Showing posts with label பிரிட்டிஷ். Show all posts
Showing posts with label பிரிட்டிஷ். Show all posts

Jul 11, 2016

இராக் மீதான டோனி பிளேரின் போர் நியாயமற்றது: சில்காட்



சதாம் ஹுசைனிடம் இருந்து பிரிட்டனுக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லாத நிலையில், அமைதி வழிக்கான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி முடிக்காமலே பிரிட்டிஷ் அரசாங்கம் 2003 ஆம் ஆண்டில் இராக் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இணைந்ததாக அந்த போரில் பிரிட்டனின் பங்களிப்பு குறித்த நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.
தவறான உளவுத்தகவல்களின் அடிப்படையில் இராக் மீது போர் தொடுக்கும் கொள்கைமுடிவு எடுக்கப்பட்டது தெளிவாகியுள்ளதாக சர் ஜான் சில்காட் தனது விசாரணையின் முடிவில் தெரிவித்துள்ளார்.
அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் தனது முக்கிய கூட்டாளிகளுக்கு தோள் கொடுக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே அமெரிக்காவுடன் சேர்ந்து இராக் மீது போருக்கு போனதாகவும் அந்த விசாரணை அறிக்கை கூறியுள்ளது.

பிரிட்டன் அரசியலில் முக்கிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் சில்காட் விசாரணை அறிக்கையின் முக்கிய அம்சங்களை விளக்கும் காணொளி.

BBC

Oct 28, 2015

பாலத்தீனர்களுக்கு "அநீதி" : இஸ்ரேலைப் புறக்கணிக்கும் பிரிட்டிஷ் கல்வியாளர்கள்





பாலத்தீனர்களுக்கு "அநீதி" - பிரிட்டிஷ் கல்வியாளர்கள் இஸ்ரேல் உயர்கல்வி நிறுவனங்களைப் புறக்கணிக்கிறார்கள்

பாலத்தீனர்களுக்கு எதிராக இழைக்கப்படும் "சகித்துக்கொள்ள முடியாத அநீதிகளுக்கு" எதிராக இஸ்ரேலிய உயர்கல்விக் கூடங்களை தாங்கள் புறக்கணிக்கப்போவதாக பிரிட்டனில் உள்ள நூற்றுக்கணக்கான கல்வியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.


பிரிட்டனிலிருந்து வெளியாகும் "கார்டியன்" பத்திரிகையில் அவர்கள் வெளியிட்ட முழுப்பக்க விளம்பரத்தில், இந்தப் பிரகடனம் வெளியாகியிருக்கிறது. இதில் 343 கல்வியாளர்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

இஸ்ரேலை கலாசார ரீதியாக புறக்கணிக்கும் நடவடிக்கைகள் பிளவுபடுத்துபவை என்றும் அவை பாரபட்சமானவை என்றும் கூறி ஹாரி பாட்டர் நாவலை எழுதிய ஜே.கே.ரௌலிங் உட்பட 150 பிரிட்டிஷ் எழுத்தாளர்களும் கலைஞர்களும் கடிதம் ஒன்றை எழுதி ஒரு வாரத்துக்குப் பின் இந்த அறிக்கை வருகிறது.
 
 
BBC TAMIL