொள்ளும்.
4.தீனுல் இஸ்லாத்தை முழுமையான தனது அரசின் எல்லைக்குள் அமுல்படுத்தும்.
5.வெளிநாட்டு கொள்கை மூலமும் ஜிஹாத் மூலம் அவ்வரசு தீனுல் இஸ்லாத்தை உலகமுழுவதிலும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கும்.

May 28, 2014

அந்த நாள் மறந்து விட்டதா ?


அந்த நாள் மறந்து விட்டதா ? இந்த முஸ்லீம் உம்மத்தின் மீது உத்தியோக பூர்வமாக தாகூத்திய அடிமை சாசனம் வரையப்பட்ட நாள் . காசா முதல் காஸ்மீர் வரை கந்தலாக்கப்பட்ட இந்த முஸ்லீம் உம்மத்தின் உயிர் ,உடமை மானம் பற்றி தட்டிக்கேட்க நாதியற்றதாக்கி அல்லாஹ்வின் அடிமை மட்டுமே என்ற கண்ணியத்தின் வரலாறு ;தேசம் ,தேசியம் , அரபி, அஜமி, வெள்ளையன்,ஆபிரிக்கன் என்ற எல்லைக் கோடுகள் மூலம் களங்கப் படுத்தப் பட்ட நாள் . இஸ்ரேல் எனும் இரக்கமற்ற இரத்தக் காட்டேரி தன்னை சுற்றியிருந்த அரசியல் விலங்கின் பூட்டை உடைத்து தனது சாவகாசமான
சரித்திரப் படுகொலைகளுக்கு சொடுக்குப்போட்டு பாதை அமைத்த நாள் . 

போஸ்னிய புதைகுழிகளில் குற்றுயிராய் கதறிய இந்த உம்மத்தின் அழைப்பாக " இஸ்லாத்தின் படை எங்கே ?" எனும் வினாவுக்கு வெட்கித்துப்போய் மௌனத்தை பதில் அளிக்க ஏதுவாய் அமைந்த
நாள் . சிந்துவில் எம் உம்மா சிதறடிக்கப்பட்டபோதும் ,காவித் துரியோதனர்கள் துகில் உரித்து எம் சகோதரிகளை மானபங்கப்படுத்திய போதும் "இன்னொரு முஹம்மது பின் காசிம் வரமாட்டாரா ? " என்ற வினாவுக்கு 'பொலிடிகல் டிப்லோமடிக்' புரியாது கண்ணீரோடு வெறுங்கை ஏந்தி பிரார்த்தனை மட்டும்
புரிந்த நாள் . மியன்மாரின் படுகொலை நாடகத்தில் அரசியல் திருப்பத்தின்
இரத்த சாட்சியமாய் இந்த உம்மத்தின் உதிரங்கள் விலைபேசப்
பட்டபோது மாதக்கணக்கில் வேடிக்கை பார்க்க வைத்த நாள் .

மொத்தத்தில் முஸ்லீம் எனும் சகோதரத்துவ சிந்தனை திசைமாறி ; குப்பார் வீசிய பிச்சைப் பாத்திரத்தில் வாழ்க்கை குதிரைஒட்டி சுகம் காண்பதில் சுவனம் நுழையலாம் எனும் ஜாஹிலீயத் மார்க்கமாக முஸ்லிமின் தலையில்
ஏறி யகூதிய கடிவாளத்தை சிலுவையின் முகவரியோடு பூட்டிய நாள். அது எந்தநாள் ??

 இஸ்லாத்தின் ஒரே தலைமையும், அரசியல் இராஜ தந்திர கேடையமுமான
இஸ்லாமிய கிலாபா வீழ்த்தப்பட்ட நாள். அது ஹிஜ்ரி 1342 ரஜப் மாதம் பிறை 28. ஆனால் இது முடிவுரை எனும் தப்புக் கணக்கில் யூத ,கிறிஸ்தவ எதிரிகளால் கொக்கரிக்கப்பட்ட வார்த்தைப் புரளி என்பது புரியும் காலம்
வெகுதூரத்தில் இல்லை . நம்புங்கள் அந்த முஹம்மதின் (ஸல் ) படை மீண்டும்வரும் ;ஏனென்றால் "சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது அசத்தியம் நிச்சயம் அழிந்து போவதே " நீங்கள் அல்லாஹ்வுக்கு (சுப ) உதவி செய்தால்அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதிப் படுத்துவான் . அவன் கேட்கும் உதவி நீங்கள் அவன் பிரதிநிதி என்பதை உறுதிபடுத்த நிபந்தனை அற்று அவனது மார்க்கத்தை மீண்டும்
சக்தியாக்க உதவுங்கள் என்பதே . அல்லாஹ்வின் தூதருக்கும் (ஸல் ) அந்த
சஹாபாக்களுக்கும் உதவிய அதே ஜிப்ரீல் (அலை ) தனது வானவர்
படையோடு எமக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார் . அல்லாஹு அக்பர்............

Oct 26, 2013

ஒற்றுமை காலத்தின் தேவை, சன்மார்க்கக் கடமை


ஒற்றுமை என்பது குர்ஆன் சுன்னா அடிப்படையில் உருவாக்கப்படவேண்டும்! 

அந்த ஒற்றுமையை ஏற்படுத்தத் தேவையான இஸ்லாம் இழந்துள்ள தலைமை உருவாக்கப்பட்டால் மாத்திரமே நிரந்தரமாக உம்மத் ஒன்றுபடுத்தப்படும்! காரணம் மேற்கினது சிந்தனைத் தாக்கத்திற்குற்பட்டதாக இன்று உம்மத் காணப்படுகிறது.

முஸ்லிம் நாட்டுத் தலைமைகள் மேற்கினது பிரித்தாளும் யுக்தியினது அடிவருடிகளாக மாறி அவர்களது சுயநலன்களுக்காக உம்மத்தை சுரண்டிவாழ்வதுடன் தீனுள் இஸ்லாத்தை குழிதோண்டிப் புதைப்பதனை நாம் காணலாம்.

எனவே உம்மத் ஒற்றுமைப்படவேண்டுமாயின் இஸ்லாத்திற்கு அன்னியமான மேற்கினது சிந்தனைகளான “தேசியவாதம் களையப்பட்டு” “உம்மத் மற்றும் சகோதரத்துவ சிந்தனை” ஊட்டப்படவேண்டும்!

மேற்கினது பிரித்தாளும் ஆட்சிமுறையினது கருவியான “மனிதன் சட்டத்தை ஆக்கும் ஜனனாயகப் பாராளுமன்ற முறை” மூலமான ஆட்சிமுறை மாறி “கிலாபா ஆட்சி” வரவேண்டும்!

“இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்” (ஆல-இம்ரான்:103)

''முஷ்ரிகீன்களில் நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் தங்கள் மார்கத்தில் பிரிவினையை உண்டு பண்ணி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர்.(அவர்கள்) ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ளதை வைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.'' (ஸுரா : அர்ரூம் :32)

''எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தம் இஷ்டப்படி) பிரித்து (அவர்களும்) பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உமக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை.'' (அல் அன்ஆம் :159)

Oct 16, 2013

இமாம் ஒரு கேடயமாவார்….! அவர் மூலமே முஸ்லிம் உம்மத்தின் கண்ணியம் காக்கப்படும்!

இஸ்லாம் சகல துறைகளிலும் முழுமையாக அமுலாக்கப்படும். குர்ஆன சுன்னா முற்று முழுக்க பின்பற்றப்படும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :“இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாக பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள்.”(அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)

முஸ்லிம்கள் மீது காஃபிர்கள் ஆளுமை செலுத்துவதை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்:
முஃமின்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு எந்த வழியையும் அல்லாஹ் இறைநிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான்.
(அந்நிஸா:141)

விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமது பாதகாவலர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.(ஆல இம்ரான்: 28)

முஸ்லிம்களின் ஒரே தலைமையாகவும், பாதுகாப்பு அரணாகவும் விளங்கிய கிலாஃபா இஸ்தான்புல் நகரில் முஸ்தஃபா கமால் பாஷா என்ற துரோகியால் ஹிஜ்ரி 1342 ரஜப் 28 (கி.பி.1924, மார்ச் 3) ல் வீழ்த்தப்பட்டது.அன்றைய தினம் உஸ்மானிய கிலாஃபத்தின் கலீஃபாவாக விளங்கிய அப்துல் மஜீத் இஸ்தான்புல் நகரிலிருந்து சூரிய உதயத்திற்கு முன்பாக நாடுகடத்தப்பட்டார்.

முஸ்லிம்களின் தலைமை அழிக்கப்பட்டதன் காரணமாக முஸ்லிம் உம்மா அநாதையாக்கப்பட்டதோடு அவர்களின் விவகாரங்களை மேற்குலகம் தீர்மானிக்க வேண்டும் என்ற இழிநிலையும் உருவானது.கிலாஃபத்தை அழித்ததோடு மேற்குலகு ஆதிக்கவாதிகள் முஸ்லிம்களின் நிலப்பகுதிகளை துண்டாடி அவர்களின் ஒற்றுமையை சிதைத்தனர்.ஒரே உம்மத்தாக விளங்கிய முஸ்லிம்கள் மீது காலனியாதிக்க காஃபிர்களால் தேசியவாதம் என்ற இஸ்லாத்திற்கு மாற்றமான சிந்தனை திணிக்கப்பட்டு பல நாடுகளாக கூறு போடப்பட்டார்கள்.

முஸ்லிம் உம்மா மீது இஸ்லாத்திற்கு விரோதமான மக்களாட்சி முறையை ஏற்படுத்தி, அவர்கள் மீது ஜனநாயக கொடுங்கோலர்களையும் சர்வாதிகாரிகளையும் ஏற்படுத்தினர்.

முஸ்லிம்களே !

உலக அரங்கில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வல்லரசாக விளங்கிய இஸ்லாமிய அரசான கிலாஃபத்தின் மீள் வருகையே முஸ்லிம்களின் பிரச்சினைளுக்கான ஒரே தீர்வு என்பதை சிந்திக்க வேண்டாமா?இந்த ஆட்சிமுறையின் கீழ்தான் சுமார் 1300 ஆண்டுகள் முஸ்லிம் உம்மா தனது விவகாரங்களை தொடர்ந்து பராமரித்து வந்திருக்கிறது.கிலாஃபத்தின் மூலமாக இஸ்லாமிய ஆட்சிமுறை அன்றாட வாழ்வியல் விவகாரங்களில் பரிபூரணமாக அமல்படுத்துவதன் மூலமாகவே, முதலாளித்துவ ஆட்சிமுறையின் கொடுமையை அனுபவித்து வரும் மனிதகுலத்திற்கு விடிவு ஏற்படும்.

இன்று முஸ்லிம் உம்மத் இழந்துள்ள கிலாபா நபி வழியில் மீள உருவாவதற்கு தடைக்கற்கலாக உள்ள அடிப்படைச் சிந்தனைகளான தேசியவாதம் மற்றும் மேற்கினது ஆட்சிமுறையாகிய ஜனனாயகம் போனறவற்றில் உள்ள பற்றையும் பிணைப்பையும் தகர்த்தெறிவோம்!
இஸ்லாமிய ஆட்சி முறையாகிய கிலாபாவின் ஆட்சி முறைபற்றிய நபி வழிபற்றி சிந்திப்போம்!

முஸ்லிம் நாடுகளில் அது உருவாக்கப்பட ஆக்கபல தாவாக்களை முன்னெடுப்போம்.

Oct 9, 2013

முஸ்லிம் உம்மத்தின் தார்மீகக் கடமை!

கம்யூனிச உலகின் வீழ்ச்சிக்கு பிறகு அமெரிக்காவின் பிரதான எதிரியாக இஸ்லாம் விளங்குவதாக அமெரிக்கா கருதுகிறது.

இஸ்லாமிய உலகில் மீண்டும் இஸ்லாமிய அரசை ஏற்படுத்தும் எண்ணத்துடன் பல இயக்கங்களும், முஸ்லிம் சமூகமும் செயற்படுகின்ற வேளையில் அவர்களை உடனடியாக அடக்கி தனது மேலாதிக்கத்தை தொடர்ந்து பேண வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது.

எனவே இஸ்லாமிய சிந்தனையை அடிப்படையாகக்கொண்ட ஒரு து}ய இஸ்லாமிய உலகு (கிலாபா ராஷிதா) தோற்றம் பெறுவது குறித்து அமெரிக்கா பயப்படுகிறது.

இதன் விளைவாக பயங்கரவாதத்திற்கு எதிரான தனது வியூகங்களை செயற்படுத்தும் முக்கிய பிராந்தியமாக முஸ்லிம் மற்றும் அரபுலகை அமெரிக்கா தேர்ந்தெடுத்துள்ளது. இதன் விளைவாக முஸ்லிம் உலகெங்கும் போராட்டங்களையும், வன்முறைகளையும் து}ண்டி நிலையற்ற அரசியல் பொருளாதார நிலையை தோற்றுவிப்பதில் அமெரிக்கா பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது.

இதன்படி பல இஸ்லாமிய இயக்கங்களை அமெரிக்கா “பயங்கரவாத இயக்கங்கள்" எனக் கூறி இஸ்லாமிய ஆட்சி நோக்கி அழைக்கும் எந்த ஒரு அமைப்பையும் அமெரிக்கா பயங்கரவாத அமைப்பு என்று கூறுவதன் மூலமாக அவற்றுக்கு எதிராக அதியுச்ச தடைகளை ஏற்படுத்த முனைந்துள்ளது.

இதற்காக அமெரிக்கா ஏனைய நாடுகளையும், வற்புறுத்தியும், அவற்றை ஒன்று திரட்டியும் இந்த இயக்கங்களை ஒடுக்க முற்படுகிறது. இதில் பலிகடாவாக ஆக்கப்படுவது கிலாபா ஆட்சியைக் கொண்டு வர முயலும் முஸ்லீம்களே ஆவர்.

எது எவ்வாறெனினும் முஸ்லீம்கள் முற்றுமுழுதாக இஸ்லாமியர்களாக வாழ வேண்டும் என்பது அவர்கள் மீது அல்லாஹ்வால் சுமத்தப்பட்ட மார்க்கக்கடமையாகும்.

எனவே இது முழுமையாக சாத்தியப்படுவதற்கு கிலாஃபா ஆட்சி முறையைக் கொண்டு முஸ்லிம்கள் ஆழப்பட வேண்டியது அவசியமாகும். இதையே ஷரியா வலியுறுத்துகிறது.

Aug 29, 2013

NATO கூட்டுக் கொலைகாரக் கொள்ளையர்கள்

Interference in Syria.

அமெரிக்கத் தலைமையிலான NATO கூட்டுக் கொலைகாரக் கொள்ளையர்கள் ஒரு இராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வரும் செய்தியே இன்று மீடியாக்களின் பிரதான HOT NEWS ஆக மாறியிருக்கிறது .

இத்தகு இராணுவ நடவடிக்கை நிச்சயமாக பசர் அல் அசாத்துக்கு எதிரானதல்ல .தெளிவாகவே இஸ்லாத்துக்கு எதிரானது என்பதுதான் உண்மையாகும் .

Aug 23, 2013

"சகோதரச்சிந்தனையால்"


"சகோதரச்சிந்தனையால்" இஸ்லாமிய அகீதாவின் பிணைப்பால் இணைவோம்! இஸ்லாம் மீள் எச்சிபெற ஆக்கபல தாவாக்களை முன்னெடுப்போம்!

இன்று முஸ்லிம் உம்மத் வேண்டி நிற்கும் சிந்தனை சகோதரத்துவச் சிந்தனை! களையவேண்டிய சிந்தனை தேசியவாதச்சிந்தனை!

இன்று முஸ்லிம் உம்மத் உணரவேண்டிய அடிப்படைச் சிந்தனை சகோதரத்துவச் சிந்தனையாகும்!

ஆனால் இன்றைய முஸ்லிம் உம்மத் துண்டாடப்பட்டிருப்பதும், காலனித்துவ வாதிகளது நலனுக்கு உம்மத்தை பலவீனப்படுத்த பயன் படுத்ப்பட்டிருப்பதுமான சிந்தனை தேசியவாதமாகும்.

இன்று தேசிய எல்லைக்குள் சிந்திக்கும் முஸ்லிம் ஆட்சியாளர்கள் மேற்கினது முகவர்களாக தொழிற்பட்டு முஸ்லிம்களை கறுவருக்க வழிவகுப்பதுடன் மேற்கினது அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்காக தொழிற்படுவதனை நாம் காணலாம்.

இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்கள் இஸ்லாமிய எழுச்சி மற்றும் மறுமலர்ச்சியின் எதிரிகளாக தொழிற்படுகிறார்கள். இந்த இழிநிலையில் இருந்து மீள நாம் தேசத்திற்கு அப்பால் இணையவேண்டிய தருணத்தில் உள்ளோம்!

எமது பெறுமதிமிக்க முஸ்லிம் இராணுவம் இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்கள் எனும் கயவர்களால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு யகிப்திலும் சிரியாவிலும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் வரை கொன்று குவிக்கும் துர்பாக்கிய நிலைக்கு வித்திட்டுள்ள இந்த தேசியவாதச் சிந்தனையை நாம் களைந்து சகோதரச் சிந்தனையை வலுப்படுத்துவேண்டும்.

இன்று முஸ்லிகளிடம் விதைக்கப்பட்டுள்ள மதஒதுக்கல் சிந்தனை மற்றும் ஜனநாயவழிமுறையிலான இஸ்லாமிய ஆட்சிமுறைபற்றிய பிழையான சிந்தனைகளைக் களைவோம். இஸ்லாத்திற்கு பலம்சேர்போம். சிந்தனைத் தெளிவைப் பெறுவோம்!

அத்துடன் முஸ்லிம் உம்மத்தை இந்த இழிநிலையில் இருந்து விடுவிக்கும் இஸ்லாமிய அரசாகிய கிலபாவின் மீள் உருவாக்கம் பற்றி சிந்தித்து ஆக்கபல தஃவாக்களை முன்னெடுப்போம்

Aug 18, 2013

ஒற்றுமை என்பது குர்ஆன் சுன்னா அடிப்படையில் உருவாக்கப்படவேண்டும்!


அந்த ஒற்றுமையை ஏற்படுத்தத் தேவையான இஸ்லாம் இழந்துள்ள தலைமை உருவாக்கப்பட்டால் மாத்திரமே நிரந்தரமாக உம்மத் ஒன்றுபடுத்தப்படும்! காரணம் மேற்கினது சிந்தனைத் தாக்கத்திற்குற்பட்டதாக இன்று உம்மத் காணப்படுகிறது.

முஸ்லிம் நாட்டுத் தலைமைகள் மேற்கினது பிரித்தாளும் யுக்தியினது அடிவருடிகளாக மாறி அவர்களது சுயநலன்களுக்காக உம்மத்தை சுரண்டிவாழ்வதுடன் தீனுள் இஸ்லாத்தை குழிதோண்டிப் புதைப்பதனை நாம் காணலாம்.

எனவே உம்மத் ஒற்றுமைப்படவேண்டுமாயின் இஸ்லாத்திற்கு அன்னியமான மேற்கினது சிந்தனைகளான தேசியவாதம் களையப்பட்டு உம்மத் மற்றும் சகோதரத்துவ சிந்தனை ஊட்டப்படவேண்டும்!

மேற்கினது பிரித்தாளும் ஆட்சிமுறையினது கருவியான மனிதன் சட்டத்தை ஆக்கும் ஜனனாயகப் பாராளுமன்ற முறைமூலமான ஆட்சிமுறை மாறி கிலாபா ஆட்சி வரவேண்டும்!

அதுவே 57 நாட்டு முஸ்லிம் தலைமைகளை ஒரு தலைமையாக்கும்! அதன் மூலமே உம்மத் கடந்த 1300 வருடமாக பாதுகாக்கப்பட்டது! குர்ஆன் சுன்னா சகல துறைகளிலும் அமுலாக்கப்பட்டது.

பல்வேறு பிரிவுகளான பிரிந்துள்ள உம்மத் கலீபாவின் தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுவதுடன் அவருக்கு கட்டுப்பட்டு நடக்குமாறு ஏவப்பட்டுள்ளோம்!

நிரந்தர ஒற்றுமையை ஏற்படுத்தவுள்ள கிலாபா மீள வருவதற்கான காலகட்டத்தை அண்மித்துள்ள நாம் அதுபற்றிய சிந்தனை மற்றும் பார்வை குறித்து எமது சமூகத்திற்கு அறிவூட்ட கடமைப்பட்டுள்ளோம்!