Showing posts with label கிலாபத். Show all posts
Showing posts with label கிலாபத். Show all posts

Sep 6, 2016

கிலாஃபத் ஜனநாயக அமைப்பையோ அல்லது சர்வாதிகார அமைப்பையோ கொண்டதாக இருக்குமா?

இஸ்லாமிய அரசு இவை இரண்டையும் கொண்டிருக்காது.  மேற்கத்திய காலனியாதிக்க சக்திகள் தேர்தல் முறைதான் ஜனநாயகம் என்று தொடர்பு படுத்திவிட்டார்கள், ஆனால் இந்த விஷயத்தின் உண்மை நிலை அதுவல்ல. கிலாஃபத்தில் கலீஃபா உட்பட பல்வேறு பதவிகளுக்கு நபர்களை தேர்ந்தெடுக்க தேர்தல்கள் நடைபெறும், ஆனால் இவர்களில் ஒருவருக்கு கூட ஜனநாயகத்தில் இருப்பது போன்று தனி நபராகவோ அல்லது ஓரு கூட்டாகவோ சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்காது. அஃதாவது இது மக்கள் தங்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முடியும் என்றும் அதே சமயம் அவர்களால் ஷரீ’ஆவிற்கு மாறுபட்டு ஆட்சியாளர்கள் எவ்வித விசாரணைக்கும் தண்டனைக்கும் ஆளாவதிலருந்து விடுவிப்பது போன்ற கறைபடிந்த சட்டங்களை அவர்களால் இயற்ற முடியாது என்பதை விளக்குகின்றது. 6
நடைமுறை உபயோகத்தில், சர்வாதிகார ஆட்சி அமைப்பு என்பது அதன் தலைமையை சட்டமோ, அரசியல் அமைப்போ அல்லது இதர உள்நாட்டிலுள்ள சமூக மற்றும் அரசியல் காரணங்களும் அதன் வரையறைக்கு  கட்டுப்படுத்தாத ஒரு ஏகாதிபத்திய தன்மையுடையதை குறிக்கின்றது. இது இஸ்லாமிய சட்டத்திற்கு மாற்றமானதாக இருக்கின்றது ஏனெனில் கலீஃபா தனது செயல்பாடுகளை சில வரையறைக்குள் அமைத்து கொள்ளும்படியும் அதில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அதை சரிகாணும் செயல்பாட்டை கொண்டிருக்கும் அது அவரின் அதிகாரத்தை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும். கலீஃபா சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க மாட்டார், அவரும் மற்ற எல்லா குடிமக்களை போன்று அதற்கு கட்டுப்பட்டவராகவே இருப்பார்.
 
http://sindhanai.org/

Jul 22, 2016

நீங்கள் எப்படி!?


முஸ்லீம் உம்மத் எப்படியான சிக்களில் சிக்கியுள்ளது? அதன் மீட்சிக்கான சிந்தனை எவ்வாறு அமைய வேண்டும்? முரண் சிந்தனை கவர்ச்சியை ஏற்பதால் ஏற்பட்டுள்ள விளைவுகள் இப்படி பல விடயங்களை சொல்ல வரும்போது...

‪#‎சிலருக்கு‬ புரிகிறது.
#சிலருக்கு கடுப்பு!
#சிலருக்கு பிரச்சினையே தெரியாது!
#சிலருக்கு பிரச்சினை புரிந்தாலும் நாம் சொல்லும் அரசியல் தீர்வில் நம்பிக்கையில்லை!
‪#‎சிலர்‬ பிரச்சினையின் கோணங்களை மாற்றிப் புரிந்ததால் தொலைந்த தீர்வு அர்த்தமற்றது என்பர்!
#சிலருக்கு பிரச்சினையும் புரியும் தீர்வும் புரியும் ஆனால் அதை அடையும் பாதையில் குழப்பங்கள் இருக்கும்!.......

இப்படி பல்வேறு முரண் நியதிகள் கொண்டு முஸ்லீம் உம்மா இயங்கும் நிலையில் முதற்கட்டம் தீர்வு இதுதான் என ஒரு மையப் புள்ளியில் முஸ்லீம் உம்மத்தை ஒன்று குவிப்பதற்கான பணியே இன்று எமக்கு பிரதானமாகிறது! அந்த வகையில் இஸ்லாத்தின் வலுமிக்க இராஜதந்திர பின்புலம் கிலாபா அரசியலின் மீள்கட்டுமானத்தில் இருந்தே தீர்வு இருக்கும் என்பதும், இஸ்லாத்தின் செயல் கட்டமைப்பு ரீதியான பல வெற்றிகளை கிலாபா அரசின் கீழ் இருந்துதான் அல்லாஹ்(சுப) அளித்துள்ளான் என்பதும் எமது ஆழ்ந்த புரிதல். எனவே முஸ்லீம் உம்மா எதிர் கொள்ளும் சிக்கல்களின் தீர்வு என்ற விடயத்தில் கிலாபா அரசு அவசியமாக இருக்கிறது. எனவே கிலாபா அரசியல் எனும் இபாதத்துக்காக உடல் உள உணர்வு ரீதியாக நாம் ஒரு பொது நிலைப்பாட்டை நோக்கி உம்மத் உடன்படுவதே முதல் நிலை தீர்வாக நாம் முன் மொழிகிறோம்! இதை 1.அகீதா ரீதியாகவும் 2.சகோதரத்துவ ரீதியாகவும் 3.இடம் நில பொருள் வள பலத்தின் மூலமும் கட்டமைத்து சுண்ணாவின் வழியில் அமுல் படுத்த வேண்டும் என்ற மக்கள் எழுச்சியை அடுத்த தீர்வியல் இலக்காக குறிப்பிடுகிறோம்!

அடுத்து ரசூல்(ஸல்) காட்டித்தந்த அமைப்பில் அதற்கான தகுதி மிக்கவர்களிடம் நிபந்தனையற்ற உதவியை வேண்டி இந்த வேண்டுதலை முன்வைக்கிறோம். அதில் ஒடுக்கப்படுகிறோம் கைது செய்யப்படுகிறோம் சித்திர வதைகளுக்கு முகங் கொடுக்கிறோம் தடை செய்யப்படுகிறோம்!!!

எமது முடிவின் யதார்த்தத்தை உணர பின்வரும் வரலாற்று பேருண்மை மீது அவதானம் செலுத்த வேண்டியுள்ளது! அதாவது இஸ்லாத்தின் எதிரிகளிடம் இருந்து முஸ்லீம் உம்மா எப்போதிருந்து அரசியல், இராணுவ ,பொருளாதார, சிந்தனா ரீதியான சவால்களை எதிர்கொள்ள தொடங்கியது!? என்று கேட்டால் உடனேயே ரசூல்(ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கை தொடங்கி அப்படியே தாத்தாரியர் சிலுவைப் யுத்தம் என நகர்ந்து இன்றைய காஸ்மீர் விவகாரம் வரை அடுக்கிக் கொண்டே போகலாம்! இந்த வரலாற்று ஆய்வின் தீர்விடமாக நாம் குறிப்பிடும் கிலாபா அரசு என்ற இராஜதந்திரம் தொழிட்பட்டு நிற்பதை இஸ்லாத்தை புரிந்த எவராலும் மறுக்க முடியாது.

ஆனால் இப்படியான சிக்கல்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டன என்ற தீர்வு விடயத்தை ஆராயும் போது அல்லாஹ்வின் தூதரது(ஸல்) செயல் ரீதியான இராஜதந்திரத்தை கருது கோளாக எடுத்து தீர்வு விடயங்கள் பகுப்பாய்வு செய்யப் படுவதில்லை! உதாரணமாக விட்டுக் கொடுப்பு என்றதும் ஹுதைபியா விவகாரத்தை பாய்ந்தடித்து ஆதாரம் காட்டும் பலர்! ஆனால் அத்தகு சூழலின் ஒப்பீட்டு சமவலு ,தள ஒற்றுமை பற்றி பகுப்பாய்வு அற்றே இவர்கள் பேசுகின்றனர்! இவர்களுக்கு தமது செயல் இஸ்லாத்தின் அங்கீகாரமாக இருப்பதாக அடையாளம் காட்ட வேண்டிய கட்டாயம் மட்டுமே இருக்கிறது! இது போல ஏறாளமான சிந்தனை ஒப்பீட்டு பிழைகள் உம்மாவிடம் இருக்கிறது!

இவ்வாறு அவர்கள் பிழையான வியூகத்தில் தொழிற்படுவதை விமர்சித்து சுட்டிக்காட்ட முயலும் போது எம்மை அவர்கள் வாயடைக்க நினைக்கின்றனர் 1.இவர்கள் வாய் வீச்சாளர்கள் இவர்களிடம் தீர்வில்லை! 2.இவர்களை இஸ்லாத்தின் எதிரிகளே உருவாக்கியுள்ளனர்! 3.இவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய வழிகேடர்கள்! என்ற எதிர்ப் பிரச்சாரங்களை பரவலாக முடுக்கிவிடுகின்றனர்! எமது விமர்சனங்களின் மீது உறுதியான ஆதாரங்களை சமர்பித்து பதில் கூற முடியாத நேரத்தில் இத்தகு திசைதிருப்பும் உத்திகளுக்குள் புகுந்து தம்மை பலப்படுத்த நினைக்கின்றனர்! ஆனால் இத்தகயவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றுகின்றனர் என்பதே உண்மை!

இத்தகய இயக்க வாதம்சார் அச்சுருத்தலுக்காக அவர்கள் விடும் தவறுகளையும் அரசியல் வங்குரோத்து தனத்தையும் விமர்சனப்படுத்தக் கூடாது என அவர்கள் நினைத்தால் அதுவே கருத்தியல் சர்வாதிகாரமாகும்! மேலும் ஒருவன் வந்து குப்ருக்கும் அது சார் சிந்தனை கொண்டவனுக்கும் பைஆ பண்ணுவது இஸ்லாம் கூறும் பைஆவுக்கு நிகரானது ஜனநாயக அரசு கிலாபா அரசுக்கு நிகரானது எனக்கூறும்போது அதை ஆதரிக்க செக்கியூலரிச தீனை ஏற்ற பலர் வரலாம்! இன்று அதுதான் நடக்கிறது! எமது குறைந்தபட்ச எதிர்ப்பையாவது இவர்களுக்கு காட்டாதுவிடின் இத்தகு காலக் கபோதிகள் தமது குருட்டுத் தனத்தை சிந்திக்க சந்தர்ப்பம் இல்லாது போய்விடும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு கூட இஸ்லாம் எனும் தீனை ஒரு டிப்லோமடிக் தரத்துக்கு கொண்டுவர பல வருடங்கள் தேவைப்பட்டது! இவ்வளவுக்கும் வஹி அவருக்கு நேரடியாகவே தன் வழிகாட்டலை வழங்கியது! எமக்கும் மாற்று வழிகள் இல்லை அதே பாதை அதே வழிமுறைதான் அது 60 வருடங்களாக இருந்தாலும் 600 வருடங்களாக ஆனாலும் சரியே! ‪#‎சிந்தனைமாற்றம்‬‪#‎நிபந்தனையற்ற‬ உதவி கிடைக்கும்வரை எமது முயற்சிகளை வேகப்படுத்துவது தவிர மாற்றுவழி எதுவுமில்லை!

Jul 19, 2016

கிலாஃபத் பற்றிய 100 கேள்விகள்


முன்னுரை



ஜனவரி 2012 ல் முதல் வருடத்தில் அடி எடுத்து வைத்த அரபு புரட்சிக்கு பின் அரபுலகில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது அதோடு மட்டுமல்லாமல் அதனுடைய அதிர்வுகள் இன்னும் உலகை குலுக்கி கொண்டிருக்கிறது. இவ்வேளையில் முஸ்லிம் உலகில் நடைபெற்று வரும் இந்த புரட்சி பற்றிய கண்ணோட்டங்கள் உள்ளேயும் வெளியேயும் சதா மாறிய வண்ணம் இருக்கின்றது.

முஸ்லிம் உலகில் நடைபெற்ற தேர்தல்களில் மதசார்பற்ற கட்சிகள் தோல்வி அடைந்ததை தொடர்ந்து மேற்குலகம் தன்னுடைய நிலைப்பாடு பற்றி மறு பரிசீலனை செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறது. தொடக்கத்தில் இஸ்லாமிய வாக்கியங்களை உபயோகித்து வெற்றி பெற்ற இஸ்லாமிய கட்சிகள் பின்னாளில் யதார்த்தத்தில் நிலைபெற்று இருக்கும் ஆட்சி முறைக்கு வழி கொடுத்துள்ளன மேலும் இந்த பிராந்தியத்தில் இஸ்லாத்திற்கான குறள் ஓங்கி வருவதன் காரணத்தால் இஸ்லாம் மற்றும் மதசார்பின்மை இவற்றிற்கு இடையே கடுமையான விவாதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்த புரட்சியை கடத்துவதற்கான முயற்சியை மேற்குலகம் தொடர்ந்து செய்து வருகிறது ஏனெனில் இங்கு ஏற்படும் மாற்றம் ஒரு செயற்கை மாற்றம் என்ற அளவில் இருப்பதற்காக வேண்டிய காரியங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சவால்களை எதிர்கொள்ளவும் இந்த புரட்சி கடத்தப்படாமல் இருக்க இஸ்லாத்தின் பக்கம் தெளிவான அழைப்பை மேற்கொள்ள வேண்டும் மற்றும் அந்த அழைப்பானது இஸ்லாம் முழுமையான அளவில் நடைமுறை படுத்துவதற்காக மட்டுமே இருக்க வேண்டும். இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால்? இஸ்லாமிய அமைப்பு தான் மிகச்சிறந்த அமைப்பு என முஸ்லிம்களாகிய அனைவரும் நம்பிக்கை கொண்டுள்ளனர் ஆனால் அது நடைமுறையில் எவ்வகையான திட்டங்களை செயல்படுத்தும் என தெளிவாக அறிந்து வைத்திருக்காமல் அதை முஸ்லிம்கள் ஆதரிக்கின்ற காரணத்தால் அவர்களுடைய மனதில் பலவிதமான கேள்விகள் எழும் வாய்ப்புள்ளது. உண்மையில் இஸ்லாத்திற்கு இந்த 21 ம் நூற்றாண்டில் ஆட்சி செய்யும் திறன் இருக்கின்றதா? முஸ்லிம் உலகில் உள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கான தீர்வை இஸ்லாம் கொண்டுள்ளதா? வெளி நாடுகளுடனான உறவை பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது? இன்றைய பிரிவினைவாத பிரச்சினைகளை இஸ்லாம் தீர்க்குமா? இஸ்லாமிய அமைப்பை எங்ஙனம் அமைப்பது? இது தன்னுடைய பொறுப்பை பற்றி கேள்வி கேட்க அனுமதிக்கும் அமைப்பாக இருக்குமா அல்லது பிரதிநிதித்துவ அமைப்பாக இருக்குமா? இது போன்ற நடைமுறை கேள்விகளுக்கு எளிதாக பதிலளிக்கும் நோக்கத்தில் இந்த புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகம் அரசமைப்பு, பொருளாதாரம், வெளியுறவு கொள்கை மற்றும் சட்டம் போன்ற மிக முக்கிய அம்சங்களை அலசியிருக்கும். சமூக அமைப்பு, அரசியலமைப்பு, பொருளாதார அமைப்பு, நீதித்துறை போன்ற இஸ்லாமிய அமைப்புகள் பற்றி பல நூல்கள் வெளியாகியுள்ளது. இந்த இஸ்லாமிய அமைப்பின் பலதரப்பட்ட விஷயங்கள் பற்றி ஆழமாக புரிந்து கொள்வதற்கு இந்த ஒழுங்குககள் தமக்கு மையமாக கொண்டுள்ள அடிப்படை கருத்து பற்றிய ஒரு அடிப்படை புரிந்துணர்வை கொண்டிருப்பது அவசியமாகும்.

இந்த புத்தகத்தின் குறிக்கோள் இஸ்லாமிய நிலைப்பாட்டை விளக்குவதே ஆகும், இதை அதிகப்படியான விவரங்கள் தேவைப்படாமல் தெளிவாகவும் எளிதாகவும் எல்லோராலும் எளிதல் புரிந்து கொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதிலுள்ள பதில்கள் சம்மந்தப்பட்ட துறைகளில் விளாவாரியான ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு வழிவகை அமைத்து மேற்கொண்டு அது பற்றி தீவிர ஆராய்ச்சி செய்ய உதவி புரியும்.

Sources: sindhanai.org

ஷரீ’ஆ காலாவதி ஆகிவிட்டதா?


இஸ்லாம் மனிதர்களை உணர்வுகளை கொண்டு அமைத்திருப்பதாகவும் அந்த உணர்வுகளை பூர்த்தி செய்ய அவர்கள் தொடர்ந்து பல பிரச்சினைகளை எதிர்த்து போராட வேண்டியுள்ளதாகவும் பார்க்கிறது. இஸ்லாமிய சட்டங்கள் ஆண்களையும் பெண்களையும் ஏழாம் நூற்றாண்டில் அரேபிய பாலைவனத்தில் வசித்த தனி மனிதர்களாக கருதாமல் ஒட்டுமொத்த மனித இனமாகவே கருதி இறக்கி அருளப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தை அல்லது இடத்தை சார்ந்த மனித குலத்திற்கு அனுப்பப்பட்டது அல்ல. இன்றைய மனிதன் 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனிதன் எவ்வாறு இருந்தானோ அவ்வாறே இருக்கின்றான் மேலும் 1400 வருடங்களுக்கு பிறகும் அவ்வாறே இருப்பான். 1

இஸ்லாம் உதித்து மேலோங்கிய காலத்தை விட இன்றைய உலகம் முற்றிலும் மாறுபட்டது என்பதில் சந்தேகம் துளி கூட கிடையாது. இன்றைய மனிதனின் வாழ்க்கை முறை நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனை விட மாறுபட்டது. அன்றைய காலத்தில் மக்கள் குடிசைகளில் வாழ்ந்து வந்தனர் இன்று நம்மிடம் வின்னை தொடும் கட்டிடங்கள் உள்ளது, ஆனால் அன்று போல் இன்றும் நமக்கு வீடுகளும் நமது தலைகளுக்கு மேல் கூறைகளும் தேவை படுகின்றது. அன்றைய காலகட்டத்தில் ரசூலுல்லாஹி(ஸல்) அவர்கள் தூதர்களை வேற்று நாட்டு அரசர்களுக்கு செய்தி அனுப்ப குதிரைகள் மீது அனுப்பி வைத்தார்கள் ஆனால் இன்று ஒரு தகவலை இமெயில், துரித செய்தி(IM) அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாக அனுப்ப முடிகறது. முஹம்மது(ஸல்) அவர்களும் அவரது தோழர்களும் குதிரைகள், வில் மற்றும் அம்பு போன்றவற்றை உபயோகித்து பல போர்கள் புரிந்திருக்கிறார்கள், அதேபோல் இன்றும் போர்கள் பல நடத்தப்படுகின்றன ஆனால் அதிநவீன தொழல்நுட்பம், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனைகள் மற்றும் செயற்கைக்கோள் மூலம் புலனாய்வு மேற்கொள்ளுதல் ஆகியவைகளை கொண்டு. முந்தய காலத்தில் முஸ்லிம்கள் வானவியலை பற்றி கற்றறிந்ததால் அவர்கள் எங்கு சென்றாலும் கிப்லாவை நோக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர் மாறாக இன்று அதை ஒரு மின்னனு கடிகாரம் செய்து விடுகிறது. இது மனிதர்கள் அவர்களுடைய தேவைகள் முன்பிருந்ததை போன்று தான் உள்ளது என்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் மாறவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றது. நம் பார்வைக்கு புலப்படும் மாற்றம் என்பது வெறும் கருவிகளின் மாற்றம் அல்லது மனிதர்கள் அந்த பிரச்சினைகளை சரிசெய்யும் போது உபயோகிக்கும் சாதனங்களின் மாற்றம் மட்டுமே.

ஒரு சிந்தனை பொறுத்தமில்லாததாக ஆக்க காலத்தை மட்டுமே அளவுகோலாக எடுத்துக்கொள்ள முடியாது ஏனெனில் சிந்தனை என்பது கால வரையறைகள் அற்றது. பண்டைய கிரேக்க தத்துவம், கலை மற்றும் கலாச்சாரத்தை கொண்டு 16 ம் நூற்றாண்டில் அடைந்த மறுமலர்ச்சியை ஐரோப்பாவின் மறுமலர்ச்சி என குறிப்பிடப்பட்டது. உலகளவில் இன்று நமக்கு கிடைக்கும் சட்டங்கள் மூன்று நூற்றாண்டுகள் முன்னர் எழுதப்பட்ட பாரம்பரியம் கொண்டது.

- உதாரணத்திற்கு:

-1791 ல், அமெரிக்காவில் உரிமைகள் சம்மந்தமாக நிறைவேற்றப்பட்ட சட்டம், 1215 ன் உரிமையை உறுதி செய்யும் மகாசாசனத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

- நவீன கால சிவில் சட்டம் பொறுப்புகள் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாகும், இது முதன் முதலில் ரோமானிய சட்டத்தில் இடம்பெற்றதாகும்.

- பொதுச்சட்டம், இது அடிப்படையில் முந்தய நீதிமன்றத்தீ்ர்ப்பிலிருந்து குறிப்பெடுத்து தீர்ப்பளிக்கும் முறையானது முதன்முதலில் மத்திய கால ரோமானிய சட்டத்தில் இடம்பெற்றிருந்தது மற்றும் நார்மன் ஸாக்ஸனிய பழக்கவழக்கத்தால் ஈர்க்கப்பட்டதாகும் இன்றும் அது இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவின் சட்டமியற்றுதலுக்கு அடிப்படையாக இருந்து வருகிறது.

இதனடிப்படையில் உற்று நோக்கினால் பழங்காலத்திய பூர்வீகம் கொண்டிருப்பதால் ஜனநாயகம் தற்காலத்திற்கு உகந்த நிலையில் இல்லாமல் இருந்திருக்கும். ஆகையால் இஸ்லாம் ஏழாம் நூற்றாண்டு அரேபியாவில் உதயமான காரணத்தை கொண்டு தற்காலத்திற்கு பொருத்தமானதல்ல என்ற வாதம் சரியானதல்ல. இஸ்லாமிய சட்டம் மனிதர்கள் மற்றும் அவர்களுடைய பிரச்சினைகள் தொடர்புடையதாகவும் அவர்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் கருவிகளை தொடர்புபடுத்தி இல்லாத காரணத்தால், இஸ்லாமிய ஷரீ’ஆ அன்று அரபு மக்களின் நிலையை உயர்த்தியது போன்று இன்றைய மனிதகுலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.


Sources: sindhanai.org

இன்றைய உலகில் எங்காவது இஸ்லாமிய ஆட்சி நடைபெறுகிறதா..??



இன்றைய உலகில் எங்காவது இஸ்லாமிய ஆட்சி நடைபெறுகிறதா, அதாவது சவூதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் (தாலிபானிற்கு கீழ்) போன்ற நாடுகளில்?


ல்லை
, தற்போதய முஸ்லிம் நாடுகள் இஸ்லாமிய சட்டத்தின் சில பகுதிகளை மட்டுமே நடைமுறை படுத்தி வருகின்றன: அதிகப்படியாக அவை குடும்பவியல் சட்டங்களின் சில பகுதிகளை உபயோகித்து வருகின்றன, ஆனால் எந்தவொரு நாடும் முழுமையாக தன் சட்டங்களையும் கொள்கைகளையும் இஸ்லாமிய அடிப்படையில் பிரித்தியேகமாக அமைத்து கொள்ளவில்லை. பாகிஸ்தானில், இஸ்லாமிய சட்டத்தை குடும்ப பிரச்சினைகளை தீர்க்கவும் அல்லது இஸ்லாமிய உணர்வுகள் மீது தான் அக்கறை கொண்டுள்ளதாக அடையாள படுத்துவதற்காக மட்டுமே உபயோகித்து வருகிறது, ஹுதூத்(தண்டனை) சட்டத்திலும் இதே நிலை தான். இது தான் தகுதியற்ற ஊழலுற்ற அரசாங்கங்கள் மற்றும் அவைகளின் மேற்கத்திய எஜமானர்கள் மற்றும் ஊடகங்கள் இஸ்லாமிய சட்டம் செயலற்று இருப்பதாகவும் மேலும் அதனால் சமூகத்தை நிர்வகிக்க முடியாது என்று சித்தரிப்பதற்காக செயல்படுத்தும் திட்டமாகும்.3

பல லட்சக்கணக்கான திருக்குர்’ஆன் பிரதிகள் மற்றும் இஸ்லாமிய நூல்களை அன்பளிப்பாக வழங்கலாம் மற்றும் உலகெங்கும் பள்ளிவாயில்கள் நிர்மானிக்க அதிகப்படியான நிதிகளை சவூதி அரேபியா அன்பளிக்காக வழங்கலாம், எவ்வாறிருப்பினும் சில இஸ்லாமிய அடிப்படைகளை கொண்ட சட்டங்கள் மற்றும் சில மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களையும் கொண்டு சவூதி அரேபியா ஒரு கலப்படமான சட்டங்களையே பின்பற்றி வருகின்றது. எனினும் இஸ்லாமிய கண்ணோட்டத்தை தக்கவைத்துக்கொள்ள அவைகளை அது சட்டங்கள் என குறிப்பிடுவதில்லை. இஸ்லாமிய சட்டங்களையும் மனிதன் இயற்றிய சட்டங்களையும் வேறுபடுத்தி காட்ட சவூதி பிரத்தியேகமாக குறிப்பிட்ட சில வார்த்தைகளை உபயோகிக்கின்றது. அரசியலமைப்பு சம்மந்தமான ஒரு அரபி நூலில் அதன் ஆசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார், “சவூதியில் விதி(ஆனூன்) மற்றும் சட்டம்(தஷ்ரீ’) போன்ற வார்த்தைகள் இஸ்லாமிய ஷரீஆவிலுருந்து எடுக்கப்பட்டவைகளை குறிப்பிடுவதற்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது…4 மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களை பொறுத்தவரை அதாவது அமைப்புகள் (அந்திமா) அல்லது வழிமுளைகள (த’லீமாத்) அல்லது பிரகடனங்கள் (அவாமிர்)……. இது தவிர ஒரு பரம்பரை முடியாட்சியான சவூதி அரேபியா மார்க்க நிறுவனங்களை முதலாளித்துவ மற்றும் மேற்கத்திய உலகிற்கு ஆதரவான திட்டங்களுக்கான எதிர்ப்புகளை கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக உபயோகித்து வருகிறது.

இதை போன்று தாலீபானும் இஸ்லாத்தின் சில அம்சங்களை நடைமுறை படுத்தி வந்தது. ஆப்கானிஸ்தானை தாலீபான்கள் ஆண்ட போது அவர்கள் ஒருபோதும் தாங்கள் இஸ்லாமிய அரசாங்க முறையான கிலாஃபத் முறையை பின்பற்றுகிறோம் என்று கூறியதில்லை, மாறாக தங்களை ஒரு அமீரகமாகவே அடையாள படுத்தியது அது வெளியுறவு கொள்கை அற்ற ஒரு சில சட்ட வறையறைகளை கொண்டு ஒரு எல்லைக்குள் மட்டுமே செயற்படும் ஒரு அரசியல் நிறுவனமாக தான் செயல்பட்டது. இஸ்லாமிய ஆட்சியமைப்பானது பொருளாதாரம், சமூகவியல், ஆட்சிமுறையாக இருக்கட்டும் மேலும் வெளியுறவு கொள்கை அமைத்து கொள்வது ஆகட்டும் இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களையும் நடைமுறை படுத்தக்கூடியதாக இருக்கும், கிலாஃபத்தானது ஒரு தனித்து விடுபடக்கூடிய நாடு கிடையாது.

ஈரானிய அரசியலமைப்பு பல அம்சங்கள் இஸ்லாத்தோடு ஒத்து போகக்கூடிய வகையில் இருக்கின்றன அதேபோல மற்றவைகள் இஸ்லாத்திற்கு நேர் எதிராக உள்ளது. ஈரானிய அரசியல் சாசனத்தின் விதி 6 இவ்வாறு கூறுகின்றது: “ஈரானின் இஸ்லாமிய குடியரசு, நாட்டின் விவகாரங்களை ஜனாதிபதி, இஸ்லாமிய கலந்தாய்வு சபை உறுப்பினர்கள், கவுன்சில் உறுப்பினர்கள் போன்றவர்களை தேர்தல்கள் நடத்தி தேர்த்தெடுப்பது உட்பட பொதுஜன கருத்தை அறிந்து அதன் அடிப்படையில் நாட்டின் விவகாரங்களை மேற்கொள்ள வேண்டும், அல்லது பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் அதன் சில விவகாரங்களில் அரசியல் சாசனத்தின் இதர விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை தழுவி மேற்கொள்ள வேண்டும்.” இஸ்லாமிய அமைப்பை கொண்ட அரசியலமைப்பு – அதாவது கிலாஃபத்தானது முழுமையாக இஸ்லாமிய ஆதாரங்களை அடிப்படையாக கொண்டதாகும். ஈரானின் விஷயத்தில் இது பொருந்தாது ஏனெனில் அது தனது அரசியலமைப்பில் ” நாட்டின் விவகாரங்களை தேர்தல்கள் மூலம் வெகுஜன கருத்தை அறிந்து அதன் அடிப்படையில் செயல்படுவதாக” அறிவிக்கிறது”. இஸ்லாத்தை பொறுத்தவரை நாட்டின் விவகாரங்கள் வெகுஜன கருத்தின் அடிப்படையில் அல்லாமல் ஷரீ’ஆவின் அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்படும்.

Sources: sindhanai.org

Jul 14, 2016

எழுதுவதாலும் ,சித்தாந்தம் கற்பிப்பதாலும் கிலாபா வருமா !?

எழுதுவதனால் ,பேசுவதனால் ,மக்களுக்கு சித்தாந்தம் கற்பிப்பதால்  கிலாபா வந்துவிடுமா என்ற கேள்வி எம்மில் சில  சகோதரர்களுக்கு மத்தியில் காணப்படுகின்றது . குறிப்பிட்ட சகோதரர்கள் இஸ்லாமிய கிலாபவின் வருகயின்மூலம்தான் முஸ்லிம்களின் மறுமலர்ச்சி உறுதிப்படும் .மற்றும் இஸ்லாம் மேலோங்கும் என்ற விடயத்தை நன்கறிந்தவர்களும் இஸ்லாத்தை நேசிக்கக்கூடியவர்களும் ஆகும் .!!

 இந்த சகோதரர்கள் மத்தியில்  இவ்வாறான ஒரு  கேள்வி எழுகின்றமைக்கான அடிப்படைக்காரணம் இவர்களுக்கு  கிலாபா அரசு இந்த உலகிலிருந்து  இல்லாமால் போனதன் வரலாற்றுப்பின்னணி பற்றிய போதிய தெளிவின்மையே ஆகும் .!!

அந்தவகையில் கிலாபவை இல்லாமல் செய்த வரலாற்றை ஆழமாக  நோக்கும்போது குப்பார்களால் மேற்க்கொள்ளப்பட்ட  மிகப்பிரதான  போர் வகை சிந்தனைப்போர்  என்பதை அறிந்துகொள்ளமுடியும்.!! 

உம்மத்தை ஒன்றிணைக்க உழைப்பவர் மிக முக்கியமாக அறிய வேண்டியது  உம்மத்தை பிரிவிக்குள்ளாக்கி அதன் ஒன்றினைவினூடாக கிலாபத்தை உருவாகாமல் தடுக்கும் அந்த நச்சு சிந்தணைகள் என்ன அவை இன்றைய உலகில் எடுத்துள்ள வடிவங்கள் என்ன ,அவற்றை எவ்வாறு முஸ்லிம்களிடமிருந்து களைவது ,அதில் உள்ள தடைகள் என்ன என்பவை  பற்றி ஆகும் .!!

இவ்வாறன புரிதலோடும்  தெளிவான இஸ்லாமிய  சித்ததாந்த அறிவோடும்   உம்மத்தினுள் தஹ்வா பணி புரிதல் மூலமாகவே  அந்த தவாஹ் பணி கிலாபாவின் வருகைக்கு வழிவகுக்கும் .!!

கிலாபா அரசின் முக்கியத்துவத்தை  முதலில் முஸ்லீம்கள் உணரவேண்டும் .இந்த உணருதலை கொண்டுவர அவர்களை வழி நடாத்தும் பிற சித்ததாந்த சிந்தணைகள் களையப்படுதல் வேண்டும் ;மாற்றுத்தீர்வை அவர்கள் வேண்டிநிற்கும் வேளையில் சிதத்தாந்த இஸ்லாம் அவர்களுக்கு கற்ப்பிக்கப்படுதல்  வேண்டும் இந்தப்பணி பரந்தளவில் உம்மத்தில் ஒரு ஒழுங்குமுறையில் முன்னெடுக்கப்படுதல் வேண்டும் .உம்மத்தில் இடம்பெறும் இந்த  சீரிய விழிப்புணர்வுப்பிரச்சாரத்தின் மூலமாகவே உருவாகும் கிலாபா பலம்பொருந்தியதாகவும் எதிரி அரசுகளின் சதி ,சூழ்ச்சிகளிலிருந்து உலக முஸ்லீம்களால் பாதுகாக்கப்படக்கூடியவாறும் காணப்படும் .!!

கிலாபா என்பது ஒரு வெறும் அரபுப்பெயர்தாங்கிய அரசு அல்ல அது ஒரு இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு சித்ததாந்த அரசு .!!

#சிந்தணைகள்_வெடிகுண்டுகளைவிட_சக்திவாய்ந்தவை

from Mohamed Nafras

Mar 15, 2016

மார்ச் மாதம் 3ஆம் நாள் 1924 ஆம் ஆண்டு

 
மார்ச் மாதம் 3ஆம் நாள் 1924 ஆம் ஆண்டு துருக்கி இஸ்தான்புல்லில் இஸ்லாமிய அரசான கிலாஃபா இஸ்லாத்தின்  எதிரிகளான மேற்கத்தியர்களால் வீழ்த்தப்பட்டது.
 
நபி (ஸல்) கூறியதாக முஸ்னத் அஹமதில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸில் வருவதாவது.
 
இஸ்லாத்தின் முடிச்சுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கப்படும், ஓவ்வொரு முறையும் முடிச்சுகள் அவிழ்க்கப்படும்போது முஸ்லிம்கள் அடுத்த முடிச்சை பற்றிக்கொள்வார்கள். இதில் அவிழ்க்கப்படும் முதல் முடிச்சானது இஸ்லாமிய அரசு, இறுதி முடிச்சானது தொழுகை..
 
இஸ்லாமிய அரசின் வீழ்ச்சிக்கு பிறகு இஸ்லாத்தில் இருந்த விஷயங்கள் (முடிச்சுகள்) ஒன்றன் பின் ஒன்றாக சென்று விட்டதை நம்மால் தெளிவாக காண முடிகிறது. அதில் ஒருசில பின்வருமாறு..
 
1. ஒரு முழுமையான மார்க்கமாக சமூக வாழ்வில் இஸ்லாம்(பள்ளி, கல்லூரி, வணிகம், நீதிமன்றம், வங்கி, பாராளுமன்றம்) செயல்படுத்தப்பட்டதிலிருந்து.
தனிமனித ஆன்மீக விஷயங்களில் (தொழுகை, நோன்பு, ஹஜ்) மற்றும் பின்பற்றப்படும் மதமாக குறைந்துவிட்டது.
 
2. குர்ஆன், ரஸூலுல்லாஹ் (ஸல்), மற்றும் அவர்களின் மனைவியர்களின் (முஸ்லிம்களின் தாய்மார்களின்) கண்ணியம் குஃப்பார்கள் இழிவு படுத்தும் விஷயமாக மாறிவிட்டது.
(சார்லீ ஹெப்டோ, இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ், பித்னா)
 
3. ஒரே அரசு, ஓரே மார்க்கம், ஒரே அடிப்படை நம்பிக்கை மற்றும் ஒரே நிலப்பரப்பு என்று  ஒன்றுபட்ட இந்த ஒரே உம்மத், இப்போது நபி (ஸல்) காட்டித்தராத தனித்தனி தேசிய கீதம், தனித்தனி தேசிய கொடி, தனித்தனி அரசாங்கம் என்று ஏறத்தாழ 55 நாடுகளாக பிரிந்து நிற்பது.
 
4. முஸ்லிம்களின் உயிர், உடைமை, கண்ணியம் பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்து மதிப்பற்ற ஒருவிஷயமாக மாறிப்போனது. (பாலஸ்தீனம், காஷ்மீர், சேச்சேன்யா, ஈராக், ஆப்கானிஸ்தான், பர்மா போன்ற நாடுகளில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள்)
 
5. இறுதியாக தொழுகை என்ற இபாதத் ஒரு தனிமனித விருப்பமாக மாறிப்போனது.
 
இந்த மோசமான நிலை மாறும் என்றும் மீண்டும்  கிலாஃபா உருவாகும் என்ற முன்னறிவிப்பை நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
 
...பின்பு நபித்துவத்தின் வழிமுறையில் மீண்டும் கிலாஃபா
உருவாகும் (முஸ்னத் அஹமத்)
 
மேலும் இஸ்லாமிய அரசின் (அமீர்) கலீஃபாவுக்கு பையத் செய்யாமல் மரணிப்பதன் விளைவையும் நபி (ஸல்) எச்சரித்துள்ளார்கள்.
 
....கலீஃபாவிடம் (பையத்) உடன்படிக்கை செய்யாத நிலையில் அடையும் மரணம் ஜாஹிலிய்யாவின் மரணம்.. (சஹீஹ் முஸ்லீம்)
 
இப்போது கிலாஃபாஹ் இல்லை  என்பதால் நம்மால் கலீஃபாவிற்கு பையத் செய்யமுடியாது என்பது எதார்த்தம். அப்படியானால் ஜாஹிலிய்யாவின் மரணத்தில் இருந்து எப்படி தப்புவது?
 
 
ஒரு கடமையான (அமல்) விஷயத்தை நிறைவேற்ற மற்றோறு விஷயமும் தேவைப்படுமாயின் அந்த விஷயமும் கடமை என்பது இஸ்லாமிய ஷரீயத்தின் அடிப்படை.
 
ஆதலால் கிலாஃபாவை ஏற்படுத்துவதும் பிறகு கலீஃபாவிற்கு பையத் செய்வதும் நம் மீது கடமை.
 
அதுமட்டுமல்லாமல் அல்லாஹுத்தாலா கூறுகிறான்..
 
மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், அனைத்து நல்லதைக் கொண்டும் (மக்களை)  ஏவுபவர்களாகவும் அனைத்து தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
(அல்குர்ஆன் : 3:104)
 
நன்மையை ஏவி தீமையை தடுக்கும் ஜமாத்தானது அரசாங்கத்தை நிறுவாமல் அதை செயல்படுத்த முடியாது.
 
நபி (ஸல்) கூறிய  கிலாஃபா பற்றிய முன்னறிவிப்பை இந்த பூமியில் உண்மைப்படுத்துவதற்கான அழைப்புபணியில் நாம் அனைவரும் இணைவோமாக.
 
கிலாஃபாவை நிலைநாட்டி இந்த மார்க்கத்தை மேலோங்க செய்யும் உம்மத்தாக உருவெடுக்க அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு அருள் புரிவானாக. ஆமீன்...

Jan 27, 2016

இஸ்லாமியத் தலைமைத்துவத்திலிருந்து ஜனநாயகம் முரண்படுகிறது – பாகம் – 2

அல்லாஹ்(சுபு)வின் நேசம் மனிதன்மீது இறங்குவதுதான் ஈமான் மற்றும் இறைவனுக்கு கட்டுப்படுதல் ஆகியவற்றின் மிகஉயர்ந்த நிலையாக இருக்கிறது. இறைவன்மீது ஈமான் கொண்டு அவனுக்கு கட்டுப்படும் மக்கள் அவனுடைய நேசத்திற்கு தகுதியானவர்களாக இருக்கிறார்கள். அல்லாஹ்(சுபு)வின்ஹ நேசத்தை பெற்றுக்கொள்வதில் அவன் விதித்துள்ள நிபந்தனையை கடை பிடிப்பவர்களுக்கு எல்லாம்வல்ல இறைவன் அருள்பாலிக்கிறான். நபி(ஸல்) அவர்களை மட்டுமே தலைவராகவும் கட்டளையிடும் அதிகாரம் பெற்றவராகவும் ஏற்றுக்கொண்டு பின்பற்றுவதுதான் அல்லாஹ்(சுபு)வின் நேசத்தில் உண்மையாக இருப்தற்குரிய நிபந்தனையாக இருக்கிறது. குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றின் சட்டரீதியான விதிமுறைகளுக்கு மட்டும் கட்டுப்படுவதுதான் வாழ்வியல் பயணத்தில் பங்குகொள்வதற்கும் வாழ்வியலின் கடும்பணிகளை நிறைவேற்று வததற்கும் உரிய நிபந்தனையாக இருக்கிறது. அல்லாஹ்(சுபு)வும் அவனுடையதூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் பரிந்துரை செய்துள்ள சிந்தனையுடன் முரண்படுகின்ற சிந்தனையின் அடிப்படையில் எவரேனும் தனது வாழ்க்கை பயணத்தை அமைத்துக்கொண்டால், அல்லாஹ் (சுபு) அருளியவற்றிற்கு அந்நியமான சட்டத்தை எவரேனும் மனநிறைவுடன் பின்பற்றினால், தனது அபிப்ராயம் மற்றும் சிந்தனை அடிப்படையில் தன்னை பின்பற்றவேண்டும் என்று அழைப்புவிடுக்கும் தலைவரை எவரேனும் பின்பற்றினால், அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களை பின்பற்றி செயலாற்றாத குழுவை எவரேனும் பின்பற்றினால், தலைவர் குழுக்கள் ஆட்சியாளர் ஆகியவர்களின் கூற்றுகள் அல்லாஹ்(சுபு)வின் கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் இணக்கமாக இருக்கிறதா அல்லது முரண்பாடாக இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்யாமல் எவரேனும் அவற்றை பின்பற்றினால் நிச்யமாக அவர்கள் அல்லாஹ்(சுபு)வின் கேள்விக்கணக்கிலிருந்து தப்பித்துச்செல்ல முடியாது!
 
     ஆகவே அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நியமானவற்றின்பால் மக்களிலுள்ள தலைவர் ஒருவர் அழைக்கும் நிலையில் அதை ஒருமுஸ்லிம் பின்பற்றினால், அல்லது முஸ்லிம்களை ஏமாற்றும் பொருட்டு குறிப்பிட்ட சட்டம் உண்மையாக இறைசட்டமாக இல்லாத நிலையில் அது அல்லாஹ்(சுபு)வின் சட்டத்திற்கு இணக்கமாக இருக்கிறது என்று கூறும் நிலையில் அதை ஒருமுஸ்லிம் பின்பற்றினால் அவர் அல்லாஹ்(சுபு)வும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களும் வழங்காத சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாகவே கருதப்படுவார்கள். மறுமைநாளில் அவருடைய நிலை மகத்துவமிக்க அல்லாஹ்(சுபு) கூறுவதை போன்று இருக்கும்,
 
إِنَّ اللَّهَ لَعَنَ الْكَافِرِينَ وَأَعَدَّ لَهُمْ سَعِيرًا خَالِدِينَ فِيهَا أَبَدًا لَا يَجِدُونَ وَلِيًّا وَلَا نَصِيرًا يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا رَبَّنَا آَتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا  ‎ ‎‎‎‎‎‎  ‎
     நிச்சயமாகஅல்லாஹ்நிராகரிப்பவர்களைசபித்துகொழுந்துவிட்டெரியும்நெருப்பைஅவர்களுக்காகதயார்படுத்திவைத்திருக்கிறான். அவர்கள்என்றென்றும்அதில்தங்கிவிடுவார்கள்.
 
அவர்களுக்குபாதுகாப்புஅளிப்பவர்களையோஉதவிசெய்பவர்களையோஅவர்கள்அங்குகாணமாட்டார்கள். நரகத்தில்அவர்களுடையமுகங்கள்புரட்டிப்புரட்டுபொசுக்கப்படும்நாளில்எங்களுடையகேடே!
 
நாங்கள்அல்லாஹ்வுக்கும்அவனுடையதூதருக்கும்வழிபட்டிருக்கவேண்டாமா?! என்றுகதறுவார்கள். அன்றியும்எங்கள்இறைவனே!
  நிச்சயமாகநாங்கள்எங்கள்தலைவர்களுக்கும்எங்கள்பெரியவர்களுக்கும்வழிபட்டோம். நாங்கள்தவறானவழியில்செல்லும்படிஅவர்கள்செய்துவிட்டார்கள். எங்கள்இறைவனே!
 
நீஅவர்களுக்குஇருமடங்குவேதனையைகொடுத்துஅவர்கள்மீதுபெரும்சாபத்தைகொண்டுசபிப்பாயாக!’ என்றுகூறுவார்கள். (அல்அஹ்ஸாப் : 64 – 68)
 
உண்மையில் தனிமனிதரை அல்லது (சட்டரீதியாக அமைக்கப்படாத) குழுவை அல்லது அல்லாஹ்(சுபு)வின் வழிகாட்டுதலிலிருந்து விலகிச்செல்லும் சட்டத்தை, இஸ்லாத்திற்கு அந்நியமான சிந்தனையை பின்பற்றி வரும் நிலையில் தாங்கள் அல்லாஹ்(சுபு)வுக்கு கட்டுப்பட்டு நடப்பதாகவும் அவனுடைய நேசத்தை பெறுவதற்கு பணியாற்றி வருவதாகவும் கருதிக்கொண்டு வழிகேடான் பயணத்தடத்தில் செல்லும் முஸ்லிம்களை பற்றிய துல்லியமானதும் உறுதியானது மான விவரிப்பாக இது இருக்கிறது. இந்த வழிகெட்ட கூட்டம் மறுமைநாளில் மிகுந்த வருத்தத் தையும் வேதனையையும் அனுபவிக்கும்! அப்போது ‘நாங்கள் எங்களிலுள்ள தலைவர்களுக்கும் பெரிய மனிதர்களுக்கும் கட்டுப்பட்டு நடந்தோம்! அவர்கள் எங்களை வழிகேட்டில் ஆழ்த்தி விட்டார்கள்!’ என்று கூறுவார்கள். தனிமனிதரை தலைவராகவும் கட்டளையிடும் அதிகாரம் உடையவராகவும் ஆக்கிக்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான இரகசியம் இங்குதான் இருக்கிறது! ஏனெனில் தன்னுடைய வாழ்க்கை பாதையில் சட்டத்திற்கு புறம்பான கட்டுப்படுதல் எதுவும் தான் அறியாத வண்ணம் உட்புகுந்துவிடாத வகையிலும் ஏமாறு தலுக்கும் வழிகேட்டிற்கும் இட்டுச்செல்லாத வாழ்க்கை முறையில் இருப்பதை உறுதிசெய்யும் வகையிலும் விஸ்வாசியான ஒருவர் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். இதன்காரணமாகவே அல்லாஹ்(சுபு) தன்மீது நேசம் கொண்டுள்ள விஸ்வாசிகளை பாதுகாத்து வருவதோடு அவர்களுக்கு தனது மன்னிப்பையும் கிருபையையும் வழங்குகிறான்! எனவே தலைமைத்துவமும் கட்டளையிடும் அதிகாரமும் அல்லாஹ்(சுபு)விற்கும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கும் உரியது என்பதாலும் கட்டுப்படுதல் என்பது அல்லாஹ்(சுபு)வும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களும் தீர்மானிக்கும் அடிப்படையில் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறதுஹ என்பதாலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தவிஷயத்தில் அல்லாஹ்(சுபு) விஸ்வாசிகளை நேர்வழியில் செலுத்து கிறான். எனவே அல்லாஹ்(சுபு)விற்கு மாறுசெய்வது மூலமாக மட்டுமே ஒரு மனிதருக்கு கட்டுப்படமுடியும் என்ற நிலை ஏற்படும் பட்சத்தில் அந்த மனிதரை நேசிப்பதற்கோ அல்லது அவருக்கு கட்டுப்படுவதற்கோ அனுமதியில்லை.ஹ கட்டுப்படுதலை அவசியமாக்கும் நேசம் என்பது அல்லாஹ்(சுபு)விற்கு மட்டுமே உரியதாகும். கீழ்ப்படியும் குறிப்பிட்ட செயல் தொடர்பான இறைசட்டத்தை அறிந்திராத நிலையில் அந்த செயலில் ஒருவருக்கு கட்டுப்பட்டு நடப்பதற்கு அனுமதியில்லை. இஸ்லாத்தில் தலைமைத்துவம் என்பது சட்டரீதியான செயலை நிறைவேற்றுதலில் மற்றவரை வழிநடத்தும் வகையில் மட்டுமே வரையறை செய்யப்பட்டுள்ளது; எனவே தலைவர் அல்லது அமீர் ஆகியவர்கள் வாழ்வியலில் மேற்கொள்ளும் கடும்பணி என்பது இஸ்லாமிய சட்டங்கள் அங்கீகாரம் செய்துள்ள நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு முஸ்லிம்களின் ஆற்றல்களை ஒருங்கிணைப்பதாக இருக்கிறது. தலைமைத்துவம் மற்றும் கட்டளையிடும் அதிகாரம் ஆகியவற்றில் மிகஉயர்ந்த அந்தஸ்த்தை பெற்றுள்ள ஆட்சியாளர் அல்லாஹ்(சுபு)வின் கட்டுப்படுதலில் சமுதாயத்தின் பயணத்தடத்தை பாதுகாப்பதற்கும் அது தொடர்பான நிர்வாக மேலாண்மையை ஒழுங்குபடுத்துவதற்கும் பொறுப்பு வகிப்பவர் என்ற முறையில் அவருடைய தலைமைத்துவம் என்பது அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களை பின்பற்றி ஒழுகும் உம்மாவின் பாதையை மேற்பார்வையிட்டு சீர்படுத்துவதற்குரிய அதிகாரமாக மட்டுமே வரையறை செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களிலுள்ள தனிமனிதர் எவரும் நரகத்தின் பாதையில் நடந்து சென்றுவிடாத வண்ணம் உம்மாவை வழிநடத்தும் பொறுப்பு ஆட்சியாளரை சார்ந்த இன்றியமையாத பணியாக இருக்கிறது!
 
     அல்லாஹ்(சுபு) அருளியவற்றுக்கு அந்நியமான சட்டங்களை கொண்டு மக்களை வழி நடத்தும் ஒருவரை பற்றி எளிமையாக கூறவேண்டுமானால் அவர் நரக நெருப்புக்கு உரியவரான நயவஞசகர் ஆவார், ஏனெனில் மக்களை வழிநடத்துவதில் இஸ்லாத்தின் விதிமுறைகள் தொடர்பான அல்லாஹ்(சுபு)வின் உரிமையையும் ‎அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்குரிய உரிமையையும் சட்டத்திற்கு புறம்பாக அவர் அபகரித்துக்கொண்டார். தாங்கள் பின்பற்றும் தலைவரின் நயவஞ்சக தன்மையில் ஏமாந்துபோய் அவரை பின்பற்றிய மக்களும் நரக நெருப்பில் இருப்பார்கள் ஏனெனில் அல்லாஹ்(சுபு)விற்கும் அவனுடைய சட்டங்களுக்கும் மட்டுமே கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்ற இஸ்லாத்தின் கட்டளைக்கு எதிராக அவர்கள் கலகம் செய்கிறார்கள். மறுமை நாளில் இந்த இருசாராரும் ஒருவரையொருவர் சபித்துக்கொள்வார்கள்; ஒருவருக்கு எதிராக மற்றொருவர் வெளிப்படையாக பகைமை கொள்வார்கள்; ஒவ்வொரு சாராரும் மற்றவருக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்துவார்கள்; ஒவ்வொருவரும் மற்றவரின் நிராகரிப்பிற்கு பொறுப்பேற்க மறுப்பார்கள்! குற்றவாளிகள் ஒவ்வொருவரும் மற்றவர் மீது சாபம் இடுவார்கள்; ஒருவர் மற்றவரின் குற்றங்களை பகிரங்கப்படுத்துவார்; மகத்துவமிக்க அல்லாஹ்(சுபு) சங்கைமிக்க குர்ஆனில் தனது வார்த்தை மூலமாக இந்த காட்சியை நமக்கு எடுத்துக்காட்டுகிறான்.
 
وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَنْ نُؤْمِنَ بِهَذَا الْقُرْآَنِ وَلَا بِالَّذِي بَيْنَ يَدَيْهِ وَلَوْ تَرَى إِذِ الظَّالِمُونَ مَوْقُوفُونَ عِنْدَ رَبِّهِمْ يَرْجِعُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ الْقَوْلَ يَقُولُ الَّذِينَ اسْتُضْعِفُوا لِلَّذِينَ اسْتَكْبَرُوا لَوْلَا أَنْتُمْ لَكُنَّا مُؤْمِنِينَ قَالَ الَّذِينَ اسْتَكْبَرُوا لِلَّذِينَ اسْتُضْعِفُوا أَنَحْنُ صَدَدْنَاكُمْ عَنِ الْهُدَى بَعْدَ إِذْ جَاءَكُمْ بَلْ كُنْتُمْ مُجْرِمِينَ وَقَالَ الَّذِينَ اسْتُضْعِفُوا لِلَّذِينَ اسْتَكْبَرُوا بَلْ مَكْرُ اللَّيْلِ وَالنَّهَارِ إِذْ تَأْمُرُونَنَا أَنْ نَكْفُرَ بِاللَّهِ وَنَجْعَلَ لَهُ أَنْدَادًا وَأَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَأَوُا الْعَذَابَ وَجَعَلْنَا الْأَغْلَالَ فِي أَعْنَاقِ الَّذِينَ كَفَرُوا هَلْ يُجْزَوْنَ إِلَّا مَا كَانُوا يَعْمَلُونَ  
 
நிச்சயமாகநாங்கள்இந்தகுர்ஆன்மீதும்இதற்குமுன்னுள்ளவேதங்கள்மீதும்நம்பிக்கைகொள்ளமாட்டோம்என்றுஇந்தநிராகரிப்பவர்கள்கூறுகின்றனர்.ஆகவேஇந்தஅக்கிரமக்காரர்கள்தங்கள்இறைவன்முன்புநிறுத்தப்படும்போதுஅவர்களில்சிலர்சிலர்மீதுகுற்றம்சுமத்துவதைநீர்காண்பீர்!அவர்களில்பலவீனமானவர்கள்கர்வம்கொண்டவர்களைநோக்கி‘நீங்கள்இல்லாவிடில்நிச்சயமாகநாங்கள்ஈமான்கொண்டிருப்போம்’என்றுகூறுவார்கள்!கர்வம்கொண்டவர்கள்பலவீனமானவர்களைநோக்கி‘உங்களிடம்நேரானவழிவந்தபின்னர்(அதைவிட்டும்)நாங்களாஉங்களைதடுத்துக்கொணடோம்?அவ்வாறு)இல்லை!
 
நீங்கள்தான்குற்றவாளிகள்’என்றுகூறுவார்கள்.பலவீனமானவர்கள்கர்வம்கொண்டவர்களைநோக்கி‘அவ்வாறுஇல்லை!நாங்கள்அல்லாஹ்வைநிராகரிக்குமாறும்அவனுக்குஇணைவைக்குமாறும்நீங்கள்ஏவவில்லையா?இரவுபகலாகசூழ்ச்சிசெய்யவில்லையா?’என்றுகூறுவார்கள்.ஆகவேஇவர்கள்அனைவரும்வேதனையைகாணும்சமயத்தில்தங்கள்துக்கத்தைமறைத்துக்கொள்வார்கள்.எனினும்நிராகரித்தவர்களின்கழுத்தில்நாம்விலங்கிடுவோம்,இவர்கள்செய்துகொண்டிருந்தவற்றிற்குரியகூலியைதவிர்த்துவேறெதுவும்கொடுக்கப்படுவார்களா?!
(ஸபா : 31 – 33)
      மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மறுமைநாளின் நிகழ்வை தெளிவாக எடுத்துக்காட்டும் அதேவேளையில் மரணத்திற்கு முன்னர் மக்களின் வாழ்வில் இடம்பெற்றுள்ள நான்கு எதார்த்த உண்மைகளை குறிப்பிடுகின்றன.
தலைவர்கள் மற்றும் உயர்ந்த அந்தஸ்த்து கொண்ட பெரியவர்கள் ஆகியவர்களிடம் அவர்களை பின்பற்றிய மக்கள் கூறும் வார்த்தைகள் : “நீங்கள் இல்லாவிடில் நாங்கள் ஈமான் கொண்டிருப்போம்” தனது குற்றத்திற்காக அல்லது தனக்கு ஏற்பட்ட தோல்விக்காக மற்றவரை குறைகூறுதல் என்பது பெரும்பான்மையான மனிதர்களின் இயல்பாக இருக்கிறது; இத்தகைய அனுபவங்களை நாம் ஒவ்வொருவரும் சந்தித்திருக்கிறோம்; ஒருவரிடம் உள்ள குறிப்பிட்ட குறை பற்றி அவரிடம் சுட்டிக்காட்டும்போது அவர் அந்த குற்றச்சாட்டை மற்றவர் மீது திருப்பி விடுவார். ஆனால் உண்மையில் குற்றச்சாட்டை கூறுவதும் அதை மறுப்பதும் விவகாரத்தின் உண்மைநிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடுவதில்லை, ஏனெனில் குற்றச்சாட்டை கூறுவதால் மட்டும் அதை நிரூபித்துவிட முடியாது, மாறாக அதை நிரூபனம் செய்யும் சட்ட ரீதியான ஆதாரத்தை அளிக்கவேண்டியது அவசியமாகும். ஏனெனில் பலவீனமானவர்கள், தலைவர்களை பின்பற்றும் நபர்கள், கர்வம் கொண்டவர்கள் ஆகியவர் கூறும் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரம் அவர்களுடைய வாழ்க்கை நிகழ்வுகள் தொடர்பான எதார்த்த நிலையிலிருந்து கொண்டுவரப்படுமே தவிர அந்த எதார்த்த நிலையைவிட்டு அவர்கள் நீங்கிய பின்னருள்ள நிலையின் அடிப்படையில் கொண்டுவரப்படாது. நமது தலைவர்களும் நமக்கு கட்டளையிடுவதற்கு அதிகாரம் பெற்றுள்ளவர்களும் நம்மை ஏமாற்றுபவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் நம் அனைவருடைய வாழ்வின் உண்மை நிலையாக இருக்கிறது, அவர்கள் நம்மை தவறான பாதையில் வழிநடத்துவதோடு அல்லாஹ்(சுபு)வுக்கு முழுமையாக மாறுசெய்யும் வழியிலேயே செலுத்திவருகிறார்கள், வாழ்வியல் விஷயங்களை தீர்மானிப்பதிலும் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் நோக்கங்களை நிர்ணயம் செய்வதிலும் முழுமையான நிராகரிப்பை கொண்டுள்ள வாழ்க்கையில்தான் நாம் வாழ்ந்துவருகிறோம்!
     எனினும் ‘நீங்கள் இல்லாவிடில்’ என்ற சொற்றொடர் குர்ஆன் வசனத்தில் இடம் பெற்றுள்ளது, வாழ்வியலில் தலைவர்கள், பெரியவர்கள் போன்றவர்களை பின்பற்றியவர்கள் வாழ்ந்துவந்த சூழல்தான் அவர்களுடைய நிராகரிப்புக்கு காரணமாக இருந்தது என்பதும் செயல்பாடுகள் தொடர்பான அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களை அறிந்துகொள்வதில் அவர்கள் அலட்சியம் காட்டவில்லை என்பதும்தான் இதற்கு அர்த்மாகும்!ஹ அல்லாஹ்(சுபு) அவர்களை படைத்துள்ள நோக்கத்தை பற்றி அறியாமல் இருந்ததற்கும் அல்லாஹ்(சுபு)வுக்கு கீழ்ப்படிவதற்கு பதிலாக தலைவர்களுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்ததற்கும் அவர்கள் வாழ்ந்துவந்த சூழல்தான் காரணம் என்றும் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் கர்வம் கொண்ட தலைவர்கள் இருந்தது வந்த காரணத்தினால்தான் அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். பின்பற்றியவர்கள் தாங்கள் பின்பற்றிய தலைவர்கள் மீது குற்றத்தை சுமத்திவிட்டு தாங்கள் மேற்கொண்ட செயல்பாடுகளை மறைத்துவிடுகிறார்கள். இக்கூற்று அவர்களுடைய நிராகரிப்பையும் அவர்கள் நரகத்தின் வேதனைக்கு தகுதியானவர்கள் என்பதையும் அவர்கள் நிராகரிப்பில் வாழ்ந்து வந்ததை மறுக்கவில்லை என்பதையும் உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. அல்லாஹ்(சுபு)வின் ஹகேள்வி கணக்கிற்கு உட்படும் அந்த மகத்தான நாள் என்பது உண்மையில் பாவங்களையும் குற்றங்களையும் ஒப்புக்கொள்ளும் நாளாகவே இருக்கிறது! மனிதன் தனது வாழ் நாளில் இடம்பெற்றிருந்த உண்மையையோ அவன் மேற்கொண்ட செயலையோ அவன் கூறிய வார்த்தையோ ஒருபோதும் மறுக்கமுடியாது! இதன்காரணமாகவே ‘நாங்கள் ஈமான் கெண்டிருப் போம்’ என்று பலவீனமானவர்கள் கூறுவார்கள். பலவீனமானவர்கள் அவர்களுடைய வாழ் நாட்களில் நிராகரிப்பாளர்களாக இருந்தார்கள் என்பதும், அவர்கள் ஈமான் கொண்டுள்ள விஸ்வாசியாக இல்லை என்றநிலையில் அவர்கள் நிராகரிப்பை கொண்டுள்ள நிராகரிப்பாளராக இருந்தார்கள் என்பதும்தான் இதற்கு அர்த்தமாகும். அல்லாஹ்(சுபு)வுக்கு கீழ்ப்படியாத மனிதர் களை பொருத்தவரை அவர்கள் நிராகரிப்பாளர்களாக இல்லை, மாறாக கீழ்ப்படியாத காரணத் தால் ஒருமுறையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளோ தண்டனைக்கு உட்படும் முஸ்லிம்களாகவே இருக்கிறார்கள், எனவே அவர்கள் நிராகரிப்பிற்குரிய தண்டனையை அடைய மாட்டார்கள். அல்லாஹ்(சுபு)வுக்கு அந்நியமானவர்களை பின்பற்றவதிலும் அவர்களுக்கு கட்டுப் படுவதிலும் தங்கள் வாழ்நாட்களை கழித்தார்கள் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
     எனினும் நிராகரிப்பாளர்களாக இருந்தவர்கள் தங்களுடைய நிராகரிப்புக்கு காரணமாக மற்றவர்களை காட்டுவதற்கு முனைகிறார்கள் என்றபோதும் அது உண்மையில்லை என்பதால் அவர்கள் என்றென்றும் நரகத்தில் இருப்பார்கள், நரகத்தில் அவர்கள் தலைகள் வெப்பத்தில் உருகிவிடும்! ஆரம்பமும் முடிவும் இல்லாத நரகத்தில் நிராகரிப்பவர்கள் இழிவில் வீழ்ந்து கிடப்பார்கள்! எனினும் பலவீனமானவர்கள் கர்வம் கொண்டவர்களை நோக்கி ‘நீங்கள் இல்லா விடில் நாங்கள் ஈமான் கெண்டிருப்போம்’ என்று கூறும் வார்த்தையில் உண்மையில்லை! பூமியில் தலைவர்களாகவும் பெரியவர்களாகவும் உயர்ந்தநிலையில் வாழ்ந்தவர்கள் தங்களை பின் பற்றியவர்களை அல்லாஹ்(சுபு)வுக்கு மாறுசெய்யும் தீயவழியில் செலுத்தினார்கள் என்றபோதும், தலைவர்கள் தங்களை பின்பற்றியவர்களை அல்லாஹ்(சுபு)வின் ஈமானிலும் அவனுக்கு கீழ்ப் படிவதிலும் வழிநடத்தியிருக்க முடியும் என்றபோதும், உண்மைநிலையின் அடிப்படையில் மக்களின் நிராகரிப்பிற்கு அல்லது ஈமானிற்கு தலைவர்கள் காரணமாக இருப்பதில்லை, ஏனெனில் தலைவரின் கட்டளை அடிப்படையில் ஒருவர் நிராகரிப்பையோ அல்லது ஈமானையோ தேர்வுசெய்து கொள்ளுதல் என்பது தலைவரை பின்பற்றுதல் என்ற விவகாரத்தை சார்ந்ததாக இருக்காது மாறாக எஜமானரின் கட்டளைக்கு அடிமை கட்டுப்படுதல் என்ற விவகாரத்தை சார்ந்ததாகவே இருக்கும்! எனவே தலைவரை பின்பற்றுதல் என்ற விவகாரத்தில் மனிதர்கள் தங்கள் செயல்பாடுகளுக்கு பொறுப்பு ஏற்கக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள். இதன்காரணமாகவே நிராகரிப்பவர்கள் மறுமைநாளில் இருக்கும்நிலை மற்றும் அவர்கள் கூறும் வார்த்தைகள் ஆகியவை பற்றி  எல்லாம்வல்ல அல்லாஹ்(சுபு) கூறுகின்ற விவரிப்பு என்பது அவனுடைய(சுபு) அற்பதமாகவும் அவனுக்கு(சுபு) மட்டுமே உரித்தான தெய்வீக தன்மையின் வெளிப்பாடாகவும் இருக்கிறது என்பதை நாம் காண்கிறோம், மகத்துவமும் உயர்வும் அவனுக்கே உரியது! இது நமக்கும் ஓர் எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது, எனவே நாம் அல்லாஹ்(சுபு) வுக்கு மாறுசெய்யும் வகையில் கீழ்ப்படியாத வாழ்க்கையை தேர்வுசெய்து கொள்வதற்கு எத்தகைய காரணங்களையும் கற்பிக்க முடியாது! இத்தகைய நிலையை தேர்வுசெய்து கொள்ளும் ஒருவர் தான் குற்றமற்றவர் என்று எத்தகைய சாக்குப்போக்குகளை கூறியபோதும் தனது செயல்பாடுகளை இரகசியமாக மறைத்துக் கொண்டபோதும் தனக்குத்தானே பொய்யுரைத்து கொண்டபோதும் அல்லது தன்னுடைய தீனின் விதிமுறைகளை அலட்சியப்படுத்திய போதும் அவர் குற்றமற்றவர் என்ற மறுப்புரைக்கு உரிய ஆதாரத்தை நிரூபனம் செய்யாதவரையில் அவருடைய தற்போதைய நிலையை மாற்றிக்கொள்ளாதவரை அல்லாஹ்(சுபு) அவரிடமிருந்து எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டான்! ஏனெனில் ஒவ்வொரு மனிதரின் உடலிலுள்ள உறுப்புகளும் மறுமைநாளில் அவருடைய கீழ்ப்படியாமை குறித்து அவருக்கு எதிராக சாட்சியம் அளிக்கும்! எந்த அளவுக்கு அவர் கீழ்ப்படியாமையில் வாழ்கிறாரோ அந்த அளவுக்கு அவருக்கு எதிராக அவருடைய உடலுறுப்புகள் சாட்சியம் அளிக்கும்! நமக்கு எதிராக மலக்குகள் சாட்சியம் அளிப்பார்கள்! உண்மையும் நம்பகத்தன்மையும் கொண்ட தூதர் முஹஹஹம்மது(ஸல்) அவர்களும் சாட்சியம் அளிப்பார்கள்! மறுமைநாளில் நாம் எவர்களுக்கு கட்டுப்பட்டு நடந்தோமோ அந்த தலைவர்களின் நாவுகளின் சாட்சியத்தை கொண்டு உலக வாழ்க்கையில் எவ்வாறு இருந்தோம் என்பது பற்றிய உண்மைகளை எல்லாம்வல்ல அல்லாஹ்(சுபு) நமக்கு அறிவித்து காட்டுவான்!
* இன்றைய நாட்கள் பூமியில் இஸ்லாமிய அரசு இல்லாத காலகட்டமாகவும், இஸ்லாமிய விதிமுறைகள் அடிப்படையில் மக்கள் மத்தியில் இருக்கும் உறவுகளை ஒழுங்குபடுத்துவதும் அந்த உறவுகளின் விளைவாக சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கக்கூடியதுமான  அல்லாஹ்(சுபு)வின் ஆட்சியை ஹமக்கள் மத்தியில் நிறுவதை தடுக்கக்கூடிய காலகட்டமாகவும் இருந்துவருகிறது! இஸ்லாமிய சமூகத்திலுள்ள முஸ்லிம்களின் உறவுகளை முஸ்லிம் அல்லாத சமூகங்களுடன் அல்லாஹ்(சுபு)வின் சட்டங்கள் அடிப்படையில் நிறுநிறுத்துவதை தடுக்கக்கூடிய காலட்டமாகவும் இன்றை காலகட்டம் விளங்குகிறது. இந்த குறுகிய வாழ்க்கையில் இருந்து வரும் நிலையில் அதனுடன் தொடர்புள்ள இஸ்லாமிய நோக்கத்தை நிறைவுசெய்துகொள்ளும் வகையில் ஒருமுஸ்லிம் இஸ்லாமிய விதிமுறைகளின் அடிப்படையில் தனது வாழ்க்கையை வழிநடத்தி செல்வதையும், முஸ்லிம்கள் தங்களுடைய மரணத்திற்கு முன்பாக இஸ்லாமிய சட்டங்களை பொருத்த நோக்கங்களை நிறைவுசெய்து கொள்வதை தடைசெய்யக்கூடியதாகவும் இன்றைய காலகட்டம் இருந்துவருகிறது! இது மக்கள் மத்தியில் குர்ஆனின் சட்டங்களை நிலைநிறுத்த வேண்டும் என்ற அல்லாஹ்(சுபு)வின் கட்டளைக்கு கட்டுப்படுவதை தடுக்கும் வகையில் தலைவர்களும் புகழ்பெற்ற மனிதர்களும் இறை மார்க்கத்திற்கு எதிராக போரிடும் காலகட்டமாகும்! எல்லாம்வல்ல இறைவன் கட்டளையிட்டுள்ள அடிப்படையில் மக்கள் மத்தியில் ஷரீஆவை நிலைநிறுத்தும் அதிகார அமைப்பை நிறுவுவதற்கு உகந்த காலகட்டம் இதுதான்! அதை அல்லாஹ்(சுபு)வின் கட்டளை அடிப்படையில் நிறைவேற்ற வேண்டுமே ஒழிய ஹஇஸ்லாமிய சிந்தனைகளை சிதைப்பதின் மூலமும் அதன் கோட்பாடுகளை அழிப்பதன் மூலமும் இஸ்லாத்தை அழிப்பதற்கு வழிவகைகளை தேடுபவர்களின் விருப்பங்களின் அடிப்படையில் அல்ல!

இஸ்லாமியத் தலைமைத்துவத்திலிருந்து ஜனநாயகம் முரண்படுகிறது – பாகம் – 1

மனிதன் கலிமண்ணிலிருந்து படைக்கப்பட்டான், கலிமண்ணிலிருந்து அவனை படைத்து அவனுடைய உடலில் அல்லாஹ்(சுபு) ரூஹை ஊதுவதற்கு முன்னர் அவன் இந்த பிரபஞ்சத்தில் நிலைத்திருக்கவில்லை! பிறப்பின் எதார்த்த நிலையை பொருத்தவரை அது வெறுமையிலிருந்து ஏற்படுகிறதே ஒழிய வாழ்விலிருந்து ஏற்படுவதில்லை. வாழ்வு என்பது மனிதன் மீது விதிக்கப் பட்டுள்ளது, ஆரம்பம் முதற்கொண்டே இந்த விஷயத்தில் அவனுக்கு எத்தகைய தேர்வுரிமையும் அளிக்கப்படவில்லை. அவனுடைய வாழ்க்கை தவணையும் அவன் மீது விதிக்கப்பட்டுள்ளது, அது வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது, அதன்மீது மனிதன் எத்தகைய விளைவையும் ஏற்படுத்தவும் முடியாது தவணை முடிந்தபின்னர் கனப்பொழுது கூட இவ்வுலகைவிட்டு வெளியேறுவதிலிருந்து தாமதிக்கவும் முடியாது. துல்லியமாக நிர்ணயிக்கப் பட்ட ஒழுங்குமுறை அடிப்படையில் மரணம் அவனை எதிர்கொள்கிறது. மரணத்திற்கு முன்னர் நிர்பந்தமாகவும் சுய விருப்பத்திற்கு அப்பாற்பட்ட முறையிலும் வாழ்வு அவனில் தோன்றுகிறது. துல்லியமாக நிர்ணயிக்கப்பட்ட இதே ஒழுங்குமுறை அடிப்படையில் நிர்பந்தமாகவும் மனிதனின் சுய விருப்பத்திற்கு அப்பாற்பட்ட முறையிலும் வாழ்வு அவனிடமிருந்து வெளியேறும்போது மரணம் அவனை வந்தடைகிறது. வாழ்விற்கு முன்னர் இருந்த வெறுமை குறித்தும் தனது உடலை உயிர்ப்பித்துள்ள வாழ்வு குறித்தும் சுய விருப்பத்திற்கு அப்பாற்பட்டு வாழ்வு அவன்மீது தோன்றியது குறித்தும் மனிதன் சிந்திக்கிறான். வாழ்வியல் நோக்கங்கள் நிறைவுசெய்யப்பட்ட பின்னர் அவன் எதிர்கொள்ளப்போகும் மரணம் குறித்தும் மனிதன் சிந்திக்கிறான். இந்நிலையில் அல்லாஹ்(சுபு) அவனை படைத்து இறை மார்க்கமான ஹஇஸ்லாத்தின்பால் வழிகாட்டியது ஏன் என்பதற்குரிய காரணத்தை அவன் தீர்மானிக்கலாம், அவன்மீது வாழ்வு தோன்றுவதற்கு முன்னரும் அவன்மீது மரணம் நிகழ்ந்ததற்கு பின்னரும் இறை மார்க்கமான இஸ்லாம் மட்டுமே அவனுடைய மார்க்கமாக உள்ளது என்பதை அவன் விளங்கியிருக்கலாம். எனவே அவனுடைய வாழ்வில் அவன் அல்லாஹ்(சுபு)விற்கு கீழ்ப்படியவேண்டும் என்பதை பிரகடணப்படுத்துகிறான், அன்றியும் அல்லாஹ்(சுபு)விற்கு கீழ்ப்படிதல் அல்லது அவனுக்கு(சுபு) மாறுசெய்தல் ஆகியவை தான் வாழ்விற்குரிய காரணத்தின் நிரூபனமாக இருக்கிறது என்பதையும் அவன் அறிந்து கொள்கிறான். அல்லது மரணத்தை எதிர்கொள்பவர்கள் சிலதருணங்களில் அதிலிருந்து தப்பித்து வாழ்வை பெற்றுக்கொள்கிறார்கள் என்பதால் மரணிக்கும் முறைகளில் குளறுபடிகள் நிறைந்துள்ளது என்று கருதுவதின் அடிப்படையில் பிறப்பும் வாழ்வும் வெறுமைக்கும் மரணத்திற்கும் மத்தியிலுள்ள இடைவெளி என்று நம்புவதை அவன் தேர்வுசெய்துகொள்ளலாம். எனினும் மரணத்திலிருந்து சிலர் தப்பித்துக்கொள்ளுதல் என்பது வாழ்வியலின் இயல்பான நிகழ்வாக இருக்கிறதே ஒழிய மரணம் ஏற்படும் முறைகளில் உள்ள குளறுபடியாக இல்லை, ஏனெனில் வாழ்வு என்றாலும் மரணம் என்றாலும் மனிதர்கள் அதிலிருந்து நழுவிச் சென்றுவிட முடியாது! வாழ்வு என்பது கேளிக்கைகளில் ஈடுபடுவதற்கும் விரும்பிய வகையில் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்தவதற்கும் மனஇச்சைகளையும் நிறைவு செய்து கொள்வதற்கும் வேண்டிய அளவிற்கு சுகபோகங்களை அனுபவிப்பதற்கும் விரும்பிய முறையில் இன்பங்களை துய்ப்பதற்கும் சொத்துக்களையும் பெருமைகளையும் அடைந்து கொள்வதற்கும் கிடைக்கப்பெற்ற வாய்ப்பு என்று ஒருவர் கருதலாம். திண்ணமாக இவர்தான் நிராகரிப்பாளர்! வாழ்வியலின் நோக்கம் மற்றும் இறைவன் அவரை படைத்திருப்பதற்குரிய காரணம் ஆகியவற்றிலிருந்து அவர் தன்னைத் தானே விலக்கிக்கொள்கிறார். இறைவன் எதற்காக அவரை படைத்தானோ அந்த நோக்கத்தை இவர் மறுத்துவிடுகிறார், வாழ்வு அவர்மீது ஏன் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த காரணத்தை அவர் சிந்திக்க விரும்பமாட்டார். இத்தகைய மனிதர் இயல்பிற்கு புறம்பான நோக்கத்தில் மக்களை வழிநடத்துபவராகவும் இறைவனுக்கு மாறுசெய்வதில் முன்னுதாரணமாக விளங்கும் மனிதராகவும் மனித இனத்தை இறைவன் படைத்துள்ள நோக்கத்திற்கு எதிராக போராட்டம் செய்பவராகவும் விளங்குகிறார்! அல்லது இயல்பிற்கு புறம்பான பாதையில் செல்வதில் மற்றவர்களை பின்பற்றும் மனிதராகவும் இறைவன் மனிதனை படைத்ததற்கு பின்னணியிலுள்ள காரணத்தை உணர்ந்து கொள்வதிலிருந்து மக்களை தடுப்பவராகவும் இவர் விளங்குகிறார். இயல்பிற்கு புறம்பான வழியில் செல்வதில் ஒருவர் மற்றவரை பின்பற்றுபவராக இருந்தாலும் அல்லது மற்றவர்களால் பின்பற்றப்படுபவராக இருந்தாலும் இருவரும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள்! அல்குர்ஆனில் அல்லாஹ்(சுபு) வாக்களித்துள்ளது போல இந்த இருசாராரும் இறைவனிடமிருந்து இருமடங்கு தண்டனையை பெற்றுக்கொள்வார்கள் என்பது நிச்சயமாகும்!

தலைமைத்துவம் என்பது கட்டளையிடுவதற்குரிய அதிகாரமாகும், மக்களின் தலைவர் என்பவர் அவர்களை வழிநடத்தி செல்பவராக இருக்கிறார். ஏனெனில் மக்களில் ஒருவர் தலைவராக இருக்கிறார் மற்றவர்களில் பெரும்பான்மையின் அவரை பின்பற்றுபவர்களாகவே இருக்கிறார்கள்.ஹ ஜனநாயக கோட்பாட்டை பொருத்தவரை தலைமைத்துவம் என்பது அலங்காரமான விஷயங்களையும் சுயநலமிக்க குறிக்கோள்களையும் அடைந்துகொள்ளும் சாதனமாகும்! ஆனால் இஸ்லாத்தை பொருத்தவரை தலைமைத்துவம் என்பது அல்லாஹ் (சுபு)விற்கு கீழ்ப்படிவதாகவும் இறைவனின் மார்க்கத்திற்கு உதவுவதாகவும் இருக்கிறது, அதே வேளையில் இலட்சியம் என்பது கீழ்ப்படிதலை நிறைவேற்றுவதற்குரிய ஆற்றலாக விளங்குகிறது. வெற்றியை அடையவேண்டும் என்ற தீர்மானத்தின்பால் அழைப்பதற்கு இந்த ஆற்றல் பயன் படுத்தப்படுகிறது. ஏனெனில் இலட்சியத்தை போலவே, தலைமைத்துவம் மற்றும் கட்டளை யிடுதல் என்பது இஸ்லாத்தில் சட்டரீதியான நோக்கத்தை அல்லது சட்டரீதியான விதிமுறையை நிறைவேற்றுவதற்குரிய நிபந்தனையாக இருக்கிறது. இஸ்லாத்தை பொருத்தவரை தலைமைத்துவம் அல்லது கட்டளையிடும் அதிகாரம் என்பது அசலாக அல்லாஹ்(சுபு)விற்கும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கும் உரியதாகும், அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களை நிலைநிறுத்துவதற்கும் அவற்றின் நோக்கங்களை நிறைவு செய்வதற்கும் அவசியமானவற்றில் தனிமனிதர் ஒருவர் தலைமைத்துவத்தின் பொறுப்பை சுமந்து கொள்கிறார். இஸ்லாத்தை பொருத்தவரை தலைவரின் அலங்கார விருப்பங்கள் அல்லது அவருடைய சுயநல குறிக்கோள்கள் தலைமைத் துவத்திற்குரிய நோக்கமாக இல்லை. மாறாக, இறைவனுக்கு கீழ்ப்படியும் செயல்பாட்டில் மக்களை முன்னின்று வழிநடத்துவதற்கும் இஸ்லாத்தின் சட்டரீதியான விதிமுறைகளை நிலை நிறுத்துவதற்கும் சட்டரீதியான பலன்களை விளைவிப்பதற்கும் உரிய சாதனம்தான் தலைமைத்துவ அதிகாரமாகும்! இஸ்லாத்தை பொருத்தவரை இஸ்லாமிய சட்டங்களை நிலை நிறுத்துவதற்காக அல்லது சட்டரீதியான நோக்கத்தை நிறைவுசெய்வதற்காக மட்டுமே தலைவருக்கு அல்லது ஆட்சியாளருக்கு மக்கள் கட்டுப்பட்டு நடக்கிறார்கள். ஏனெனில் இஸ்லாத்தில் ஒவ்வொரு முஸ்லிமுடைய வாழ்க்கைப்பாதை என்பது சட்டரீதியான நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு இஸ்லாமிய சட்டங்களை நிலைநிறுவுவதற்கு கடுமையாக முயற்சிப் பதாகவும், அதேவேளையில் தலைமைத்துவம் என்பது சட்டரீதியான நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு இஸ்லாமிய சட்டங்களை நிலைநிறுத்துவதற்காக முஸ்லிம்களின் ஆற்றல்களை ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது. (தலைமையை) பின்பற்றுபவர்களின் நேசம் தலைமைத் துவத்தை பெற்றுள்ளவருக்கு அவசியமானதாக இருக்கும் நிலையில், எல்லாம்வல்ல இறைவன் அடியார்களின் நேசத்தை தனக்கு மட்டும் உரியதாக வரையறை செய்துள்ளான். அல்லாஹ் (சுபு)வின் நேசத்தையும் அவனுடைய முஸ்லிம் அடியார்களின் நேசத்தையும் முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றால் இஸ்லாத்தின் சட்டங்களையும் அவற்றை கொண்டுவந்த அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களையும் பின்பற்றவேண்டும் என்பதை அல்லது சட்டரீதியான நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு இஸ்லாமிய சட்டங்களை நிலைநிறுத்துவதற்கு நபி(ஸல்) அவர்களின் சார்பாக செயலாற்றும் ஒருவரை பின்பற்றவேண்டும் என்பதை அல்லாஹ்(சுபு) ‎நிபந்தனையாக ஆக்கியுள்ளான். அல்லாஹ்(சுபு) தன்மீதுள்ள நேசத்திற்கு ஈமானை நிபந்தனை யாக ஆக்கியுள்ளான், அல்லாஹ்(சுபு) மீதுள்ள நேசம் உறுதியானதாகவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவும் இருக்கவேண்டும் என்றால் அதற்கு இஸ்லாத்தின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்பது மட்டுமே நிபந்தனையாக இருக்கிறது.‎‎‎‎‎ தனிமனிதர்கள், (சட்டத்திற்கு புறம்பான) குழுக்கள், அலங்கார கோட்பாடுகள் அல்லது அல்லாஹ்(சுபு)வின் நேசத்திலிருந்து ஒருவரை வெளியேற்றிவிடும் சட்டத்திற்கு புறம்பான நோக்கங்கள், அல்லாஹ்(சுபு)வின் நேசத்தை புறக்கணிக்கும் வகையில் கூறப்படும் வார்த்தைகள் போன்ற சட்டத்திற்கு புறம்பானவற்றிற்கு கீழ்ப்படிவதை அல்லாஹ்(சுபு) இஸ்லாமிய சட்டங்களுக்கு மாறுசெய்யும் செயலாகவே ஆக்கியுள்ளான். அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றிற்கு கீழ்ப்படிவதின் மூலமும் தனிமனிதர் தலைமைத்துவம், (சட்டத்திற்கு புறம்பான)குழுக்கள் ஆகியவற்றிற்கு கீழ்ப்படிவதின் மூலமும் அல்குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றின் மூலமாக அருளப்பட்ட இறைசட்டங்களுக்கு அந்நியமானவற்றின் அடிப்படையில் மக்களை வழிநடத்தும் மனிதருக்கு கீழ்ப்படிவதின் மூலமும் ஒருவர் அல்லாஹ்(சுபு)வின் நேசத்தை துறந்துவிடுகிறார்!


அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,


‎‎‎‎‎‎‎‎‎قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ ‎ ‎ ‎‎


கூறுவீராக! நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள்! அப்போது அல்லாஹ் உங்களை நேசிப்பான் உங்கள் பாவங்களை மன்னிப்பான். நிச்சயமாக அல்லாஹ் ‎மன்னிப்பவனாகவும் மிக்க கிருபை உடையவனுமாகவும் இருக்கிறான்!


கூறுவீராக! அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளுங்கள்! எனினும் நீங்கள் இதை புறக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிக்க மாட்டான்! (ஆலஇம்ரான் : 31-32)



செயல்பாடுகளை மேற்கொள்ளும் முறைகள், மக்களுக்கு மத்தியிலுள்ள உறவுகளை ஒழுங்கு படுத்தும் இஸ்லாமிய விதிமுறைகள், உறவுகள் அடிப்படையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை ஏற்படுத்துதல், வாழ்வியல் சுமைகளையும் கடும்பணிகளையும் நிறைவேற்றும் வழிமுறைகள், இஸ்லாத்தின் விலக்கல்கள் ஆகியவற்றில் இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றி செயலாற்றவதின் மூலமாக மட்டுமே இஸ்லாமிய சட்டங்களை நிலைநிறுத்த முடியும். சட்டம் இல்லாத நிலையில் எத்தகைய உறவுகளும் மக்களுக்கு மத்தியில் இடம்பெறவில்லை, அது ஏவல்கள் என்றாலும் விலக்கல்கள் என்றாலும் சரியே; மேற்கொள்ளும்முறை பற்றி தெளிவு படுத்தப்படாத வகையில் எந்த செயல்பாடுகளும் இஸ்லாத்தில் இடம்பெறவில்லை. இதன் காரணமாகவே முஸ்லிம்களின் வாழ்வியல் செயல்பாடுகள் அனைத்தும் இஸ்லாமியசட்டங்களை நிலைநிறுத்துவதுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. பணிகளை மேற்கொள்ளும்போதும் கட்டாயக்கடமைகளை நிறைவேற்றும்போதும் இஸ்லாம் அங்கீகரித்துள்ள சட்டரீதியான முறையை பின்பற்றுவதன் மூலம் சட்டரீதியான இஸ்லாமிய நோக்கத்தை நிறைவுசெய்வதை சாத்தியமாக்க முடியும். பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் பணிகள் தொடர்பான நோக்கத்தை நிறைவேற்றுதல் என்ற முறையில் இஸ்லாமிய சட்டங்களின் நோக்கம் தனிமனிதரின் நோக்கத்திலிருந்து வேறுபடுகிறது. இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றுவதின் மூலமாக மட்டுமே இஸ்லாமிய நோக்கத்தை நிறைவுசெய்துகொள்ள முடியும் ஏனெனில் அவற்றை பின்பற்றுவதில் தனிமதர்களின் வாழ்வும் மற்றவர்களின் வாழ்வும் தொடர்புடைதாக இருக்கிறது. உதாரணமாக, உண்மையை கடைபிடித்தல் என்பது இஸ்லாமிய சட்டங்களில் ஒன்றாக இருக்கிறது, எனினும் அதனால் ஏற்படும் விளைவுகள் என்பது உண்மையை கடைபிடிக்கும் மனிதர், மற்றவர், சட்டத்திற்கு புறம்பான விஷயங்கள் பரவிவிடாமல் சமூகத்தை பாதுகாப்பது தொடர்பான அல்லாஹ்(சுபு)வின் விதிமுறைகள் அல்லது மக்கள் மத்தியில் நம்பிக்கை, மகிழ்ச்சி, நல் ஒழுக்கம் ஆகியவற்றை பரப்புதல் தொடர்பான அல்லாஹ்(சுபு)வின் விதிமுறைகள் ஆகியவற்றின் நோக்கத் துடன் தொடர்புடையதாக இருக்கிறது. இஸ்லாத்தின் சட்டங்களை கடைபிடிப்பதின் மூலம் தனிமனிதர் விளைவுகளை ஏற்படுத்திய போதிலும் இஸ்லாமிய சட்டங்களின் நோக்கத்துடன் இணைந்துள்ள விளைவுகள் என்பது தனிமனிதரின் நோக்கத்துடன் இணைந்துள்ள விளைவு களிலிருந்து வேறுபட்டது. முஸ்லிம்களிலுள்ள தனிமனிதர் ஒவ்வொருவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் நிறைவுசெய்யப்பட வேண்டிய இஸ்லாமிய நோக்கம் இடம் பெற்றுள்ளது, அதை தனிமனிதர் அறிந்திருந்தாலும் அறியாவிட்டாலும் சரியே!‎‎

ஜான் கெர்ரி – “சிரியாவில் நாங்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை”

கடந்த 19 டிசம்பர் 2015 சனிக்கிழமை அன்று அமெரிக்க அரசின் தலைமை செயலாளர் ஜான் கெர்ரி ரஷ்யா 1 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் வாஷிங்டன் சிரியாவில் ஆட்சியை அகற்ற முற்படுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போது,:” இந்நாட்டின் அரசமைப்பை மாற்ற நாங்கள் முயற்சிக்கவில்லை” என்று வலியுறுத்தி கூறினார். மேலும் அவர் கூறுகையில் “அதாவது சிரிய அரசாங்கத்தின் அனைத்து அம்சங்களிலும் மாற்றம் வேண்டும் என்ற அர்த்தம் இல்லை மாறாக, சிரியாவில் உள்ள அரசு நிறுவனங்கள் அப்படியே இருக்கட்டும்” என்று கூறுகிறார்.

இந்த பேட்டி அமெரிக்காவின் நயவஞ்சகதனத்தை அப்பட்டமாக காட்டுகிறது: 18/8/2011ல் ஒபாமா கூறும்போது “அசாத் ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும்” என்று கூறினார்.” அசாதின் நாட்கள் எண்ணப்படுகின்றன: என்று கூறி பல செய்திகள் வெளியிடப்பட்டது.ஒரு அறிக்கையிலிருந்து மற்றொரு அறிக்கையாக தொடர்ந்து அமெரிக்க நிர்வாகம் பசாரின் குற்றங்கள் மன்னிக்க முடியாதது என்று சொல்லி வந்த நிலையில் , பல்வேறு அறிக்கைகளின் வாயிலாக நிரூபிக்கப்பட்டும்,மேலும் மனித உரிமை அமைப்பின் சமீபத்திய அறிக்கையான “If the Dead Could Speak: the mass deaths and torture in Syrian prisons” 16 டிசம்பர் 2015 புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில், “சிரியாவின் பல முகாம்களில் சித்திரவதை, துன்புறுத்தல்,பட்டினி சாவு மற்றும் நோய் ஏற்படுத்தும் காரணிகளுக்கான பல்வேறு ஆதாரங்கள் உள்ளதாக கூறுகிறது”. அந்த அறிக்கையில் அசாதின் சிறை கொட்டடியில் சித்திரவதை காரணமாக பல ஆயிரக்கணக்கான சிறை கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக மறுக்க முடியாத ஆதாரங்கள் பல அடுக்கப்பட்டுள்ளது.

வியன்னா மாநாட்டில் கடந்த 30/10/2015 அன்று எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு பிறகும், கொலைகார டமாஸ்கஸ் அரசு அப்பாவி பொதுமக்கள் மீது “நெருப்பு குழம்புகளை” வீசி வருகிறது . இதை இன்னும் கொஞ்சம் வலுப்படுத்தும் விதமாக அதன் கொலைகார கூட்டாளியான புதினும் பள்ளிகளிலும் , மருத்துவமனைகளிலும், முக்கிய சந்தைகளிலும் குண்டு வீசி தாக்கி மக்களை கொன்று வருகிறார். இதெற்கெல்லாம் பச்சை கொடி காண்பித்திருக்கிறது அமெரிக்கா. ஆனால் அது சோளக்கொல்லை பொம்மை “ISIS” யை , தவிர மற்றவைகளை ஒரு தீங்காகவே பார்க்கவில்லை. ஆனால் இதன் பிறகும் கெர்ரி கிரிமினல் தூதர்களையெல்லாம் அழைத்து ஒரு மிதமான எதிர்ப்பு படையை உருவாக்கி அரசு படைகளுடன் இணைத்து ISIS உடன் போரிட அழைக்கிறார்.

சிரிய மக்களுக்கு இத்துணை காயங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் ,கெர்ரி சிரியாவின் அரசு நிறுவனங்களை அமெரிக்கா பராமரிக்க விரும்புவதாக அறிவிக்கிறார். அவர் எதை “நிறுவனங்கள்” என்று அழைக்கிறார் தெரியுமா??? மனிதகுலத்திற்கு எதிராக சொல்லெனா குற்றங்கள் செய்து, ஸ்டாலின்,ஹிட்லர்,பினோச்சே அரசுகளை மிஞ்சிய கொடூரங்களை புரிந்த அமெரிக்காவின் நலன்களை மட்டுமே பாதுகாக்கும் உளவுத்துறையையும் மற்றும் அதை சார்ந்த அரசு அமைப்புகளையே குறிப்பிடுகிறார்.

நிச்சயமாக, இஸ்லாமிய உம்மத்திற்கெதிராக அமெரிக்காவின் இந்த வெறுப்பும் வெளிப்படையான சதியையும் கண்டு நாங்கள் ஆச்சரியப்பட போவதில்லை. ஏனெனில், ஐரோப்பிய காலனித்துவ காலத்திலிருந்தே முஸ்லிம் நாடுகளின் மீது அமெரிக்காவிற்கு இருக்கும் பேராசை அதனை தொடர்ந்து வந்த அமெரிக்க அரசுகளிடமும் இருக்கிறது என்பது தெரிந்த ஒன்றுதான். எப்படி இருந்தாலும் கெர்ரியின் அந்த அறிக்கையோடு நாம் நின்று விடவில்லை. அதே அறிக்கையில் மேலும் அவர் “வியன்னா பேச்சுவார்த்தை ‘சிரியாவின் நெருக்கடிக்கு அரசியல் தீர்வே சரி’ என்ற ஒரே நிலைமைக்கு ரஷ்யா, அமெரிக்க மற்றும் இரான் ஆகிய நாடுகள் ஒன்றுபட்டிருப்பதை காட்டுகிறது” என்று கூறுகிறார். குப்ரின் தலைமை பீடமான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் புனிதமற்ற கூட்டணியை ஏற்படுத்திய ஈரானின் தலைவர்களை வாழ்த்துகிறோம். ஷாமின் புரட்சியை ஒடுக்குவதற்காக மிகப்பெரிய ஷைத்தானுக்கு உதவி செய்ய முயலுவதின் மூலம் எங்களை ஏமாற்றி நீங்கள் தோற்று விட்டீர்கள் என்று நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

எவரெல்லாம் ரியாத், இஸ்தான்புல், ஜெனிவா, வியன்னா மற்றும் நியூயார்க் பேச்சுவார்த்தைகளுக்கு நோக்கி விரைந்தீர்களோ அவர்களுக்கு கூறி கொள்கிறோம்: உலக காலனியாதிக்க தலைவர்களின் பின்னால் மூச்சிரைக்க நீ ஓடுவது குறித்து உனக்கு வெட்கமாக இல்லையா??? முக்கியமாக அமெரிக்காவின் பின்னால்.. அதாவது எந்த நாடு பாத் கட்சியினரின் , தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரின் காலத்திலும்இருந்த நுஸைரி அரசின் குற்றங்களை மூடி மறைத்ததோ அந்நாட்டின் பின்னால்? மேலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரிடமும் போர் தொடுத்து கொண்டிருக்கும் ஐநாவிடமா இன்னும் முட்டாளாகி கொண்டிருக்கிறாய்??? அது இன்னும் சிரிய மக்களுக்கு அல்லது முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு சிறந்ததை வழங்கும் என்று எதிர்பார்க்கிறாயா?? உங்கள் எவரிடமும் சிறிதளவு நன்மை இருக்குமானால் அமெரிக்காவின் கயிற்றை விட்டு விட்டு அல்லாஹ்வின் கயிற்றை பற்றி பிடியுங்கள், ஆனால் எவர் அமெரிக்காவை திருத்திபடுத்த வேண்டும் என்று முற்படுகிறாரோ அவர் இவ்வுலகிலும் மறுவுலகிலும் பெருத்த ஏமாற்றத்தையும் கேவலத்தையும் அடைவார் என்பதே இறுதி முடிவாக இருக்கும்.

8:36 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ لِيَـصُدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ ؕ فَسَيُنْفِقُوْنَهَا ثُمَّ تَكُوْنُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُوْنَ ؕ وَالَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى جَهَـنَّمَ يُحْشَرُوْنَۙ‏

8:36. நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்; (இவ்வாறே அவர்கள் தொடர்ந்து) அவற்றை செலவு செய்து கொண்டிருப்பார்கள் – முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்; பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்; (இறுதியில்) நிராகரிப்பவர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள்.

Dec 1, 2015

அரசு பற்றிய இஸ்லாத்தின் கருத்தாக்கம்– பாகம் – 2

இஸ்லாத்திற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று ஆட்சியாளர்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களுக்கும் அல்லாஹ்(சுபு) கட்டளையிட்டுள்ளான் என்பதால், இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களையும் ஆட்சியாளர்கள் முழுமையான முறையிலும் எவ்வாறு அருளப்பட்டுள்ளதோ அதேமுறையிலும் நடைமுறைப்படுத்தவேண்டியது கட்டாயமாகும். ஏனெனில்
 
அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
 
وَمَا آَتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
 
அல்லாஹ்வின்தூதர்எவற்றைகொண்டுவந்துள்ளாரோஅவற்றைஎடுத்துக்கொள்ளுங்கள், அவர்எவற்றைவிட்டும்உங்களைதடுக்கிறாரோஅவற்றைவிட்டும்தவிர்ந்துகொள்ளுங்கள்இன்னும்அல்லாஹ்வைஅஞ்சிஹக்கொள்ளுங்கள், நிச்சயமாகஅல்லாஹ்தண்டனைஅளிப்பதில்கடுமையானவனாகஇருக்கிறான்ஹ   (அல்ஹஷ்ர் : 7)
 
இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள ‘مَا’ என்ற அரபி வார்த்தை பொதுவான அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது, எனவே நபி(ஸல்) ஏவியுள்ள அனைத்து கட்டளைகளையும் ஏற்று செயல்படுத்தவேண்டும் என்பதும் அவர்கள்(ஸல்) தடைசெய்துள்ள அனைத்திலிருந்தும் விலகிக் கொள்ளவேண்டும் என்பதும் கட்டாயமாகும்(வாஜிபாகும்). இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள ஏவல் மற்றும் விலக்கல் தொடர்பான வேண்டுகோள் திட்டவட்டமான கட்டளையாக உள்ளது ஏனெனில், இந்த வசனத்தின் இறுதியில் இடம்பெற்றுள்ள ‘அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கொண்டுவந்துள்ளவற்றை ஏற்று செயல்படாதவர்களுக்கும் அவர்கள் (ஸல்) தடைசெய்துள்ள விஷயங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளாதவர்களுக்கும் கடுமையான தண்டனை உண்டு’ என்ற சொற்றொடர் இந்த கட்டளை திட்டவட்டமானது என்பதற்குரிய கரீனாவாக விளங்குகிறது.
 
மேலும் அல்லாஹ்(சுபு) அருளியவற்றை கொண்டு தீர்ப்பளிக்கவேண்டும் என்று தனது தூதர்(ஸல்) அவர்களுக்கு அவன்(சுபு) கட்டளையிட்டுள்ளான்,
 
‎‎‎وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ
  ‎‎‎‎        ‎‎‎‎‎‎        ‎‎‎  
 
அன்றியும்அல்லாஹ்அருளியவற்றைகொண்டுஅவர்கள்மத்தியில்தீர்ப்பளிப்பீராக (அல்மாயிதா : 49)
 
அல்லாஹ்(சுபு) அருளியுள்ளவை ஏவல்கள் என்றாலும் விலக்கல்கள் என்றாலும் அவை தொடர்பான சட்டங்களின் அடிப்படையில் மட்டுமே ஆட்சிசெய்யவேண்டும் என்ற இந்த கட்டளை அல்லாஹ்(சுபு) அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்களுக்கு பின்னர் வருகின்ற அனைத்து முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் அளிக்கப்பட்ட திட்டவட்டமான கட்டளையாக உள்ளது, ஏனெனில் ‘مَا’ என்ற இந்த வார்த்தை பொதுவான அர்த்தம் கொண்டது என்பதால் அதில் அல்லாஹ்(சுபு) அருளிய அனைத்து சட்டங்களும் அடங்கும்.
 
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களும் அவர்களுக்கு பின்னர் ஆட்சியதிகாரத்தை பெற்றுள்ள அனைத்து முஸ்லிம் ஆட்சியாளர்களும் மக்களின் மனஇச்சைகளை பின்பற்று வதிலிருந்தும் அவர்களுடைய அபிலாஷைகளுக்கு கட்டுப்படுவதிலிருந்தும் தடைசெய்யப்பட்டு இருக்கிறார்கள். ஏனெனில் அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,
 
وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَنْ يَفْتِنُوكَ عَنْ بَعْضِ مَا أَنْزَلَ اللَّهُ إِلَيْكَ
 
அவர்களுடையமனஇச்சைகளைநீர்பின்பற்றாதிருப்பீராகஅல்லாஹ்அருளியசிலவற்றிலிருந்துஉம்மைதிருப்பிவிடாதவகையில்அவர்களிடம்ஹஎச்சரிக்கையுடன்இருந்துகொள்வீராக!   (அல்மாயிதா : 49)
 
அல்லாஹ்(சுபு) அருளியவற்றில் சிலவற்றை நடைமுறைப்படுத்தும்போது மக்களின் களங்கமுற்ற கருத்தாக்கங்களுக்கு ஏற்ப நடந்துகொள்வது குறித்து நபி(ஸல்) அவர்களையும் அவர்களுக்கு பின்னர் வரும் முஸ்லிம் ஆட்சியாளர்களையும் அல்லாஹ்(சுபு) எச்சரிக்கை செய்கிறான். அல்லாஹ்(சுபு) அருளியவற்றுக்கு அந்நியமானவற்றை கொண்டு ஆட்சிசெய்வது கூடும் என்றோ அல்லது அல்லாஹ்(சுபு) அருளியவை சட்டரீதியானதல்ல என்றோ ஒருவர் கருதினால் அவர் நிச்சயமாக காஃபிர் என்று அல்லாஹ்(சுபு) விவரித்துள்ளான்!
 
وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ
 
எவர்கள்அல்லாஹ்அருளியவற்றைகொண்டுதீர்ப்பளிக்கவில்லையோநிச்சயமாகஅவர்கள்காஃபிர்கள்ஆவார்கள் (அல்மாயிதா : 44)
 
அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நியமானவற்றை கொண்டு ஆட்சிசெய்வது கூடும்  என்று நம்பிக்கை கொள்ளாத நிலையில் ஒருவர் அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நிய மானவற்றை கொண்டு ஆட்சி செய்தால் அவர் ஃபாஸிக் (வெளிப்படையாக பாவம் செய்பவர்) என்றும் ழாளிம் (அநீதம் இழைப்பபவர்) என்றும் அல்லாஹ்(சுபு) விவரித்துள்ளான்.
 
இஸ்லாத்தின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை முழுமையாகவும் விரிவாகவும் ஒரே சமயத்திலும் மேற்கொள்ளவேண்டுமே ஒழிய படிப்படியாக மேற்கொள்ளக்கூடாது ஏனெனில் படிப்படியான நடைமுறைப்படுத்துதல் என்பது இஸ்லாமிய சட்டங்களுக்கு வெளிப்படையான முறையில் முரண்பாடாக இருக்கிறது. இஸ்லாமிய சட்டங்களின் சட்டரீதியான மதிப்பில் நம்பிக்கை கொள்ளாத நிலையில் அல்லது இஸ்லாமிய சட்டங்களில் குறிப்பிட்ட சிலவற்றின் சட்டரீதியான மதிப்பில் நம்பிக்கை கொள்ளாத நிலையில் ஒருவர் அல்லாஹ்(சுபு) அருளிய அனைத்து சட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அல்லது சில சட்டங்களை நடைமுறைப்படுத்திவிட்டு மற்ற சில சட்டங்களை புறக்கணித்துவிட்டார் என்றால் அவர் காஃபிர் என்றே கருதப்படுவார். இஸ்லாத்தின் சட்டங்களில் நம்பிக்கை கொண்டிருக்கும் நிலையில் அவற்றை ஒருவர் நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அவர் பாவியாகவும் மாறு செய்தவராகவும் கருதப்படுவார்.
 
எனவே ஷரீஆ சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அலட்சியம்காட்டவும் கூடாது, சட்டங்களை படிப்படியாக நடைமுறைப்படுத்தவும் கூடாது, ஏனெனில் குறிப்பிட்ட ஒரு வாஜிபிற்கும் மற்றொரு வாஜிபிற்கும் இடையிலும், குறிப்பிட்ட ஒரு விலக்கலுக்கும் மற்றொரு விலக்கலுக்கும் இடையிலும், குறிப்பிட்ட ஒரு சட்டத்திற்கும் மற்றொரு சட்டத்திற்கும் இடையிலும் எத்தகைய வேறுபாடுகளும் கிடையாது! அல்லாஹ்(சுபு)வின் சட்டங்கள் அனைத்தும் சமமானவையாகும், எத்தகைய தாமதமோ அல்லது தள்ளிப்போடுதலோ அல்லது படிப்படியான நடைமுறைப்படுத்துதலோ எதுவுமின்றி அவையனைத்தையும் ஒரேநேரத்தில் முழுமையாகவும் விரிவாகவும் உடனடியாகவும் நடைமுறைப்படுத்தவேண்டும், இதற்கு மாறுபாடான முறையில் செயல்படுபவர் கீழ்க்கண்ட அல்லாஹ்(சுபு)வின் வார்த்தையின் அடிப்படையில் தண்டனைக்குரியவராகவே கருதப்படுவார்!
 
أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ‎‎‎‎
 
ஆகவேவேதத்தில்சிலவற்றில்ஈமான்கொண்டுசிலவற்றைநீங்கள்நிராகரிக்கிறீர்களா! இவ்வாறுசெய்பவர்களுக்குஇம்மையில்இழிவைதவிரவேறொன்றுமில்லை. அன்றியும்மறுமையிலோகொடியவேதனையின்பால்அவர்கள்திருப்பப்படுவார்கள்! நிச்சயமாகநீங்கள்செய்பவைகுறித்துஅல்லாஹ்பாராமுகமாகஇல்லை (அல்பகரா : 85)
 
ஆகவே இஸ்லாத்தின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆற்றலில்லை அல்லது நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான சூழல் ஏற்படவில்லை அல்லது ஷரீஆவை நடை முறைப்படுத்துவதற்கு உலகமக்களின் வெகுஜனக்கருத்து எதிராக உள்ளது அல்லது இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வல்லரசு நாடுகள் அனுமதிக்காது அல்லது இது போன்ற அற்பமான மதிப்பற்ற சாக்குப்போக்குகள் அடிப்படையில் இஸ்லாத்தின் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
 
இஸ்லாமிய அரசு மனிதர்களை கொண்டுள்ள அரசாக உள்ளதே ஒழிய (தெய்வீகம் பொருந்திய) புனிதமான அரசல்ல; அதை நடத்திச்செல்லும் கலீஃபா அல்லது இமாம் மனிதராக இருக்கிறார் என்பதால் அவர் புனிதமானவராகவோ அல்லது மாசற்றவராகவோ (மஃஸும்) இருப்பதற்கு சாத்தியமில்லை. அவரை உம்மா நியமனம் செய்கிறதே ஒழிய அல்லாஹ் (சுபு) நியமனம் செய்வதில்லை ஏனெனில் ஆட்சியதிகாரத்தை அவன்(சுபு) உம்மாவுக்கு அளித்திருக்கிறான், எனவே உம்மாவின் சார்பில் கலீஃபா ஆட்சிசெய்யும் பொருட்டு பைஆ மூலமாக அவரை நியமனம் செய்யும் அதிகாரத்தை அல்லாஹ்(சுபு) உம்மாவிற்கேஹ அளித்து உள்ளான். அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ்(ரளி) அறிவித்திருப்பதாவது : நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன், ‘கைகளால் கைலாகு அளிப்பதின் மூலமும் இதயத்தால் நன்நம்பிக்கை கொள்வதின் மூலமும் எவரேனும் ஒருவர் ஓர் இமாமுக்கு பைஆ அளித்தால் பிறகு இயன்றவரையில் அவர் அவருக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும்’ அப்துல்லாஹ் இப்னு உமர்(ரளி) அறிவித்திருப்பதாவது : ‘நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிற்றுள்ளேன், ‘எவரேனும் தமது கழுத்தில் கலீஃபாவின் பைஆ இல்லாத நிலையில் மரண மடைந்தால் பிறகு அவருடைய மரணம் ஜாஹிலிய்யா (அறியாமை காலத்து) மரணமாகும்’ உம்மாவின் சார்பாக கலீஃபா ஷரீஆ சட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார், எனவே கலீஃபா பதவிக்கு நியமிக்கப்படும் நபரிடம் அவருக்குரிய ஆட்சியதிகாரம் தொடர்பான சட்டரீதியான அதிகாரங்களை அளிக்கவேண்டியது கட்டாயமாகும், தனது அபிப்ராயத்தின் அடிப்படையில் செயலாக்க அமைப்புகள், சட்டங்கள், விதிமுறைகள் ஆகியவற்றை ஏற்று அமல்படுத்துவதற்கு அவருக்கு உரிமையுண்டு. கலீஃபா பதவியை ஏற்றுக்கொள்ளும் நபர் மனிதராகவே இருக்கிறார், எனவே அவர் தவறிழைப்பதற்கும் ஞாபகமறதிக்கு உட்படுவதற்கும் பொய்யுரைப்பதற்கும் துரேகம் இழைப்பதற்கும் அல்லது மக்களுக்கு எதிராக கலகம் செய்வதற்கும் சாத்தியம் இருக்கிறது, அவர் பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கப்படும் வகையில் மாசற்றவராக இல்லை ஏனெனில் மாசற்ற நிலை என்பது முற்றிலும் நபிமார்களுக்கும் இறைத்தூதர்களுக்கும் மட்டுமே உரியதாகும்.
 
கலீஃபாவாக இருக்கும் இமாம் தவறு செய்யக்கூடும் என்றும் அவர் அநீதம் இழைப் பராகவோ அல்லது பாவம் செய்பவராகவோ இருக்கக்கூடும் என்றும் அதன்காரணமாக மக்கள் அவரை வெறுக்கவும் சபிக்கவும் கூடும் என்றும் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) நமக்கு அறிவித்து கொடுத்துள்ளார்கள். மேலும் கலீஃபா வெளிப்படையான குஃப்ர் செயல்பாடுகளை மேற் கொள்ளக்கூடும் என்பதையும் அவர்கள்(ஸல்) நமக்கு அறிவித்துள்ளார்கள். இந்த தகவல்கள் அனைத்தும் இமாம் அல்லது கலீஃபா மாசற்ற நிலையில் தூய்மையானவராக இருக்கிறார் என்பதுடன் முரண்படுகின்றன என்பதோடு அவர் பாவம் செய்வதிலிருந்து பரிசுத்தமானவராக இருக்கிறார் என்பதையும் மறுக்கின்றன. நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரளி) அறிவித்துள்ள ஹதீஸ் முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ளது, அதில் கூறப்பட்டிருப்பதாவது ‘அறிந்துகொள்ளுங்கள்! இமாம் என்பவர் கேடமாகும், அவருக்கு பின்னால் நின்று மக்கள் போரிடுவார்கள், அவரை கொண்டே தங்களை பாதுகாத்து கொள்வார்கள்’ நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அவ்ஃப் இப்னு மாலிக்(ரளி) அறிவித்துள்ள ஹதீஸ் முஸ்லிமில் பதிவு செய்யப் பட்டுள்ளது, அதில் கூறப்பட்டிருப்பதாவது : ‘உங்களுடைய இமாம்களில் சிறந்தவர் யார் எனில் நீங்கள் அவரை நேசிப்பீர்கள் அவரும் உங்களை நேசிப்பார்; நீங்கள் அவருக்காக துஆ செய்வீர்கள் அவரும் உங்களுக்காக துஆ செய்வார். உங்களுடைய இமாம்களில் மோசமானவர் யார் எனில் நீங்கள் அவரை வெறுப்பீர்கள் அவரும் உங்களை வெறுப்பார்; நீங்கள் அவரை சபிப்பீர்கள் அவரும் உங்களை சபிப்பார்’ உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரளி) அறிவித்ததாக புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது : ‘நபி(ஸல்) அவர்கள் எங்களை (பைஆ செய்வதற்கு) அழைத்தார்கள் எனவே நாங்கள் அவர்களிடம் பைஆ செய்தோம். ‘இன்பத்திலும் துன்பத்திலும் இலகுவிலும் கஷ்டத்திலும் நாங்கள் முழுமையாக கட்டுப்பட்டு நடப்போம் என்றும் அதிகாரத்தை பெற்றுள்ளவர்களுடன் சர்ச்சை செய்ய மாட்டோம் என்றும் ‘அல்லாஹ்(சுபு)விடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் அடிப்படையில் வெளிப்படையான குஃப்ரை கண்டால் ஒழியஎன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்  பைஆ செய்தோம்’ இமாம் அல்லது கலீஃபா தவறு செய்யக்கூடும் என்பதற்கும் பாவம் செய்யக்கூடும் என்பதற்கும் இந்த ஹதீஸ்கள் தெளிவான ஆதாரங்களாக விளங்குகின்றன என்ற முறையில் இமாம் அல்லது கலீஃபா மாசற்றவராக (infallible) இல்லை என்பதை அவை சுட்டிக்காட்டுகின்றன.
 
ஆகவே முஸ்லிம்கள் ஆட்சியாளரை தட்டிக்கேட்கவேண்டும் என்று அல்லாஹ்(சுபு) ஹகட்டளையிட்டுள்ளான் என்பதால் இது அவர்களுடைய உரிமையாக இருக்கிறது ஏனெனில் ஆட்சியாளர் ஆட்சியதிகாரத்தில் மக்களின் பிரதிநிதியாகவும் அதிகாரம் பெற்றவராகவும் இருந்தபோதும், மக்கள் அவரை பதவியில் அமர்த்துகிறார்கள் என்றபோதும் அவர் தவறு செய்யக்கூடும் என்பதாலும் பாவம் செய்பவராகவும் குஃப்ர் செயல்பாடுகளை மேற்கொள்ப வராகவும் இருக்கக்கூடும் என்பதாலும் அவர் புனிதமானவராக இருப்பதற்கோ அல்லது பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கப்படும் வகையில் மாசற்றவராக இருப்பதற்கோ சாத்தியமில்லை.
 
அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,
 
‎‎‎وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ    ‎‎  ‎‎                    
 
(ஈமான்கொண்டவர்களே!)
உங்களிலிருந்துஒருகூட்டத்தினர்சிறந்தவற்றின்பால்அழைப்பவர்களாகவும்நன்மையைஏவிதீமையைதடுப்பவர்களாகவும்இருக்கவேண்டும், நிச்சயமாகஅவர்கள்தான்வெற்றியாளர்கள்  (ஆலஇம்ரான் : 104)
 சிறந்த ஜிஹாது எது என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டபோது, ‘கொடுங்கோல்ஆட்சியாளரிடம்சத்தியத்தைஉரைப்பதுதான்சிறந்தஜிஹாதாகும்!’ என்று கூறினார்கள். மேலும் அவர்கள்(ஸல்) கூறியதாவது, ‘ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிபும்(ரளி) கொடுங்கோல் இமாம் முன்பாக நின்றுகொண்டு நன்மையை ஏவி தீமையை தடுத்து அதன்காரணமாக கொலை செய்யப்பட்ட மனிதரும் ஷுஹாதாவின் தலைவர் ஆவார்கள்’ அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது(ரளி) அறிவித்து ஸுனன் அபூதாவூதில் பதிவுசெய்யப்பட்ட ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது : நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘அல்லாஹ்வின்மீது ஆணையாக! நீங்கள் நன்மையை ஏவி தீமையை தடுக்கவேண்டும். அன்றியும் அநீதம் இழைப்பவரின் கைகளை நீங்கள் தடுத்து நிறுத்தவேண்டும்; (தீமை செய்வதிலிருந்து) அவரை தடுத்து சத்தியத்தின்பால் செலுத்தவேண்டும்’ இப்னு மஸ்வூது(ரளி) அறிவித்துள்ள மற்றொரு ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டிருப்பதாவது : ‘இல்லாவிடில் (பரஸ்ப்பர) பகைமையை கொண்டு அல்லாஹ் உங்களுடைய இதயங்களில் அடிப்பான்; அவர்களை சபித்ததுபோல் உங்களையும் சபிப்பான்!’
 
சில தருணங்களில் நாவைக்கொண்டு ஆட்சியாளர்களை தடுப்பதற்கு அப்பாற்பட்டு ஆயுத போராட்டம் மேற்கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் நமக்கு கட்டளையிட்டுள்ளது, கலீஃபா வெளிப்படையான குஃப்ர் செயல்பாடுகளை மேற்கொள்ளும் பட்சத்தில் பின்வரும் ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது போல் அவருக்கு எதிராக ஆயுதமேந்தி போர் செய்யவேண்டும் என்று அது நமக்கு கட்டளையிட்டுள்ளது, உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரளி) அறிவித்திருப்பதாவது : அல்லாஹ்விடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் அடிப்படையில் வெளிப்படையான குஃப்ரை அவர் மேற்கொள்ளாத வரையில் அதிகாரம் பெற்றுள்ளவர்களிடம் நாங்கள் சர்ச்சை செய்யமாட்டோம் (என்று பைஆ செய்தோம்)’
 
முஸ்லிம் சகோதரர்களே!
 
இதுதான் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து நிறுவவேண்டும் என்று அல்லாஹ் (சுபு) கட்டளையிட்டுள்ள இஸ்லாமிய அரசாகும்! நபித்துவத்தின் அடிச்சுவட்டின்மீது ‘கிலாஃபா ராஷிதாவை’ நிறுவும் பொருட்டும், ‘அதன்பின்னர் நபித்துவத்தின் வழிமுறையில் மீண்டும் கிலாஃபா ராஷிதா ஏற்படும்’ என்ற அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களின் நற்செய்தியை உண்மைப்படுத்தும் பொருட்டும் எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்!

Nov 21, 2015

அரசு பற்றிய இஸ்லாத்தின் கருத்தாக்கம்– பாகம் – 1

அத்தவ்லா என்ற அரபி வார்த்தைக்கு மொழியியல் ரீதியாக கலப - மிகைத்துவிடுதல்’ என்று பொருளாகும். காலத்தின் மாறுதலை சுட்டிக்காட்டுவதற்கு இந்த வார்த்தையை பயன் படுத்துவதும் வழக்கத்தில் இருந்தது. ‘நாட்கள் மாற்றப்பட்டுள்ளன அல்லது சுழற்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன’ என்று மொழியியல் ரீதியாக கூறப்படுகிறது, இதற்கு நாட்கள் மாற்றமடைந்து விட்டன அல்லது அல்லாஹ்(சுபு) மக்களுக்கு மத்தியில் அவற்றை மாற்றுகிறான் போன்ற அர்த்தங்கள் உள்ளன.
 
 
கருத்தாக்கங்களில் (concepts) ஏற்படும் மாற்றங்கள், காலத்தால் ஏற்படும் மாற்றங்கள், மக்களுக்கு மத்தியில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அரசுகள் மாற்றம் அடைகின்றன. ‘அரசு என்ற மொழிவழக்கு ரீதியான வார்த்தை குறிப்பிட்ட நிலப் பரப்பில் வாழும் மக்கள் கூட்டத்தின் மீது ஏவல் மற்றும் விலக்கல் தொடர்பான ஆணைகளை பிறப்பிப்பதற்கு அதிகாரம் பெற்றுள்ள அமைப்பை குறிப்பிடுகிறது. எனினும் சமுதாயங்களின் எதார்த்த நிலையை பொருத்தும் அவர்களின் கண்ணோட்டங்களை பொருத்தும் ஏற்படும் வேறுபாடுகளின் காரணமாக ‘அரசு’ தொடர்பான வரையறைகள் மாறுபடுகின்றன.
 
 
 உதாரணமாக மேற்கத்திய மக்கள் அரசின் எதார்த்தநிலை குறித்தும் அரசு அமல்படுத்தும் சட்டங்கள் குறித்தும் மாறுபட்ட கண்ணோட்டங்களை கொண்டிருக்கிறார்கள். வரலாற்றின் மத்தியகால கட்டத்தில் நிகழ்ந்ததை போன்று அரசின் எதார்த்தநிலை மதச்சார்பு கொண்ட தாகவோ அல்லது சர்வாதிகாரத்தை கொண்டதாகவோ அல்லது ஜனநாயக முறையை கொண்டதாகவோ இருக்கலாம். எனினும் அரசு அதன் நிலப்பரப்பிலும் அதன் மக்கள் கூட்டத்திலும் அதன் ஆட்சியாளரிலும் எதிரொலிக்கிறது என்பதை பொருத்தும், இம்மூன்று அம்சங்களும் அரசின் அடித்தளமாக விளங்குகின்றன என்பதை பொருத்தும் மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்தையே கொண்டிருந்தார்கள். மேற்கத்திய மக்களை பொருத்தவரை, அரசு என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிறுவப்படுகிறது என்றும் அதில் குறிப்பிட்ட மக்கள் கூட்டம் நிரந்தரமாக வசித்துவருகிறது என்றும் ஆட்சியதிகாரம் பெற்ற ஆட்சியாளர் ஒருவர் அவர்களுக்கு தலைமையேற்று வழிநடத்துகிறார் என்றும் கருதுகிறார்கள்.
 
 
இஸ்லாமிய அரசை பொருத்தவரை அது ஷரீஆ சட்டங்களின் அடிப்படையில் குடிமக்களின் விவகாரங்களை மேலாண்மை செய்யும் அரசியல் மையமாகவும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுள்ள அமைப்பாகவும் விளங்குகிறது. வேறுவகையில் கூறினால், அல்லாஹ்(சுபு) அருளியவற்றை கொண்டு ஆட்சிசெய்தல் மற்றும் இஸ்லாத்தின் செய்தியை உலக முழுவதற்கும் எடுத்துச்செல்லுதல் ஆகிய பணிகளை நிறைவேற்றுகின்ற அரசாக கிலாஃபா விளங்குகிறது, ஏனெனில் இஸ்லாமிய நிலப்பரப்புகளில் ஷரீஆ சட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கும், இஸ்லாம் முழு உலகிற்கும் ஒளியாகவும் நேர்வழி காட்டுகின்ற மகத்தான செய்தியாகவும் விளங்குகிறது என்பதால் அதை தஃவா மூலமாகவும் ஜிஹாது மூலமாகவும் எடுத்துச்செல்வதற்கும், உரிய வழிமுறையாக (தரீக்கா) இஸ்லாமிய அரசு திகழவேண்டும் என்று அல்லாஹ்(சுபு) கட்டளையிட்டுள்ளான்.
 
 
இஸ்லாமிய அரசு குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிறுவப்பட்டிருந்தபோதும், தன்னுடைய குடிமக்களின் விவகாரங்களை மேலாண்மை செய்தற்குரிய பொறுப்பை சுமந்து கொண்டிருந்த போதும், அதன் நிலப்பரப்பின் அளவையோ அல்லது அதன் குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கையையோ அது அடித்தளமாக கருதுவதில்லை. எனினும் எல்லா காலகட்டங்களிலும் அதன் குடிமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகிக்கொண்டுதான் இருந்தது!
 
இனத்திலும் நிறத்திலும் மொழியிலும் வேறுபட்ட மக்கள் அதன் குடிமக்களாக விளங்கினார்கள். நிலப் பரப்பை பொருத்தவரை குறிப்பிட்ட பகுதிக்குள் கட்டுப்பட்டிருக்கும் வகையில் அது சுருங்கிய தாகவோ குறுகிய எல்லைகளை கொண்டதாகவோ இருக்கவில்லை மாறாக எப்போதும் அதன் எல்லைகள் விரிந்துகொண்டேயிருந்தது ஏனெனில் அது உலகளாவிய மகத்தான செய்தியை தன்னிடத்தே கொண்டுள்ளது! அதை முழு உலகிற்கும் எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் உலக மக்கள் அனைவரையும் அதன்பால் அழைக்கவேண்டும் என்றும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ்(சுபு) ஹகட்டளையிட்டுள்ளான்!
 
வெள்ளையராக அல்லது கருப்பராக இருந்தபோதும், அரபுகளாக அரபல்லாதவர்களாக இருந்தபோதும், ஐரோப்பியர்களாக அமெரிக்கர்களாக ரஷ்யர்களாக இருந்தபோதும் அல்லாஹ்(சுபு)வுடைய மார்க்கத்தை தழுவிக்கொள்ளும் வகையில் அனைவருக்கும் இஸ்லாத்தின் செய்தியை எத்திவைக்க வேண்டும் என்று அல்லாஹ்(சுபு) கட்டளையிட்டுள்ளான்! ஆகவே எந்த சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் இஸ்லாத்தின் அழைப்பிற்கு செவி சாய்த்து அல்லாஹ்(சுபு)வுடைய மார்க்கத்தில் இணைந்துவிட்டால் பிறகு அவர்கள் அனைவரும் இஸ்லாமிய அரசின் குடிமக்களில் ஒருபகுதியினராக ஆகிவிடுவார்கள், அவர்களின் நிலப்பரப்புகள் இஸ்லாமிய அரசின் நிலப்பரப்புகளாக ஆகிவிடும்! இஸ்லாத்தின் செய்தியை எடுத்துச்செல்லும் பொருட்டு எந்த நிலப்பரப்பை ஜிஹாது மூலமாக அரசு வெற்றிகொள்கிறதோ அதுவும் இஸ்லாமிய அரசின் நிலப்பரப்புகளின் ஒருபகுதியாகவும் அதன் ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்டதாகவும் ஆகிவிடும், அதன் மக்கள் இஸ்லாத்தை தழுவினாலும் தழுவாவிட்டாலும் சரியே!
 
 
எந்தவொரு புதிய அரசும் அது தோன்றியுள்ள புதிய சிந்தனையின் மீதுதான் நிலை கொண்டிருக்கிறது. வெற்றி கொள்ளப்பட்ட நிலப்பரப்பின் அதிகாரம் கைப்பற்றப்பட்டு ஆட்சி யதிகாரம் மாறும்போது அரசு தொடர்பான மக்களின் சிந்தனைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. ஏனெனில் சிந்தனை கருத்தாக்கங்களாகவும் நம்பிக்கைகளாகவும் மாற்றமடையும்போது அவை ஒருவருடைய நடத்தை பண்புகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, அப்போது அவர் இந்த கருத்தாக்கங்களி னால் வடிவமைக்கப்படுகிறார். எனவே வாழ்வியல் தொடர்பான அவருடைய கண்ணோட்டம் மாறிவிடுகிறது, இதன்விளைவாக மற்ற மக்களுடன் கொண்டுள்ள உறவுகள் மற்றும் சுயநலம் சார்ந்த விருப்பங்கள் ஆகியவை தொடர்பான அவருடைய கண்ணோட்டமும் மாறிவிடுகிறது. மக்களின் விவகாரங்கள், அவர்களுக்கு மத்தியிலுள்ள உறவுகள், அவர்களுடைய நலன்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் பொருட்டுதான் எந்தவொரு ஆட்சியமைப்பும் நிறுவப்படுகிறது.
 
 
இரண்டாவது அகபா உடன்படிக்கையில் அன்ஸாரிகள் பைஆ அளித்தபின்னர் நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவை அடைந்தார்கள். அகாபாவில் அளிக்கப்பட்டது பாதுகாப்பு, போர் மற்றும் மதீனாவின் ஆட்சியதிகாரத்தை நபி(ஸல்) அவர்களுக்கு வழங்குதல் ஆகியவை தொடர்பான பைஆ என்பதால் மதீனாவை அடைந்த உடனேயே இஸ்லாமிய அரசை நிறுவும் பணியை நபி(ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள். இஸ்லாமிய அரசின் தோற்றம் என்பது இஸ்லாத்தின் புதிய அகீதாவும் நபி(ஸல்) அவர்கள் மீது ஈமான்கொண்டிருந்த மக்கள் ஏற்றுக்கொண்டிருந்த பல புதிய கருத்தாக்கங்களும் ஏற்படுத்திய விளைவுகளாகவே இருந்தது. இந்த கருத்தாக்கங்கள் நபி(ஸல்) அவர்களை பின்பற்றிய மக்களிடம் வாழ்வியல் பற்றிய புதியதோர் கண்ணோட்டத்தை ஏற்படுத்தியிருந்தது, இதன்விளைவாக மக்களுக்கு மத்தியிலுள்ள உறவுகள் மற்றும் சுயநலம் சார்ந்த விருப்பங்கள் ஆகியவை பற்றிய அவர்களுடைய கண்ணோட்டம் புதிய பரிமாணத்தை அடைந்திருந்தது.
 
 
சட்டவடிவங்கள் தொடர்பான வசனங்கள் அருளப்படாத நிலையில் இந்த அகீதாவின் அடிப்படையிலும் அதிலிருந்து தோன்றிய கருத்தாக்கங்களின் அடிப்படையிலும் நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் இஸ்லாமிய அரசை நிறுவினார்கள். எனவே இஸ்லாமிய அரசு என்பது புதிய அகீதா மற்றும் அதிலிருந்து தோன்றிய பல புதிய சிந்தனைகள், கருத்தாக்கங்கள் ஆகிய வற்றின் மீது கட்டமைக்கப்பட்ட புதிய அரசாக விளங்கியது.
 
 
அதன் இயல்பிலும் கட்டமைப்பிலும் அதன் இலட்சியத்திலும் அதன் அடித்தளத்திலும் முற்றிலும் மாறுபட்ட தனித்தன்மை கொண்ட ஓர் அரசாக இஸ்லாமிய அரசு விளங்கியது. உலகில் நிலைபெற்றிருந்த மற்ற அனைத்து அரசுகளிலிருந்து இயல்பிலும் அமைப்பிலும் முழுமை யாக வேறுபட்ட ஓர் அரசாக திகழ்ந்தது. இஸ்லாமிய அரசு ‘லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் & வணங்கிவழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹுவை தவிர வேறில்லை; முஹம்மது(ஸல்) அவனுடைய தூதராக இருக்கிறார்’ என்ற இஸ்லாமிய அகீதாவின் அடித்தளத்தை ஆதாரமாக கொண்டு தோன்றிய அரசாக இருந்தது. இஸ்லாத்தின் அகீதா என்பது வாழ்வியல் பற்றிய முழுமையான சிந்தனையாகும், அதனடிப்படையிலும் அதிலிருந்து தோன்றியுள்ள சிந்தனைகள் மற்றும் கருத்தாக்கங்கள் அடிப்படையிலும் வாழ்வியல் தொடர் பான முஸ்லிம்களின் கண்ணோட்டம் தீர்மானிக்கப்படுகிறது. இந்த கண்ணோட்டம், வாழ்வு என்பது படைப்பாளன் ஒருவனால் படைக்கப்பட்டுள்ளது அந்த படைப்பாளனின் ஏவல், விலக்கல் கட்டளைகள் அடிப்படையில்தான் அது நடத்திச்செல்லப்படுகிறது என்ற நம்பிக்கை யின்பால் மனிதர்களை இட்டுச்செல்கிறது. முஸ்லிம்களை பொருத்தவரை, அல்லாஹ்(சுபு) ஒருவனை தவிர்த்து சட்டம் வழங்குவதற்கு எவருக்கும் அதிகாரமில்லை என்பதும் இந்த வாழ்க்கையிலும் இஸ்லாமிய அரசிலும் அல்லாஹ்(சுபு)வின் சட்டத்தை தவிர்த்து உம்மாவிற்கும் அல்லது மக்களுக்கும் அல்லது ஆட்சியாளருக்கும் அல்லது வேறு எதற்கும் இறையாண்மை (sovereingty) கிடையாது என்பதும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய உண்மையாக இருக்கிறது.
 
 
ஆகவே எந்தவொரு சட்டத்தை இயற்றுவதற்கும் அல்லது அல்லாஹ்(சுபு)  தன்னுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளியவற்றிற்கு அந்நியமான ஹஎந்தவொரு செயலாக்க அமைப்பை (system) அல்லது விதிமுறையை உருவாக்குவதற்கும் உம்மாவிற்கோ அல்லது ஆட்சியாளருக்கோ அனுமதியில்லை. இஸ்லாமிய சட்டங்களுக்கு முரண்படுகின்ற ஏதேனும் ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு உம்மா பொதுவான முறையில் ஒப்புதல் தெரிவித்தபோதும் அந்த ஒப்புதலுக்கு எத்தகைய மதிப்பும் கிடையாது. எனவே உதாரணமாக, வட்டி அடிப்படையிலுள்ள வரவுசெலவுகள் இல்லாமல் பொருளாதாரமும் வர்த்தகமும் செழிக்காது என்ற கருத்தில் வட்டியை சட்டரீதியாக ஆக்குவதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது தனிமனித சுதந்திரம் என்ற அடிப்படையில் திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுகளை சட்ட ரீதியாக ஆக்குவதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது மனிதஉரிமை மீறல் என்ற அடிப்படையில் மார்க்கத்தை விட்டு வெளியேறியவரை கொலை செய்வதை தடைசெய்வதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது இஸ்லாமிய அரசு என்ற முறையில் இஸ்லாமிய அகீதாவிற்கு அப்பாற்பட்டு மற்றொரு அடிப்படை கோட்பாடு இருப்பதை அனுமதிப்பதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது ஆட்சியதிகாரத்தில் முஸ்லிம்களுக்கு பரம்பரை வாரிசுரிமை அளிப்பதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் மதசார்பற்ற அரசியல் கட்சிகளை அமைப்பதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும், பொதுக்கருத்து என்ற அடிப்படையில் இதுபோன்ற எத்தகைய விவகாரங்களுக்கு ஒப்புதல் அளித்தாலும் அவையனைத்திற்கும் எத்தகைய மதிப்பும் கிடையாது அவற்றிற்கு சட்டரீதியாக எத்தகைய அங்கீகாரமும் கிடையாது, ஏனெனில் அல்லாஹ்(சுபு) மட்டுமே சட்டம் வழங்கு பவனாக (Legislator) இருக்கிறான் என்ற முறையிலும் சட்டம் வழங்குவதற்குரிய அதிகாரம் மனிதர்களுக்கு இல்லை என்ற முறையிலும் ஹஇவை இஸ்லாமிய சட்டங்களுக்கும் ஷரீஆவின் இறையாண்மைக்கும் அல்லாஹ்(சுபு)வின் மீதுள்ள ஈமானிற்கும் முரண்பாடாக இருக்கின்றன.
 
 
இஸ்லாமிய அகீதா இஸ்லாமிய அரசின் அடித்தளமாக விளங்குகிறது என்ற முறையில் மக்களுக்கு மத்தியிலுள்ள உறவுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்டத்தை இயற்று வதற்கோ அல்லது அரசியல் சாஸனம் அல்லது ஏதேனும் குறிப்பிட்ட செயலாக்க அமைப்பு அல்லது அரசாணை ஆகியவற்றை ஏற்று அமல்படுத்துவதற்கோ அல்லது அல்லாஹ்(சுபு) அருளியவற்றுஹக்கு அந்நியமான சட்டங்கள் எதனையும் இஸ்லாமிய அரசின் நடைமுறைப் படுத்துதலில் கொண்டுவருதற்கோ ஆட்சியாளர்களாக இருந்தாலும் நீதிபதிகள், அறிவுஜீவிகள், அரசியல் மேதைகள், ஷூரா கவுன்ஸில் உறுப்பினர்கள், மஜ்லிஸுல் உம்மா உறுப்பினர்கள், அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய எவருக்கும் சட்டரீதியான எத்தகைய அதிகாரமும் கிடையாது! மேலும் அரசு விவகாரங்களை நடத்திச்செல்லும் பொருட்டு மக்களை நிர்பந்தம் செய்வதிலிருந்தும், மனிதர்கள் உருவாக்கிய செயலாக்க அமைப்புகளையும் சட்டங்களையும் பின்பற்றுவதற்கு மக்களுக்கு தேர்வுரிமையை அளிப்பதிலிருந்தும் ஆட்சியாளர்கள் தடை செய்யப்பட்டுள்ளார்கள்.
 
 
கலீஃபா தனது சட்டரீதியான அதிகாரத்தின் அடிப்படையில் அரசியல் சாஸனத்தை அல்லது செயலாக்க அமைப்பை (system) அல்லது சட்டத்தை ஏற்று அமல்படுத்தும்போது அவற்றை அல்லாஹ்(சுபு)வின் வேதம் மற்றும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் சுன்னா ஆகியவற்றிலிருந்து தனது இஜ்திஹாத் மூலமாக எடுத்துக்கொள்ளவேண்டும் அல்லது முஸ்லிம் களிலுள்ள சட்டயியல் நிபுணர்கள் மற்றும் கற்றறிந்த அறிஞர்கள் ஆகியவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இஸ்லாமிய அரசின் அரசியல் சாஸனம், அதன் செயலாக்க அமைப்புகள், மற்றும் சட்டங்கள் ஆகியவற்றை அல்லாஹ்(சுபு) தனது தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளியவற்றிலிருந்து மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். அதாவதுஹ அல்லாஹ்(சுபு)வின் வேதம், அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் சுன்னா மற்றும் அவற்றிலிருந்து பெறப்பட்ட கியாஸ் (anology) ஆகியவற்றிலிருந்தும் ஸஹாபாக்களின் ஏகோபித்த முடிவுகளிலிருந்தும் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும்.
 
 
எனவே இஸ்லாமிய அகீதாவிலிருந்து தோன்றியிராத சிந்தனைகள் எதையும் பாதுகாப்ப திலிருந்தும் அல்லது அதுபோன்ற கருத்தாக்கங்கள், சட்டங்கள், அரசியல் சாஸனங்கள், விதி முறைகள் அல்லது அளவுகோல்கள் ஆகியவற்றை பரிசீலிப்பதிலிருந்தும் இஸ்லாமிய அரசு தடைசெய்யப்பட்டுள்ளது. அன்றியும் அல்லாஹ்(சுபு)வின் வேதம் மற்றும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் சுன்னா ஆகிவற்றிலிருந்து கொண்டுவரப்படாதவை மற்றும் சட்ட ரீதியான கியாஸ் அல்லது ஸஹாபாக்களின் ஒருமித்த முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கொண்டுவரப்படாதவை ஆகியவற்றை ஏற்று அமல்படுத்துவதிலிருந்தும் அது தடைசெய்யப் பட்டுள்ளது. எனவே ஜனநாயகத்தின் அடிப்படையிலுள்ள வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்வதிலிருந்தும் பன்முக நம்பிக்கைகள், முஸ்லிம்கள் பரம்பரை அடிப்படையில் ஆட்சி அதிகாரத்தை பெறுதல், மதச்சார்பின்மை கோட்பாடுகளில் நம்பிக்கை கொள்ளுதல் அல்லது பல்வேறு வகையான சுதந்திரங்கள் போன்ற ஜனநாயம் அழைப்புவிடுக்கும் ஆட்சியமைப்பு அம்சங்கள் எவற்றையும் ஏற்றுக்கொள்வதிலிருந்தும் இஸ்லாமிய அரசு தடைசெய்யப்பட்டுள்ளது ஏனெனில் இவையனைத்தும் இஸ்லாமிய ஷரீஆவிற்கும் இஸ்லாமிய சட்டங்களுக்கும் முரணாக இருக்கின்றன. மேலும் தேசியவாதம், தேசப்பற்று, சுயஆட்சி போன்ற கருத்தாக்கங்களை பரிசீலனை செய்வதிலிருந்தும் இஸ்லாமிய அரசு தடைசெய்யப்பட்டுள்ளது ஏனெனில் இந்த கருத்தாக்கங்கள் இஸ்லாமிய அகீதாவிலிருந்து தோன்றவில்லை என்பதோடு இவை ஷரீஆ சட்டங்களுக்கு முரண்பாடாக இருக்கின்றன. அன்றியும் இவற்றை இஸ்லாமிய ஷரீஆ ஆழமாக வெறுக்கிறது என்ற முறையிலும் இவற்றை ஏற்று அமல்படுத்துவது குறித்து கடுமையாக எச்சரித்திருக்கிறது என்ற முறையிலும் இவை முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. மன்னராட்சி, குடியரசு ஆட்சி, சர்வாதிகார ஆட்சி மற்றும் ஏகாதிபத்திய ஆட்சி போன்ற ஆட்சியமைப்பு தொடர்பான கருத்தாக்கங்களை ஏற்றுக்கொள்வதிலிருந்தும் இஸ்லாமிய அரசு தடைசெய்யப் பட்டுள்ளது, ஏனெனில் இஸ்லாமிய அகீதாவிலிருந்து தோன்றவில்லை என்பதோடு இவை ஷரீஆவிலிருந்து எடுக்கப்படவில்லை என்ற அடிப்படையில் இஸ்லாமிய சட்டங்களுக்கு முரண்பாடாக இருக்கின்றன.