Showing posts with label Islamic leader. Show all posts
Showing posts with label Islamic leader. Show all posts

May 28, 2014

சுல்தான் முஹம்மத் அல் பாதிஹ்

வரலாற்றிலிருந்து...

மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக
நியமித்து விட்டு அணைத்துப் பொருப்புக்களிலிருந்தும் ஒதுங்கி தூர
இடம் ஒன்றிற்கு சென்று விடுகிறார். முஹம்மதோ அறிவு, வால் வீச்சு,
குதிரை ஓட்டம், போர் பயிற்சி என்று அணைத்திலும் சிறந்து விளங்கினும் போதிய அனுபவமற்றவனாக இருந்தான்.
இந்நிலையில் கிரீடம் தரித்து சில மாதங்கள் ஆவதற்குள் ரோம பேரரசு உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் மீது பாரியதொரு படையெடுப்பு மேற்கொண்டது.

இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது முஹம்மதுக்கு மிகக்கடினமாக
இருந்தது. எனவே தந்தையின் உதவியை நாட முடிவு செய்தான். விரைவாக
வந்து படைக்குத் தலைமை தாங்குமாறு தந்தைக்கு கடிதம் அனுப்பினான்.
தந்தையிடமிருந்து “இப்பொழுது நீ தான் சுல்தான், படைக்கும் நீயே தலைமை தாங்கு..! என்னால் வர முடியாது” என்று பதில் வந்தது.

இதற்கு முஹம்மதின் பதில் கடிதம் பின்வருமாரு இருந்தது. “ஆம் நான் தான்
சுல்தான். இப்பொழுது நான் கட்டளையிடுகிறேன், உடனடியாக
வந்து படையை வழி நடாத்துங்கள்..!” இந்த சிறுவன் தான் வரலாற்றில் சுல்தான் முஹம்மத் அல் பாதிஹ் என்று போற்றப்படும்.
நபிகளாரால் முன்னறிவுப்பு செய்யப்பட்டபடி இஸ்தான்பூலை (கொன்ஸ்தாந்திநோபில்) ரோமர்களிடமிருந்து கைப்பற்றிய மாவீரனாகும்.
நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்புச் செய்த அந்த ஹதீஸ். 

“கொன்ஸ்தாந்திநோபில் நிச்சயம் வெற்றி கொள்ளப்படும்.
அதை வெற்றி கொள்ளும் தலபதி எவ்வளவு சிறந்த தலபதி..!,
அதை வெற்றி கொள்ளும் படை எவ்வளவு சிறந்த படை..!” 
- ஹதீஸ்

அம்ரிப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முறை நாம் நபி(ஸல்) அவர்களைச் சூழஅமர்ந்திருந்தோம். அப்போது அண்ணலாரிடம் “கொன்ஸ்தாந்து நோபிள், ரோம் இவற்றில் எது முதலில் வெற்றிகொள்ளப்படும்?” என வினவப்பட்டது. அதற்கவர் “ஹிரகல் மன்னனின் நகரம் – கொன்ஸ்தாந்து நோபிள் – தான் முதலில் வெற்றிகொள்ளப்படும் என்றார்கள்.- முஸ்னத் அஹ்மத் : 6645

கொன்ஸ்தாந்து நோபிள் என்பது துருக்கியின் தற்போதைய இஸ்தான்பூல் நகரமாகும் இதை அரபு மொழியில் குஸ்தன்தீனியா என்றழைக்கப்படுகிறது. அன்று இறுதி தூதரின் காலத்தில் பெரும் வல்லரசான ரோம் சாம்ராஜ்யம் பரந்த இரண்டு கிளைகளைக் கொண்டு அமைந்திருந்தது . ஒன்று; ரோமைத் தலைநகராகக்கொண்ட மேற்கு ராஜ்யம். மற்றையது; கொன்ஸ்தாந்து நோபிளைத் தலைநகராகக்கொண்ட கிழக்கு ராஜ்யம். அக்கிழக்கு ராஜ்யம்தான் பைஸாந்தியப் பேரரசு எனப்பட்டது. பெரும் வல்லரசாகத் திகழ்ந்த இந்நகரம் ஒரு நாள் முஸ்லிம்களால் வெற்றிகொள்ளப்படுமென நபியவர்கள் கூறினார்கள் ‘கொன்ஸ்தாந்து நோபிள் ஒரு வீரனால் வெற்றிகொள்ளப்படும். அத் தளபதிதான் சிறந்த தளபதி. அந்த படைதான் சிறந்த படை என்றார்கள். -முஸ்னத் அஹ்மத்

May 26, 2014

நாளைய தலைவர்களாக வரவேண்டிய இளைஞர்களிடம் இருக்க வேண்டிய சிந்தனைத் தெளிவுகள் என்ன...?


இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்று பொதுவாக எல்லோரும் அழைப்பார்கள். ஆம் நாளைய தலைவர்களாகவுள்ள இன்றைய இளைஞர்கள் எத்தகைய தலைமைத்துவத்தை முன்னெடுக்க வேண்டும். அந்த தலைமைத்துவம் என்ன? 

தலைவர்கள் ஒரு இலக்கு நோக்கி சமூகத்தை வழிநாடாத்துபவர்கள். எந்த இலக்கு நோக்கி இன்று தலைவர்கள் மனிதர்களை வழிநாடாத்துகிறார்கள்? இன்றைய அவர்களது இலக்கு என்ன? நாளைய தலைவர்களாக வரவுள்ள எமது முஸ்லிம் இளைஞர்களின் இலக்கு என்ன? ஒரு முஸ்லிம் தலைமையிடம் இருக்க வேண்டிய இலக்கு என்ன?

ஒரு முஸ்லிம் அவனது இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் தமது இலக்கை தீர்மானிக்கவேண்டும். அந்த இலக்கு இஸ்லாமிய சரீஆ வரம்புகளை பாதுகாப்பதாகவும் சரீஆவை உலகில் நிலைநாட்டக் கூடியதாகவும் அமையவேண்டும்.

ஆனால் இன்று இளைஞர்களது இலக்குகளை மேற்கினது முதலாளித்துவ தலைமை வடிவமைக்கிறது. அதன் மதஒதுக்கல் சிந்தனையின் அடிப்படையில் வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் எனும் தலைமைத்துவப் பயிற்சியை இளைஞர் சமூகத்திற்கு வழங்குகிறது.

ஒரு முஸ்லிம் தனது இலக்கை ஷரீஆ அடிப்படையில் ஒழுங்குபடுத்த கடமைப்பட்டுள்ளான். ஆனால் இன்று அவனது இலக்கை துள்ளியமாக வடிவமைக்கும் இஸ்லாமிய அரசு இல்லாததால் அவன் வேரொறு அகீதாவில் பிறந்துள்ள உலக தலைமையினால் வழிநடாத்தப்படுகிறான். இந்நிலை மிகவும் ஆபத்தான போக்கு. அதனால்தான் அவனுக்கு இஸ்லாம் ஒரு சீரியசான விடயமாக தோனவில்லை. அவனது சிந்தனையில் தெளிவு இல்லை.

ஆகவே, அவனது சிந்தனை சீர்செய்யப்பட வேண்டும். அவனது இலக்குகள் இஸ்லாமிய அடிப்படையில் நெறிப்படுத்தப்படவேண்டும். அவ்வாறு நெறிப்படுத்தப்பட்டு பண்படுத்தப்பட்ட இஸ்லாமிய தலைமையாக மாறும் இளைஞர் சமூகம் நாளைய முஸ்லிம் உம்மத்தை வழிநாடாத்தும் தலைமைகளாக வரவேண்டும். அவர்கள்தான் நாளைய இஸ்லாத்தின் தூதுவர்கள். பாதுகாவலர்கள். தலைவர்கள் என்பதனை உணரக் கடமைப்பட்டுள்ளோம்.

Oct 8, 2013

சரீஆ குறித்து 39 நாடுகளில் நடாத்தப்பட்ட ஆய்வின் சுவாரசியமான முடிவு

Pew Research Center’s Forum on Religion & Public Life த்தினால் சரீஆ குறித்து 39 நாடுகளில் நடாத்தப்பட்ட ஆய்வின் சுவாரசியமான முடிவுகளை காணும்போது அல்லாஹ் தனது நூரை காபிர்கள் வெறுத்த போதிலும் பிரகாரமாக்கியே தீருவான் எனும் அவனது வேதவாக்கு எவ்வளவு உண்மையானது எனத்துள்ளியமாக காட்டுகிறது! 

ஒவ்வொரு 100 வருடத்திலும் அவன் தீனுல் இஸ்லாத்தை புத்தாக்கம் செய்வான் எனும் ஹதீஸ் இந்த புள்ளிவிபரத்தை உறுதிப்படுத்துகிறது.

1924 ஆம் ஆண்டு வீழ்த்தப்பட்ட கிலாபா நபி வழியில் மீள உருவாவதற்கான காலம் அண்மித்துவிட்டது.

அதற்கான மைதானத்தை உலக அரங்கில் அல்லாஹ் உருவாக்கி வருவதனை எண்ணும்போது உள்ளம் பூரித்துப்போகிறது! அல்லாஹூ அக்பர்!

38,000 நேர்காணல்கள் 80 மேற்பட்ட மொழிகளில் Europe, Asia, the Middle East and Africa ஆகிய நாடுகளில் நடாத்தப்பட்டுள்ளது!

99% வீதமான Afghanistan முஸ்லிம்கள் சரீஆ தங்களது தேசத்தில் அமுல்படுத்தப்படவேண்டும் என விரும்புகிறார்கள்!

71% வீதமான Nigeria முஸ்லிம்கள் சரீஆ தங்களது தேசத்தில் அமுல்படுத்தப்படவேண்டும் என விரும்புகிறார்கள்!

72% வீதமான Indonesia முஸ்லிம்கள் சரீஆ தங்களது தேசத்தில் அமுல்படுத்தப்படவேண்டும் என விரும்புகிறார்கள்!

74% வீதமான Egypt முஸ்லிம்கள் சரீஆ தங்களது தேசத்தில் அமுல்படுத்தப்படவேண்டும் என விரும்புகிறார்கள்!

89% வீதமான Palestinian முஸ்லிம்கள் சரீஆ தங்களது தேசத்தில் அமுல்படுத்தப்படவேண்டும் என விரும்புகிறார்கள்!

84% வீதமான Pakistani முஸ்லிம்கள் சரீஆ தங்களது தேசத்தில் அமுல்படுத்தப்படவேண்டும் என விரும்புகிறார்கள்!


pls read the complete report for your detail information: http://www.pewforum.org/Muslim/the-worlds-muslims-religion-politics-society-exec.aspx

Sep 24, 2013

இஸ்லாமிய அரசு ஹஜ்ஜை எவ்வாறு வழிநடத்தும்?



ஹஜ் கடமையை ஹாஜிகள் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை நல்லமுறையில் செய்து கொடுக்க வேண்டியது முஸ்லிம்களின் ஒரே தலைமையான இஸ்லாமிய அரசின்மீது கடமையாகும். இஸ்லாத்தை அழிக்கவும், முஸ்லிம்களின் ஒற்றுமையை சிதைக்கவும் தொடர்ந்து சூழ்ச்சி செய்த மேற்கத்தியர்கள், இறுதியில் கி.பி. 1924 ஆம் ஆண்டு முஸ்லிம்களின் ஒரே தலைமையை வீழ்த்தினார்கள். இதனால் முஸ்லிம் நாடுகள் தோன்றின. ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் ஒரே அமீரின் கீழ் வாழ்ந்து வந்த காலகட்டத்தில் இஸ்லாமிய அரசே ஹஜ்ஜை சிறப்பாக வழிநடத்தியது. ஹஜ் கடமையை நிறைவேற்ற விசா இல்லாமல் மகிழ்ச்சியுடன் சென்றுவந்த அந்த காலகட்டங்களில், இஸ்லாமிய அரசான கிலாஃபத்தின் ஆளுகைக்குட்படாத நிலங்களில் வாழ்ந்துவந்த முஸ்லிம்களுக்கும் கலீஃபாவையோ அல்லது கலீஃபாவின் பிரதிநிதியையோ சந்தித்து முஸ்லிம் உம்மத் எதிர்நோக்கிய பிரச்சினைகளை கவனத்திற்கு கொண்டு செல்ல முடிந்தது.

இஸ்லாமிய அரசிலிருந்து துண்டாடப்பட்டு சவூதி அரேபியா என்ற நாடு பிரிட்டனின் உதவியுடன் உருவாக்கப்பட்ட பிறகு ஹஜ்ஜை சவூது குடும்பத்திலிருந்து முடிசூடும் சவூதி அரேபிய ஆட்சியாளர்கள் நிர்வகித்து வருகின்றனர். இதற்காக சவூதி ராஜா தன்னை இரு புனிதத்தலங்களின் பாதுகாவலர் என்று பெருமையாக கூறிக்கொள்கிறார். அமெரிக்காவின் ஏஜெண்டான சவூதி ராஜா வீழ்வது உறுதி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.மேலும் முஸ்லிம்களின் ஒரே தலைமையான இஸ்லாமிய அரசு இந்த பூமியில் மீண்டும் வருவது உறுதி என்பதாக ஏராளமான நபிமொழிகள் சான்று பகர்கின்றன.எனவே ஹஜ்ஜை ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளாக இருந்தது போன்று மீண்டும் உலக முஸ்லிம்களின் அமீரின்கீழ் வந்துவிடும். இந்நிலையில் இஸ்லாமிய அரசு எவ்வாறு ஹஜ்ஜை வழிநடத்தும் என்பதை சுருக்கமாக காண்போம்.

இஸ்லாத்தின் ஐந்தாவது தூணான ஹஜ்ஜை அதிகமான மக்கள் மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து தரவேண்டியது இஸ்லாமிய அரசின் கடமையாகும். இப்போது சவூதி ஏற்படுத்தியுள்ள ஹாஜிகளிடமிருந்து வருமானம் சம்பாதிக்கும் வழிமுறைகள் மற்றும் விசா நடைமுறைகள் நீக்கப்பட்டு, ஹாஜிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அமைத்துத்தந்து ஹஜ்ஜை எளிமைப்படுதுவதே இஸ்லாமிய அரசின் நோக்கமாகும்.

ஹரமில் தற்போது 35 - 40 லட்சம் மக்களை மட்டுமே கொள்ளும் அளவிற்கு இட வசதி உள்ளது. முஸ்லிம் உம்மத்தின் எண்ணிக்கையையும் வருங்கால எண்ணிக்கையையும் கருத்தில் கொள்ளும்போது நிச்சயமாக இந்த இடவசதியை மேம்படுத்துவது இஸ்லாமிய அரசின் முதல் சவாலாக இருக்கும். எனவே அதற்கேற்றவாறு மஸ்ஜிதுல் ஹராமின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை மறுசீரமைப்பு செய்யவேண்டியது அவசியமாகும்.

சவூதி ராஜாவாக இருந்த ஃபஹத் 1982 ல் ஹரம் ஷெரீஃபை விரிவுபடுத்தினார்; அது மன்னர் ஃபஹதின் விரிவு என அறியப்படுகிறது. தற்போதுள்ள ராஜாவான அப்துல்லாஹ்வும் மற்றொரு விரிவாக்க திட்டத்தை அறிவித்துள்ளார். அது 2020 ஆம் ஆண்டில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னர் ஃபஹத் விரிவாக்கத் திட்டதின்போது மஸ்ஜிதுல் ஹராமை சுற்றி நிறைய நிலங்கள் தேவைப்பட்டது. எனவே ஆயிரக்கனக்கான வீடுகள் (சிறப்பு மிகுந்தவை உட்பட) அழிக்கப்பட்டன. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டவற்றில் பெரும்பகுதி முஸ்லிம் அல்லாத ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டது. இதன்மூலம் ஹரம் ஷெரீஃபில் நுழைய அனுமதி இல்லாதவர்களுக்கு ஹரமை சுற்றி ஹோட்டல்களை அமைக்க சவூதி அரேபிய ராஜா வழி ஏற்படுத்திக் கொடுத்தார். ரேடிசன், ஷெரட்டன், இண்டர்காண்டிநென்டல் போன்ற நிறுவனங்களுக்கு ஹரமை சுற்றி பெரும் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. புனித நிலங்களை அசுத்தமானவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து சவூதி ராஜா புளகாங்கிதம் அடைந்தார். எனினும் ஹஜ் வகுப்புகளை தேர்ச்சியுடன் நடத்தும் சவூதி அறிஞர்கள் மவுனம் காத்தனர். சமீபத்தில் அமெரிக்காவின் பாரிஸ் ஹில்டன் தன்னுடைய கிளையை மஸ்ஜிதுல் ஹராமை சுற்றியுள்ள வணிக வளாகத்தில் திறந்துவைத்தபோது உலக முஸ்லிம்கள் வருந்தினர்..

இத்தகைய விரிவாக்கத் திட்டம் சவூதி அரேபிய ராஜாவிற்கு அரசியல் மைல்கல்லாகியது போன்றே அவருடைய குடும்பத்தினருக்கும் மக்காவில் ரியல் எஸ்டேட் மூலம் சொத்துக்கள் கொழிக்க உதவியது தற்போதைய சவூதி அரேபிய ராஜாவின் திட்டப்படி, உட்புற மற்றும் வெளிப்புற தொழுகை இடங்களை சேர்த்து 3,56,800 ச.மீ (88.2 ஏக்கர்) 40 லட்சம் ஹாஜிகளை உட்கொள்ளவே போதுமானது. மஸ்ஜிதுல் ஹராமின் வடமேற்கில் 15 லட்சம் ச.மீ அளவில் பிரம்மாண்டமான ஷாமியா திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. அல் ஷாமியா, கரோல், அல் கரரா வ அல்கா போன்ற திட்டடங்களின் மூலம் 30 லட்சம் ச.மீ வரை நிலங்கள் நீட்டப்பட்டு பல உணவகங்கள், கடைவீதி , பணம் புழங்கும் சந்தை மற்றும் குடியிருப்புகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

மீண்டும் வர இருக்கின்ற இஸ்லாமிய அரசு, அதிக எண்ணிக்கையில் வரும் ஹாஜிகளை உட்கொள்ளும் அளவிற்கு ஹரமை சுற்றி திறந்த வெளியை அதிகரிக்க முற்படும். கோடைக்கால வெயிலின் வெட்கையை தணிக்க மதீனாவில் அமைந்துள்ளதைப் போன்ற காற்று வசதி ஏற்பாடுகளையும் இயந்திர குடைகளையும் பயன்படுத்தலாம். இதுவே இஸ்லாமிய அரசின் முதற்திட்டமாக அமையும்; இதைத்தொடர்ந்து மற்ற வசதிகள் செய்துதரப்பட்டு அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும். ஹரமிற்கு அருகிலுள்ள இடங்களை மட்டும் பளிங்கு தரை கொண்ட தொழுமிடமாக மாற்றினால் 45 லட்சம் முஸ்லிம்களை உட்கொள்ளும். இதையே இரண்டடுக்கு கொண்ட இடமாக மாற்றினால் இரட்டிப்பு எண்ணிக்கையில் மக்களை உட்கொள்ளும்.

ஆனால் தற்போது அல் ஷாமியா உருவாக்க ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் 2,50,000 மக்களுக்கு தேவையான உணவகங்கள், தங்குமிடம் மற்றும் 4 லட்சம் பேர் தொழுமிடம் மட்டுமே அமைக்க இயலும்.ஜபல் உமர் திட்டத்திற்காக ஹரமின் தென்மேற்கு பகுதியுலுள்ள 600க்கும் மேற்பட்ட நிலங்கள் கைப்பற்றப்பட்டு (24,480 ச.மீ) அதில் 935 அறைகள் கொண்ட 5 நட்சத்திர உணவகமும், 1255 அறைகளைக் கொண்ட 3 நட்சத்திர உணவகங்களாகவும் கட்டப்படவுள்ளது. மேலும் 1 லட்சம் பேர் உட்கொள்ளும் 20 மாடி குடியிருப்பு கட்டிடங்களும், 520 உணவகங்களும், 4360 கடைகளும் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது 1 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கும் வகையில் 6 மாடி கட்டிடம் கட்டும் திட்டமும் உள்ளது.

ஜபல் உமர் திட்டம் முன்னர் குறிபிட்டது போல் நிழற்குடைகளையும், காற்று வசதிகளையும் கொண்ட தரை அமைக்கும் திட்டமெனில், அது 7.5 லட்சம் ஹாஜிகளை தொழுகைக்கு உட்கொள்ளும் இடமாக அமையும். மற்றொரு திட்டமான ஜமல் கந்தமாவின்படி 6 லட்சம் ச.மீ நில பரப்பு கலப்பு இடங்களான உணவகங்கள் , கட்டிடங்கள் மற்றும் சந்தைகளாக உருவாகிக்கொண்டிருக்கிறது.இதை தொழுகை இடமாக மாற்றினால் 20 லட்சம் முஸ்லிம்களுக்கு இடமளிக்கும். மேற்கூறிய அணைத்து திட்டங்களும் ஹரமை சுற்றியுள்ள இடங்களைக்கொண்டு உருவாக்கப்படுகிறது, எனவே இவை அனைத்தையும் ஹரமுடன் எளிமையாக இணைத்துவிடலாம்.

ஏறக்குறைய அனைத்து திட்டங்களுக்கும் பெறப்பப்பட்ட இடங்கள் சிறு ஈட்டுத் தொகைக்கு அல்லது நஷ்ட ஈடு கூட இல்லாமல் சவூதி அரசால் பெறப்பட்டவையாகும். இன்னும் சில இடங்கள் உரிமையாளர்களுக்கு ஒரு வாரத்திற்கும் குறைந்த கால அவகாசம் கொடுத்து காலி செய்யப்பட்டன.

46,000 ச.மீ கொண்ட மற்றொரு திட்டமான ஜபல் காபா. அப்ரஜ் அல் பய்த் கோபுரம் கட்ட புல்புல் மலையிலுள்ள அஜ்யத் கோட்டை அழிக்கப்பட்டது. இந்த கோபுரமும் மற்ற கோபுர வடிவங்களும் கஃபாவின் புனிதத்தை மீறிய செயலாகும். ஒருபுறம் விமானங்கள் ஹரமிற்கு மேல் பறந்து செல்லக்ககூடது என்பதும் மறுபுறம் ஹரமை விட கோபுரங்கள் உயர்ந்து நிற்பதும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றது.

மார்க்க சிறப்பு வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ஏழு மஸ்ஜிதுகளில் அபுபக்கர்(ரலி), சல்மான் பார்சி(ரலி), உமர்(ரலி), அலி(ரலி), பாத்திமா(ரலி) ஆகியோர் பெயரிலிருந்த ஐந்து மஸ்ஜிதுகள் சவுதி அரேபிய அரசால் அழிக்கப்பட்டுள்ளன. நபி صلى الله عليه وسلم அவர்களின் மனைவியர்களில் ஒருவரான கதிஜா(ரலி) அவர்களின் வீடு பொது கழிப்பிட வசதிக்காகவும், நபி صلى الله عليه وسلم அவர்களின் உற்ற தோழரான அபூபக்கர்(ரலி) அவர்களின் வீடு தற்போது ஹில்டன் உணவகத்திற்காகாகவும், அலி உரைத்தின் வீடும் அபு குபைஸ் பள்ளியும் தற்போதுள்ள அரசு மாளிகைக்காகவும், நபி صلى الله عليه وسلم அவர்கள் பிறந்த இடம் நூலகத்திற்காகவும் இடிக்கப்பட்டது. தற்போதுள்ள அப்ரஜ் அல் பைத் கோபுரம் உதுமானிய கிலாஃபா காலத்தை சார்ந்த அஜ்யத் கோட்டையை இடித்தும் கட்டப்பட்டவையாகும்.

இன்னும் ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் சவூதி மன்னர்களால் காரணமின்றி அழிக்கப்பட்டுள்ளன. தற்போது நபி صلى الله عليه وسلمஅவர்களின் காலத்து வரலாற்று இடங்களில் இருபதிற்கும் குறைவானவையே மிஞ்சியுள்ளன.

தற்போது மஸ்ஜிதுல் ஹராமை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் விடுவிக்கப்பட்டு மார்பிள் கல் பொறிக்கப்பட்ட திறந்த வெளியாக மாற்றப்பட்டால் குறைந்தது ஒரு கோடி நபர்களுக்கு இடமளிக்கும்.அபு குபைஸ் மலையில் 1 லட்சம் ச.மீ பரப்பளவில் உள்ள சவூதி ராஜ மாளிகையை இடித்தால் இன்னும் இடவசதி கிடைக்கும்.

மஸ்ஜிதுல் ஹராமிற்கும் சில அமைப்பு மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். உதாரணமாக , மதாஃப் (தவாஃப் பகுதி ) விரிவாக்கப்படவேண்டும் வேண்டும். உதுமானிய கிலாஃபா காலத்தை சார்ந்த தடுப்பை அகற்றுவதன் மூலமாக தவாஃப் பகுதி மேலும் விரிவடையும்.

குழைந்தகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு உதவும் வகையில் நகரும் நடைபாதைகளை மேல் மாடிகளில் இஸ்லாமிய அரசு அமைத்துக்கொடுக்கும். இது ஹாஜிகளுக்கு உதவுவது மட்டுமல்லாது சக்கர நாற்காலியின் மூலம் அதிக கட்டணம் வசூலிக்கும் நடைமுறை முற்றுப்பெறும்.நகரும் நடைபாதையை பயன்படுத்துவதற்கு ஆதாரம் பின்வரும் ஹதீஸிலிருந்து அறியப்படுகிறது.

طَافَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الوَدَاعِ عَلَى بَعِيرٍ، يَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنٍ

நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் இறுதி ஹஜ்ஜில் ஒட்டகத்தின் மீதமர்ந்துகஃபாவை தவாஃப் செய்தார்கள்.. அப்போது தலை வளைந்த கம்பால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டார்கள்.

(இப்னு அப்பாஸ்(ரலி) , புகாரி)

அதைப்போலவே நகரும் நடைபாதையை சஃப்வா மர்வாவிற்கு மத்தியிலும் அமைக்கலாம்.இஸ்லாமிய அரசு எதிர்கொள்ளும் இரண்டாவது சவால், மக்கவாசிகளுக்கும் ஹாஜிகளுக்கும் தங்குவதற்கு வீடு அமைத்து தருவதாகும். மக்காவைச்சுற்றி பல மலைகள் உள்ளன. இந்த மலைகளை அகற்றுவதின் மூலம் பெரும் பிரச்சனை தீரும்.முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இஸ்லாமிய அரசுடைய நவீன திட்டங்களை மென்மேலும் அதிகரிக்கவேண்டியிருக்கும்.. அத்தருணத்தில் அரசு மக்காவை சுற்றி செயற்கை நகரங்களை உருவாக்கி ஹாஜிகளையும் ஊர்வாசிகளையும் தங்க வைக்க ஏற்பாடு செய்யவேண்டும். எனினும் அது விரைவில் நடக்க கூடிய நிகழ்வு அன்று; மாறாக முழு உலகமும் இஸ்லாத்தை தழுவும் போது இந்நிகழ்வு நடைபெறும்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியதாக தமீம் அத்தாரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :-

لَيَبْلُغَنَّ هَذَا الْأَمْرُ مَا بَلَغَ اللَّيْلُ وَالنَّهَارُ، وَلَا يَتْرُكُ اللَّهُ بَيْتَ مَدَرٍ وَلَا وَبَرٍ إِلَّا أَدْخَلَهُ اللَّهُ هَذَا الدِّينَ، بِعِزِّ عَزِيزٍ أَوْ بِذُلِّ ذَلِيلٍ، عِزًّا يُعِزُّ اللَّهُ بِهِ الْإِسْلَامَ، وَذُلًّا يُذِلُّ اللَّهُ بِهِ الْكُفْرَ

“ இரவு பகல் சென்றடையும் பிரதேசங்களையெல்லாம் இம்மார்க்கம் நிச்சயம் சென்றடையும். மதர், வபர் ஆகிய எந்தப் பிரதேசத்தையும் இறைவன் விட்டு வைக்க மாட்டான். அவற்றிலும் இந்த தீனை அல்லாஹ் நுழைவிப்பான். கண்ணியமுடையவன் கண்ணியம் பெறுவான். இழிவானவன் இழிவடைவான். இஸ்லாத்தைக் கண்ணியப்படுத்தவதன் மூலம் ஒருவனுக்குக் கண்ணியமும் குஃப்ரை இழிவடையச் செய்வதன் மூலம் அடுத்தவனுக்கு இழிவும் ஏற்படும்.” (முஸ்னத் அஹ்மத், ஹாகிம்)

இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் ஆகியோரின் நிபந்தனைகளின்படி இந்த ஹதீஸ் ஸஹீஹானது என இமாம் ஹாகிம் குறிப்பிடுகிறார்கள. இரவு பகல் சென்றடையும் பிரதேசங்கள் என்பது முழு உலகிலும் இஸ்லாம் பரவுவதைக் குறிக்கும்.

இஸ்லாமிய அரசுக்கு மூன்றாவது பெரிய சவாலாக அமைவது போக்குவரத்தாகும். தற்போதுள்ள அனைத்து போக்குவரத்து அமைப்பும், பொது போக்குவரத்து அமைப்பும் (MRTS ) அவசியம் மேம்படுத்தப்படவேண்டும். MRTS புனித பகுதிகளில் (மக்கா, மினா , முஸ்தலிஃபா, அரஃபா ) போன்ற இடங்களில் முதலாவதாக அமைக்கப்பட்டு பின்பு பிற புனித ஸ்தலங்களுக்கும் விரிவாக்கப்படும்.

MRTS ன் வடிவம் மற்றும் கட்டமைப்பு பூமியின் அடியில் பல இணைப்புக்களைக் கொண்டதாக அமையும். இவை கூட்ட நெரிசல்களைக் குறைத்து இலகுவாக செல்ல கட்டப்படுவதாக அமையும். மலேசியா, டெல்லி, லண்டன் போன்ற இடங்களில் உள்ள MRTS இயங்கும் முறையை அறிந்து நடைமுறைப்படுத்தப்படும். ஒவ்வொரு சந்திப்பிலும் மக்கள் இரயிலில் ஏறும் எண்ணிக்கையை பொறுத்து, பெரும் அசம்பாவிதங்களும், கூட்ட நெரிசல்களால் ஏற்படும் விபத்துகளும் இல்லாத வகையில் இரயில்களின் எண்ணிக்கை அமைய வேண்டும்,

கடந்த வருடம் அரஃபாவில் மெட்ரோ இரயில் நிலையங்களில் பல மக்கள் இறந்தனர். அதற்கு காரணம் அங்கு 4000 நபர்கள் ஏறிச்செல்லக்கூடிய 21 ரயில்கள் மட்டுமே உள்ளது. அதனால் சூரிய அஸ்தமனத்திற்குப்பின் கூட்ட நெரிசல் அதிகரித்து மூச்சு திணறலிலும் மிதிப்பட்டும் ஹாஜிகள் உயிரிழந்தனர். இஸ்லாமிய அரசு முஸ்லிம்களின் உயிர்களை சோதனைக்கு உள்ளாக்கும் நிலையை ஒருபோதும் ஏற்படுத்தாது. எனவே ஹாஜிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் திட்டங்களை மேற்கொள்ளும் பொதுபோக்குவரத்தைப் பொறுத்தவரையில் நகரத்திற்குள் மிகவும் பிரச்சனைக்குரியதாகும். தற்போது தெருக்கள் குறுகியதாகவும் சரியான பராமரிப்பின்றியும் இருக்கின்றது. தனி நபர் வாகனங்கள் ஹரம் மற்றும் அரஃபா போன்ற இடங்களில் அனுமதிக்கப்படமாட்டாது, மாறாக இத்தகைய இடங்களில் அரசு வாகனங்கள் மூலம் போக்குவரத்து மேற்கொள்ளப்படும் .

மினா, முஜ்தலிஃபா மற்றும் அரஃபாவில் உள்ள சவால்களை பொறுத்தவரையில் இந்நகரங்கள் மக்காவை விட சிறியதாகவும் மலைகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. மலைகள் தகர்க்கப்பட்டு பெரும் கட்டிடங்கள் உருவாக்கப்பட வேண்டும், ஏனெனில் மினாவில் தங்குவது தான் சுன்னத்தாகும். அதற்காக திறந்த வெளி கூடாரங்களில்தான் தங்கவேண்டும் என்றில்லை. சவுதி அரசு இந்நடவடிக்கையை மேற்கொள்ளாததற்கு காரணம் முதலீட்டிற்கு ஏற்ற வருமானம் வராது என்பதாகும். இஸ்லாமிய அரசின் வரவு என்பது முஸ்லிம்களுக்கு ஹஜ்ஜை இலகுவாக்குதலால் கிடைக்கும் நற்கூலியாகும்.

தற்போது இம்மூன்று நகரங்களில் உள்ள பிரச்சனை போக்குவரத்தும் இடவசதியுமாகும் . MRTS சேவை போக்குவரத்து பிரச்சனையையும், அடுக்கு மாடி கட்டிடங்கள் இடப்பற்றாக் குறையையும் தீர்க்கும். தற்போதுள்ள ஜமராத் திட்டம் சிறப்பாகவும் நிறைய ஹாஜிகளை உட்கொள்ளும் வகையில் உள்ளது.

உணவு மற்றும் தண்ணீர் வசதியை ஹாஜிகளுக்கு ஏற்படுத்தி கொடுத்தல் இஸ்லாமிய அரசு எதிர்கொள்ளும் முக்கிய சவாலாகும். உப்புத் தண்ணீர் சுத்தகரிக்கும் ஆலை ஜித்தாவில் நிறுவப்பட்டும், நகரத்தை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் மற்ற புனித ஸ்தலங்களிலும் ஜம் ஜம் நீர் கிடைத்திட வழி வகையை அரசு மேற்கொள்ளும். உணவு தரத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உணவில் கலப்படம் மற்றும் அதிக பணம் வசூலித்தல் போன்றவை தடுக்கப்படும்.

மக்காவில் ஹாஜிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதுபோன்றே மதீனாவிலும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய இஸ்லாமிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இஸ்லாமிய அரசான கிலாஃபா நபிصلى الله عليه وسلم அவர்களின் வழியில் ஏற்பட அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்.

Sep 3, 2013

அமெரிக்காவுடனான ஈரானின் கடும்போக்கு குறித்த உண்மை நிலை என்ன? (பகுதி 02)



ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோதும், அங்குள்ள மக்கள் உணவு, மருந்து இல்லாமல் மடிந்தபோதும் ஈரான் என்ன செய்தது? ஈரான் நினைத்திருந்தால் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தியிருக்கலாமே. அமெரிக்காவிற்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் அறிக்கைகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்துக்கொண்டிருக்கும் ஈரான், எப்போதாவது அதை செயலில் காண்பித்தது உண்டா? ஈரானின் நடவடிக்கைகள், அமெரிக்க நலன்கள் ஈராக்கில் பாதுகாக்கப்பட உதவியுள்ளன என்பதற்கு ஏராளமான உதாரணங்களை கூறமுடியும். 2005 ஆம் ஆண்டு ஈரானிய ஆதரவு பெற்ற அமைப்புகளை சார்ந்த இப்ராஹீம் அல் ஜஃபரிமற்றும் அல் மாலிகி ஆகியோரை அமெரிக்கா அதிகாரத்தில் அமர்த்தியது. ஆக்கிரமிப்பிற்கு பிறகு இராக்கில் தூதரகத்தை மீண்டும் ஈரான் திறந்து கொண்டது. அல் மாலிகி ஈரானுக்கு விஜயம் செய்ததோடு பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. 2008 ஆம் ஆண்டு அஹ்மது நிஜாத் ஈராக்கிற்கு இருமுறை விஜயம் செய்து அமெரிக்க பொம்மையான அல் மாலிகியை சந்தித்து அரசின் திட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அஹ்மது நிஜாத் 2010 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்து அமெரிக்க ஆக்கிரமிப்பின் பாதுகாவலனான ஹமீது கர்சாயை சந்தித்து அமெரிக்காவுடனான நல்லுறவை வெளிப்படுத்தினார். ஈரானின் இத்தகைய செயல்பாடுகள் அமெரிக்க நலன்களை பேணி பாதுகாக்கவே உதவுகின்றன என்பது வெட்ட வெளிச்சமாகும். அமெரிக்காவிற்கு எதிராக கண்டன அறிக்கைகளை விடுத்துக்கொண்டிருக்கும் ஈரான் ஒருபோதும் செயலில் இறங்காது என்பதை முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். எமனில் பிரிட்டனின் ஏஜெண்டாக ஆட்சி புரிந்த அலி சாலிஹுக்கு எதிராக அல் ஹவுதி மக்களை தூண்டிவிட்டு உதவி செய்த ஈரான், தெற்கு எமனின் பிரிவினைவாத மதச்சார்பற்ற குழுவிற்கும் உதவி செய்தது. அமெரிக்காவின் மறைமுக ஆதரவு பெற்ற குழுக்களுக்கு ஈரான் உதவுவதன் மூலம் அமெரிக்க நலன்களே பாதுகாக்கப்படுகிறது.

ஈரான் சிரியாவிற்கு பக்கபலமாக இருப்பது ஒன்றும் புதிய விசயமல்ல. பசர் அல் அசாதின் தந்தை ஹஃபிஸ் அல் அசாத் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி ஆட்சியைப் பிடித்த காலகட்டத்திலிருந்தே இது தொடர்கிறது. அமெரிக்க நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக விளங்கும். அசாத் குடும்பத்தினரின் மதச்சார்பற்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அரபு தேசியவாதக் கட்சியான பாத் கட்சி, சதாம் ஹுசைனின் பாத் கட்சியோடு தொடர்பு கொண்டிருந்தது குறித்து ஈரான் நன்கு தெரிந்துகொண்டே அசாத் குடும்பத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளது. ஈரான் அரசாங்கம் சிரியாவுடன் ராணுவம், வர்த்தகம், அரசியல் நடவடிக்கை போன்ற விசயங்களில் எப்போதும் உறுதுணையாகவே இருந்துள்ளது. நெருக்கடி நேரங்களில் சிரிய அதிபரைக் காப்பாற்ற ஈரான் ஆயுத உதவி வழங்கி வருகிறது. முஸ்லிம்களை கொன்று குவிக்கும் பசர் அல் அசாதிற்கு ஈரான் பக்க பலமாக இருந்தது முதல் சமீபத்திய இரசாயன விசா வாயு படுகொலை சம்பவம் வரை உற்று நோக்குவோமானால், சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் அரசியல் ஆக்கிரமிப்பிற்கு ஈரான் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவியுள்ளது நன்கு விளங்கும்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஈரானும் சேவை செய்துள்ளது. வடக்கு பிராந்தியத்தில் ஈரானின் செயல்பாடுகளால் தாலிபான்களை அமெரிக்கா வீழ்த்த இலகுவாக முடிந்தது. “எங்களுடைய படைகள் தாலிபான்களுடன் போரிட்டிருக்காவிட்டால் அமெரிக்கா புதைகுழியில் சிக்கியிருக்கும்” என்று முன்னாள் ஈரான் அதிபர் ரப்சஞ்சானி கூறியிருந்தார் ((al-Sharq al-Awsat newspaper, 9/2/2002). அதே போன்று ஈரானிய துணை அதிபராயிருந்த முஹம்மது அலி அப்தஹி:- “எங்களுடைய ஒத்துழைப்பு கிடைத்திருக்காவிட்டால் பாக்தாதும் காபூலும் அமெரிக்காவின் கைகளில் வீழ்ந்திருக்காது” என்று கூறியிருந்தார். (Islam Online Net, 1/13/2004) .. ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டங்களில் பங்கெடுக்க அமெரிக்கா சென்றிருந்த அஹ்மத் நிஜாத்:- “ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு ஈரான் உதவிக்கரம் நீட்டியது. எனினும் எங்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை குறித்த அமெரிக்காவின் நேரடி எச்சரிக்கையே எங்களுக்கு பலனாக கிடைத்தது .. மேலும் ஈராக்கில் அமைதியும் நிலைத்தன்மையும் ஏற்பட எங்கள் நாடு ஏற்கனவே உதவியுள்ளது” என்று கூறியிருந்தார் (The New York Times on 26/9/2008).

ஈரானின் அணு சக்தி திட்டத்தை பொறுத்தவரை, இஸ்ரேல் பலமுறை ஈரானை அச்சுறுத்தியது நாம் அறிந்த விசயமே. இஸ்ரேலுக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு இருந்தும் அமெரிக்கா குறுக்கே நின்று இஸ்ரேலை தடுத்து வருகிறது. அமெரிக்கா 1981 ஆம் ஆண்டு இராக்கில் சதாம் ஆட்சியின்போது, கட்டுமான நிலையில் இருந்த அணுசக்தி நிலைகளை தாக்க இஸ்ரேலுக்கு அனுமதி வழங்கியது. ஆனால் 20% யுரேனியம் செறிவூட்டப்பட்ட நிலையில் உள்ள ஈரானின் அணு சக்தி நிலைகளை தாக்க இஸ்ரேலுக்கு அனுமதி மறுத்து வருகிறது. அமெரிக்காவின் சொந்த நலன்களுக்கு ஈரான் ஒத்துழைப்பு கொடுத்துவருவதற்காக, ஈரானுடன் சுமூகமாகவே இருக்க அமெரிக்கா விரும்புகிறது. ஈரானை ஒரு எதிர் சக்தியாக உருவகப்படுத்துவதன் மூலம் மத்திய கிழக்கில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா விரும்புகிறது. ஈரானை ஒரு கருவியாக உபயோகித்து முஸ்லிம் நாடுகளின் மீது ஆதிக்கத்தை அமெரிக்கா நிலை நாட்டிவருகிறது. அணு ஆயுதம் குறித்த பேச்சு வார்த்தை 2003 ஆண்டு துவங்கிய காலம் முதல் பேச்சுவார்த்தை நடைபெறும்போதெல்லாம், அமெரிக்கா ராணுவ நடவடிக்கை குறித்து பேசாமல் தடை – sanction பற்றியே பேசிக்கொண்டிருப்பதைக் காணலாம். இது ஐரோப்பிய யூனியனுக்கும் இஸ்ரேலுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தாலும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின்போதும் தடை - sanction குறித்தே அமெரிக்கா வலியுறுத்தியது. ஒவ்வொருமுறை இந்த பிரச்சனை தோன்றும்போதெல்லாம் ஈரானைக் குறித்த அச்சத்தை அமெரிக்கா போக்கிவந்தது. அணு ஆயுத பிரச்சினையை தீர்க்கப்படாத ஒன்றாக வைத்துக் கொண்டு, ஈரானை ஒரு தாதாவாக சித்தரித்து மத்திய கிழக்கில் எப்போதும் பதட்டத்தை ஏற்படுத்த அமெரிக்கா முனைந்து வருகிறது. இதற்காகவே அமெரிக்கா ஈரானுக்கு மறைமுகமாக உதவி வருகிறது.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே சில விசயங்களில் பிரச்சனைகள் இருப்பது உண்மையே. இதை வைத்து ஈரான் அமெரிக்காவின் கடும் எதிரி என்று தீர்மானிக்க கூடாது. கொமைனி பாரீஸ் நகரின் அருகிலுள்ள Neauphle-le-Château என்ற இடத்தில் தங்கியிருந்தபோது வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து நடந்த பேச்சுவார்த்தை போன்று பல்வேறு சமரச பேச்சுவார்த்தைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் பொம்மையாக இருந்து ஆட்சிபுரிந்த ஷா வீழ்வது நிச்சயம் என்று விளங்கிகொண்ட அமெரிக்கா ஈரானிய புரட்சியின் பலனை தனக்கு இணக்கமாக மாற்ற சில வேலைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொண்டது. ஈரானை அச்சுறுத்துவது போன்ற வெகுஜனக் கருத்தை உருவாக்கி, அமெரிக்கா பல்வேறு சந்தர்ப்பங்களில் தன்னுடைய நலனை பாதுகாத்து வறுகிறது என்பதே உண்மையாகும் . எனவே ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே சுமூகமான உறவே நிலவி வருகிறது என்பதையும். ஈரானின் கடுமையான எதிரி அமெரிக்கா என்ற கூற்றில் உண்மையில்லை என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.

அமெரிக்காவுடனான ஈரானின் கடும்போக்கு குறித்த உண்மை நிலை என்ன? (பகுதி 01)



ஈரான் எப்போதுமே அமெரிக்காவை எதிர்க்கக் கூடிய ஒரு தன்மானமுள்ள நாடு என்ற சிந்தனை முஸ்லிம்களிடம் பரவலாக இருப்பதை மறுக்க இயலாது. ஈரான் அமெரிக்காவை பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்த்து பேசுவதே இவ்வாறு நம்புவதற்கான காரணம் என்பதை அவதானிக்க முடிகிறது. உண்மையில் ஒரு நாட்டுடன் மற்றொரு நாடு கொண்டுள்ள வெளியுறவு கொள்கையை தீர்மானிக்கும் அளவுகோல் இது கிடையாது. ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் கொண்டுள்ள உறவை, அந்த இரு நாடுகளுக்குமிடையேயான தூதரக உறவு, ஒப்பந்தங்கள் போன்றவற்றைக் கொண்டு தீர்மானிக்காமல், வெறுமனே அந்த நாட்டை எதிர்த்து அறிக்கை விடுவதைக் கொண்டு மாத்திரம் தீர்மானிக்க இயலாது. ஈரானில் 1979 இல் ஏற்பட்ட புரட்சிக்கு பிறகு, ஈரான் அமெரிக்காவின் எதிரி என்பதாக பரவலாக முஸ்லிம்களை ஏமாற்றி வருவதால், ஈரானிய புரட்சியிலிருந்து நாம் ஆராய்வோம்..

ஈரானிய புரட்சியின்போது பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரின் அருகிலுள்ள Neauphle-le-Château என்ற ஊரில் கொமைனி தங்கியிருந்தார். அப்போது அவரை வெள்ளை மாளிகையிலிருந்து அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் சந்தித்து அவரோடு பேச்சுவார்த்தைகள் நடத்தினர். பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவாக அமெரிக்க அரசோடு இணக்கமாக நடந்து கொள்வது என்பதாக கொமைனி முழு சம்மதம் தெரிவித்தார். அப்போது அமெரிக்க பத்திரிக்கைகள் இந்த செய்தியை வெளியிட்டிருந்தன. இதை புரட்சிக்குப்பின் ஈரானிய குடியரசின் முதல் அதிபராயிருந்த அபுல் ஹசன் பனு சதர் 2000 ஆம் ஆண்டு அல் ஜசீராவிற்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். வெள்ளை மாளிகை தரப்பினருக்கும் கொமைனி தரப்பினருக்கும் மத்தியில் ஏற்பட்ட பலவேறு பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, ஈரானின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதாக உடன்பாடு எட்டப்பட்டது. இதன் மூலம் ஈரானின் வெளிவிவகாரக் கொள்கையில் கொமைனி அமெரிக்காவிற்கு விட்டுக்கொடுத்து சமரசம் செய்துகொண்டார். இதன் பின்னர் கொமைனி பிரெஞ்சு விமானம் மூலம் ஈரான் வந்து சேர முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. கொமைனிக்கு அதிகாரத்தை விட்டுக்கொடுக்கவேண்டுமென்று ஷா அரசால் பிரதமராக நியமிக்கப்பட்ட ஷஹ்புர் பக்தியாருக்கு அமெரிக்காவிடமிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதோடு கொமைனியோடு இணங்கி போகுமாறு ராணுவத்திற்கும் அச்சுறுத்தல் விடப்பட்டது.

ஈரானின் அரசியல் சாசன விதிமுறைகள், முஸ்லிம் நாடுகள் மேற்கத்திய முதலாளித்துவ அரசியல் சாசனத்தை மையமாகக் கொண்டு தொகுத்துள்ளதைப் போன்றே வரையறுக்கப்பட்டுள்ளது. ஈரானின் ஆட்சியமைப்பானது குடியரசு முறை, அமைச்சர்களுக்கு தனியதிகாரம், பாராளுமன்ற முறை, அதிகாரப் பகிர்வு போன்ற மேற்கத்திய ஆட்சியமைப்பு முறையை பின்பற்றியே இன்றும் உள்ளது. சில முஸ்லிம் நாடுகள் இஸ்லாத்தை அரசு மதமாக அறிவித்துள்ளது போன்றே ஈரானும் இஸ்லாத்தை அரசு மதமாக அங்கீகரித்துள்ளது. இதை வைத்து அதை இஸ்லாமிய அரசு என்றோ, இஸ்லாமிய சட்டங்கள் ஈரானை ஆட்சி செய்வதாகவோ ஒருபோதும் கருதிவிடக்கூடாது. ஏனெனில் அந்த நாட்டின் அரசியல் சாசனம் மற்றும் செயலாக்க அமைப்புகள் (Systems) இஸ்லாத்திற்கு முரணானவை. ஈரானுடைய அரசியல் சாசனம் இஸ்லாமிய அகீதாவைக் கொண்டு வகுக்கப்பட்டதல்ல. மாறாக தேசியவாத அடிப்படையில் மேற்கத்திய அரசியல் சாசன அமைப்பை தழுவி, பெரும்பாலான முதலாளித்துவ கோட்பாடுகளுடன் சில இஸ்லாமிய சட்டங்களை இணைத்து வகுக்கப்பட்டதாகும். மேலும் ஈரானிய புரட்சி ஏற்படுவதற்கு முன்னர், இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதிகள் கொமைனியை சந்தித்து அமெரிக்காவிற்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று கூறியதோடு இஸ்லாமிய அரசியல் சாசனத்தை முன்மாதிரியாகக் கொள்ளுமாறும் விடுத்த வேண்டுகோளை கொமைனி முற்றிலும் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

இமாம் ஜஃபர் சாதிக் அவர்களின் மத்ஹபான ஜஃபரி மத்ஹபை தழுவியே ஈரானின் சட்டங்கள் முன்னெடுத்து செல்லப்படுவதாக கூறுவது உண்மையல்ல. இஸ்லாமிய அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஜஃபரி ஃபிக்ஹை, ஈரான் தன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்காக புறந்தள்ளிவிட்டு முதலாளித்துவ சட்டங்களையே முன்னெடுத்து செல்கின்றது. சவூதி அரேபியா இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களில் சிலவற்றை மட்டும் பின்பற்றிவிட்டு, பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை, இஸ்லாமிய ஆட்சியமைப்பு போன்ற விடயங்களில் இஸ்லாத்தை புறந்தள்ளி ஆட்சி நடத்துவது போன்றே ஈரானும் செயல்பட்டு வருகிறது. ஈரான் மேற்கொண்டுவரும் நேரடியான அல்லது மறைமுகமான அரசியல் நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு எதிரானதாக இருந்ததில்லை. மாறாக அவை அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு இணங்கி போகின்றதாகவும் அமெரிக்காவின் திட்டங்களை அங்கீகரிப்பதாகவும் உள்ளது. இதற்கு ஏராளமான உதாரணங்களை கூறமுடியும். உதாரணமாக, லெபனானில் ஈரானால் உருவாக்கப்பட்டு ஈரானுடைய வழிகாட்டுதலில் செயல்பட்டுவரும் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவை லெபனான் அரசு சிறப்பு ராணுவ பிரிவாக அங்கீகரித்துள்ளது. லெபனான் அரசாங்கம் மதச்சார்பற்ற கொள்கைகைகளையும் அமெரிக்க நலன்களை பேணி பாதுகாத்துவருவதையும், லெபனானில் வேறு எந்த பிரிவினருக்கும் இப்படிப்பட்ட இராணு பிரிவை வைத்திருக்க அனுமதியில்லை என்பதையும் நாம் அறிந்தே வைத்துள்ளோம். அமெரிக்க நலன்களை பேணி பாதுகாத்துக்கொண்டு சிரியாவில் மக்களை கொன்றுகுவித்து வரும் கொடுங்கோலன் பசர் அல் அசாதை காப்பாற்ற சிரியாவிற்கு ஹிஸ்புல்லாவை ஈரான் அனுபபிய செயல் மூலம் அமெரிக்க நலன்களை பாதுகாக்க ஈரான் உதவியுள்ளதை அறிந்துகொள்ளலாம். கொடுங்கோலன் பசர் அல் அசாத் ஷியா பிரிவைச் சார்ந்தவன் என்பதால் ஈரான் இவ்வாறு நடந்து கொள்கிறது என்று சிலர் கூறுவது உண்மையில்லை. ஈரானுடைய இந்த செயல்பாடு, இஸ்லாத்தை பாதுகாக்கவோ அல்லது ஷியா கொள்கைகளை பரப்புவதற்கோ ஒருபோதும் உதவாது. மாறாக அமெரிக்க நலன்களையே பாதுகாக்க உறுதுணையாக அமையும். பசர் அல் அசாத் பின்பற்றி வரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்ட பிரிவான அலவிஷியா கோட்பாட்டிற்கும் ஈரானியஅரசால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவான இஸ்னா அஸரிய்யா பிரிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

துர்ப்பாக்கிய நிலையில் எமது முஸ்லிம் உம்மத்!!!

இன்று காலனித்துவ சக்திகளது பலம் ஓங்குவதில் எமது முஸ்லிம் தலைமைகள் அதீத அக்கறையுடன் செயற்படும் துர்ப்பாக்கிய நிலையில் எமது முஸ்லிம் உம்மத்!

நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் நிறுவிய இஸ்லாமிய அரசும் அதனைத் தொடர்ந்து வந்த குலபாக்களது ஆட்சிமுறையும் முஸ்லிம்களது கண்ணியம் மற்றும் உடைமைகள் காக்கப்படவும் தீனுல் இஸ்லாம் உலகில் சகல துறைகளிலும் அமுலாக்கப்படவும் வழிவகுத்தது. மேலும் “ரோம்” மற்றும் “பாரசீகப் பேரரசுகளை” தம்வசப்படுத்தி இஸ்லாத்தை பரவலாக்கம் செய்ய வழிவகுத்தது. உலகில் மூன்றில் இரண்டுபகுதியை தம்வசப்படுத்தி உலக தலைமைத்துவத்தை வழங்கியது.

1924 உதுமானிய கிலபா வீழ்ச்சியுடன் முஸ்லிம்களுக்கான ஒரே தலைமை அழிக்கப்பட்டதன் விளைவாக முஸ்லிம்கள் 57 தலைமைகளான பிரிந்து காலனித்துவ சக்திகளது அடிவருடிகளால் சர்வாதிகார முறையில் ஆட்சிசெய்யப்பட்டார்கள்.

இவர்கள் தேசிய எல்லைக்குள் முஸ்லிம்களது வளங்கள், இராணுவம் முடக்கப்பட்டு மதஒதுக்கல் சிந்தனை அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டமுதலாளித்துவ நலன்களை காக்கும் ஜனநாயக ஆட்சிமுறைமூலமும் மன்னர் ஆட்சி முறைமூலமும் முஸ்லிம்கள் ஆட்சிசெய்யப்பட வழிவகுத்தார்கள்.

இவர்ளிடம் இஸ்லாம் மேலோங்கவேண்டும் குர்ஆன் சுன்னாவின்படி வாழ்வியல் விவகாரங்கள் ஒழுங்குபடுத்தப்படவேண்டும் எனும் சிந்தனைப் போக்கோ அல்லது முஸ்லிம்களது நலன்கள் பேணப்பட்டு அவர்களது கண்ணியம் பேணப்படவும் இஸ்லாத்தினது பொது எதிரிகள் உரிய முறையில் நடத்தப்பட்டு தீனுல் இஸ்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் எனும் எண்ணமோ இருக்கவில்லை.

இவர்கள் குப்பார்களான காலனித்துவ சக்திகளுடன் கைகோர்த்தபடி முஸ்லிம்கள் கருவறுக்கப்படுவதிலும் தங்கள் சுய நலன்களுக்காக முஸ்லிம் உம்மத்தை கூறுபோட்டு பலமிழக்கச்செய்வதிலும் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.

இத்தகைய இழிநிலைகளின் விளைவாக இலட்ச்சக்கணக்கான எமது முஸ்லிம் சகோரதர சகோதரிகளது உயிர்கள், உடைமைகள் அழிக்கப்பட்டதனை நாம் ஈராக், ஆப்கானிஸ்தான், காசா, மாலி, பர்மா, எகிப்து சிரியா,கஷ்மீர் போன்ற நாடுகளில் காணக் கூடிதாக உள்ளது.

இன்று முஸ்லிம்களுக்கான ஒரே தலைமையான கிலாபா அரசு இல்லாததனாலும் “முஸ்லிம்களது பாதுகாப்பு அரணாகிய இராணுவம்” தேசிய எல்லைக்குள் முடக்கப்பட்டு கூறுபோடப்படடுள்ளதாலும் பலம் குன்றிய நிலையில் முஸ்லிம் உம்மத் காணப்படுகிறது.

அதிலும் நாம் கைசேதப்படும் துர்பார்க்கியமான நிலையாதெனில் எமது முஸ்லிம் இராணுவத்தினரையே எமது சிறுவர்களை, முதியோர்களை, சகோதர சகோதரிகளை கொன்று குவிக்குமளவுக்கு காலனித்துவ சகதிகள் திட்டமிட்டு இன்றைய முஸ்லிம் தலைமைகளை வழிநடாத்துவதனை காணமுடிகிறது.

அதன் ஒரு மெகா வடிவமாக இன்று அமெரிக்கா தலைமையில் காலனித்துவ சக்திகள் அணிதிரண்டு சிரியாவில் முஜாஹிதீன்களை கருவறுக்க களமிறங்கியுள்ள நிலையில் எமது முஸ்லிம் தலைமைகள் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து எகிப்தில் இஸ்லாம் வந்துவிடக்கூடாது என்பதற்கு “அல்-சிசியை” பயன்படுத்தி ஆட்சிகவிழ்ப்பை செய்தது போல் சிரியாவில் “முஜாஹிதீன்களது கை மேலோங்கி” அங்கு மக்கள் கோரும் ஆட்சிமுறையான கிலாபா அரசு நிறுபவப்பட்டுவிட்டால் தங்களது ஆட்சி பீடங்களுக்கு கதிரைகளுக்கு பேராபத்து என்பதனை உணர்ந்து குப்பார்களது அணியினைப் பலப்படுத்துவதனைக் காணலாம்.

ஆனால் அ
ல்லாஹ் இவர்களது அனைத்து சதிகளையும் முறியடிக்கும் மிகப்பெரிய சதிகாரன் என்பதனை வெகுவிரைவில் இவர்கள் உணர்வார்கள்.

“முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கிக் தர விரும்புகிறீர்களா?” (4: 144)

“எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர். (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) "எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்" என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்;. அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்.” (5: 52)

“அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். “(61:8)

Aug 31, 2013

அமெரிக்க ரஷய அரசியல் மற்றும் இராணுவ முன்னெடுப்பு


அமெரிக்க ரஷய அரசியல் மற்றும் இராணுவ முன்னெடுப்பு…. சிரியாவில் கிலாபா நிறுவப்பட்டுவிடும் எனும் அச்சமே காரணமாகும்!

இன்று சிரியாவில் ரஷ்யா தலைமையிலான கொமியூனிச சிந்தனையிலான வல்லரசும் அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ வல்லரசும் களமிறங்கி இஸ்லாத்தின் எழுச்சியை அது ஒரு கிலாபா அரசாக கட்டியெழுப்பப்படுவதனை தடுக்கும் விதமான தமது போர்ப்படைகளை தயார்செய்துவரும் நிலையில் ஒரு முஸ்லிம் சிரியாகுறித்த எத்தகைய நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும்?

இன்று சிரியாவில் நடைபெறும் யுத்தம் “சியா-சுன்னி” யுத்த மல்ல. அது ஒரு “சித்தாந்தங்களுக்கு இடையிலான யுத்தம்”.

சிரியமக்கள் கொமியூனிசமும் இஸ்லாமும் கலந்த “பாதிசமோ” அல்லது “முதலாளித்துவ மதஒதக்கல் சிந்தனையுள்ள ஜனநாயகமோ” வேண்டாம் என்று புறந்தள்ளி இஸ்லாமிய அரசாகிய “கிலாபா அரசு” வேண்டும் என்கின்ற யுத்தம்.

அசாத் தோற்கடிக்கப்பட்டு முஜாஹிதீன்களது கைக்கு சிரியா சென்றுவிட்டால் அங்கு கிலாபாவிற்கான பைஆ நடைபெற்றுவிடும் என்று இரு தரப்பு பேரரசுகளும் அஞ்சுகின்றன.

சிரியாவில் கிலாபா மீள் எழுச்சி பெற்றால் முஸ்லிம்களது கடமைகளும் பொறுப்புக்களும் அந்த அரசை பாதுகாப்பதிலும் அதற்கு பைஆ கொடுத்து அதனை நிலைநிறுத்துவதில் மாறிவிடும்.

அப்படியானால் அங்கிருந்து “கலீபாவினால் ஒரு அழைப்பு ஜிஹாதுக்கு முஸ்லிம் நாடுகளை நோக்கி விடுக்கப்படும் அழைப்பும்”, “இஸ்ரேல் மீதான யுத்தப்பிரகடணமும்” நாளைய அமெரிக்க யூத நலன்களையும் முதலாளித்து உலகையும் கணிசமாக பாதிக்கும்.

ஏனெனில் இன்றுள்ள முஸ்லிம் ஆட்சியாளர்க 57 இருந்து கொண்டு மேற்கிற்கு தாரைவாக்கும் போக்கு கேள்விக்குட்படுத்தப்பட்டு மக்கள் அவ்வாட்சியாளர்களை புறந்தள்ளி கிலாபாவுடன் தமது நிலங்களை இணைக்கும் பாரிய போராட்டப்பணியை மேற்கொண்டால் மேற்கினால் தொடர்ந்தும் முஸ்லிம் நாடுகளில் உள்ள “வளங்களை சுரண்டமுடியாது” மாத்திரமன்றி அவர்களது “சந்தைகளையும் இழக்க நேரிடும்”.

இஸ்லாமிய அரசாகிய கிலாபா நிறுபவப்பட்டால் அதன் முதல் நாளில் உளவு பார்க்கும் அனைத்து வெளிநாட்டு முகவர்கள் நிலையங்களும் மூடப்பட்டுவிடும். முதல் நாளில் இருந்தே வட்டியில்லா வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இது பெருமளவில் அமெரிக்க-யூத முதலைகளை பாதிக்கும். இன்தப் போக்கை “தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எத்தனிக்கும் ஒரு சூழ்சியான அரசியல் இராணுவ முன்னெடுப்பாகவே” இன்று அமெரிக்க மற்றும் ரஷ்ய அரசியல் நகர்வுகளை சிரியா விடயத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் நோக்கவேண்டும்.

இந்த விடயத்தில் சுற்றியுள்ள முஸ்லிம் நாடுகளுக்கு பாரிய பொறுப்புள்ளது. அந்த நாட்டு மக்கள் சிரியாவினது முஜாஹிதீன்களது எழுச்சியில் பாரிய பங்களிப்பை வழங்கி எதிரிகளை விரட்டியடிக்கும் பாரிய பணி அவர்கள் மீது இன்று சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்லாம் வரவேண்டும் என நினைக்கும் இஹ்வானிய சகோதரத்துவ அமைப்புக்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை பொறுப்புடன் முன்னெடுத்து, “மூன்றுமுறை பின்னடைவை சந்திந்துள்ள ஜனநாயவழிமுறையிலான ஆட்சி மூலம் இஸ்லாத்தை அமுல்படுத்த முடியும் என்ற சிந்தனைப்போக்கை கைவிட்டு” கிலாபா ராஷிதாவை நிறுவ “மக்கள் அபிப்பிராயத்தை திரட்டுவதிலும்” “இராணுவ நுஸ்றாவை கோருவதிலும்” முன்வரவேண்டும்.

இஸ்லாம் மீள் எழுச்சிபெறவேண்டிய உன்னதமான வேளையில் நாம் பிரிந்துவிடாது சிரியாவினது கிலாபா நகர்வில் பாரிய பங்குபற்றி சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்!

Aug 22, 2013

இன்றை முஸ்லிம் பிரதேசங்களும் ஆட்சியாளர்களும்! முஸ்லிம் உம்மத்தின் இழிநிலையும்!


இன்றைய முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தபோதிலும் கலப்படமான சிந்தனைகளாலும் உணர்வுகளாலும் செயலாக்க அமைப்புகளாலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டவர்களாக இருந்துவருகிறார்கள்.

இவர்கள் இஸ்லாத்தை அவர்களது தீனாக கருதும் அதேவேளை குப்ர் ஆட்சியார்களால் தாங்கள் ஆட்சிசெய்யப்படுவதற்கு உடன்பட்டவர்களாகவும் குப்ர் சட்டங்களும், செயலாக்க அமைப்புக்களும் தங்கள் மீது நடைமுறைப்படுத்தும் விடயத்தில் மௌனித்துவருகிறார்கள்!

இஸ்லாம் மேலோங்கவேண்டும் எனும் சிந்தனை ஒருபுறமிருக்க தேசியவாதத்திலும் பிரிவினைவாதத்திலும் பிராந்திய உணர்வுகளிலும் உழன்று வருபவர்களான நாம் காண்கிறோம்!

அமெரிக்காவையும், பிரிட்டணையும், ரஷ்யாவையம் எதிரிகளாக கருதும் அதேவேளை இந்த நாடுகளது உதவியை நாடுபவர்களாகவும் நேசக்கரம் நீட்டுபவர்களாகவும் தங்கள் பிரச்சினைகளுக்கு குப்பார்களான அவர்களிடம் தஞ்சம் அடையக்கூடியவர்களாக இருப்பதையும் நாம் காண்கிறோம்!

மூமின்கள் அனைவரும் சகோதரர்கள் என்று ஏற்றுக் கொள்ளும் அதேவேளை தங்கள் இனத்தின் மீதும் நாட்டின்மீதும் வெறித்தனமான பற்றுதல் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள்!

இவையெல்லாம் இஸ்லாத்திற்கு முறண்பட்டவையாக இருப்பினும் அரபுமக்கள் அரபுவாதத்திலும், துருக்கியர்கள் துருக்கிய தேசியவாதத்திலும், பாரசீகர்களும் ஈராக்கியர்களும் சிரியர்களும் எகிப்தியர்களும் அவரவர் நாட்டு இனவாதத்திலும் கண்மூடித்தனமாக மூழ்கியிருக்கிறார்கள்!

இஸ்லாத்தின் சட்டங்களில் நம்பிக்கை வைத்திருப்பதாக கூறும் அதேவேளை இஸ்லாத்தின் சட்டங்களோடு அடிப்படையில் முறண்படும் ஜனனாயகத்திற்காகவும் சுதந்திரந்திர உரிமைகளுக்காகவும் இறையான்மை மக்களுடையது என்று கூறும் மக்களாட்சி மற்றும் பொதுவுடைமைக் கொள்கைகளுக்காகவும் அழைப்பு விடுக்கக்கூடியவர்களாக இருப்பதனைக் காண்கிறோம்!

இதற்கு மேலாக முஸ்லிம் பிரதேசங்களிலும் அரசமைப்பு, பொருளாதாரம், கல்வி, வெளிவிவகாரக்கொள்கை மற்றும் உரிமையியல் விவகாரம் ஆகியவற்றில் முஸ்லிம்கள் மீது குப்ர் சட்டங்களும் அதன் செயலாக்க அமைப்புகளும் நடைமுறைப்படுத்தப்படுவதை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்கிறார்கள்!

இந்த எல்லா விஷயங்களும் இஸ்லாமிய பிரதேசங்களில் வாழும் முஸ்லிமகளை இஸ்லாம் அல்லாத குப்ர் சமூகத்தில் வாழும் மக்களாக ஆக்கியிருக்கிறது!

இந்த நிலையில் இருந்து முஸ்லிம் உம்மத்தை நிரந்தரமாக விடுவிப்பதற்கு நபிவழியில் கிலாபா நிறுவப்படவேண்டும்! அதுவே எமது கண்ணியம்! கேடயம்!

'நம்முடைய தூதர் எவற்றையெல்லாம் உங்களுக்கு கொடுக்கிறாரோ அவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் இன்னும் அவர் எவற்றைவிட்டும் விலக்குகிறாரோ அவற்றை விட்டும் நீங்கள் விலகிக்கொள்ளுங்கள் (அல்குர்ஆன் 59:7)

ஆகவே அல்லாஹ் அருளியதைக்கொண்டு அவர்களுக்கு மத்தியில் ஆட்சிசெய்வீராக மேலும் உம்மிடம் சத்தியம் வந்தபின்னர் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். (அல்குர்ஆன் 5:48)

அல்லாஹ் அருளியதைக் கொண்டு அவர்களிடையே ஆட்சி செய்வீராக மேலும் அல்லாஹ் உங்களுக்கு அருளிய சிலவற்றில் அவர்கள் உம்மை குழப்பத்தில் ஆழ்த்திவிடக் கூடும் என்பதால் நீர் எச்சரிக்கையுடன் இருப்பீராக (அல்குர்ஆன் 5:49)

இன்னும் எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக்கொண்டு ஆட்சிபுரியவில்லையோ அவர்கள்தான் காபிர்கள் ஆவார்கள்! (அல்குர்ஆன் 5:44)

இன்னும் இஸ்லாம் அல்லாத மார்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) அவரிடமிருந்து ஒருபோதும் ஒப்புக்கொள்ளப்டமாட்டாது. ( அல்குர்ஆன் 3: 85)

நபியே கூறுவீராக நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் அப்போது அல்லாஹ் உங்களை நேசிப்பான் மேலும் உங்கள் பாவங்களை மன்னிப்பான் ( அல்குர்ஆன் 3: 31)

Aug 21, 2013

இஸ்லாம் எழுச்சிபெறுவதில் ஒரு முஸ்லிமின் வகிபங்கு...!


இஸ்லாத்தை வெறுமனே ஆத்மீகம் எனும் பெயரில் பள்ளிக்குள் முடக்கிவிடாது அது வாழ்வில் எழும் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வை வழங்கும் வாழ்கைச் சித்தாந்தமாக முதலில் உணரவேண்டும்.

இஸ்லாம் எழுச்சி பெறுவதற்கு தேவையான அடிப்படைச் சிந்தனைகளை தெளிவாக விளங்கி மக்களுக்கு அறிவூட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இன்று முதலாளித்துவத் தலைமைகளால் மத ஒதுக்கல் சிந்தனையை அடிப்படையாக கொண்டு தாராண்மைவாதக் கொள்கைகளை அமுல்படுத்தும் நிலையில், மக்கள் அதனால் அடையும் துன்பங்கள், அசௌகரியங்கள் என்பவற்றிலிருந்து மீளுவதற்கான வழிகாட்டலையும் தீர்வையும் இஸ்லாமே கொண்டுள்ளது என்ற சிந்தனையை விதைக்கும் பணியை மேற்கொள்ள தன்னை பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இஸ்லாம் ஒரு மாற்றீடாக முன்வைக்கப்படுவதாலும், இஸ்லாம் எழுச்சிபெறுவதாலும் அதன் வளர்ச்சியை, எழுச்சியை தாமதிக்க மேலும் கட்டுப்படுத்த மேற்கினது முகவர்கள் மேற்கொள்ளும் சிந்தனை யுத்தத்தை விளங்கி உணர்ந்து இஸ்லாத்திற்கு எதிரான நச்சுக்கருத்துக்கள் விதைக்கப்படும் போது அதனை எதிர்கொள்வதற்கு தேவையான ஆளுமையை, பக்குவத்தை வளர்த்து உரிய தஃவா முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களை நிரந்தரமாக பிரித்துவைத்துள்ள மேற்கினது அடிப்படைச் சிந்தனைகளான “மதஒதுக்கல் சிந்தனை”, “தேசியவாதச் சிந்தனை” மற்றும் “முதலாளிகளது நலன்களை சட்டமாக்கும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிமுறை” போன்ற சிந்தனைத் தெளிவைப் பெற்று அதுகுறித்து “மக்கள் மனப்பாங்கை” மாற்றி இஸ்லாத்திலும் அதன் ஆட்சிமுறையான கிலாபாவிலும் நம்பிக்கையூட்டும் தஃவா பணியை மேற்கொள்ள வேண்டும்.

இன்று முஸ்லிம் நாட்டுத் தலைமைகள் மேற்கினது அடிவருடிகளாக செயற்படும் போக்கையும், மேற்கினது கருவியாக ஐ.நா.சபை, நேட்டோ, சர்வதேச நாணயநிதியமும் வங்கியும், அரசசார்பற்ற நிறுவனங்களும் திருச்சபைகளும், மற்றும் மனித உரிமை அமைப்புக்களும் தொழிற்படுவதனை உணர்த்த வேண்டும்.

இது குறித்த தெளிவை அறிவைப்பெற்று உரிய சிந்தனைகளை சமூகத்தில் விதைத்து சிந்தனை மாற்றத்தின் பங்காளிகளாக மாறவேண்டும். அதுவே இஸ்லாம் எழுச்சி பெறவழிவகுக்கும் என்பதனை உணர்ந்து செயற்படவேண்டும்.

Aug 18, 2013

இன்றைய இஸ்லாமிய தலைமைகளிடம் இருக்க வேண்டிய உயரிய நோக்கங்கள்:


முஸ்லிம்கள் இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு முழுமையாகத் திரும்பி இஸ்லாமிய தஃவாவை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

முஸ்லிம்கள் மறுபடியும் தாருள் இஸ்லாத்தின் கீழ் இஸ்லாமிய வாழ்க்கை முறைக்குத் திரும்பி ஷரிஆவின் அடிப்படையில் தங்கள் வாழ்வியல் விவகாரங்கள் அனைத்தையும் தீர்மாணிக்க வேண்டும்.

இஸ்லாமிய அரசான கிலாபத்தின் நிழலில் ஹலால் ஹறாமை தங்கள்வாழ்க்கையின் அனைத்துச் செயற்பாடுகளினது அளவுகோலாக எடுத்துக் கொள்ளும் வாழ்க்கைக் கண்ணோட்டத்தை கொண்ட இஸ்லாமிய சமூகமாக வாழ வேண்டும்.

அல்லாஹ்வின் வேதத்தின்படியும் அவனுடைய தூதரின் (ஸல்) சுன்னாவின்படியும் தங்களை ஆட்சிசெய்து இஸ்லாத்தின் செய்தியை “தஃவா மூலமும் ஜிஹாத் மூலமும்” உலம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் “பைஅத் கொடுத்து” முஸ்லிம்கள் ஒரு “கலீபாவனை நியமனம்” செய்வதன் மூலம் அமைக்கப்படும் “கிலாபா அரசினது” முக்கியத்துவம் பற்றியும் அது இன்று முஸ்லிம் உம்மத் இழந்துள்ள நிலையில் அனுபவித்துவரும் கஷ்டங்கள், துன்பங்கள் மற்றும் இழிவுகளை கருத்திற்கொண்டும் அதனை நபி வழியில் மீள் உருவாக்கம் செய்ய பாடுபடவேண்டும்.

முஸ்லிம்களின் ஒரே தலைமையான கிலாபத்தின் மீள் எழுச்சிக்குத் தடையான அடிப்படைத் தடைக்கற்களான இன்றைய “மேற்கினது அடிவருடிகளான முஸ்லிம் ஆட்சியாளர்களையும்”, அவர்கள் முஸ்லிம் உம்மத்தை தேசத்தின் எல்லைக்குள் பிரித்தாளும் “தேசியவாதச் சிந்தனையின் பாரதூரமான விளைவையும்” உணர்வதுடன் இன்று உம்மத்தின் “முஸ்லிம் இராணுவம்” மேற்கினதுநலன்களுக்கு எமது முஸ்லிம் ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்படும் துரதிஸ்டமான நிலையில் இருந்து மீட்டு, நன்கு திட்டமிடப்பட்ட தஃவாக்களின் மூலம் அவர்களது நுஸ்றாவை பெற்று இஸ்லாமிய அரசினது நலன்கள் காக்கப்படவும், முஸ்லிம்களும் இஸ்லாமும் பாதுகாக்கப்படவும் உரிய தாவாவின் அவசியம் பற்றி உணர்ந்து செயற்படவேண்டும்.

இதுவே முஸ்லிம்களது கண்ணியம் காக்கப்பட, குர்ஆன் சுன்னா வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அமுலாக்கப்பட வழிவகுப்பதுடன் குப்பார்களும் இவ்வுலகில் நலன்பெற வழிவகுக்கும். ஏனெனில் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட் வாழ்க்கை முறை தீனுல் இஸ்லாமாகும்:

இந்த பேருண்மைகளை உணர்ந்து இஸ்லாத்திற்கு பலம்சேர்போம்! இஸ்லாத்தை ஆளுகை நிலைக்கு கொண்டுவர பாடுபடுவோம்!

இவ்வுயரிய நோக்கங்களை வாழ்வின் இலக்காக கொண்டு எமது வாழ்வை ஒழுங்குபடுத்தி தஃவாவை முற்படுத்துவோம்.